செயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு

November 15, 2018

முன்பொருமுறை ஒத்திசைவு ராமசாமியிடம் பேசும்போது “தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் ஆக்கங்களில் செயற்கை வர்ணனையே இருப்பதில்லையே, ஏன்?” என்று ஜெயமோகன் கேட்டார். சிரிப்புடன் “வர்ணிக்க செயற்கை இருக்கணுமில்லியா?” என்று பதில் சொன்னார் ராமசாமி. அது சென்னைக்காரரின் பெருமிதம்.

‘அது எப்படி?’ என உங்களுக்குள் ஒருகேள்வி கிளம்பினால் அது, அதுதான். அப்படியேதான்!

அது அவ்வளவே. அதுதான் ஆண்முக ஞானமரபு.

அதாவது கீழ்கண்டது வெறும் திராவிடப் பெரியாரிய அண்ணாயிய ஆன்மிக ஞானமரபு.

(https://www.thenewsminute.com/sites/default/files/styles/news_detail/public/periyar-anna-dmk-750.jpg)

ஆனால் இங்கே கீழே இருப்பது – தன்னையும் நைஸ்ஸாக உள்சேர்த்திக்கொண்ட ஆண்முக ஞான மரபு.

(thelogicalindian.com/wp-content/uploads/2018/08/Anna_Web.jpg)

 

அதாவது முக எனச் செல்லமாகத் தன்னை அழைத்துக்கொண்ட ஆண்மைமிக்க ஆணான மறைதிரு கலைஞரார் அவ்வப்போது கடைப்பிடித்த (shop liked) வழிமுறைதான் அது: யாராவது இறந்துவிட்ட ஆசாமி அல்லது மண்டையைப் போட்ட பிரபலப் பிரகிருதி — தன்னைப் பற்றிப் புகழ்ச்சியாகச் சொன்னார், அல்லது அறிவுரை கேட்டார் அல்லது மூக்கில் விரலை வைத்துக்கொண்டார் அல்லது பிரமித்து மாரடைப்பில் ஆழ்ந்து ஈடுபட்டார், ரத்தம் கக்கிச் செத்தார்… அதுவும் வேறெவரும் பார்க்காதபோது தனிப்பட்ட முறையில் என் காதின்கிட்டே வந்து குசுகுசுவெனச் சொன்னார் அப்படியிப்படியென்று…  அல்லது, குறைந்த பட்சம் என் கனவில் வந்தருளினார்… எனச் சரமாரியாக — கூசாமல் டகீல் அட்ச்சிவுடும் பண்புதான் இது.

இதனை எந்தக் கொம்பனும் கேள்விகேட்கவேமுடியாது என்பதுதான் இதன் பிரசித்தி பெற்ற தாத்பரிய சூட்சுமம்…

தமிழ்டகீல் செந்டகீல் செம்பதிப்புக்கு முன்பதிவு செய்யவும்.

…ஆக, அம்மணிகளே அம்மணர்களே! என் கண்ணால் மண்ணை அறைந்து மிச்சமிருக்கும் தலைமுடியை சீவிக்குழல் முடிந்து சொல்வேன் யான். ஆண்முக மரபில் எதுவும் ஆகச்சிறந்த ஆகப்பெரிய சாத்தியம் அன்றிப் பிறிதொன்றில்லை.

ஏன், ஆறுமாதங்கள்முன் கலைஞர் கருணாநிதி என்னிடம், அவருடைய ஏகப்பட்ட  குடும்பங்கள் சம்பந்தப்பட்ட சொத்து பாகப் பிரிவினைப் தொடர்ப்பிரச்சினையைப்  பற்றி அறிவுரை கேட்கவந்தபோது, கண்கள் பனிக்க இதயம் இனிக்க, என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

தெரியவேண்டாமா? நன்றி. :-(

-0-0-0-0-0-

சென்னைமாவட்டம் எப்போதுமே கறுப்புசிவப்பானது. ஏனெனில் அது தெராவிடத்தின் கோட்டையன்றோ?

ஒரு பெரிய மழைக்காலம்.

அவ்வப்போது சிறிய சிலிர்ப்பு தரும் சில்லென்ற பூந்தூறல் அண்ண காலமும்.

ஒரு பெரிய மெரீனா பீச். அங்கு குட்டிக்குட்டி குட்டிகள். அவை நாய்களாகவும் இருக்கலாம். நிறைய மணல். மானுட வாழ்வின் கணத்துளிகளின் பெரு வெள்ளம்.

பெரு?? பெரு, தெற்கமெரிக்க நுனிமூலை ஓரத்தில்,  சாருநிவேதிதாவின் எதிர்கால வருகைக்கு பயந்து, பாவம் நடு நடுங்கிப்போய் பம்மிக்கொண்டிருக்கிறது.

பெருஞ்சென்னைத் தெளிவட்டக் கோட்டையில் தமிழ்க்கோல் செங்கோலோச்ச மேலதிகமாக இரண்டு  பிரிவுகள்: அஆஇஈஉஊஅதிமுக திமுக.

கோடைக்காலம் அழகானது. வியர்வைக் கொசகொசப்பு அருவியாக மாறி அருமையான அவதானிப்பை அளிக்கும். சட்டை முதுகிலும், ஜட்டி குஞ்சாமணியிலும் ஒட்டிக்கொள்ளும்.

மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலம் சீரான தொடர் வெயில்கொண்டது. நவம்பரில் கனமழை. தீபாவளி சமயத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பான கெடுபிடியுடன், கொடுமழையை அனுமதிக்கும். பட்டாசுகள் நமுத்துப் போகட்டும் என்கிற மனிதவுரிமை நல்லெண்ணம்தான் காரணம்.

அதன்பின் ஆடாமல் ஊறல், டாஸ்மாக் உபயம்.

பின்னர் மௌனம் தெளிந்து  போகிறது, வேலிமேல் ஓணான் நெளிந்து. (புதுக்கவிதே எப்டீக்கீது? எல்லாம் பேராசானின் திருவருள் ஓணக்களி, கேட்டோ?)

சென்னையில் அனைத்தும் செயற்கை. ‘செயல்படும் கைகள்’ எனவும் ‘செய்யப்பட்ட கை’ எனவும் இதனைக் கருதலாம் என என் ஆசான் சித்த நைதன்ய சதி சொல்வார்.

அதனால்தான் சென்னையின் பொருளாதாரம் என்பது பரபரவென்று வளர்கிறது. மக்கள் செயற்கையை மட்டுமன்றி உலக்கையையும் இலக்காக்கி இடக்கையால் இடக்காக இடித்து வலக்கையால் உலக்கையையே ஒருகுடையின்(மான் மார்க்) கீழ் ஆள்கிறார்கள். அதாவது, மல்லாக்கப் படுக்கிறார்கள். அழுக்கை அகற்றப் புழுக்கை போடுகிறார்கள். அதாவது, திரைப்படம் எடுக்கிறார்கள்.

+ஆற்றொழுக்குத் தெளிதேர் வஜனங்கள் சமேதமாகவும். வாழ்க்கையை ஓட்டவேண்டுமன்றோ? மேலதிக இடக்கைகளுக்கு எஸ்ராவை அணுகவும். பை ஒன், டேக் ஒன் ஃப்ரீ. அள்ளிக்குங்க, ஆஃபர் இருக்கும்வரை.

மன்னிக்கவும். மேற்கண்டபடி எழுதியதற்கும் செவ்வல்லியின் நாள்  என்பதற்கும் ஒரு மசுத்துக்கும் தொடர்பில்லை என்பதன்றிப் பிறிதொன்று குசும்பும் இல்லை.

வம்புக்கு அலைபவர்கள் வாயையும், கருமத்தின் வாழ்வதனைக் கவ்வும் சூத்தினையும் உள்ளிட்ட அனைத்துத் துவாரங்களையும் மூடிக்கொண்டு ஏகோபித்து அகலவும்.

நன்றி.

தற்குறிப்புப் பின்குறிப்பு: பாவப்பட்ட இறந்தவர்கள், விக்கிரவாண்டி ரவிச்சந்திர ஆவிஜோசிய மீடியம் மூலம் ஜெயமோகனிடம் அமோக அருள்வாக்கு பெறும்போது, ஆக்சுவலாகவே என்னைப்போல உயிருடன் இருப்பவர்கள், அன்னாருக்கு அருள்வாக்கு தருவதும் சாத்தியமன்றோ?

16 Responses to “செயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு”

 1. K.Muthuramakrishnan Says:

  காலை எழுந்தவுடனேயே அல்லது கடலூரார் போல பதிவேறும் வரை தூங்காமல் இருந்து இரவே படித்து முடித்துவிட்டுத் தூங்கும் சீடர்கள் குழாமில் ஒருவரும் இவற்றைப் படிக்கப் போவது இல்லை. ஆனால் ஆசான் கட்டாயம் படிக்கிறார் என்று பட்சி சொல்கிறது.உங்கள் நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமே என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.

 2. SB Says:

  Sir,

  https://www.jeyamohan.in/114856#.W-0OszgzbIU

  https://www.jeyamohan.in/114996#.W-0O7TgzbIU

  quote-

  இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ” என்னுடைய எண்ண ஓட்டத்தையே மாற்றியது.சிறப்பான புத்தகம். இந்து ஞான மரபும், அதன் முரணியக்கமும், முரணியக்கத்தின் அர்த்தமும் அற்புதமும் புரிந்தது. யோசித்தால், பெரும்பாலான தருணங்கள் , இரட்டை படையாகவே [ உதாரணமாக, (0 ,1), ( ஆம், இல்லை ), (முடியும், முடியாது), (கிடைக்கும், கிடைக்காது)] யோசித்திருக்கிறேன், செயல்பட்டிருக்கிறேன். இரண்டு நுனிப்புள்ளிக்கு இடையில் உலகமே இருப்பதை உணராமல் இருந்திருக்கிறேன்.

  Unquote-

  Unraveling the writings of Jeymo’s aficionados is much more tougher than Master’s writings themselves !

  Charu visited U.A.E recently (Sharjah Book Fair).

  பெரு?? பெரு, தெற்கமெரிக்க நுனிமூலை ஓரத்தில், சாருநிவேதிதாவின் எதிர்கால வருகைக்கு பயந்து, பாவம் நடு நடுங்கிப்போய் பம்மிக்கொண்டிருக்கிறது.

  ‘PERU IS WAITING’ ..Above para elicited more laughter than rest of the piece. One Jeymoh fan who literally tortured you flew off thanks to your strong threat of exposing her to her HR dept . View same, rest be assured there is nobody there (Jeymo’s ardent devotees) to
  pick a fight . All parts became (w)hole (apropos கவ்வும் சூத்தினையும்).
  One article covering all (Dravida, Es Ra , Charu, Jey Mo, Chennai )
  is superb. Thanks for the good laugh.

  Regards
  SB

  • Swami Says:

   அன்பின் SB
   “Unraveling the writings of Jeymo’s aficionados is much more tougher than Master’s writings themselves !”
   இதெல்லாம் ஆசானே எழுதி சிஷ்ய பிள்ளைகள் பெயரில் வெளியிடுவது என்று எனக்கு எப்பொழுதும் ஒரு doubtu ?!
   இதை தவிர பிறிதொன்று அன்றி வேறொன்று இல்லை

   சுவாமி


   • ;-) பொதுவாக +1.

    ஏனெனில் இம்மாதிரி அவர் செய்திருக்கிறார். ஆனால் அண்மைக்காலங்களில் அப்படியில்லை என நினைக்கிறேன் என்பதை மண்டையில் அறைந்துகொண்டு சொல்கிறேன்… தவறாகவும் இருக்கலாம் என் அவதானிப்பு எழவு.

    ஏனெனில் மறைகழன்ற வாசகர்கள் அவரைப் படித்துப்படித்து (என்னைப் போலவே) ஜெயமோகன் மாதிரி எழுத ஆரம்பித்துவிடுகிறார்களோ என்ன எழவோ என்ற எண்ணத்தை விட ஆகச்சிறந்த எண்ணம் பிறிதொன்று இல்லை. (எனக்கு)

    அடிக்கடி என் கீழ்மகனைப் பார்த்துக்கொள்வது பயமாக இருக்கிறது. :-(
    https://www.jeyamohan.in/115147

 3. RameshNarayanan, Nanganallur Says:

  தீராவிடலைகளுக்குப் பிறகு ஆசானுக்கும் அடிவருடிகளுக்கும் என் நன்றி உரித்தாகுக, உம்மை இவ்வாறு எழுத வைக்க தூண்டியமைக்காக

 4. RC Says:

  யாருய்யா இந்த விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்? எங்கேய்யா இருந்த இவ்வளவு நாளு கண்ணுல படாம? நன்றி அவரின் காணொளி கண்டேன் மகிழ்ச்சி.ஆவி வேற பேய் வேறயாம்!
  உங்க வேகத்துக்கு நீங்க ஆவியாத்தான் இருக்கனும்.
  இந்த திராவிட அரைப்பேய்க்கு பதிவுக்குழப்பம் முத்தி நாரோயில்-சுரா மற்றும் சென்னை-ஒரா சொன்னத கேக்காம சர்க்கார்-சுரா பார்த்து ஜெமோ சொல்லச் சொன்னதை கேட்கலாமான்னு ‘Ouija’ பலகையில் கேட்குது.ஆனா
  பலகையில் உள்ள என் டம்ளர் அசையவே மாட்டேங்குது என்ன செய்ய :-(


  • :-))) முதலில் சர்க்கார்-சுரா புரியவில்லை, பின்னர் கொஞ்சம் நோண்டியதும் உள்ளொளி கிடைத்தது. நன்றி! :-)

   யோவ்! கெள்ம்பி மொதல்ல ‘நாம் டம்ளர்’ கச்சீல சேறு! அப்பால அல்லாம் கெள்ம்பும்…

   ஆமேல, இந்த உடூப் காச்சியப் பாத்தாக்க (அஞ்சி நிமிட் தான், சர்யா) கொள்ப்பம் கல்ஞ்ஜி அல்லாம் சர்யாப்பூடும்…

   ணன்ரீ.

   • RC Says:

    அபே சாலே (! மன்னிச்சுக்க சாரே)
    பார்யாச்ச திவஸ் நந்தர் மல மராத்தி ஐயகலா,தன்யவாத்
    ஆபுன் ஸாங்ளா மானுஸ் ஆஹே

    பேய் ஓடிடுச்சு ஆலேலுயா


   • ;-) அப்டீன்னா வுட்றுபா!

    In the meantime, to cool off, view/listen to this sweet/innocent sambalpuri song/dance – ekada ekada ra re… https://www.youtube.com/watch?v=Ux1VlmbfCng


  • நன்றி! :- ) ஹ்ம்ம்… இருந்தாலும், ஆண்குறியீடு இல்லாதது, படுக்கையேறப் படிமம் இன்மை போன்றவை சில அரைகுறைகளே! ;-)

 5. Paramasivam Says:

  விக்கிரவாண்டி கிளம்பிக் கொண்டே இருக்கிறேன். ரவிசந்திர ஆவி ஜோசியம் கேட்ட பின் வந்து எழுதுகிறேன்

 6. elango Says:

  preygod you live longer than jemo
  oterwise you will be appearing often in his site
  quoting something


  • Sir, thanks for your sentiments. But pray ask, where I have been quoted recently in his blog?

   In this flower world, there are things other than this akkappor, no?

   __r.

   • Kannan Says:

    குருவே,

    லேட்டஸ்ட் அவன் இவன் படத்தில் ஏக வசனத்தில் வரும் கதாநாயகன் யார்?

    உங்களை ஆசீர்வதிப்பது போலவே உள்ளதே ?

    எதற்க்கும் கராத்தே, குங்க்பூ தபாலில் கற்றுக்கொள்வது நலம்.

    :)


   • சீடனே, முறுக்கு மூர்க்கனே!

    எனக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகைப்பூக்களை முகர்ந்துகொண்டிருந்தாலே போதும்.

    நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும், குங்ஃபூ எனும் கலையே தமிழகத்திலிருந்து போன விஷயம் தான் என்று. இது எட்டாவது அறிவு.

    ஏழவாவது அறிவுக்கு – https://othisaivu.wordpress.com/2013/03/01/post-168/ செல்லவும்.

    குங்குமப்பூவினை ஆவணிமாதத்தில் பூவையரும் காளையரும் ஆடிஆடிப் பறிப்பர். அந்த ஆட்டமே பிற்காலத்தில் ஒரு மறவத் தினவாட்டமாகி பின்னர் சீதபேதிதர்மன் வழியாக சீதள நாடான சப்பானுக்குச் சென்றது என்பதை நீவிர் அறியமாட்டீர். பாவம்.

    எனக்கு எங்கே அடித்துக்கொல்வது எண்ரு தெறியவிள்ளை.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s