மாயா(மச்சீந்த்ரா மச்சம்பார்க்க வந்தீரா)விலாசம்

June 20, 2019

தனித்துவப் பசுக்களின் உள்ளுணர்வு பற்றியன்றிப் பிறிதொன்றை யோசிக்காமல் நம் ஆகச்சிறந்த மண்டையில் நாமே அறைந்துகொண்டு வெண்முரசுத்தனமாக அவனியை அவதானிக்கலாம் என ஆரம்பித்தால்…

“ஆஸ்திரேலியாவில் பெரிய புல்வெளிகளில் மின்கம்பியால் வேலியிட்டு முதல்தலைமுறை பசுக்களை வளர்ப்பார்கள். பசுக்களின் உள்ளுணர்வில் மின்கம்பிவேலி பதிந்தபின் மின்சாரத்தை நிறுத்திவிடலாம். பலதலைமுறைக் காலம் அவை அந்த கம்பியை மீறிச்செல்ல முயலாது. “

ஐயய்யோ! மேற்கண்டதை ஜெயமோகன் அவர்களின் கணிநிசெயலி அதுபாட்டுக்கு அதிகப்பிரசங்கித்தனமாக த் தன்னிச்சையாக எழுதிவிட்டதோ என்ன எழவோ!

ஆதாரம்: மாயாவிலாசம்

பிரமாதமான ஐடியா! ஆஸ்த்ரேலியாகாரர்கள் நம் மேதாவிலாசத் தமிழ் அலக்கியவாதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விலங்குநடத்தை மனோதத்துப்பித்துவம் (‘Animal Behavioural Psychology’)  விஷயங்களும் அதிகமாகிக்கொண்டே வருகிறதே என்பதை நினைத்தால்…

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இம்மாதிரி சுளுவான வழிமுறையிலேயே – நம் தமிழ் அலக்கியவாதிகளையெல்லாம் சேர்த்து, பெரிய புல்வெளிகளில் மின்கம்பியால் வேலியிட்டு உட்புகுத்தி அங்குமட்டும்தான் இலக்கியப் பணியாற்றி, சமூகத்தின் அறவிழுமிய மனச்சாட்சிகளாகச் சாணிபோடவேண்டும் என்று சொல்லி வளர்க்கவேண்டும். ஒவ்வொருமுறை வெளியே இணையவெளிகளில் கருத்தரங்குகளில் பதிப்பகங்களில் அவை சாணிபோடப் போகும்போதும் அவற்றுக்கு ஷாக் அடிக்கும். இப்படி சுமார் 5000முறை ஷாக் வாங்கியபின், அவற்றின் உள்ளுணர்வில் மின்கம்பிவேலி பதிந்தபின் மின்சாரத்தை நிறுத்திவிடலாம். தமிழகத்திலும் அதனால் பாரதத்திலும் சுபிட்சம் நிலவும். மின்சாரமும் மிச்சம். சாணிக்குச் சாணி எரிபொருளும் ஆயிற்று.

இதனால், அலக்கியவாதிகள் தலைமுறை தலைமுறையாகச் சாணிபோடுவது, வாசகர்கள் டபுள்ப்ரமோஷன் வாங்கி அவர்களும் எழுத்தாளர்களாகிப் பார்த்த இடங்களிலெல்லாம் கண்ணம்மா, சாணிபோடுதடி என்று அலைவதும் குறையும்.

மேலதிகமாக – நம் செல்ல மின்வேலிக்குள் – பின் அவையே ஒன்றின்மேல் ஒன்று அலக்கிய விமர்சன சாணி போட்டுக்கொண்டு களிக்கும் கண்கொள்ளாக் காட்சியை நாம் மின்வேலிக்கு அந்தப் பக்கத்திலிருந்து கண்டு ஏகத்துக்கும் களிக்கலாம். இந்த நிறைவளிக்கும் கேளிக்கைக்கு அனுமதி டிக்கெட் வைத்து வியாபாரம் செய்தால், நம் திராவிட அரசுகள் இன்னமும் பல அரசாணிகள் போட்டு, ‘அனைவருக்கும் டாஸ்மாக் கள் இலவசம்‘ போன்ற பொது நலத் திட்டங்களை அரங்கேற்றலாம்.

உலகத்தின் முதல் சாணி திராவிடச்சாணி என அரைகூவல் விடுவது மட்டுமல்லாமல், தமிழ்ச்சாணி செஞ்சாணி மகாநாடு நடத்தலாம். உலகம் உருள்வதற்கான அச்சாணியே தமிழ்ச்சாணி எனவும் குதூகலப்படலாம்.

நன்றி.

குறிப்பு: (சுமார் 18 வருடம் முந்தைய கதை) அடர்கானகத்தை ஒட்டினாற்போல், காந்திய வழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு சிறு ஆசிரமத்தில் ஒரு பெரும் பிரச்சினை; கோஷாலாவில் பசுக்கள், கன்றுகள், சில காளைகள்; ஆனால் வெளியில் இருந்து  வந்து சதா தொந்திரவு தரும் சிறுத்தைகள்/காட்டு நாய்கள். பின்னவற்றைக் கொஞ்சமேனும் தடுத்து நிறுத்த மின்வேலி அமைத்தோம். ஆனால் இது பெரிதாக எங்கள் குறிக்கோட்களுக்கு ஒத்துவரவில்லை (அவை விடுதலைச் சிறுத்தைகளோ என இன்று எனக்குச் சந்தேகம் வருகிறது – ஏனெனில் அவை அடங்க மறுத்தன; அத்து மீறின. விட்டால் திருப்பிக் கடித்திருக்கும்கூட!) என்பதற்கு அப்பாற்பட்டு பசுக்கள் சதா  சிறுஷாக் வாங்கியவண்ணம் இருந்தன – ஜெயமோகன் அவர்களின் மாயாவிலாசக் கட்டுரை முன்னமே கிடைத்திருந்தால், அதனை அப்பசுக்களிடம் படிக்கச் சொல்லி, அவைகளுக்கும் பாடம் ‘பெரும்பேராசானே சொல்லிப்புட்டார்! ஆகவே நீங்கோ அவ்ரு பேச்சையாவது கேக்கோணும்!‘ புகட்டியிருக்கலாம். அவற்றின் உள்ளுணர்வில் ஜெயமோகன் எழுத்துகள் கருமுகில் எரிதீயாகப் பதியும் வரை திரும்பித்திரும்பி அலக்கிய ஷாக் கொடுத்திருக்கலாம், கட்டுரையைக் கூழாக்கித் தவிட்டுடன் கலந்து பரிமாறியிருக்கலாம். ஆனால், இன்றுதானே ஜெயமோகன் இதனை எழுதியிருக்கிறார்?

சரி. பசு/காளை/கன்று எதுவும் ஷாக்கடித்துச் சாகவில்லை என்றாலும் இது இரண்டுமூன்று வருடங்களுக்குத் தொடர் பிரச்சினையாகவே இருந்தது. ஜெயமோகன் அவர்களின் மேலான அறிவுரைக்கு மாறாக, துக்கிரித்தனமாக அடுத்த தலைமுறைகளும் இதனைக் கற்றுக்கொள்ளவில்லை. பின்னர் கோஷாலாவையே இஸ்த்து மூடுவிட்டு, சில பசுக்களைக் கொட்டடியில் மனிதர் குடியிருப்புகளுக்கு நடுவே அமைத்து/இருக்கவைத்து ஒருமாதிரி அட்ஜஸ்ட் செய்தோம்.

என்னுடைய வருத்தமெல்லாம் இதுதான்: ஜெயமோகன் போன்றவர்கள், இம்மாதிரி நிறைய அறிவியல்பூர்வமான அபூர்வமான விஷயங்களை எழுதினால் – கூழும வாசகர்கள், பிறகலாச்சாரம் சார்ந்த மனிதர்கள் அவற்றைச் சுவைப்பது மட்டுமல்ல, பசுக்களும் அவற்றை உண்டு அவருக்கு நன்றியுடன் இருக்கும். ஆனால் அறிவியல் தொழில்நுட்பம், விலங்கியல்  போன்ற பிற மண்ணாங்கட்டிகள் பக்கமும் நம் பெரும்பேராசான் அவர் தனிப்பெரும் கடாட்சத்தைத் தொடர்ந்து வழங்க, நமக்குத்தான் லபிக்கவில்லை. என்ன செய்வது, சொல்லுங்கள்…

??

ஷாக் அடிக்கிறதா?? கவலையே படாதீர்கள். உங்கள் உள்ளுணர்வை ஆஃப் செய்துவிடுங்கள். அவ்ளோதான்!

ப்ராப்ளம் ஸால்வ்ட்.

5 Responses to “மாயா(மச்சீந்த்ரா மச்சம்பார்க்க வந்தீரா)விலாசம்”

 1. Ramakrishnan Says:

  ஜெயமோகன் தளத்திற்கு பக்கத்திலேயே தலை வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு தினமும் படிக்கிறீர்கள் போல. அவரைத் தவிர்ப்பது கடினம் தான்.


  • இன்னாங்கடா! சிர்ப்புக்கு ஏங்கின ஒரு மன்ஷன், சிர்க்க ட் ரை பண்னா தப்பா?

   ஒப்புக்கொள்கிறேன். இனிமேலாவது தவிர்க்கிறேன்.

   ஆனால், அவர் நாளைக்கும் எழுதப்போகும் நகைச்சுவையை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால், அவர் மனம் நோகுமல்லவா? அதனால்தான்…

 2. Ramakrishnan Says:

  உங்கள் கிண்டல் நன்றாக இருக்கிறது.யாரையும் புண் படுத்துவதல்ல. அவரும் படிக்க கூடும்.தவறுகளை திருத்தக்கூடும். எங்களுக்கும் பயனுள்ளது. ஆகவே தொடரவும். நானும் கொஞ்சம் நகைச்சுவையாக எழுதிப் பார்த்தேன்.

 3. Kannan Says:

  Aasaan knows a thing or two about ‘Maattufical Intelligence’ :)

  I’ve read somewhere that Elephant Calves are trained this way. They try to break the chain many times and give up. Even after they fully grown they believe the chains are unbreakable.

  This knowledge is definitely not carried on to the next generation, if so why they are training them again.


  • Hmm. I don’t like the way you criticize my aasaan, deriding him for no reason. I am very upset.

   Probably he is expanding his business interests not only in genetics and stuff, but also in epigenetics.

   As we say in Tamil, ‘all, our time!’

   GoodGrief.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s