புதுக்கல்லூரியின் அஹ்மது ஜுபைர், பாரதத்தில் அரேபிய தாக்கம், மதறாஸா கல்வி, அமோக அட்ச்சிவுடல் – குறிப்புகள்

February 7, 2019

வாழ்க்கை சுத்தமாகவே வெறுத்துப்போன சமயங்களில் நண்பர்களே வேண்டாம், போங்கடா எனத் தோன்றிவிடுகிறது. அவர்கள் நல்லமனதுடையவர்கள்தாம், படித்த பண்பாளர்கள்தாம். தமிழின்மீதும் பாரதத்தின்மீதும் வேண்டுமளவு கரிசனம் கொண்டவர்களும்கூட.

ஆனாலுமேகூட…

…அவர்கள் படித்துக் கொதிக்கும் – அவர்களை விரக்தியடையவைத்து வாழ்க்கையில் விளிம்புக்கே தள்ளிவிடும் விஷயங்களை, ‘டேய், நீ இதப் பட்ச்சியா? ஸிர்ப்பாக்க்கீது இல்ல?’ அல்லது ‘இவ்னுங்கோ இப்டீ எள்திக்கிறானுவோ, ஸர்யான்னிட்டு சொல்லுபா!’ என – பொதுவாகவே நொந்துபோய் அமைதியில் ஆழ்ந்து இருக்கும் என் பக்கமும், என்னவோ நான் வேறுவேலைவெட்டியற்று இருப்பவன்போலப் பரிமாறி என் ரத்த அழுத்தத்தையும் ஏகத்துக்கும் ஏற்றிவிடுவது எந்தவிதத்தில் நியாயம், சொல்லுங்கள்?

இப்படித்தானே.

சென்னை புதுக்கல்லூரி அரபித்துறை துணைப் பேராசிரியர் முனைவர் க. மு. அ. அஹ்மது ஜுபைர் அவர்கள் எழுதி, ‘தமிழ் ஹிந்து’ எனும் அற்பப் பரப்புரை தினசரியில் வந்த ஒரு கட்டுரை எனக்கு வந்து சேர்ந்தது!

http://www.thenewcollege.in/aided-shift-1-staff-department-of-arabic.php

பாவிகள், என்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டேனென்கிறார்கள். :-(

https://tamil.thehindu.com/opinion/columns/article25769528.ece

சரி. அவருடைய அறியாமைக்கு அப்பாற்பட்டு – இந்தப் பேராசிரியரின் நல்லெண்ணம், நல்லிணக்கம் வகையறாக்களை நான் வெகு கஷ்டப்பட்டுப் புரிந்துகொள்ள முயற்சித்தாலும், இதைப் படித்துத் துணுக்குற்ற பின் மனத்தைச் சமனம் செய்துகொண்டு – அவருக்கு அக்கட்டுரை தொடர்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். 2018டிஸெம்பர் கடைசி வாரத்தில் இது நடந்தது. அது கீழே:

Dear Prof Zubair,

Season’s greetings.

I chanced upon your article at https://tamil.thehindu.com/opinion/columns/article25769528.ece titled ‘தமிழகத்தில் அரபி’

Thanks a lot for putting your thoughts together and presenting them; in your essay, you say that: ” கி.மு. 178-ல் தமிழகம் வந்த ‘அகதார்சைட்ஸ்’ என்ற கிரேக்கப் பயணி, தென்தமிழகத்தில் ‘சபியா’ என்று ஒரு ஊர் இருந்ததாகவும், அங்கு அரபிகளுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தின் வாள்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.”

I am a student of history and want to write a rejoinder and hence would like to know the following details please.

1. Could you please provide citations and primary sources (if the latter are not available, then secondary ones) about the visit of Agatharchides to TN? I was under the impression that Agtharchides never went beyond the Red Sea, and that only some sketches of his life and book (Erythrean Sea) are available.

2. About swords exported from TN: I have read Al-Kindi’s seminal work  ‘On swords,’ written during the 9th century CE. This book deals with arab swords dating prior to the onset of Islam too. I do not recollect having read about import of swords into Arabia from TN, during the period that you mention. Also, Periplus mans erythraea (the 1st century CE book which deals with a lot of marine trade/expeditions) does not talk about the swords being exported out of TN’s coast – even prior to 7th Century CE. So, could you please provide references and pointers for your statement? Ideally, some kind of tamil primary source would be nice, but Arabic is also fine (some of my friends are scholars in Arabic and they are prepared to help).

Thanks for your time and in advance,

Warm regards:

ramasami.

-0-0-0-0-0-

ஆனால், இதற்கு சுமார் 10 நாட்கள் கழித்தும் ஒரு பதிலும் வரவில்லை. போய்ச் சேர்ந்ததா எனவும் தெரியவில்லை. ஆகவே ஒரு நினைவூட்டலை அனுப்பினேன். அதற்கும் ஒரு பதிலும் இல்லை.

அதன் பின்னர், தமிழ் ஹிந்து தளத்தில் அந்தக் கட்டுரையின் பக்கத்திலும் பின்னூட்டம் அளிக்க முயற்சித்தேன். அந்தக் கடை மூடப்பட்டிருந்தது. பின்னர் ரீடர்ஸ்எடிட்டர் முகவரிக்கும் எழுதினேன். பதிலில்லை. தஹிந்து குண்டர்கள் செய்யும் ஏகப்பட்ட தவறுகளால் தொடர்ந்த சொதப்பல்களால் அவர் (பன்னீர்செல்வம்??) திக்குமுக்காடிக் கொண்டிருக்கவேண்டும். பாவம்.

-0-0-0-0-

அந்தக் கட்டுரையில் ஏகப்பட்ட தவறுகள்/அட்ச்சிவுடல்கள் – இந்த அழகில் அது ‘சிந்தனைக் களம்  – சிறப்புக் கட்டுரைகள்’ பிரிவில் வேறு!

1. பேராசிரியருக்கு வளமான கற்பனை. ஏனெனில், அந்த கிரேக்கர் அகதார்சிடீஸ் – பாரதத்துக்கு வரவேயில்லை. அவருடைய சரித்திரமே சரியாகக் கோர்க்கப்படவில்லை, அவர் காத்திரமான சமகால வரலாற்றாளராகவும் இல்லை; ஏதோ ஒரு வட ஆப்பிரிக்கப் பிராந்தியப் பிரபுக்கு அவர் ஒரு குமாஸ்தாவாக இருந்தார் என விவரணை. அவ்ளோதான்.

அவர் ஐந்து புத்தககங்களை எழுதியிருந்தாலும், அதில் ஒன்றுமட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த ஒன்றிலும் பேராசிரியர் அட்ச்சிவுட்டது போல ஒரு சுக்கு விவரமும் இல்லை. இந்த அழகில் பேராசிரியருக்கு நன்றிதான் சொல்லவேண்டும்; ஏனெனில் அவர், அட்ச்சிவுட்ட கதைக்கு அப்பால் — அகதார்சிடீஸ் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்து அவருக்கு வேண்டுமளவு ஆம்பூர் தம் பிரியாணி விருந்து பரிமாறியதாகவும், பின்னர் தலப்பாகட்டு பிரியாணி ஒரு பாக்கெட்டை கைச்சோறாகக் கட்டிக்கொடுத்ததாகவும்கூட ஜம்மென்று மேலதிகமாக அடித்து விட்டிருக்கலாம் இல்லையா?  யார் கேட்கப்போகிறார்கள், சொல்லுங்கள்? ஆகவே – ஐயா, நன்றி!

2. அக்காலகட்டத்தின் டமிளர்கல், வாளாவிருக்காமல் வாட்களை ஏற்றுமதியெல்லாம் செய்யவில்லை. நானும் பத்துப்பாட்டு சிலப்பதிகாரம் எழவையெல்லாம் ஒரளவுக்காவது படித்திருக்கிறேன். கொடுமணல் உருக்குலைச் சிதிலங்கள் சுடுமணல் மணற்கொள்ளைத் திராவிடர்கள் என்பவற்றையெல்லாம் ஓரளவு அறிந்திருக்கிறேன். அடிப்படையில் மெட்டலர்ஜி ஆசாமியான நான், ஒரு காலத்து ஆர்வக்கோளாறு காரணமாக (ஸ்ரீ தரம்பால் அவர்களுக்கு நன்றியுடன்) பாரம்பரிய முறையில் எஃகு தயாரிக்கும் முறைகளிலும் (வூட்ஸ் எஃகு, பாரதத்தின் கிமு/பொதுசகாப்தத்துக்கு முந்தைய ஐந்தாம் நூற்றாண்டின் தொழில் நுட்பம்) பரீட்சார்த்தமாக ஈடுபட்டிருக்கிறேன்.

ஆகவே சொல்கிறேன்: இரும்பு எஃகு போன்றவற்றிற்கான தொழில் நுட்பத்தையும் அதன் வினை/விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதான கதையடித்தல்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது – ‘தர்க்கரீதியாக’ விஷயங்களை விரித்து இல்லாததையும் பொல்லாததையும் அட்ச்சிவுடக்கூடாது. நாம் எஃகினை ஏற்றுமதி செய்தோம். இது சரி. ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் ஐயன்மீர் – ஆகவே நாம் மெர்ஸீடிஸ் பென்ஸ் ட்ரக்குகளை / சரக்குலாரிகளையும் புறநானூறு காலத்திலேயே ஏற்றுமதி செய்தோம் என அட்ச்சிவுடக்கூடாது. அதுவும் அரேபியாவுக்கு!

என்ன அசட்டை! என்ன அற்பத்தனம்! :-(

3. இதைத் தவிர இப்படியொரு இதயமேயற்றப் புளுகு / அட்ச்சிவுடல் – இதைக் குறிப்பிடாமல் விடுவது நம் பிள்ளைகளுக்குத் துரோகம் செய்வது:

“அரபி மொழி, இஸ்லாமியர்களின் மொழியாக, இஸ்லாமியக் கலைஞானங்களைப் பயிற்றுவிக்கும் மொழியாக மதரசாக்களில் இடம்பெற்றுள்ளது. பல நூறு மதரசாக்கள் இப்பணியைப் பல நூற்றாண்டுகளாக மேற்கொண்டுள்ளன.”

:-( இப்படியா கூசாமல் பொய் சொல்வார்கள்?

நான், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மதறாஸாக்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்குள்ள இமாம், உலீமாக்களுடன் பேசியிருக்கிறேன்; அவற்றின் பாவப்பட்ட ஏழைக்குடும்ப மாணவர்களுடன் அளவளாவியிருக்கிறேன். சோகம்.

ஆகவே ஆணித்தரமாகக் கூறுகிறேன்: ஒரு மதறாஸாவில்கூட “இஸ்லாமியக் கலைஞானங்களைப்” பயிற்றுவிப்பது நடப்பதில்லை. அரபுமொழிமூல விஞ்ஞான – கணிதமுறைமைகளைக் குறித்துக் கோடிட்டுக் கூடக் காண்பிப்பதில்லை. அங்கும் பெரும்பாலும் தண்ட ஆசிரியர்கள்தாம். வாழ்க.

வெறும் ஹிஃப்ஸ் வகுப்புகளும் (அர்த்தம் புரியாமல் கொர்-ஆனை பொழுதன்னிக்கும் நெட்டுரு போடுதல்) அதிக பட்சம் ஆலிம்களும் தான். அதிலும் தஃப்ஸிர்கள் (கொர்-ஆன் விளக்கவுரைகள்), ஷாரியா போதனைகள், ஹடீத்கள் – அவ்ளோதான்.

ஒரு மதறாஸாவில் கூட அதற்கு மேற்பட்டு – ஒரு அற்ப கலீலாஹ் வாஹ் டிம்னாஹ் (=நம்மூர் பஞ்சதந்திரத்தின் பாரசீக மொழிவழி அரபுக் காப்பி) கூட இல்லை – அல்-கிண்டிகளையும் அவிஸென்னாக்களையும் இப்ன்-அல் ரஷித்களையுமே விடுங்கள்… ஒருசில மதறாஸாக்களில் ஸிபிஎஸ்இ கல்வித்திட்டம் என்றார்கள்; போய்ப் பார்த்தால் புரளி. (இதில் ஒரு மதறாஸாவில் கம்ப்யூட்டர் கல்வி நன்றாகச் செய்கிறார்கள் என்றார்கள் – போய்ப் பார்த்தால், அதிலும் பிள்ளைகள் கொர்-ஆன்.காம் போய் நெட்டுரு, வேறு எதையும் செய்யமுடியாத – இன்டெர்நெட்டுரு. சோகம்!)

முல்லாக்கள் கூத்தடித்துக்கொண்டிருப்பார்கள், அல்லது உதைத்துக்கொண்டிருப்பார்கள், அல்லது குழந்தைகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள்; இந்தச் சூழலில்,  அனுதினமும் வறட்டு ரொட்டியைச் சாப்பிட்டு இப்படி ஒரு  படிப்பைப் படித்து வெளிவரும் குழந்தைகளுக்கு, சுயவெறுப்பிலும் பிற நம்பிக்கைகள் மீதான வெறுப்புகளிலும் ஆழ்த்தப்பட்டு பின்னரும் வெளிவரவே முடியாமல் மதரீதியாகவே மூச்சுமுட்ட உழலவேண்டிவரும் பிள்ளைகளுக்கு, என்ன எதிர்காலம் இருக்கிறது, சொல்லுங்கள்? அதிக பட்சம் வேலைவெட்டியற்ற தாவாவும் கத்தியால் தலைசீவலும் இன்னபிற மதத் தீவிரவாதமும்தான் சாத்தியம். பாவம்.

…நானும் என்னுடன் வளையவந்த ஒரு முஸ்லீம் யுவதியும் – தீனி (மதக்(!) ‘கல்வி’) மட்டும் வேண்டாம்; கொஞ்சமாவது துன்யவி (வாழ்க்கை/லௌகீகம் தொடர்பான கல்வி) வகையறாக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என மேற்கண்ட அனைத்து மதறாஸாக்களிலும் கோரிக்கை வைத்தோம். வேண்டும் உதவி செய்கிறோம் என்றோம்.

விளைவு = 0.

…அந்தப் பெண்ணைக் கண்டபடி வேசி என்றெல்லாம் திட்டினார்கள். அவற்றில் படித்து முடித்தவர்களுக்கு உடனடியாக மஸூதிகளில் வேலை கிடைக்கும், துன்யவிக்கு அவசியமேயில்லை என்றார்கள்; ஆக, மதமாற்றங்களுக்கும் மௌடீகமான வாழ்க்கைக்கும் மதவெறிக்கும் கேட்பானேன்.

அக்குழந்தைகளை நினைத்தாலே கண்ணில் ரத்தம் வருகிறது.

இந்த அழகில் இந்தப் பேராசிரியரின் கயமை உளறல்.

மேற்கண்ட மதறாஸா பொதுவிதிக்குக் குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் இருந்தால் (தப்பித் தவறிதான்!) அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவே ஆசை.

-0-0-0-0-0-

சரி.

சாதாரண ஆசாமிகள் – எஸ்ரா சாரு நிவேதிதா போன்றவர்கள் இப்படி உளறிக்கொட்டினால், பீலாவிட்டால் – கடனெழவே கோமாளித்தனங்களே என இவற்றைச் சிரித்துக்கொண்டே விட்டுவிடலாம்.

ஆனால் அஹ்மத் போன்றவர்கள் படிப்பிக்கும் தொழிலில் இருப்பவர்கள். ஈனத் தொழில்களில் அல்ல.

அதனால்தான் வலிக்கிறது.

நல்ல ஆசிரியர் நல்ல கல்லூரி…

ஆனால் இது தீர்க்கக்கூடிய பிரச்சினைதான். ஏனெனில், இம்மாதிரி ஜந்துக்களை ஆசிரியர்களாகப் பாவிக்கும் எழவான புதுக்கல்லூரி என்பதை புதுக்கல்லறை எனப் பெயர்மாற்றம் செய்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. பிரச்சினைக்கு நற்சமாதி தமிழ்சமாதி செஞ்சமாதி.

தமிழ் ஹிந்து தினசரி: இங்கு காலட்சேபம் செய்பவர்கள், உதவியாசிரியர்கள் இன்னபிற ‘பத்திரிகை சேவை’ செய்பவர்கள் – சம்பளம் வாங்கிக்கொண்டுதான் வேலை செய்கிறார்கள் என நினைக்கிறேன். தண்டச் சோற்று உதவாக்கரைகள்.

இந்தப் பேடிகளானவர்கள் — தாங்களாக அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. சரி. இதனை விட்டுவிடலாம – ஏனெனில் இதற்கு யோசிக்கும் திறமை வேண்டும். படிப்பறிவு வேண்டும். தினசரியின் வாசகர்களிடம் மரியாதை இருக்கவேண்டும். இவர்களுக்கு சரியான எடுத்துக்காட்டுகள் வேண்டும் – ஆனால் இவர்களுக்கு ஆதர்சமாக இருப்பவர்களோ என் ராம், கனிமொழி, மாலினி பார்த்தசாரதி, ராமச்சந்திரகுஹா, டோனி ஜோஸஃப், ஸமஸ் போன்றவர்கள், பாவம்.

ஆனால் – இந்த ஆசிரியக் கழிசடைகளால், இன்னொரு மேதாவி எழுதிய விஷயங்களைச் சரிபார்க்கக்கூடவா முடியாது? குறைந்த பட்சம் – இது குறித்த வரலாற்றியல், தொல்லியல், அரபுமொழி நிபுணர்கள் போன்றவர்களிடம் காலில் விழுந்து அவர்களுடைய பரிந்துரைகளைப் பெறக்கூடவா முடியாது? சோம்பேறிகள்.

முக அழகிரி ‘அட்டாக்’ பாண்டி போன்ற திராவிடச் செயல்வீரர்களை விட்டு இம்மாதிரி தினசரிக் குப்பைகளுக்கு மதுரை தினகரன் அலுவலக ட்ரீட்மென்ட் கொடுக்கவேண்டும் போல…

திராபைச் சனியன்கள்.

பின்குறிப்பு: என் கருத்துகள் தவறென்று ஆதாரபூர்வமாகச் சுட்டமுடியுமானால் நான் என்னைத் திருத்திக்கொள்ளத் தயார். ஏனெனில் – எனக்கு அட்ச்சிவுடுவதில் நம்பிக்கை இல்லை.

நன்றி. :-(

 

இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு

7 Responses to “புதுக்கல்லூரியின் அஹ்மது ஜுபைர், பாரதத்தில் அரேபிய தாக்கம், மதறாஸா கல்வி, அமோக அட்ச்சிவுடல் – குறிப்புகள்”

  1. SB Says:

    Sir,
    Professor may have written that article basis ‘QUID PRO QUO’ as some of our politicians discussed about various inventions during Vedic times (Pushpaka vimana / finding fallacy with Darwin’s theory,etc., )..
    He should have responded to you and should have validated his claims . Hindu got a disclaimer that It’s all Author’s and therefore must be getting him to respond to.
    Substantiation of your notes (some too sensitive) may even be called for by the believers.
    Professor may have meant ‘steel exports’ ..
    He is duty-bound to counter you with validations and express an apology as he perked you up ..Arab Scholars must come forward to clarify queries posted by you duly .
    Thanks
    Regards
    SB

    If not a disturbance, please check below.
    WOOTZ STEEL

    The Tamils of the Chera Dynasty produced what was termed the finest steel in the world.

    Ancient Indians especially Tamils have had the knowledge to produce this high carbon steel which was used to create the blades of Swords of Damascus.

    The speciality of these swords were that they could bend at a 90 degree angle and immediately spring back to their former positions, yet their blades would be sharp enough to slice a falling bolt of silk and cut it in half.

    The Arabs introduced the South Indian/Sri Lankan wootz steel to Damascus, where an industry developed for making weapons of this steel. Wootz steel was widely exported and traded throughout ancient Europe and the Arab World.

    The Western World was quite impressed with this Steel.The legends associated with the excellent properties of the wootz steel and the beautiful patterns on Damascus blades caught the imagination of European scientists in the 17th-19th centuries since the use of high-carbon iron alloys was not really known previously in Europe and hence played an important role in the development of modern metallurgy.

    British, French and Russian metallography developed largely due to the quest to document this structure. [1] These included Michael Faraday who spent many years performing a series of experiments, adding alloys to iron in a fruitless attempt to replicate the structure and characteristics of Indian steel.

    It was not till 2006 that scientists got a closer glimpse into the secrets of Indian steel. Crystallographer Peter Paufler and his team of researchers had access to some swords made with this steel. Using an electron microscope, and dipping the blades of the swords in hydrochloric acid, the team discovered that the underlying structure of the steel contained carbon nanotubes. According to the scientists, who published the results of their study in Nature, this combination of nanotubes and nanowires in the underlying structure of the steel used to make the swords was responsible for the swords’ hardness, sharpness and flexibility


    • Sir, thanks for the info – but your response went to spam for some reason! Retrieved it today and am clearing it.

      I have tried to work with the idea of this wootz steel a few decades back, and I find some hyperboles & nonsense with the above Telegraph newspaper article of 2015. https://www.telegraphindia.com/opinion/story-of-swords-and-steel/cid/1441453

      Though it is true that Bharat (many parts of it including our Tamilnadu) produced excellent steel, really fantastic ones at that.

      May be the sad quality of the article is explained by the fact that Brishti Guha who wrote that article is a PhD in ECONOMICS and not anywhere close to Sciences, leave alone METALLURGY. She is a staffer at JNU/Delhi. https://www.jnu.ac.in/content/brishtiguha

      Actually that explains a lot.

      Thanks again.

      Of course, the learned scholar from the Nude College would not respond. Why should he? It is the birth right of the Tamils to faff.


  2. During my school days, my father subscribed for Hindu Paper when I came to 8th Std, stating that I have to read the paper to improve my English.
    Later, during college days, when I was mugging “Minerva Guide” for language, I found it,s English fascinating. Some 10 years ago, when the paper was spreading leftist views under Ram’s leadership, I stopped reading the paper. So, I am not blessed with reading Tamil-Hindu.
    After Chaaru, Esraa-like writers, anybody even-me, can write any Historical Information (like RamGuha) No problem.


    • Sir, even my granddad used to say so. But, I would say that even before that Ram farce, the paper had steadily started deteriorating.

      …the sad thing is, even that stupid english is not correct anymore – every freakin’ report has a few great mistakes! But even more sad is the fact that all the aspiring IAS candidates mug this tabloid as a matter of routine and think that whatever the shit that it publishes is the gospel truth…

  3. Kannan Says:

    அட்ச்சுவிட கச்டமாக இருக்கிறது, விதிகளை கொஞ்சம் தளர்த்துங்கள்.

    இப்படிக்கு
    அகில இந்திய அட்ச்சுவிடுவோர் நல வாரியம்.
    கொருக்குப்பேட்டை.


  4. இந்த தமிழ் இந்து பத்திரிகை யார் நடத்துறா?அதுலயும் அந்த நடுப்பக்க ஆசிரியர் சமஸ் நீட்டை கொண்டு வந்ததே பாஜக தான் என 200 ரூபாய்க்கு என்ன வேணாலும் அட்ச்சிவுடும் உடன் பிறப்பை விட எழுதுறார்?


  5. […] மண்டையில் அடித்துக்கொண்டு ஒரு எதிர்வினையும் கொடுத்தேன்! தண்டக் கருமாந்திர […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s