பாஜக அரசு, மோதி, வளர்ச்சி, விவரங்கள், மாரிதாஸ் – சில குறிப்புகள் (2/n)
March 26, 2019
இப்பதிவு வரிசையில் என்னென்ன விஷயங்களின் குறிப்புகள், எப்படி வரப்போகின்றன என்பதற்கான முன்னுரைக் குறிப்புகள்.
இதன் முதல் பகுதி. இதனை அவசியம் படித்தபின் இங்கேயிருந்து படிக்க ஆரம்பிக்கலாம். இங்கே குறிப்புகளைக் குறித்த மேலதிக விவரங்கள்.
0. நான் நடுநிலைமைக்காரன் அல்லன். அடிக்கோடிட்டுக்கொள்ளவும்.
அதுவுஞ்சரி இதுவுஞ்சரிதேன் என அல்லாடுபவன் அல்லன். எது சரி எது தவறு என (எனக்கு) ஐயம்திரிபறத் தெரிந்தால் மட்டுமே, மேலே செல்வேன். நான் சாம்பல் நிறத்தின் உபாசகனானாலும், காங்கிரஸ்+திமுக+இடது ஆதரவாளன் அல்லன் – முழுமூச்சு எதிர்ப்பாளன்; ஏனெனில் அது – கொள்ளைக்கார, தங்கள் சுயநலத்தை, குடும்பநிதிநலத்தை – பாரதநலனுக்கு மேலே வைத்துக் கயமைக் கபடியாடும் கட்சிகளின் திரள். ஏமாந்தால் நம்மையே கூறுபோட்டு விற்றுவிடுவார்கள். இவற்றைப் பொறுத்தவரை, கடும் முயற்சி செய்தாலும் – இவர்களில் ஒரு நல்ல ஜீவனைக் கூடப் பார்க்கமுடியாத சோகம். (நல்லகண்ணு போன்ற ஓரிருவர் இருக்கலாம் – ஆனால் அவருக்குச் சகவாத தோஷம் – தன்னலனுக்காக இல்லாவிட்டாலும், சிலசமயங்களில் கட்சி நலனுக்காகப் பொய் சொல்லி விடுகிறார்!)
ஆகவே நான், இத்தீவட்டிக்கொள்ளைக்கார்களுக்கு ஒரு சரியான மாற்றாக — பாஜக-தான் பாரதத்துக்கு உரிய, ஏற்ற, உயர்மட்டங்களில் துளிக்கூட ஊழலற்ற – நம் பாரதத்தை நிர்வகிக்கத் திறமையும் அனுபவமும் மிகுந்த கட்சி என நினைக்கிறேன் – ஆகவே.
1. இந்தக் குறிப்பு வரைவுகளில் பலப்பல மிகச் சிறிதாகவே இருக்கும். எனக்குச் சக்தியும் அவகாசமும் இருக்கும்போதெல்லாம் இவை வரும். பயம்வேண்டேல்! (நிம்மதிதானே?)
2. குறிப்புகள் கீழ்கண்டவைபற்றியே சுற்றிச்சுற்றி இருக்கும் – தரவுகளுடன், சரிபார்க்கப்பட்டவை மட்டுமே. விவசாயம், மேலாண்மை, அதிகாரம்/நிர்வாகம், வங்கிகளும் பிற நிதிநிறுவனங்களும், எரிசக்தி, பெட் ரோலியம், கனிமப் பொருட்கள், கூட்டுறவு, தனியார்/அரசு நிறுவனங்கள், சட்டம்-ஒழுங்கு நிலவரம், பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல்-மாசுகட்டுப்பாடு, உள்நாட்டு/வெளிநாட்டு வணிகம், காடுகள்-உயிரினங்கள், ஆரோக்கியம், வீட்டுவசதி, தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு-தொழிலாளர் நலம், பொதுநன்மைக்கான-சமூகநலத் திட்டங்கள், விளையாட்டுகள், தகவல்தொடர்பு, சுற்றுலா, கிராமப்புற-நகரப்புற விஷயங்கள், ஊடகங்கள், உபயோகிப்பாளர்/நுகர்வோர் விஷயங்கள் … …
3. சென்ற 2018 மே வரை பலப்பல முறை கல்வி தொடர்பாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு (தில்லியில் உள்ளவை) படையெடுத்திருக்கிறேன். சிலசமயம் பிற துறைகளின் உயரதிகாரிகளுடனும், தனிப்பட்ட முறையிலும் பேசியிருக்கிறேன். பலப்பல மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறேன். பெரிய்யபெரீயச் சட்டிகளில் பெருங்கழுதைகள் பலவற்றை ஓட்டியிருக்கிறேன்; ஆகவே, முடிந்தவரை அவை பற்றிய விவரங்களையும் இணைப்பேன்.
4. இக்குறிப்புகளில் — உலகளாவிய, நேர்மைமிக்க சான்றோர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட தரவுகள், ஆராய்ச்சிகள், புள்ளிவிவரங்கள் சார்ந்த கருத்துகள் (திரித்தல்கள் அல்ல – ஏனெனில் நான் ராம்குஹாவோ என்.ராமோ அல்லன், வெறும் ராம் தான்!) இருக்கும். (ஆகவே, சர்வநிச்சயமாக — த எகனாமிஸ்ட், வாஷிங்க்டன்போஸ்ட், ந்யூயார்க்டைம்ஸ், இந்தியாடுடே, தஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா வகைகள் கருத்தில் கொள்ளப்படமாட்டா!)
5. நான் மிகவும் மதிக்கும் (களப்பணி எழவு விவகாரங்களில் நான் ஈடுபடும்போது தெரிய வந்தவைகள்) + ஜொலிக்கும் திட்டங்கள் பற்றியும் – எடுத்துக்காட்டாக உஸ்தாத், ஸ்வச்சபாரத், முத்ரா போன்றவை வரலாம்.
6. நம் தமிழகத்துக்கெனத் தனியாக விவரங்களைச் சேகரிக்கவில்லை – ஆனால் அதற்கும் முயல்வேன்; என்னைப் பொறுத்தவரை, அகில பாரதத்துக்கும் கிடைத்துள்ள பல நல்லவிஷயங்களை, முன்னேற்றத்தைவிட – நம் தமிழகத்தில் நிறைய விஷயங்கள், சிலபல துறைகளில் நிகழ்ந்திருக்கின்றன.
இதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
-0-0-0-0-0-
இப்பதிவுகளுக்குத் தொடர்பான முக்கியமான ஒரு பரிந்துரை (இளைஞர் மாரிதாஸ் அவர்கள் செய்துவரும் பணி குறித்து): ஓரிரு வருடங்கள் முன்னால் இவருடைய ஒரு பேச்சைக் கேட்டிருக்கிறேன். அப்போது அவர் புடம் போடப்படவில்லை. ஆர்வமும் தர்மாவேசமும் சிலபல புள்ளிவிவரங்களும் இருந்தனவே ஒழிய, அவரிடம் பேச்சுத் திறமை இருந்திருக்கவில்லை.
…மறுபடியும் மறுபடியும் ஒன்றையே பலதிக்குகளிலிருந்தும் சொல்வது. நாஞ்சொல்றது புரியிதுங்க்ளா. சரீங்க்ளா. அப்டியே வெச்சுக்குவோம். இப்ப பாப்போம். வார்த்தைத் தொகுப்புகள் சொற்றொடர்களுக்கு நடுவே பெரும் மௌன இடைவெளிகள். பிறழ் உச்சரிப்புகள். பேச்சுவாக்குத் தமிழும் சொற்பொழிவுத் தமிழும் கலந்துகட்டல். என்றெல்லாம். இளைஞரின் அசாத்திய உழைப்பும் நோக்கமும் போற்றப்படவேண்டியது, அவருடைய அறிவுரை கேட்டுக்கொள்ளப்பட வேண்டியவைதான் என்றாலும் – அவர் அப்போதுதான் பேச்செனும் கலையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தார் என நினைக்கிறேன். (கவனிக்கவும்: நான் ஒரு பெரிய்ய மேடைப் பேச்சாளனோ கடும்வுழைப்பைக் கொடுத்து தேசத்துக்கு என்னை அர்ப்பணித்துக்கொண்டவனோ கிடையாது; வெறும் சாதாரண வழிப்போக்கன்தான்!)
…ஆனால், அண்மையில் நண்பர் ஒருவர் மாரிதாஸ் அவர்களைப் பரிந்துரைத்தார், அவசியம் பார் என்றார்; நானும் யூட்யூப் தளத்துக்கு ஒடிப்போய்ப் பார்த்தேன். (அவற்றில் ஒன்று: சீமான் vs மாரிதாஸ் | யார் சொல்வது சரி? | Critique of NTK’s Manifesto by Maridhas)
நான் பார்த்த இரண்டுமூன்று வீடியோக்களில் அவர் ஜொலிக்க ஆரம்பித்திருப்பது புரிகிறது; இதற்குக் காரணங்கள், அவருடைய தொடரும் அடிப்படை நேர்மையும், கடும் பயிற்சியும், விஷயங்களைத் தொகுத்துக்கொள்ளும் திறனும். இம்மாதிரி அறவுணர்ச்சிசார்ந்து இயங்கும் இளைஞர்கள் நேரடி அரசியலுக்கு வரமுடிந்தால் அது பாரதத்துக்கு நன்மை என்பது அடியேனின் கருத்து.
மாரிதாஸ் அவர்களே! பொலிக, பொலிக! :-)
பார்க்கலாம் – இந்தப் பதிவுவரிசை எங்கேபோகிறதென்று…
- ராமச்சந்திர ‘Rumourchandra’ குஹா எனும் குயுக்திமூளைக்காரரின் கடைந்தெடுத்த பொய்கள், மோதி (+ஊக்கபோனஸாக ஒரு ஜெயமோக இஞ்சிநீதிக் கதை!) 25/03/2019
- 7½ – ½ = 7½, குளுவானியம், குறிப்புகள் (+எங்கு சென்றாலும், முட்டி மோதினாலும் தப்பமுடியாத மோதி!) 22/03/2019
- நரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி, மறுபடியும், 2019லும்! 21/03/2019
March 26, 2019 at 10:21
Hi,
youtube link is broken. the last character ‘4’ is missing from the url.
Correct url: https://www.youtube.com/watch?v=5flmsndREC4
March 26, 2019 at 10:37
thanks siree! will correct it pronto.
March 26, 2019 at 10:23
test test
March 26, 2019 at 10:45
(slightly edited version of a response from a pal)
:)
He’s a passionate lad, needs to mature as a speaker and politician. He needs to get over his teacher like style. But he’s clear about his audience. I saw good crowd of college student like people wherever he speaks and there’s a huge fan following along college going kids with selfies and all.
He listens to people. I met him couple of times and am donating to his cause. Looking forward to seeing him as a good successful politician.
March 26, 2019 at 15:33
ராம்,
இதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தோம். மோதி முதல்வராக இருந்த போது செய்தது குறித்த நல்ல ஒரு தொகுப்பு இந்த தளத்தில் உள்ளது. இப்போது பிரதமர் ஆன பிறகு.
March 27, 2019 at 13:16
[…] […]
March 28, 2019 at 11:30
Dear Sir,
Happened to see a video of Maridhas talking on the hate politics of our state, was so happy to know that someone like him is there to speak out the truth in the deranged political scenario of TN. He has a good reach among the students it seems, welcome relief! As you say, we still do have hope I suppose.
March 30, 2019 at 11:40
மாரிதாஸ் அவர்கள் அயராது ஆற்றி வரும் ஆக்கப்பூர்வமான தேச நலன் சார்ந்த பணிகளை பாராட்டியமைக்கு மிக்க நன்றி