செப்டெம்பர் 5 அன்று – எங்கு சென்றாலும் தப்பமுடியாத பிரச்சினை…

September 4, 2017

…வாத்திகளுக்கு மட்டுமே ஏற்படும் தலைவலி :-(

வாத்தி தினம் ஒழிக. :-(

ஏனெனில் – ஒருகால மாணவர்கள் அவர்கள் எத்தையாவது கற்றுக்கொண்டார்களோ இல்லையோ – ஆனால் கண்டமேனிக்கும் கடிதமும், மின்னஞ்சலும், குறுஞ்செய்தியையும், க்ரீட்டிங் கார்டுகளும் அனுப்பி வாழ்க்கையையே வெறுக்கவைத்துவிடுவார்கள்.

…இது நல்லதுதான் என்றாலும் – ஸெல்ஃபோன் அருகிலேயே செல்லமுடியாதபடிக்கு ஆகிவிடும். வேறுவேலையேயில்லாமல், யாருக்கு எப்போது வாழ்த்துச் சொல்லிப் புளகாங்கிதம் அடையலாம் என அப்படியொரு அலை அலைகிறார்கள் நம்மவர்கள், வேறென்ன சொல்ல!

-0-0-0-0-0-0-

ஒரு மாதிரிக்கு, சென்றவருடம் என்னிடம் பயின்ற மாணாக்கன் ஒருவன் இப்படி ஒரு க்ரீட்டிங் வாழ்த்துச்செய்தி வகையறாவை அனுப்பி வெறுக்கடித்திருக்கிறான்.

சூட்டிகையான பையன் தான் – பாவம், எனக்குத் தமிழின்மீது கொஞ்சம் அபிமானம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு இப்படிச் செய்திருக்கிறான். ஆர்வக் கோளாறுதான்! கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் எழுதி அதனைக் கூக்ள் எழவையோ அல்லது வேறெந்த எழவையோ வைத்துக்கொண்டு மொழிபெயர்த்திருக்கிறான்; ஆனால், தேவையா?

ஒருவேளை இவன், என் பேராசான் எஸ்ரா அவர்களுக்கு உறவினனோ என்ன எழவோ!
அதனால்தான் இப்படி class என்பதை, கார்ல்மார்க்ஸ் தனமாக வர்க்கம் என முழிபெயர்த்தல் நடந்திருக்கிறதோ? ஆனால் தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டிருக்கிறான், ஆக எஸ்ரா உறவினனாக இருக்கவும் முடியாது… ஹ்ம்ம்…

இந்த க்ரீட்டிங் எழவின் பின்பக்கத்தில் இப்படியொரு படைப்பிலக்கியம். Engineerக்கு ஒரு விரிவாக்கம்.

நன்றி.

சிலவருடங்களுக்குமுந்தைய செப்டெம்பர்4 இரவு 12.01 மணிக்கு (அல்லது 5 காலை 00.01 மணிக்கு) கேனத்தனமாகக் கூப்பிட்டு ‘ஹேப்பி டீச்சர்ஸ் டே!’ எனக் குதூகலமாக வாழ்த்தியிருக்கிறான் ஒரு கல்லூரி மாணவப் பையன்.  என்னவோ ஏதோ என விதிர்விதிர்த்து எழுந்து போனை எடுத்தவன், வெறுத்துப்போய் அவனை வறுத்தெடுத்ததில், பின்னர் அவன் என்னருகிலேயே வரவில்லை. இம்மாதிரி  irrationally exuberant + முட்டாக்கூப் பிரகிருதிகளைப் பார்த்தால் இவர்கள் போய் என் வகுப்புகளில் எப்படித் தாக்குப் பிடித்தார்கள் எனத் தோன்றுகிறது… (நண்பன் சொல்கிறான் – காலையில் இப்படிப் பிறந்த நாள்(!) வாழ்த்துச் சொல்வதெல்லாம் இப்போது வழமையில் இருக்கும் விஷயமாம்!)

-0-0-0-0-0-

இருந்தாலும் அடிவயிற்றில் கலக்கமாக இருக்கிறது. எந்த வழியாக எந்த வாழ்த்து திடுதிப்பென்று வந்துவிடப்போகிறதோவென்று…

…கொஞ்சம் கிட்டே வந்தீர்களென்றால் உங்கள் கையைப் பிடித்துக்கொண்டு தப்பித்துக்கொண்டு விடலாம் என எண்ணம். உதவமுடியுமா?

பின்குறிப்பு: ஆசான்களும் பேராசான்களும் இந்த வாத்திதினவாழ்த்தெழவை எப்படி அணுகுகிறார்கள் என்பதைத் தெரிந்துதெளிந்து அடுத்தவருடம் அப்படியே ஒழுகலாம் (taking a leak) எனவொரு எண்ணமும். பார்க்கலாம்.

நன்றி.

 

16 Responses to “செப்டெம்பர் 5 அன்று – எங்கு சென்றாலும் தப்பமுடியாத பிரச்சினை…”

  1. mekaviraj Says:

    பிரிக்கப்படாத கவனம் – Lovely :-)

  2. nparamasivam1951 Says:

    என்ன இது சார், கைபேசியை அணைத்து விடுங்கள். 5ம் தேதி விடுமுறை யாதலால், ஊரை விட்டு ஓடி(?) விடுங்கள். மிக மிக சுலப வழி.

  3. Kannan Says:

    Happy Teachers’s Day.:(


  4. கூட ஓடிவந்து அனாதரவு தருவதற்கு நன்றி.

    ஆனால் ஆரம்பித்து விட்டார்கள். :-(

    ஆகவே, ஸெல்ஃபோனை அணைத்து விட்டு பேஸ்மெண்ட் பணிமனையில் நிபந்தனையற்றுச் சரணடைந்துவிட்டேன். நன்றி.

    Happy Cheaters’ Day!

  5. ஆனந்தம் Says:

    உங்களுக்கு குருபூர்ணிமா வாழ்த்துகள் வருவதில்லையா? என்ன இருந்தாலும் நீங்க ஒரு சிற்றாசான் தானே? (ஆனாலும் ஆசிரியர்தின வாழ்த்துகள், மன்னிக்கவும், வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்கள்!!!)

  6. Ram Sedhu Says:

    வாழ்த்துக்கள் சார்! :)

  7. RC Says:

    ‘தேநீர்நாற்காலி’ தின வாழ்த்து :- )

    நமஸ்காரம் ஆசானே _/\_


    • யோவ்! எவ்ளோபேரு இப்டீ கெள்ம்பிக்கீறீங்கோ! வொங்க்ள ஓளிக்கற்த்துக்குத்தான் பேராசான் பெர்ம்போர்ராளியாய்ட்டாரு!

      நீட் தேர்வுக்கு எதிராக – http://www.sramakrishnan.com/?p=6539
      என்னா வீரம்! இன்னா வெறி!! எவ்ளோ கர்ச்னம்! புல்லற்க்கிதுப்பா!

  8. lenin Says:

    தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டிருக்கிறான், ஆக எஸ்ரா உறவினனாக இருக்கவும் முடியாது… mudiyala saami.. :)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s