தமிழகத்தின் திராவிட ஊன்றுகோல் – ஒரு நீதிபோதனைக் கதை

July 21, 2021

முன்னொரு காலத்தில் (இது பாரத சுதந்திரம் அடைத்ததற்குச் சற்றுமுன்னே என நினைத்துக்கொண்டால் பாதகம் இல்லை), ஒருமாதிரி தமிழ்க் கிராமத்தில் ஒரு மிராசுதார்/நிலச்சுவான்தார் இருந்தார். வெள்ளைக் காரர்களுக்கு எடுபிடியாகவும், தம் சொந்த மக்களை தம் ஆண்டைகளின் வழியில் பிரித்து அடக்கியாண்டுகொண்டும் சுபிட்சத்தில் இருந்தார்.

அவருடைய சுகஜீவி வாழ்வில், எல்லாம் மிகவும் இனிதே நடந்த படியால், மேலும் தினமும் நான்குவேளை அவர் இனிப்புகளாகவே சுயமரியாதையுடன் உண்டபடியால், அவருக்குக் கொடும் நீரிழிவு நோய் வந்துவிட்டது; டைப் 1 டையபட்டீஸ். மேலும் பலப்பல புளிச்சேப்பக்காரச் சிக்கல்கள்.

ஆக. அவர் உயிர்பிழைக்க வேண்டுமென்றால் கால்கள் இரண்டையும் அகற்றினால் நல்லது என வெள்ளைக்கார மருத்துவர்கள் கருதியதால், அவை அகற்றப் பட்டன. பின் சில நாட்கள் அவர் துக்கத்தில் இருந்தார். வெள்ளைக்காரர்கள் வெளியேறும் தருணமும் அருகில் வந்துகொண்டிருந்ததால், அவருக்கு இரட்டிப்புச் சோகம். “காலும் போச்சு, இப்ப முழுசும் போகிறதே!”

இப்படியாகத்தானே.

மருத்துவர்கள் பரிந்துரைப் படி, அவர் ஊன்றுகோல்களை உபயோகிக்கலானார். கீழே அதன் கருத்துப் படம்:


அவருக்குச் சுயமரியாதைச் சுயமுன்னேற்றம் குறித்துத் திட்டவட்டமான கருத்துகளும் முனைப்பும் இருந்தபடியால் – விடா முயற்சி செய்து ஊன்றுகோல்களை உபயோகிப்பதில் விற்பன்னரானார். அவற்றை வைத்துக்கொண்டு விதம்விதமான அதிசயிக்கத்தக்க கோமாளித்தனங்களைச் செய்ய ஆரம்பித்தார். நொண்டுதல், சுற்றுதல், ஓடுதல், நடனமாடுதல், ஏணியேற்றம், குதிரையோட்டம் எனப் பலபல சேஷ்டைகளை, கும்மாங்குத்து டப்பாங்குத்து உட்படச் செய்தார்.

இத்தனைக்கும் இவற்றை அவர், ஒருமாதிரி ஆர்வக் கோளாறு காரணமாகச் செய்யவில்லை; மாறாக, திட்டமிட்டு, அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எதிர்கால ஆதாயங்களையும் நல்விளைவுகளைத் தொடர்ந்து அறுவடை செய்ய மட்டுமே, ஊன்றுகோல்வாதத்தை ஒரு கருவியாகப் பாவித்தார். ஏனெனில் அவர் அறிவியல் பூர்வமாக அழிச்சாட்டியம் செய்வதில் வல்லவராக இருந்த எட்டப்ப வம்சாவளியில் உதித்தவர்.

…அவர் குடும்பத்தினர் முதலில், இந்தச் சேஷ்டைகளின் காரணமாக அவரை இளக்காரமாகப் பார்த்தாலும் பின்னர், அவர் தன் வீட்டில் சில்மிஷங்களிலும் பாலியல் வக்கிரங்களிலும் ஈடுபடாமல், ஏதோ இந்த மட்டில் ஏதோ உழைக்கிறாரே நகைச்சுவையாகவும் இருக்கிறதே எனக் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டனர்.

அவருடைய பராக்கிரமத்தைக் கண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் மூக்கில் விரலை வைத்தனர், பின்னர் அவருடைய கிராமமே அவரை ஆச்சரியத்துடன் பார்த்து அவரை ஆராதிக்க ஆரம்பித்தது. பின்னர் அவருடைய சுற்றமும் நட்பும்  பின்னர் பிற வட்டார மக்கள் திரள்களும்… ஆக.பலப்பல கழைக்கூத்தாடிகளில் வாழ்வில் மண்ணையும் அள்ளிப் போட்டார் எனவும் சொல்லலாம். பின்னர் தன் பிள்ளைகளுக்கும் ஊன்றுகோல்முதல் வாதத்தை முறையாகக் கற்பித்தார்.

இவை ஒருபுறமிருக்க.

அடிப்படையில் அவர் ஒரு மிகைப்பணக்காரராகவும் கொஞ்சம் அடாவடியாகவும் இருந்த படியால் அவருடைய பாதையைப் பின்பற்றப் பல பாமரர்கள் தயாராக இருந்தனர். அதாவது அவர் செய்ததைச் செய்தால், அவர்களுக்கும் வாழ்க்கை வசதிகள் முன்னேறும் எனக் கருதினர். (நம்மூர் திரைப்படக் கோமாளிகள் போலவே உடையணிந்து, அவர்களுடைய பாவனைகளைக் காப்பிசெய்து, வஜனம் பேசினால் ‘சொர்க்கம்’ என ஒரு பெரிய கும்பல் தமிழகத்தில் இருக்கிறது இல்லையா. அதே கும்பலின் மூதாதையர்கள் தாம் இவர்கள், பாவம்!)

அதாவது, ஊன்றுகோல்களை வைத்து கோமாளித்தனம் செய்வது என்பது ஒருமாதிரி ‘ஸ்டேட்டஸ் ஸிம்பல்’ ஆகவே மாறி பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது! ஊன்றுகோல் முதல்வாதமே ஒரு தனிப்பெரும் தகுதியாகப் பரிணமித்தது.

ஆகவே, அக்கிராமத்தில் பலரும் ஊன்றுகோல்களை உபயோகிக்க ஆரம்பித்தனர்.  தங்கள் கிராமத்தை ‘ஊன்றுகோல்பள்ளி’ எனப் பெயர்மாற்றமும்

பின்னர் பக்கத்து கிராமங்களிலும் ஊன்றுகோல்களின் பெருமைகள் பரவின.

நிலச்சுவாந்தாரரின் பிள்ளைகள் அனைவருக்கும் குலக்கல்வியாகவே ஊன்றுகோல்முதல்வாதம் உருப்போட வைக்கப் பட்டு – அதுவும் பெரிதாக வாரிசுரிமையுடன் உருவாகி வளர்ந்தது.

அவருடைய குடும்பத்தினரும் சுற்றமும் நட்புகளும் ஏகோபித்து ஊன்றுகோலில் ஊன்றிச் செயல்பட்டனர். அந்த நிலப்பகுதி எங்கும் எதிலும் ஊன்றுகோல்கள் மட்டுமே ஆதாரசுருதியாக ஒலித்துக்கொண்டிருந்தன. ஊன்றுகோல் பயிற்சிப் பள்ளிகள், போட்டிகள், ஊன்றுகோல் தொழிற்சாலைகள், பெரும் குழுமங்கள் (எல்லாம் அவருடைய சுற்றம்+நண்பர்கள் மேற்பார்வையில்தாம்!), ஸ்டாக்கிஸ்ட்கள், கடைகள்… விழாக்கள், ஊன்றுகோல் ஒலிம்பிக் ஸ், தமிழூன்றுகோல் செவ்வூன்றுகோல் …  எனச் சில ஆண்டுகளிலேயே ‘எங்கும் ஊன்றுகோல், எதிலும் ஊன்றுகோல்!’  (இச்சமயம் போலி ஊன்றுகோல்பிரச்சினைகளும் மிளிர்ந்தன, ஆனால் அவற்றைப் பற்றிப் பின்னொரு சமயம்)

ஊன்றுகோலியம் எனும் புதுத் துறை (ஸோஷியல் ஸைன்ஸ் இயல்களுக்குள்ளே) உருவாகி வந்தது. ஆனால் ஊன்றுகோலியல் என்று அது அழைக்கப்படுவதுதான் சரி என ஒரு பல்கலைப்பேராசிரியப் பக்கம் கிளம்பி வந்தது;  அதற்கு மாறாக முரணியக்கத்தின்படி, அதற்கெதிர்ப் பக்கத்தில் ‘பின்ஊன்றுகோலியம்’ என்றுதான் அது அழைக்கப் படவேண்டும் என பகுத்துத் தொகுத்து நிறுவினார், வழக்கம்போலவே நம் பெரும்பேராசான், ஜெயமோகன் அவர்கள்.

ஊன்றுகோல் வரலாற்றாளர்கள் ஊன்றிப் படித்துச் சங்ககாலத்திலேயே ஊன்றுகோல் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

ஊன்றுகோல் எனும் மு. கதிரேசன் செட்டியாரின் வரலாற்றுக் காப்பியம் கவிஞ்ஜர் முடியரசன் அவர்களால் எழுதப்பட்டு அதற்கு நோபெல் பரிசு கிடைத்தது.

கீழடியில் சுமார் 1000 அடி ஆழத்தில் அலுமினிய ஊன்றுகோல்கள் கிடைத்ததை வைத்து வரலாற்றுப் புதினங்கள் எழுதப் பட்டன. அங்கு கிடைத்த, பிடுங்கப்பட்ட அல்லது தன்னிச்சையாக உதிர்ந்த ஒரு மனிதக் குஞ்சாமணி மயிரை வைத்து, ஆங்கே ‘ஆதி அலுமினியன்’ உருவானது தெளிவு செய்யப் பட்டது. உலகத் தொழில் நுட்பங்களுக்கெல்லாம் ஊற்றுக் கண் திராவிட ஊன்றுகோல் முதல்வாதமே என்பது நிறுவப் பட்டது.

ஒரிஜினல் ஊன்றுகோல் ஏற்றுமதியும் பெருகியது. கேத்தரீன் ஸிட்டா ஜோன்ஸ் அம்மணியும் ஊன்றுகோல் சகிதம் கவர்ச்சிகரமான புகைப்படங்களை ரிலீஸ் செய்தார்கள். ஊன்றுகோல் ஃபேஷன் ஷோக்கள் அபரிமிதமான மக்கள்வரவேற்பைப் பெற்றன.

ஊன்றுகோல்யோகா (இதற்கும் ஹிந்துமதத்துக்கும் ஒரு தொடர்புமில்லை!) எனும் உடற்பயிற்சி முறை பெரிய அளவில் பிரபலம் பெற்று வந்தது.

இஸ்லாமியர்களும் ஹலால் ஊன்றுகோல்களுக்கான ஒரு இயக்கத்தை ஆரம்பித்து ஊன்றுகோல் நீரோட்டத்தில் கலந்தனர்.

க்றிஸ்தவர்களும் ஆச்சரியம் கலந்த உணர்ச்சிவேகத்தில் இப்படியுமா நடக்குமென நினைத்து அதிர்ச்சியுற்றுப் புல்லரித்துக்கொண்டனர்.

ஆக. ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய ஊன்றுகோல் புரட்சி உலகெங்கும் அரங்கேறிக் கொண்டிருந்தது.

அதி நவீன தொழில் நுட்ப அறிவியல் ஆராய்ச்சிகளும் அரங்கேறிக் கொண்டிருந்தன. சுணக்கமடைந்த ரத்தச்சிவப்பணுக்களுக்கு நேனோ-ஊன்றுகோல்கள் கொடுத்தால் அவை ஆனந்தமாகத் தந்துகிகளில் உலவமுடியும் எனப் பின்நவீனத்துவ நாட்டாரியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

‘அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை ஊன்றுகோல்’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. “2030க்குள் உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் ஊன்றுகோல் கிடைக்கவேண்டும்” எனும் பிரகடனத்தின் படி உலகெங்கும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஊன்றுகோலின் தேவை உணரப் பட்டது. 

இப்படியாகத்தானே. சந்தடி சாக்கில்.

‘ஊன்றுகோல் முன்னேற்றக் கழகம்’ எனவொரு அரசியல் கட்சியும் ஸ்தாபனம் செய்யப்பட்டு, அதன் நொண்டிச் சாக்குகள் தேர்தல் அறிக்கைகளாகப் பரிணமித்தன. “ஊன்றுகோல்! உண்டியம்! உந்தியோடு!!” என்பது தாரக மந்திரமாகவும் ஆகியது. ‘ஊன்றுகோல் உயர்பழக்கம், கன்னக்கோல் கழகப் பழக்கம்!’ போன்ற கவர்ச்சிகரமான சொலவடைகள் அதற்கு உதவி செய்தன.

பின்னர்.

“ரூபாய்க்கு மூன்று ஊன்றுகோல்” போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களைப் பரப்புரை செய்து, “ஊன்றுகோல் வழி சமூகநீதியம்” எனக் கொடிபிடித்து – நம் ஊமுக, ஆட்சியையும் ஒரு வழியாகப் பிடித்தது. அதன் தலைவராகவும் முதலையமைச்சராகவும் அந்த ஒரிஜினல் நிலச்சுவான்தாரரின் மகன், ஹிட்லர் அவர்கள் பரிணமித்தார்.

ஆக. நிலச்சுவான்தாரரின் திட்டம் வெற்றி பெற்றது. வெள்ளைக்காரர்கள் விட்டுச் சென்ற பின்னரும், மக்களிடம் இருந்து கப்பத்தைத் தொடர்ந்து வசூலிக்க அவர் குடும்பத்தினருக்கும் சுற்றத்துக்கும் முடிந்தது… …

ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டவுடன் ஹிட்லர் செய்த முதற்காரியம்: உடனடியாக ‘ஊன்றுகோல் வாரியம்’ ஒன்றைத் தொடங்கி, அதன் தலைவராக கவிங்கி ராட்சஸபுத்திரியை நியமித்ததும் – அதன் முதற்பணியாகச் சென்னை மரீனா கடற்கரையில் ஆதி-ஊன்றுகோலுக்காக ஒரு பெரும் நினைவுச் சின்னத்தை (1 கிலோமீட்டர் உயரம்!) ரூ 10000 கோடி செலவில் நிர்மாணம் செய்யப் போவதாகவும் அறிவித்தது தான்.

-0-0-0-0-0-

இதுவுமது.

அடுத்த தலைமுறைக்குள்ளேயே, அந்தத் தமிழ நிலப் பரப்பில் இருந்த அனைத்து மக்களும் சாதாரணமாக நடப்பதையே மறந்துவிட்டார்கள்.

வீட்டிற்குள்ளேயும்கூட அவர்களுக்கு நடமாடுவதற்கு ஊன்றுகோல்கள் தேவைப்பட்டன – ஏனெனில் அவர்களுக்கு அதில்லாமல் உயிர்தரிக்கக் கூட முடியாது என நம்பினார்கள். அதில்லாமல் அவர்களுக்கு நடக்கவே தெரியவில்லை. அவர்கள் கால்களும் பயிற்சி இன்மையால் சூம்பிப் போயிருந்தன என்பதும் ஒரு ஊக்க போனஸ்.

இப்படியாகத்தானே. இச்சமயத்தில்.

பாரதத்தில் வளர்ந்த தேசியவுணர்ச்சியும், நேர்மையும் செயல்திறமும் கட்டுப்பாடும் உள்ளடக்கிய ஒரு கட்சி உருவாகி வந்து, மத்தியிலும் ஆட்சியைப் பிடித்து – அதன் செயல்பாடுகள் காரணமாகவே, பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏகோபித்து வளர்ந்து கொண்டிருந்தது.
ஊன்றுகோல் நாட்டிலும் அது ஊன்றுகோலில்லாமலேயே வளர்ந்துகொண்டிருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.

சரி.

ஒரு நாள்,  அதன் இளம் தலைவர்களில் ஒருவர், புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர், ஊன்றுகோல்பள்ளி எனும் ஆதிஊன்றுகோல் திராவிட கிராமத்துக்கு வந்தார். (நினைவிருக்கிறதா? அந்தக் கிராமத்தில்தான் முதன்முதலில், உலகத் திரைப்படவரலாற்றிலேயே முதன்முதலாக ஊன்றுகோல் புரட்சி ஆரம்பித்தது!)

அவருக்கு ஒரே ஆச்சரியம். அவர் அக்கிராம மக்களைக் கேட்டார்:

“உங்கள் கால்கள் பார்ப்பதற்கு நன்றாகத்தானே இருக்கின்றன? ஆரோக்கியக் குறைச்சல் போலத் தெரியவில்லையே; கடவுளும் இயற்கையும் நமக்குக் கொடுத்திருக்கும் கால்களை உபயோகிக்காமல்  என்ன இது அலங்கோலம்? எவ்வளவு உடலுழைப்பு உங்களுக்கு விரயமாகிறது தெரியுமா?”

அக்கிராம ஊன்றுகோலர்கள் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள்.

“நாங்கள் ஆதிஊன்றுகோலர்கள். நீ ஒரு புதுக்கருக்கு மாறாத இளைஞன். அதுவும் காவிக்காரன். சங்க ஊன்றுகோலப் பாரம்பரியம் மிக்க எங்களுக்கு நீ படிப்பினை சொல்ல வந்துவிட்டாய். ஹா! ஊன்றுகோலில்லாமல் நடக்க முயற்சிக்க எங்களுக்குப் பைத்தியமா, ஹஹ்ஹா!!”

இளைஞருக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. ஏனெனில் அவர் மிகுந்த மூளையும் செயலூக்கமும் நேர்மையும் இருப்பதற்கு அப்பாற்பட்டு – அவரும் அதே மக்கள்திரளைச் சார்ந்தவர்தான்.

அவர் சொன்னார்:

“இப்போது என்னைப் பாருங்கள்! நானும் உங்களைப் போன்றவன் தானே! ஆனால் எனக்கு என் கால்களை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்யமுடிகிறது!”

அவர் ஓடியாடிக் கால்பந்து விளையாடி ஏணியில் ஏறியிறங்கி இன்னும் என்னவெல்லாமோ செய்து காட்டினார்.

ஆனால் ஆதிஊன்றுகோலர்கள் ஆச்சரியப் படவில்லை. மாறாக,

“நீ ஒரு மந்திரவாதி, காவி ஆரியன், ஊன்றுகோலியத்துக்கு எதிரானவன்,

மேலும் எங்களுக்கு ரேஷன் கடைக்குப் போகவேண்டும். ‘முதலமைச்சர் ஹிட்லர் இலவச ஊன்றுகோல் திட்டம்’ படிக்கு எங்களுக்குக் கிடைக்கவேண்டிய மாதாந்திர ஊன்றுகோலைப் பெற்றுக்கொள்ளவேண்டும்… லேட்டானால் க்யூ நீண்டுவிடும்,  பின்னர் ‘முதலமைச்சர் மகன் ஸ்டாலின்நிதி இலவச செருப்புத் திட்டம்’ வரிசையிலும் நிற்கவேண்டும். நன்றி!”

பொறுமையாக, அடுத்த நாளும் அதே கிராமத்து மரத்தடிக்குச் சென்றார், அந்த இளைஞர், பாவம்.
மறுபடியும் அவரைச் சுற்றி ஊன்றுகோல்களில் சாய்ந்தபடி நின்ற பெருசுசிறசுகள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தன. எப்படித்தான் ஊன்றுகோலில்லாமல் தன் சொந்தக் காலில் நின்று இப்படி இவர் நிமிர்ந்து நடக்கிறார் எனச் சந்தேகப் பட்டன… 

“நிச்சயமாக இந்த ஆள் ஒரு கொடூரமான மந்திரவாதி ஹிந்துத்துவாதான்!”

இளைஞர் நாத் தழுதழுக்கச் சொன்னார்:

“ஐயன்மீர், அம்மணிகளே, இளைஞர்களே, பிள்ளைகளே… நீங்கள் அனைவரும் இந்தக் கவைக்குதவாத ஊன்றுகோல்களைத் தூரப் போட்டுவிட்டு சாதாரணமாக இருங்கள், உழையுங்கள் – நாம் அனைவரும் நமக்கேற்ற முன்னேற்றப்பாதையில் செல்லலாம்… இப்படிப் பிச்சைக் காரத்தனமாகவும் சோம்பேறிகளாகவும் இருப்பதில் என்ன மகிழ்ச்சி, சொல்லுங்கள்? நம் திறனுக்கேற்ப நாம் வேலையே செய்யாமல் மாயைகளில் சிக்கிக்கொண்டு இருப்பதன் பொருள்தாம் என்ன?

உங்களை இப்படியே தலைமுறை தலைமுறையாக ஊன்றுகோலர்களாகவும் பிச்சைக்கார்களாகவும் வைத்திருப்பதில் யாருக்கு லாபம், கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!”

மக்களுக்கு மறுபடியும் கடும் கால நெருக்கடி. பாவம். அவர்களுக்கு ஏகப்பட்ட வரிசைகளில் நிற்கவேண்டுஂமே!  முதலில் ‘முதலமைச்சரின் தகப்பன்நிதி இலவச விந்துத் திட்டம்’ வழி குளிரூட்டப்பட்ட திராவிட விந்துச் சொட்டுகளைப் பெற்றுத் தத்தம் பெண்டிரிடம் கொடுக்கவேண்டுமே!

ஆகவே ஊன்றுகோலர்களாகிய அவர்கள் அனைவரும் விந்தி விந்தி நெடுங்காலம் நடந்து விதம்விதமான இலவசக் க்யூக்களில் நின்றனர்.

சுபம்.

பின்குறிப்பு: முதலையமைச்சர் ஹிட்லரின் அடுத்த வசீகரத் திட்டம்: “முதலமைச்சர் ஹிட்லர் ‘செல்லப்பிராணிகளுக்கும் ஊன்றுகோல்’ இலவசத் திட்டம்.” (இதைக்கேட்டு ஐநா சபையே மூக்கில் விரலை வைத்துக் கொள்ளப் போகிறது)

-0-0-0-0-

(இந்தக் கதையின் ஒருமாதிரி திராவிட அசிங்கப்பார்வையற்ற சிறு ‘the emperor has new clothes’ ஜீனேஷ்வரின் நிர்வாணலீலாவதிக் கதை / ஜீனரத்னரின் லீலாவதிஸாரம் கதை வடிவத்தை, நான், ஸ்ரீ ஸானந்த் ஸ்வாமிஜி அவர்களிடம் பேச்சுவாக்கில் கேட்ட நினைவு; அவரும் அந்தக் கதையை யாரோ சொல்லக் கேட்டதாக என்றும்…)3 Responses to “தமிழகத்தின் திராவிட ஊன்றுகோல் – ஒரு நீதிபோதனைக் கதை”

 1. Ramesh Narayanan Says:

  😁😂😂
  எனக்கு ர்ரொம்ப புடிச்சது /அதற்கெதிர்ப் பக்கத்தில் ‘பின்ஊன்றுகோலியம்’ என்றுதான் அது அழைக்கப் படவேண்டும் என பகுத்துத் தொகுத்து நிறுவினார், வழக்கம்போலவே நம் பெரும்பேராசான், ஜெயமோகன் அவர்கள்/
  😅. குருப்பூர்ணிமை அன்று கெடச்ச நல்லூர்.
  நெல்ல காலம் கோலி வெள்ளாடினவங்க, கோள்தான் என் செயும் னிட்டு, க்கோள் பக்கம் வாராமப் போனானுவளே, அதுமட்டுஞ்சரி.
  மத்தபடி, போலி கோலிகளை எதிர் பாத்துக்காத்துக் கிடக்கும்,
  சக கெளம், ஏழர நலச் சங்கம், நல்லூர் வட்டம், சென்னை

 2. தீராவிடன் Says:

  ஆ! எங்கள் விடியல் ஆட்சியில் உங்களைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறீர்களா? என்ன ஆச்சர்யம்!? ஆட்சிக்கு வந்தது முதலே உண்மையைப் பேசுவோரையும், தப்பித்தவறி கேள்வி கேட்போரையும் தேடித்தேடி சிறப்பாக கவனித்து வருகிறோம், விளைவாக பெரும்பாலானோர் நயம் காந்தி பிராண்ட் மௌனவிரதத்தைக் கையிலெடுத்து விட்டனர்.

  பற்றாக்குறைக்கு கலகப் பேராசிறியர்களை விட்டு மு க ஊடகங்கள் மூலம் அன்றாடம் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறோம் வேறு, அப்படி இருந்தும் எங்கள் மூலாதாரத்தையே மொத்தமாகச் சிதைத்து விடும் தைரியம் உங்களுக்கு எப்படி வந்தது?

  அங்கிங்கினாதபடி எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் கலக ஊப்பிகளின் பார்வையில் படாமல் நீங்கள் இதுவரை எப்படித் தப்பினீர்கள்? ஒருவேளை கடந்த வாரத்தில் எங்களது கலகப் போர்வாள் சார்சு பொன்னையா அவர்கள் தனது வீரதீர உரையின் மூலம் ஒட்டுமொத்தமாக அனைவரையும் உலுக்கி எடுத்ததில் கொஞ்சம் அசந்து விட்டார்களோ?

  என்னதான் திமுகவுக்கு போட்ட பிச்சையைப் பற்றி அவர் பேசியிருந்தாலும், பாரதத்தையும், அதன் பிரதமரையும், பெரும்பான்மை மக்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் அர்சித்துத் தனது தரத்தையும் நோக்கத்தையும் நிறுவிய காரணத்தால் அவருக்கு அரசு பாதுகாப்பில் உயர்தர உபசரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது, சமூகநீதி நிலைநாட்டப் பட்டுள்ளது, திராவிட ஊன்றுகோலைப் பரவலாக்காமல் இது சாத்தியப்பட்டிருக்குமா சொல்லுங்கள்?

  ஆக, உங்களைப் போலச் சொந்தக் காலில் நிற்கச் சொல்லி திராவிட ஊன்றுகோலுக்கெதிராக விஷமப் பிரச்சாரம் செய்வோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவர் என்பதை இங்கே தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

 3. msp Says:

  ஊன்றுகோல் உயர்பழக்கம், கன்னக்கோல் கழகப் பழக்கம்!’


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s