அவசர உதவி தேவை! ப்ளீஸ்!!
October 26, 2018
காப்பாற்றுங்கள்!
கண்ணீர்மல்கக் கதறிக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ப்ளீஸ்!
ஒருபக்கம் – ஜெயமோகிகள் ரவுண்ட் கட்டிக்கொண்டு அடிக்கிறார்கள் – என்னைத் தயைசெய்து மன்னித்துவிடுங்கள் என நான் புறமுதுகிட்டு ஓடிக்கொண்டே கேவிக்கேவி அழுதாலும் – பெருந்தன்மையோடும் தயாளகுணத்தோடும் என்னை விட்டுவிடமாட்டேனென்கிறார்கள்.
இன்னொரு பக்கம், முன்னறிகமில்லாத ஒரு நபர், தன்னை ஒரு ‘நேருவிய ஸோஷலிஸ்ட்’ (Nehruvian Socialist) என அழைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், கடந்த சிலமாதங்களாக என்னைப் படுத்தி எடுத்துக்கொண்டிருக்கிறார். என்னை மதமாற்றம் செய்து கொண்டையில் சொருகிக்கொண்டால்தான் ஆச்சு எனப் பிடுங்குபிடுங்கு எனப் பிடுங்கல்மயம். இவருடன் தொடர்ந்து மாரடிக்க — சாவகாசமாக முழ நீள மின்னஞ்சல்களை சரியோ தவறோ – பாயிண்ட்பாயிண்டாக அடித்துவிடக்கூடிய பராக்கிரமம் மிக்க எனக்கே சுத்தமாக முடியவேயில்லை.
ஆவணரீதியாக ருசுவுடன் பேசலாமென்றால் அவர், கோமணரீதியாகக் குசுவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
இதுமட்டுமல்ல – இவரே (ஜெயமோகன்போல) கண்டுபிடித்த பதமா எனத் தெரியவில்லை – ‘நேருவியம்’ (Nehruism) என ஒரு விசித்திரவீர்ய ஜந்துவையும் உட்கொணர்ந்து அதற்கும் ‘நேருவிய ஸோஷலிஸ்ம்’ எனும் முற்குறிப்பிட்ட ஜந்துவுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்துக் கொல்கிறார்.
பாரதத்தின் சுபிட்சம் நேருவியத்தில்தான் இருக்கிறது என்கிறார். ஆகவே ராஹுல்காந்திதான் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்கிறார். இந்தப் பையனால்தான் நேருவியம் கடைப்பிடிக்கப்பட்டு (shop wanting silk) எதிர்காலத்தில் பாரதம் கடைந்தேறலாம் என்கிறார்! நேருவியத்தின் செயல்வடிவமாக ராஹூல்காந்தியின் திட்டங்கள் இருக்கின்றன என்கிறார்.
ஆனால், அந்தத் திட்டங்களைக் குறித்த என் அறியாமையைத் தெண்டனிட்டுத் தெரிவித்தால், என் அறியாமை இருளை நீக்கிக்கொள்ள விவரங்களைப் பணிவாகக் கேட்டால், விவரணைகளைக் கொடுக்காமல் திட்டுகிறார். வலதுசாரி வெறியிருந்தால் அவை புலப்படமாட்டா என்கிறார். சரிதான்.
நான் ஏன் பீதியில் இருக்கிறேன் என்றால் – கொஞ்சம் அசந்தால் ஏதாவது ராஹுவியம் (Rahulism) அல்லது ராஹூலிய ஸோஷலிஸ்ம் (Rahulian Socialism) என எத்தையாவது கனகம்பீர ஆயுதத்தைத் தூக்கி, இந்த ஆசாமி, என் மண்டையில் பொளேரென்று போட்டுவிட்டால் – என்ன முதலுதவி செய்துகொள்வது, எந்த ஆபத்துதவிகளை நாடிப் பொன்னியின்செல்வனுடன் ஐக்கியமாவது என்பவற்றைக் குறித்துத்தான். :-(
அல்லது பாரதத்தை (verse chariot aunt) ராஹுல்தசை என எந்த எழவாவது பீடிக்கப்போகிறதா? கூட கேதுல்தசைக்குப் பதிலாகக் கேஜ்ரிவால் எலும்பும் ஒன்று சேர்ந்துவிடுமோ? ஏடாகூடமாக ஆகிவிடுமோ? :-( ஐயய்யோ!
…ஏற்கனவே, கனத்த மனதுடன், நான் இந்த பெருமாள்முருக பக்திமிகுந்து அல்லாடிக்கொண்டிருக்கிறேன்…
பிரச்சினை என்னவென்றால், நான் ‘நேருவிய ஸோஷலிஸ்ம்’ என்பதைப் பலமாமாங்கள்முன் முதலில் கேள்விப்பட்டு, இன்றுவரை அதனைப் புரிந்துகொள்ளளக் கடும் முயற்சி செய்துகொண்டிருப்பவன். மனம் பேதலித்துப் பல புத்தகங்கள், ஆவணங்கள் படித்தபின்னும், இத்தனை நாட்கள் வாழ்ந்து குப்பைகொட்டியபிறகும், செறிவான/சொறியான அனுபவங்கள் அடைந்தபின்னுமேகூட எனக்கு இந்த விஷயம், எழவு பிடிபடவே இல்லை. நான் ஒரு பரம முட்டாளாகத்தான் இருக்கவேண்டும், என்ன செய்வது சொல்லுங்கள்! இதற்குமேற்பட்டு எனக்கு இன்னமும் சுத்தமாகவே புரியாத, அறியாத இந்த ‘நேருவியம்,’ ஐயய்யோ! இந்த வயதில் எனக்கு இது தேவையா? :-(
நிலைமை இப்படி இருக்கையிலே, நேருவியம்தான் எல்லா பிரச்சினைகளைத் தீர்க்கும் என்கிறார். இது என்னடா விபரீதம்! இது ஏதாவது அண்ணாயிஸத்துக்கு முறைப்பெண்ணா என்ன?
எது எப்படியோ – ஆக, நானும் உடனடியாக நேருவியத்துக்கு மாறினால் – குறைந்தபட்சம், இந்த மனிதர் என்னைத் தொடர்ந்து தொல்லை செய்வதாவது நிற்குமோ?
நேரு மாமம் வாழ்க.
இல்லை – நிபந்தனையற்று ஜெயமோகன் தாளடி சரணடைந்து வெண்முரசுக் குளவி கொட்டக் கொட்டத் துடித்துக்கொண்டு புரளவேண்டுமா?
இதுதான் வெண்முரசியம் அல்லது ராமசாமிசரணாகதியமோ என்ன எழவோ!
கதி கலங்குகிறது.
இந்த அழகில் – ஒரு ஸவுதிஅரேபிய ஜிஹாதி அன்பர் (இவர் – என்னுடைய பிரத்யேக மகிழ்ச்சிக்காகவும், என்னை ஒரு முஸ்லீமாக மாற்றி வெளிச்சத்தை நோக்கி உந்துவதற்காகவும் எனக்கேஎனக்கு என – ஒரு பறக்கும் குதிரையின் மாதிரியைச் செய்துகாண்பிக்கக் கடந்த நான்கு மாதங்களாக முயன்றுகொண்டிருக்கிறார், பாவம்; சிரிக்காதீர்கள். அது மதச்சார்பின்மையில்லை!) ஒருவருடனும், ஒரு #மீடூ அம்மணியுடனும் (புளகாங்கிதமடையாதீர்கள், இதனால் நான் மேலதிகமாகப் பிரபலமாகப் போவதில்லை, அவர் என்னை நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை – ஆனால், இன்னொருவரைப் பற்றி எழுதவேண்டும் என்கிறார், அவ்ளோதான்!) வேறு எழவெடுத்த போக்கற்ற படுபீதியளிக்கும் ஆவிக்குரிய எழுப்புதல் அக்கினி அபிஷேக வகையறா உரையாடல்கள்.
பல சமயங்களில், என்ன மசுத்துக்குப் பொறுமையாக இருக்கிறேன் என்றே தெரியவில்லை. போதாக்குறைக்கு, சிலபல சகமூளைகழன்ற நண்பர்களுடன் சேர்ந்து கொள்கைக் கூட்டணி அமைத்து எங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றிச் சிறுகுறிப்புகளைத் தொடர்ந்து எழுதலாம் என ஒரு கொடூரக் கனவு வேறு – ஆசை இருக்கு தாஃஸில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு முட்டாக்கூவான்களுடன் உரையாட, வேறென்ன சொல்ல!
எனக்குப் பயமாகவே இருக்கிறது.
…ஆனால், சக 7½அடலேறுகளே! உடனடியாகப் போர்க்காலரீதியில் அணிதிரண்டு அலைகடலென ஆர்ப்பரித்து எனக்கு ஆதரவாக என்றெல்லாம் திராவிடத்தனமாகச் செயல்பட வேண்டாம்.
வெறுமனே – அவரவர் வழுக்கை மண்டையின்மீது குல்லா போட்டுக்கொண்டு, சட்டைப் பாக்கெட்டில் (அல்லது சட்டைப் பித்தான் ஓட்டையில்) ஒரு ரோஜாப்பூவைச் சொருகிக்கொண்டு ‘டிஸ்கவரி ஆஃப் இண்டியா’ + ‘க்ளிம்ப்ஸஸ் ஆஃப் வேர்ல்ட் ஹிஸ்டரி’ தலா ஒருமுறை தினமும் பாராயணம் செய்து – ‘நேருவியம் எனக்கு நல்ல புத்திகொடுக்க’ உங்கள் பிரார்த்தனைகளை எனக்குக் குரியரில் அனுப்பவும். அது போதும்.
மிச்சம் எல்லாவற்றையும் நேரு (அல்லது அல்லாஹ் அல்லது #மீடூ) பார்த்துக்கொள்வார்கள்.
தெய்வம் நின்றும் கொல்லும்.
சனியன்.
October 26, 2018 at 09:27
Nehruvian Socialist வந்து ஜெயமோகனாரை காப்பாற்றிவிட்டார். ஆனால் எஸ்.ரா. மட்டும் இன்னும் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் ( //கடைப்பிடிக்கப்பட்டு (shop wanting silk)// ).
October 26, 2018 at 15:37
ஆ! சிங்கப்பூர் சோமு அவர்களே! வாருங்கள்!
உங்கள் செல்ல எஸ்ரா, மேக்ஸிம் கார்க்கி + தல்ஸ்தோய் பற்றியும் + பொதுச்செல்ல சாரு நிவேதிதா சிலே பற்றியும் உளறிக்கொட்டி அட்ச்சிவுட்டிருப்பதைப் பற்றி எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். மறந்துவிட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி.
தமிழின் நிலை கவலைக்கிடம்தான், பாவம்.
எல்லா புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் சொல்லியனுப்பிவிட்டீர்களா?
நன்றி!
October 26, 2018 at 19:04
ஐயோ, நானே என் ஆசானை மாட்டி விட்டுவிட்டேனோ :-?
இரண்டு நாளைக்கு இந்த தளத்திலிருந்து விடுப்பு(leave flower) எடுத்து Netகாணா ஊருக்கு செல்ல வேண்டியது தான்.
October 26, 2018 at 11:50
யாரும் ஜெமொ வை காப்பாற்றவேண்டாம்…மாட்டிக்கொண்டிருப்பது எஸ்ரா போன்றவர்கள் இல்லை (7.5) ஏழரைகளான நாம்தான் அவர்களிடம் மாட்டிக்கொண்டிருக்கிறோம்
October 26, 2018 at 15:30
ஹ்ம்ம்… தமிழில் மட்டும் தற்கால இலக்கியமோ தற்கால சினிமாவோ இருந்திருக்கவில்லையென்றால்…
நம் கொடுப்பினை அவ்ளோதான்.
October 26, 2018 at 12:37
You can counter Rahulism with Thaimurism.
October 26, 2018 at 15:33
ஐயா, எனக்கு இந்த தைமூரிஸ்ம் புரியவில்லை. கொஞ்சம் இடஞ்சுட்டிப் பொருள்விளக்கமுடியுமா?
என் செல்ல சாச்சா நேரு – தைமூர் பற்றி அவர் புத்தகத்தில் அட்ச்சிவுட்டதைப் பற்றி ஏதாவதா இது?
அல்லது தயிரும் மோரும் கலந்த தமிழ்ச்சோறு செஞ்சோறா?
October 26, 2018 at 18:37
Sir,
Don’t you know papaerazzi’s love for Taimur Ali Khan s/o Saif Ali Khan. For them sun will not set if some news about him published in Indian media.
October 26, 2018 at 18:42
Oh! Thanks. Did not know that.
Obviously I am not at all uptodate with current cultural references.
I thought you were possibly referring to Jawaharlal’s whitewashing of Taimur related history and all that. Completely off the mark.
Oh what to do.
October 26, 2018 at 15:40
Sir,
https://www.jeyamohan.in/114226#.W9L0dHszbIU
Recommend this book for you to get out from this ennui .
Incidentally, you are there (Ram) in the letter.
Mr.Guha got beat for writing incorrectly on Mr.Nehru by Mr.Jeymo and Mr.Aravindan Kanniyan very recently and who’s behind in wanting to convert you into Nehruvist needs to be probed into.
Please make your stand as to who you are (Rss-pian/Bjp-ian so to say ? ) and that will settle the scores with him. Joking !!
Thanks .
With respectful Regards
SB
October 26, 2018 at 15:51
Sir, thanks for the link. I have not read that book. Jeyamohan of course has a great sense of humour, no doubt about that.
If you could provide links of where rguha was corrected by the two fellows, that would be useful.
Thanks.
__r, who is not *that* Ram, please! He is a different sheep.
October 26, 2018 at 16:54
https://www.jeyamohan.in/98430#.W9MGe3szbIV
http://contrarianworld.blogspot.com/2013/11/
Sir
Thanks ..Checking the specifics .
Regards
SB
October 26, 2018 at 17:04
https://contrarianworld.blogspot.com/2015/12/indias-architect-jawaharlal-nehru_13.html
Sir, both of them are not fans of Mr.Aravindan Neelkandan too.
I have to search for that specific article which I remember to have read . Mr.Guha’s prominence is not lauded by both of them . Mr.PAK’s stand on Mr.Nehru also is unappeasable.
Mr.Nehru’s contributions are galore to be placated .
When you find time, please check on that masterpiece by Mr.AK .
Your silence on making your stand clear (which schism you belong to) will get your pushers to get pushed away once and for all.
Regards
SB
October 26, 2018 at 18:04
Thanks for all info, dear SB. Sometimes I have issues understanding you because of your style – but same is my case too!
RE Aravindan Neelakandan – if they are not fans of his writings, what is the issue – am not able to understand this statement!
Anyway.
I do not *belong* to any group. I used to be a card carrying member of a ML party in the wasted days of my youth, for a while – but currently I do not *belong* to any political/mass-based outfit.
I would always flip for any reasonable political power that has the heart and soul focused firmly on/for the all-round growth of Bharath; for the outfits that work for a future – away from all kinds of occidental shackles – intellectual and otherwise.
I feel that, given the situation, I am for BJP. I am for Modi – he is clean, does his job, bloody SLOGS and mostly does good work, has damn good credentials in management/admin – though I feel that a lot more should have been done – esp in ridding the powerful positions off the liberalwallahs, edu reform and closing/divesting PSUs. But I also know firsthand how good things are happening at the centre. (all this cannot be suitably dealt with in a mere comment here, though!)
I know the inside workings of RSS a bit. This org is NOTHING like what is being projected by random liberals. It is NOT devilish; so much stellar work is being done by it. So.
Though he has the craft of writing in good Tamil – I do not consider Jeyamohan as literate in history, among other things. Same is the case with AK – but these folks may have read a few books here and there – and are perhaps, STILL forming their opinions iteratively. So far so good.
About PAK – I have read his work of fiction – and some essays. That’s all. I know (via some folks on that site) that he writes a lot on facebook – but I do not have the time or energy to check him out seriously.
I have worked significantly in public sector (manufacturing and finance), have been a serial entrepreneur of sorts and was neckdeep making love to that beastess called education. I have good friends in bureaucracy. I kinda understand how and why things are happening the way they are.
We all have a right to our informed opinions based on concrete data – not to rabid positions or despicable ignorance based on borrowed narratives – that’s what I think.
So. YMMV. Thanks.
Having said all that – I think I have read the above posts when they were hot off the press. Tiring.
October 27, 2018 at 22:27
இந்த உலகத்தில் ரெண்டே அறிவாளிகள். ஒருவர் ஜி.டி. நாயுடு அவர் செத்து போய்விட்டார். இன்னொருவர் ஒத்திசைவு ராமசாமி அவர் எல்லோரையும் சாவடிப்பார்
October 27, 2018 at 22:29
Thanks!
KnowBucket
October 29, 2018 at 10:00
Sir,
https://contrarianworld.blogspot.com/2018/10/yuval-noah-harari-western-academics-and.html
A good rebuttal by Mr.AK…nice to be read.
Thought of bringing this to your notice .
Mr.Kosambi as a sacred cow in Mr.JMo’s circle is an interesting point .
Thanks.
Regards
SB
October 28, 2018 at 09:18
Mr.Hari- you are not readily appreciating the free laugh that you are getting from The Author and you must develop sense of humor which even Mr.JeyMo recommends to his pupils (but none of them get an idea of it ).
Mr.Ramasamy is spending a considerable time bringing out these top-notch articles PRO BONO . Nowhere would you see such kindling of laughter and some cases profound ideas being brought out (such as the one on Swami Gyan Swaroop Sanandwho gave up his life for Ganga) which even none of known Tamil writers covered up adequately owing to lack of knowledge.
Not to lead to deliverance of ‘surgical strike’ by 7.5 (now gone up) readers who would create an elite army to defend our leader. Please be aware !
If you would bring aboard one article as in the like of Author’s we will take a bow .Else , you need to acknowledge your being too vainglorious !
Regards
SB
October 31, 2018 at 08:32
அன்புடையீர்,
நான் “ஹாரி பாட்டரும் நான்கு கழுதைகளும்” என்ற தலைப்பை பதிவு செய்துள்ளேன்.
இதர்க்கும் பரமார்த்த குரு கதைக்கும் சம்பந்தம் கிடையாது, ஐந்துக்கும் நாலுக்கும் உள்ள வித்தியாசம்தான்.
கதையின் ஒன் லைனர், ஹாரியின் விளக்குமாறு ஒரு நாள் தொலைந்து விடுகிறது. அது உண்மையில் காணாமல் போய்விட்டதா,
அல்லது கழுதைகள் தின்றுவிட்டதா என்பதைக் கண்டுபிடிப்பதுதான் கதை.
மொத்தக்கதையும் லண்டம், not to be confused with London, என்ற சிற்றூரில் நடப்பதாக உள்ளது.
தயை கூர்ந்து தாங்கள்தான் வசனம் எழுதவேண்டும்.
படம் பப்படமாகாவிட்டால் லாபத்தில் பங்கு உண்டு, இப்போதைக்கு ஒன்றும் கொடுக்க இயலாது.
அதானால் வீட்டிலெயே உட்கார்ந்து எழுதவும்.
நன்றி.
November 1, 2018 at 07:56
ஐயா, தற்போது இயக்குநர் தார்கோவ்ஸ்கியுடன் றொம்ப பிஸ்ஸீயா கீறேன். கதை டிச்கசன் ஓடிங்.
பிறிதொரு சமயம் உங்களுடன் சேர்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிப்பீர்களா?
நன்றி.
November 1, 2018 at 09:31
ஏழரை மடங்கு அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்றால் அது உங்கள் இ(க)ஷ்டம்.
:(
November 1, 2018 at 18:24
Mouth Bag, I no want, siree! ;-)
November 1, 2018 at 05:19
November 1, 2018 at 07:37
திராவிடத் தம்பீ சொ. சங்கரபாண்டி அமோகமாக உளறியிருக்கிறார்.
1. இந்த் ‘தமிழ்மொழிக் குதறல்’ பற்றி வந்துள்ள புரளிச் செய்தியை நம்பி, துளிக்கூடச் சிந்திக்கும் தன்மையோ, படிப்பறிவோ அற்ற முட்டாக்கூவான்கள்தாம் தங்களுடைய மேலான கருத்துகளை அளிப்பார்கள்.
2. ஆக — // ”முட்டாக்கூவான்கள்” என்ற சொல்லை தமிழர்களைக் குறிப்பதற்காக அடிக்கடிப் பயன்படுத்துவார் மோடியின் கண்மூடித்தனமான ஆதரவாளரான ”ஒத்திசைவு இராமசாமி” என்ற முட்டாக்கூ அறிவுஜீவி. அவரிடமிருந்து அச்சொல்லைக் கடனாகப் பெற்று இங்கு பயன்படுத்துகிறேன்// — என சங்கரக்கபடியார் எழுதியுள்ள படியால் தன்னுடைய முட்டாக்கூத்தன்மையை ஐயம்திரிபற நிரூபித்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.
பொதுவாகவே படுமட்டமான அசட்டுக் குப்பைகளை அனுமதிக்கமாட்டேன்.
ஆனால் இம்முறை திராவிடர்களுக்கே என இடஒதுக்கீடு செய்திருக்கிறேன்.
November 1, 2018 at 17:07
https://indianexpress.com/article/trending/trending-in-india/statue-of-unity-tamil-translation-sign-board-wrong-reactions-5427074/
How many person hours were wasted in discussing this Fake news ?
More importantly, why do we have so less confidence in our own people that we dont even think twice before accepting that they would make such mistakes ?
Is it because it suits a narrative and cognitive dissonace comes in the way ?
My rule of thumb on fake news is that ‘ the more impossible the news sounds, the more you have to verify and validate before you believe ‘
For i am an ordinary person with very limited brain power and i can’t waste it on discussing or responding to such fake news :-/
November 1, 2018 at 18:23
Sir, Jay673 – I agree.
It is appalling and reprehensible that there are jobless jokers (mostly dravidians & clueless leftists, I would happily presume!) who painstakingly create such nonsense.
But it is in their budhdhoo nature, what else.
Normally I do not respond to such idiots, but in this case of sankarapandiyanar, I decided to respond.
Because, certain arse-holes need to be plugged.
Thanks!
__r.
November 1, 2018 at 21:44
முட்டாள் கூவா….. சங்கரனாருக்கு சமர்ப்பணம்……
https://www.facebook.com/groups/1802075443422233/permalink/1914464175516692/
November 7, 2018 at 05:16
Would you consider the following news true or fake?
I was also told by a friend that Gujarat CM had tweeted the pictures of the Statue including those sign boards and apparently he deleted from his Tweet.
I know someone like you who considers a fake like Rajiv Malhotra as a true researcher (remember my comment in Dec) would tend to believe the Sanghis than BBC.
* * *
https://www.bbc.com/tamil/india-46054914
உண்மைப் பரிசோதனை
இதையடுத்து இந்த படம் உண்மையா? இப்படி ஒரு பலகை வைக்கப்பட்டது உண்மையா? என்று பிபிசி தமிழ் விசாரணையில் இறங்கியது. அப்போது பிபிசி குஜராத்தி செய்தியாளர் தேஜஸ் வைத்யா சிலையை சுற்றிலும் எடுத்த பல படங்களில் தவறான மொழி பெயர்ப்புடன் கூடிய இந்தப் பலகையும் இருந்தது தெரியவந்தது.
உண்மை… நூறு சதவீதம் உண்மை
“அந்த பலகை இருந்தது நூறு சதவீதம் உண்மை. அது மறைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி எழுதியிருந்தது வெளியில் தெரிந்தது. அதை நான் தான் புகைப்படம் எடுத்தேன்” என்கிறார் பிபிசி குஜராத்தி சேவையின் செய்தியாளர் தேஜஸ் வைத்யா.
அவர், “நான் இந்தப் புகைப்படத்தை அக்டோபர் 30 ஆம் தேதி பிற்பகல் எடுத்தேன். அந்த சிலையை சுற்றி வைக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புப் பலகைகளையும் படம் எடுத்தேன்” என்கிறார் அவர்.
மேலும் அவர், “இப்போது அந்த பலகை அங்கு உள்ளதா, இல்லையா? என்று தெரியவில்லை” என்கிறார்.
என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்?
“சிலையை சுற்றி இருக்கும் அறிவிப்புப் பலகைகள் எல்லாவற்றையும் லார்சன் & டூப்ரோ நிறுவனமே தயாரித்தது. சமூக ஊடகங்களில் அது பற்றிப் பேசப்படும் கருத்துகளை அடுத்து அந்த நிறுவனத்துடன் பேசினோம். அதை அகற்றிவிட்டதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தப் புகைப்படம் இரண்டு நாள்கள் முன்பு எடுக்கப்பட்டது. எனினும் அந்தப் பலகை அகற்றப்படாமல் இருந்தால் நாங்கள் உடனடியாக அகற்றிவிடுவோம்” என்று பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிட்டட் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் சந்தீப்குமார்.
அரபியிலும் அபத்தம்
அரபி வரிவடிவம் பல மொழிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. “ஸ்டேட்டுக்கே ஓப்பி…” என்று தமிழில் எழுதியிருக்கும் அதே பலகையில் இரண்டு இடங்களில் அரபி வரிவடிவத்திலும் இந்த statue of unity என்பது வரி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டும் என்ன மொழி என்றே சொல்ல முடியாத வகையில் அபத்தமாக இருப்பதாக பிபிசி மானிடரிங் பிரிவில் பணியாற்றும் தாரிக் குறிப்பிடுகிறார்.
November 7, 2018 at 06:38
Sir, it is fake. DEFINITELY.
I do not remember your prev comment, sorry. Please jiggle my memory.
I do consider Rajiv Malhotra, a good researcher. I standby that info.
BBC has never been unbiased or honest. In fact I do not respect it. Sorry again.
__r.