ஆஇரா வேங்கடாசலபதி: தமிழ்க் கெட்டவார்த்தை
February 4, 2019
ஒத்திசைவின் கொடி, தொடர்ந்து அரைக்கம்பத்தில் பறக்கிறது. :-(
எனக்கு நன்றாகவே தெரியும்; எந்த விதத்திலும் தகுதியற்ற நபர்கள், அதிசராசரிகள் – தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடப்படுவது நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் சகஜம். சொல்லப்போனால் இது, ஹ்ம்ம்… one of the defining characteristics of our CONtemporary Tamil culture.
இருந்தாலும்…
அகிலன் பெருமாள்முருகன் எஸ்ரா வீரப்பன் இசுடாலிர் பிரபாகரன் ஆஇராசா ஆட்டோஷங்கர் ஈவெரா கனிமொழி என நீளும் இந்தப் படுபீதியளிக்கும் ஜாபிதா.
இதைவிடவும் படுகேவலமான உண்மை என்னவென்றால், தப்பித்தவறிப் போய் மிச்சமிருக்கும், நம் ஒருசில சான்றோர்களில் பலரும் இந்த அதிசராசரிகளைப் போற்றவேண்டிய கெடுபிடிக்குத் தள்ளப்படும் நிலை.
ஏனிப்படி?
-0-0-0-0-0-
நான் மகிழ்ச்சியாகக் காலட்சேபம் செய்துகொண்டிருப்பதை விரும்பாத சிலர் எனக்கு எதிராகச் சதிவேலைகளில் இறங்கியிருக்கிறார்கள் என்பதை சகஏழரைகள் அறிவீர்கள். அச்சதித் திட்ட சகதியின்படி கீழ்கண்ட ‘அழைப்பிதழ்’ வந்துசேர்ந்தது. ‘பதிவு செய்’ – ‘இந்த நகைச்சுவையைத் தவிர்க்காதே‘ என்ற பரிந்துரையுடன். நன்றி.
:-(
ஆழமும் வீச்சும் சரி, ஆனால் அதிசராசரியான ஆஇராவேங்கடாசலபதியார் இங்கு எங்கே வருகிறார்?
இந்த நிகழ்வில் பங்குபெறவிருக்கும் சிலரை நான் சுத்தமாக அறியேன் (கேள்விகூடப் படவில்லை – ஆனால் அஞ்ஞானியான எனக்கு இவர்களுடைய அறிமுகமில்லாதது ஒரு பெரிய விஷயமில்லை) என்றாலும் ஜாபிதாவில் உள்ள பெருமாள்முருகன், இந்திரன், ராமச்சந்திரகுஹா போன்றவர்களின் அற்புத ஆத்தும சுகமளிக்கும் தரத்தை நான் நன்றாகவே அறிவேன்.
சரி. ஒருதுறையில் போற்றத்தக்க, கொண்டாடப்படவேண்டிய வல்லுநராக இருந்தாலும் — தொடர்பேயற்று, சமூகசேவையில் வளர்ந்துவரும் தலைவராக ( ‘Emergent Leadership’ category for bringing “social inclusiveness in culture.” ) பாவிக்கப்பட்டு மக்ஸய்ஸாய் விருது ‘வாங்கிய‘ அனுபவத்தால் என்றா தெரியவில்லை – அடிப்படைகளை அறியாமல் காணாததைக் கண்டதுபோல் கண்டமேனிக்கும் கருத்துதிர்க்கும் விதூஷகராக மாறியிருக்கும் டிஎம்க்ருஷ்ணா அவர்கள் பங்குபெறுகிறார்கள். இதுவும் பரவாயில்லை. நகைச்சுவைக்கு நான் எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவன்.
https://twitter.com/othisaivu/status/1063780211848671238
ஆனால்.
சுகுமாரன் (சுகுமாரன்? :-( குறிப்பிடத்தக்க கவிதைகளை எழுதியிருக்கும் இவரா இப்படி? அல்லது இது வேறு சுகுமாரனா?), அகா பெருமாள், வசந்திதேவி, ஸ்டாலின் ராஜாங்கம் – என நான் மிகவும் மதிக்கும் சான்றோர்கள்/படைப்பாளிகள் பங்குபெறுகிறார்கள்.
சோகம் பிழிகிறது, என்ன செய்ய.
ஆனால் ஆஇராவே அவர்களே தன்னிலை விளக்கமாகச் சொல்வது போல, தமிழையே தமிழில் திட்டுவது எப்படி, முடிந்தால் ஆங்கிலத்திலும் அதனைச் செய்வது எப்படி, அதன் வரலாறு புவியியல் என அளப்பரிய அளப்பது எங்கனம் – என்பவற்றைக் காலம்காலமாக செய்துவரும் அன்பருக்கு, யாராவது தமிழ்மொழியில் கெட்டவார்த்தைகளால் அர்ச்சனை செய்தால் – கொஞ்சமாவது அந்தச் சாகக்கிடக்கும் தமிழணங்கு திருப்திப்படுவாள்.
idealக்கும் idleக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் அப்படியொரு நீட்டிமுழக்கல். :-(
இப்படியெல்லாம் இந்த ஆசாமிகள் வெளி நாடுகளுக்கெல்லாம் போய் நம் மானத்தைக் கப்பலேற்றுவது மிகுந்த சோகம் தரும் விஷயம். ;-)
பின்குறிப்பு: என்னுடைய ஒரே கவலை என்னவென்றால் – அப்படியிப்படி என்று இந்த கொலைவிழாக் குழுவினர், ஆஇராவேயார் பணி(!)புரியும் மிட்ஸ் கஞ்சா அமைப்பின் தலைவரான பேராசிரியர் கேஎல் க்ருஷ்ணா அவர்களையும் இந்தக் களேபரத்துக்கு அழைக்காமல் இருந்தால் சரி. ஏனெனில் அவரையும் அவர் பண்பையும் தரத்தையும் மிக நன்றாக அறிவேன். அதனால்தான் தோன்றுகிறது, அவர் தேவையேயில்லாமல் தூக்கு போட்டுக்கொண்டு சாகக்கூடாது என்று. :-(
—
ஆஇராவேயார் புகழ்பாடும் பிற பதிவுகள்:
- ar venkatachalapathy, a disgrace to both tamil and english, and a professor to boot… 15/11/2016
- அந்தக் காலத்தில் ஆஇரா வேங்கடாசலபதி இல்லை…06/09/2014
- the impotence of being ARchiVist 15/05/2015
- ஜேஜே(-வைக் கொலை செய்தது யார்?): சில குறிப்புகள் 11/08/2014
- கணிதமேதை ராமானுஜன், ரேம்போனுஜன் ஆன கதை! 08/08/2014
February 5, 2019 at 01:42
Most important matter is the food arrangements mentioned in the invitation. Have you not noticed it?
February 5, 2019 at 05:28
பசியாறுதல் பரிசு? தேநீர் ‘சிற்றுண்டி??’ (இவையெல்லாம் இருக்கலாம் ஆனால் மதியவுணவுத் திட்டம் இல்லையே என்கிறீர்களா என்ன?)
ஹ்ம்ம்… வரவர நம் தமிழ்த் திராவிடர்களின் சராசரி உருவ வழிபாடுகள் மிகவும் அதிகமாகிவிட்டன, அல்லவா?