செருப்பு முன்னேற்றக் கழகம்
July 15, 2018
செயல்தலைவர் இசுடாலிர்: திராவிடத்துக்கும் செருப்புக்கும் உள்ள மறுதலிக்கப்படமுடியாத மேன்மைத் தொடர்பு லெமூரியா காலத்திலிருந்து தொடர்வது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
ராமர் படத்துக்கு செருப்புமாலை போட்டிட்டும், வினாயகர் சிலைக்கு செருப்படி கொடுத்திட்டும் (ஆனால் ஏசுவையும் யாஹ்வேயையும் நபியையும் அல்லாவையும் மதச்சார்பின்மையோடு விட்டிட்டும்), தன்னிகரில்லாத திராவிடப் பணி ஆற்றப்பட்டு வளர்ந்த சுயமரியாதை உதிரிகள் இயக்கம்தானே எம் பெருமைக்குரிய திராவிடம்?
கருப்புக்கொடியும் கண்டனமுழக்கமும் ஆர்பாட்டமும் கல்லடித்தலும் சைக்கிள்செய்ன் சுற்றலும் சோடாபாட்டில் வீசலும் செருப்புவீச்சும் இன்னபிற புல்லரிப்புகளும் இல்லாத திராவிடத்தை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது அல்லவா? திராவிட அடுக்குமொழி பொறுக்கி நடையில் மயங்காத திராவிட விசிலடிச்சான் குஞ்சுகள்தாம் இருக்கின்றனரா?
திராவிடச் செருப்பின் வீச்சை, சகதிராவிடர்களான வைகோபால்சாமிகளுக்குமே கூட வழங்கிய பெருமைக்குரிய ஜனநாயக இயக்கமல்லவா நம் இயக்கம்?
…ஆனால், என்னெருமை உடன்பிறப்புகளே!
பழம்பெருமை மட்டும் பேசி பழங்கால திராவிடத்தின் மேன்மையை இக்கால திராவிடம் அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்திட்ட நான் அதிரடியாக நம் செருப்புப் பாரம்பரியத்தின் ஊற்றுக்கண்ணைக் கண்டுகொண்டிட்டேன்…
…அதுதான் செருப்பு – செருப்பியம் – செருப்புப்பாடு!
-0-0-0-0-0-
அண்மையில் எம் திராவிட முன்னேற்றக்கழகக் குஞ்சாமணி அடலேறுகள், ஆர்ப்பரித்தெழுந்து தமிழக ஆளுநர் காரின்மீது செருப்புவீசி தங்கள் திராவிடத் தினவைத் தீர்த்துக் கொண்டதும், அவர்கள் கைதுசெய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து – திமுக செயல் தலைவரும், 65 வயதானாலும் நிரந்தர இளைஞரணிச் செயலாளருமாகத் தொடரும் இசுடாலினாராகிய நான், கொஞ்சம் கமுக்கமாக, செருப்புவீச்சைக் குறிப்பிடாமல் கீழ்கண்டதுபோல அறிக்கை விட்டதும் – இதனால் தமிழகமே வெட்கித் தலை குனிவதும் நமக்குத் தெரியும்.
twitter.com/mkstalin/status/1010224073572356096
நான் செருப்புவீச்சைக் குறிப்பிடாததற்குக் காரணம் – நம் செயல் திட்டங்களில், அதிகாரபூர்வமாக நம் மாண்புமிகு செருப்பியம் பற்றிய குறிப்புகள் இடம்பெறாததால் தான்.
ஆக, தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காகவும், நம் உள்மனக் கிடக்கையைத் தெளிவுபடுத்துவதற்காகவும், நம் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்காகவும், கீழ்கண்ட மூன்று மாற்றங்கள் உடனடியாக அமல் படுத்தப்படுகின்றன என்பதைக் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் கழகச் செயல்வீரர்களும் அறிவீர்களாக…
1. நம் கட்சியின் பெயர், நம் நெடிய பாரம்பரியத்தை எதிரொளிக்கும் படி “செருப்பு முன்னேற்றக் கழகம்” என மாற்றப்படுகிறது.
2. ஆக, காரணப் பெயரான செமுக-வுக்கு ஏற்ப, அதன் கொடி கீழ்கண்டதுபோல் மாற்றப் படுகிறது. அவசரமாக இதனை அறிவிப்பதால் – திராவிட செய் நேர்த்தியுடன் வரையப்பட்ட இப்படங்கள் சரியாக வரவில்லை. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.
கருப்பு-சிவப்பு-செருப்புக்கொடி!
3. உதயசூரியன் சின்னம் கீழ்கண்டதுபோல மாற்றப்படுகிறது.
–0-0-0-0-0-0–
இனி, அதிகார பூர்வமாகவே, நம் உடன்பிறப்புகள் செருப்புகளைத் தேவைக்கேற்றவாறு உபயோகம் செய்து கட்சிப்பணி ஆற்றலாம்.
மேலும் உடன்பிறப்புகளை நான் இனி, மாளா அன்புடனும் திராவிட நேர்மையுடனும் – உடன்செருப்புகள் என்றே அழைக்கப் போகிறேன்.
ஆக, வரும் தேர்தல்களில் அரசுகட்டிலில் எம் செருப்புகளை வைத்து அழகுபார்க்க, உங்கள் ஆதரவை வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
July 15, 2018 at 17:59
Thalaivar families’ku Gucci parcel!
Thondargal sondha kaasil Paragon vangavum
July 17, 2018 at 11:04
ஒவ்வொருவருக்கு ஒரு மாதிரி. இந்திரா காந்திக்கு பாட்டில் வீசினார்கள். யாரும் கண்டிக்கக்கவில்லை. காமராஜரை கண்டபடி விமரிசித்தார்கள். எம்ஜிஆரை மலையாளத்தான் என்றார்கள். அடுத்த முன்னேற்றம் இந்த புது கட்சி. நீங்கள் கொடுத்த பெயருக்கு ஒரு 0 போட்டு, இந்த வருட நோபல் பரிசுக்கு உங்கள் பெயரை பரிந்துரைக்கிறேன்.
July 17, 2018 at 11:05
௦போட்டு என்பதை “ஓ” போட்டு என படிக்கவும்