ருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்

November 13, 2018

இந்த வருடம் – மகாமகோ ஷாமஸாஸ்த்ரி அவர்கள் பிறந்து 150 வருடங்களாகின்றன.

இந்த மனிதர் நம்மைப் போன்ற பாரதவாசிகளால் கொண்டாடப்பட வேண்டிய பலப்பல சான்றோர்களில் ஒருவர், ஆனால் நாம் இவரைப் போன்றவர்களைத் துப்புரவாக மறந்துவிட்டு, அவர்களுடைய செயற்கரிய பணிகளை அறிந்துகொள்வதை விட்டுவிட்டு – திரைப்படக் கோமாளிக் கோமகன்களின் அழிச்சாட்டிய அக்கப்போர்களிலும் பிரமிக்கவைக்கும் திராவிட அரைகுறைத்தனத்திலும் ஆனந்தமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கவர்ச்சி+உணர்ச்சி முதல்வாத தமிழக அரசியலின் கொடைதான் இது.

சரி.
-0-0-0-0-0-
(http://www.srikanta-sastri.org/r-shamasastry/4593947589)
ருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944)

சுமார் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன் திருநெல்வேலியின் செங்கோட்டைப் பகுதியிலிருந்து – தற்போதைய ஹாஸன் பகுதியிலுள்ள காவிரி நதிப் பாசனவாய்க்கால்களில் ஒன்றான காட்டேபுராவின் அருகேயுள்ள ருத்ரப்பட்டணத்திற்குப் குடிபெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் பல. படிப்பதிலும் படிப்பிப்பதிலும் – முக்கியமாக வேதத்திலும் நாதத்திலும் விவசாயத்திலும் இக்குடும்பங்கள் ஈடுபட்டுவந்தன/வருகின்றன.

இப்போதுமே கூட,  கர்நாடக சங்கீத மரபினைப் பேணிக்காப்பதிலும் பலப்பல வித்வான்களை உருவாக்கியதிலும் இந்தக் கிராமத்துக்குப் பெரும்பங்கு உண்டு. (ருத்ரபட்டணத்தைப் போலவே ஷிவமொக்கா பக்கத்து மாத்தூர்+ஹொஸஹள்ளி கிராமங்களில் – புதுக்கோட்டைப் பிரதேசத்திலிருந்து சுமார் ஐநூறு வருடங்களுக்குமுன் சென்ற தமிழ்ப்பாரம்பரியக் குடும்பங்கள், அன்றாட வாழ்க்கையில் ஸம்ஸ்க்ருதத்தில் உரையாடும் மக்கள்திரள்கள் இருக்கின்றன; இவர்கள் சங்கேதி எனும் ஒரு கலவை மொழியிலும் பேசுபவர்கள் (கலவை = தமிழ் + ஸம்ஸ்க்ருதம் + கன்னடம்))

ருத்ரப்பட்டண கிராமத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் ஷாமஸாஸ்த்ரி. வேதபாடசாலைப் படிப்புக்குப் பின் பதின்மூன்று வயதில் மேற்படிப்புக்காக மைசூர் சென்றார். மைசூர் மஹாராஜாவின் திவானாக இருந்த சேஷாத்ரி ஐயரின் அன்புக்கும் மரியாதைக்கும் உடையவராக ஆகி, இயற்பியல் ஸம்ஸ்க்ருதம் ஆங்கிலம் படித்துத் தேறி, அவற்றில் பாண்டித்தியம் பெற்றபின் பெங்களூரில் சாமராஜா ஸம்ஸ்க்ருதக் கல்லூரியின் ப்ரின்ஸிபாலாக இருந்து, பின்னர் மைசூரின் கிழக்கத்திய நூலகத்தில் (ஓரியண்டல் லைப்ரரி – பின்னர் இது ஓரியண்டல் ரீஸெர்ச் இன்ஸ்டிட்யூட் ஆகியது) நூலகராகவும், சுவடிகளைப் பாதுகாத்து அவற்றின் படிகளைச் சரிபார்த்து – நூலகத்தின் பதிப்பாசிரியராகவும் பணி புரிந்தார்.  உயர்தரமான பணி.

1922முதல் சுமார் ஏழு ஆண்டுகள், அவர், மைசூர் தொல்லியல்துறை இயக்குநராக இருந்தார். அவருடைய மேற்பார்வையில் தான் ஹளேபீடு, பேளூர் பகுதி த்வாரசமுத்திரக் கோவில்கள் (இவை ஹொய்ஸாளர்கால சிற்பக் கலைகளின் உச்சங்களுக்குச் சான்றாக விளங்குபவை) மைசூர் சமஸ்தானத்தின் செலவில் புனருத்தாரணம் செய்யப்பட்டன. இன்னமும் பலப்பலவும் – பேளவாடி, பாகவள்ளி, கொரவங்களா, கொண்டஜ்ஜி, புஷ்பகிரி போன்றவையும்…

இச்சமயம் ஒரு சிரிப்பு (அல்லது சோகம்), கொண்டஜ்ஜியில்(?) நடந்தது என நினைவு: சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு பேருந்து நிறைய பள்ளிக்குழந்தைகளை ஒரு ஹொய்ஸாளப் பாரம்பரியச் சுற்றுலாவுக்கு (+அதிகம் அறியப்படாத பகுதிகளுக்கு) அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு, ஒரு இளைஞன் (டூரிஸ்ட் கைட் என நினைக்கிறேன்) வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்: “உங்களுக்குத் தான் தெரியுமே! எங்கள் இந்தியர்கள் எந்த அழகில் எப்படி எங்கள் கலாச்சாரத்தை பேணுவார்கள் என்று <சிரிப்பு> இதையெல்லாம் பிரிட்டிஷ் காரர்களும் திப்புசுல்தானும் புனருத்தாரணம் செய்ததால்தான் இப்படி இருக்கிறது!” பயணிகள் ஒருவரையொருவர் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் புளகாங்கிதம். என்னால் தாளவேமுடியவில்லை. “பொய் சொல்லாதே, இளைஞனே! வரலாறுகளைத் தெரியாமல் பேத்தாதே! கொஞ்சம் அசந்தால், திப்புசுல்தான் இங்குதான் மதச்சார்பின்மையுடன் கோயில் பூசாரியாக இருந்தார் எனச் சொல்லிவிடுவாய் போல…” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தேன். :-(

மைசூரில் உள்ள அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தைத் தொடங்கியதும் ஷாமஸாஸ்த்ரி அவர்கள்தாம். அவர், மேலும் கல்வெட்டு ஆராய்ச்சி, பண்டைய நாணயவியல் போன்ற துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார்.

தம் வாழ் நாளில் ஏழு முக்கியமான வரலாறு/இலக்கியம் தொடர்பான உரைகளையும்/புத்தகங்களையும் நூறுக்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதிய அவர் – ஒருகாலத்தில் இந்தியத் தொல்லியலில் முக்கியமானவராகக் கருதப்பட்டு பல சர்வகலாசாலைகளாலும் சான்றோர்களாலும் அவருடைய பாண்டித்தியத்துக்காக கௌரவிக்கப்பட்டார்.

ஐயய்யோ மன்னிக்கவும். கௌரவம் பாண்டவம் எனவெல்லாம் எழுதினாலும் மஜாபாரதத்துக்கும் இவருக்கும் தொடர்பு இருந்திருக்கவில்லை என அறிகிறேன், சரியா?

-0-0-0-0-

அர்த்தஷாஸ்த்ரம் என்பது மானுடனின் சமூகவாழ்வின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான ஆய்வு. அர்த்த – பொருள்/செல்வம் ஷாஸ்த்ரம் என்றால் அறிவியல்/ஞானப்புலச் சட்டகம்; ஆகவே, அது பொருளீட்டுவது + அதனை நிர்வகிப்பது தொடர்பான ஞானப்புலத்தை/விஞ்ஞானத்தை குறிக்கிறது.

மேலும், இது அரசின் நலனை, குடிமக்களின் மேம்படுத்தலை உறுதி செய்வதற்கான வழிமுறையாகச் செல்வத்தை உருவாக்குவதைக் குறித்தும் விரிகிறது. அரசு, வர்த்தக, இறக்குமதிகள் / ஏற்றுமதிகள், சில்லறை விற்பனை, போக்குவரத்து, கிடங்கு, வரி + நுகர்வோர் நலன் ஆகியவற்றின் பொருளாதார நிர்வாகம் உட்பட சகலதுறைகளையும் தொடுகிறது இது.

இன்னொரு நோக்கில் – இது அரசாள்வது, திறமையாக நிர்வாக இயந்திரங்களை இயக்குவது, இடுக்கண் வருமுன் காப்பது, சேமிப்பை அதிகப்படுத்துவது, சேமிப்பை சமூகமேம்பாட்டுக்கும் கட்டுமானக் பணிகளுக்கும் தரமும்தேவையும் பார்த்து உபயோகிப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது உரித்தான பலவிஷயங்களை காத்திரமாக அணுகுகிறது.

பொதுசகாப்தத்துக்கும் முன் சுமார் 300களில் (‘கிமு’ 300 வாக்கில்) விஷ்ணுகுப்த கௌடில்யர் (‘சாணக்கியர்’) என்பவரால் எழுதப்பட்ட இந்த ஷாஸ்த்ரம் – அதற்குப் பிறகு பலவாறாக உபயோகப்பட்டாலும் தண்டின் பாணர் மல்லிநாதஸூரி விஷ்ணுசர்மா போன்ற பல சான்றோர்களால் அது மேற்கோள் காட்டப்பட்டிருந்ததே ஒழிய அதன் முழுமூலம் காணக் கிடைக்கவில்லை.

நிலைமை இப்படி இருக்கையிலே – நம் தஞ்சாவூர் பக்க பண்டிதர் ஒருவர் தன் வசம் இருந்த ஓலைச்சுவடிக்கட்டுகளை மைசூர் கிழக்கத்திய ஆவணக் காப்பக/நூலகத்துக்கு, பலப்பல வருடங்களுக்குமுன் கொடுத்திருந்தார். 1905 வாக்கில் ஷாமஸாஸ்த்ரி, காப்பகத்தின் ஒருமூலையில் கிடந்த அதனைப் படிசரி பார்த்துப் பதிப்பிக்கும் பொருட்டு அலசிக்கொண்டிருக்கையில் – அதில் ஒரு சுவடிக்கட்டில் அர்த்தஷாஸ்த்ரமும் அதன் மீதான ஒரு பொழிப்புரையின் (=வியாக்கியானம், பட்டஸ்வாமின் அவர்களுடையது) ஒரு பகுதியும் கிடைத்தன.

அது கிடைத்தபின்னும் அது என்னவாக இருக்கக்கூடும் என்று அறிந்துகொண்டபின்னரும் கூட சுமார் மூன்று மாதங்களுக்குக் கடும்முயற்சியுடன் முட்டிமோதிப் பார்த்தும் அவருக்கு அதனை மொழிபெயர்த்துப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏனெனில் 1300களில் உருவாக்கப்பட்ட அந்தப் படி, ஸம்ஸ்க்ருத மூலத்தை தேவநாகரியில் எழுதாமல், தமிழில் படிப்பதற்கு வசதியாக க்ரந்த வரிவடிவத்தில் எழுதப்பட்டிருந்தது.

பின்னர் 1909ல், ஷாமஸாஸ்த்ரி அவர்கள் அர்த்தஷாஸ்த்ரத்தைச் சரிபார்த்து, படிதிருத்திய வரிவடிவத்தை மூல தேவநாகரியில் பதிப்பிக்கச் செய்தார். 1915 வாக்கில் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்பட்டு – பாரதத்தின் தொன்மையையும், அதன் ஆளும் கலை பற்றி ஆவணபூர்வமாகவும் அணுக ஏதுவாகவும் உதவியது.

(https://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10154297857356675)

இது ஷாமஸாஸ்திரி அவர்களின் வாழ்க்கையில் சுமார் பத்துவருடங்களை ஆட்கொண்டு வெளிப்பட்ட அழகு, இதற்காக நாம் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும். (இப்படியே பலர் இருந்திருக்கிறார்கள், பாடப்படாமல்-புகழப்படாமல் இருந்திருக்கிறார்கள் என்பது நம் வரலாற்றுச் சோகம்தான், வேறென்ன சொல்ல!)

-0-0-0-0-0-

ரிச்சர்ட் மேட்டெஸிக் எனும் மகாமகோ கனடா பேராசிரியர் (பொருளாதாரவியலாளர், கணக்குப்பதிவியல் வரலாற்றாளர், 1961ல் நாமெல்லாரும் இப்போது உபயோகிக்கும் ‘ஸ்ப்ரெட்ஷீட்’ வகைக் கணிநி அட்டவணைகளைக் கணக்குப்பதிவியலுக்குக் (அக்கௌன்டன்ஸி) கொணர்ந்தவர்) 2000தில் ஒரு புத்தகத்தைப் பதிப்பித்தார்.

இது கணக்குப்பதிவியலின் வரலாற்றையும் அதுகுறித்த சிந்தனைகளையும் குறித்த மிக முக்கியமான ஆவணம். மெஸபடேமியா/ஸுமேரியப் பிரதேசங்களின் நடைமுறைகளிலிருந்து பாரதத்தின் சிந்தனைகள் ஊடாக வரலாற்று நடப்புகளை ஆவணரீதியாக அலசுவது இது.

இதன் இரண்டாம் பகுதி – உலகத்தின் பழமையான (இதுவரை அறியப்பட்டவரை, கணக்குப்பதிவியல் ரீதியாக) முதல் கையெழுத்துப் பிரதி ஆவணமான (மேனுஸ்க்ரிப்ட்) அர்த்தஷாஸ்த்ரத்தை அலசுகிறது.

மேலும், அது ‘எதிர்மறை/நெகடிவ்’ எண்களை லௌகீக வாழ்க்கைக்கு ஏதுவாக உருவகம் செய்து, வரித்துக்கொண்டு, கணக்குப்பதிவியலுக்கு காத்திரமாக பங்களிப்பை அளித்த பாரம்பரிய இந்தியக் கணிதவியலாளர்களைப் போற்றுகிறது…

-0-0-0-0-0-0-

நான்கு மேலதிகக்குறிப்புகள்:1. கர்நாடக அரசு, அம்மாகாணத்தின் ஒப்பற்ற சான்றோர்களில் ஒருவரான ஷாம ஸாஸ்திரி அவர்களின் 150வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் என நினைத்தேன். அந்த அரசில் (அதிகார வர்க்கத்தைச் சார்ந்த) எனக்குக் கொஞ்சம் அறிமுகமான சிலரிடம் கோரிக்கை வைத்தேன்.  (இதனை மார்ச்2018 வாக்கில் செய்தேன் என நினைவு)

2. ஷாம ஸாஸ்திரி அவர்கள் மூலமாகக் கண்டடையப்பட்ட அர்த்தஷாஸ்த்ரம்  கணக்குப்பதிவியல் ஆசாமிகளின் அஸ்திவாரமான கணக்குவழக்கு முறைமைகளின் மகத்தான மூலம் என்பதால் – ஒருவேளை, இவர், பட்டயக் கணக்காளர்களின் செல்லமாக இருக்கக்கூடுமோ என எனக்கு ஓரளவு அறிமுகமான ஒன்றிரண்டு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் ஆசாமிகளைத் தொடர்புகொண்டேன்.

இதில் எனக்கு இரண்டு பிரச்சினைகள்: 1) பொதுவாகவே, நான்  சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் ஆசாமிகளை மதிப்பதில்லை – இதற்குப் பல காரணங்கள், ஒரு முக்கியக் காரணம், இவர்களின் மிகப்பெரும்பான்மையோர் தொழில்ரீதியாகப் பொய்க்கணக்கு எழுதுபவர்கள் (அதே சமயம், இந்த வகையறாவில் ஓரிரு விதிவிலக்குகளையும் நேரடியாக அறிவேன்; ஆகவே,  சகஏழரைகளில் யாராவது தப்பித்தவறி, சார்ட்டர்ட் அக்கௌன்டன்களாக இருப்பீர்களானால் பொங்கவேண்டாம்!) 2) இவர்கள் இருவரும் நேருவிய மாயையில் மூழ்கி – பாரதத்தில் ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் ஒரு மசுரும் பெரிதாக இருந்திருக்கவில்லை, கிராமங்கள் மூடநம்பிக்கைச் சோம்பேறித்தனத்தின் கூடங்கள் என நினைப்பவர்கள். (ஒருவேளை நான்,  இந்தக் கழிசடைகளுக்குப் பதிலாக, மதிப்புக்குரிய ஆடிட்டர்களும் தேசநலனில் அக்கறை உடையவர்களுமான எஸ்.குருமூர்த்தி, எம்ஆர் வெங்கடேஷ்போன்றவர்களைத் தொடர்பு கொண்டிருந்திருக்க வேண்டுமோ?)

3. சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1899ல் இளங்கலைப் பட்டம் (பி ஏ, ஹானர்ஸ்) வாங்கிய ஷாமாஸாஸ்த்ரிக்கு சென்னைப் பல்கலைக்கழகமாவது இந்த 150வருடத்து மரியாதையைச் செலுத்துமா எனப் பார்த்தேன். எனக்குக் (கொஞ்சம்) அறிமுகமான ஒரு சென்னைசார் காமர்ஸ் துறை பேராசிரியருடன் இதனைக் குறித்துப் பேசினால் – இரண்டு பிரச்சினைகள்: 1) அர்த்தஷாஸ்த்ரம் என்பதை வெறுமனே ஒரு மாக்கியாவெல்லித்தனமான சதிகாரப் புத்தகமாக மட்டுமே புரிந்து(!)கொண்டு தெளிவாக இருக்கிறார்; இத்தனைக்கும் அதனைப் படித்தாரில்லை! 2) எப்படி இருந்தாலும் இதுவும் ஒரு ஆரிய-பார்ப்பன சதியாகத்தான் இருக்கும், ஆகவே இதில் ஏன் நம் நேரத்தை விரயம் செய்யவேண்டும் என்கிறார். சரிதான்!

4. ஷாமஸாஸ்த்ரியின் கண்டுபிடிப்புக்குப் பின், சிலபல அர்த்தஷாஸ்த்ர வடிவங்கள் வடக்கில் பலவும் தெற்கில் சிலவும் கிடைத்தாலும் (அனைத்தும் தேவநாகரி) அவற்றுக்கிடையே சில மாறுதல்கள் / பாடபேதங்கள் / வேறுபாடுகள் இருந்தாலும் – இன்றுவரை அவருடைய திருத்தப்பட்ட படிக்கு இணையாக எதுவுமே இல்லை; அவ்வளவு சிரத்தையுடன் வடிக்கப்பட்டது அது. ஆக, இச்சமயம் – தமிழகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த அதன் மூலப்படிக்கு, அதுவும் பெரும்பாலும் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் சார்ந்த க்ரந்தவரிவடிவத்தில் வரையப்பட்ட அந்தப் பிரதிக்கு நாமெல்லாரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் அல்லவா?

ஆகவே, தமிழக அரசின் சார்பிலாவது இதனைக் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். கடந்த ஏப்ரல் மாதத்தில் எனக்கு அறிமுகமான ஒருசில அரசதிகாரிகளை கொஞ்சம் தயக்கத்துடன் அணுகினேன். ஆனால்…

… …ஹ்ம்ம் :-( எது எப்படியோ – எனக்கு இதுவரை இக்கோரிக்கை எழவுகள் குறித்து ஒரு விதமான சமிக்ஞையும் வரவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் இவ்விஷயத்தை எவரும் கொண்டாடுவதாக / முன்னெடுப்பவர்களாகவும் தெரியவில்லை. (அப்படியில்லை, என் கருத்து தவறானது என யாராவது ஆதாரத்துடன் சுட்டினால் மகிழ்வேன்)

-0-0-0-0-

 சரி.

…இந்த வருடமும், திடுக்கிடவைக்கும் வகையில் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. என் நண்பர் ஒருவருடன் அகஸ்மாத்தாக
சென்றவாரம் பேசிக்கொண்டிருக்கும்போதுதான்,  இதைப் பற்றி அவசியம் எழுதவேண்டும் எனப் பட்டது.

ஆகவே.

ஆனால் அம்மணிகளே, அம்மணர்களே – இந்த ருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி போன்றவர்களின் மகத்தான பங்களிப்புகளை பாரதம் எப்படி மறக்கக்கூடும், சொல்லுங்கள்?

நம்முடைய பாரம்பரியத்தின் உச்சங்களையும் பங்களிப்புகளையும் நாம் போற்றாமல் அவற்றைக் குறித்துத் தார்மீக ரீதியான பெருமிதம் கொள்ளாமலிருந்தால், அது யாருக்குப் பிரச்சினை?

ஒரு மசுத்தையும் அறிந்து/புரிந்துகொள்ளாமல் தாழ்மையுணர்ச்சியுடனும் எள்ளலுடனும் உலாவருவதில் இருக்கும் பேடித்தனமும் அல்லது சும்மனாச்சிக்கும், இல்லாத/இருந்திருக்காத விஷயங்களை மௌடீகத்தனமாக உச்சாடனம் செய்வதில் உள்ள தடித்தனமும் தான் நமக்கு லபிக்குமா?

நம் கசடுகளையும் நாம்தான் களையவேண்டும், நம் மேன்மைகளையும் நாம்தாம் போற்றவேண்டும். ஆனால், தேங்காய்களாக (வெளியே பழுப்பு, உள்ளே வெள்ளை) வளர்க்கப்பட்டிருக்கும் நமக்கு இது சுளுவான விஷயமில்லை என்பதும் புரிகிறது.

…அல்லது – இம்மாதிரியான முன்மாதிரிகளை நாம் போற்றாமல், வேறு யாராவது வெள்ளைக்காரர் போற்றினால்தான் நாமும் திடுதிப்பென்று முழித்துக்கொண்டு, ‘அடடே! வெள்ளைக்காரனே சொல்லிப்புட்டான், அவஞ்சொன்னா ஸர்யாதான் இர்க்கும், அத்தொட்டு நாமளும் ஓ போடுவோம்!‘ என உதட்டளவில் உச்சாடனம் செய்வோமா?

 …பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகிறதென்று…

-0-0-0-0-0-

மேலதிக/ஆதாரத் தகவல்களுக்கு:

Vibrant India – Collected papers of Mahamahopadhyaya Shamasastry; especially the preface. Sanketi Studies 7, 2009, Samudaya Adhyayana Kendra Charitable Trust, Mysore

Dr. R. Shamasastry Mahamahopadyaya of Mysuru who discovered the lost treatise Arthashastra! (https://starofmysore.com/dr-r-shamasastry-mahamahopadyaya-mysuru-discovered-lost-treatise-arthashastra/)

Featured: R. Shamasastry Photofolio (http://www.srikanta-sastri.org/r-shamasastry/4593947589)

Year Of The Guru – It’s hundred years since the discovery of Chanakya’s great work from a manuscript (https://www.outlookindia.com/magazine/story/year-of-the-guru/250522)

The Beginnings of Accounting and Accounting Thought – Accounting Practice in the Middle East (8000 B.C to 2000 B.C.) and Accounting Thought in India (300 B.C. and the Middle Ages), 1st Edition (https://books.google.co.in/books/about/The_Beginnings_of_Accounting_and_Account.html?id=8QqRVeUFA64C&redir_esc=y + https://www.routledge.com/The-Beginnings-of-Accounting-and-Accounting-Thought-Accounting-Practice/Mattessich/p/book/9780815334453)

விக்கிபீடிய எழவு: https://en.wikipedia.org/wiki/R._Shamasastry

-0-

 

22 Responses to “ருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்”

  1. SB Says:

    Sir,
    Thank you for this rare piece of writing and enlightenment of the precious past.

    PDF available of full book is available too.

    Click to access Arthashastra_of_Chanakya_-_English.pdf

    page 18 – even Vaastu concept was detailed ..as to how the accountant’s office ought to be . Vaastu practitioner can make good use of same.

    Also Hyperlink given for Mr.GM was same link as Mr.MRV.

    Many thanks again for letting us all know of this luminary.
    Thanks aplenty.

    Regards
    SB

  2. SB Says:

    Sir,
    With regard to your last para,if not for 1893, Chicago convention of World Religions , who would have known about Swami Vivekanandji ..Whole India woke up afresh owing to that singular incident (This leaving aside Sri Ramakrishana Deva’s magical working behind the screen).
    True we need the backing of premier Foreign Universities and well-known authors in the same field. Atleast a couple of tweets from the likes of Mr.Venkataraman Ramakrishnan and Mr.Amartya Sen would help ..Politicians from Karnataka may have to disseminate the relevant info .
    Thanks for your selfless dedication in reviving the valuable past.
    Regards
    SB


    • Sir I agree with your sentiments. But am not selfless or dedicated.

      Am merely trying to post some notes on a few aspects I know of, from our very interesting pasts. Probably there is some angstm that’s all.

      Also, I feel that, instead of waiting for someone else to honour our great traditions, folks and pasts – may be we should ourselves begin to document stuff – what do you think?

      • Ramesh Narayanan, Nanganallur Says:

        Do you think Raja of Ramnad who sponsored Vivekananda’s journey to Chicago in 1893 was influenced/informed only by the western philosophers about our ‘Rathnam’?


      • Sir, I recollect having read that it was the Rajah of Khetri(Ajit Singh?) who sponsored the trip and not Bhaskara Sethupathi (Rajah of Ramanathapuram); the latter was goading Swami Vivekananda to go, though.

        Anyway, I could be wrong here. Again, I think Vivekananda was quite famous in Bharath, even without adulation from the occident at that point (if any), I think.

        To consider your q, our jewel was recognized by us perhaps because it was inwardly focused; and if it were outwardly focused via sciences, tech etc, then I would say that, by then, the macaulay sponsored coconuttism was fairly entrenched in the Indian psyche. So.

        Please feel free to correct me. Thanks!

      • SB Says:

        Please note if not for this World forum our Indian Masses would not have got the full idea of reach of Vedanta . It’s all SRK’s play and 1893,World congress was just a tool . SV got the rousing welcome from Colombo to Almora on account of spreading our way of living . When western ideals were swallowing up our Indian culture with Kolkata being the epicentre, it was SRK’s divine grace that saved us from further wreckage as SRK used the same tool of ‘ Foreign influence’ (World Congress in1893 was the august assemblage ) to get Indians turn inward ..A Master-stroke (same : yada yada hi dharmasya) .

        What sort of slanders perpetuated against SV and how he beat them all is a fine history . Chennai people’s collecting money ( that’s SV’s wish as it’s the masses who should work towards making it happen) was the icing on the cake .

        Mr.Ramasamy is correct as appreciation from Westerners carrying relevancy /weightage ..

        The base idea is the World should know our forbears (in the same manner we Indians know about theirs …Darwin/schopenhauer, et al) and for this, a world platform is certainly required.

        Raja of Ramnad heard of the ‘occasion’ of World Congress and desired SV to participate and if he weren’t there, God’s grand program may have got achieved through some other means.
        FYI, when Chennai people collected money the first time for SV’s journey, it did not happen as SV was not ready ( waiting for Ma’s word).

        Anyway, sources are there for everyone to see and SV’s travelling to Chicago and returning to India and creating SRK math, etc was dream-like. India has in her the Divine backing to take refuge to and India will produce such children to beat all odds.

        SV’s Parivirajaka life was only a precursor for grand things to happen thereafter . A lot to ponder over

        Regards
        SB

  3. K.Muthuramakrishnan Says:

    Thank you for a neat introduction of the great man. I prefer such informative articles from you than Aasan baiting. When you have so much positives to tell us, why should we bother about ‘jingcha’ sounds?


    • யோவ் முத்து! டாங்ஷ்.

      ஆனாக்க, ஸிர்ப்பே வோணாண்றியா? அப்போ படாபேஜாராய்டுமேய்யா!

      டென்ஷன ரிலீஸ் பண்றது எப்டீ பின்ன?

      இல்லாக்காட்டீ சாரு எஸ்ரா போறூண்றியா? ஸிர்ச்சி ஸிர்ச்சி வவுறு நோவுமேய்யா!

      றொம்ப ஸீரியஸ்ஸா எள்த்க்கினே போவ்றதும் ஒத்துவராதுபா… ஏதோ மன்ஸ்க்கு வந்தத எள்தினோமா, நாமளே பட்ச்சிக்கினோமான்னிட்டு மகிள்ச்சி அடைய்ணும், அவ்ளோதான்!

      வாள்க்கை வால்வதற்கே!

      டாட்டா பைபை.

      • K.Muthuramakrishnan Says:

        I have shared in face book with out your permission.
        https://www.facebook.com/muthuramakrishnan.krishnan


      • யோவ்! என்ன இன்னான்னு நென்ச்சிக்கினுக் கீற நீயி!

        கடும் கண்டனம், அனுமதியில்லாமல் குறுமதியுடன் பகிர்ந்துகொண்டதால், உடனடியாக ஒரு வக்கீல் நோட்டீஸ் பார்ஸல் செய்யப்படுகிறது.

        ஊக்கபோனஸாக, ஆசானின் இயற்கைப்பசி குறித்து ஒரு அன்புப் பதிவும்…

  4. SB Says:

    Sir,
    Affirm categorically.
    The indisputable fact is that not all are as gifted as you are in terms of lucidity of writing and exposure to varied subjects .
    Sorry to bring aboard Mr.JeyMo here ..He was openly criticizing the lack of drive on the side of Universities/ Top echelons who get paid considerably to do their works (which is as that of bringing thesis and related ) but not doing even a bit to elevate the condition of Languages (Tamil primarily) and related . Politics has its footing there.
    We do get positively influenced by your goodself and we have to go for developing our expertise to bring up such articles of high value.
    We will.
    Thanks a ton.
    Regards
    SB

  5. Sivaaa Says:

    காங்க்ஷன கிங்க்ஷண ரிக்ஷ்ண ரைக்ஷ்ன டிக்ஷ்ண டிங்க்ஷனரே….


  6. சென்னை பல்கலைகழகத்தையும், தமிழ் நாட்டு அரசாங்கத்தையும் நீங்கள் ரொம்ப தான் எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு கற்பனாவாதியா என்று ஆச்சரியாமாக உள்ளது. அறிவு, பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. நாட்டுபற்றுள்ள வேறு அமைப்புகளிடமோ மத்திய அரசின் கணக்குப்பதிவியல் சார்ந்த நிறுவனங்களிடமோ கோரிக்கை வைத்திருக்கலாம்.

    //தமிழகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த அதன் மூலப்படிக்கு, அதுவும் பெரும்பாலும் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் சார்ந்த க்ரந்தவரிவடிவத்தில் வரையப்பட்ட அந்தப் பிரதிக்கு நாமெல்லாரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் அல்லவா?
    ஆகவே, தமிழக அரசின் சார்பிலாவது இதனைக் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். // ஆனாலும் இது ரொம்ப ரொம்ப ஓவர். என்னால் உங்களுடைய இந்த மனப்பிராந்தியை ஜீரணிக்கவே முடியவில்லை


    • என்ன செய்வது சொல்லுங்கள், எனக்கும் என் முட்டாள்தனமான எதிர்பார்ப்புகளை (anti-brahmins) நினைத்தால் அசிங்கமாகவே இருக்கிறது.

      அஜீரணத்துக்கு, வழக்கமாக நான் முழுங்குவதைப் போலவே, அமுக்குரா சூரணம் சாப்பிடலாம். உடனடி பலனுக்கு கியாரண்டி.

  7. jay673 Says:

    Thank you so much for this post.

    1.Never heard of this person and that is not a surprise considering the state of our text books.

    2. would be surprised if people in Karnataka know/ have read about this person in school.

    3. My grandfather used to read grantham and we still have some books in that script at home. Unfortunately none of the next generation picked that and so…… :-(


    • I think sir, Karnataka is a little bit more evolved in spite of JD(s) and Congress.

      But then, celebrating Tipu would get better mileage than celebrating a real contributor, no?

      IMO, in our economics and commerce courses at least, the basic ideas of indic approaches have to be presented.

      But then, young Siva Sankaran will come back and berate me! ;-)

      __r.

  8. Chandramouli R Says:

    ராம்,
    அப்பாடா!
    ஆசானீய, எஸ்ராவிய பதிவுகளிலிருந்து விடுதலை.
    ரொம்ப அற்புதமான பதிவு.
    ஒரு சந்தேகம்:
    எனக்கு தெரிந்தவரை ஜப்பான், கொரிய நாடுகளி இவ்வகை பதிவீடு முறையுள்ளதாக படித்துள்ளேன் GAPP அங்கீகாரமும் உள்ளதாம்.

  9. RC Says:

    முன்னோடி ஆளுமை குறித்த அருமையான பதிவுக்கு நன்றி.

  10. Swami Says:

    Bravo, Ram!
    One of your very best
    அருமையான பதிவு


  11. […] மூலங்கள் கொண்டிருக்கலாம்). அர்த்தஷாஸ்திரத்திலும்  ஒரு பஞ்சதந்திரக் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s