வெண்முரசு தினடீவிசரிபதிவு: சுடச்சுட உடையும் செய்திகள்…

November 7, 2018

‘வாசகர்களுக்குக் கிறக்கம் கொடுப்பதுவல்லாமல்
வேறொன்றுமறியேன் பராபரமே’

டம்: 1008                                                டம: 10008

தலைப்புடையும் செய்தீகள்!

—->>>>—-

முன்னதாக மூத்திரம் போன திராவிடர் தலைவர், பின்னதாக என்ன செய்திருப்பார்?

—->>>>—-

#மீடூ தொடர்நிகழ்வுகளில் அடுத்து மாட்டிக்கொண்டவர் யார்?

டிஎம் க்ருஷ்ணா சொல்கிறார், “நானே #மீடூ தான்; அதுமட்டுமல்ல, என் குடும்பம் கட்டுப்பாடானது. #மீடூ #அவர்ஸ்டூ!

சென்னை மாநகர பேருந்துப் பயணத்தை மட்டுமே மூலதனமாக வைத்து, மக்ஸய்ஸாய் விருது ‘வாங்குவது’ எப்படி?

டிஎம் கிருஷ்ணா விளக்குகிறார்!!

—->>>>—-

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று என்ன உளறினார்?

நாளை என்ன உளறுவார்?

—->>>>—-

மக்கா மசூதியின் கிளையான தஞ்சைப் பெரியகோவில் பிரச்சினை வெடிக்கிறது!

நிலமட்டத்துக்குக் கீழே 786 (பிஸ்மில்லாஹ் அல்-ரஹ்மான் அல்-ரஹீம்) அடி ஆழத்தில் மசூதிச் சுவர்! நாசா செயற்கைக்கோள் மூட்டல் சான்றுகள்!!

விகடன் நிருபர்கள் புலன்விசாரணை செய்கிறார்கள்!!

—->>>>—-

டிடிவி தினகரனின் அரைகூவல்: “மோதியை மண்கவ்வ வைப்போம்! அஸ்ஸாமில் பாஜகவுக்கு டெபாஸிட் கிடைக்கவிடாமல் செய்து எடப்பாடிக்குப் பாடம் புகட்டுவோம்!!”

—->>>>—-

லெமூரியத் தமிழர்கள் அனைத்திலும் முன்னோடிகள்! அவர்கள் பலவினச் சேர்க்கைகளில் ஈடுபட்டனரா?

பாறாங்கற்களையும் பஃறுளியாற்றங்கரையில் புணர்ந்த தமிழன்! 

கீழடி சான்றுகள்!

தமிழறிஞர்கள் ஆராய்கிறார்கள்!

பாறையிடுக்கில் மாட்டிக்கொண்ட திராவிட ஆண்குறித் தொன்மையின் ஃபாஸில் தொல்பொருள்!

பாவப்பட்ட பாறைகளும் #MeToo என்கின்றனவா??

இணைய ஒழுக்கவியலாளர்கள் அலசுகிறார்கள்!

—->>>>—-

விடுதலைச் சிறுத்தை திருமாவளவனின் பகீர் அறிக்கை!

“அம்பேத்கரை அறிக்கை அளிக்கவிடாமல், தில்லி பாராளுமன்றத்தில் முட்டுக்கட்டை போட்டு 1857ல் அவதூறு பரப்பியவர்தான் இந்த மகாபாரத பீஷ்மர் – அதனை நான் நேரடியாகப் பார்த்தேன்!”

“அம்பேத்கரின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் ராமாயணத்தில் ஒளிந்துகொண்ட இராவணன் ஒழிக!”

“அம்பேத்கர் இஸ்லாமைப் பற்றி நல்லதாகவே மட்டும் சொல்லியிருக்கிறார், ஆனால் ஆரியர்கள் அவரைத் திரிக்கிறார்கள்!”

மேலதிக பகீர் செய்தீ! அரைகூவலிடும் திருமா!

“ஔரங்கசீப்பை ஆரத்தழுவிய அண்ணல் அம்பேத்கர்!  அதனை நேரில் பார்த்துப் புளகாங்கிதமடைந்தவனே நான்தான்!!”

—->>>>—-

சசிகலாவுக்கு 1 கிலோமீட்டர் உயரச் சிலை!

சசிகலா அறிவிப்பு!!

—->>>>—-

இசுடாலிர் பதிலடி அறிவிப்பு!

ஊழல் சசிகலாவின் சிலை அறிவிப்பைக் கேட்டு ஏமாறாதீர்! எங்கள் ஊழல்கள் இமாலய அளவு என்பதைச் சித்திரிக்க எவரெஸ்ட் உச்சியில் பத்து கிலோமீட்டர் உயர கலைஞர் சிலையை நிறுவுவோம்!

மத்திய மதவாத மோதி அரசு இதற்கு அனுமதி தரவில்லையானால், என் கோமணத்தைக் கிழித்துக்கொண்டு சட்டசபையிலிருந்து வெளியேறுவேன்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவச சாராயம்! வீடுதேடிவரும் உங்களுக்கான பங்கு!

—->>>>—-

பகீர் செய்தி! தமிழக கிராமம் ஒன்றில் விஷமாகப் பரவி வரும் வெள்ளைப்பூண்டு பற்றாக்குறை!

மோதி அரசு இதற்குப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலகவேண்டும்!!

வெங்கலபுர மக்கள் போராட்டம்!

அருணாச்சல நாடார் காய்கறிகனிக்கடல் முன்பு ஆவேச ஆர்பாட்டம்!!

டம்டமடம டமார்!!

நெடுநீள் வெங்கலனின் அதிவேதனை.

-0-0-0-0-0-

மாயாபஜார் எனும் இதிகாசத் திரைப் படத்தின் அப்பழுக்கற்ற பஜ்ஜிசொஜ்ஜி போண்டா வகையறா ‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் ‘ உள்ளிட்ட அசைக்கமுடியாத சான்றுகளை முன்வைத்து…
…அதிகசங்கனின் வெண்முரசு புடைத்துத் துடிக்க எத்தனிக்கையில் மக்காபாரதத்தின் மூலையில் இருந்த நாகர்கோவில் அருகில் இருந்த கிழக்கு எல்லைக்காவலரணில் நின்றிருந்த மத்தகஜ யானைப் பாகன்  படைத்தலைவர்களுக்கான போர்க்கொடியுடன் இருப்பதை தொலைவிலிருந்தே,  பித்தளன் அணுக்கமாக நோக்கினான்.

படைத்தலைவர்களுக்கு அவசரமாகக் கொல்லைக்குப் போவதற்கு வந்தாலும் அவர்கள் எல்லைக்காவல் அரணுக்கு வருவது அரிது என்பதை அறிந்த பித்தளன் உடனே, ‘கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி’ எனச் சம்பந்தாசம்பதமில்லாமல் சமபந்தி போஜனத்தைக் குறித்து அச்சந்தர்ப்பமாக அவதானிக்கையில், ஒருவழியாக அந்த மத்தகஜன்  ஒரு அரசனாக இருக்கலாம் என்பதை அரசல்புரசலாக அறிந்து புரவியில் ஆரோகணித்து காலாட்படையில் அவரோகணித்தான்.

வெங்கலன், ஞானப் பித்தனான பித்தலனின் புத்திரனாகிய பித்தளனிடம், கண்ணில் அறைந்துகொண்டு சொன்னான், “விதியின் வலி கொடிது. தர்மத்தின் மர்மம் அரிது. கர்மத்தின் நீர்மம் அடர்த்தியானது. ஆனாலும் நம் கருஞ்சருமத்தின் வெறுமம் எனவொன்றில்லை.”

பித்தளன் பதில் பகன்றான், “ஃபேர் அண்ட் லவ்லி களிம்பைத் தொடர்ந்து தடவிக் கொண்டால் கருஞ்சருமமும் வெளுத்துச் சங்காகச் சுடரொளி பரப்புமே, செவ்வொளி கூட்டுமே! அதுவன்றிப் பிறிதறியேன் யான்!”

ஆனால் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாலும் பதில்பேசாது பார்வையை அலையவிட்டுக்கொண்டு சாதனைகள் பலசெய்த துச்சாதனன் தன்னைத் தானே விலக்கிக்கொண்டு அவ்விலக்கத்தால் கலங்கிக் கூரிய சொற்களை தயக்கமில்லாது விடுத்தான் –

“வ்வோத்தா டேய், முட்டாக்கூவானே! என்னால் தொடர்ந்து இப்படிப் பலப்பல புத்தகங்களையும் முழ நீளக் கட்டுரைகளையும் இடதுகாலால் அஸால்டாக எழுதமுடியுமென்றாலும் ஆசானின் அமேஸான் பெருவெள்ளத்தில் கிண்டிக்கொண்டு கிண்டிலாகச் சுண்டிச் சுழன்று வரும் சுதாம வெண்முரசின் ஆக்ரோஷ ஆவேசத்தை உள்வாங்கி நீ வேறுவேலையற்றுத் தொடர்ந்து படிப்பதுதான் அவர் மூலதனம், ங்கொம்மாள!”

அன்றி ஏதேனும் ஒவ்வாப் பெருநிகழ்வும் அமைந்திருக்கவேண்டும் என ஆகப்பெரிய ஆசானிய ஆகச்சிறந்த ஆகமவிதிகளின் படி ஆலோசனை செய்த துரியோதனன், வெங்கலனிடம் மங்கலமாகச் சொல்லி ஆமைப்படைகளிடம் விரைவு கூட்டுப்படிக் கைகாட்டிவிட்டு – ‘எனக்கு ஆமைவடைகறி றொம்பரொம்ப புடிக்கும்’ என நீள் நெடு நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு நிலத்தில் அறைந்துசொன்னான்.

நீள்மூச்சுகளின் பொருளில்லாமை என்பதும் ஆமையினத்தின் ஒரு வகையோ?

ஆயினும் அந்தநாள் அப்பொருளிலா நீள்மூச்சு நெடுந்தொடர்ச் சொற்றொடர்கள் தொடங்கியபோது அந்த அயன்மையின் வியனுறு தன்மையே துரியோதனனை இயல்பாகப் பேசவைத்தது.

எஞ்சிய பேச்சின் மெலிந்த கசப்பையும் ஒழுங்கையும் ஓர்மையையும் வடிவையும் வழுக்கலையும் அதுவேயேன்றிப் பிறிதொன்று பிரபஞ்ச ஆறாவொழுக்காக அமர முடிவு செய்தது.

அடக்கம் அமரருள் உய்க்கும். ஊக்கபோனஸாக அமரரான பின் அடக்கமும் வாய்க்கும்.

மகாபாரத மாடுகளின் கொம்புகளுக்கு சற்றுமுன் கழுவப்பட்டவை போல விழிமட்டுமே அறியும் ஓர் ஈரம் உண்டு. ஆடுகளுக்கும் கலைமான்களுக்கும் அந்த ஈரம் உண்டு. ஆனால் காண்டாமிருகங்களின் ஒற்றைக்கொம்புகளை ஓர்மையுடன் ஒப்புநோக்கினால் ஈரத்தால் படிந்த மென்மயிர்களுடன் அவை ஆடிக்கொண்டு செல்வதைக் காணலாம். நான் ஆப்பிரிக்கா சென்றபோது இரட்டைக்கொம்பு காண்டாமிருகத்தைக் காணாததைக் கண்டதுபோல் காண்டாகிக் கண்டபோதும் நான் அடுத்த வெண்முரசு காண்டத்தை எப்படி எழுதுவது என்பதின் மென்மையையே அவதானித்திருக்கிறேன்…

விழிகளுக்கிடைப்பட்ட நாசியின் கீழுள்ள உதடுகளும் அவற்றுக்கு மேலுள்ள மீசைகளும் (சில சமயங்கள் பெண்களுக்குமேகூட இவை வாய்க்கப்பட்டுள்ளதை அறிவேன்) அவற்றின் கீழுள்ள தாடிகளும் – அவற்றின் ஆகச்சிறந்த மசுர் சிரைக்கப்பட்டு ஆஃப்டர்ஷேவ் அடித்தால் உடல்குளிர்ந்து உளம் நிறைவதைப்போல் அரிய ஊழ்கம் பிறிதில்லை.

இருந்தாலும், உள்ளத்தில் நல்லவுள்ளம் உறங்காகதென்பது வல்லவன் வகுத்ததே வாய்க்கால் தகராறு என்பதை – இன்னொரு மகாபாரதச் சான்றான ‘கர்ணன்’ திரைப்படத்தில் கண்சொருகிக்கொண்டே இறந்துகொண்டிருக்கும் சிவாஜிகணேசனின் நடிப்பும்…

…என்டி ராமராவின் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தலும் அவதானித்துத் தெளியவைப்பதைவிட ஆகச்சிறந்த பிறிதொன்றில்லை.

இலக்கியக் காப்பியங்களில் எப்போதுமே சொல்லப்பட்டு வருவது என்பது, அவற்றின் அடிநாதகமாக இருக்கும் மானுட அறவுண்மை விழுமியங்களையன்றிப் பிறிதொன்று இருக்கமுடியாது என்றாலும் – அதுதான் என்றும் எவராலும் மாற்றிவிட முடியாத தொல்லியல் தொன்மத் தொடர்கதை என்பதையும் புரிந்துகொள்வதில், அந்த நிகழ்வில்தான் சுவையின் நீட்சியிருக்கிறது.

வெண்முரசைத் தொடர்ந்து இஸ்துக்கினே இள்த்தடித்து நீள் நெடு ஜவ்வுத்தனமான சூய்ங்கம் போல அனுதினமும் எழுதித் தள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் கதாசிரியனுக்கு நன்றாகவே தெரிந்திருப்பது என்னவென்றால் – எவ்வகையிலும் எதுவுமே சொல்பவருக்கோ சொல்லப்பட்டவர்க்கோ கேட்பவருக்கோ கேட்கப்பட்டதற்கோ எழுதுபவற்கோ எழுதப் படுவதற்கோ படிப்பவர்க்கோ படிக்கப்படுவதற்கோ ஒருசுக்கும், ஏன் ஒரு மசுத்துக்குமேகூடத் தொடர்பற்றது என்பதால் என்னத்தை வேண்டுமானாலும் அட்ச்சிவுடலாம் எனும் பிரபஞ்ச உட்பொருளின் உள்மனக் கிடக்கை.

மேலும், அட்ச்சுவுடப்பட்டதை அமோகமான அம்ருதமென்று அருந்தும் வாசக அருகர்கள் அருகிலேயே இறுகி இறந்துபோகத் தயாராக இருப்பதுவின்றி வேறொன்றுமறியார் என்பதால் இன்னமும் வசதி.

மக்காபாரதம் முற்றிற்று.

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா!

 

12 Responses to “வெண்முரசு தினடீவிசரிபதிவு: சுடச்சுட உடையும் செய்திகள்…”

  1. gopalasamy Says:

    Please be away from ” aranmanai ammikkal “. Please see the condition of Bagyaraj.

  2. venkatesh Says:

    அதாவது ஆசான், அரண்மனை கொல்லைப்புற சகவாசங்களின் மூலம் பல அதிகார மையங்களின் அன்புக்குரியவராகி விட்டார்,இனி அவரை யாராவது கலாய்த்து கட்டுரை எழுதினாலோ,இது கமெண்டு போட்டாலோ ரத்தத்தங்கக்கி சாவார்கள் என்று குட்டி கூமுட்டை சாத்தான் எச்சரிக்கிறது போலும்.

    • venkatesh Says:

      நியூஸ் ரீல்,பேப்பர் கட்டிங் ,போன்றவற்றை எல்லாம் கலந்து கட்டி இடையில் பாட்டு,இளிப்புசிரிப்பு என்று ஊர் சிரிக்க ,சினிமா பாரீர்!என்று மூளை செத்துப்போன கோடம்பாக்கத்து குருவி மூளை கள்,கலைசேவை செய்ய முங்கிக்குளிக்கும் கொட்டாங்கச்சி சாக்கடை தண்ணிக்கு ”சினிமா’ என்று சொல்லி அந்த கலையை சாகடித்து விட்டானுங்க,இந்த கம்மினாட்டிப்பயலுக!இந்த சோர பயலுகளுக்கு நம்ம” பழைய கருப்பன்’,,,’வசன மெழுதி,ஜெமோ,இவனுங்கதான் வக்கீலுங்களாம்!முருகதாஸ் இவனுங்களை பயன்படுத்திக்கொண்ட விதத்தைப்பார்த்தால்,ஸ்ரீ ரெட்டிக்கும் பழங்கருப்பனுக்கும்,நம்ம ஆசானுக்கு எந்த வித்தியாசமும் எனக்கு தெரியலை.


  3. ஐயா, தாங்கள் சொல்வதும் எனக்குப் புரியவில்லை.

    கோபாலசாமி சொல்வதும். அதனால் என்ன, பரவாயில்லை. ஏதோ அக்கப்போர் நடக்கிறது எனப் புரிந்துகொண்டு விட்டுவிடுகிறேன். நன்றி. :-)

    • SB Says:

      Sir,
      ‘Akkapor’ detailed here ..
      http://charuonline.com/blog/?p=7246

      1.
      It’s about move Sarkar (most boring and distasteful one in the recent times!).
      First-time director like Mr.Mari Selvaraj has done a fantastic work (movie : Pariyerum Perumal )over getting the tamil cinema resuscitate a bit .On the contrary, Directors like Mr.Murugadas/Mani Ratnam are ensuring that it’d to be in ruination.
      Unremarkable /illogical dialogues are fraught in this movie and the ironic part is that it was the combined efforts of both Director Murugu & Jeymo ..
      Mr.Venkatesh is spot-on in highlighting these issues .
      Sad state of affairs, to say the least .

      2.
      What Mr.Gopalasamy/Mr.Venkatesh wished to convey to you is that you should stop taking potshots at Mr.JMo as he got his clout (with known and unknown – unknown being magical (Mantrika) and magical wand to get you wounded (mental more than physical). As a loyal reader of your blog he’s relaying you that gut feel .

      Regards
      SB


      • அன்புள்ள எஸ்பி, பொழிப்புரைக்கு நன்றி. என் விட்டேற்றித்தனத்தை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

        மற்றபடி சாருவின் கட்டுரையைப் படித்தேன், பாவம், பொறுமலுடன் தான் எழுதியிருக்கிறார்.

        இப்படி எவ்வளவோ நல்லவிஷயங்கள் நடந்துகொண்டிருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் பிரமிக்கவைக்கும் அறியாமையில் தூங்கிவழியும் என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாக இருக்கிறது, என்ன செய்ய. :-(

        திரும்பிக் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வருகிறது, டாட்டா பைபை.

        ரா.

      • SB Says:

        Sir,

        Not knowing/Not wanting to know all these is a boon truly.
        These are sheer ca-ca.

        ‘Kali’ has now come in the form of ‘cinema’and it is one of dystopian harbingers.

        Peer pressure is catching up pupils to see such bad movies just to be on ‘knowing’ side and that’s a precarious situation.

        Our Jeymo is a dialogue writer ( in the likes of poet Vali ) writing out dialogues (some of them are factually wrong) ‘UNATTACHED’ (like a drop water on the lotus leaf)for the sake of remuneration in order to generate works of higher value in the form of ‘ Venmurasu’ etc ..

        We have to now see as to how 2.0 movie is going to be .
        Marketing already started with ARR gushing over it and Zee Tv having bought the satelite right of the movie.

        God bless TN ..it’s remarkable that most of crowds are kept under anesthesia called Cinema and Tv !
        Thank you.

        p.s -What we lose is that if you had known all these, we would have got some more laughs as you may have whipped them all with a right dosage of satire and sensibility .That’s our loss .

        Regards
        SB


      • Sir, dunno what to say so I wont say it.

        Thanks!

        __r.

  4. gopalasamy Says:

    Like Amrinder singh, I have to ask , what you studied in IIT. Did you not notice B.J’s recent blogs. His praise for Manushya buthran’s poem! So many economists writing about Tamilnadu’s phenomenal improvement/development under Dravidian ( DMK) rule. Don’t be surprised , if B.J starts election compaign for DMK or K.D brothers for this lok saba elections. He may say that if he gets a few crores without much effort, he will get more free time and write thousands of Venmurasu to please people like you and me.


    • Sardarji sir, please pardon me. I do not read much (nor did I study much at my halwa pater) of Jeyamohan because I have a hard time controlling my laughter. Oh what to do.

      Well, venmirasdar saheb can lengthily do what he likes to, we down-to-earth zamindars can also do what we please.

      Or so I like to tell myself.

      Oh well.

      __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s