கல்வி – பள்ளிப்படிப்பு: சில புள்ளி விவரங்கள் (பாஜக-மோதி குறிப்புகள் 9/n)
April 4, 2019
பலப்பல விஷயங்களுக்கு, பாஜக-அரசு தொடர்ந்து செய்துவரும் ஆரவார விளம்பரமற்ற, ஊடகப் பேடிகளால் கண்டுகொள்ளப்படாத விவரணைகள் – நூற்றுக்கணக்கில் புள்ளிவிவர அட்டவணைகள் (சரிபார்க்கப்பட்ட எண்ணிக்கைகளுடன்) இருக்கின்றன. என்னால் முடிந்தவரை இவற்றைக் கொடுக்கிறேன்.
சுமார் ஒரிரு வருடங்களுக்கு முன் ஒரு நப்பாசை இருந்தது – புள்ளிவிவரங்களும் என் ‘கள’அனுபவங்களும் எனக் கலந்துகட்டி ஒரு கையேடு போல எழுதலாமா என்று. ஆனால், நேரமில்லை. ஹ்ம்ம்… சப்பைக்கட்டு கட்டக்கூடாது, எனக்கு அதற்குத் தேவையான சிரத்தையில்லை. பிறபல குவிந்துகிடக்கும் காரியங்களும் வேறு எனச் சால்ஜாப்பு சொல்லலாம். ஆனாலும்…
சரி.
-0-0-0-0-
கீழே ஆர்டிஇ சட்டப்படி (எலிமென்டரி – தொடக்க/நடுநிலைப் பள்ளிக்கல்வி பெறுவதற்கான உரிமை – திட்டக் குவியம்: 6-14 வயது பிள்ளைகள்) மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் கல்வி பெறும் குழந்தைகளின் விவரங்கள்.
முந்தைய அரசால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் – பல அடிப்படை பிரச்சினைகள், ஆயிரம் ஓட்டைகள் ஊழல்கள் – நம் தமிழ் நாட்டில் இதுகுறித்துக் கேட்கவே வேண்டாம்.
சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்குச் செல்லமாக இந்தத் திட்டத்திலிருந்து விலக்கு (ஆகவே அவர்களுக்கு, குறைந்த பட்சம் 25% பள்ளிப்பிள்ளைகள் சுற்றுவட்டாரத்திலிந்து ஏழைகளாக இருந்தாலும் சரி, வந்தேயாகவேண்டும் போன்ற ‘பிரச்சினைகள்’ இல்லை! ஏகத்துக்கும் கொள்ளையடிக்கலாம், மதமாற்ற மூளைச்சலவை செய்யலாம்! சர்ச் பார்க் கான்வென்டுகள் தொடர்ந்து பணக்காரக் குழந்தைகளை மட்டும் (அதாவது திராவிடக் கனிமொழி போன்றவர்கள்) அனுமதிக்கலாம்; ஆனால் ராமகிருஷ்ணா மிஷன்கள் கண்டிப்பாக 25% மாணவர்களைச் சுற்றுவட்டாரத்திலிருந்து எடுத்தேயாக வேண்டும் – எப்படியும் இந்தப் பள்ளிகள் அதற்கு மிகமேற்பட்டு, அண்டையக் குழந்தைகளுக்குக் கல்விச்சேவையைச் செய்கின்றன என்பது வேறு விஷயம்!
எங்கள் பள்ளியில் (நான் இதில் வெறும், ஒரு ட்ரஸ்டிதான் – அறங்காவலர் என்று சொன்னால் படுகேவலமாக இருக்கிறது மன்னிக்கவும் – ஏனெனில் இந்த திராவிட அறங்காவலர்கள் எனப்படுபவர்கள், ஹிந்து கோவில்களில் அடித்த கொள்ளைகளுக்கு, சூறையாடல்களுக்குக் கணக்கேயில்லை! ஆகவே இந்தச் சொல்லைக் கேட்டாலே வாந்தி வருகிறது!) 100% பிள்ளைகள் சுற்றுவட்டாரத்திலிருந்து வருபவர்கள் – இருந்தாலும், இவர்களில் 25% பேருக்கு, ஆர்டிஇ வழியாக நிதி பெற்றுக்கொள்வது அசாத்தியமாக இருந்தது. ஊழல் பிடுங்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து ஆயிரம் பிரச்சினைகள் பலவருடங்களுக்குத் தொடர்ந்தன. ஆனால் இப்போது அவை நிவர்த்தியாகி விட்டன. இதில் எங்களுக்கு உதவி செய்தவர்களை நன்றிகூர்கிறேன். வாழ்க நீங்கள்!
நம் தமிழகம் மட்டும், ஊழல் முடைநாற்ற தீராவிடத்தால் பீடிக்கப்படாமல் இருந்திருந்தால், நாம் எங்கேயோ உண்மையான உச்சாணிக்கிளையில் அமர்ந்துகொண்டு பிற மாநிலங்களையும் மேலெழும்பச் செய்திருப்போம் என்பதை நினைத்தால்…
-0-0-0-0-
ஆனால் – பாஜக-மோதி ஆட்சியில் – இதையெல்லாம் மீறி, எதிர்மறை விஷயங்கள் பலப்பல களையெடுக்கப்பட்டு, தரமான ஆடிட்/தணிக்கைகள் செய்யப்பட்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இந்தச் செம்மைப்படுத்துதல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களில் நானும் சிலமுறை கலந்துகொண்டிருக்கிறேன். இதையும் மீறித்தான்! ;-)
(லோக்சபையில் மார்ச் 5, 2018 அன்று கேட்கப்பட்டகேள்வி (அன்ஸ்டார்டு) எண் 1602 – பதில்)
தமிழகத்தில், மத்திய அரசு உதவிபெறும் குழந்தைகளின் இந்த எண்ணிக்கை வருடாவருடம் கிட்டத்தட்ட 30% ஏறிவருவதைக் கவனிக்கவும்.
எங்கள் பள்ளிக் குழந்தைகளும் – 25% இல்லாவிட்டாலும் 13% இப்போதைக்கு, ஏனெனில் பேபர்வர்க் செய்து மாளவில்லை – இந்த எண்ணிக்கையில் 2016-17லிருந்து ஐக்கியம் என்பதைப் பெருமையுடனும் மத்திய அரசுக்கு நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.
-0-0-0-0-
இதனையும் செழுமைப்படுத்தி மேலும் முன்னெடுக்க – பாஜக-மோதியினருக்கு இன்னமும் சிலமுறை மத்திய அரசு அமைக்க வாய்ப்புக் கிடைத்தால்தான் முடியும், அல்லவா?
ஆகவே, மீண்டும் மோதி!