“தனியொருவனுக்குச் சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரன் இல்லையெனில் ஜெகத்தினை அழித்து பிட்-காய்ன் க்ரிப்டொ-கரென்ஸி இடுவோம்!”
April 14, 2021
யேஸ்ஸுவே! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறீர்? :-(
நான் அனைத்து ஓட்டைகளையும் கருணையுடன் மூடிக்கொண்டு ஜெயமோகன் அவர்களின் தளத்துக்குப் போகாமல் இருந்தாலும் பாவிகள், அற்ப மானுடப் பதர்கள்… சும்மா விடமாட்டேனென்கிறார்களே!
மேலும் படிக்க: மட்காக் குப்பை – கடிதங்கள் – April 14, 2021
“இரண்டு வாரங்களுக்கு முன், நண்பர்களுடனான உரையாடலில் , கிராதத்தில் குபேரன் மாளிகைக்குச் சென்று ஒவ்வொரு வாயிலையும் கடக்கும் அர்ஜுனன் கூழாங்கல்லை வைரத்திற்கு இணையாக வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பற்றிப் பேச்சு வந்தது.
அந்த அத்தியாயம் முழுவதும் க்ரைப்டோ கரன்சியின் அடிப்படை. சில வருடங்களுக்கு முன்னர், ஒரு கட்டுரையில், தனி நபருக்கு சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரன் இல்லாமல் போகும் ஒரு நாள் வந்துவிடும் என்று எழுதியிருப்பீர்கள். அதில் கணினிமயமாக்குதல் எப்படி தையல்காரனை இல்லாமல் ஆக்கும் என்று நீங்கள் விவரித்திருப்பது இன்று நாங்கள் எல்லாம் பேசிக்கொள்ளும் Data Science / Machine Learning அடிப்படை.”
ஏதோ ஒரு புளகாங்கிதக் குஞ்சப்ப வாசக அடிப்பொடியார் (அதாவது, அதனை எழுதிய ‘ஆஸ்டின் சௌந்தர்’ எனும் நபர் – ஒரு வினாடி தவறுதலாக இவர் பெயரைப் படித்துவிட்டு, அந்தக் கோமாளித் துப்பறியும் சாம்பு, ஆஸ்டின் பவர்ஸ்…
… வேறு நினைவுக்கு வந்து தொலைத்து விட்டது) எழுதியிருக்கிறார் என்பதைப் படுஸீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றாலும்… இப்படியே வஞ்சப் புகழ்ச்சிசெய்தே இன்னொரு ஷீர்டி ஸாய்பாபாவை உருவாக்கி விடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. ஏற்கனவே ஏகத்துக்கும் ஸூஃபி மெய்ஞானப் பெருக்கில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்வேறு.
எம் பெரும்பேராசான் ஜெயமோகன் அவர்கள், விரிந்து ஆழமடைந்துகொண்டிருக்கும் கணிநியியலின் எல்லைகளைக் கூட அளக்கவும் (அவர் ஏற்கனவே அளப்பதற்கு மேற்பட்டு) வரையறுக்கவும் எத்தனித்துக்கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்படும்போது, அன்றே எல்லாவற்றையும் குறித்து ஆரூடம் சொன்னார் எம் பெரும்பேராசான் அண்ணா என்பதை நினைத்தால் உள்ளபடியே புளகாங்கிதம்தான்; கூடவே அடிவயிற்றில் கலக்கமாகவும் இருக்கிறது. (எனக்குத் துளிக்கூடப் பொறாமையேயில்லை என்பதை நினைவுறுத்துகிறேன்.)
ட்டேய்ங்க்ளா! படு ஸீரியஸ்ஸா புகழுங்கடா, வோண்டாங்கல… அவ்ருக்கும் அது ற்றொம்ப புடிக்கும்னிட்டு அல்லார்க்கும் தெர்யுண்டா… மொகஸ்துதிக்கு மய்ங்காதவன் ஆரு சொல்லூ…
ஆமேல காக்காவுக்கு தன் மர்மஉறுப்பு தங்கஉறுப்புன்னிட்டு தெரியுண்டா.
ஆனாலுண்டா பஸ்ங்க்ளா, இது ற்றொம்பவே ஓவர்டா! பாத்து செய்யுங்கடா குஞ்சப்பனுங்களா!
ஓவரா கொம்புசீவிவுட்டு அவுர கவ்த்திவுட்றாதீங்க்டா, பாவீங்க்ளா!
-0-0-0-0-0-
“உங்களால் ஒரு பெரும் அறிவியக்கம் உருவாகியிருக்கிறது என்று இந்த உலகம் அறியும் நாட்கள் வெகுதூரம் இல்லை. கடந்த ஒரு வருடமாக, நான் குறைந்தது இருநூறு தனிப்பட்ட நபர்களுடன் , சக வாசகன் என்ற முறையில் பேசியிருக்கிறேன். ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். உங்களைப் பற்றி பேச்சு வந்தால், உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றே நினைக்கிறார்கள்.”
இவ்ளோ பேர் பழம் தின்னிட்டு கொட்டையும் போட்ருக்காங்களாமே! 200 + பேர்!
அத்தினி பேரும் கொட்ட போட்றதயும் ஆஸ்டின் சௌந்தர் பவர்ஸ் பாத்துக்கீறார்டோய்!
ஒரு வருடத்தில் 200 பேர். அனைவரிடமும் தனித்தனியாகப் பேசியிருக்கிறார்; அனைவரும் அவரவர் பணிபுரியும் துறையில் வல்லுநர்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு ஆஸ்டின்பவர்ஸ் அவர்கள் எப்பேர்க்கொத்த படுபீதியளிக்கும் பயங்கர பல்துறைவல்லுநராக இருக்கவேண்டும், சொல்லுங்கள்?
ஆஸ்டின்பவர்ஸ் அவர்கள் சும்மா ஸர்வே எடுக்கவில்லை – மாறாக சகவாசகன் என்கிற முறையில் அனைவரிடமும் பேசியிருக்கிறார்; இப்படிக் குறைந்த பட்சம் 30 நிமிடங்களாகவாவது, ஒவ்வொருவரிடமும் அவர் பேசியிருக்கவேண்டும். (துறைவல்லுந மதிப்பீடு + ஜெயமோக குசலம் அரட்டை ++)
வருடத்துக்கு 365 நாட்கள். அதில் அவருக்கு வீக்-எண்ட்/வார இறுதிகளில்தாம் இம்மாதிரி ஜெயமோகப் புளகாங்கிதச் சந்தர்ப்பம் வாய்த்திருக்கும். (ஏனெனில், இந்த ஆஸ்டின்பவர்ஸ் என்பவரும் அமெரிக்கராக இருக்கவேண்டும் என அனுமானிக்கிறேன் – அல்லது ஆஸ்டின் என்கிற அடைமொழிப்பெயர் அவர் வேளச்சேரியில் வசிக்கக்கூடும் அபார்ட்மெண்ட் பெயராகவும் இருக்கலாம் – அல்லது ‘பங்க்’ குமார் என்பதுபோலவும் இருக்கலாம்!)
ஆக சுமார் 100 நாட்கள். அப்போது அந்த ஒவ்வொரு நாளிலும் குறைந்த பட்சம் ரெண்டுபேரைப் பார்த்து இப்படிப் பழகிப் பேசியிருக்கிறார்; இதற்காகவே, கடும் உழைப்பைக் கொடுத்து இந்தக் கொடும் ‘எக்ஸிட் போல்’ வகை கருத்துவாக்கெடுப்பு எழவை எடுத்ததற்கே, அவருக்குக் கலைமாமணி பட்டம் ஒன்று பார்ஸேல் செய்யவேண்டும்.
ஆனால், எல்லாம் சரிதான். இவை எல்லாவற்றையும் என்னால் ஜீரணிக்க முடியும்; அவர் சும்மா ஒருவருடம்-200பேர்+ என அட்ச்சுவுட்டிருப்பதையும் பொறுத்துக் கொள்கிறேன்…
இருந்தாலும் ஐயன்மீர் – இது மரண அடி:
“உங்களால் ஒரு பெரும் அறிவியக்கம் உருவாகியிருக்கிறது என்று இந்த உலகம் அறியும் நாட்கள் வெகுதூரம் இல்லை.”
:-(
ஜெயமோகனைக் குறித்து – எனக்கோ உங்களுக்கோ தெரியாத, பிடியேபடாத ஏதோ ஒரு அமானுஷ்ய விஷயம் இந்த ஆஸ்டின்பவர்ஸுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அது யாது?
நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன், அதாவது: ஜெயமோகன் அவர்களின் நகைச்சுவை உணர்ச்சியையும் எழுத்துகளையும் நான் வெகுவாக மதிப்பவன். பொதுவாகவே வாதங்களை (அந்த வாதங்களிலெல்லாம் ஓட்டைகள் இருக்கும் என்றாலும்) அடுக்கும் திறனும் அவற்றின்மீது அவரது கருதுகோளை நிறுவும் பாங்கும் அவருக்கு இருக்கிறது. .இம்மாதிரித் திறமைகள் என்பவை, அபூர்வமாகத் தான் லபிக்கும்.
ஆனால், அவருடைய வாசக சிஷ்யகேடிகளின் நகைச்சுவை உணர்ச்சி என்பது அவரைவிடவும், அநியாயத்துக்கு மிகமிக அதிகம் என்கிற உண்மையை வெகுசமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன். (என் ஸிபியு-CPU மந்த நிலையை அடைந்திருக்கிறதோ என்ன எழவோ!)
இந்த ஆஸ்டின்பவர்ஸ் என்பவர் ஒரு எடுத்துக்காட்டு சிஷ்யகேடி.
-0-0-0-0-0-
ஆனால்.
ஆஸ்டின்பவர்ஸ் போல – இப்படி எவ்வளவுபேர் கிளம்பியிருக்கிறார்கள் என்பதை நினைத்தால்…
இம்மாதிரிப் புளகாங்கித ஆணுறுப்பர்களெல்லாம் என்ன டேடா ஸய்ன்ஸ்(!), மெஷின் லேர்னிங் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம் என நினைக்கப் பார்த்தாலே கதி கலங்குகிறதே! ஈஸ்வரா!!
இந்தமாதிரி ஆஸ்டின்சௌந்தர்களுக்கெல்லாம் ஒரே முறிமருந்து – வேக்ஸின் – ஒரு அபத்தக்களஞ்சிய ஆஸ்டின்பவர்ஸ் படம் பார்ப்பதே!
ஆமென்.
+
பிட்காயின் சித்தர், க்ரிப்டொகர்ரென்ஸி காவலர், ப்ளாக்செய்ன் பெரியார், டேட்டாஸய்ன்ஸ் டேட்டாட்ரேயர், மெஷின்லேர்னிங் மஹான், பெரும்பேராசானார் ஜெயமோகன் புகழ் மேன்மேலும் பரவட்டும்!
தென்னாடு கொண்ட (அங்கிருந்து உலகெங்கும் சீனாக்கார கோவிட்19போலப் பரவப்போகும்) ஸடொஷி நகமொடொவே போற்றி!
-0-0-0-0-
பாவிகளே! வேறுவழியேயில்லை!
பின்குறிப்பு: உண்மையாலுமே அந்த சந்தேகாஸ்பதமாக பிட்காய்ன்/ப்ளாக்செய்ன் தொடங்கி நபரான நிழலான ‘ஸடொஷி நகமொடொ‘ நம் ஜெயமோகனாகவே இருக்குமோ?
யாராவது ஆஸ்டின்பவர்ஸிடம், ச்சை, ஆஸ்டின்சௌந்தரிடம் கேட்டுச் சொல்லமுடியுமா? ப்ளீஸ்??
April 14, 2021 at 20:04
புளிப்பு ராமம்,
உங்களுடைய அவதானிப்பை எதேச்சையானதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் போது, தொலைக்காட்சியில் ஜேம்ஸ் பாண்ட்டிடம் கண்ணுக்குத் தெரியாத ஆஸ்டன் மார்டின் அளிக்கப்படும் காட்சி வருகிறது.
தமிழ் வலைப்பதிவர்களில் உங்களுக்கு மட்டும்தான் அந்த சக்தி உள்ளது என்பது வெறும் ஏழரை பேருக்கு மட்டுமே தெரிவது தமிழ் நாட்டின் சாபம்.
April 14, 2021 at 20:32
💪🏿🤕 என்ன செய்வது சொல்லுங்கள்.
உங்களுக்குத் தெரிகிறது. ஆனால், கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூரவாசனை?
April 14, 2021 at 20:14
ஆஸ்டின் கார், சே சே, ஸவுந்தர் புகழ்மாலையை இப்போதுதான் படித்தேன். சுடச்சுட உங்கள் விமர்சனம் வந்துவிட்டது.ஆனாலும் ரொம்பத்தான் ஆடராங்க தொண்டர் அடிப்பொடிகள். அளவில்லாமல் தூக்கி நிறுத்துகிறார்கள். கையை விடும்போது சட்டென்று எடுத்துவிட்டால் தொபக்கடீர்தான்.
April 14, 2021 at 20:35
மன்னிக்கவும்; இப்படி இரட்டை அர்த்தம் தொனிக்க, தாங்கள் எம் பெரும்பேராசானை விமர்சனம் செய்வது, உங்களுக்கு அழகா?
“அளவில்லாமல் தூக்கி நிறுத்துகிறார்கள்.”
“கையை விடும்போது சட்டென்று எடுத்துவிட்டால்”
😠😡👿
April 14, 2021 at 22:58
புத்த தாண்டியாச்சு மோகன வாழ்த்தோடு.
அப்படியே அதிகமில்ல இரண்டு பிட்டு சில்லறை ஆசி பண்ணிட்டீங்கனா நல்லாருக்கும் சார் :-)
April 15, 2021 at 09:28
யோவ்!
பிட்டுக்கு மண்சுமக்க யாராவது பித்தன் பிறைசூடிக்கொண்டு கோயில் பிராகாரத்தில் அலைந்துகொண்டிருப்பான். அவனிடம் செல்லவும்.
(நான் ஆஸ்டின் பற்றிக் கவலைப்பட்டால் நீங்கள் அமாவாசை பக்கம் போகிறீர்களே, இது தகுமா?)
April 15, 2021 at 10:35
Ughh. These sycophants will not rest till they make him another Manushyaputhran. Remember that guy’s delusional rant about becoming a cult leader after his death where women would sing his “kavidhai’s” ? That post of yours which gave him a drubbing still makes me smile.
April 15, 2021 at 11:46
Thanks for sharing your mirth – but my enitre point, which was obviously lost, was:
‘How come nobody is praising ME skyhigh like the way they do to Jeyamohan, for his alleged wisdom?’
OMG! Should I be so EXPLICIT and grovel in front of the fellow 7.5s, pleading with them to praise me?
Isn’t it intrinsically DEMANDED of the 7.5s that, they internalize the #1 rule of 7.5dom? That – All 7.5s are equal, but some are more equal than others?
Why NOT me?
Praise ME lard!
April 16, 2021 at 04:14
“‘வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க’ என்னமா ஃபீல் பண்ணி கூவறான்டா, காசாடா முக்கியம், கூவறதுதான்டா முக்கியம்”
– லிவிங்ஸ்டன், வடிவேலு காமெடி ஸீன் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே,…
அந்த லிங்ங்கு, இதோ
April 16, 2021 at 11:25
Othisaivu Law of Vadivelu:
Any discussion in Tamil, even if bitterly debated & contested, in course of time will eventually gravitate towards a harmonizing cultural reference to a Vadivluism.
This is the peak of engagement with ANY given topic. This is the last word and leads to an amicable settlement of various discussion points.
OLV. You heard it first here.
April 19, 2021 at 13:05
எங்கள் அய்யா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் நவீன வாழ்க்கைக்கு போதாத மொழி என்றும் சொன்னது இதனால்தான்!ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்
April 17, 2021 at 20:43
உண்மையில் மனம் நொந்து இதை எழுதுகிறேன்.எனக்கு பாஜக மீதான நம்பிக்கை போய்விட்டது.கல்யாண ராமன் பல மாதங்களாக சிறையில் உள்ளார்!ஆனால் கருப்பர் கூட்ட எருமைகள் வெளிய வந்ததோடு மட்டுமல்லாமல் தேர்தலிலும் போட்டி இடுகிறான்கள் .
.
தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் விவேக் இறந்தார் என்று சொல்வதோடு நில்லாமல் மோடி உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டது போல நடித்தனர் என்றும் வதந்தி பரப்புகிறார்கள்.இது வெறும் ஆன்லைன் வதந்தியல்ல!சர்ச் மசூதிகளில் திட்டமிட்டு இதை பரப்பி வெற்றியும் கண்டுவிட்டனர்.பொதுமக்களிடம் நீங்கள் சீன வைரஸ் பற்றி கேட்டீர்கள் என்றால் தெரியும்.ஒரு இஸ்திரி போடும் பெண்மணி “மோடி பொய் சொல்றாரு!அப்படில்லாம் எதுவுமே இல்லை” என்றார்.இன்னொரு ஆசாரி வேலை பார்க்கும் ஆசாமி “மோடி இப்படி பொய் சொல்லி கோடிக்கணக்குல பணத்தை ஆட்டைய போட்டு தனது மகனுக்கு கொடுக்கிறார்” என்று சொன்னார்…இது நகைச்சுவையாக கடந்து போகும் விஷயமாக எனக்கு தெரியவில்லை!இப்படி வெற்றிகரமாக அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாது படித்த எருமைகள் வரை அனைவரையும் துலக்கமாக மூளைச்சலவை செய்துவைத்துள்ளனர்.
.
இந்த அவலத்தில் இருந்து மக்களை மீட்டெடுப்பது என்பது சாத்தியமானதாக எனக்குத்தோன்றவில்லை!
April 21, 2021 at 14:13
ஐயா, அவ நம்பிக்கை வேண்டா. (இந்தக் கல்யாணராமன் விஷயமென்னவென்று நான் அறியேன்)
மோதி ஒருவராலோ, அல்லது பலர் அங்கிருந்தாலோ விஷயங்கள் சுளுவாகமாட்டா. பல விஷயங்கள்/இடர்கள் இருக்கின்றன. முடிந்தபோது எனக்குத் தெரிந்த வகையில் அவற்றைப் பற்றி எழுதுகிறேன். பார்க்கலாம்.
மறுபடியும்: டெம்பரவரி சலிப்பு பரவாயில்லை; ஆனால் அவநம்பிக்கை வேண்டா. 🙏🏿