எஸ்ராமகிருஷ்ணனின் பூகோளம், ஒரு கோளம்
April 9, 2018
ஒற்றெழுத்தில்லையாலஜி நெகிழ்வாலஜி புலங்களின் விற்பன்னர், நம் #எஸ்ரா, ஒப்புக்கொள்கிறேன்.
ஆனாலும்… இந்தக் கட்டுரை அவருடைய உதாசீனச் சோம்பேறித்தனத்தின் ஒரு மைல்கல்: நதிமுகம் தேடி
“நைல் உலகின் மிக நீளமான ஆறு தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோபியா, எரிட்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து மத்தியதரைக்கடலில் கலக்கின்றது. எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடைகின்றன”
“நைல் நதி வெள்ளை நைல், நீல நைல் என்ற இரண்டாகப் பிரியக்கூடியது”
இந்த அரைகுறைக்கு – நைல் தொன்மங்கள் என்றாலே கிரேக்கம்தான்! ஆஃப்ரிக்கத் தொன்மங்களே கிடையாதா? ஒருவேளை – தொன்மங்களைக் குறித்து எழுதும்போது இணைய இணைப்பு கிடைக்கவில்லையோ?
அப்படியே கிரேக்கத் தொன்மங்களானாலும் பரவாயில்லை என்றால் அதிலும் ஏகப்பட்ட சொதப்பல் – கிரேக்க புராணமென்று தன்னுடைய பிரத்தியேகப் பீலாக்கள், அசிங்கம்! குறைந்த பட்சம் 6 தவறுகளாவது இருக்கின்றன – சுமார் 15 வரிகளில்! காப்பியடித்து உருமாற்றுதலிலும் கூடச் சிரத்தையேயில்லை என் பேராசானுக்கு!
“இதை அறிந்த ஹீரா விஷப் பூச்சி ஒன்றை உருவாக்கி அந்தப் பசுமாட்டைக் கடிக்குமாறு ஏவினாள். அந்தப் பூச்சியிடம் தப்பி லோ எகிப்தில் தஞ்சமடைந்தாள்.”
பிரச்சினை என்னவென்றால் ஒரு டப்பா ஆங்கிலப்படத்தைப் பார்த்துவிட்டு ஒர்ரேயடியாக மானேதேனேயும் அவருக்கு வழக்கமான உளறல்களையும் எழுதிவிட்டார் இந்தத் தொழில்முறை இலக்கியக்கார #எஸ்ரா!
இந்தப் படம்தான் வரலாறா?
பிரச்சினை என்னவென்றால் – நம் தமிழ் இலக்கியப் பிதாமகர்களுக்கு, வாசிப்பும் இல்லை, சிரத்தையும் இல்லை. அறிவும் இல்லை. சோம்பேறிகள். இந்த மாக்கள் கட்-பேஸ்ட் செய்து எந்தக் கந்தறகோள வாந்தியை எடுத்தாலும் அதனையும் சிலாகிக்க, வாந்திக்-குடிகாரர்கள் நம்மூரில் பலர் இருக்கிறார்கள் – இவர்கள் ‘ஸூப்பர் பேராசானே’ என்று தங்கள் நுண்ணுர்வு ததும்ப எழுத்தாளனை தங்கள் வழுக்கை மண்டையில் வைத்து ஆனந்தக் கூத்தாட ரெடி!
ஏனெனில் ஒரு சராசரித் தமிழ் வாசகனுக்கு உன்னதங்களைப் பற்றிய அறிவோ, உந்துதலோ இல்லை. இதனால்தான் #எஸ்ராக்களால் மினுக்கிக்கொண்டு பவனி வர முடிகிறது.
-0-0-0-0-0-
“இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் வேதம் படிக்க வேண்டும் என்று பண்டிதர் ஒருவரை நியமித்துக் கொண்டார் பர்டன். தானும் பிரமாணன் போல உடையணிந்து கொண்டு வேதம் படித்தார். குரங்குகளின் மொழியைக் கற்றுக் கொள்வதற்காக நிறையக் குரங்களை வளர்த்தார் என்றும் சொல்கிறார்கள்.”
பிரமாணன்?
“படத்தின் ஒளிப்பதிவு மிகுந்த பாராட்டிற்குரியது. விரிந்த நிலக்காட்சியைப் பேரழகுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ப்ளுரே பிரிண்டில் இது போன்ற படங்களை காணுவது பரவசரமூட்டுகிறது. “
பரவசம் + அவசரம் = பரவசரம் என்றறிக.
—
April 9, 2018 at 13:06
தலைப்பு பூகோளம் ஒரு கந்தரகோளம் என்றிருக்க வேண்டுமோ? அல்லது கூறாமல் கூறுவது என்கிற உத்தியைக் கையாண்டிருக்கிறீர்களா? ;-)
April 9, 2018 at 13:59
உருண்டை. சுழி. முட்டை. எஸ்ரா. அவ்ளோதான். :-)
April 11, 2018 at 05:37
You missed “நிறையக் குரங்களை வளர்த்தார் “
April 11, 2018 at 05:42
:-)
‘குரங்குகளின் கழிவுகளை உரங்களாக(!) மாற்றினார்’ என அழகுணர்ச்சியுடன் புரிந்துகொண்டால் குறைந்தா போய்விடுவீர்கள்?
உங்களைப் போன்று வெட்டியாகக் ‘குற்றம் கண்டுபிடிப்பவர்களால்’தான் தமிழிலக்கியம், எழவு, வளரவே மாட்டேனென்கிறது!
April 11, 2018 at 06:03
[…] […]
April 17, 2018 at 07:21
Ramakrishnan represents the general run of “intellectuals” in TN. Having seen both the Niles especially where they join in Sudan, I am amused at what the Tamils accept from their “intellectuals”. Alan Moorehead’s book(s) on the Nile could have helped Ramakrishnan had he been inclined to even light reading. Incidentally Richard Burton was a Welshman and of Celtic stock.(the difference perhaps is that The Welsh Celts probably arrived in Britain between 2000 BC and 1200 BC and the Irish Celts sometime in the period 500 BC to 400 BC.)
Forgive a little indulgence in pedantry!
April 17, 2018 at 07:26
Sir, thanks. Esp for the info on the celtic background of RBurton.
EsRaa is an incredible person, truly and verily. Oh what to do! :-(