எதற்கெடுத்தாலும் ‘இயல்’ எனச்சேர்த்துக் கூவுவது, தமிழ்க்கூவானின் இயல்பியல் என்றறிக

August 25, 2017

எந்த மசுத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்கு ஒரு இயல் என ஒன்றைச் சேர்த்துக் கோர்த்துவிட்டு ஆனந்தமாக முஷ்டிமைதுனம் செய்துகொள்வான் தொழில்முறைத் தமிழ்க்கூவான்.

மன்னிக்கவும், இதன் பெயர் தமிழ்க்கூவானியல். அல்லது மசுத்தியல். இப்படி உளறிக் கொட்டிக்கொண்டிருப்பவன் மசுத்தியலாளன். அல்லது தமிழ்க்கூவானியலாளன். நன்றி.

இந்த போங்காட்டத்துக்கு வராதவர்கள் எல்லாம் – மாற்று மசுத்தியலாளர்கள். போங்கடா, வேலைவெட்டியற்ற முட்டாக்கூவானியலாளன்களா!

இப்படிக்கு:

மாற்று முட்டாக்கூத்தமிழவியலாளன்.

-0-0-0-0-0-

கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசின் பலப்பல துறைகளில் முன்னோக்கிய பாய்ச்சல்களும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன – என்பதை அனுபவத்தில் உணர்ந்து நொந்துபோயிருக்கிறேன். நாட்டை முன்னேற்றியே தீருவோம் எனக் கிடந்தலையும் நரேந்திரமோதிக் காவிகளின் பேயாட்டம் தாங்கவே முடியவில்லை. ஒரே சோகமாக இருக்கிறது. :-(

அடுத்தவாரம் 28ஆகஸ்ட் -> 1ஸெப்டெம்பர்: நம் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தொடர்-பயிற்சிக்காகவும் தரமேன்மைக்காகவும் ஒரு மகாமகோ புள்ளிவிவரக் கணக்கெடுப்பு வகையறா ஸர்வேயும் நேர்காணல்களும் நடக்கப்போகின்றன.

அகில இந்திய அளவில் – பொறுக்கியெடுக்கப்பட்ட சிலபல மாநிலங்களிலும் சில யூனியன் பிரதேசங்களிலும் இவை நடத்தப்பட்டு ->  அதன் கணிப்புகளின்படி பரிந்துரைகள் வளர்த்தெடுக்கப்பட்டு ->  இதுகுறித்த ஒரு ஆவணம் தயாரித்து மத்திய அரசுக்கு அளிக்கப்படும் – மனித வளமேம்பாட்டு அமைச்சகம் அதனை அலசி, விவாதித்து, சான்றோர்களிடமிருந்தும் அறிவாளிகளிடமிருந்தும் கருத்துகளைக் கேட்டு – ஒரு அவதானிக்கப்பட்ட தொலைநோக்குடன் சிலபல கறார்முடிவுகளை எடுக்கப் போகிறது. இந்த முழு சுழற்சிக்கும் சுமார் 2-3 மாதங்கள் ஆகலாம்.

இந்த ஸர்வே ஜாபிதாவில் தமிழ் நாடு இல்லை. இதற்குப் பலப்பல காரணங்கள்:

 • கல்வியைப் பொறுத்தும் தமிழகம், இந்திய அளவிலும் (ஏமாந்தால் உலக அளவிலேயும் கூட) உச்சாணிக்கிளையில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இது திராவிடப் பிரமைகளில் ஒன்று.
 • இது காலிப் பெருங்காய டப்பா முதல்வாதம் என்றாலும் (அதாவது – தற்போது பெருங்காயம் துளிக்கூட இல்லாமல் இருந்தாலும், ஒருகாலத்தில் அதனுள் பெருங்காயம் இருந்ததால்மட்டுமே அது வைக்கப்பட்டிருந்த டப்பா (அல்லது பெண்ணிய டப்பி) மணக்கும் அல்லவா?) – இதனையும் அகில இந்திய அளவில் நம்புபவர்கள் இருக்கிறார்கள், பாவம்!
 • தமிழகம் பொதுவாகவே சுயபரிசோதனை, மறுபரிசீலனை போன்ற ஏடாகூடமான விஷயங்களில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் தொடர்ந்து ‘மாறாத பேரின்ப நீராடுவோம்’ மனப்பான்மை.
 • அதாவது, தமிழகமே நடத்தும் பரீட்சைகளில் வருடாவருடம் சுமார் 200% தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது மட்டுமில்லாமல், அவர்கள் அனைவரும் வருடம் தவறாமல் வள்ளல்தனமாக 300% மதிப்பெண்கள் பெற்று (ஹ்ம்ம்ம், கொஞ்சம் மதிப்பாண்களும் பெறுவார்களோ என்ன எழவோ!) மகாமகோ தேர்ச்சிபெற்று அனைவரையும் திக்குமுக்காக்கிவிடுவார்கள்; ஆனால், ஆச்சரியம்கொடுக்கும் வகையில் ‘நீட் பரீட்சை கூடாது, ஆமாஞ்ஜொல்லிப்புட்டோம்’ மனப்பான்மை! இந்தப் பையன்களுடன் நேர்காணல் எத்தாவது செய்ய முயன்றால் அது கொடுமையாக வேறு இருக்கும்… என்ன செய்வது சொல்லுங்கள் – சரியான கேள்விகளைக் கேட்டால், சரியான பதிலைச் சொல்லிவிட்டுப் போகிறார்கள் பிள்ளைகள்… கேள்வி கேட்பவர்களுக்குத் தான் துப்பில்லை…
 • தமிழ மாணவனுக்கு அறிவுபூர்வமான திராவிடக் கல்வித்திட்டத்தின்படியான — பிக்பாஸ், அஜித்Vsவிஜய், பகுத்தறிவு, ஏஆர்ரஹ்மான்Vsஇளையராஜா, மாட்டிறைச்சி-தடை-ஆகவே-பொதுச்சொத்தை-உடை, ஜல்லிக்கட்டு ப்ரொட்டெஸ்ட், தமிழீழம் கபடி போன்ற முக்கிய-ஆழமான விஷயங்களில் நேர்காணல் செய்தால், கேள்விகள் கேட்கப்பட்டால் பரவாயில்லை. ஆனால், ஆரியச் சதிகாரர்கள் அவாளுடைய பாடத்திட்டத்தையல்லவோ திராவிடர்கள்மீது திணிக்கிறார்கள்! நம் ஏடாகூடமான  தேர்வுமுறைகளில்தான் பிரச்சினைகள் இருக்கின்றன. நன்றி.
 • ஆக, தமிழ மாணவனுக்கு, தான் மானுடப் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தின் இருப்பதாக ஒரு, நியாயமான, புரிந்துகொள்ளக்கூடிய அடங்காப் பெருமிதம். ஆகவே, யாராவது தரவுகளின்படி ஒரு நியாயமான விமர்சனம் வைத்தாலும் வசைபாடல். இதனால், தமிழகத்தைப் பற்றி ஏதாவது சமைக்கப்பட்ட ஆதாரங்களுடன் ஆகாஓகோ என்று எழுதப்படும் விஷயங்கள் மட்டுமே முன்னிறுத்தப்படும். #தமிழண்டா!
 • அதாவது, மாணவர்களும் ஹை க்ளாஸ், இம்மாதிரி ஜொலிக்கும் டாப்-இன்-டவுன் மாணவர்களைத் தயாரித்த ஆசிரியர்களோ, அதுக்கு மேல் டாப் க்ளாஸ்! ஆக தமிழக ஆசிரியர்களை இதற்குமேல் முன்னேற்றவே முடியாது! அவர்கள் ஏற்கனவே எங்கோ உச்சியில் இருக்கிறார்கள்! நன்றி! பிற இந்தியர்களே, நீங்கள் போகவேண்டிய தூரம் அதிகம். மன்னிக்கவும்.
 • இதையெல்லாம் மீறி – எவனாவது உண்மையை எழுதினால், ஆரியம்-திராவிடம் என்று ஆரம்பித்து விடுவார்கள். பொங்கிப் படையல்  வைத்துவிடுவார்கள். ஆகவே.

மேற்கண்டவை தவிர –  – ஹிந்திக்கு எதிராகப் போராடுகிறோம், மண்ணாங்கட்டியென்று நவோதயா பள்ளிகளை இங்கு வரவிடாமல் முட்டாக்கூ திராவிடத்தனமாகத் தடுத்ததுபோலத் தொடர்ந்து – முன்னேற்றத்துக்குப் பலப்பல ஏகோபித்த முட்டுக் கட்டைகள்.

…ஆக, தமிழகத்தைத் ‘தண்ணீர் தெளித்து’ விட்டுவிட்டார்கள்! வாழ்க!  :-(

ஆக – நம் செல்லத் தமிழகம், இந்த ஸர்வே விவகாரத்தில் பங்குபெறவில்லை. இப்படிப் பங்குபெறாமல் இருந்தால்தானே பின்னர், குய்யோமுறையோ எனத் திராவிடத்தனமான பெட்டைப் புலம்பலில் மும்முரமாக ஈடுபடமுடியும், அய்யன்மீர்?

-0-0-0-0-0-

…இந்த மகாமகோ முயற்சியில் நான் ஒரு அணில் (நானும் nuts, எனக்குப் பிடித்ததும் நட்ஸ் என்பது ஒரு சௌகர்யம்). எனக்கு ஒரு பாவப்பட்ட இளம்பெண் அணில் உதவி – இப்பெண் மூன்றுவருடம் சமூகவியல் படித்துவிட்டதால், சமூகத்தைக் கடைந்தேற்ற (அதுவும், போயும் போயும் என்னுடன் சேர்ந்து, என்ன சோகம்) வேண்டிய அடிப்படைத் தகுதிபெற்று, வந்திருக்கிறது. கடவுள்தான் இவ்வம்மணியைக் காப்பாற்றவேண்டும். ஆக, இம்மாத இறுதியில் அணில்கள் – காரைக்கால் புதுச்சேரி++ பயணம்.

சரி, இது ஒரு பெரிய விஷயமோ, இக்கட்டுரைக்கு முகாந்திரமோ அல்ல; ஆனால், நான் அங்கு போகப்போவதை அறிந்த நண்பர்(!) ஒருவர் – சரி, நீங்கள் அங்கு வரும்போது எனக்குத் தெரிந்த பள்ளி ஆசிரியர்களுடன் ஒரு பேச்சுக்கு ஏற்பாடு செய்யட்டா என்றார்.

-0-0-0-0-0-0-

எனக்கு விக்கித்துப்போய்விட்டது. :-(

பிரச்சினையென்னவென்றால் – எனக்கு இந்த மேடைப்பேச்சு முறைமையும் அதன் மழுங்கடிக்கப்பட்ட அரசியல்சரித்தனமும் ஒத்துவரமாட்டா (ஆனால், மேடைப்பேச்சையே தவிர்ப்பேன் என்றில்லை, எனக்கும் 1) என் குரலையும் 2) அந்த எழவையும் கூறுகெட்டுப்போய்க் கேட்க ஒரு வேலையற்ற கும்பலும் இருப்பதும் பிடித்தமான, அற்ப ஆத்தும சுகமளிக்கும் விஷயங்கள்தாம். புல்லரிப்பு இன்பலாகிரிதான். இருந்தாலும்…).

மேலும் எனக்கு, இதில் சிலபல பிரச்சினைகள் இருக்கின்றன:

1. தனியான உரை என்றால் பரவாயில்லை, வட்டமாக உட்கார்ந்து உரையாடினாலும் (ஜேகிருஷ்ணமூர்த்தித்தனமாக காய்ந்த ரொட்டியைப் பிய்க்கும் காரியங்களைச் சொல்லவில்லை இங்கு!) பரவாயில்லை – ஆனால் சிலசமயம் சில சகபேச்சாளர்கள் (ளும்) ஏகோபித்து அமோகமாக உளறுவதையும் அட்ச்சுவுடுவதையும் கேட்டுக்கொண்டு,  முகத்தில் ஈயாடாமல் மேடையில்  சங்கடத்துடன் உட்கார்ந்து நெளிந்துகொண்டு மோட்டுவளையைப் பார்த்து, விதியை நொந்துகொள்வது — எனக்குக் கொஞ்சம் முடியாத விஷயம். இதைவிடவும் தாங்கொணா விஷயம் – இம்மாதிரி வெட்டி கிளுகிளுப்புப் பேச்சாளர்களுக்கு பார்வையாளர்கள் கிறங்கிப் போவது. அவர்களை பிரமிப்புடன் அணுகுவது. “ப்ரில்லியண்டா பேசிட்டாரு! என்ன சரமாரியா கருத்துகள வெக்கறாரு!!” கொடுமை.

அப்பிடி என்னய்யா பேசிட்டாரு என்று கேட்டால்,  அடிக்கப்பட்ட அசட்டு ஜோக் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு புளகாங்கிதம். ஆக, நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறேன்.

2. இந்தப் பேச்சுகள் முடிந்தவுடன் (அல்லது கேள்விபதில்(!) சமயத்தில்) நடக்கும் உரையாடல்களால், சிலசமயம் நரையாடிவிடும் – ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல் முழ நீளத்துக்குப் பேச வந்துவிடுவார்கள் சிலர். சிலருக்கு முணுக்கென்று கோபம் வந்துவிடும். எனக்குச் சிரிப்பும் அயர்வும்.

ஆனால் – ஒருவிதமான பின்புலமுமில்லாமல் இம்மாதிரி உளறிக்கொட்டுபவர்கள் கன்னத்தில் இரண்டு அறைவிட்டு, ‘வோத்தா டாய்! போய் வொன்னோட ஹோம்வர்க் செஞ்சிட்டு வந்து பேசடா, கூவானே’ எனப் பகிரங்கமாக என் உள்மனக்கிடக்கையை வெளிப்படுத்தமுடியாத நிலை.  :-( ஆனால் இதுதான் அவையடக்கம். என்ன மசுரோ! ஊக்க போனஸ்களாக, தேவையற்ற மனஅழுத்தமும் எதிர்காலத்தைக் குறித்த அவநம்பிக்கையும் மண்டைமேல் உட்கார்ந்து, இருக்கும் கொஞ்சநஞ்ச மூளையையும் அரிக்க ஆரம்பித்துவிடும்.

3. பொதுவாகவே படிக்கும் பழக்கம் என்பது தமிழர்களுக்குக் கிடையாது – ஸீரியஸான விஷயங்களென்றாலோ – அந்தத் திக்குப் பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூட மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, ஒத்திசைவு படிப்பவர்கள் மொத்தம் 4½ பேர் மட்டுமே ;-)

இந்தப் பாவப்பட்ட நிலைக்கும் இந்தத் திராவிடமே காரணம். அறிவார்ந்த எந்தவொரு செயல்பாட்டினையும் மழுங்கடித்து, படிப்பறிவு பெற்றவர்களை வெறுத்தொதுக்கி அதிசராசரிகளையும் தொழில்முறை அரைகுறைகளையும் (உதாரணமாக, நம் பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான துணைவேந்தர்களைப் பாருங்கள்!) ஊக்குவித்து – கவர்ச்சியையும் லாகிரியையும் அடுக்குமொழியையும் நடிகவசீகரத்தையும், குடியையும் மட்டுமே முன்வைத்ததால் இந்த நிலை.

ஆக, சொல்லப்படவேண்டிய விஷயங்கள் நீர்க்கடிக்கப் படும். சிலபல விஷயங்களைப் பற்றிய அடிப்படை சிந்தனைகூட இருக்காது பெரும்பாலோரிடம். ஏனெனில் நம்மவர்கள், ‘body doing time, while the brain is out taking a walk’ வகையறா பிரகிருதிகள்! (இந்த அழகில், தருமராஜ் அவர்கள் படுதைரியத்துடன் மிஷெல் ஃபூக்கோ பயிலரங்கம் என்றெல்லாம் நடத்துகிறார்;  65 பேர் வந்தார்களாம்! வழி தவறிப்போன ஆடுகளாக இருந்திருப்பார்களோ எனச் சந்தேகமாக இருக்கிறது. மதுரையைச் சுற்றிச்சுற்றி ஏகப்பட்ட பட்டிகள்வேறு! எது எப்படியோ, முதலில்  wtf ‘வாட் த ஃபூக்கோ’ எனக் கிலி எழும்பினாலும் – இந்த மனிதர் கொஞ்சம் தெகிர்யசாலியாகத்தான் இருக்கிறார், பாவம். All power to him and his audience. வேறென்ன சொல்ல! இதேபோலத்தான் ஜெயமோகனும், அயர்வே இல்லாமல் ஒரு இளைஞர் குழாமை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆச்சரியம்தான். +பத்ரி சேஷாத்ரியும் தன் பங்குக்கு உற்சாகமாகப் பணி செய்துகொண்டிருக்கிறார். இவர்களெல்லாம் வேறு ஏதோ ஏலியன் வகை வந்தேறி கிரகவாசிகள்தாம்! வாய்ப்புக் கிடைத்தால் இவர்களுக்குத் தொப்புள் இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ளவேண்டும்)

4. மேலும் மேடைப்பேச்சிலும் பெரும்பாலும் கேளிக்கை அம்சங்களை மட்டுமே எதிர்பார்ப்பார்கள், இந்தச் சராசரி நுகர்வாளர்கள்; அதாவது, அவ்வப்போது அசட்டு ஜோக் எத்தையாவது சொல்லவில்லையானால் கொட்டாவி விட்டுக்கொண்டே ஸ்மார்ட்ஃபோனெழெவைத் தேய்த்து வாட்ஸ்அப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கும் ஓரளவுக்கு நகைச்சுவை உணர்ச்சி உண்டு கொஞ்சம் ஒப்பேற்ற முடியும் என்றாலும் – நான் ஒரு தொழில்முறை பட்டிமன்றக்காரனல்லன். சிரிப்புத் தோரணங்களாக பேச்சைக் கட்டியெழுப்பி ஒரு எழவையும் காத்திரமாக அணுகாமல் மினுக்கிக்கொண்டே அகல  முடியாது – ஏனெனில், நான், என் பேச்சைத் தேவைமெனக்கெட்டுக் கேட்கிறவர்களும் ஓரளவுக்காவது புத்திசாலிகளாக இருக்கவேண்டும் எனும் படுமட்டமான எதிர்பார்ப்பு உள்ளவன்.

ஆகவே, பிரச்சினைகள், பிரச்சினைகள். என்ன செய்ய, சொல்லுங்கள்.

 -0-0-0-0-0-0-

…ஆக, அய்யா என்னை விட்டுவிடுங்கள், நேரம் இருக்காது என்றேன். அவர் என்னவோ, நான் பெரிய பிடுங்கிபோல ஒரே முறையிடல். சரி எழவே என – பார்க்கலாம், ஒரு நாள் மாலை 9மணிக்குமேல் வைத்துக்கொள்ளலாம் என்று அரைகுறை மனதுடன் சொல்லி – என்ன தலைப்பு என்று கேட்டால் ‘கல்வியியலின் எதிர்காலம்‘.

எனக்கு இரண்டாம் முறையாக விக்கித்துவிட்டது.

சொன்னேன் – அய்யா, எனக்கு இந்த கல்வியியல் பற்றியெல்லாம் தெரியாது. வெறும் கல்வி பற்றி மட்டும் கொஞ்சம் காமாலைக்கண் தனமாகப் பேசமுடியும். அவ்வளவுதான்.

சரி, அப்படியென்றால் வாழ்வியல் பற்றியாவது, ‘எதிர்காலத்தில் வாழ்வியல்’ பற்றி ஒரு மணி நேரம்?

கடுப்பாகி விட்டது. ஆக ‘அய்யா,  எனக்கு வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் அனுபவம், உங்களுக்கும் இருப்பது போலத்தான் இருக்கிறது – இருந்தாலும் வாழ்வியல் என்றால் என்ன என்று புரியவில்லை, கொஞ்சம் விளக்கமுடியுமா? மேலும், எனக்கு இந்த இயல் இசை பற்றியெல்லாம் நாடகத்தனமாகப் பேசமுடியாது. ஏனெனில் நான், உங்கள் தலைவரைப் போல முத்தமிழ் வித்த அயோக்கியனல்லன், அதற்கேற்ற அனுபவம் இல்லை.’

வாழ்க்கையை அணுகுவது வாழ்வியல் என நேரடியாகப் புரிந்துகொள்ளலாமே!

அய்யா, வாழ்க்கை என்றாலே அதில் அதனை அணுகுவதும் உள்ளடங்கியிருக்கிறதே! அப்போது சுத்தியல் என்றால் சுத்தியை அணுகுவதா அல்லது சுற்றுவதை அணுகுவதா? பட்டியல் என்றால் பட்டியலை அணுகுவதா அல்லது பட்டுக்குப் பக்கத்தில் செல்வதா?  வாழக்காயை அணுகி பஜ்ஜி செய்து சாப்பிடுவது வாழக்காயியலா?எனக்குச் சத்தியமாக, நீங்கள் சொல்வது புரியவேயில்லை! இதுதான் சத்தியல்,  ஊக்கபோனஸாக, புரியவேயில்லையியலும்கூட. நன்றி.

சார், நீங்கள் உங்களுக்குப் பிடித்த தலைப்பில் பேசலாம். கோபித்துக்கொள்ளாதீர்கள்.

ஏனய்யா, என்னைப் போன்ற அகம்பாவம் பிடித்த குசும்புப் பாப்பானை விட்டால் உங்களுக்கு வேறு ஆளே இல்லையா? எவ்வளவோ திராவிடவியலாளப் பெருமக்கள் இருக்கிறார்களே! ஏன் போயும்போயும் என்னைப் பிடித்துத் தொங்குகிறீர்? நான் பேசுவதில் முக்கால்வாசி எனக்கே புரியாது, பாவம் உங்களுக்காவது பழக்க தோஷத்தால் கொஞ்சம் புரியலாம் – ஆனால் மற்ற ஆசிரியர்கள்? ஏதாவது பழி தீர்த்துக்கொள்ளப் போகிறீர்களா? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள், சொல்லுங்கள்?

நீர் ராத்திரி 9மணிக்குப் பிறகுதான் பேச்சு என்று சொல்லியிருக்கிறீர். ஆக, பேச்சைக்கேட்க உண்மையாகவே ஆர்வமாக இருப்பவர்கள்தாம் வருவார்கள். நான் யாரையும் வற்புறுத்தப் போவதில்லை. கவலைவேண்டாம். இம்மாதிரி உரையாடல்கள் எங்கள் பகுதியில் நடப்பதேயில்லை என்பதால்தான் தொடர்புகொண்டேன். நகரங்களில் கிடைக்கக்கூடிய வசதிகள் கிராமங்களில் இல்லை. பிறகு உங்கள் இஷ்டம்.

பாவம், புண்பட்டுவிட்டார். தமிழனுக்கு, அவனுடைய வாழ்க்கையியலில் அடிக்கடி நடக்குமியலான படுமோசமான கொடுமையியல் இது.   :-(

இருந்தாலும் அவர் என் நண்பர். ஆக, சொன்னேன் – அய்யா, உங்களையும் என் ஜென்மவைரிகளில் ஒருவராக்க, இப்போதைக்கு ஆசையில்லை. ஆக, தலைப்பியல் பற்றி கொஞ்சம் ஹோம்வர்க்கியல் செய்துவிட்டு உங்களைத் தொடர்புகொள்கிறேனியல். நன்றியியல்.

சிரித்துவிட்டார். பாவம், அவர்.

அய்யோ மன்னிக்கவும், பாவமியல். அய்யய்யோ, பாவமியலாளர். :-(

-0-0-0-0-0-0-0-

அடுத்த பதிவியலில் – இந்த இயல் வகையறா தமிழக இயல்பியல் பற்றிக் கொஞ்சம் கோனார் நோட்ஸியல் போடலாமென ஒரு எண்ணவியல். இயன்றால் பார்க்கலாமியல்.

#ஓட்றாடேய்!

-0-0-0-0-0-0-

 

16 Responses to “எதற்கெடுத்தாலும் ‘இயல்’ எனச்சேர்த்துக் கூவுவது, தமிழ்க்கூவானின் இயல்பியல் என்றறிக”

 1. Prabhu Says:

  would like to know what you smoke when you write these. Hilarious!!!


  • அய்யா மஹாபிரபு,

   நான் புலித்தோல் போர்த்திய பசு. ஆக, வெறும் புல்வகைதான்.

   வரவர நம்மூர் வைகோல் எல்லாம் மறுமலர்ச்சி திராவிடம் பீடித்து, ஜீரணிக்கவே முடியவில்லை. உங்களூரில் எப்படி?

   நன்றி.

 2. A.Seshagiri Says:

  அந்த 4½ யில் “½” யாரு என்று யோசித்து கொண்டேயிருக்கிறேன் ……

 3. ஆனந்தம் Says:

  //கலைச்சொல்லாக்கத்துக்கு பல வழிகள் உள்ளன என்றாலும் தொடக்கநிலையாளர்களுக்காக ஓர் எளிய உத்தியைச் சொல்லல்லாம். எந்த ஒரு சொல்லுடனும் இயல் என்ற சொல்லைச் சேர்த்தால் கலைச்சொல்லாகிறது. ‘பருப்புவிலையேற்றத்தால் மக்கள் துயரம்’ என்பது செய்தி. ‘பருப்பியல்தளத்தின் விலையியல் மாற்றங்களால் உருவாகும் வாழ்வியல் துயரம்…’ என்பது பின் நவீனத்துவ வரி. இதேபோல ‘ஆக்கம்’ ‘மயமாதல்’ போன்ற சொற்களையும் கையாளலாம்.//
  ஆசான் இதிலும் உங்களை முந்திக்கொண்டுவிட்டார். (தயவு செய்து புண்பட்டுவிட வேண்டாம்.)
  http://www.jeyamohan.in/321#.WaD9FT6g_IU


  • :-)

   உண்மையியலிலேயே ரொம்பவும் ஆச்சரியம்தானியல்!

   ஆனால், ஜெயமோகன் அவர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி அதிகம்தான்! :-))

   ஜெயமோகனியல் எனக்கு மிகவும் பிடித்தமானதியல்.

 4. RC Says:

  அய்யா,

  “நம்முடைய கல்விச்சூழலில் இருக்கும் நிலவும் பல சிக்கல்களில் நீட் தேர்வு என்பதும் ஒன்று. இன்றைக்கு அதற்குக் கிடைத்திருக்கும் வெளிச்சத்தில் சிறுபங்கு கூட கல்வியியலின் வேறு பல பிரச்சினைகளுக்கும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்” – நிசப்தனாரிடம் இருந்து நகலியல் முறைப்படி எடுத்த “நிசப்த(ம்) ” கல்வியியல் நகல்.

  இப்படி, அங்கே சொன்னதை இங்கே சொல்வதும் உற்று நோக்குவதும் “பிக்பாசியல்” தானே அய்யா ?
  [வாமனரை புறம் சொல்ல கஷ்டம் தான் எனக்கு :) டமிலரின் நெகிழ்வியலில் விளக்கம் கிடைக்குமோ இதற்கு .. அய்யா விளக்குவீர்களா நேரம் இருப்பின் ?]
  நன்றி..

  இப்படிக்கு
  41/2 இல் கடை அரை


  • யோவ்! அந்த அரை என்னுது! எங்கூட போட்டிக்கு வர்ர வேலயே வோணாம், பிர்ஞ்சிதா நைய்னா?

   மற்றபடி, நிசப்தவியல் ஒர்ரே அயர்வியல். ஆகவே நமக்கெதுக்கு வம்புவியல்.

   நானும் ஒரு அரக் கட்டளையை ஆரம்பித்து அரம் செய்ய விரும்பு என ஒரு தச்சுப் பணிமனை நடத்தலாமா என எண்ணம். கத்தாரின் ஷேக்குகள் ஏதாவது நல்கை கில்கை என வழங்குவார்களா?

   • RC Says:

    ஹபீபி,
    மும்தெஜ் ! அனா அஃபஹம் தமாமன் :)
    அனா முத்த ஃ வ்சாட் அல்ஃ ஹே (ல்) :(
    “ஷேக்கு” கொடுக்காட்டியும் இந்த ”அரை காஃபிர்” கொடுக்கத் தயார் தான்..
    சுஃக்ரான் :)

 5. Maru Says:

  அய்யா ஒத்திசைவியலாளரே வாய்ப்பிருந்தால் தாங்கள் ஆற்றப் போகும் மேடைப்(?) பேச்சியியலை ஒலிப்பதிவியல் செய்து ஒத்திசைவிலோ அல்லது அந்த 4 1/2 நொந்த வியலாளர்களுக்கு தனிச்சுற்றுக்கு பகிர்ந்தால் நாங்களும் தலையியலில் அடித்துக் கொண்டு உய்வியல் அடைய உபயோகமாயிருக்கும்….

 6. Prabhu Deva Says:

  உங்கள் நண்பர் தங்களை அழைத்ததற்கு பதில் மதிமாறனை கூப்பிட்டு இருக்கலாம். ராமசாமியியல் பற்றி பேசி இருப்பார். உங்களுக்கு குசும்பியல் தான் வருகிறது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s