சுகன்யா

January 5, 2019

இவர் ஒரு பேராசிரியையாயினி. பாவம்.

அதுவும் ஏதாவது சமூக(!)அறிவியல்(!!), பொருளாதாரம், சட்டம், இலக்கியம், தத்துப்பித்துவம் போன்ற பஜனைத் துறைகளில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் இயற்பியல், கணிதவகையறா துறை. ஐயோபாவம்!

குழந்தைகளுக்கான கோடைக்காலப் பணிமனை ஒன்றை நடத்துவதைக் குறித்த முஸ்தீபுகள் நிமித்தம், இந்த அம்மணியுடன், சென்றவாரம், என் மகளின் தாயார் உரையாடிக்கொண்டிருந்தார் போல; நேற்று ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது இந்தச் சுகன்யா குறித்து, திடுதிப்பென்று பேச்சு வந்தது.

எதற்கெடுத்தாலும் – அது வாழ்க்கையானாலும் சரி வாழக்காயானாலும் சரி – அதற்கான அர்த்தங்களை, விளக்கங்களை, பொழிப்புரைகளை, வியாக்கியானங்களை வாழ்வின் விளிம்புவரை விளக்கிக் கொண்டேஏஏஏஏ இருப்பது எங்கள் குடும்ப குணாதிசிய தொற்றுவியாதிகளில் ஒன்றாதலால் – சுகன்யா என்றால் ‘போற்றுதற்குரிய அணங்கு’ என விளக்கமளித்தார் என் பேரிளம்பெண்; மேலும், நீ என்ன நினைக்கிறாய் எனக் கேட்டுவிட்டார்வேறு!

ஏனெனில், என்னுடைய ஆகச்சிறந்த தமிழ்-ஸம்ஸ்க்ருதப் பேரறிவு பற்றி அவருக்குத் தெரியும். ஆங்கிலம் என்றால் கேட்கவேவேண்டாம்!

ஏனெனில், நான் மோனியர்வில்லியம்ஸ் அவர்களைக் கரைத்து தினசரி மூன்றுமுறை சுக்குவெள்ளத்தில் நீந்திக் குடிப்பவன். மேலும், வெகுமுக்கியமாக, ஸ்வேதடமருவை இசைப்பவன். காதலை வெற்றிகொண்டவனின் பாதாரவிந்தங்கள் பட்ட ஒற்றையடிப் பாதையில் ஏகோபித்து நடப்பவன். ஆகவே சொன்னேன்.

-0-0-0-0-0-

மணியே! மணியின் ஒளியே!

இதனை நான்கு விதமாகப் புரிந்து கொள்ளலாம்.

ஒன்று – இதனை சுக + நியாய என; அதாவது ‘நியாயமான சுகங்களில் திளைப்பவர்.’

இரண்டு – சுக + நி + ஆயர் எனவும்; அதாவது  – ரிஷி சுகர் அவர்களின் குலத்துதித்த ஆனால் ஆயர் குலத்தைச் சாராதவர்.

மூன்று – சுகர் + நியாய என; அதாவது அந்தக்காலத்திலிருந்தே (அதாவது சங்கம் மருவாத காலம்) தமிழக ரேஷன் கடைகளிலிருந்து நியாய விலையில் சர்க்கரை வாங்குவதற்காக வரிசையில் காத்திருப்பவர். ஏனெனில் பொங்கல் சமயத்தில் தமிழக அரசு சர்க்கரைப் பிச்சையும் போடுமே ஐயா!

நான்கு – இது சுக்கு + கன்யா எனவும் பிராஹ்மியிலிருந்து தமிழ்பிராஹ்மி எழுத்துரு பெற்றுப் பிரிந்த காலத்திலிருந்து விளங்கப் பெறுகிறது. அதாவது சுக்கு என்றால் காய்ந்த இஞ்சி. கன்யா என்றால் கன்யா. அதாவது காய்ந்த இஞ்சி போன்ற இடுப்பழகை உடைய திருமணமாகா அணங்கு. இஞ்சி இடுப்பழகி என அன்றே சொன்னாரல்லவா அண்ணல் வாலீ?

ஆகவே, நான்காவதுதான் உன் சுகன்யாவுக்குப் பொருந்தும்.

-0-0-0-0-0-

எவ்வளவு பெண்களுக்கு – இப்படி தமிழ் இலக்கியத்திலிருந்தும் திரைப்படக் கலாச்சாரப் புலங்களிலிருந்தும் ஸம்ஸ்க்ருத அகராதியிலிருந்தும் – அனாயாசமாகவும் லாகவத்துடனும் தகவல்களை எடுத்து கருத்துகளைக் கோர்க்கும் கணவன் வாய்ப்பான், சிந்தியுங்கள்?

…துணைவி என்னைப் பெருமிதத்துடன் பார்த்தார். யாருக்குத்தான் தம் வாழ்க்கைத்துணை பற்றிய உள்ளார்ந்த பெருமிதம் இருக்காது, சொல்லுங்கள்?

 

(இன்னொரு சுயமரியாதைத் துணைவனின் பகுத்தறிவுத் துணைவியின் – கணவன் சக்தி குறித்த உள்ளார்ந்த பெருமிதம்! பாவம்!)

…பிறகு, என் மகனின் தாயார் கொஞ்சம் யோசித்தார். “இப்போது இடுப்புப் பக்கம் சதை போட்டு ஈபிஎன்டி போல இருக்கிறார், ஆனால், பெயர் வைக்கப்பட்டபோது, அது சரியாகத்தானே இருந்திருக்கும்?”

ஆகச் சிறந்த புரிதல்.

8 Responses to “சுகன்யா”

 1. Anonymouse Says:

  ஈபிண்டி? கூகுளுக்கும் தெரியலை அதனால…

 2. Kannan Says:

  mmm…what would EsRaw say?

  just wondering.

 3. K.Muthuramakrishnan Says:

  சுகன்யா=கெள‌சல்யா என்ன தொடர்பு சார்? ஒண்ணியும் பிரியலயே!

 4. சேஷகிரி Says:

  அன்புடன்,
  உங்கள் ஏழரையில் ஒரு அரை 😄😄


  • “Sorry, this content isn’t available at the moment

   The link you followed may have expired, or the Page may only be visible to an audience that you aren’t in.”

   கட் – பேஸ்ட் செய்தால் வசதி. முடியாவிட்டாலும் நஷ்டமில்லை.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s