புத்தம்புதிய புனித ப்ரூனோ
April 17, 2021
ஆனால். இவர்…
…ஒரு பழைய புனித ப்ரூனோ.
இன்னமும் இப்படி நிறைய ப்ரூனோ புனிதர்கள் புனிந்துகொண்டே இருந்திருக்கிறார்கள், பாவம்; + அறிவியலால் ஈர்க்கப்பட்ட பாவத்தால், அறிவிலிக் கத்தோலிக்க க்றிஸ்தவர்களால் எரியூட்டப்பட்டும் ப்ரூனோக்கள் இருறந்திருக்கிறார்கள்.
தற்காலத் தண்டக் கருமாந்திர, அரைத்த மாவை அரைக்கும் தத்துப்பித்துவவியலாள ப்ரூனோக்களும் இருக்கிறார்கள்.
ஆனால் எமக்கு, எம் செல்லத் திராவிடப் ப்ரூனோவின்மீதுதான் தற்போதைய குவியம். நன்றி.
1
அல்லெலுயா.
பரிசுத்த ஆவியானது தறிகெட்டலைந்து கன்னிமேரி உடலின் உட்புகுந்து புறப்பட்டதால், கன்னிமாறாமல் விளைந்த நம் மேய்ப்பர், துஞ்சாத மரத்தச்சர் யேஸ்ஸூ பிறந்தது, மரித்துப் பின் உயிர்த்தெழுந்து உலவியதாக நம் சமூகத்தால் நம்பப்படும் ஆண்டுக்குப் பின் ~1950 ஆண்டுகள் கழித்துப் பிறந்து… 2015ல் சென்னையில் தன்னிச்சையாகத் தற்கொலை செய்யப்பட்டு இறந்த பெண்மருத்துவர் ஒருவரின் அடக்கச் சடங்கின்போது, அவர் ஆவி வீறிட்டு உயிர் பெற்றெழுந்து…
“பாவிகளே! உங்கள் பாவத்தை நான் சுமந்து சொர்க்கம் செல்கிறேன்.
புதிய ஏற்பாடு மத்தேயு 10:34-36ல் யேஸ்ஸூ சொல்வதுபோல வாளுடன் திரும்பிவருவேன். உங்களை தரித்திரர்களாக வாழும்படிக்கு சந்தோஷத்திலிருந்து சொஸ்தம் பண்ணுவேன்.
திராவிடர்களாகிய உங்களை நான் நரகத்திற்கு தீர்ப்பிட்டிருக்கிறேன்… அங்கு அக்கினித் திராவகத்தில் அமுக்கி எடுக்கப் பண்ணுவேன்… சிரத்தில் அக்கினிமழையாகப் பொழிவிப்பேன்,
கரங்களை வெட்டுவேன், கொட்டைகளை நசுக்குவேன், புனித ஆணுறுப்பை அறுத்தெறியச் செய்வேன்…”
…என்று கூறியதைக் கண்டு படுபீதியுற்ற புத்தம்புதிய நவீன திராவிட ப்ரூனோ, உடனடியாக, தன் தோழர்களோடும் + திமுக சுற்றங்களோடும் நட்போடும் படையெடுத்துச் சென்று – திராவிடப் பேய்கள் சுற்றுயலைந்து ரத்தவெறி கொண்டு நாட்டியமாடும் சமூகநீதிதளங்கள் நிரம்பிய காட்டுக்குப் போய், காவல்துறை பிணப்பரிசீலனை என எல்லாவற்றையும் ‘அட்ஜஸ்ட்’ செய்து, புனித நீராட்டல் செய்துகொண்டு சாதுவாக மிளிர்ந்து மருத்துவ சுகஜீவனம் நடத்தினார்.
பாவங்களையே வெச்சிசெஞ்சி அடப்பாவியானார்.
திராவிடக் கூவத்தின் சம்பளம் பெண்ணியரீதியாக மனைவியைத் துன்புறுத்தல்.
ஊக்கபோனஸ்ஸாக பாவத்தின் சம்பளம், மனைவி மரணம்.
அயோக்கியத்தின் கிம்பளம் திராவிடம்.
பின்னர் பரிசுத்த திராவிட ஆவியால் விடுதலை செய்யப்பட்டுப் பாசாங்குக்குட்பட்ட நவீன ப்ரூனோ…
…ஆன்மிக தரித்திரம், கடின இணைய வேலை, திராவிட ஒருத்தல், கமுக்க மௌனம், சமூக நீதி ஜெபம், ஆரோக்கியமாதா மாதம் சம்பளம், களவிக் கலவிபுகட்டல், மருத்துவ ஞானப்பொழிவு – இவற்றைத் தீவிரமாக அனுசரித்து சிற்றறையிலிலும் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தவ வாழ்வு வாழ்ந்து வந்தார்.
பின்னர், ஏறத்தாழத் திருட்டுத் தந்தையிலிருந்து திருத்தந்தையாக ஆன்மிகப் பதவியுயர்வும் பெற்றுக் கிட்டத்தட்ட பரலோக ராஜ்ஜியத்தையும் அடைந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பெரிய திராவிட அறிவுஜீவியாகவும், இலவச ஆரோக்கிய மருத்துவ ரோசனைப் பரோபகாரியாகவும் உருவானார். கூறுபோட்டு விற்றார்.
பாவப்பட்ட, அப்பாவி நண்பர்களெல்லாம், ‘இவன் தந்தை என் நோற்றான் எனும் கொல்’ என யோசித்து, அப்படியெல்லாம் விபரீதமாக யோசித்தால், அவர்தம் மனைவி போலக் கொலை செய்யப் படலாம் என்பதையும் உணர்ந்து – அவரவர் சக்திக்கேற்ப அறியா அல்லது கள்ள மௌனம் காத்தனர்.
மேலும் அவரிடம் ஸ்தோத்தரித்தனர்:
“தரித்திரவாழ்வு வாழ்வோரின் பாதுகாவலரான புனித ப்ரூனோவே, மருத்துவர்களின் மருத்துவரே! திராவிடர்களின் திராவிடரே! ஆரோக்கியத்தின் ஆரோக்கியமே! கருணையின் கருணையே! முதுகெலும்பின் முதுகெலும்பே! அறத்தின் அறமே!
தரித்திரர்களாக வாழும் ஏழை எளிய மக்களுக்காக எல்லாம், எமைப் போன்ற கொட்டையற்றவர்களுக்கெல்லாம்… எல்லாம் வல்ல இறைவனிடம் உம்மூலம் வேண்டிக்கொள்ளுகிறோம்.
இந்த சீனாக்கார கோவிட்19 காலகட்டங்களில் எங்களுக்கு ஞானப்பொழிவு கொடும். தேவரீர் கருணை காண்பியும். திருவாய் மலர்ந்து அருள்வாக்கு அளியும். அளப்பரிய அறச்சீற்றத்துடன் ஆரோக்கிய அருமைராஜனாக விளங்கும்…
புனிதரே, எம்மை ஸ்வீகரித்துப் புனிதமாக்கும்! எம் மூளைகளை சொஸ்தம் செய்யும்…
காவல்துறையையும், மருத்துவர்களையும், நீதிமன்றங்களையும், அறிவுஜீவிய சூழலையும் ஊடகங்களையும் திராவிட தேவரீர் வெச்சி செஞ்சதுபோல எங்களுக்கும் செய்யும்.
உம்முடைய திராவிட ராஜ்ஜியம் வருவதாக… உம்முடைய தீராவிடச் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் வெச்சி செய்யப்படுவதாக.
ஆமென்.“
2
ஆனால், கர்மா.
கர்மாவே கண்ணாயினார். கடுமை கர்மா கட்டுப்படு. கர்மா நாமம் வாழ்க.
ஆகவே.
தற்காலிகமாக இப்போது அல்லது பின்பு, தொடர் கம்பி எண்ணல்.
எண்ணித் துணிக கர்மா.
முற்பகல் செய்யின், பிற்பகல் வெச்சி செய்யும். ஊழிற் பெருவலி யாவுள.
ஆமென்.
பின்குறிப்பு: ஊழிற் பெருவலி இருக்கிறது.
அதுவானது = திராவிட இகொ-ஸிஸ்டம் + ‘பணம் பாதாளம் வரை பாயும்’ விஷயங்கள்.
ஆகவே, நம் செல்லப் புனிதர் மீட்டெடுக்கப் படலாம். நாமெல்லாம், ஒன்றுமே நடக்காதது போல பாவித்துக்கொண்டு, புனிதரிடம் மருத்துவ சமூக அறிவுரைகளைத் தொடர்ந்து பெறலாம்.
நன்றி.
-0-0-0-0-0-
புனிதர் குறித்த, பிற புனிதப் பதிவுகள்:
- மருத்துவர் ‘குரு புரூனோ’ எனும் மரியானோ அன்டோ ப்ரூனோ மாஸ்கெரானாஸ் – பராக்கிரமமிக்க பிரபல தமிழ்த் திராவிட அறிவுஜீவிப் பதிவர், இப்போது எங்கிருக்கிறார்? 11/04/2021
- பச்சைத் தீராவிட திமுக மரியானோ அண்டோ மாஸ்கெரானாஸ் ‘குரு ப்ரூனோ’ வுக்கு வரதட்சிணை ‘தற்கொலை’ கொடூரத்துக்காகச் சிறைத்தண்டனை – குறிப்புகள் 31/03/2021
April 17, 2021 at 22:48
இந்த பெண் மருத்துவரைப் போலவே தன்னிச்சையாக மரித்தவர்கள் உயித்தெழுவார்களேயானால், சிறைச்சாலைக்கு வெளியே எஞ்சும் திராவிடர்களை விரல்விட்டு எண்ணிவிட இயலும் ஐயா.
ஆனாலும் இது தமிழகம், இங்கே திராவிட இத்யாதி பிணந்திண்ணிகள் சாத்தானால் ஆகாத மாபாவங்களைப் பணத்தால் ஆக்கமுடியுமென்பதை நிறுவியுள்ளனர்.
ஆக, ஒடன்பொறப்பே, ஆயிரம் வழக்குகளில் நீ ஆட்பட்டிட்டாலும் நாமடித்த கொள்ளைப்பணம் உன்னைக் காத்திட்டிடும் என்பதை மறந்திட்டிடாதே! இந்தத் தமிழர்கள் விழித்திட்டால் நம் கதி என்ன என்ற உனது மனக்குரல் கேட்கிறது.
அடலேறே, அரை நூற்றாண்டுகளாக நாம் அவர்களைக் காயடித்து வைத்துள்ளோம் என்பதையே இன்றுவரை அவர்கள் உணர்ந்திட்டார்களில்லை. ஆக, உனது திராவிடப் பராக்கிரமத்தை ஒருபோதும் கைவிடாதே, நமது திராவிடக் கோமான்கள் நம்மைக் காப்பார்களாக.
April 18, 2021 at 08:06
ஐயா, தங்கள் வருத்தத்தை உணர்கிறேன். உங்களையும் உங்கள் கருத்துகளையும் மதிக்கிறேன். அவை தொடரும் வருத்தங்கள்தாம். ஆனால், அவை கடக்கப்படும் என நினைக்கிறேன், குறைந்த பட்சம் விழைகிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது.
பல்கலைக்கழக/கல்லூரிக் கல்வியை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
அதுவும் கவைக்குதவாத குப்பைகளான நாட்டாரியல் சமூகவியல் இலக்கியத் திறனாய்வு போன்ற அபத்தங்களைக் கடாசிவிட்டு விகசிப்பு கொடுக்கும் அறிவியல்++ பக்கம் செல்வோம். உங்களுக்கும் இது ஒத்துவரும் என நினைக்கிறேன்.
கீழ்கண்டவை குறித்து உங்கள் கருத்துகள் எப்படி இருக்கின்றன, போகின்றன?
1. விமோசனம் உண்டா? இல்லையெனில் ஏன்?
2. ஆமெனில் ஏன், எப்படி? கல்வி என்பது தற்போது மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் பொதுவான கன்கரெண்ட் ஜாபிதாவில் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு
2.1 ஒரு ஐந்து முக்கியமான அதிமேல் அடுக்கு / பாலிஸி அளவு மாற்றங்கள் யாவை, அடிப்படை முனைவுகள் யாவை? அவற்றை எப்படி நடைமுறைப் படுத்துவது?
2.2 ஒரு ஐந்து சிறு, கீழ்மட்ட மாற்றங்கள், வெகு சுளுவாக நடைமுறைப் படுத்தக்கூடியவை யாவை, அவற்றைஎப்படிச் செய்வது இன்னபிற
2.3 உங்கள் துறை (+பிறவும்) சார்ந்த ஐந்து முக்கியமான ஆராய்ச்சி முன்னெடுப்புத் திசைகள் (Research questions/directions) யாவை? ஏன் பாரதத்துக்கும் உலகத்துக்கும் அவை முக்கியம்?
2.4 …
ஐந்து என்பது ஒருமாதிரி பரிந்துரைக்கப் படும் எண்ணிக்கை. மேலேகூட இருக்கலாம்.
முடிந்தபோது ஒரு கட்டுரையாகவே எழுதமுடியுமா? எந்தமொழியில் என்பது பெரிய பிரச்சினை இல்லை
மற்றபடி உங்கள் விருப்பம்.
April 18, 2021 at 15:59
ஐயா, தமிழகம் திராவிட அயோக்கியத்தனங்களிலிருந்து மேலெழ வேண்டுமென நானும் விழைகிறேன். புலம்பிக்கோண்டே இருப்பதால் இருப்பதால் ஒருபயனும் இல்லை என்பதையும் உணர்கிறேன்.
அதேசமயம், தமிழகம் கடைத்தேற வேண்டுமெனில் இங்கே கட்டமைக்கப்பட்டுள்ள திராவிடச் சூழலின் நச்சுத்தன்மையை/அபாயத்தை அனைவரும் உணர்ந்தாக வேண்டும். அதை உணராத, நஞ்சை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தற்போதைய சூழலைப் பற்றிப் பேசுகையில் புலம்பல்/எதிர்மறைத் தொனி தானாகவே அமைந்துவிடுகிறது.
நம்மால் இயன்ற பங்களிப்பை நாம் அனைவருமே அளித்தாக வேண்டுமென்பதை 100% ஏற்கிறேன். இத்தகைய சூழலிலும், பல ஆண்டுகளாக தமிழகத்திற்கான காத்திரமான பங்களிப்பை பல்வேறு தளங்களிலும் சுணங்காமல் கொடுத்து வருகிறீர்கள் என்பதை நன்கறிவேன்.
கல்வி/ஆராய்ச்சி குறித்த 1 முதல் 2.4 வரையிலான கேள்விகளுக்கு நானறிந்தவரை பதிலளிக்க முயல்கிறேன், சற்று அவகாசம் அளியுங்கள், நன்றி.
April 18, 2021 at 16:26
இளம் ஐயன்மீர்,
1. ‘புலம்புவது’ என்பதும் முக்கியம். அதனை நான் கையாலாகாத் தனமாக எடுத்துக்கொள்ளவில்லை. அது முக்கியமான வடிகாலும் கூட. மேலும் ‘புலம்புவது’ என்பதற்குப் பதிலாக ஏகே47 (வெத்துவேட்டு அரவிந்தன் கண்ணையனை நான் இங்கு குறிப்பிடவில்லை) கையில் எடுத்துக்கொண்டு சுட்டுத் தள்ளினால்தான் பிரச்சினையே.
2. என்னைப் பொறுத்தவரை – உங்களைப் போன்ற செயலூக்கம் கொண்டவர்கள், களச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள், பாரத-தமிழகச் சமூகத்தின்மேன்மை குறித்து அக்கறைபடுபவர்கள் – மிக முக்கியமாக, அவை குறித்துத் தமிழிலும் தெளிவாக விஷயங்களைக் கொண்டு சேர்க்கும் திறமையும் சக்தியும் உடையவர்கள் என அதிகமில்லை. அதனால் தான் நான் அந்தக் கோரிக்கையை உங்களிடம் வைத்தேன்.
3. நான் ஏதோ சிறிய அளவில் செய்ய முயன்றேன்; அவ்வளவுதான். இது குறித்து ஒரு பிரமையும் இல்லை. பெரிதாக அல்லது ஸ்கேலப்ளாக ஒரு மசுத்தையும் சாதிக்கவில்லை; ஆனால் – அப்படிச் சாதிக்கவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்பதைக் கொஞ்சம் உணர்ந்திருக்கிறேன். அஷ்டே.
4. உங்களால் முடிந்தபோது, கல்வி பற்றிக் குறிப்பாக எழுதவும். (இன்னமும் பிறவும் கூட)
https://i2.wp.com/nursingeducationnetwork.net/wp-content/uploads/2018/06/Feyman-Problem-Solving.jpg?w=240&ssl=1
May 1, 2021 at 21:53
தமிழகக் கல்விச் சூழல்
ஐயா,தமிழகத்தின் உயர்கல்விச் சூழல் குறித்து சில கேள்விகளைக் கேட்டிருந்தீர்கள். அவற்றுக்கான பதில்களை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை நேர்மையாகக் கொடுக்க முனைந்திருக்கிறேன். இந்த முடிபுகளை எனது நேரடி அனுபவங்கள்/அவதானிப்புகள் மூலமாகவே அடைந்திருக்கிறேன். இவை எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. இவை பூரணமானவை என்றோ துல்லியமானவை என்றோ அறுதியிட்டுக் கூற விரும்பவில்லை. ஆனால், சர்வநிச்சயமாக இவை திராவிட பாணியில் இட்டுக்கட்டிப் பரப்பப்படும் அற்பப் பொய்கள் அல்ல. ஒருவேளை, இவை தவறானவை எனத் தர்க்கபூர்வமாக, தரவுகளுடன் நிறுவப்படுமெனில் நிச்சயம் மகிழ்வேன், எதிகாலத்திலேனும் அது நடக்க வேண்டுமென விழைகிறேன்.
தமிழகக் கல்விச்சூழலில், அக்மார்க் குப்பைகளான நாட்டாரியல் சமூகவியல் இலக்கியத் திறனாய்வு வகையறாக்கள் பெயரில் நடைபெறும் பம்மாத்துகளைத் தாண்டிய பற்பல கொடுமைகள் (திராவிட திராபைகளுக்கு நன்றியுடன்) அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, அறிவியல்/தொழிநுட்ப கல்வியும் கூட (சில விதிவிலக்குகளைத் தவிர்த்து) இங்கே சீரிய முறையில் காயடிக்கப்பட்டு வருவது தீராவிடர்களின் நாசகார சாகஸங்களில் ஒன்று. இனி உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன்.
1. விமோசனம் உண்டா? இல்லையெனில் ஏன்?
தற்போதைய நிலை தொடருமெனில் நிச்சயமாக விமோசனம் இல்லை.
ஏனெனில், உயர்கல்வி நிறுவனங்களில் புரையோடிப் போயிருக்கும் அரசியல்/ஊழல், அதன் விளைவாக தகுதியோ திறமையோ இன்றிபதவிகளை ‘வாங்கும்’ நபர்கள், அவர்கள் உருவாக்கும் ‘கல்விச்சூழல்’ என இச்சங்கிலித்தொடர் நீண்டுக்கொண்டே செல்லும்.
தமிழகத்தின் எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் அரசியல் பின்புலமோ பணபலமோ இன்றி தனது தகுதி/திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒருவர் துணைவேந்தராகிவிட முடியாது. பல கோடிகளைக் கொட்டி பதவியை ‘வாங்குபவர்’ அந்தப் பதவியில் இருக்கும் வரை எத்தனை நேர்மையாகச் செயல்படுவார் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்றைய நிலவரப்படி உதவிப் பேராசிரியர் பதவி 35 லட்சம் முதல் 60 லட்சம் வரை விலைபோகிறது, சந்தை நிலவரத்தைப் பொறுத்து இது 80 லட்சம் வரை செல்லும் வாய்ப்பும் பிரகாசமாகவே இருக்கிறது. சில உதாரணங்களை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.
அ) இங்குள்ள அரசு பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்த்துறையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்த இரு வருடங்களுக்குள்ளாகவே முனைவர் பட்டம் (வழிகாட்டியின் பராக்கிரமத்தால்) ‘வாங்கினார்’ ஒருவர், கையோடு அதே துறையில் பேராசிரியர் பணியையும் ‘வாங்கிவிட்டார்’. சில காலங்களுக்குப் பிறகு விசாரணை, பணியிடை நீக்கம் என வழக்கமான கண்துடைப்புக் கச்சேரி நடந்து முடிந்து மீண்டும் பணியில் அமர்ந்துவிட்டார், சுபம்.
ஆராய்ச்சி வழிகாட்டி நினைத்தால் எதையும் செய்ய முடியுமென்பது பொதுப்புத்தியில் உறைந்த ஒன்று, அதைப் பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் (உளவியல் தாக்குதல்/பணம் பறித்தல்/வன்புணர்வு) செய்யும் ‘பேராசு சிறியர்கள்’ இங்கே கோலோச்சி வருகிறார்கள், அவர்களுக்கு வளைந்து கொடுக்காதவர்கள் நிச்சயமாக முனைவர் பட்டம் பெறமுடியாதென்பது உறுதி. அதேவேளை, இதுபோன்ற ‘வழிகாட்டிகளைத்’ தேடிவரும் ‘ஆராய்ச்சி மாணவர்களுக்கும்’ பஞ்சமில்லை, தொழில் சிறப்பாகவே நடக்கிறது, ஆராய்ச்சியின் தரம் இது.
அடிப்படை அற உணர்வும், அர்ப்பணிப்பும், செயலூக்கமும் கொண்ட மதிக்கத்தக்க பேராசிரியர்கள் (அதிசயத்தக்க வகையில்) இன்றும் உள்ளனர். ஆனால், அவர்கள் சொற்பமானவர்களே, மேலும் உயர்பதவிகளில் அரிதாகவே அமர்கிறார்கள்.
கல்விச்சூழலை செழுமைப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய உயர் பதிவிகளைத் தீர்மானிப்பதிலேயே லஞ்சமும்/அரசியல் சதிகளும் தலைவிரித்தாடுகின்றன என்றால், அடுத்தடுத்த மட்டங்களின் நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக கைது, வழக்கு, விசாரணை, பணியிடை நிறுத்தம் எனச் சில சம்பிரதாயங்கள் நடக்கும், எதுவும் தர்க்கரீதியான முடிவை அடைந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை. உச்சபட்சமாக சில தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன, அவையும் உண்மையை மூடி மறைக்கவே உதவின. அரசுக் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களின் நிலை இது.
ஆ) தனியார் கல்லூரிகளோ லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும், நெறியற்று நிர்வகிக்கப்படும் தொழிற்கூடங்களை (கோழிப்பண்ணைகளை) கண்முன் நிறுத்துபவை. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் தலையாய பணிகளில் ஒன்று “பிள்ளை பிடித்தல்’, வருடத்திற்கு இத்தனை மாணவ/மாணவிகளை (பலியாடுகள்) பிடித்துவர வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்படும், வருடந்தோறும் இவ்வெண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கும்.
அதன் அங்கமாக, முட்டுச்சந்துகளில் நின்று பொய்கள் மலிந்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், தெருத்தெருவாக அலைந்து ‘எங்கள் கல்லூரியில் சேர்ந்தால் கேளிக்கைகளில் திளைத்து கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கலாம், மதிப்பெண்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என மாணவ/மாணவியரிடமும், ‘எங்கள் கல்லாரியில்தான் குறைந்த கட்டணம், தவணை முறையிலும் செலுத்தலாம், உங்கள் குழந்தையை பிரபஞ்சமே வியக்கும் வகையில் வாழ்வாங்கு வாழச் செய்வது எங்கள் பொறுப்பு’ என பெற்றோரிடமும் ஜல்லியடித்தல் மற்றும் பள்ளிகள்தோறும் படையெடுத்து மடிப்பிச்சை வாங்குதல் ஆகியவற்றை பேராசிரியர்கள் செய்தாக வேண்டும்.
வகுப்பறைறைகளுக்குச் செல்லும் பேராசிரியர் மாணவர்களின் வருகையை வருகைப்பதிவேட்டிலும், செயலியிலும் பதிவிடுவதோடு, வகுப்புகளுக்கு வராத மாணவர்களை/பெற்றோரைத் தொடர்புகொண்டு(சில நேரங்களில் திகில் கதைகளை விஞ்சும்) காரணத்தைக் கேட்டறிந்து தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்வது மாணவனின் கல்வியில் உள்ள அக்கறையால் அல்ல, தங்கள் நிறுவனத்தின் கடமை உணர்வை பெற்றோருக்கு பறைசாற்றவும், வருமான இழப்பைத் தடுக்கவுமே. கல்விக் கட்டணத்தைத் தவணைகளில் பிரித்து, குறைவான கட்டணம் பெறப்படுவதைப் போலொரு நம்பிக்கையை அளித்து, அவனது சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு மாணவனைக் கல்லூரியில் சேர்ந்தபின்(மவனே மாட்டினியா), அவனையும் அவனது பெற்றோரையும் கந்துவட்டிக்காரன் போல் விடாமல் துரத்தி (கல்வி நிறுவனத்துக்காக) பணம் பறிப்பதும், அதற்கான தினசரி அறிக்கையை சமர்ப்பிப்பதும் பேராசிரியரின் பணியே.
இதுபோக, மாணவர்களின் காதல் விவகார பஞ்சாயத்துகளுக்கு பலிகடா ஆவதும் பேராசிரியரின் கடனெழவுகளுள் ஒன்று. இவைபோக, அனுதினமும் வரிசைகட்டி நிற்கும் பயனற்ற வெட்டி குமாஸ்தா வேலைகளைச் செவ்வனே செய்வதும், தணிக்கைகளுக்காகப் போலி ஆவணங்களைப் போர்க்கால ரீதியில் உருவாக்குவதும் பேராசிரியர்களின் தலையாய கடமைகளில் அடங்கும். இவையனைத்திற்கும் செலவளித்தது போக எஞ்சிய நேரத்தில்(இருந்தால்) பேராசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.
தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, சிறந்த அடிமையாக இருப்பவர்கள் மட்டுமே பணியில் நீடிக்க முடியும். ஆராய்ச்சியின் நிலையோ அந்தோ பரிதாபம், M.Phil/PhD பட்டங்கள் கத்தரிக்காய்களைப் போல விற்கப்படுகின்றன. தகுதியும், ஆராய்ச்சியில் ஆர்வமும் இருந்தும்கூட பேராசிரியர்கள் சிலர் இச்சூழலால் விரக்தியுற்றுஆராய்ச்சி மாணவர்களை ஏற்பதே இல்லை(அந்த சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்காது), அவர்களால் முடிந்ததைத் தனியே முன்னெடுத்து வருகின்றனர்.
கல்வி நிறுவனங்கள் தங்களது தரத்தையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் விதமே அலாதியானது. கொளுத்தும் கோடையிலும் காற்சட்டைக்குள் செருகப்பட்ட முழுக்கை சட்டை, ஷூ, கழுத்தை நெரிக்கும் டை சகிதம் சோளக்காட்டு பொம்மையாக வளைய வருதல், ஆசிரியர்களுக்கு சீருடையை கட்டாயமாக்குதல், தமிழ் சினிமா/ஊடக கூத்தாடிகளை வரவழைத்து மாணவர்களை குஷிப்படுத்தி இறும்பூது எய்துதல், மோசடி விளம்பரங்களை எங்கெங்கும் பரப்புதல், இன்னபிற. மேற்குறிப்பிட்டவற்றுக்கு சில உதாரணங்கள் இங்கே.
#1. ஆகச்சிறந்த தொழில்முறை பொறியியல் கல்லூரி ஒன்றில் நடந்த சம்பவம் இது. மாணவன் ஒருவன் வகுப்புகளுக்கு வரவில்லை, பேராசிரியர் அழைத்தபோது வழக்கமான காரணங்களைச் சொல்கிறான். மறுநாள் வகுப்புகளுக்கு வந்தவன் அதன்பின் அடிக்கடி வராமல் போகிறான், ஆசிரியரின் அழைப்பையும் ஏற்பதில்லை. பெற்றோரைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அந்த எண்கள் தவறானவை எனத் தெரிகிறது. பின்னர் அவனது சேர்க்கை விண்ணப்பத்தைப் பார்த்தபோது அவன் ‘பிள்ளை பிடித்தல்’ முறையில் கல்லாரியில் ‘சேர்க்கப்பட்டிருக்கிறான்’ எனத் தெரிகிறது. அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவரே அவனைச் சேர்த்திருக்கிறார். பகீரதப் ப்ரயத்தனங்களுக்குப் பிறகு அந்த மாணவனையும், அவனது பெற்றோரையும் வரவழைத்துப் பேசும்போது உண்மைகள் வெளிப்படுகின்றன.
மாணவன் இரண்டு வருடங்கள் முயற்சித்து குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்று தேறியிருக்கிறான், பொறியியல் படிப்பதில் துளியும் ஆர்வம் இல்லை. ஆனால், ‘நீ கவலைப்பட ஒன்றுமில்லை, பொறியியல் படிப்பது மிக லேசு,கல்லூரி வாழ்க்கையே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான், உன்னை ஒருவரும் கேள்விகேட்க மாட்டார்கள்’ எனக் கூறி அவனையும் அவனது நண்பனையும் மூளைச்சலவை செய்து கல்லூரியில் சேர்த்திருக்கிறார் பேராசிரியர். அவனது கல்விக்கட்டணத்தை அரசே அளித்துவிடுவதால் கோழி அமுக்கு அமுக்கிவிட்டார்கள்.
ஆனால், கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே பெயரளவிற்கு நடக்கும் வகுப்புகளில் கூட அவனால் அமர முடியவில்லை, தினமும் கல்லூரிக்கு கிளம்பி வருபவன் முதலில் கல்லூரி உணவகத்தில் பொழுதைக் கழிக்கிறான், பின்னர் படிப்படியாக வளர்ந்து கல்லூரியைத் தவிர பிற இடங்கள் அனைத்திற்கும் செல்கிறான். பெற்றோரைப் பொறுத்தவரையில் மகனுக்கு இலவசமாக பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி, தினமும் கல்லூரிக்குச் சென்று வருவதாகவே நினைத்திருக்கிறார்கள், உண்மை தெரியும்வரை. மகனைக் கல்லூரியில் சேர்ப்பதற்குக்கூட அவர்கள் வரவில்லை, அனைத்தையும் பேராசிரியர் பார்த்துக்கொண்டார், அவனது அடிப்படைத் தகவல்களைக் கூடச் சரிபார்க்காமல் ஒரேநாளில் சேர்க்கையை முடித்திருக்கிறார். ஏன் இந்த அவசரம்? பிழைப்பு. அவருக்கு அளிக்கப்பட்ட ‘பிள்ளை பிடிக்கும்’ இலக்கை அவர் பூர்த்தி செய்யாவிட்டால் சம்பளமின்றி வேலை செய்ய நேரிடும், சில மாதங்களுக்குப் பிறகு அந்த வேலையும் பறிபோகும். ஆகவே, அவருக்குத் தேவை எண்ணிக்கை மட்டுமே, வேறு எதைப் பற்றியும் யோசிக்கும் ஆடம்பரத்தை அவர் அனுமதிக்க முடியாது.
வழக்கமாக ‘பிள்ளை பிடிக்கும்’ போது, குறைந்தபட்சம் மாணவனின் பெற்றோர் தங்கள் தலையை அடகு வைத்தேனும் பணம் கட்டிவிடுவார்களா என்பதையாவது உறுதிப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், அரசே கல்விக்கட்டணத்தை வழங்கும் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கையில் கிடைத்தால் அது புதையலேதான், தட்டுத்தடுமாறி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அத்தகைய புதையலுக்கு போட்டி மிக அதிகம், கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் கூட போட்டியாளர்கள் கவர்ந்து சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. இவர்களைத் தேடித்தேடி வலைவிரிக்கும் பெருங் ட்டம் இங்குண்டு, எனவேதான் இந்த அவசரம். காலில் விழுந்தேனும் கையோடு கூட்டிச்சென்று விடுவார்கள்.
ஓர் ஆசிரியர் இத்தனை கீழிறங்க வேண்டுமா? தற்காலங்களில், வானில் பறக்க விடுவதற்குக் கூட தகுதியற்ற உயர்கல்விப் பட்டங்கள் வரைமுறையற்று வாங்கப்படுகின்றன/வழங்கப்படுகின்றன. அனைத்துப் பட்டதாரிகளும் ஏகோபித்துச் சங்கமிக்கும் தகவல் தொழில்நுட்ப பொட்டி தட்டல் குட்டையில் இடம் கிடைக்கப்பெறாமல், வேறுவழியின்றி மேற்படிப்பு படிப்போர், கல்விமாமாக்கள் நடத்தும் கல்லூரிகளில் பேராசிரியரானால் இதற்குக் கீழும் இறங்கத் தயாராகவே இருப்பார்கள்/இருந்தாக வேண்டும்.
தமிழகக் கல்வியின் சாதனைகளில் இதுவும் ஒன்று, புற்றீசல்கள் போலப் பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு, தரம் தரைமட்டமாக்கபட்டு, கல்வி வியாபாரமயமான அன்றே இந்த விஷச் சுழற்சி தொடங்கிவிட்டது. ‘கடையில யாவாரம் ஜோராநடந்தாதான் டீ ஆத்தற வேலையில நீ இருக்க முடியும், பக்கத்து கடையவிட நம்ம கடைல யாவாரம் தூக்கலா இருக்கணும், அதனால கஸ்டமர கவர் பண்ற வேலைய சரியா பாரு, முடியாதவன் போய்கினே இரு’ என்பதுதான் இன்றைய தீராவிட கல்வித்தந்தைகளின் தாரக மந்திரம்.
முற்காலங்களில் இந்த ‘பிள்ளை பிடிக்கும்’ வேலையை ‘கல்வி ஆலோசகர்கள்'(=ஆள்பிடிக்கும் ஏஜென்ட்கள்) செய்து வந்தனர், இப்போது பேராசிரியர்கள் இதைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அவர்களால் முடியாதபட்சத்தில் ஆள்பிடிக்கும் ஏஜென்டிடம் பணம் கொடுத்தேனும் இலக்கைஅடைகின்றனர். சில ‘பேராசிரியர்களோ’ இலக்கை விட பன்மடங்கு ஆட்களைப் பிடித்து கணிசமான ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான தொழில் வாய்ப்பாக இதைப் பார்க்கிறார்கள், நிர்வாகத்தின் அங்கீகாரம் கிடைப்பது ஊக்க போனஸ்.
#2. அண்டை மாநிலம் ஒன்றிலிருந்து படிக்க வருகிறான் ஒரு மாணவன், தந்தை வளைகுடா நாடொன்றில் கட்டிட வேலை செய்கிறார். படிப்பில் மிகச்சுமாரான மாணவன், கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிறான், ஆனாலும் அடிக்கடி வகுப்புகளைத் தவறவிடுகிறான், நொண்டிச்சாக்கு சொல்கிறான். ஒரு சுபயோக சுபதினத்தில் அவன் போதைப்பொருள் பயன்படுத்தி பிடிபட்டதாக விடுதியில் இருந்து செய்தி வருகிறது. உடல் நலமில்லாத அவனது தாய் மிகுந்த சிரமத்திற்கிடையில் கல்லூரிக்கு வரவழைக்கப்படுகிறார், விஷயமறிந்து நிலைகுலைகிறார். மாணவனின் தந்தை கடல்கடந்த தேசம் ஒன்றில் கடுமையாக உழைத்து கல்விச்செலவை கவனிக்கிறார், கல்லூரியில் சேர்ந்து ஒரு பருவம் முடிவதற்குள்ளாகவே மாணவன் போதையின் பாதையில் போய்க்கொண்டிருக்கிறான்.
இது ஏதோ ஒரு தனித்த சம்பவம் என்று ஒதுக்கித்தள்ளிவிட இயலாது. எல்லா இடங்களிலும் வழிதவறும் (மிகச்சசொற்பமான)சிலர் இருக்கவே செய்வர். ஆனால், பெரும்பான்மையோரைப் பாதிக்கும் நச்சுச் சூழலைக் கட்டமைத்துவிட்டு, பலியாடுகளை மட்டுமே குறை சொல்வதில் ஒரு நியாயமும் இல்லை. தனது மகனின் படிப்பு கெட்டுவிடக் கூடாதென்று அந்தத் தாய் அனைவரிடமும் கைகூப்பி மன்றாடுகிறார், தனது மகனுக்காக மன்னிப்பு கேட்கிறார்(அந்த மாணவன் அசைந்து கொடுக்கவில்லை என்பது வேறுவிஷயம்). ஆனால், உண்மையில் மன்னிப்பு கேட்கவேண்டியது அவர் அல்ல, இதுபோல ஒரு சூழல் உருவாகக் காரணமாக இருந்துவிட்டு, அதைக் கண்டும் காணாமலிருந்து வளர விட்டவர்களே.
அந்த குறிப்பிட்ட அண்டை மாநிலத்திலிருந்து ஆட்களைக் கொண்டுவரும் ‘முகவர்கள்’ தொழிலைப் பெரும்பாலும் இங்கு படிக்கும்/படித்த மாணவர்களே செய்து விடுகிறார்கள், அதைத் தாண்டிய வேறு முகவர்களும் உண்டு என்றாலும். ‘கல்லூரி என்பது பொழுபோக்கிடமாக மட்டுமே இருக்க வேண்டும்’, ‘எப்படியேனும் சுளுவாகப் பட்டம் வாங்கிவிட வேண்டும்’ என்ற எண்ணமுள்ள மாணவர்கள் இயல்பாகவே இவர்களைத் தேடிச் செல்வர். உருப்படியாக எதையேனும் கற்க வேண்டுமென எண்ணும் மாணவர்களைச் சிக்கவைக்கும் கலையையும் இந்த ‘ஆள் பிடிக்கும்’ முகவர்கள் நன்கறிவர். இப்படி ஆள்பிடித்து கிடைத்த தரகுப்பணத்தில் லட்சாதிபதியான மாணவர்கள் கல்லூரிக்குள் கார்களில் வலம் வருவதும் உண்டு, பல முன்னாள் மாணவர்கள் இதையே முழுநேரத் தொழிலாகச் செய்து வருகிறார்கள். அவர்களுக்குக் கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் செல்வாக்கு அசாத்தியமானது.
ஒரு பேராசிரியர், நிர்வாகத்தில் தனக்கு மேல் உள்ள ஒருவரைப் பார்க்க வேண்டுமெனில், அந்த அலுவலகத்திற்கு முன்னால் வரிசையில் காத்துக்கிடக்க வேண்டும். ஆனால், வருடந்தோறும் கணிசமான எண்ணிக்கையில் ‘ஆள் பிடிக்கும்’ ஒரு முன்னாள்/இந்நாள் மாணவனுக்கு அனைத்துக் கதவுகளும் எப்போதும் திறந்தே இருக்கும். அந்த மாணவன் ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெற்றிருக்க மாட்டான், ஆனால், அவனுக்கு கிடைக்கும் மரியாதை பாடமெடுக்கும் பேராசிரியருக்கு ஒருபோதும் கிடைக்காது. இதுவே தன்னாட்சிக் கல்லூரியாக இருந்துவிட்டால், அம்மாணவன் கல்லூரிக்கு வரவேண்டிய அவசியமே இல்லை, ஏலகைவனாகவே அனைத்தையும் கற்றுத்தேர்ந்து பட்டமும் வாங்கிப் பறக்க விட்டுவிடுவான்.
இப்படி கல்லூரிக்குள் செல்வாக்குடன் வளையவரும் மாணவர்கள் செய்யும் இன்னொரு முக்கியமான தொழில் போதைப்பொருள் விநியோகம், இது ஊரறிந்த ரகசியமாக இருக்கும், ஒரு நடவடிக்கையும் இராது, காரணம் வெள்ளிடைமலை. புதிதாகச் சேரும்(குறிப்பாக தங்கள் மாநில)மாணவர்களைப் பகடிவதை செய்தல் இவர்களது அடிப்படை உரிமைகளில் ஒன்று, தப்பித்தவறி எவரேனும் ஆட்சேபித்தால் அந்த மாணவன்/மாணவி அங்கே தொடர்ந்து படிப்பது கேள்விக்குறியே, மீறிப் படித்தாலும் ஒவ்வொரு நாளும் நரகமாகவே நகரும். புகார் செய்தாலும் பெரிய பலனொன்றும் இருக்காது. மூத்த மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு அறிமுகமாகும்போதே போதைப்பொருளும் சேர்ந்தே அறிமுகமாகும், தப்பிப் பிழைப்போர் சிலரே. மேற்கூறிய மாணவன் போதைக்கு அடிமையானது இவ்வாறாகவே. அவனது தாய் மீது அவனுக்கு மிகுந்த பாசமுண்டு. அவர் அனைவரிடமும் கையேந்துவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும், அவனுக்கு தான் செய்ததைப் பற்றிய வருத்தம் கிஞ்சித்தும் இல்லை.
ஏனெனில், இந்த விசாரணைகள் அவ்வப்போது நடக்கும் கண்துடைப்புகள் மட்டுமே என்றும், இங்கே பணம் கட்டும் மாணவர்கள்தான் முதலாளிகள் என்றும்அவனது அண்ணன்களால் அவனுக்கு உறுதிப்படக் கூறப்பட்டுள்ளது. கல்லூரியில் யார் எதைச் சொன்னாலும் மாணவன் நடப்பதென்னவோ தனது அண்ணன்களின் சொற்படிதான், அவர்கள் சொல்லே வெல்லும். அதனாலேயே அவன் அசைந்து கொடுக்காமல் நின்றான். இறுதியாக, அவனது தாயிடமிருந்து ‘தண்டத்தொகை’ பெறப்பட்டு வழக்கு இனிதே முடித்துவைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டதென்னவோ நோயுடன் நெடுந்தூரம் பயணித்து வந்து தனது மகனை இக்கோலத்தில் பார்த்த அந்தத் தாய் மட்டுமே, இறுதிவரை அவரது கண்ணீர் நிற்கவே இல்லை.
இவர்கள் பெருங்கூட்டமாக இருப்பதாலும், பகடிவதை மற்றும் போதை வியாபாரம் இவர்களிடையே சகஜமாக நடப்பதாலும் இவர்களுக்கு மற்ற மாணவர்கள் தங்கும் விடுதியிலிருந்து தொலைவில் தனித்த விடுதி அளிக்கப்பட்டுள்ளது. அதையே ஒரு தனி அந்தஸ்தாக ஜூனியர்களிடம் காட்டிக்கொள்வார்கள் சீனியர்கள். இப்படிப்பட்ட ‘செல்வாக்குள்ள’ மாணவர்களை வளைத்துப்பிடித்து அவர்களின் அத்தனை அட்டூழியங்களுக்கும் துணைநின்று, வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து இன்னும் அவர்களைக் கவர என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்யும் ‘பேராசிரியர்களும்’ இருக்கவே செய்கின்றனர்.
இவர்களின் ஒரே நோக்கம் வருடாவருடம் ‘ஆள்பிடிக்கும் தரவுத்தொகை’ கூடிக்கொண்டே செல்லவேண்டும், பெரும்பணம் பார்க்க வேண்டும், அதற்காக எதிலும் சமரசம் செய்யத் தயங்காதவர்கள் இவர்கள். ஆண்டு முழுவதும் வாங்கும் சம்பளத்தைவிட பலமடங்கு பணத்தை தரக்குத்தொகையாக பெறுபவர்கள் இவர்கள். கற்றல்/கற்பித்தல் கிலோ என்ன விலை எனக் கேட்கும் இதுபோன்ற ஆள்பிடி ஆசாமிகளுக்கே பதவியும் கிடைக்குமென்பது பெருங்கொடுமை.
#3. வடமாநிலம் ஒன்றிலிருந்து கல்விக்கடன் பெற்று இங்கு பொறியியல் படிக்க வருகிறான் ஒரு மாணவன். கடின உழைப்பாளி, முதல் தலைமுறைப் பட்டதாரி, ஆங்கிலம் கொஞ்சம் தகராறு. கற்றுத்தருபவரை குருவாக ஏற்று காலைத் தொட்டு வணங்குபவன், வாழ்வில் முன்னேறி குடும்பத்தைக் கரைசேர்க்க நினைப்பவன். அவனைப் பொறுத்தவரை, தமிழகம் உயர்கல்வியில் முன்னேறிய மாநிலம், எண்ணற்ற கல்லூரிகள் உள்ளதால் அம்முடிவுக்கு வந்திருக்கிறான். கூடவே, இங்கிருந்து ஆள் பிடிக்கச் சென்றவர்கள் அள்ளிவிட்ட கதைகள்/பளபளா விளம்பரங்களில் மயங்கி இங்கே வந்து சேர்ந்துவிட்டான்.
முற்றிலும் புதிய சூழல், மொழிப்பிரச்சினை அனைத்தையும் தாண்டி படிப்பில் கவனம் செலுத்த முயல்கிறான். ஆனால், சில நாட்களுக்குள்ளாகவே இங்கிருக்கும் சூழல் அவனுக்கு புரிந்துவிடுகிறது. ஆசிரியர்கள் ஆங்கிலம் மாதிரி ஏதோ ஒன்றில் பேசி ஒப்பேற்றுகிறார்களே ஒழிய அதில் சாரமேதுமில்லை என்பது தெரிகிறது. மேலும், குமாஸ்தா வேலைக்காக ஒரு நாளில் நூறுமுறை கூட அழைப்பு வருமென்பதையும், அச்சமயங்களில் வகுப்பை அப்படியே நிறுத்திவிட்டு ஓடுவது ஆசிரியரின் கடமை என்பதும் அவனுக்குப் புரிகிறது. போதைப்பொருள் சகஜமாகப் புழங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஆங்கிலம் கற்க வேண்டும், ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும், நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமரவேண்டுமென்ற கனவுடன் வந்தவனுக்கு இப்போது பயம் எழுகிறது. கடன்வாங்கிப் படிக்க வந்ததற்கு பதிலாக தனது குடும்பத்தினருடன் விவசாயமே செய்துகொண்டிருந்திருக்கலாமோ என்ற எண்ணம் எழுகிறது. அதை யாரிடமும் பகிர்ந்துகொள்ளும் தைரியம் இல்லை, விளைவாக மிகுந்த மனச்சோர்வுக்குள்ளாகிறான்.
#4. விளம்பரங்களின் வீரியத்தையும், ஆள்பிடி முகவர்களின் கயமையையும் உணர்த்தும் கதை இது. இந்தியாவின் முக்கியமான சர்வதேசப் பள்ளி ஒன்றில் படித்தட்டு தமிழகத்தில் படிக்க (?!) வருகிறான் ஒரு மாணவன். பிற மாநிலங்களில் இருந்து படிக்க வந்த பெரும்பாலான மாணவர்களைப்போல பத்தாம்பசலி அல்ல இந்த மாணவன், இவனது ஆங்கிலப்புலமை பெரும்பாலான பேராசிரியர்களையே ஆச்சரியமடையச் செய்வது. செழிப்பான குடும்பப் பின்னணியைக் கொண்டவன், இருப்பினும் கொழுப்பெடுத்து மினுக்கிகொண்டலைபவனல்லன். ஆசிரியர்களிடம் மிகுந்த பணிவுடன் நடப்பவன், இதுபோன்ற ஒரு மாணவன் இங்கே எப்படி வந்தான் என்று எண்ணவைப்பவன்.
மற்றவர்களைவிட மிக விரைவாகவே இங்குள்ள களநிலவரம் அவனுக்குப் புரிகிறது. பேராசிரியர்கள் என்பவர்கள் இங்கே வெறும் குமாஸ்தாக்களே(சமயங்களில் அடியாட்கள்) என்பதும், அவர்களிடம் கற்றுக்கொள்ள ஏதுமில்லை என்பதும் அவனை மிகவும் சோர்வடையச் செய்கிறது. அனைவருக்கும் முன்னுதாரணமாக கல்லூரிக்குள் நுழைந்தவன் சில மாதங்களுக்குள்ளாகவே வகுப்புகளை புறக்கணிக்கிறான், போதைக்குள் விழுகிறான், உடல் நலிந்து கவலைக்கிடமாகிறான். ஆச்சர்யக்குறியாக இருந்தவன் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறான்.
கல்லூரிக்குள் நுழையும் ஒரு மாணவன், படித்து முடித்து பட்டம்பெற்று தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றாவிட்டாலும், குறைந்தபட்சம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறாமல் இருந்தாலே அது முன்வினைப்பயன் என்ற நிலையில் இருக்கிறது இன்றைய கல்விச்சூழல்.
#5. தனியார் கல்லூரி ஒன்றில் M.Phil பதிவுசெய்த ‘ஆராய்ச்சி மாணவர்’ ஒருவர் அதன் பிறகு கல்லூரிப்பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. ஓராண்டு முடிவில் ஏற்கனவே முதுகலை மாணவர் ஒருவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையை தனது பெயரில் சமர்ப்பிக்கிறார், அது தெரிந்தும் பணம் பெற்றுக்கொண்டு கையொப்பமிடுகிறார் ஒரு பேராசிரியர், சிறப்பம்சம் என்னவென்றால் அவர் புலமுதல்வரும் கூட, இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்வது? இன்று அந்த ‘ஆராய்ச்சி மாணவரும்’ ஒரு பேராசிரியர் ஆகலாம், அவருக்கு M.Philவிரிவாக்கம் என்னவென்று தெரியாது.
இவரைப்போல கேள்வியே இல்லாமல் காசை வாங்கிக்கொண்டு கையெழுத்து வைத்தால் அவர் ‘மெச்சத்தகுந்த வழிகாட்டி’, கல்லூரியின் ‘வளர்ச்சிக்கு’ உழையோ உழையென்று உழைப்பவர். ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனில் ஏதேனும் ஆய்வைச் செய்திருக்க வேண்டும், அதில் என்ன கண்டடைந்தீர்களோ அதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும், அதற்கு குறைந்தபட்சம் இதையெல்லாம் செய்திருக்க வேண்டுமென ஒருவர் சொல்வாரேயானால் அவர் ஒரு மனநோயாளி, சித்திரவதைப் பேர்வழி, கல்லூரிக்கு எதிரானவர், தமிழகத்தின் தனியார் கல்லூரிகளின் ஆராய்ச்சித் தரம் இது.
நிற்க, மேற்குறிப்பிட்டவற்றுக்கு விதிவிலக்காகச் செயல்படும் கல்லூரிகளும் தமிழகத்தில் இருக்கவே செய்கின்றன, குறைந்தபட்ச தரத்தையாவது உறுதிப்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்களும் உள்ளன. ஆனால், அவை நம்பிக்கை அளிக்கும் விதிவிலக்குகள் மட்டுமே. ஒரு சமூகத்தை/நாட்டை ஒழிக்க வேண்டுமென்றால் கல்வியில் கைவைத்தால் போதும், தானாகவே அந்நாடு ஒழிந்துவிடும் என்றொரு கூற்று உண்டு. பெரும்பான்மையான தொழில்முறைக் கல்விக்கூடங்கள் தெரிந்தே அந்தக் கொலைபாதகத்தைச் செய்துவருகின்றன.
இதுபோல தமிழகத்தின் உயர்கல்விச்சூழல் குறித்த பற்பல உதாரணங்களைக் கொடுக்க முடியும், ஆனால் உங்கள் முதல் கேள்விக்கான பதில் இன்னும் நீண்டுவிடும், ஆகவே இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். பிற கேள்விகளுக்கான பதில்களை அடுத்தடுத்த பதிவுகளில் கொடுக்க முயல்கிறேன், மிக்க நன்றி!
May 4, 2021 at 16:38
[…] புத்தம்புதிய புனித ப்ரூனோ 17/04/2021 […]
May 6, 2021 at 09:30
[…] புத்தம்புதிய புனித ப்ரூனோ 17/04/2021 […]