பத்தே நிமிடங்களில் சுயமுன்னேற்றம் அடைவது எப்படி
July 23, 2017
அன்பின் ஆசானே!
வாழ்க்கையில் அனைத்திலும் தோல்வி அடைந்துவிட்டேன். சராசரியான எனக்கு, இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. இறப்பின் நுனியில் இருக்கிறேன். தட்டையாக உணர்கிறேன்.
எனக்கு மீட்சி உண்டா?
தொய்வுடன்:
அன்புள்ள அலெக்ஸ் அப்துல்லா,
நீங்கள் ஒரு ஐடி குமாஸ்தாதானே? குளிரூட்டப்பட்ட அறையில் பொட்டிதட்டும் சமூகவலைத்தள வேலை. வேளாவேளைக்குச் சாப்பாடு, கேளிக்கை. மாதம் ஒருலட்சம் போலமட்டுமே சம்பளம்போல! பாவம் நீங்கள், உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்துவிட்டிருப்பீர்களே! :-(
உங்கள் வாழ்க்கையின் வெறுமையையும் இயலாமையையும் தாங்கொணா நெருக்கடிகளையும் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். :-((
சரி. எந்த திக்கிலிருந்து பார்த்தாலும் இனிமேல் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்போலத்தான் படுகிறது. ஏனெனில் எனக்கு வாசகர் கடிதம் எழுதுபவர்களை நான் கைவிட்டதேயில்லை. கவலை வேண்டேல்.
என்னிடம் சரணடையும் வாசகர்களுக்கு — மூளை இருந்தால் மூளை போகும். மூளை இல்லாதவர்கள் வந்தால் நேரம் போகும். பேசமுடியாதவர்கள் பேத்துவார்கள். கண் தெரியாதவர்களுக்குக் காது கேட்கும். காதுகேட்காதவர்கள் சங்கூதுவார்கள். மூச்சு விடமுடியாதவர்கள் மூச்சா விடுவார்கள். மூத்திரத்தை சரியாக அடிக்க முடியாதவர்கள் விஞ்ஞான சாத்திரத்தை அட்ச்சுவிடுவார்கள்.
ஒல்லியாக இருப்பவர்கள் மனிதவெடிகுண்டுகளாக முன்னேற்றம் பெறுவர். குண்டாக இருப்பவர்கள் பேலியோ சாப்பிடாமலேயே இளைப்பார்கள்… அப்போதே என் செல்ல வள்ளுவ நாயனாரே (ஒரு வாசகர் ஓலையின் மீதான எதிர்க்குறளில்) சொன்னது போல:
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
(அதிஸ்வீட்_அதிகாரம்_அதிகாப்பி: கேள்வி-பதில்)
…அதாவது – நான் ராப்பகல் பார்க்காமல் செவிக்குணவினைத் தொடர்ந்து சலிக்காமல் அள்ளியள்ளி 24X7 ஈந்துகொண்டேயிருப்பதால், அவர்கள் தம் தொந்தித்தொப்பைகளுக்கு ஈந்துகொள்வது முடியாத விஷயமாகி விடும். ப்ராப்ளம் ஸால்வ்ட்.
ஆக, என் சிஷ்யகேடிகள் அனைவரும் எப்படியோ ஏதாவது ஒரு வகையில் சிறப்பெய்துவார்கள். முன்னேறுவார்கள். அப்படியே ஒருசிலர் சுயமுன்னேற்றமடையாவிட்டாலும் சுயமைதுனம் செய்துகொண்டு திருப்தியடைவார்கள். ஏனெனில் என் வீரியம் பெரிது. என்னுடன் கைகோர்த்துக்கொண்ட எவருக்கும் சுயமுன்னேற்றம்தான், வேறு கதிமோட்சமே கிடையாது.
ஹ்ம்ம்… எனக்கு இப்படியெல்லாம் எழுதிக்கொள்ள கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும் – நான் ஒரு உண்மைவிளம்பி என்பதாலும் என்னைப் பற்றிய பராக்கிரமங்கள் வெளியே பரவலாகத் தெரியவரவில்லையென்பதாலும் நானே புலனடக்கத்துடன் என் மகாமகோ ஆளுமையின் ஒரு சிறு பகுதியை இப்படி சங்கோஜத்துடன் வெளிப்படுத்தவேண்டி வந்துவிட்டது. காலத்தின் கோலம்தான் இது, வேறென்ன சொல்ல. :-(
-0-0-0-0-0-0-
ஆக, உங்கள் பிரச்சினை எனக்குப் புரிகிறது. உங்களுக்குத் தேவையானது சுயமுன்னேற்ற அறிவுரைக் களஞ்சியம் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.
நல்லவேளையாக, எனக்குச் சுயமுன்னேற்றத்தில் தேவைக்கு மேலாகவே அனுபவம் இருக்கிறது. எந்த விஷயத்தையும் எனக்குச் சாதகமாக வளைத்துக் கசக்கிப் பிழிந்து உடைத்துப் பிளந்து கூறுகட்டிக் கூவிவிற்று எனக்கு ஆதாயம் தருவதாக மாற்றிக்கொள்வதில் எனக்கு இணை நான்தான் என்பதை அவையடக்கத்துடன் உங்களுக்குக் கற்பிக்க, நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
உங்கள் நல்லூழ் காரணமாக, நீங்கள் ஆகச் சிறந்த, மிகச் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் ஏற்கனவே முன்னேற ஆரம்பித்து விட்டீர்கள்! வாழ்த்துகள்.
இந்தப் பக்கத்தில் வலது சட்டகத்தில் நான் எழுதியுள்ள சுயமுன்னேற்றப் புத்தகங்களைப் பற்றிய விவரங்கள் இருக்கின்றன; அவற்றை முதலில் வாங்குங்கள், சரியா? இதில் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால், அவற்றை நீங்கள் படிக்கவேண்டிய அவசியம்கூட இல்லை. வேறு வழியேயில்லாமல் முன்னேறி விடுவீர்கள்.
வாழ்க்கையில் செறிவான பலப்பல அனுபவங்களைப் பெற்ற நான் சொல்கிறேன் – நான் எதனை எழுதினாலும், இந்த விரிவான பதில் உட்பட, அது என் சுயமுன்னேற்றம் சார்ந்ததுதான். இலக்கியமாவது தேடலாவது ஆன்மிகமாவது க்ரியாசக்தியாவது காப்பியமாவது மசுராவது.
-0-0-0-0-0-
முன்னேறிக் கொஞ்சம், உங்கள் கணிநியின் திரைபக்கம் எனக்கு அணுக்கமாக வந்திருப்பீர்களே?
வாழ்த்துகள், மறுபடியும்.
சரி. என் வழக்கமேபோல, உங்கள் கேள்விகளைப் பலவிதங்களில் பலநோக்குகளில் பலகோணங்களில் பார்க்கிறேன்.
முதலில் உங்கள் பிரச்சினையைத் தமிழ் சிற்றிலக்கியப் பத்திரிகைகள் வழியாகப் பார்க்கிறேன்:
உங்களுக்கு இனி உண்டு. மீட்சி உண்டு. இதற்கு நீங்கள் உங்கள் கணினியை விட்டு அனாதையாக வெளியே வந்து கொஞ்சம் தேட நேரிடும்.
வெளியே வந்தவுடன் நீங்கள் உடனடியாகச் செய்யவேண்டியது: உங்கள் வட்டாரத்தில் இலக்கியப் பைத்தியம் ஏதாவது இருக்கும் – இதனை உடனடியாகக் கண்டுபிடிக்கவேண்டியதுதான்; உங்களுக்கு உதவியாக இஜ்ஜந்துவின் ஜாதிமதபேதமற்ற கல்யாண குனங்களில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்: இது – கண்சொருகிக்கொண்டு ஜெயகாந்தன் தருமுசிவராம் சுந்தரராமசாமி புதுமைப்பித்தன் என சதாசர்வகாலமும் உளறிக்கொட்டிக் கொண்டிருக்கும். அடுத்த ஆயிரம் ஆண்டுகளானாலும் தமிழகத்தில் அறிமுகமாகும் பாக்கியம் பெறமுடியாத பெரு, மங்கோலியா, வடகொரியா & அண்டார்டிகா சார்ந்த கவிஞர்களையும் நாவலாசிரியர்களையும் கரைத்துக் குடித்திருக்கும். எந்தெந்த தமிழ் இலக்கியவாதி எங்கிருந்து எதை எப்படித் திருடினான் என்பதையும் அறிந்திருக்கும்.
…மார்க்கெட்டில் எந்தத் தலையணை தமிழ் இலக்கியப் புத்தகமென வந்தாலும் குதித்துக்கொண்டு வாங்கிவிடும் இது. எந்த எழவு சிறு ‘இலக்கியப்’ பத்திரிகை (=’தனிச் சுற்றுக்கு மட்டும்’) வந்தாலும் அதன் 10 ஆயுள் சந்தாதாரர்களில் ஒருவராக இருக்கும். சேமிப்பு, குடும்பம் போன்ற லௌகீக அக்கறைகள் இருக்காது – இதற்குப் பொதுவாக 50+ வயதாகியிருக்கும், தொந்திரவில்லாத குமாஸ்தாவேலையொன்றில் இருக்கும். மூக்குக் கண்ணாடியைத் தேடிக்கொண்டிருக்காத சமயத்தில் இலக்கியத் தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும். கவிதைப் பட்டறை கவைக்குதவாத பருத்தியறை எனக் கண்டகண்ட இலக்கியக் கூட்டங்களில் கோமணம் நழுவுவது தெரியாமல் புளகாங்கிதத்துடன் நடனமாடிக்கொண்டிருக்கும்.
இந்த ஜந்துவிடம் பழைய பொட்டலங்களாக 1980-90களில் வெளிவந்த இனி (இது எஸ்விராஜதுரை எனும் மனோகரன் எனும் ஒருகால மா-லெகண்ணர் பதிப்பித்த இதழ் – ஆறேழு இதழ்கள் வந்து ஊத்திமூடப்பட்டது) + மீட்சி (இது பிரம்மராஜன் எனும் ராஜாராம் பதிப்பித்து ஊட்டியிலிருந்து (அல்லது குன்னூர்?) வெளிவந்து ஊட்டி மூடப்பட்டது) ‘சிறு பத்திரிகை’களின் பிரதிகள் இருக்கும்.
இம்மாதிரி ஜந்து, இப்புத்தகங்களைப் போய்ப் பொக்கிஷங்களாகப் பாதுகாத்து அடைகாக்கும் தன்மையுமுடையது. ஆனால், கொஞ்சம் நைஸாகப் பேசி இவற்றைக் கடன் வாங்கிவிட்டால் உங்களுக்கு கீழ்கண்ட இரண்டும் உண்டு.
2) மீட்சி (இதன் அட்டைப் படங்கள் அழகானவை; ஆனால் உள்ளிருக்கும் கவிதைகளில் சிலவற்றை நாகார்ஜுனன் எழுதினாரோ அல்லது அவர் போலவே வேறொருவர் எழுதினாரோ என்பது நினைவிலில்லை – இவை கொஞ்சம் டேஞ்சர் தான்!)
குறிப்பு: என்னிடமும் இவை இருந்தன; ஆனால் எனக்கு விசனம் தரும்படி அலெக்ஸ் அப்துல்லா, உங்களைப் போன்ற ஐடி குமாஸ்தா இளைஞர் ஒருவர் இவற்றைக் கடன் வாங்கிக்கொண்டுபோனவர் போனவர்தான். திரும்பி வரவேயில்லை. நாகார்ஜுனன் எம்டிமுத்துக்குமாரசாமி கட்டுரைகளைப் படித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டிருக்கலாம் கூட. இருந்தாலும் அவர் அயோக்கிய இளைஞர்தாம். மன்னிக்கவும்.
பாவப்பட்ட பழங்கால குமாஸ்தாக்களுக்குச் சென்ற இடமெல்லாம் செருப்புத்தான். இந்த மூக்குக் கண்ணாடி எழவை வேறு காலையிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன், சனியன் கிடைக்கவேமாட்டேனென்கிறது. நேற்று தபாலில் வந்த ‘தனிச் சுற்றுக்கு மட்டும்’ பத்திரிகையை மேஜையில் வைத்திருந்தேன், அதையும் காணோம்! :-( மனைவியிடம் கேட்டால், நிலுவையில் இருக்கும் விவாகரத்து வழக்கை நினைவு படுத்துகிறாள்.
-0-0-0-0-0-0-
இரண்டாவது கோணமாக, நான் எழுதியுள்ள (எதிர்காலத்தில் நானே வெளியிடவிருக்கும்) சுயமுன்னேற்றப் புத்தகங்களின் தலைப்புகள் வழியாக உங்கள் சுயமுன்னேற்றத்தைப் பார்க்கலாம்:
‘அந்தக் காலத்தில் சுயமுன்னேற்றமில்லை‘ – இது ஒருமாதிரி வரலாற்றுரீதியாக எழுதப் பட்டுள்ள ஆவணச் சான்று. முகவுரை: ஆஇரா வேங்கடாசலபதி (இவர் வரலாற்றாசிரியர், கட்டுரையாளர், அறிவுஜீவி, மொழிபெயர்ப்பாளர் என்றெல்லாம் அநியாயமாகப் பழி சுமத்தப் படுவது சோகம்தான்)
‘பின் தொடரும் சுயமுன்னேற்றத்தின் கதறல்‘ – இது இடதுசாரி நோக்கில் எழுதப்பட்ட நவீண நாவல். ஜெயமோகன் அவர்களிடம் அணிந்துரை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் கசப்புணர்வு மிக்கவன் என அவர் மிகச் சரியாகவே கருதுவதால், அவர் இனிப்பாக உணரவேண்டும் என்றெண்ணி ரெண்டு லட்டுக்களையும் இலவச இணைப்பாக அனுப்பியிருக்கிறேன். பார்க்கலாம்.
‘கோணாமாணா சுயமுன்னேற்றப் பக்கங்கள்‘ – என் தோழி ராக்ஷசபுத்திரி நடத்தும் மயிர்மை சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்ட குண்டூசிநவீனத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. சாருநிவேதிதா அவர்களிடம் அணிந்துரை கேட்டிருக்கிறேன். அவருக்கு வரும் கோபத்தில் அவர் அணிந்த உறை ஒன்றை அப்படியே ஆண்குறியீடாக அனுப்பாமல் இருந்தால் சரி.
‘சுயமுன்னேற்றாந்திரி‘ – இது ஒரு நாட்குறிப்பு வகை நவீனம். தேசம் தேசமாக தேகம் தேயத் திரிந்து சுயமுன்னேற்றத்தை அடைந்தவர்களை அடைந்து அவர்கள் என்னைப் புதிர்போலப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நானும் அவர்களைக் குதிர்போல மௌனமாகப் பார்த்துக்கொண்டு எடுத்த பேட்டிகளின் தொகுப்பு. ஆனந்தவிடலை பத்திரிகையில் தொடராக வந்தது. என் பேராசான் எஸ்ரா அவர்களுக்கு இதனைச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். (அவரிடம் அணிந்துரைக்காகக் கோரிக்கை வைத்தேன்; ஆனால் அவர் டவுன்லோட் கூக்ல் ட்ரேன்ஸ்லேட் நெகிழ்வாலஜி விஷயங்களில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாராம். அவர் உழைப்பே அலாதிதான்!)
‘டேய் முட்டாக்கூ, ஆவற வேலயப் பார்டா, பெர்ஸ்ஸா சொயமொன்னெற்றத்த கத்க்க வந்த்ட்டான், ங்கொம்மாள…‘ – இது முழுவதும் மெட்றாஸ் பாஷையில் எழுதப்பட்ட அரிய சுயமுன்னேற்றப் புத்தகம். முன்னுரை: ஜாம்பஜார் ஜக்கி வாசுதேவ்.
(இன்னமும் சிலபல புத்தகங்கள் இந்தச் சுயமுன்னேற்ற வரிசையில் இருக்கின்றன – அவற்றைப் பின்னொரு சமயம் பார்க்கலாம்)
இது என் புத்தகங்களின் வெற்றியைக் குறிக்கிறதா அல்லது தோல்வியையா என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்குச் சுயமுன்னேற்றமில்லை; ஆகவே என்னுடைய பேராசானுக்கு இதைப் பற்றி ஒரு கடிதம் எழுதி ஒரு அறவுரையையோ அறிவுரையையோ கேட்கலாமா என ஒரு யோசனை… பார்க்கலாம்.
…அலெக்ஸ் அப்துல்லா, இன்னமும் பலகோணங்களில் உங்கள் பிரச்சினையைப் பார்த்து அலசலாம். ஆனால் கோணல்கோணலாகப் பார்த்து, என் கழுத்து சுளுக்கிக்கொண்டுவிட்டது, சனியன்.
-0-0-0-0-0-0-0-
சரி. இவ்வளவு தூரம் படித்துக்கொண்டே வந்துவிட்டீர்கள். எவ்வளவோ முறை இதனைப் படிப்பதை விட்டுவிட்டு வேறு ஏதாவது உபயோகமாகச் செய்தால் நன்றாக இருக்குமே என உங்களுக்குத் தோன்றியிருந்தாலும், அப்படித் தப்பித்தவறிக்கூட ஒரு எழவையும் உருப்படியாகச் செய்யாமல் இந்தச் சுயமுன்னேற்றக் கட்டுரையைப்போய்த் தொடர்ந்து விடாப்பிடியாகப் படித்திருப்பதிலேயே உங்கள் விடாமுயற்சியின் தன்மையும் வீரியமும் புரிகிறது.
உங்களுடைய கல்யாணகுணம் விடாமுயற்சிதான். எப்பேர்ப்பட்ட உழைப்பாளி நீங்கள்! எனக்குப் புல்லரிக்கிறது. ஆகவே, இக்குணத்தை விடாமல் தொடரவும்.
இதைச் செய்தாலே போதும். உங்களுக்கு ஒர்ரே சுயமுன்னேற்றம்தான். இதற்கு நான் கியாரண்டி. இதனை நம்பமுடியவில்லையென்றால் – மறுபடியும் இக்கட்டுரையை முதலில் இருந்து ஆறஅமர ஆனால் விடாமுயற்சியுடன் படிக்கவும்.
அடுத்தமுறை – மறக்காமல் உங்கள் கடிதத்துடன் உங்கள் புகைப்படத்தையும் அனுப்பவும். இப்போதைக்குக் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருக்கிறேன். வாசகர் கடிதத்துடன், வாசகர் படத்தையும் பிரசுரிப்பதுதான் இப்போதைய ப்ரொடொகோலாம். ஒரு தொழில்முறை பின்னூட்டக்காரர் சொல்கிறார், சரியா?
நன்றி.
பின்குறிப்பு: இப்படியாகத்தானே பத்தே நிமிடங்களில் இக்கட்டுரையைப் படித்து திடீரெக்ஸ் சுயமுன்னேற்றம் அடைந்து விட்டீர்கள்…
- கம்பர் காலத்தில் வாசகர் கடிதம் 20/07/2017
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்…
- …
July 23, 2017 at 13:17
ram,
naan unagluku oru ‘meetchi korum kadidham’ ezhudhalmanu konja naalaa yosichitu irundhen.. nalla velai , Alex enna kaapaathitaru :)
July 24, 2017 at 08:42
தொழில்முறை பின்னூட்டக்காரர் என்று சொல்லிவிட்டதால் இப்போது பின்னூட்டம் போடாமல் தப்பிக்க முடியாத நிலை.
அன்பின் ரா!
உங்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் புகைப்படத்தை மட்டும் இப்போதே அனுப்பிவிட முடிவு செய்துவிட்டேன்.
இது ஒத்திசைவு படிக்க ஆரம்பிக்குமுன்:

இது ஒத்திசைவு படிக்கும்போது:

இது ஒத்திசைவு படித்து முடித்து சுய முன்னேற்றம் அடைந்தபின்:

இந்த மூன்றும் என்னை நானே எடுத்த ஸெல்ஃபிகள் என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன் கூறிக்கொள்கிறேன். இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ள அனுமதி அளிக்கிறேன்.
ஒத்திசைவு ஒரு மாபெரும் அறிவியக்கமாகப் பரிணமித்து மலர்கிறது என்று எண்ணும்போதே மயிர்க்கூச்செரிகிறது.
அன்புடன்
ஆ
July 24, 2017 at 08:50
திருத்தம்: ‘ஒத்திசைவு படிக்கும்போது’ சரியான லிங்க் இதோ:
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTzujwF4DXW0pqKYl7CiGN_FFo54ewxw2rjWChylB_ZlQwPzsuU3g
நன்றி.
ஆ.
July 24, 2017 at 09:53
அன்புள்ள ஆ!
எல்லாம் சரி. ஆனால் இவை என்னுடைய ஸெல்ஃபீக்களல்லவா? இப்படியா அறவுணர்ச்சியில்லாமல் திருடுவீர்கள்? அதுவும் அம்மணப் படங்களை எல்லாம் இப்படியா வெட்கம் கெட்டு வெளியிடுவீர்கள்?
ஒத்திசைவுக்கு இப்படி ஒரு பேரிடரா?
ஆக, நான் மிகுந்த விசனத்தில் இருக்கிறேன். மேலும் மாற்றுக் குரங்காளர்கள் வேறு இதற்காகப் போராட்டத்தில் இறங்கினால்?
இப்படிக்கு:
மாற்று மந்தியோன்.
July 24, 2017 at 11:49
I’m just ‘aping’ my ஆசான் என்று பெருமையுடன் ஒப்புக்கொள்கிறேன். எனவே என்மீது படிவலது மீறல் வழக்கு போட முடியாது.
ஆனால் இந்த செல்ஃபீக்கள் டெல்லி விவசாயிகள் ப்ரொடெஸ்டில் எடுக்கப்பட்டவை அல்ல என்று மட்டும் உறுதிகூற முடியும். (தொப்பை இல்லை என்பதே சான்று) அதனால் இவற்றை வெளியிட வெட்கப்பட வேண்டாமே?
உலகின் முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே லெமூரிய வழித்தோன்றல்களான மாற்றுக்குரங்காளர்கள் அமைதியடைவார்களாக!
July 24, 2017 at 13:11
அம்மணம், நிர்வாணம் போன்ற பிரயோகங்கள் விவசாய ப்ரொடெஸ்டாளர்களைப் புண்படுத்தும் சொற்கள். மாற்று உடையாளர்கள் என்று அழைப்பதே அரசியல் சரித்தன்மை உடையது. அதைவிட பேலியோ உடை என்று கூறினால் பேலியோ உணவாளர்கள் மேலதிகமாக மகிழ்ந்து உடைப்பழக்கத்திலும் கற்கால மனிதர்களைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.
July 24, 2017 at 14:27
ஆ! நல்லவேளை நீங்கள் “I’m just raping my ஆசான்” எனக் கிளம்பாதவரை உத்தமம்.
நன்றி. ஆளை விடுங்கள்.
July 26, 2017 at 02:10
அய்யய்யோ… Sir full form ல இருக்கீங்க போல.. பேராசான்,ஆசான்,சிற்றாசான் எல்லாரையும் பிரித்து மேய்ந்து விட்டீர்களே அய்யா.
ஆனந்தம் அவர் ஒரு பக்கம்…
நடக்கட்டும் நடக்கட்டும்…
இனிதானோம்
July 26, 2017 at 21:24
[…] […]
August 6, 2017 at 16:02
[…] […]
August 10, 2017 at 20:34
[…] […]
February 14, 2018 at 17:23
[…] […]