விளையும் பயிர் ‘நிசப்தம்’ வா மணிகண்டன் அவர்களின் “ரெண்டாம் கிளாஸ்லயே அரசியல் ஆர்வம்!”

July 14, 2021

சென்றவாரம் வனாந்திரத்தில் மழைக்கால நடைப்பயணம் செய்கிறேன் என்று முதுகுப்பை (olden rubbish) சகிதம் கிளம்பி, அட்டைகளெல்லாம் அட்டையட்டையாகக் கிளம்பி என் உடலெல்லாம் அப்பிக்கொண்டு வலுக்கட்டாய ரத்ததானம் செய்துகொள்ள வாய்ப்பிருக்கும் பகுதிகளில் சுற்றியபோது, ஊக்கபோனஸ்ஸாக என் கைபேசியுடன் ஒரு திடீரெக்ஸ் சிற்றாற்றில் விழுந்து, கைபேசிக்கும் பிரியாவிடை கொடுத்தேன்.

சோகம்.

ஆனால் திரும்பிவந்து ஆசுவாசமாக வந்த மின்னஞ்சல்களை (ஒன்றிரண்டுதான், நல்லவேளை!) பார்த்தால் அதில் ஒன்றில் இந்தக் கொடும் சோகம். அட்டைக் கடி ரத்தக் களறியே பரவாயில்லை என்றாகிவிட்டது.

திடுக்கிட்டு விட்டேன்.

நண்பர் ஒருவரிடம் எப்போதோ ஒப்புக்கொண்டிருந்தபடிக்கு கார்ல் இயென்மாவின் கதைகளையும் அவருடைய மொழிபெயர்ப்புகளையும் படித்துவிட்டு அவற்றைப் பற்றி ரெண்டு பத்திகள் எழுதலாம் என்றால்… 

…எனக்குப் பயபீதியில் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டிருந்தது, என்ன செய்ய.

-0-0-0-0-

சரி. கடந்த சிலவருடங்களாக, என் செல்ல இளைஞர் நிசப்தம் மணிகண்டன் பக்கமே போகாமலிருந்தேன்; ஆனால், ஒரு தவறு செய்துவிட்டேன் – அவருக்குச் சென்ற இரண்டுமூன்று ஆண்டுகளில் இரண்டுமூன்று வயது ஏறியிருக்கலாம், கொஞ்சமேனும் முதிர்ச்சி அடைந்திருக்கலாம் என நினைத்திருந்தேன். மனப்பால் குடித்திருந்தேன்.

ஆனால்…

நம்மில் பலருக்கு வளர்ச்சியில் நம்பிக்கையேயில்லை, நமக்கெதுக்கு வம்பு, வேலைவெட்டியத்து வளந்துவெச்சி நமக்கு இன்னமும் பொறுப்புகளையும் பொறுப்புணர்ச்சியையும் வரவழைத்துக்கொள்ள நாம் என்ன முட்டாக்கூவான்களா என்ன. சொல்லுங்கள்.

நமக்கெல்லாருக்கும் நிரந்தர மார்க்கண்டேய மணிகண்டனாக இருக்கத் தானே ஆசை…

இப்போது சில சிந்தனைகள்: (ற்றொம்ப இல்லை, கவலைவேண்டேல்!)

1. யாராவது ‘நேர்காணல்’ எனச் செய்யவந்தால், உடனே கண்டமேனிக்கும் மானேதேனே சேர்த்துப் புளகாங்கிதத்துடன் உளறிக்கொட்டுவது என்பது தமிழ் எழுத்தாளனின் அடிப்படைப் பண்பா? உரிமையா?

2. நம் இளைஞர்களில் பலர் ஏன் இப்படிச் சோக நிலையில் உழல்கிறார்கள்?

3. ரெண்டாங்க்ளாஸ் படிக்கும்போதே அவருக்கு அரசியல் ஆர்வம் இருந்திருந்தால், இன்றைய தேதிக்கு, அவர்தாமே தமிழக ஊராட்சி வொன்றியத்தின் முதலையமைச்சராகியிருக்கவேண்டும்? (அவர் தலையும் மரியாதையை வரவழைக்கும் அளவில் வாங்கியிருக்கிறதே! அதிலாவது முதிர்ச்சி இருக்கிறதே!)

4. வீடு/குடும்பச் சூழலில் அதீதமாக திராவிட அரசியல் உணர்ச்சிகரமைதுனம் பொழுதன்னிக்கும் இருந்தால், குழந்தைகளுக்கும் பிறந்ததிலிருந்தே அரசியல் புரிதல் சாத்தியமாகி விடுமோ?

ஆகவே அடுத்த நேர்காணலில், “நான் பிறந்த உடனேயே சூட்டொடுசூடாக அடித்த ஒண்ணுக்கின் வழியாகவே உதயசூரியன் சின்னத்தை என் கோமணத்தில் வரைந்தேனாக்கம்” எனச் சொல்லிவிடக்கூடும் அற்புதத்தையும் நாம் பார்க்கவேண்டி நேருமோ?

அதற்கு அடுத்த நேர்காணலில்: “நான் பேசிய/சொன்ன முதல் வார்த்தையே ‘திராவிடம்!’ அடுத்த இரண்டு சொற்கள்: “கலைஞ்ஜர் வால்க!”

ஆக: இலக்கிய மாமணி டிங்டாங் கேண்டிடேட் ரெடி.

5. இந்த ஸ்ருதி டீவி தண்டக் கருமாந்திரங்களுக்கு வேறு வேலையே இல்லையா? ஏன் இப்படிப்பட்ட திராபை நேர்காணல்களைச் செய்து தமிழர்களின் மிச்சமிருக்கும் மானத்தையும் வாங்குகிறார்கள், பாவிகள்!

6. எனக்குப் பொறாமைதான். இதில் சந்தேகமேயில்லை. நான் ரெண்டாங்க்ளாஸ் படிக்கும்போது, எனக்கு எந்த விஷயத்திலுமே பெரிதாக ஆர்வம் இருந்ததாக நினைவில்லை. அதிக பட்சம், ‘இன்றிரவு தயிர்சாதம்+வடுமாங்காவா’ அல்லது ‘மோர்சாதம் + மோர்மிளகாயா’ போன்ற அத்தியாவசியமான கேள்விகளைக் கூட யோசித்திருப்பேனா என நினைவில்லை.

இந்த அழகில், இவ்வளவு வயதாகியும், விவேகம் துளிக்கூட இல்லை. இளைஞர்கள் யாராவது சாதித்துவிட்டால் பொறாமைத்தீ முட்டி விடுகிறது, என்ன செய்ய.

இதே இளைங்கர் போர்க்கால ரீதியில் டபுள்-ட்ரிபிள் ப்ரொமோஷன் பெற்று திரைப்படக் கதைகளையும் அட்ச்சுவுட ஆரம்பிக்கும் போது நான் என்ன செய்வேன், சொல்லுங்கள்?

7. எனக்கு விமோசனம் இல்லை. இதனைப் படிக்கும் உங்களுக்கும் அது கண்டிப்பாக இல்லை. நன்றி.

-0-0-0-0-

ஒரு கேள்வி/சவால்:

உங்கள் ரெண்டாங்க்ளாஸில் (அதுவரை படித்திருக்கிறீர்கள் என்றால்) உங்களுக்கும் அரசியல் புரிதல் இருந்ததா? அப்படியானால் அது எப்படியாக, என்னவாக இருந்தது.

உங்களுக்கு உதவிசெய்ய ஒரு எடுத்துக்காட்டு:

“என் ரெண்டாங்க்ளாஸ்லேயே அரசியல் புரிதல் மிகவும் அதிகமாக இருந்தது.

என் அன்னை எனக்கு நிறைய ராஜாராணி கதைகள் சொல்வார்; ஐய்யய்யோ! அரசன்அரசி கதைகள் தாம் அவை. அப்போதே நான் பலவகைகளில் தராதரம் பிரிக்க, பார்க்கக் கற்றுக்கொண்டு விட்டேன். அதேபோல அரசிகளைப் பகுத்தாய்ந்து நான் பிஹெச்டி ஒன்றை அப்போதே செய்தேன்.

தலைப்பு: அரசியல்: சங்ககாலத் தமிழரசிகளின் பின் நவீனத்துவச் சதிப் பின்னல்”

24 Responses to “விளையும் பயிர் ‘நிசப்தம்’ வா மணிகண்டன் அவர்களின் “ரெண்டாம் கிளாஸ்லயே அரசியல் ஆர்வம்!””

  1. dagalti Says:

    இவர் யார்னு இப்போ தான் கூகுள் பண்ணேன்.
    அன்னாரின் சமீபத்திய கருத்து தெறிப்பு ஒன்றை சில நாட்கள் முன்பு கண்டேன்

    “மார்வாடிகளை புறக்கணிப்போம்” என்று இந்த திராவிட ஆசாமிகள் சென்ற வாரம் இப்படி தயக்கமின்றி முழங்கினார்கள். பச்சை நாட்ஸித்தனம்.

    ஆனால், ‘முஸ்லிம் கடையில் வாங்காதே’ கோஷத்துக்கும் இதற்கும் என்ன வித்யாசம், என்று கேட்டால் கொதித்துவிடுகிறார்கள். அப்படி இணைவைப்பது பார்ப்பன குயுக்தியாம்.

    We live, we learn.


    • Sit, thanks. Though I have written quite a few times about this ‘new litter kid ‘nisaptham’ on the tamil cultural firmament’ – I had not realized that he had become so rabid, totally stupid, and frothing at the mouth. However, each unto his own rabidity, yeah?

      Thanks for sensitizing me to the nonsense – though I would hate to raise our ignorant & illiterate third rate lumpen porukkis to the exalted levels of the Nazis. Honest.

      Link to the rabidness – for the posterity:

      • S Says:

        இந்த வா. மணிகண்டன், அநியாயம் நடக்கும் போது “நமக்கு ஏன் வம்பு?” என்று எழுதியதாக நினைவு. அந்த அளவு சராசரி தைரியம் உள்ள ஆள் இப்படி வெளிப்படையாக வெறுப்புக் கருத்துக்களை எழுத அவர் சார்ந்த கட்சியே காரணம். இருந்தாலும் கோர்ட், கேஸ் என்று வந்தால், திராவிட பாணியில் அவற்றை சந்திப்பார் என்று நம்பலாம்.


      • //திராவிட பாணி

        ற்றொம்பத் திமிர்தான் உங்களுக்கு.

        ஆனால், உங்கள் இரண்டாம்வயதிலிருந்தே கட்சிப் பெருங்கூட்டங்களில் சுவைபடச் சொற்பொழிவு ஆற்றியிருக்கும் பராக்கிரமம் மிக்கவராயிற்றே நீங்கள்!

        ஹ்ம்ம்.

        மணிகண்டன் போன்ற அரைகுறைகள் எக்கேடு கெட்டுப் போனாலும் எனக்கெதுக்கு வம்பு. ஆனால் இம்மாதிரி ஆசாமிகள் பின்னரும் தண்டச்சோற்று இளைஞர்கள் அணிவகுத்து நிற்பார்கள் என்ற தமிழ நிதர்சன நிலையை நினைத்திட்டால்.. …
        :-(

  2. rajmohanbabu Mani Says:

    எனக்கெல்லாம் சூரியன் நிழல் சுவற்றின் ஒரு பாகத்தில் விழுந்தால் பள்ளி முடிந்துவிடும் என்ற அளவிலேயே அறிவு இருந்தது. என்ன செய்ய


    • :-)

      ஆனால், உங்களுடைய “இரண்டாம் வயதிலேயே ‘அத்தித் திரு++’ உச்சரிப்பு சுத்தமாகப் பாடினேன்; என் வீட்டிற்கு வந்திருந்த மஹாத்மா காந்தி, நான் பாடுவதைக் கேட்டு தன் மூக்கின் மீது விரலை வைத்துக் கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!” எனச் சொல்லலாமே! காசா பணமா, சொல்லுங்கள்?

  3. Raj Chandra Says:

    >> இந்த ஸ்ருதி டீவி தண்டக் கருமாந்திரங்களுக்கு வேறு வேலையே இல்லையா?
    – (எனக்குத் தெரிந்த வரையில்) உருப்படியான இலக்கிய நிகழ்ச்சிகளை பதிவு செய்ப்பவர்கள் இவர்கள்.  கொஞ்சம் நகைச்சுவைக்காக நிசப்தம் எல்லாம் வரும் (they need some fun too, right?)

    >> உங்கள் ரெண்டாங்க்ளாஸில் (அதுவரை படித்திருக்கிறீர்கள் என்றால்) 
    – Not fair, you disqualified me.

    >> நான் ரெண்டாங்க்ளாஸ் படிக்கும்போது
    – நான் நோபல் பரிசு வாங்குவதை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்…என்ன…இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் (மரத் தமிழனாக என்னால் அவ்வளவுதான் செய்ய முடியும் :) )


    • ஐயா, நீங்கள் ஒரு இளைஞ்ஜர். உங்களுக்கும் வயதானால் காலாகாலத்தில் பற்களெல்லாம் உதிர்ந்துபோய், நோபல் கிடைத்துவிடும்; கவலை வேண்டேல்.

      மற்றபடி, நீங்கள் ஒன்றாம் வயதிலேயே ஒன்றிய சேர்மனான விஷயத்தைத் தெகிர்யமாக அட்ச்சிவுடவும். பிற்பாடு ஸ்ருதிடீவி காரர்கள் வரும்போது அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

  4. Vel Says:

    //சரி. கடந்த சிலவருடங்களாக, என் செல்ல இளைஞர் நிசப்தம் மணிகண்டன் பக்கமே போகாமலிருந்தேன்;//

    பெரிய தவறு செய்துவிட்டீர்கள். நான் இந்த மாதிரி ஆட்களின் பக்கமே செல்வது இல்லை, அதுவும் தமிழ் இலக்கியவா(வியா)தி என்றால் அந்த பக்கமே தலை வைத்து படுப்பது இல்லை. மனமும் நிம்மதியாக இருக்கிறது.


    • என்ன செய்வது சொல்லுங்கள்… குற்றம் புரீந்தவன், வாழ்க்கையில் நிம்மதீ கிடையாதூஊஊஊஊஊஊஊ… :-(

      வயதாகியும் விவேகமோ வடிவேலுவமோ வரவில்லையே! என்ன செய்ய.

      1. என் பெரும்பேராசான் ஜெயமோகனைக் கிண்டல் செய்வதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

      2. நீங்கள், ரெண்டாங்க்ளாஸில் இருந்தபோது, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் அதற்காகச் சிறை சென்று செக் எழுதி அது பௌன்ஸ் ஆனதையும் பின்னர் மறுபடி சிறைக்குள்ளேயே இன்னொரு குட்டி ரிகர்ஸிவ் சிறைக்குச் சென்றதையும் வெளியே சொன்னால், குறைந்தா போய்விடுவீர்கள்?

      3. நான் எழுதுவதை இலக்கியம் என ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள். ஆகவே, உருப்படமாட்டீர்கள்.

      நன்றி. :-(

  5. dagalti Says:

    I actually do muse about impressions of things when one was too young to have any opinion about them. It is amusing to notice how impressions resist reason. (insert evolutionary biology ஜல்லி about how prefontal cortex is recent and reptilian brain is ancient).

    நான் ரெண்டாப்பு படிக்கும்போது World This Weekல் பெர்லின் பெருஞ்சுவர் இடிப்பைக் கண்டேன்.

    புரியவில்லை. பிடிக்கவும் இல்லை. ஏன் என்று சொல்லத் தெரியவில்லை.

    இன்றும் கூட ‘அடக்குமுறையை மீறிய தனிமனித விடுதலைஉணர்வெழுச்சி’ என்ற அறிவுசார்(!) விளக்கமெல்லாம் புரிந்தாலும், அது ஒரு வித ஒழுங்கீனம்/ licentiousness என்ற visceral முதல் மனப்பதிவு நீங்கவில்லை.

    Of course it is almost certainly a very latter day contortion of an early memory. Insofar as it is imbued with some sort of latter day theorisation it is inherently unreliable. ஆனா சுயசரிதை எழுதும்போது இப்படி தான் எழுதலாம்னு இருக்கேன்.


    • 1. Evolutionary – sequential model (I think it is some triune brain hypothesis or something) and its puncturing apart, there is some usefulness in understanding/modeling various parts of the brain via the ‘partitions’ – though not necessarily ‘layers.’ For example, ‘neoteny follows phylogeny’ kind of model – which I think I first read about in a Desmond Morris book. Of course this could also be punctured, but the usefulness within limited realm was/is exhilarating for me. I made notes about that in 1992 or thereabouts and republished it here on this blog in 2013.

      https://othisaivu.wordpress.com/2013/09/25/post-252/ (of course, the context here is limited, to that of foetus growth inside womb – not the evolutionary stuff over eons; not that I cared to update myself on this ‘Neoteny follows Phylogeny’ biz.)

      2. Your mention of some pointer here tells me that you are still an adolescent, not even 40 years of age now? Lookey, little boys are not allowed to pontificate here. Forum is open for only vice peepal.

      Anyway. From your berlin wall reaction, am wondering what you thought/think of the Ram mandir encroachment removal in 1991.

      I think it is all easy for us who have not much lived in ‘oppression’ at all & have had a reasonably cushy/kushi life – to treat popular uprisings (against terrible circumstances) and civilizational upsurges with contempt – and hence consider them as ‘licentious’ or products of ‘mob frenzy’ – what do you think?

      3. Regarding the embellishment of our memories, the way we systematically tweak our memories and sometimes even massively edit them etc – I must share some stuff (anecdotal) which were enervating to me; will write about them later.

      4. Anyway, just remembered the hilarious (non-embellished) story of my past, when, at some 8-9 years of age, of course I did not know about ‘birds and bees’ but then assumed dravidian-donkey-like, that I knew EVERYTHING about the damn subject.

      https://othisaivu.wordpress.com/2013/04/04/post-189/

      • dagalti Says:

        1)
        Thank You.

        If we had a நகர்ப்புற அகராதி it would define ஜல்லி as ‘something that contains a germ of truth but distorted beyond recognition by அட்ச்சுவுடல்’. That’s what I meant.

        I am not repudiating the field of sociobiology itself but just that I’ve encountered one too many superficial ‘theories’ on the lines of ‘we are wired to do xyz…’ and Malcolm Gladwellian ‘instinct > reason,  because the reptilian brain came first’ and so on.

        For example, take ‘Neoteny’. There are assertions that Neotenic changes are brought about by sexual selection. I find this reasoning quite circular insofar it can be claimed about any feature that has survived! இத்தோட விட்டாக் கூட பரால்ல, but then it gets hijacked into pop sociopsychology where folks try to force-fit onto their personal preferences!

        Will search about ‘Neoteny follows Phylogeny’. I didn’t understand the statement. 
        I’ll re-read that post and post any comments there.

        2)
        /not even 40/என்ன வயதாகி என்ன ஐயா! உங்களுக்கு ageing என்றால் என்னவென்றே தெரியவில்லை போலிருக்கிறதே.http://dagalti.blogspot.com/2014/04/31.html

        /Ram mandir encroachment removal/
        எனக்கு இந்த பதப்பிரயோகத்துலயே உடன்பாடு இல்லை.

        History is history. 

        Yes it was a structure where worship didn’t happen.
        Yes it was built atop an existing temple.
        Whether it was janmasthanam or not is not an archaeological question. It is beyond doubt that it was considered so. 
        And any reasonable person will readily agree that it was probably built precisely as a show of dominance.

        And while there may have been political reasons too (like Aurangazeb Gyan Vapi), there is no doubt that the particular strain of iconoclam has direct roots in AsmAni kitAb.

        So, I can understand – from the cushy comfort of my Madarasi home – that the structure was a symbol of a longstanding affront.

        But but but….history is history.
        It casts its shadow on the present, sure. But it cannot be allowed to dictate how we negotiate the present.

        The mere fact that it is a centuries-old structure itself makes a strong case for its preservation. It is an artefact of the cultural friction. 

        There is no justification whatsoever for thugs tearing it down. The demolition was a victory of naked violence that ought to have no place in modern society. And that is being normalized now.

        No amount of அதௌ ஒரு கீர்த்தனாரம்பத்திலே about the history of the legal case can justify the fact that, at the end of the day,  a violent mob has won. And stands emboldened now. 

        சீதாராம் கோய(ப)ல் ஒரு நீஈஈள பட்டியல் போட்டிருக்கார் with typical painstaking research. Next up you have Kashi, Mathura. வரிசையா இடிக்கலாமா? Where do we stop? What is the line? All the way to Mohd. Bin Qasim? It is beyond ridiculous to even say so, but the way things are veering, I won’t be surprised if there are folks who harbour these notions half-seriously!

        If so, is the ‘us’ identity clear and mappable to the present? Most certainly not.
        This being the case, seething and avenging the sleights of Babur is clumsy. 

        What we need is a mature societal acknowledging the truth of the past. That is sorely lacking in our public discourse. 

        That can explain – but not justify – the urge to deface a monument – the likes of which are likely plenty all over the North Indies. 

        I’d even go so far as to say, that at the very least, those cheering the demolition forfeit the right to bristle over the sack of Palmyra. The difference is one of degree.

        Motivations, context, aesthetic value – arguments just don’t cut it. The end result is: losing a piece of history forever.

        One HAS to throw up hands and let the distant past be.
        And conserve what we have inherited as a society. Conservativeனா அதானுங்களே. 

        /I think it is all easy for us who have not much lived in ‘oppression’ ….what do you think?/

        I agree. That’s why I recorded my probably unreasonable but visceral reaction to the jubilant wall-demolition.

        Those who lived in GDR experienced oppression in their daily lives. Upon reflection, I royally permit a degree of celebratory festivities as they are personally liberated.

        But அன்றைய Baburஐ இன்று பழிதீர்ப்பேன் என்று கும்மட்டத்தை இடித்தவர்களை இவர்களுடன் ஒப்பிட மாட்டேன். 

        ஜும்மா மஸ்ஜித் படிக்கட்டில் விக்ரஹங்கள் உள்ளன என்று கனன்று அடுத்து அதையும் இடிக்க முனைபவர்கள் காலிகள்.  Kaffir Kafurs. 

        3. Will look forward :-)

        4. Commented there. விளையும் பயிர் :)


      • 2.1 https://othisaivu.wordpress.com/2020/08/11/post-1183/

        2.2 // சீதாராம் கோய(ப)ல் ஒரு நீஈஈள பட்டியல் போட்டிருக்கார் with typical painstaking research.

        உங்களுக்கு உங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது; ஆனால் சீதாராம் கோயல் அவர்கள் கீபல்ஸ் அல்லர். வெட்டிப் பரப்புரையோ பொய்மையோ இல்லை அவரிடம். ஆகவே, அவருடைய ஜாபிதாவில் எதாவது ஒரு தவறு, ஒரேயொரு தவறு இருந்தால், பொய்பொய்யாக இருந்தால் – நீங்கள் அதனைக் குறிப்பிட்டு விட்டுப் பின்னர் கீபல்ஸ் பக்கம் செல்லலாம். இல்லாவிடில், நீங்கள் செய்வது வெறுத்தொதுக்கத்தக்க இடதுசாரிய-லிபரல் வகை அழிச்சாட்டிய அவதூறு மட்டுமே.

        2.3 //Next up you have Kashi, Mathura. வரிசையா இடிக்கலாமா? Where do we stop?

        ஆம். May be to the logical end. T&C apply.

        2.4 //If so, is the ‘us’ identity clear and mappable to the present? Most certainly not.

        நீங்கள் எப்படி இதனைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. பாரத சமுதாயத்தில் ஸேலியன்ஸும் இருக்கிறது, ஸப்ஸ்டன்ஸ் விவகாரமும் இருக்கிறது. இரண்டும் தொடர்கின்றன, இன்றுவரை.

        2.5 // What we need is a mature societal acknowledging the truth of the past. That is sorely lacking in our public discourse.

        Yes. However, has it been so anywhere else? If the truth had been acked with honesty and integrity, then half the issues are solved. But, I must say that, even when Muslims were willing to ack the truth, the LeLis tutored them not to  ack the truth. And the same LeLis now admonish the bharatiyas and give advice. They of course do not feel any sense of shame. But that does not mean that we shouldn’t, no?

        And what do you mean by ‘public discourse?’ Why is the ‘truth’ not coming out, though quite a few scholarly studies have been published about it? Who has prevented the so-called reconciliation? Who are the gatekeepers of falsehoods?

        2.6 // I’d even go so far as to say, that at the very least, those cheering the demolition forfeit the right to bristle over the sack of Palmyra. The difference is one of degree.

        Whoa! That was a very LeLi & convenient Category mistake/error. As a bonus, it is also a damn good virtue signal, I must admit. All power to you.

        2.7 // But அன்றைய Baburஐ இன்று பழிதீர்ப்பேன் என்று கும்மட்டத்தை இடித்தவர்களை இவர்களுடன் ஒப்பிட மாட்டேன். ஜும்மா மஸ்ஜித் படிக்கட்டில் விக்ரஹங்கள் உள்ளன என்று கனன்று அடுத்து அதையும் இடிக்க முனைபவர்கள் காலிகள்.  Kaffir Kafurs.

        Nobody is avenging a mere Babur or a mere Tughlaq or a Khalji. That is mistaking form for the essence; packaging for the content. There is no victimhood narrative here. I am very aware of the ‘parable of pedestrian.’ The actionables are within the samaj. Within the boundaries of bharatiya chitta, maanas & kaala.

        -0-0-0-

        See, you can continue to argue. I would like the forum to be open for even orthogonal thoughts, as long as they are reasonable and/or evidence based.

        Of course, you can be emotional, you can be rational. However on both accounts, eminent & solid counters exist.

        YMMV.

      • dagalti Says:

        ஹர்ஹர் மஹாதேவ்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!!


        அடியேன் அதை அப்போதே படித்து கமெண்டில் பிரசன்னாமாகியிருக்கிறேனே.

        / சீதாராம் கோயல் அவர்கள் கீபல்ஸ் அல்லர்./

        அட தெரியும்ங்க. அதான் typically painstakingly researched என்று கவனமாக anticipatory bail போட்டிருக்கிறேனே. அந்த  (ப) இடைச்செருகல் was too juicy to resist. As I age more I  may develop the boring maturity to resist such temptations.

        Jokes apart, I thought it was clear, but let me restate. I am not disagreeing that there are probably tons of mosques built over temples. I don’t disagree that the intent was to desecrate. And I don’t disagree that the intent owes to the source.

        I just disagree that they need to be torn down in this day and age to assuage the  supposedly bristling Hindudom. आ नो भद्राः
        That said, back to Goyal it is not his factual bases that sit ill with me. In fact he is routinely rigorous and enlightening. What I can’t get myself to agree with is his assumption of automatic sympathies that a present day Hindu should feel with the cause of sleights, distant in time and geography. 

        The Sanathana commonwealth – an expression of Goel I like quite a bit-  is something he posits as internally well-defined. IMO it gains its definitional sharpness in contrast against the exclusivist faiths/ideologies.  It is difficult to imagine it as a mere fraternity of autochthony that would have existed forever with mutual regard and what not.  

        To be clearer, I don’t mean it in a stupidly reductive Dravidian misunderstanding that a pan-Hindu identity is a recent concoction. Just that, I wouldn’t deny that we tend to think of things as ‘more’ common when contrasted against something ideologically alien. I don’t mean ‘alien’ xenophobically (எழவு எவ்வளவு clarification பண்ணவேண்டி இருக்கு, அகத்தெளிவின் லட்சணம் எழுத்தில் தெரியும்!). After all, we are आ नो भद्राः und so weiter. I mean ‘alien’ as in incongruously exclusivist to the extant modes of existence in India.

        Goel asked the difficult questions that urge us to define nationhood (my Man famously threw his hands up in his autobiography saying: ‘nationalism is by definition, a vague thing!’). Goel gets us to consider the things we value on our own terms. Like many, I rue reaching him late.

        But I maintain that many things we value are also reactions to the environments they were created in, there are cultural evolution contexts even to things we hold dear and axiomatic. It is a bit of unnerving thought to hold – atleast for me!

        And most importantly we live today.
        So, the likes of Goel (are they any like him!) are very very useful in enrigouring our perspectives. However one is not obliged to take things to the only conclusions he happens to find logical. 

        //ஆம். May be to the logical end. T&C apply.//
        ஆமென்றால், அப்படி எந்த அசம்பாவிதமும் நடந்துவிடாமல் இருக்க பிரஷாந்த் கிஷோர், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத் பவார்,  இளவரசர் ரைஹான் வாத்ரா எல்லாரும் இணைந்து காத்தருள வேண்டும் என்று ஒரு ஸுதர்ஷன ஹோமம் செய்யக்கூட முனைவேன். சொல்ட்டேன்.

        /நீங்கள் எப்படி இதனைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. பாரத சமுதாயத்தில் ஸேலியன்ஸும் இருக்கிறது, ஸப்ஸ்டன்ஸ் விவகாரமும் இருக்கிறது. இரண்டும் தொடர்கின்றன, இன்றுவரை./

        For instance, வழிபாட்டு முறைகளும்,  குல ஆசாரங்களும், social intercourseக்கும், prioritiesக்கு இணங்க எல்லாத் தரப்பில் இருந்தும் கொடுத்து வாங்கி மாறி வருகின்றன அல்லவா. 
        இதில் எதை ‘நமது’ எதை ‘பிறரது’ என்று துல்லியமாக இன்று பிரித்து நுகரமுடியும்.

        Politically, சிவாஜி போஸ்லேவை ஒரு வங்காள ஹிந்து எப்படி ‘நம்மவர்’ என்று பார்ப்பான்?

        ஔரங்கஸெப்பை எதிர்த்து bhagwa பறக்கவிட்டதற்கு இன்றைய வங்காளி ஹிந்து மெய்சிலிர்த்தாகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்படி செல்லுபடியாகும்?

        அப்படி அவனை இன்று பார்க்க உந்தும் அரசியல், அவனை எதை மட்டும் நினைக்கச்சொல்கிறது, எதை எல்லாம் மறக்கச்சொல்கிறது?

        இது போல் பல.

        That is what I meant by there is no simple mapping from past to the present. நிலை இப்படி இருக்க, மசூதி இடித்து கோயில் மீட்டெடுப்பேன் – என்பதெல்லாம் projecting a past unreasonably onto the present. 

        /If the truth had been acked with honesty and integrity, then half the issues are solved. But, I must say that, even when Muslims were willing to ack the truth, the LeLis tutored them not to  ack the truth. And the same LeLis now admonish the bharatiyas and give advice./
        அதே அதே சபாபதே. The utter denial that there was any temple underneath, that there wasn’t an ideology driving the defacement – is precisely what contributed to the enragement.  State the truth instead of trying to hide it from the people thinking paternally that ‘they can’t handle the truth’. It only makes things worse.

        /And what do you mean by ‘public discourse?’ Why is the ‘truth’ not coming out, though quite a few scholarly studies have been published about it? Who has prevented the so-called reconciliation? Who are the gatekeepers of falsehoods?/

        The powers that be of course.

        During a classroom discussion in my ‘Indian constitution’ class in college,  I remember causing a flutter  by merely referring to it as a ‘controversial structure’.  My professor was someone who expressed much agitation about Shourie’s (then latest) book on Ambedkar: Worshipping False Gods. His face visibly hardened when I used the phrase. It is the most reasonable phrase to use.  இத்தனைக்கும் I was virulently arguing against the ‘mandir wahin banAyengE’ தரப்பு who were of course not represented :-)

        எதுக்கு சொல்றேன்னா,  I am acutely aware of how skewed the debate has always been.

        That is what I meant by one can understand – but not justify – the urge to desecrate.

        /Whoa! That was a very LeLi & convenient Category mistake/error. As a bonus, it is also a damn good virtue signal, I must admit. All power to you./

        I suppose you think it is false-equivalence.As I said, no amount of context (hey Babur did it first, ours is a மீட்பு), aesthetics (அது ஒரு மொழுக்கான கும்மட்டம், பெருசா ஒண்ணும் இல்லை) can justify the fact that at the end of the day ‘we irrecoverably lost a piece of history’. And we – a modern society – lost to a violent mob.

        “சீரங்கநாதரை…. பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ’ அப்படின்னு பாடின  ஊர் இது.நாளைப்பின்ன ஒரு micromonity கைல பீரங்கி கிடைக்கலாம். அவங்களுக்கும் ‘நியாயங்கள்’  அப்படின்னு தோணுற விஷயங்கள் இருக்கலாம்.  

        So? Nothing – absolutely nothing – can justify a violent desecration.That should be the principle in a modern society. Not an inquiry into the validity of the நியாயங்கள் of the motivations for violence.

        அவ்வளவு ஏன், Churchill statue desecrationஏ எனக்கு உடன்பாடு இல்லை. It is an ordeal to  wrestle down my inner Tiananmen Deng Xiaoping to not voice what I feel should happen to the wokes who want to tear down Churchill. 

        Ghanaல Gandhi சிலை cancel.
        மனசு புண்பட்டுச்சா, கொண்டா கடப்பாரையை.

        /The actionables are within the samaj. Within the boundaries of bharatiya chitta, maanas & kaala./
        I am not sure I follow.

        /orthogonal thoughts, as long as they are reasonable/
        Thank You. I have attempted to explain the reasons to the best of my abilities!

  6. Sachidanandam Says:

    வனாந்தரத்தில் மேற்கொண்ட நடைபயணம் பற்றி யாரும் விசாரிக்கவில்லை அட்டைபூச்சி கடித்தது கைப்பேசி தொலைந்து பற்றி யாரும் கவலைப்படவில்லை…ஏழரைகள்.


    • ஆமாம்! ப்ளெட்டி ராஸ்கல்ஸ்.

      நன்றாகக் கேட்டீர்கள் இருப்பின்மகிழ்ச்சியீர்!

      இவர்களாவது பரவாயில்லை. ஆனால் இன்னொருவர், தனக்கும் அட்டைப்பூச்சி எப்போதோ ஒன்றிரண்டு கடித்தன எனப் பீற்றிக்கொண்டார். எனக்கு அவரை எப்போதோ ஏதோ கடித்தது (அது பொய்யாகக் கூட இருக்கலாம்; உண்மையாக இருந்தால், அவருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என ஆசிர்வதிக்கிறேன்) முக்கியமா, என் பரிதாப நிலை முக்கியமா?

      படுகேவலமாக இருக்கிறது. இந்தக் கோடாலிக்காம்புகளுக்காகவா நான் இந்த தண்டக்கருமாந்திரத் தளத்தினை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்?

      த்தூ.

  7. Em Says:

    அட்டைகளுக்கும் அன்பளிக்கும் இதயம், வனம் வென்ற வேங்கை, ஆற்றுக்கு அலைபேசி அளித்த அண்ணல், கைபேசியைத் தொலைத்து நோ-செல் விருது பெற்ற எங்கள் அண்ணன் ஒத்திசைவார் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    நான் இரண்டாவது படித்த போது ஒரு சக மாணவன் தன் மூடிய கையில் post box இருப்பதாக சொல்லி பின் கையை திறந்து april fool சொன்னது நினைவிருக்கிறது.
    இன்னொரு நாள் பள்ளியில் puppet ஷோ நடந்தது என்று நினைக்கிறேன். அல்லது டிவியில் ஏதாவது காண்பித்தார்களா என்று தெரியவில்லை. அதில் அழகிய சிறிய வீடுகள், பேசும் பொம்மைகள் எல்லாம் பார்த்து நானும் அங்கே போய் அவர்களுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது நினைவில் உள்ளது.

    திராவிடர்களுக்கு தான் தமிழ் உணர்வு, அரசியல் அறிவெல்லாம் இரண்டாம் வகுப்பிலேயே வரும் போலும். ஹ்ம்ம்.


    • ஆ! எவ்ளோ பசுமையான நினைவுகள்! அண்மையில் தான் ரெண்டாங்க்ளாஸில் இருந்து க்ரேஜுவேட் ஆயிருப்பீர்கள் போல?

      மற்றபடி வரவேற்புக்கு நன்றி. ஆனால் நான் ஏற்கனவே உருப்படியாகத் திரும்பி வந்து சிலபல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே, கூடிய விரைவில் பணமுடிப்பையும் அனுப்பினால் உங்கள் உறுப்பினர்பதவி திவாலாகாது.

      ஒரு டவுட்: இவ்ளோ அட்டைகள் கடித்துவிட்டதால், அவற்றின் சாரு தலைக்கேறி நிவேதனமாகி, நானும் அட்டைக்காப்பி அடித்து மேலதிகமாக உளற ஆரம்பித்துவிடுவேனோ எனப் பயமாக இருக்கிறது; அட்டைக் கடி விஷ(!)த்துக்கு முறி உண்டா?

      பின்குறிப்பு: பணமுடிப்பு.

  8. Belleyeweight Says:

    நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நமக்கெதுக்கு வம்பு என நட்டநடுநிலையாளனாவே இருப்பது? எத்தனை அரிதாரங்கள் பூசினாலும் அவ்வப்போது மண்டைக்கு மேலிருக்கும் கொண்டை எட்டிப் பார்த்து விடுகிறது. ‘வறண்ட பாலையில் பூஞ்சோலையா?’ என சில மேதாவிகள் கெக்கலிப்பார்கள், அதைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை.

    கடைசிவரைக்கும் இலவு காத்த கிளிதானா என நானே நினைத்திருந்தது கூட இன்று நிறைவேறி இருக்கிறது, தமிழ்ச் சமூகம் தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறது. அப்படி இருக்கையில் கிடைக்கும் வாய்ப்பை தவறவிடுவானேன், சைக்கிள் கேப்பில் கப்பல் ஓட்டுவதுதானே திராவிட பாணி? அதைத்தானே நானும் செய்திருக்கிறேன்? இதிலென்ன பிரச்சினை?

    இத்தனை நாள் உங்களை வேறுமாதிரி நினைத்திருந்தேன் என அரிதாரப் பூச்சில் மயங்கி கொண்டையைக் காணத் தவறிய சிலர் புலம்புகிறார்கள், அவர்களுக்காக பரிதாபப்படலாம், வேறு என்ன செய்ய முடியும்?

    முந்தைய நாள்வரை அரசியல் ஆர்வமில்லாமல் கூத்தாடித் திரிந்தவர்கள் மறுநாளே திராவிடக் கொடியுடன் பிறந்ததாக வரலாறு படைக்கவில்லையா? அத்தகைய தமிழகத்தில் இரண்டாம் வகுப்பில் அரசியல் ஆர்வம் இருக்கக் கூடாதா அல்லது தோழி தொடையில் கிள்ளத்தான் கூடாதா? பொறாமையில் பொங்குபவர்களை நமது விடியல் அரசு தேதி போட்டு சுளுக்கெடுக்கும் என நம்பலாம், அணில்கள் சதிசெய்து அதைத் தடுக்காமலிருந்தால் சரி, நமக்கெதுக்கு வம்பு?


    • யோவ்! மணி + கண் + டன்! 🤣 😈 🙌

      நிசப்தம் கட்டுரை/நடை அல்காரித்ம் அப்படியே வந்திருக்கிறது.

      ஜமாயுங்கள்.

      “கட்டபொம்மன் ஒரு வடுக வந்தேறி!” என நிசப்தம் எழுதக்கூடும் அடுத்த ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் முன்னோட்டத்தைத் தாங்கள் எழுதுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      நன்றி!

      • nparamasivam1951 Says:

        அச்சு அசல் மணியின் நடையே. இவரே ஒரு “சப்தம்” மற்றும் என்ஜிஓ ஆரம்பிக்கலாம் (வெள்ளம் என்னவோ வருடாவருடம் வந்து கொண்டு தான் உள்ளது)

  9. Alagappaiyengar Seshagiri Says:

    வா. மணிகண்டன் போன்ற ” திராவிட ஸ்டாக்உ டன்பிறப்புகளை” எதிர்மறையாக தூக்கிபிடிப்பதை காட்டிலும் இவரை போன்ற கட்டுரையாளர்கள் வெளிச்சத்திற்குள் வருவது நலம் பயக்கும்.
    https://m.dinamalar.com/detail.php?id=2804143

  10. nparamasivam1951 Says:

    When Nisaptham started or early stages, I used to read his blogs. It was in 2016/2015 & he was in AECS layout, near Electronic City. Believing his words, I also used to donate for flood relief operations. During that time, he never talked about politics. But slowly he showed himself as “leftist”, then changed to Modi-hater, then with some film people. Finally, when the true identity is revealed, I just moved away. These people want to harness maximum within next four years from DMK Government. One thing we have to admit…during early stages, he used to publish one blog, daily, come what may. That is to be appreciated.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s