ராமச்சந்திர ‘Rumourchandra’ குஹா எனும் குயுக்திமூளைக்காரரின் கடைந்தெடுத்த பொய்கள், மோதி (+ஊக்கபோனஸாக ஒரு ஜெயமோக இஞ்சிநீதிக் கதை!)

March 25, 2019

நம் அறிவாளி அறிவுஜீவி இடதுசாரி மனிதவுரிமைக் குளுவான்களுக்கெல்லாம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு என்னவென்றால் – கண்மூடித்தனமான ஜொள்ளொழுகும் காங்கிரஸ்+மேற்கத்திய துதிபாடலும் +++ அதே சமயம் – வாயோரநுரை தள்ள மோதி, பாஜக, பாரத எதிர்ப்பும்…

இவை இரண்டையும் எடுத்துவிட்டால் – நம் அறிவுஜீவிகளின் மேலான கருத்துதிர்ப்பு பலூன்கள் புஸ் என்று இளித்துவிடும், பாவம்.

ஐயா அறிவுச்சீவக சிந்தாமணிமார்களே! நீங்களெல்லாம் சொகுசு அறிவுஜீவிகளாக இருப்பதால், அறிவுலகத்திலேயே 20 கிமீ உயரத்தில் சஞ்சாரித்துத் சுதந்திரமாகப் பறந்துகொண்டு இருந்தாலும், தர்க்கரீதியோ அடிப்படைகளோ அற்ற முட்டியடி எதிர்வினைகளை மட்டுமா கொடுப்பீர்கள்??

நான் என்ன சொல்கிறேன் என்றால் – கண்மூடித்தனமான ஆதரவுகளும் வேண்டாம், எதிர்ப்புகளும் வேண்டாம். தீர விசாரித்துத் தரவுகளின்படி கருத்துகளைச் செழுமைப் படுத்திக்கொண்டு தேவையற்ற சார்புகளில்லாமல், உலகத்தில் எல்லாமே சாம்பல் நிறத்தவை எனச் சமனத்துடனும் அடிப்படை நேர்மையுடனும் அறத்துடனும் விஷயங்களை அணுகினால் என்ன? மோதியைக் கரித்துக்கொட்டவேண்டுமென்றால், அதனை ஆதாரத்துடன் செய்யுங்கள், சரியா?

ஆனால் நம் செல்ல அறிவுஜீவிகளுக்கு அலக்கியக் காரர்களுக்கும் பிரபலஸ்தர்களுக்கும் இதற்கெல்லாம் எங்கு ஐயா நேரம். அதற்கெல்லாம் சனியன், உழைக்கவேண்டுமே!

ஐயய்யோ! இதோ அடுத்த பிரச்சினை வந்து கொண்டிருக்கிறதே! அல்லது அப்படி ஒன்றும் இல்லாவிட்டால் அதனைத் தேவைமெனெக்கெட்டுக் கண்டுபிடித்து – பின் அதன்மீது நம் மேலான கர்த்துகளை வழங்கவேண்டுமே! வேகமய்யா வேகம் – நமக்கு முன்னால் வேறு எந்த அறிவுஜீவியாவது கர்த்த அட்ச்சிவுடப்போகிறான்…

நன்றி.

-0-0-0-0-0-

இந்த அரைகுறை வதந்திபரப்பாள ரோமச்சந்திர குஹா எனப்படும் ரூமர்சந்திரனாரைப் பற்றி ஏற்கனவே, மண்டையில் அடித்துக்கொண்டு எழுதியிருக்கிறேன்.

…பலவிதங்களிலும் அடிப்படைத் தகுதிகளோ, அதையே விடுங்கள், நேர்மையோகூட அற்ற நபர்தாம் இவர். ஆனால் இவர் எழுதியுள்ள காந்தி புத்தகங்களை வைத்துக்கொண்டு ஆக இவரைத் தங்கள் வழுக்கைத் தலைமேல் வைத்துக்கொண்டு கூத்தாட ஒரு கும்பலே இருக்கிறது, நம் தங்கத் தமிழ் நாட்டிலும்! என்ன செய்வது சொல்லுங்கள். இடுக்கண் வருங்கால் நகுக. ஆக, சிரிக்கிறேன். நன்றி.

சரி. அண்மையில் அவர் பெங்களூர் நகரத்திலிருந்து அதற்கு வடக்கேயுள்ள விமான நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். சுற்றுச்சூழலைக் காக்கவேண்டுமல்லவா, சொல்லுங்கள்?

அவரளவுக்கு ‘ஒரு மனிதனின் நுகர்வுகளுக்கு எல்லைகளென்ன‘ என்பதை உணர்ந்து ஆசானிய போதனைகளைப் பிறருக்கு வழங்குவதில், இப்பூவுலகில் வேறு யார் உளர், சொல்லுங்கள்?

(விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டே, என் மகனுடன் இதனைப் படித்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறதே!)

…போகும்போது வாகனத்திலிருந்து வெளியே திடுதிப்பென்று பார்க்கிறார். (அவர் நிச்சயம் நடந்தோ சைக்கிளிலோ போயிருக்கமாட்டார் என்பது என் தாழ்மையான அனுமானம், ஏனெனில் காரில் விமானத்தில் போனால்தானே – விமானப் பயணங்களாலும், தேவையேயில்லாமல் கண்டமேனிக்கும் பொருட்களைக் கபளீகரம் செய்வதாலும் ஒஸோன் படுகை ஓட்டையாகிறதே, சுற்றுச்சூழல் பாழாகிறதே ஐயகோ என தில்லியிலும் அமெரிக்காவிலும் போய் குளிரூட்டப்பட்ட பெரும்கட்டிடங்களில், சூட்டும்கோட்டும் போட்டுக்கொண்டு முழ நீளத்துக்கு அனுபவரீதியாகப் பேசமுடியும், சொல்லுங்கள்? வேகமய்யா வேகம்!)

அடுத்து எந்த இந்திய ‘வீழ்ச்சி’யையடா பூதக்கண்ணாடி போட்டு அவதானித்து அதற்கும் மோதிக்கும் பாஜகவுக்கும் ஹிந்துத்துவாவுக்கும் முடிச்சு போடலாம் என யோசித்துயோசித்து மண்டை காய்ந்துகொண்டிருந்த ரூமர்சந்திரனார் தன் மடிக்கணிநியை விட்டுக் கண்ணை எடுத்து வெளியே பார்க்கிறார்!

…டட்டடய்ங்ங்ங்க்!

…வெளியே, பெருஞ்சாலைக்கு இருபக்கங்களிலுமிருந்த பெரியபெரிய விளம்பரங்கள் இருந்த சட்டகங்களில் ஒரு விளம்பரம்கூட இல்லை!

நம் நடிப்புச் சுதேசியின் மண்டைமேல் கருத்து ‘பல்ப்’ மினுக் மினுக் பளிச்! ஆஹா!

(twitter.com/Ram_Guha/status/1109310432035123200)

புளகாங்கிதமடைந்து கீச்சுகிறார் (இந்தக் காமாலைக் குப்பையைவேறு 2000த்துக்கு மேற்பட்ட அறிவிலிகள் ‘லைக்’ செய்திருக்கிறார்கள்! வாழ்க!!):

பெங்களூர் விமான நிலையத்துக்கு வண்டியில் போய்க்கொண்டிருக்கிறேன். பல சாலையோர விளம்பரச் சட்டகங்களில் விளம்பரங்களே இல்லை அல்லது தொடர்பு எண்கள் மட்டும் குறிப்பிடப் பட்டுள்ளன.

இந்தியப் பொருளாதாரம் அடிபட்டுக்கொண்டிருக்கிறதா?

விளம்பரங்களுக்கான பட்ஜெட்டுகள் தீர்ந்துபோய்விட்டனவா?

அந்தப் பணங்கள் வேறெங்கோ வாய்க்கால் மாற்றப்பட்டுவிட்டனவா?

அல்லது – இவை, என்னைப் போன்ற ஒரு மாற்றுப்பார்வை பார்ப்பவனுக்கு மட்டுமே புலப்படும் விஷயங்களா?

அடேங்கப்பா! தாங்க மிடில ஸாம்யோவ்!!

தாளித்துக் கருகி வீழ்ந்த ஒரு கடுகுத் தூளை, அண்ட சராசரங்களுக்குமே விரிக்கிறாரே இந்த அண்டப்புளுகர்! நம்மிடம் ஏற்கனவே கோலோச்சும் கம்பல்ஸிவ் கான்ட்அறியன் அரவிந்தன் கண்ணையன் ஒருவர் போதாதா, சொல்லுங்கள்?

1. இவர் சொல்வதைப் போல அல்லது குயுக்திக் கேவலமாகச் சுட்டுவது போலல்லாமல் – இந்த விளம்பரமின்மை விஷயத்துக்கும் – பொருளாதார வீழ்ச்சி /+ பாஜக தேர்தல் நிதி போன்ற இட்டுக்கட்டல்களுக்கும் ஒரு மசுத்துக்கும் தொடர்பேயில்லை.

2. மாறாக – விஷயம் இவ்ளோதான்: மக்கள் விழிப்புணர்ச்சி (eye sexual intercourse) இயக்கங்களும், நீதிமன்றங்களும், ட்ராஃபிக் காவலர் பரிந்துரைகளும் கொடுத்த அழுத்தங்களைத் தாங்கமுடியாமல் – பெங்களூர் மாநகராட்சியானது (அதன் எல்லைகளுக்குள்) சென்ற ஆகஸ்ட் 8, 2018லிருந்து ஒரு வருடத்துக்கு இந்த ஃப்லெக்ஸ் பேனர்கள், ராட்சத விளம்பரங்கள் என அனைத்தையும் தடை செய்திருக்கிறது. அதுவும் இந்த மாநகராட்சி, காங்கிரஸ் பிடியில் இருக்கிறது. அவ்ளோதான்!

3. இந்த தண்டக் கருமாந்திரர் – டொல்கேட் பிரிவிலிருந்து விமானநிலையம் செல்லும் சுமார் நான்கு கிலோமீட்டருக்கு – அதே விளம்பரங்கள் ஜெகஜ்ஜோதியாகவும் கனகம்பீரமாகவும் தொடர்ந்து இருப்பதைப் பார்க்கமுடிவதையும் வசதியாக மறந்துவிட்டார். (சாதாரண விஷயம் ஒன்றைப் பார்த்தார் -> கற்பனைக் கழுதைப் பயணம் -> விஷயத்துடன் தன் விஷத்தைக் கலந்தார் -> பொருளாதாரப் பிரச்சினை -> மோதி தான் காரணம்! வாழ்க!)

4. ரூமர் சந்திரர் – அவர் பெயருக்கேற்றவாறு வதந்திகளையும் பரப்புவதில் கில்லாடி. நன்றாகவே ஆடுகிறார். நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு. வேறென்ன சொல்ல. த்தூ.

இதைக் குறித்து என் கீச்சல் இதோ:

(twitter.com/othisaivu/status/1109437034253316101)

இத்தனைக்கும் இந்தப் பேடியார் — நம் செல்ல ரூமர்சந்திர வதந்தியார், வசிப்பது பெங்களூர் மாநகரில்தான். இருந்தாலும் பெங்களூரில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனாலும் அந்த ‘நடக்கிற’ விஷயங்களைப் பற்றிக் காரில் உட்கார்ந்துகொண்டே அட்ச்சிவுடல்!

படிப்பறிவும் அனுபவமும் ஒருங்கே பெற்ற காங்கிரஸ் அறிவுஜீவிக் குடிமகன் தான்! அதனால் தான் திருகலும் திரித்தலும் மிகச் சுலபமாகவே வருகிறது. வெட்கங்கெட்ட ஜன்மங்கள்… இவர் சர்வ நிச்சயமாக ஒரு மூன்றாம்தர Historianகூட அல்லர்! வெறும் Twistorianதான்!

…ஆனால் – அம்மணிகளே, அம்மணர்களே!!

இந்த ரூமர்சந்திரனாருக்கும், பேராசான், நம் ஜெயமோகன் அவர்கள்தாம்! (போனஸ் நீதிக்கதை கீழே!)

-0-0-0-0-0-

இது எப்படி இருக்கிறதென்றால் – ஹ்ம்ம் – ஒரு எடுத்துக்காட்டுடன் இதற்கு ஒரு பொழிப்புரை எழுதுவது சுலபம். சரியா?

ஆனால், கவனிக்கவும். இந்த நீதிபோதனைக்கதைக்கும் — எந்தவிதமான நிஜ/பொய்/புனைவு பேராசான்களுக்கும் – ஒருவிதமான தொடர்பில்லை அன்றிப் பிறிதொன்றில்லை என அறியவும். எல்லாம் கட்டுக்கதைதான். சரீங்க்ளா??

ஜெயமோகன்ஜெயமோகன் என்றவொரு நபர் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் தெற்கத்தி நாகர்கோவில் நாரோயில் என்றொரு ஊரில் வசிப்பதாகவும்.

அவர், ஒரு நாள் இனிய காலையில், கடலூர்சீனுகடலூர்சீனு எனும் ஒரு பாடல்பெற்ற வரலாற்றாளரின் இன்னொரு கட்டுரையைப் படிக்காமலேயே தரவேற்றிவிட்டு (ஏனெனில் – அந்தக் கட்டுரைக்கடிதம் ‘இனிய ஜெயம்’ என ஆரம்பித்ததே போதும், வேண்டிய தரவுகள், அந்தக் கட்டுரையின் பாடுபொருளுக்குக் கிடைத்துவிட்டன அல்லவா?), காலை நடைப்பயிற்சி செய்யப் போகிறார் என வைத்துக்கொள்வோம்.

நடையின் நடுவில் – அவருக்குப் பிடித்தமான ஆகச்சிறந்த டீக்கடையில் பிறிதொன்றையும் குடிக்காமல், தரையில் டமாரென்று வலக்கையால் (எஸ்ராவின் இடக்கை படித்தபின் தான் அந்தக் கையையே உபயோகிக்கக் கூடாது எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார் பாவம்; புரிந்துகொள்ளக் கூடியதுதானே!) தர்மாவேசத்துடன் அறைந்து ‘வேணும், எனக்கு இஞ்சிடீ வேணும், இப்பவே வேணும்!‘ என உரக்க, முகம்சிவக்க, ரத்தம் சுண்ட, மணிரத்தினமாகக் கேட்கிறார் எனவும்.

ஆனால் அந்தக் கடையில் இஞ்சி இல்லை. ஏனெனில் டீக்கடைக்காரர் முந்தையமாலையில் பக்கத்துக் கம்போளத்தில் அதனை வாங்க மறந்துவிட்டிருக்கிறார், அவ்ளோதான்.

பேராசானுக்கு வந்ததே ஒர்ரே அறச்சீற்றம! தனியொருவனுக்கு இஞ்சிடீ இல்லையெனில் இந்த மோதியை அழித்திடுவோம் என வீறுகொண்டு விசும்பை நோக்கி எழுகிறார். நன்றி.

வீட்டை அடைந்தவுடன், சாவகாசமாக மேய்ந்துகொண்டிருந்த அவருடைய செல்லக் கற்பனைக் கழுதையைப் பாவம், சாட்டை கொண்டு சொடுக்கி, அதன் மேல் ஆரோகணித்து ஆனந்தப் பயணம் செய்து ஒரு கட்டுரை; அதன் சாராம்சக் கர்த்துகளை, போர்க்கால ரீதியில் குறித்துக்கொள்கிறார்:

இந்தியாவில் கோரமான இஞ்சி தட்டுப்பாடு. கேட்பாரில்லையா! பக்கத்து நாடார் காய்கறிக்கடைகளிலும் பழமுதிர்ச்சோலை கடல்களிலும் இஞ்சியைக் கேட்டால் இஞ்ச் டேப்பைக் கொடுக்கிறார்கள்!

அதுவும் ‘மேட் இன் சீனா!’ இதுதான் மோதி அரசின் அளப்பு. ஃபேக் இன் இண்டியா.

இந்திய இஞ்சிக்கு இங்கியே இன்னிக்கே பற்றாக்குறை. என்னதான் நடக்கிறது தில்லியில்? பாஜக மதவெறி அரசும் அதன் ஹிந்துத்துவா தலைவரும் இதைப் பார்க்காமல் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்? தேசபக்திப் போர்வையில் அறுவைசிகிழ்ழ்ழ்ச்சை வேலைநிறுத்தம் (ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்) செய்தால் போதுமா?

என்னுடைய வழமையே போல – தீர ஆலோசித்துப் பிற விவரங்களைத் தொகுத்துப் பகுத்துக்கொண்டு இவ்வாறு என் எண்ணங்களை நிறுவிக் கொள்கிறேன்.

முதலாவதாக – இக்காலங்களில், தமிழகப் பெண்கள் பலருக்கும் இடுப்பு ஏகத்துக்கும் வீங்கியிருக்கிறது, அல்லது இடுப்பு எடுப்பாக இருக்கிறது; ஆனால் சங்க காலத்தில் அப்படி இருந்திருக்கவில்லை என என்னுடைய பிரத்தியேக வரலாற்றறிஞர் கடலூர்சீனு, ‘பாமா விஜயம்‘ எனும் எட்டாம் நூற்றாண்டுத் திரைப்படத்தில் குறிப்பிட்டிருப்பதாகக் குறிப்பிடுவதைக் குறிப்பிடவேண்டும். ஏற்கனவே அவர், ‘மதுரா விஜயம்’ பற்றி, தான்தோன்றி வரலாற்றை எழுதிப் புகழ்பெற்றிருப்பவரும்கூட.

ஒன்றரையாவதாக, இது சங்கி காலம். சங்கி மறுவிய காலம். ஹிந்துத்துவா பூதப் பிரேதக் காலம். எல்லாவற்றுக்கும் கறார் தரவுகள் தேவைப்படுகின்றன. ஆகவேதான் இத்தனை விவரங்களுடனும் தரவுகளுடனும் எழுதவேண்டி வருகிறது.

இரண்டாவதாக – தமிழ நடுவயதுப் பெண்களுக்கே உரிந்தான இந்த இடைச்செருகல் பெல்ட் வகை இடுப்புவீக்கத்திற்குக் காரணம் என்னவென்று கடைத்தெருச் சங்க இலக்கியத்தில் பார்த்தோமென்றால் – பண்டமிழ் தமிழச்சியானவள், ‘இஞ்சி இடுப்பழகி‘ எனப் புகழப் பட்டிருப்பது தெரியவரும்.

அப்படிப்பட்ட அனுபூதி நிலையிலிருந்து இப்படிப் பட்ட துரிய துரித நிலைக்கு ஏதோ முட்டாள் முமுட்சுத்தனமாக ஆண்மீகப் பெண்ணடிமைத்தன சதித்திட்டங்களால் தாழ்த்தப்பட்டுள்ள நம் குலப்பெண்டிர், ஓட்ஸ் கஞ்சி மட்டுமே குடித்து பிற நனிசுவை உணவுகளைத் துறந்து, ஆக, ஏற்பட்ட வெறுப்பில் ஏகத்துக்கும் ‘கஞ்சி கடுப்பழகி‘களானது தெரியவருகிறது.

மூன்றாவதாக – ஆனால், பந்தயத்தில் முதலாவதாக, இடுப்பழகிகளெல்லாம் கடுப்பழகிகள் ஆகி #MeToo என குடுகுடுவென உருண்டோடிவருவது இப்போது புரிகிறதா? இவர்களுக்கெல்லாம் தேவையான அளவு இஞ்சி கிடைக்காமலிருப்பதால்தானே இடுப்புகள் வீங்குகின்றன?

நம் வீட்டுப் பொருளாதாரங்களின் இஞ்சினே இஞ்சிதானே அன்றிப் பிறிதொன்றுமில்லை என்கிற அறிவாவது இனி வருமா நமக்கு? தமிழர்களாகிய நாம்தான் இடுப்பார் கைப்பிள்ளைகளா, சொல்லுங்கள்?

நானே ஒரு இஞ்சித் தோட்டத்தில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கி நான்கு வருடங்கள் ஆன்மீகச்சகதி மரபில் வேலை செய்திருக்கிறேன். அப்போதும் என் கங்காணி, அதே குரு நித்யாதான்! ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?

ஆனால், அவர் போய்ச்சேர்ந்து நிறைய நாட்களானாலும், அவருடனான என் அனுபவங்களைத் தொடர்ந்து புதுக்கருக்கு குலையாமல், தொழில்முறையில் உற்பத்தி செய்து எழுதிவருவது போலவே – என் விவசாய அனுபவத்தையும் இஞ்சி குறித்த கருத்துகளையும், அதன் வெள்ளாமையில் (flood tortoise) உள்ள பிரச்சினைகளையும் ஒரு பாமர விவசாயியாகத்தான் எழுதுகிறேன்.

இஞ்சி விவசாயம் போன்ற ஒரு பாரம்பரியத் தொழிலை இந்த மத்திய அரசு ஏன் ஊக்குவிக்கமாட்டேனென்கிறது? இந்தியாவுக்கு, இஞ்சி முக்கியமா போர்வெறி ரஃபால் விமானம் முக்கியமா?

அறக் கிழவன் காந்தி, தற்போதைய பிரதமராக இருந்திருந்தால் அறவழியில் என்ன செய்திருப்பார் என அவதானிக்கிறேன்.

குறைந்த பட்சம், தன்னுடைய பிராபல்யம் மிக்க மூன்றுகுரங்குகள் பொம்மையின் பெயரை – ‘இஞ்சி தின்ற குரங்குகள்‘ எனவாவது மாற்றியிருப்பார் அல்லவா?

நான் கட்டும் வரியெல்லாம் எங்கே போகிறது? எனக்கு என்னுடைய இஞ்சியை ஒரு சுக்குக்குக் கூடத் திருப்பிக் கொடுக்க முடியாமல் இந்த ஹிந்துத்துவா மதவெறி அரசு என்னதான் செய்துகொண்டிருக்கிறது?

நம் சராசரி மக்கள் கூட்டத்தைப் பாருங்கள் – இவர்களெல்லாம் மோதிமோதிமோதி எனக் கூக்குரலிட்டு அவரை என்னவோ மெஸ்ஸையா ரேஞ்சுக்குத் தூக்கிவிடுவதைப் பார்த்தால் என் கண்ணில் இஞ்சிடீ வருகிறதே!

இஞ்சிடீ குடிப்பதற்கிலார்
அதன் காரணம் ஈதென்ற அறிவுமிலார்!

இஞ்சி பொறுக்குவதில்லையே
இந்த டீகேட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ஆகவே, என் சொல்புதிது வாசகர் வட்டெழுத்தாளர்களே!

இஞ்சி ஒரு விதை செய்வோம்…

நாமிடும் இஞ்சி நமதென் பதரிந்தோம்!
அரிந்தபின் அதனை இடித்துச் சாறு பிழிவோம்.

நமக்குத் தேவை இஞ்சி ஸ்வராஜ்! ஆஹாங்!!

சும்மாவா சொன்னார்கள் கிழவனும், பாரடீயும்?

மோதியின் பாசிஸ அரசு பாயச அரசானாலும் பரவாயில்லை – ஆனால் எம் பிறப்புரிமையான இஞ்சிடீயை அது எதிர்த்தால் – இந்தியாவின் ஊடுபாவுகளை ஊடுகண்ணிகளாக மாற்றி ஊற்றிமூடி வூடு கட்டவைத்துவிடுமே, இலக்கியக்காரனாகிய என்னுடைய அறச்சீற்ற மனச்சாட்சீ!

மதவெறி பாஜகவை ஒழிக்க என் நம்பிக்கை நட்சத்திங்களான கலககாசகாமனாரையும் ராஹுல் காந்தியையும் போற்றி அடுத்த பதிவைத் தேற்றவேண்டும்.

(முக்கியக்குறிப்பு1): இஞ்சி கொடியில் காய்ப்பதா, மரத்தில் காய்ப்பதா அல்லது ஏதாவது சீனாக்கார ப்ளாஸ்டிக் வஸ்துவா என ‘பாலா’வை, ரகசியக் கமுக்கமாகக் கேட்கவேண்டும்)

(முக்கியக்குறிப்பு2): கண்டிப்பாக, நான் மறக்கக்கூடாது: ‘இஞ்சி பற்றாக்குறை’யைப் பற்றி அன்பர் உள்வட்ட ‘பாலா’விடம் ஒரு உள்குத்தில்லாத ஆய்வுக் கட்டுரை எழுதச் சொல்லவேண்டும். ஆனால், அதில் ‘மண்டபத்தில் இருப்பவனிடம் இருந்து வாங்கியது’ அதுஇது என அவர் வெறுப்பாகவும் கிண்டலாகவும் எழுதாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

நீதிபோதனை: நீங்கள் அளவுக்கதிகமாகச் சாப்பிட்டு வாயுத்தொல்லை அதிகமாவதில் இருந்து, நீங்கள் இணையத்தில் நிறைய நேரம் (இப்படி) செலவுசெய்வதால் உங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் வரைக்கும் ஒரே காரணம் – மோதியின், பாஜகவின் ஹிந்துத்துவா அரசின்றிப் பிறிதொன்றில்லை. நன்றி.

சரி.

ஐயய்யோ! இப்போது எனக்குக் கொடிய பயம்! :-(

என்னவோ ஜெயமோகன் அவர்களையும் அவருடைய கட்டுரை எழுதும் முறைமையையும் ஏகத்துக்கும் புகழ்ந்து எழுதிவிட்டேனே தவிர, இந்த அனிருத்தன் மறுபடி இங்கே பிரசன்னமாகி என்னை மேற்கொண்டு என்னவெல்லாம் திட்டப் போகிறாரோ என்பதை நினைத்தால் கலக்கமாகவே இருக்கிறது.

ஆனால் குறைந்த பட்சம் அதன் கடுமையைக் குறைக்க, அன்பர் சுரேஷ் வெங்கடாத்ரி அவர்களை அழைக்கிறேன் – ஏனெனில், அனிருத்தனார் முன்னமே இவரையும் சதிகாரராக்கியிருக்கிறார்; ஆகவே, சுரேஷ்வெங்கடாத்ரி அவர்கள், எங்கிருந்தாலும் உடனடியாக 108 பிடித்து வந்து, குறைந்த பட்சம் என் நடுங்கும் கையைப் பிடித்துக்கொண்டு, ஆதூரமாக நாலு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்வாரென நம்புகிறேன். :-(

-0-0-0-0-

ரூமர்சந்திரனார் பக்கம் மறுபடி வருவோம்.

இவர் க்ரிக்கெட் பற்றி ஆர்வலத்தனமாக இயங்குபவர் என அறிவேன் – ஆனால், எனக்கு இந்த விளையாட்டின்மீது ஆர்வமோ மரியாதையோயில்லை ஆகவே பொதுஅறிவுமில்லை என்பதால் இதனைச் சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.

மற்றபடி இவர் எழுதியுள்ள புத்தகங்களில் கொஞ்சமாகத் தேறுவது – திஸ் ஃபிஸ்ஷ்ஷர்ட் லேண்ட் புத்தகம் தான் – பாரதத்தின் சுற்றுச்சூழலிய வரலாற்றைக் குறித்த புத்தகம். அன்பர் மாதவ் காட்கில் அவர்களுடன் எழுதப்பட்டது இது. ஆனால், இதிலும் ஏகப்பட்ட எதிர்மறைச் சொதப்பல்கள்; தேடித்தேடி எதிர்மறை எடுத்துக்காட்டுகளைக் காட்டிய வேகத்துக்கு, ஒன்றிரண்டு நேரிடை, அழகான (இவை பலப்பலப்பல என அமோகமாக இருந்தாலும்) எடுத்துக்காட்டுகளை – பாரதம் சுற்றுச்சூழலைப் பேணிய வரலாறுகளையாவது குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் பாவம், இந்த ரூமர்சந்திரர், ஒரு காமாலைக் கண் சாக்கடை ஆய்வாளர். எதையும் சந்தேகத்துடன், ஆனால் தரவுகளில்லாமல், நோக்கு(!)பவர்.

ஆனால் – இவருடைய ஆராய்ச்சிகளும் தலகாணி தடிமன் ஸைஸ் காந்திபுகழ் புத்தகங்களிலும் (அவருடைய தஹிந்து இணையக் கட்டுரைக்குப்பைகளையே விடுங்கள்!) உள்ள ஏகப்பட்ட பிழைகளும் அடிப்படைகளற்ற கருத்துக்கட்டுமானத் தாவல்களும் – ஆழ்ந்துபடித்தால் ஓக்காள வாந்தியையே வரவழைக்கும்! இரண்டுமூன்று முறை இந்த குஹா எழுதிய காந்தி புத்தகங்களுக்கு அடிக்குறிப்புகளுடன், காத்திரமான தரவுகளுடன் எதிர்வினை கொடுக்கலாம் என ஆரம்பித்து, பின் சலிப்புடன் விட்டிருக்கிறேன்.

இந்த அரைகுறையாருக்கு – தமிழகத்தில் அவரைத் தூக்கிப்பிடிக்க ஒரு இயக்கம். காந்தி பூந்தி அறம் கிறம் எனக் கதையடித்துக்கொண்டு அற்பத்தனங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் ஒரு குழு இருக்கிறது. கறாரான மதிப்பீடுகளை வளர்த்துக்கொள்ளாத, படிப்பறிவை விரிவு படுத்திக்கொள்ளாத, ஆராதனைச் சராசரி சோம்பேறிகளை ஊக்குவிப்பதுதான் இதன் அதிக பட்சப் பங்களிப்பு.

இந்த நபரின் தனிப்பட்டமுறை அற்பத்தனங்களை எல்லாம் எழுத ஆரம்பித்தால் அது தனிமனிதபிம்ப கருத்துச்சிதைவு (அதுதாங்க, கேரக்டர் அஸாஸினேஷன்) அளவுக்குப் போய்விடும். எனக்கும் அவருக்கும் பொதுவான அறிமுகங்கள் சொல்வதையெல்லாம் கறாராக கவனித்தால், அவரை அதிகபட்சம், ஒரு லும்பன் என்றளவே மதிக்கமுடியும்.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் அப்படித்தான்; ஆகவே, அவருடைய வெளியில் வரும் அல்லது அவரே சுற்றுக்கு விடும் அயோக்கியத்தனங்கள் குறித்துமட்டுமே அவருடைய கருத்துலக பொறுக்கித்தனத்தை மட்டுமே – அதிலும் அதில் ஒன்றைப் பற்றி மட்டுமே மேற்கண்டபடி கண்டபடி எழுதியிருக்கிறேன்.

நன்றி.

பின்விண்ணப்பம்: யோவ் சுரேஷ் வெங்கடாத்ரி! உடனே வரவும்!

5 Responses to “ராமச்சந்திர ‘Rumourchandra’ குஹா எனும் குயுக்திமூளைக்காரரின் கடைந்தெடுத்த பொய்கள், மோதி (+ஊக்கபோனஸாக ஒரு ஜெயமோக இஞ்சிநீதிக் கதை!)”


Comments are closed.