அருமை நண்பனுக்கு வந்த சோதனை, ஈஸ்வரா! :-(
December 31, 2018
என் அன்புக்கும் மரியாதைக்கும் மாளாக்காதலுக்கும் அன்றும் இன்றும் என்றும் உரிய மகாதேவனுக்கு இப்படியொரு இக்கட்டு வந்திருக்கவேண்டாம். ஒரு சகதமிழிலக்கிய ஆர்வலனுக்கு, உன்னதங்களைத் தரிசனம் செய்துள்ளவனுக்கு, தேர்ந்த வாசகனுக்கு, அழகுணர்ச்சி மிகுந்த அழகனுக்கு இப்படியொரு கொடுமை வந்திருக்கவேவேண்டாம். ஆனால்…
எனக்குப் புரிகிறது; சமூகத்தில் அதிகபட்ச மரியாதைக்குத் தங்களைத் தகுதியானவர்களாக வளர்த்துக்கொண்டிருக்கும் உழைப்பூக்கமும் தர்மவுணர்ச்சியும் மிக்க நியாயவான்களாகிய சான்றோர்களுக்கும், பொது தளத்தில் இயங்கவேண்டிய கடமைகளினால் – சங்கடங்கள், சராசரிகளுடன் ஊடாடவேண்டிய நிலைகள், அரைவேக்காடுகளையும் (அவர்களும் பொதுமக்கள்தாமே!) அரவணைத்துச் செல்லவேண்டிய, அவர்களையும் புகழ்ந்து மரியாதை நிமித்தம் நாலுவார்த்தை சொல்லியேஆகவேண்டிய தார்மீகக் கட்டாயங்கள் வரலாம்.
அதை அவர்கள் சமனத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும், சகமானுடர்களின் மீதான கனிவுடனும் கடந்து செல்வதும் என்னால் புரிந்துகொள்ளக்கூடியவையே!
ஆனால், மேற்படி தகுதிகள் ஒன்றுமில்லாமல், வெறுமனே காலட்சேபம் செய்துகொண்டிருக்கும் எனக்கு இதனால் வாயடைப்பு (+ஊக்கபோனஸாக, மாரடைப்பு) ஏற்பட்டிருப்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.
என்ன செய்வது சொல்லுங்கள்.
மேலதிக வயிற்றெரிச்சல்களுக்கான, எஸ்ராமகிருஷ்ணதள சுட்டிகள்:
தமிழுக்கான 2018 ஸாஹித்ய விருதுபெற்ற மரக்கூழை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணனை முன்வைத்து, தமிழர்களுக்கு என் வாழ்த்துரை: ஒத்திசைவு கொடி அடுத்த மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கும் 05/12/2018
சரி.
அடுத்த ஆண்டாவது ஆண்டவன் (ஆண்டவர் அல்ல!) அருளால் இப்படிப்பட்ட கொடுமைகள் எனக்கும், என் நிரந்தரக் காதலனுக்கும் (ஏன், உங்களுக்குமேகூட!) ஏற்படாமல் இருந்தால் மகிழ்வேன்.
December 31, 2018 at 10:36
Sir,
Firstly our choicest wishes to you and your family for a fruitful year 2019. May God fulfill your longing of not wanting to be unpleasantly surprised with some of less-deserving fetching another literary award ( not to be surprised if Charu gets it or even Araathu or Yuvakrishna) !
https://www.jeyamohan.in/116319#.XCmt21UzbIU
quote:
எஸ்.ரா. அவர்களை நெகிழ்ச்சியோடு அல்லாமல் வேறு எவ்வகையிலும் எண்ண இயலாது
Unquote
You are well deserved to take the credit of giving ES.RA an equivalent word of ‘ Nezhivology’ and the much revered author’s pupil got that equivalent (un)anticipated.
quote;
https://www.jeyamohan.in/116573#.XCmvalUzbIU
Unquote
Appa-Mudaliayada-Sami! …keeps its resonance here!.
Where there’s Kadalur Seenu, there is Neghizvology and Es-Ra-in-the-making or Jey-mo’s becoming Nithya for Seenu ?
Thanks again Sir for all your rib-tickling humour in 2018 and wishing you to generate many more for your (un)deserving readers like us pro bono.
As regards your beautiful article on education, our recalling of SV’s prototype is the way forward ..
quote;
“Education is the manifestation of perfection already existing in man.
To me the very essence of education is concentration of mind, not the collecting of facts. If I had to do my education over again, and had any voice in the matter, I would not study facts at all. I would develop the power of concentration and detachment, and then with a perfect instrument I could collect facts at will. Side by side, in the child, should be developed the power of concentration and detachment.
Unquote:
SV’s lectures to Sanyasins of Belur Math was the peak of guidance of education .When ‘stomach’ takes the place of ‘ living’ , we have nothing much to say.
Thank you.
Regards
SB
December 31, 2018 at 11:44
Sir thanks. And, here is wishing you the same.
As for the rest – esraw heehaw, jemo, their fans etc – like your first link reads “ஓலமிடுவதுபோல நினைத்துக்கொள்கிறேன்”
January 1, 2019 at 02:24
ஆங்கிலப் புதிய ஆண்டு 2019 உங்களுக்குப் பல நலன்களையும் அளிக்க வேண்டுகிறேன்.
பாட்டி அந்தக்காலத்தில் படுக்கப்போகு முன் நெற்றியில் விபூதி இட்டு விட்டு கண்ட கனவும் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்யச்சொல்வாள். அது போல “இந்த ஆண்டாவது எஸ்ரா, யுவகிருஷ்ணா, சாரு ,கடலூர் சீனு, ஆசான் ஆகியவர்கள் என்னைக் கனவிலும் நினைவிலும் வந்து அச்சுறுத்தாமால் காப்பாய்
மகமாயி! சமயபுரத்து அம்மா! சக்களத்து அம்மா!கொடுங்கல்லூர் பகவதி!புன்னைநல்லூர் மாரியம்மா!”
January 1, 2019 at 05:08
ஐயா நன்றி. உங்களுக்கும் அப்படியே ஆகட்டும். நம் சக பிறஏழரைகளுக்கும் அப்படியே.
உண்மை என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டு என்ன, ஒவ்வொரு நாளும் பல நன்மைகளை அளித்த வண்ணம் இருக்கிறது. ஆனால் நாம்தான் தமிழ் அலக்கியத்தைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறோம்.
எனச் சொல்லி.
“இப்பூவலகில் அனைத்தும் இனியன”
திகட்டுகிறது அல்லவா?