7½ – ½ = 7½, குளுவானியம், குறிப்புகள் (+எங்கு சென்றாலும், முட்டி மோதினாலும் தப்பமுடியாத மோதி!)

March 22, 2019

ஒரு அன்பருக்கு நான் எழுதியது பிடிக்கவில்லை, விலகுகிறேன் என்றார்; இது நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் சோகமில்லை – ஆனால், தன்னைக் கழித்து, இனிமேல் ஒத்திசைவைப் படிக்கப் போவது ஆறரை பேர் மட்டுமேதான், என நீதி வழங்குகிறார்.  :-)

ஹஹ்ஹா! ஆனால் அவருக்குத் தெரியாது ஏழரையிலிருந்து எந்த அரையைக் கழித்தாலும் ஏழரைதான் மிஞ்சும். அதனுடன் எந்த எழவைக் கூட்டினாலும் அதே ஏழரையிலேயே நிற்கும். அது ஒரு மேஜிக் எண். பாவம் அவருக்கு,  இந்த அடிப்படை விஷயம் புரியவில்லை. என்ன செய்வது சொல்லுங்கள். :-(

சரி. இளம் அன்பர் கோபப்பட்டு எழுதிய மின்னஞ்சலும், கோபப்புள்ளிகளில் சிலவற்றுக்கு என் பதிலும் கீழே; ஹ்ம்ம்… பொதுவாக அனுமதி கேட்டுக்கொண்டுதான் மின்னஞ்சலையோ அல்லது சாராம்சத்தையோ பதிப்பேன் – ஆனால் இளைஞர் என்னுடன் டூ விட்டுவிட்டார். ஆகவே!

இந்த இளைஞரின் பிரகாசமான எதிர்காலத்துக்கு அவரையும் என்னையும் வாழ்த்தவும்.  விட்டுவிடுதலையாகி நிற்கிறார் அந்தச் சிட்டுக்குருவியைப் போலே!

-0-0-0-0-0-

> திரு. ராமசாமி அவர்களுக்கு,
>  
> >> நமக்கு எந்த துறைகளில் ஓரளவாவது ஆழம் இருக்கிறது?
> >> அந்த ஆழங்களை அறிய நாம் கொடுத்த விலை என்ன?
> >> நாம் அறியாத துறைகள் யாவை?
> >>அவற்றின் அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வது எப்படி?
>
> மேற்கண்ட கேள்விகளை நீங்கள் மோதியைப் பார்த்தும் கேட்கலாம்.
>
சரி. நான் அவரைப் பார்க்கும்போது கேட்கிறேன். ஆனால் அவருடைய உலக ஞானத்தின் அளவு என்பது நம்மிருவருக்கும் சேர்த்து இருப்பதை விட (ஏன், ஒத்திசைவு சகஏழரைகளின் மொத்த ஞானத்தையும் செயலூக்கதையும் விடவும்!) மிக அதிகம் என்பது எனக்குத் தெரியும்.
> #1
> துறை சார்  அறிவு ஓரளவாது  இருந்திருந்தால் அவர் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் HAL க்கு பதிலாக Reliance Defense  ஐ தேர்வு செய்திருக்கமாட்டார்.
>
அப்படியா என்ன? உங்கள் கருத்து சரியில்லை. நீங்கள் விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். கருத்துதிர்ப்பதற்குமுன் அதற்காக உழைக்கவேண்டும். ஒரு தொடக்கத்துக்காக – அபிஜித் ஐயர்-மித்ரா  எனும் இளைஞரும், துறை விற்பன்னருமான நபரிலிருந்து ஆரம்பிக்கலாம். ஆதாரபூர்வமாகப் பேச, தாங்கள் போகவேண்டிய தூரம் அதிகம்.
> #2
> டைனோசர்கள் பிரம்ம தேவன் படைத்தது , கௌரவர்கள் டெஸ்ட் டியூப் குழந்தைகள், ஐன்ஸ்டைன் , நியூட்டன் கருத்துகள் எல்லாம் பொய் என்ற பைத்தியக்காரத்தனமாக பேச்சை எல்லாம் 2019 இந்திய அறிவியல் மாநாட்டில் அனுமதித்திருக்கமாட்டார்.   (அதிலும் ஒரு விஞ்ஞானி புவி ஈர்ப்பு விசைக்கு “நரேந்திர மோடி அலைகள்” என்று பெயர் சூட்டுவாராம். அடக் கொடுமையே! )
>

இது எனக்கும் சிரிப்புதான். ஆனால் இதற்கும் நரேந்த்ரமோதி அவர்களுக்கும் ஒரு சுக்குக்கும் நேரடித் தொடர்பேயில்லை. அந்த அமர்வுகளை நடத்துவது ஒரு ஸொஸைய்டி.

‘அலைகள்’ பற்றி எழுதிப் பேத்தினவர் ஒரு தமிழஆசாமி – கண்ணன் ஜெகதாக கிருஷ்ணன். வேதாத்திரி மகரிஷி வாழ்க வளமுடன் கட்சி. அவருக்கு பிஹெச்டி ஆலோசகர்களாக இருந்த ஆஸ்த்ரேலிய விக்டொரியா பல்கலைக்கழக பேராசிரிய அரைகுறைகளான அக்தர் கலாமையும் அலாவுத்தின் ஸெயக்கையும் ஆள்வைத்து அடிக்க உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். ஒவ்வொரு விஷயத்திலும் மீட்டிங்கிலும், ஏன் மதப் புத்தகத்திலும்கூட இப்படி நகைச்சுவையாக, பல சமயம் கோரமாக இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் லூஸ்ல விட்டுவிடவேண்டும். சரியா?

நீங்கள் உங்கள் கருத்துகளில் தேவையேயற்று மதத்தை இழுத்ததால் – உங்கள் சார்பாகவே உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்.

பைபிள் எனும் க்றிஸ்தவ முதன்மை மதப்புத்தகத்தில் – யேஸ்ஸுவே தான் அமைதிக்காக வரவில்லை, வாளுடன் ​(அல்லது வாளுக்காக)​ வருகிறேன் என்றெல்லாம் சொல்லவில்லையா? இம்மாதிரிப் பலவரிகள் இல்லையா என்ன?


மேற்கண்ட ​மத்தேயு 10:34 வசனத்தைப் படித்துவிட்டு க்றிஸ்தவர்களெல்லாம், யேஸ்ஸு சொன்னார், மேத்யூ சொன்னார் எனக் கையில் வீச்சறிவாளுடனா அலைகிறார்கள், மதமாற்றம் செய்ய?

பெரும்பாலான க்றிஸ்தவர்கள் இம்மாதிரி வன்முறை அழிச்சாட்டிய வரிகளை லூஸ்ல வுட்டுவிடுவதில்லையா?

அதேபோல கொர்-ஆன் சொல்கிறது, மொஹம்மத் நபி சொன்னார் என முஸ்லீம்கள் அனைவரும் கையில் வாளை ஏந்தி அல்லாஹ்வை நம்பாதவர்களின் தலைகளைச் சீவிவிடுகிறார்களா அல்லது ஜிஹாத் செய்கிறார்களா? பெரும்பாலானோர் அவற்றையெல்லாம் கண்டுகொல்லாமல்தானே லூஸ்ல வுட்டுவிடுகிறார்கள்?

அதைப்போலத்தான் இளைஞரே – இதையும், நீங்கள் விடவேண்டும். எங்கோ பொருட்படுத்தக்கவரல்லாத யாரோ சொல்வதற்கெல்லாம் புலம்பலோ பொங்கலோ தேவையா?

> #3
> பொது மேடையில் எமெர்ஜென்ஸியைக் கொண்டுவந்தது கூட யார் என்று தெரியாமல் உளறிக்கொட்டியிருக்கமாட்டார்.
>

இதை நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. அனேகமாக, நீங்கள் பிறப்பதற்கு முன்னமே நடந்த எமெர்ஜென்ஸி அழிச்சாட்டியங்களின்போது, அதனைக் காத்திரமாக எதிர்த்தவர்களில் ஒரு சிறு தலைவராக நரேந்த்ரமோதியும் இருந்தார். அவர் ஒரு ஸர்தார்ஜிபோல வேடமிட்டு அலைந்த காலமெல்லாம் இருந்தது.

தயவுசெய்து விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கு உழைக்கவும்.  பின்னர் தாராளமாக உளறிக்கொட்டலாம்.
>
> >> நமக்கும் நம் சகாக்களுக்கும் ஒரு ரூல் பிறருக்கு இன்னொரு அளவுகோல் எனப் பேடி நடனமாடாமை
> >> சினத்தை முறைகேடாக (நமக்குப் பாதுகாப்பாக இருந்தால், யாரும் தெகிர்யமாக பதிலுக்கு நம்முடன் பொருதமாட்டார்கள் என்றால் மட்டும்) வெளிப்படுத்துதல் எனும் குழியில் விழாமை
>
> திராவிட தலைவர்கள் மட்டுமின்றி, தமிழக பிஜேபி தலைவர்கள் H. ராஜா மற்றும் S. Ve. சேகர் போன்றோக்கும் மிகவும் பொருந்தும்.
>
> உதாரணம் #1 H.ராஜா –  கோர்ட்டாவது மயிராவது என காவல் துறையிடம் உதார்விடுவது, பின்னர் கோர்ட்டில் ஆஜராகி பம்முவது  
>
> உதாரணம் #2 S.Ve.சேகர் – பெண் பத்திரிக்கையாளர் பற்றிய ட்வீட்டை forward செய்துவிட்டு பின்னர் பம்முவது
>

நான் கருத்துதிர்ப்பாள அறிவுஜீவிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் வேறெங்கோ போக ஹைஜேக் செய்துவிட்டீர்கள், பரவாயில்லை.

ஆனால் – எனக்கு இம்மாதிரி விஷயங்கள் தெரியாது. அறிந்துகொள்ள அக்கறையுமில்லை. மேலும், நீங்கள் சொல்லும் சிலபல விஷயங்கள் நம்பகத்தன்மை கொண்டனவாக இல்லைவேறு. எனக்கு கண்டவிஷயங்களிலும் தொடர்பற்ற ஹேஷ்யங்களுடனும் மாரடிக்கக் கொடுப்பினை இல்லை.

ஆனால் மோதிக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு?

அன்பரே, ஒரு முகாந்திரமும் இல்லாமல், மோதியை நீங்கள் வெறுக்கலாம் – அதற்கெல்லாம் ஆதாரம் எல்லாம் தேவையில்லை; ஜமாயுங்கள், சரியா? பிஏகிருஷ்ணன்அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள் – அவர் இதில் விற்பன்னர், உங்களுக்கு உதவுவார். பெரியவர்.

> >> கீழோரை (முடிந்தவரை மரியாதையுடன்) மிதிப்பது எப்படி?
>
> ஹிந்தி தெரியாத நான் ஹிந்துவாக இல்லாத நான் கீழோன் தானே ?
>

அப்படிச் சொன்னேனா? தரவுகள்? ஹிந்தி தெரியாதவன் கீழோன், ஹிந்துவாக இல்லாதவன் கீழோன் எனச் சொன்னேனா?

தயவுசெய்து உங்கள் ஆவேசப் புளுகுமூட்டையை இறக்கி ஆசுவாசம் தேடவும். மிகவும் நுரை தள்ளுகிறதுபோல, பாவம்.

> அது என்ன சார் உங்கள் தலைப்பில் “சௌகிதார்” என்ற வார்த்தை ? காலவன் என்று அர்த்தம் போல. எனக்கு ஹிந்தி தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. உறவாட தமிழ், உத்தியோகத்திற்கு ஆங்கிலம் என்று இருந்துவிட்டுப் போகிறேனே?
>

ஐயா காவலன் வேறு, காலவன் வேறு – மேலதிகமாகக் குழப்பிக்கொள்ளவேண்டா.

ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் குட்டையில் ஊறிய மட்டையாக நீங்கள் இருக்கக்கூடாது, குண்டுசட்டியில் கழுதை ஒட்டக்கூடாது என்று மட்டும் நான் கோரிக்கை வைக்கிறேன்; ஏனெனில் நீங்கள் இளைஞர் – உங்களுக்குரிய பிரகாசமான எதிர்காலத்தை எட்டி உதைக்கவேண்டா!

> என் மண்டைக்குள் இந்த பிஜேபி ஹிந்தியையும் காவியையும் ஏன் திணிக்கப் பார்க்கிறது?
>
யார் செய்கிறார்கள் அப்படி? ஆனால் காவி ஒரு நிறம் – பாரதப் பாரம்பரியம் கொண்டது; மேலும் ஹிந்தி  பரவலாக உபயோகப்படும் ஒரு மொழி – இவற்றையெல்லாம் வேண்டாம் என்றால் சரி – ஆனால் நுரைதள்ள வெறுக்கவேண்டிய அவசியம்தானென்ன?
> உங்களின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். அதை நீங்கள் எழுதிய கட்டுரை வழியே கேள்விக்குள்ளாக்கியதற்கு மிக்க நன்றி!
>
எந்தக் கழுதைமேலும் (அடியேன் உட்பட!) மரியாதை வைக்கவேண்டிய அவசியமே இல்லை.  மேலும் எனக்கு நன்றாகவே என்னைப் பற்றித் தெரியும்; பொலிய வாழ்த்துகள்!
> ஏழரை ஆறரை ஆனது!  
ஐயா இல்லை – 7½ – ½ = 7½தான், கவலை வேண்டேல். இதற்கு ஒத்திசைவு கணிதமுறை எனப்பெயர்.
>
> Thanks & Regards
>

சரி – ஒன்றிரண்டு விஷயங்கள்:

1. இவ்வளவு நாள் ஒத்திசைவைப் படித்தும், எழுப்பப்பட்டிருக்கும் உங்களுடைய அடிப்படைக் கேள்விகள் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றன. ஆனால் இவற்றுக்கு நான் பழக்கப்பட்டுவிட்டேன். எனெனில் இன்னொரு நபரும் இப்படி, உங்களைப்போலவே ‘மாற்றி’ யோசித்திருக்கிறார், பாவம்! இத்தனைக்கும் இவருக்கு 60+ வயது – இருந்தாலும் – பிஏகிருஷ்ணன் அவர்களிடம் எனக்கு ஏன் பொறாமைஎனக் கேட்கிறார்… காலத்தின் கோலம்தான்!

2. மேலும் – உங்களுடைய தற்கால மனப்பான்மைக்கு முட்டுக்கொடுப்பதற்கு – மேலதிக தரவுகளேயற்ற மோதிவெறுப்பைப் பெறுவதற்கு, ஏன், என்னைத் திட்டுவதற்கேகூடத் தோதான சிலபல தளங்களைப் பரிந்துரைக்கிறேன்; முடிந்தால் ஆங்கே செல்லவும். பிஏகிருஷ்ணன், வினவு, யுவகிருஷ்ணா, விகடன், தஹிந்து.

3. இளைஞரே! தாங்கள் ஒரு குளுவான் அல்லர் எனத்தான் நினைக்கிறேன். ஏதோ கண நேரப் பிறழ்வில் இப்படி ஒரு குளுவானிய எதிர்வினை கொடுத்திருக்கிறீர்கள் என நம்பவே ஆசை. ஆனால், எனக்குத் தெரியும் – சும்மானாச்சிக்கும் கருத்துதிர்த்து நக்கல் கருத்துகளைக் கொட்டுவது எளிது. ஆனால் எதையாவது காத்திரமாகச் சாதிப்பது, கொஞ்சம் கடினம். அதேசமயம், அப்படிச் சாதிப்பவர்களின் மீது, பாதுகாப்பான இடத்தில் அனாமதேயமாக நின்றுகொண்டு, தீர ஆலோசிக்காமல் உணர்ச்சிவசப்பட்டுக் கல்லெறிவது மிகச் மிகச் சுலபம். உங்களுக்கு உங்கள் வழி.

4. உங்களைப் போன்ற இளைஞர்கள் என்னுடன் கொஞ்சம் ஓடிவந்து என்னைத் தாண்டி எகிறிக்குதித்து பலப்பல அறிவுப் புலங்களையும் அறவழிக் குறிக்கோட்களையும் அடைந்து பெரிய அளவில் சாதனையாளர்களாகவேண்டும் எனத்தான் எனக்குப் பேராசை. ஆனால், நீங்கள் நடுவில் விட்டுவிட்டுப் போனாலும் ஒரு சுக்குப் பிரச்சினையும் இல்லை; இது இருவழிப்பாதை.

5. எது எப்படியோ – நீங்கள் ஒரு சுற்று சுற்றிவிட்டு, படிப்பறிவும் மேலதிக அனுபவ அறிவும் பெற்று – மேலும் கற்று – விருப்பமிருந்தால் திரும்ப வாருங்கள்; நான் இங்கேதான் இருப்பேன்.

பொலிக, பொலிக…  எங்கிருந்தாலும் வாழ்க! வேறென்ன சொல்ல!

நன்றி!