நான் ஏன் டாக்டர் ‘பிடிஆர்-மதுரை சிங்கம்’ பழநிவேல் தியாகராஜன், தமிழக மனிதவளமேம்பாடு + நிதி அமைச்சர் + நோபல்பரிசு கொடையாளர் அவர்களை உளமாற ஆராதித்து ஆதரிக்கிறேன்?
July 19, 2021
மேற்கண்ட தலைப்புக்குத் துளிக்கூடத் தொடர்பேயில்லாத ஒரு சமன்பாடு:
அளவுகடந்த அறியாமை + ஆணவத் திமிர் + குறைகுடத்தன்மை + தகுதி விளம்பல் + ஆண்டை மனோபாவம் = அராஜக திராவிட உதிரித்தனம்.
பயப் படாதீர்கள்!
ஏனெனில் மேற்கண்ட சமன்பாட்டை நிறுவ நான் முயற்சிக்கப் போவதில்லை. ஏனெனில் அது ஒரு அடிப்படை உண்மை. அந்த அடிப் படையானது தொடையிடுக்கில் எந்தக் களிம்பு தடவினாலும், சொஸ்தம் ஆகாத பராக்கிரமம் மிக்கது. அந்த அடிப் படை விஷயத்தை நாம் எதிர்கொள்ள வேண்டுமென்றால் – நாம் பொழுதன்னிக்கும் பரக்பரக்கென்று சொறிந்துகொண்டே இருக்கவேண்டியதுதான், நம் கையில் இருக்கும் விஷயம்.
நாம் தானே அம்மணிகளே அம்மணர்களே, இந்த அடிப் படையைத் தேர்ந்தெடுத்தோம்?
ஆகவே. குழப்பியும் கொள்ளாதீர்கள்!
-0-0-0-0-
ஆனால் கவனிக்கவும்.
இது, நான் ஆராதிக்கும், மேலும் ஒருமனதாக ஆதரிக்கும் – திருவாளர் டாக்டர் மேதகு ‘பிடிஆர்-மதுரை சிங்கம்’ பழநிவேல் தியாகராஜன், தமிழக மனிதவளமேம்பாடு+நிதி அமைச்சர் அவர்கள் குறித்த பதிவல்ல.
(ஆதாரம்: விக்கிபீடியா பக்கம் – எனக்கு அவர் பேரில் கடும் மதிப்பு இருக்கிறது; ஒப்பு நோக்க, இளம் வயதிலேயே இவ்வளவு உச்சகட்ட உயர்மட்ட அளப்பரிய சாதனைகளைச் சாதித்துள்ளதைக் கண்டு பிரமிப்பாகவும் இருக்கிறது!)
மேலும் எனக்கும் உங்களுக்குமேகூடத் தேவையேயற்ற அரசியல் அக்கப்போர்களில், ஈடுபடுவதிலும் ஆசையில்லை; இந்த விஷயத்தில் நானும் ஒரு பெரும்பேராசான் ஜெயமோகன்தான்!
அவரும் சரி, நானும் சரி – என்றுமே அவதூறுகளில் ஈடுபட்டதில்லை.எனக்கு என் பெரும்பேராசான் கற்றுக் கொடுத்திருப்பது இதுகுறித்த முக்கியமான படிப்பினைகளைத்தான்:
“அட்ச்சிவுடாதே! அவதூறு பரப்பாதே! அறிவுரை கொடுக்காதே! அழிச்சாட்டியம் செய்யாதே! அலப்பரை பண்ணாதே! அஸால்டாகப் பேசாதே! அல்லக்கைகளை ஊக்குவிக்காதே!”
ஏனெனில், எப்படியும்:
பிடிஆர்-மதுரை சிங்கம் – மெத்தப் படித்த ஒரு அறிவாளி; ஆரியக் குள்ளநரிச் சதிகளினாலும் பார்ப்பன வந்தேறிகளின் குல்லுக பட்டச் சூழ்ச்சிகளினாலும், மிகுந்த கஷ்டங்களுக்கிடையில் ஏழ்மைச்சூழலில் வளர்ந்த அவர், சிறுவயதிலிருந்தே முழுவதும் கல்வித் திறமைக்கான உதவித்தொகை பெற்றே, தமிழ்வழியில் மட்டுமே கற்றுணர்ந்து மேற்படிப்புப் பட்டங்களைப் பெற்றவர். அமெரிக்காவிலும் தமிழ்வழிக் கல்விதான் படித்தார். வேலை செய்த இடங்களிலும் இலக்கண சுத்தமான தமிழைத் தவிர, பிற மொழிகளை உபயோகித்ததே இல்லை. ஆனால் – இப்படியாப்பட்ட சாதனைகளைக் குறித்து என்றுமே பிலுக்கிக்கொள்ளாதிருப்பவர்.
பிடிஆர்-மதுரை சிங்கம் – ஆணவமற்றவர், செருக்கற்ற தன்மையுடைத்தவர், இழிசொல் பேசாதவர் – சக மானுடர்கள் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருப்பவர்.அடக்கத்துக்கே மறுபெயர்தாம் அவர்.
பிடிஆர்-மதுரை சிங்கம் – சொல்வதைச் சொல்வதற்கும் செய்வதைச் செய்வதற்கும் தகுந்த, உரிய தகுதி படைத்தவர்; சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர், அதாவது ‘தேதி குறிப்பிட்டோமோ’ என மிகச் சரியாகவே கேட்பவர்; மிக முக்கியமாக – தன்னலமற்ற சேவைகளைப் புரிந்தே பரம்பரை ஓட்டாண்டிகளான பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இருந்தாலும் தம் பாரம்பரியம், தம் ஆண்மூதாதையர்கள் பற்றியெல்லாம் பேசாதவர்.
அப்படியே தப்பித் தவறிப் பேசினாலும், கண்டிப்பாகத் தம் பெண்மூதாதையர்கள் பற்றியும் புகழ்பவர்; ஏனெனில் அவர் பெண்ணியரும் கூட.
பாரதத்தைப் பற்றி ஒரு மசுத்தையும் தெரியாமல் உளறிக்கொட்டுபவர்களையும், பரந்த மனதுடன் ரிட்வீட் செய்து ஊக்குவிப்பவர். அதே சமயம் அதே ‘தோல்வியுற்ற அரசில்’ பங்கு பெற்றுச் சுகிப்பவர்.
தம்மை ஞானி என்ற கருத்தாக்கத்தை போலிஅடக்கத்துடன் தவிர்க்கும் அவர், தம்மை விமர்சனம் செய்பவர்களை மிகுந்த மரியாதையுடன் வெறிநாய்கள் தாடிகள் என விமர்சனம் செய்பவர்.
இப்படி வெளிப்படையாகவும் தெகிர்யத்துடனும் இஸ்லாமியர்களை வெறுக்கும் திமுக அரசியல்வாதி இவராகத்தான் இருக்கவேண்டும்!
இவையெல்லாம் ஏனெனில் அவர் சுயமரியாதை மிக்க திராவிடர். காக்கேசிய ஆரிய நச்சரவங்களை வடவர்களை வெறுப்பவர். அதனால்தான் அப்படியாப்பட்ட பாரம்பரியம் கொண்டவரைத் தடுத்தாட்கொண்டு மணந்த பராக்கிரமம் மிக்கவர்.
…பண்பாளர்.
பிடிஆர்-மதுரை சிங்கம் – மிகவும் நேர்மையாகவும் நேரிடையாகவும் மக்கள் மீது கரிசனத்துடனும் கனிவுடனும் இருக்கும் அப்பழுக்கற்ற பண்பாளர். சான்றோர்.
தன்னுடைய தகுதி படுபீதியளிக்கும் அளவுக்குப் பெரிது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத, அடக்கமிக்க பெருந்தகை.
பிடிஆர்-மதுரை சிங்கம் – நோபெல் பரிசு கிடைக்கப் பெறாத சான்றோர்களுக்கே அப்பரிசினைக் கொடுக்கும் பராக்கிரமம் மிக்கவர்.
சான்றோரின் சான்றோர். ஆன்றோரின் ஆன்றோர்.
மேலும் – ஏற்றத்தாழ்வுகள் அற்று விளங்கப்போகும் திராவிட முன்னேற்ற சமூக நீதித் தொல்காப்பியப் பூங்காவைத் தமிழகமெங்கும் கட்டமைக்கப் போகிறவர். அடுத்த நான்கு வருடங்களின் அனைவருக்கும் நோபெல் பரிசு வழங்கத் திட்டங்கள் வகுப்பவர், செயல் படுத்தப் போகிறவர்.
கழக சமதர்மப் பூங்காவில் ‘எங்கும் நோபெல்! எதிலும் நோபெல்!!’
பிடிஆர்-மதுரை சிங்கம் – பகுத்தறிவு மிக்கவர். அதாவது ஆழ்ந்து அறிந்து மட்டுமே விஷயங்களைப் பற்றிப் பேசுபவர். மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை அற்றவர். இதுகுறித்து அவருக்குத் தொடர்ந்து நினைவூட்டிக்கொள்ள கையில் மஞ்சள்சிகப்பு ரட்சை கட்டிக்கொண்டிருப்பவர்.
பிடிஆர்-மதுரை சிங்கம் ஒரு அறிவியலாளச் சான்றோர்ப் பெருந்தகை. விதம்விதமான பரிசோதனைகளில், பிரிவினைகளில் ஈடுபட்டிருப்பவர்; அவற்றுக்காக நேரம் செலவழிக்க அவருக்கு வாய்ப்பில்லாத காரணத்தால், தம்முடைய ஒரு கைக்கடிகாரத்தை மிகவும் குறைவான வேகத்தில் ஓட்ட ஸெட்-அப் செய்திருப்பவர். இதனால் அவருக்கு ஒரு நாளுக்கு, உபரியாகவே 48 மணி நேரம் கிடைக்கிறது. ஒரு நாளுக்கு 72 மணி நேரம் உழைக்கும் அரசியல்வாதிகளைப் பெற, நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டுமன்றோ?
இன்னொரு, அதாவது இரண்டாவது கைக்கடிகாரம், முன்னேற்றப் பாதையில் செல்வதற்காக, சுமார் ஒரு வருடத்துக்கு அப்பால் ஆனந்தமாக, தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் – அதாவது அது 2022 நேரத்தைத்தான் தற்போது 2021ல் காண்பித்துக் கொண்டிருக்கும்.
அதுவும் அது தமிழகப் பஞ்சாயத்து ஒன்றிய நேரம்தான். மருதை ஸ்டேண்டர்ட் டைம். சாதா, நாமெல்லாம் உபயோகிக்கும் இந்திய ஒன்றிய நேரத்தை அவர் கண்டுகொள்வதில்லை – ஏனெனில் அது ஆரியம்.
இப்போது உங்களுக்கெல்லாம் தெரியவந்திருக்க முடியாத ரகசியம்:
அவர் மூன்றாவது கைக்கடிகாரத்தையும் பத்திரமாக அக்குளுக்கு அடியில் ஒட்டி, ரகசியமாகவும் பத்திரமாகவும் வைத்திருக்கிறார். அது #கீழடி நேரத்தைக் காண்பிக்கும். மேன்மேலும், மன்னிக்கவும் – கீழ்கீழே கீழடி ஆராய்ச்சி அகழ்வாராய்ச்சி செய்யப் படும்போது, அதற்கேற்றவாறு லெமூரிய-திராவிட நேரமானது பின்பின்னே ஓட்டிக்கொள்ளப் படும். எப்படியும் அடுத்த நான்காண்டுகளில் அது, பொதுயுகத்துக்குமுன் 2000 வருடங்களுக்கு விரட்டியொடுக்கப்படும் என்பதில் எனக்கு (+உங்களுக்கும்) ஐயமே இருக்கக் கூடாது. நன்றி.
தமக்குத் தெரியாத விஷயங்களைத் தெரியாது என ஒப்புக்கொள்ளும் பண்பும் அடக்கமும் மிக்கவர்.
…ஆனாலும் தொடர்ந்து, ஆர்வக்கோளாறினாலோ அல்லது அவர் சகவாசத்தினோலோ தெரியவில்லை, இப்படியெல்லாம் மாட்டிக்கொண்டு விடுபவர், என்ன செய்ய.
இவ்வளவு எழுதியிருக்க வேண்டாம்; திராவிட பிடிஆர்-மதுரை சிங்கம் அவர்கள், திமுக எனும் திராவிடக் கட்சியில் உயர் திராவிட அந்தஸ்தில் இருப்பவர், திமுக திராவிட தமிழக அரசில் முக்கியமான திராவிடப் பொறுப்புகளைத் திராவிடத் தனமாக வகிப்பவர் என்று மட்டும் சொல்லியிருக்கலாம்.
ஆனால் உங்களுக்குப் புரிந்திருக்காது.
ஆகவே.
எது எப்படியோ, எம் தலைவர் – டாக்டர் மேதகு ‘பிடிஆர்-மதுரை சிங்கம்’ பழநிவேல் தியாகராஜன், தமிழக மனிதவளமேம்பாடு+நிதி அமைச்சர் அவர்கள் மேன்மேலும் (+பக்கவாட்டிலும்) அமோகமாக வளர்ந்து தமிழக ஒன்றியத்துக்கு மேன்மேலும் பணி செய்து அவரும் சிறந்து, நம்மைப் போன்ற சாதா அற்பப் புல்லர்களுக்கும் ஆங்கே பொசிந்து சிறக்க வாழ்த்த – எனக்கு வயதிருக்கிறது, அவருக்கு வாய்ப்புமிருக்கிறது.
மேலும் நமக்கெல்லாம் ‘எந்த திராவிடர்களிடம் எவ்வளவு செல்வம் குவிந்திருக்கிறது…’
…என்பதைச் சொல்லவும் அவர் தயார் என்பதை நாம் அறியும்போது… …
பொலிக பொலிக…
-0-0-0-0-0-
..பின்னர், யார் குறித்த பதிவு இது?
ஒரு தற்குறியைப் பற்றியும் இல்லை. எல்லாம் கற்பனை தான். என் இன்னொரு பெரும்பேராசான் எஸ்.ராமகிருஷ்ணன் ஷ்டைலில் மொழிபெயர்த்துச் சொல்லவேண்டுமென்றால்: All StonePalm only.
ஆனால் ஏதாவது எங்கு எந்த சந்து ஒத்துவரும், எப்படிப் பாதுகாப்பாக இருந்துகொண்டு கெத்துக் காட்டல், வாய்ச்சவடால் உளறிக்கொட்டல் வீரம் காட்டி எந்த ஒன்றியத்தின் மீது ஒண்ணுக்கு அடிக்கலாம் என்று அலையும், குதிக்கும், துவளும், துடிக்கும் திராவிட ஆண்குறியை வேண்டுமானாலும் குறிக்கலாமோ என்ன எழவோ!
குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் – அதாவது, பிரச்சினை என்னவென்றால், குறியீடுகள் குறியீட்டியலில் மூழ்கி இறந்துவிட்டன. ஆனால் பின்குறியீட்டியல் இதுவரை முகிழ்க்கவில்லை; ஏனெனில் எம் பெரும்பேராசான் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
ஆகவே, நடுவில் மாட்டிக்கொண்டு முழிப்பது, முன்குறியீட்டியல்தாம், பாவம்.
அப்படி விடைத்துக்கொண்டு அம்போவென்று நிற்கும் திராவிட முன்குறியீட்டின் படிமம் தான் இந்தப் பதிவின் மய்யப் பதிவுபொருள் என எடுத்துக்கொண்டு என்னைப் பொறுத்தருள்க.
நன்றி.
-0–0-
பின்குறிப்பு: என்னை பொறுத்தவரையில் நான், டாக்டர் மேதகு ‘பிடிஆர்-மதுரை சிங்கம்’ பழநிவேல் தியாகராஜன், தமிழக மனிதவளமேம்பாடு+நிதி அமைச்சர் அவர்கள் பேரில் பெரும் எதிர்பார்ப்புகள் (=anti-brahmins) வைத்திருக்கிறேன்.
அவர் நம்பும் இறைவியான மதுரை மீனாக்ஷி, அவர் கண்களைத் திறந்து, அவருடைய துர்சகவாசங்களை ஒழித்து, அவருடைய சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் பட்டிபார்த்து டிங்கரிங் செய்து அருள் பாலித்து அவருக்கும் (அவரை அடுத்த சில ஆண்டுகளுக்காவது நம்புவதாக இருக்கும் பாவப்பட்ட தமிழகத்துக்கும்) நல்வழி காட்டுவாள் எனவும் நம்புகிறேன்.
ஏனெனில் மிகச் சரியாகவே, அவர் தம் கட்சியான திமுக பற்றியும், அதன் ‘வெற்றி’ பற்றியும், அதன் படுமோசமாக அரசாட்சி பற்றியும் அதற்கு முட்டுக் கொடுக்கும் ஊடகப் பேடிகள் குறித்தும் – தீர்க்கதரிசனத்துடன் கருத்து தெரிவித்திருக்கிறார்!
வாழ்க!
அல்லது.
அறம் தவறி ஆட்சி நடத்துவோரை ஸ்ரீ மீனாக்ஷி நின்று வெல்வாள்/கொல்வாள்.
ஏனெனில்.
பேயவள் காணெங்கள் அன்னை…
July 20, 2021 at 13:20
கெளபீனத்தை இறுக்கி கட்டணும்.
July 20, 2021 at 14:46
!
July 20, 2021 at 17:32
Saw you mention BGL Swamy in a tweet.
Was he translated in Tamil or English? Or do you read Kannada too!
I heard of his Tamilu Talegala naduve – from an internet acquaintance long back and was amused even to just hear what it was about :-)
Do you know if it was translated and if our தமிழ்ச்சூழல் came into contact with it?
July 20, 2021 at 18:40
Sir,
1. Whoa! You are stalking me. Though I like my Tarkovsky’s stalker, I do not like to get pounced-on like this!
2. What connection does this scholarly comment have, with the Hero of this post?
3. No. I do not know kannada – but have read a few of BGLS’ scholarly reports in angrezi – including a couple of his botanical reports.
4. I used to know a student of his (in those days they seemed to have done good science in presidency college) from whom I got to hear very interesting anecdotes about BGLS. (he was apparently a bee-in-the-bonnet for dravidian hoodlums, I mean academics of Madras Univ then)
5. AFAIK, no translation of ‘Amidst Tamil Heads’ into Tamil has taken place – but I made a kannadiga dhost read and translate (extempore) a few pages for me from that tome. Was delectable. But then, nothing new -as we know the caliber of our dravoodoos.
6. END
July 20, 2021 at 21:50
1.ஐயா, நான் ஏழரையில் ஒருவன் மட்டுமல்லேன், 839லும் ஒருவன்.
ஹிந்துத்வ திராவிட இருமுனை தாக்குதலை எதிர்கொள்ளும் திராணியிலா மென்தோல் நட்டநடுநிலையாளனாகையால், ட்விட்டரை செய்தியூட்டாக மட்டுமே இப்போதெல்லாம் பாவிப்பவன்.
2. இவ்விடுகையின் point என்ன இன்று புரிபடவில்லையாகையால், திராவிடங் காக்க மடைமாற்றுகிறேன். உஷார்!
3-5
Interesting.
TTN sounds delicious – right from the title :-)
There is gradually some traction now to the claim that much of ‘Sangam’ lit. is a reimagination of a simpler past and one ought to be cautious not to read them as depicting contemporaneity. It would make interesting reading now.
July 27, 2021 at 07:01
இப்பத்தான் சார் நம்மொ ரூட்டுக்கு வந்துர்கீங்கோ, இப்டியே மெய்டெய்ன் பண்ணாக்க எத்தாவது வாரியத் தலீவரு போஸ்ட் கெட்ச்சாலும் கெடைக்கும்.
தாத்தா கால்த்லேர்ந்து மொத்த ஹிஸ்ட்ரியும் பேர்ல வெச்சினிர்க்கப்பவே தெர்ய வோணாமா இம்மாம் பெர்ய கையினு. அத்குன்னு டபுள் வாட்ச் கட்ணுமாடானு செலபேர் கேக்றானுவ, பெர்ய எடத்து மேட்டர்னாலே எல்லாமே டபுள்ஸ் ட்ரிபிள்ஸ்னு கண்கில்லாம போய்கினே இர்க்கும், இதுகூட பிர்யாம இன்னாதான் பண்றானுவோ டமிள்நாட்ல?
விக்கிபீட்யாமேரி தொற்ந்து கெடக்ற எட்த்த பாத்ததும் காலத் தூக்கிட்றீங்களேடானு எங்கள பாத்து கேக்றவ்னுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்றேன், பத்து வர்ஸமா பவர்ல இல்லாதப்பவே பலான எட்த்துலயும் பாலகிஷ்ணா டான்ஸ் போட்டானுவ நம்மாளுவ, அந்தமேரி பொறய அள்ளி வீசினிர்ந்தோம். இப்ப புல் மெஜார்ட்டில வந்துர்க்கோம், இப்பக்கூட எங்கு டக்ளஸ் அண்ணாத்தயப்பத்தி எள்தாம பின்ன எப்ப எள்தறதாம்?
ஆச்சி முட்யர்த்துக்குள்ள மொத்த ஒலக ஹிஸ்ட்ரி பூகோளம் அல்லாத்தய்மே மாத்திர்வோம், அத்தோட பர்ஸ்ட் ஸ்டெப்புதான் டமிள்நாட்டு இஸ்கூல் புக் டிப்போ தலீவர் போஸ்ட்டு, பாத்துனே இர்ங்கடா அல்லாத்தயும் கதற வுட்றமா இல்லியானு.
டக்ளஸ் அண்ணாத்த பட்ச்சது எம்பியே காலிபண்ணது பாரின் கம்பேனினாலும் எல்லா சப்ஜக்ட்லயும் பூந்து வூடு கட்றாமேரி வேற எவ்னாலயாவ்து மிடிய்மா? டீயென்னே ஜீன்ஸு கோமணம் ரத்தம்னிட்டு எனத்துக்கு இன்னாமேரி டெபனிஷன் குட்த்தாரு, எந்த டாக்டர்னால ஆவும்?
சொன்னீங்களே செஞ்சீங்களானு தெர்யாத்தனமா ஒர்த்தன் கேட்ட ஒட்னே டேட்டு போட்ருக்கமாடானு இன்னாமேரி லா பாய்ண்ட்ட எட்த்து வுட்டாப்ல? சுப்ரீம் கோர்ட் ஜட்ஜூக்கே இவ்ளோ மேட்டரு தெர்ஞ்சிர்க்காது.
எங்கு பரம்பரதாண்டா அல்லா கோயில்லயும் கைய வச்சிர்க்கோம்னு குங்குமப்பொட்டோட போஸ் குட்த்துகினே நான் திராவிடியா ஸ்டாக்குடானு உதார் வுட இன்னொர்த்தன் பொற்ந்துதான் வர்னும். இப்டியாபட்ட அய்ட்டத்துக்கு நோபல் குட்க்காம வுட்டாத்தான் அது சாமி குத்தம்.
July 27, 2021 at 09:30
🤣👌🙌