மனுஷ்யபுத்திரன்: திமுக கனிமொழி தார்மீக உணர்வற்ற ஊழல்வாதி
February 19, 2019
என் செல்ல மப்புவாரும் சமயத்தில் உண்மையை எழுதிவிடுவார் என்பதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன்.
பாவம், தற்காலத்தில் இந்த மப்புவார் ஒருமாதிரி திராவிட மப்பில் இருப்பதால் திமுகவில் இணைந்து ஆதாயங்களை அறுவடை செய்யும் அதிமும்முரத்தில் இருப்பதால், தான் எழுதியதையெல்லாம் எல்லாரும் மறந்திருப்பார்கள் என நினைத்து – தான் எழுதிய உயிர்மை பக்கங்களை இருட்டடிப்பு செய்து தொடர்ந்து பஜனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால்…
-0-0-0-0-
அவருடைய பத்திரிகையான மயிர்மை, மன்னிக்கவும், உயிர்மை ஜூன் 2011 இதழில் கனிமொழி குறித்த தன் மேலான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
தலையங்கத்தில் (ஒரு ‘புரட்சி’யின் கதை) இப்படி எழுதியிருக்கிறார்…
…
“…தேர்தல் தோல்வியைவிட கருணாநிதியை மனமுடையச் செய்திருப்பது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதுதான். ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் என்ற பாத்திரத்தைவிட ஒரு கணவரின், தந்தையின் பாத்திரத்தை முன்வைத்தே தனது பொது வாழ்க்கையைக் கொண்டு செலுத்தியிருக்கும் அவரால் இதை எதிர்கொள்வது கடினமானது. நெருக்கடி நிலையின்போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைவிட, ஜெயலலிதா அரசினால் தான் கைது செய்யப்பட்டதைவிட கருணா நிதியை இது ஆழமாக மனமுடையச் செய்திருக்கிறது. முந்தைய கைதுகள் அரசியல் ரீதியானவை. கருணாநிதிக்கு அனுதாபத்தையும் அனுகூலத்தையும் பெற்றுத் தந்தவை. ஆனால் கனிமொழியின் கைது இதற்கு நேர் மாறானது. தி.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணி அரசின்கீழ் இயங்கும் சி.பி.ஐயினால் கனி மொழி கடுமையான ஊழல் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை யாரும் பழிவாங்கவில்லை. அவர் தேர்ந்துகொண்ட வழிமுறை அவரைப் பழிவாங்கிக்கொண்டிருக்கிறது.
கனிமொழியின் அரசியல் வாழ்வின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒரு ஐந்தாண்டுக்குள் ஒரு முழுச் சுற்றுக்கு வந்துவிட்டது. இது மிகவும் அவலமானது. திராவிட இயக்க அரசியலில் ஒரு மாற்று அடையாளமாகவும் பெண்களின் நம்பிக்கைக் குரிய பிரதிநிதியாகவும் கருதப்பட்ட அவர் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அவப்பெயரைத் தேடிக்கொள்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கனிமொழியை டெல்லிக்கு அனுப்பியதன் மூலம் தனது குடும்ப அரசியலில் இன்னொரு கடமையைப் பூர்த்தி செய்வதாகத்தான் கருணாநிதி நினைத்திருப்பார். ஆனால் கனிமொழி தனது தந்தையின் குடும்பங்களுக்கிடையே தனது குடும்பத்தின் இடத்தை மேலே கொண்டு வருவதற்கான கடும் மனச்சிக்கலைக் கொண்டிருந்தார். கருணாநிதியின் மூத்த குடும்பத்தின் அதிகார பலம், மாறன் குடும்பத்தின் பண, ஊடக பலம் இவற்றிற்கு சமமான ஒரு பலத்தை அவர் உடனடியாக அடைய விரும்பினார். தனது தந்தையின் வாழ்நாளுக்குப் பிறகு தான் வெகு சுலபமாக ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்கிற உள்ளுணர்வு அவருக்கு இருந்தது. அரசியலில் தனக்குக் கிடைத்த இந்த முதல் சந்தர்ப்பம்தான் தனக்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பமும் என்று அவருக்குத் தெரியும். கேபினட் அந்தஸ்திற்குக் குறைவான மந்திரிப் பதவி எதையும் அவர் ஏற்க மறுத்த போதே அழகிரியும் தயாநிதி மாறனுமே அவருடைய எல்லா பிரச்சினைகளுக்கு காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவர் சம பலமற்ற ஒரு போட்டியில் துணிந்து இறங்கினார். ஆ.ராசா காட்டிய ஊழல் புதையல் யாரையும் மனப்பிறழ்வுக்கு ஆளாக்கக் கூடியது. அந்தப் புதையலுக்குப் பின்னே இருக்கும் பூதங்களைப் பற்றி யோசிக்கக் கூட அவகாசம் இல்லாதவராக கனிமொழி தனது சாகசத்தை தொடங்கினார். தன்னை முன்னிறுத்துவதற்காக கலைஞர் டி.வி.க்கும் தமிழ் மையத்திற்கும் எந்த முன்யோசனையும் இன்றி தொலைத் தொடர்புத் துறை ஊழல் பணத்தைக் கொண்டுவந்தார். இந்தப் புதையலைக் கையாள்வதற்கான எந்தத் திறமையும் அவருக்கு இல்லை. ஊழல் பணத்தை இவ்வளவு வெளிப்படையாக வங்கிக் காசோலையாகப் பெற்றுக்கொண்ட ஒரே நபர் இந்தியாவில் கனிமொழியாகத்தான் இருப்பார். மேலும் தான் ஈடுபடும் குற்றத்தின் தன்மை குறித்த எந்தத் தார்மீக உணர்வும் அவருக்கு இருக்கவில்லை. பொது வாழ்வில் அவர் தன்னைப் பற்றிக் கட்டியமைக்க விரும்பிய பிம்பத்திற்கு நேர் எதிரான ஒன்றைச் செய்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருந்திருப்பதாகத் தெரியவில்லை.“
மேற்கண்ட கட்டுரை மயிர்மை இணைய தளத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டதாமே, பாவம்?
அதனால் தான் மப்புவாருக்கு உதவியாக இதனை மறுபிரசுரம் செய்கிறேன். நன்றி.
February 20, 2019 at 09:27
Sir,
All in the game of politics . No comments for PMK joining hands with AIADMK ?
For the same article, MP will have his leeway elsewhere , if re-read by Party head.
MP is under heavy pressure (not having got anything substantial in return) and he has been sending concealed messages to the party through his prose-poems(?) and we should not be surprised if he gets off the party bandwagon ..He’s between
charybdis ( pressure of work) and scylla( senior partymen’s containing him) …How long could he wait when he gets nothing in turn ?
விமலாதித்த மாமல்லன்
quote
@maamallan
Feb 17
More
மனுஷ் எழுதற கவிதைக்கும் சாரு கவிதைனு எழுதறதுக்கும் என்ன வித்தியாசம். ரெண்டுமே மளிகைக்கடை லிஸ்ட்டாட்டம்தான இருக்கு
பரம்பரை ஆண்டி தேதி போட்டு எழுதுவாரு. பஞ்சத்து ஆண்டி அதைப் போடமாட்டாரு. ஆனா ரெண்டு பேருமே சமயத்துல பேஸ்புக் போஸ்ட்டையே ஆக்ஸிடெண்ட்டலா கவித்துவமா எழுதி அசத்திருவாங்க
Unquote
You forgot CHARU altogether ? That’s ironical.
Thank you.
Regards
SB
February 20, 2019 at 12:42
[…] மனுஷ்யபுத்திரன்: திமுக கனிமொழி தார்ம… 19/02/2019 […]
February 21, 2019 at 00:30
// he has been sending concealed messages to the party through his prose-poems(?) //
ஏற்கனவே அனுப்பிட்டாராமே, ”நா சூரியனோட கதிரா வந்தேன், என்னை சிகரெட் லைட்டரா பயன்படுத்திக்கிறீங்களே”-ன்னு. :))
February 21, 2019 at 07:21
[…] மனுஷ்யபுத்திரன்: திமுக கனிமொழி தார்ம… 19/02/2019) […]
February 22, 2019 at 09:44
[…] மனுஷ்யபுத்திரன்: திமுக கனிமொழி தார்ம… 19/02/2019 […]