‘திராவிடத் திருமண மணமக்களை வாழ்த்துகிறேன்’ என்கிற பெயரில் கண்டதையும் கண்டமேனிக்கும் திட்டித் தீர்ப்பது எப்படி? (அல்லது) கருணாநிதியின் மொழிவெறி
June 19, 2016
(எச்சரிக்கை: இப்பதிவில் ஆபாசம் ததும்பும் / விரசமான சிலபல திராவிட வரிகள் இருக்கின்றன – ஏனெனில், இப்பதிவில் நடைமுறை திராவிடலைத்தனத்தின் ஒரு அங்கத்தைப் பற்றித்தான், அதுவும் பச்சைத் திராவிடர்கள் உபயோகித்த/உபயோகிக்கும் வார்த்தைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன், ஆகவே வேறுவழியேயில்லை. மன்னிக்கவும்.
மேலும், இதனைப் படித்துவிட்டு முகத்தைச் சுளித்துக்கொள்ள வேண்டாம், புலம்பவேண்டாம், ‘கெட்ட(!) வார்த்தைகளை உபயோகிக்கவேண்டாமே‘ என எனக்கு ஒழுக்கவியல்101 அறிவுரைத்தனமான போதனைகளைத் தரவேண்டாம். அப்படிப்பட்ட அறிவுரைகளை எனக்கு நானே தந்துகொள்ளமுடியும்; எப்படியும் நான் திருந்துவதாகவும் இல்லை.
ஆகவே, இந்த எழவைப் படிக்கும்போது, துணைக்கு உங்கள் பெற்றோர்கள் கையையோ, துணைவி-துணைவனின் கையையோ பிடித்துக்கொண்டு ஆசுவாசம் பெறலாம். PG50; தாராளமாக, மேலே(=கீழே) படிக்காமலும் ஓடலாம்; உங்கள் விருப்பம். ஊதவேண்டிய சங்கை ஊதிவிட்டேன். நன்றி.)
-0-0-0-0-0-0-0-
படித்தீர்களா: மொழிவெறி, திராவிடம், கருணாநிதிகள் – சில குறிப்புகள் 17/06/2016
…தீரா விட திராவிடத்தால் பீடிக்கப்பட்ட, பரிதாபத்துக்குரிய தமிழகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று – அரைகுறை அரசியல்வாத திராவிட மாக்களானவர்கள், மகிழ்ச்சிசூழ நடக்கும் பாவப்பட்ட திருமண வைபவங்களில் கலந்துகொண்டு கொடூரமான வார்த்தைகளை, வாழ்த்துகிறோம் என்கிற பெயரில் ஓக்காள வாந்தி எடுப்பது, அல்லது அதிகபட்சம், ஒரு மசுத்துக்கும் தொடர்பில்லாமல் உளறிக்கொட்டுவது என்பது… :-(
இதன் லேட்டஸ்ட் எடிஷன்: மேதகு டாக்டர்+டாக்டர் கருணாநிதி அவர்களின் லேட்டஸ்ட் உளறிக்கொட்டல். வெறுப்பு உமிழல்; புல்லரிக்கிறது, வேறென்ன சொல்ல! :-)) [பின்புலம்: [1], [2], [3]]
-0-0-0-0-0-0-
…பொதுவாகவே, நான் திருமணங்களுக்குச் செல்வதை வெறுப்பவன் – இருந்தாலும் வேறுவழியேயில்லாமல் சிலமுறை இவைகளுக்குச் சென்று இறும்பூதடைந்ததுமுண்டு.
எது எப்படியோ – சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் முன்பாக, வேண்டாவெறுப்பாக இரண்டு திராவிடத் திருமண ‘வாழ்த்து’ நிகழ்ச்சிகளில் கலந்து(!)கொண்டிருக்கிறேன் என்கிற முறையில் சொல்கிறேன் – இம்மாதிரி கீழ்த்தரமான நிகழ்வுகள் நடப்பது என்பது திராவிடத்தின் உள்ளார்ந்த கல்யாண(!)குணங்களின் ஒரு வெளிப்பாடு மட்டுமே!
எனக்குத் தெரிந்த மட்டில் (=மட்டத்தில்) வேறெந்த பிரதேசத்துத் திருமண வைபவத்திலும் இம்மாதிரிக் கண்றாவி எழவுகள் நடப்பதேயில்லை. இது நம் தாய்த்திரு நாடாம் தமிழகத்தை மட்டும் அநியாயமாகப் பீடித்திருக்கும் வியாதி, கோபம்கோபமாக வருகிறது…
கடந்த 30-40 ஆண்டுகளாக, திருமணத்தை எழவாக, அசிங்கமாகத் திட்டும் வைபவமாக மாற்றும் திராவிட ரசவாதம் மாறவேயில்லை. வாழ்க!
-0-0-0-0-0-0-
புதுமணத் தம்பதியினர் மேடையில் மாலையின் ஜிகினா எழவு கழுத்தில் அரிக்க, மாலையின் ரோஜாப் பூக்களுக்கு வந்த எறும்பு கடிக்க, ஒரு மூட்டைப்பூச்சித்திணை ஸோஃபா செட்டில் அமுக்கப்பட்டு பேஸ்தடித்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் போஸ்டர் அலங்கார எழவுகள் இருக்கும்.
இவர்களைத் தேமேயென்று விட்டுவிட்டு, வந்த அரைகுறைத் தலைவர்களுக்கு மாலையணிவிக்கும் வைபவம் நடக்கும். கூடவே துண்டு / பொன்னாடை / பன்னாடை போர்த்தும் வரிசைமுறையும். குஞ்சான் குளுவான் என அனைவரும் உளறிக்கொட்டி, எதிர்க் கட்சிகளுக்குச் சவால் விட்டபின், கண்டமேனிக்கும் அசிங்கமாகப் பேசியபின் – பெருங்குடிமயக்கத்தில் இருக்கும் பெருந்தலைவர் எழுவார். சமயத்தில், கைத்தாங்கலாக இம்மனிதரை யாராவது பிடித்துக்கொள்ளவேண்டிவரும் கூட.
…இந்த மனிதர், மைக்கைப் பிடித்து எச்சில் தெறிக்கச் சவால் விடுவார், படுமோசமான வசைகளால் எதிரிகளை எச்சரிப்பார். அசிங்கம் அசிங்கமாக வாய்க்கு வந்தாற் போலப் பேத்தித் தள்ளுவார். எல்லோரும் கைதட்டுவார்கள், சாப்பாட்டை எப்போது போடப் போகிறார்கள் என எட்டிப் பார்த்துக்கொண்டே…
பாவம், புதுமணக்காரர்கள், அவர்களுக்கு அசதிவேறு – நெளிந்துகொண்டிருப்பார்கள். கண்ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்துகொண்டிருக்கும்…
ஆனால், பெருந்தலைவர் தொடர்ந்து முழங்கிக்கொண்டேயிருப்பார்… கடைசியில் – ‘எதிரிகளை எச்சரிக்கிறேன், உங்களை நசுக்கி விடுவோம், ரத்த ஆறு ஓடும் என்று மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வுவாழ வாழ்த்துகிறேன்‘ என்கிற ரீதியில் முடிப்பார். அப்பாடா!
ஒரு வழியாக இம்மாதிரி எழவுகள் திருமணவைபவங்களாக அரங்கேறியபின், விட்டால்போதும் என்று வந்திருப்பவர்கள், திராவிட அடலேறுகள், முண்டியடித்துக்கொண்டு சாப்பாட்டை வெற்றிகொண்டு வீரவாகை சூடிக்கொள்வதற்காக சாப்பாட்டுக்கூடத்தை நோக்கி விருவிருவென்று விருமாண்டித்தனமாக வீர நடை போடுவார்கள். வெட்கமோ மானமோ அற்ற கழிசடைப் பிச்சைக்காரர்கள்…
சரி – நான் சென்ற முதலாவது – ஒரு திராவிடத் திமுக திருமணம். இது என் நண்பன் வீட்டுத் திருமணம்; இவனைப் பற்றி முன்பொரு பதிவில் எழுதியிருக்கிறேன். நாயுடு வடுகன், திராவிடன். ;-) (இந்தப் பதிவில் உள்ள கழகக்கோழைத் தோழன் இவன்தான்!)
இதில், தலைமை ஏச்சாளர் – ஒரு குட்டி திமுக தலைவர் – ‘டேய் நடிகர் கட்சி சோமாறி —— (இது எங்கள் ஊர்க்காரரும் ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்த இன்னொரு அஇஅதிமுக நாயுடு தலைவரைக் குறிப்பிட்டது), ஒம் பொண்டாட்டி கூதிய நாய் நரி ஓக்க‘ என மணமக்களை ஆசிர்வதித்தார். (அசிங்கமாக, அதாவது திமுகதனமாக வசைபாடப்பட்ட இதே எம்பியின் மகன், எனக்குப் பிற்காலத்தின் நண்பனானான், இவன் அருமையானவன்! இவனைப் பற்றியும் முன்னமேயே ஒத்திசைவில் எழுதியிருக்கிறேன், ஆனால், எங்கு என நினைவில்லை…)
நான் இரண்டாவதாகப் (=கடைசியாக) பங்கேற்ற திராவிட அலங்கோலம் – ஒரு அஇஅதிமுக திருமணம். அதுவும் மேற்கண்ட வகைதான்.
குட்டித் தலைவர்களில் ஒருவர், ஓசியில் துண்டு கிடைத்த உற்சாகமோ என்னவோ தெரியவில்லை. எல்லா திமுக தலைவர்களையும் சரமாரியாக ஒரு பிடிபிடித்தார். பட்டை சாராயத்தின் (அக்காலத்தில் அதனை ‘ஊறல்’ என்பார்கள்) பக்க விளைவுவேறு! ‘டேய், வொங்க தலைவர் என்னடா பெருஸ்ஸா நெஞ்சுக்கு நீதி எள்திக்கிறாரு! அவ்ரு, குஞ்சுக்கு கூதின்னிட்டு எள்தியிருந்தா அது உண்ம, அவ்ருக்கு அனுபவம்கீது, பரவால்ல, ஒத்துக்குவோம்… … இதெப்டி இருக்கு‘ என்று பதினாறு வயதினிலே ‘பரட்டை’ ரஜினி போல நடித்துக்காண்பித்துக் கண்ணைச் சிமிட்டினார்…
…ஒர்ரே உற்சாக விசில்கள். சிரிப்புகள். கைதட்டல் ஓயவேயில்லை! க்ரோம்பெட் வைஷ்ணவா கல்லூரி பிஎஸ்ஸி-யை நல்ல மதிப்பெண் வாங்கிக் கடந்திருந்த சூட்டிகையான மணப்பெண்ணுக்கு மயக்கம்வராத குறை, பாவம். மணமகருக்குத் தமிழ்தெரியாது, தப்பித்தார். (நான் பெண்வீட்டுக்காரனாக வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன்)
…உண்மையைச் சொல்லவேண்டுமென்றல், நானும் முதலில் விக்கித்துப் போய்விட்டேன். அசிங்கமாக உணர்ந்தேன்.
ஆனால், எனக்கும் எதுகைமோனையும் அடுக்குமொழியும் அபரிமிதமாகப் பிடிக்கும், என்னவிருந்தாலும் நானும் ஒரு சோப்ளாங்கித் தமிழனல்லவா? அடுக்குமொழிக்கும் பொறுக்கிநடைக்கும் மனதைப் பறிகொடுப்பவன் தானே? ஆகவே சுதாரித்துக்கொண்டு, நானும் அதை ஒரு கேளிக்கையாகவே கருதி விட்டுவிட்டேன்… நெஞ்சுக்கு நீதியின் வீச்சமே அலாதிதான்!
…என் வாழ் நாளில் மறக்க முடியாத விஷயங்களில் இந்தப் பேச்சும் (ஏச்சும்?) ஒன்று! கண்டகண்ட விஷயங்களைச் சேகரம் செய்து மண்டையை வீணடித்துக் கொள்வதற்குப் பதிலாக, நான் ஆக்க பூர்வமான வழிகளில் கவனத்தைச் செலுத்தவேண்டும், ஆனால் திராவிட தேசத்துக்காரனும் தன்மான இனமானத் தமிழனுமான எனக்கு, ஓக்கபூர்வமாக உழைப்பது மட்டும்தான் லபிக்கிறதோ என்ன எழவோ! :-( – மன்னிக்கவும், மன்னிக்கவும்! திராவிடம் என்றாலே விடலைச் சொல்லாடல் அதிகமாகிவிடுகிறதே! என்ன செய்ய, அய்யகோ!! என்னை மன்னிப்பீர்களா? ;-)
சரி. குட்டித் தலைவர்களின் அணிவகுப்புக்குப் பின்னர் – பெருந்தலைவர், தன் வேட்டியவிழ்ந்துகொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், கொள்கை வெறியுடன் திமுகவினருக்கு எச்சரிக்கை செய்து – ‘டேய் என் பூள ஊம்ப வர்ரியா‘ என்று மரியாதையுடன் முடித்தார்.
மணமக்களும் திருப்தியுடன் திருமணப் பயனை அனுபவித்தனர். நன்றி.
ச்சீ.
குறிப்பு: சிலமாதங்கள் முன் இதனைப் பற்றி நண்பர்களுடன் பேச நேர்ந்தபோது, அதாவது, உருண்டுவிழுந்து கண்ணீர்வரச் சிரித்துக்கொண்டிருந்தபோது, திராவிட அனுதாபி நண்பர் ஒருவர் சங்கடத்துடன் சொன்னார் – கீழ்மட்ட திராவிடக் கட்சி நிர்வாகிகள் இல்லத் திருவிழாக்களில் வேண்டுமானால் இப்படியெல்லாம் இருக்கலாம், நடக்கலாம். ஆனால் உயர்மட்டங்களில் இப்படி இருப்பதேயில்லை.
நான் சொன்னேன் – அய்யா, கீழ்மட்டம் என்றால் அதற்கு எதிர்ப்பதம், மேல்மட்டமல்ல; திராவிட இயக்கங்களைப் பொறுத்தவரை அது படுமட்டம்தான். தலைவன் எவ்வழி அதே ஊர்மேயும் வழிதான் தொண்டனுடைய வழியும் கூட. நீங்கள் துரைமுருகன், டிஆர்பாலு போன்ற சான்றோர்களின் திருமண வாழ்த்துரைகளைக் கேட்டிருக்கிறீர்களா? மணமக்கள் முன்னால் இரட்டை அர்த்தம் தொனிக்க எதிர்க்கட்சித் தலைவர்களை (குறிப்பாக, ஜெயலலிதாவை) ஏசும் பேச்சுகளைக் கேட்டதேயில்லையா? சுமார் பத்தாண்டுகள் முன்புகூட ஸ்டாலின் இசுடாலிர் பேசிய மணமேடை வக்கிரங்களை அறிந்ததேயில்லையா? என்னய்யா சொல்லவருகிறீர்? உங்கள் கட்சியில் ஒருவர் கூட உங்களைப் போன்ற ஒரு ஜென்டில்மன் அல்லர், இது கூடவா தெரியாது உங்களுக்கு?
அவர் பாவம், ஒன்றுமே பேசவில்லை. அவர் மெய்யாலுமே ஒரு ஜென்டில்மன்தான்.
-0-0-0-0-0-0-0-
… பாவம், கருணாநிதி அவர்கள், அவரைப் பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது, கைக்கெட்டிய கேப்டன் பழம், வாய்க்குள் விழாமல், பாலுக்குள்ளும் விழாமல் பாவலா காட்டிவிட்டது. என்ன செய்வது சொல்லுங்கள். ச்சீ இந்தப் பழம் புளிக்கும்கதைதான்!
வேறுவழியேயில்லாமல் எத்தைத் தின்றால் பித்தம் (=அரசுப்பதவிகள் இல்லாமல், அபரிமிதமாகப் பணம் பண்ண முடியாமல் இருக்கும் கையறு நிலை) தெளியும் என்று அலைந்துகொண்டிருக்கிறார் அவர்… அவர் கஷ்டம் அவருக்கு.
இம்மாதிரி ‘கடலில் தத்தளிக்கும் கட்டுமரம்’ போல அவர் அல்லாடிக் கொண்டிருக்கையிலே, அவருக்குக் கிடைத்தய்யா இந்த மாய்மால ‘ஸம்ஸ்க்ருத ஆதிக்கம்!’ மொழிவெறி கொலைவெறியென கூச்சமேயில்லாமல் தன் கயமையின் பாற்பட்ட அறியாமையை வெளிப்படுத்திவிட்டார்!
உளறித் தள்ளிவிட்டார். பெனாத்திப் பெண்டெடுத்துவிட்டார். அதாவது, மணமக்களை மேற்கண்ட மகாமகோ திராவிடப் பாணியில் வாழ்த்தி விட்டார். திராவிடச் சிறுகுஞ்சாமணிகளின் மேற்கண்டதுபோன்ற ‘திருமண வாழ்த்து’ வகையறாக்களே வெட்கப்படும் படிக்கு மூச்சுமுட்ட அட்ச்சுவுட்டிருக்கிறார். வாழ்க!
ஆக, நமக்கெல்லாம் கிடைத்த இன்பம்ஸ் வகையறாக்களுக்கு அளவேயில்லை, என்ன செய்வது சொல்லுங்கள்?
-0-0-0-0-0-0-0-0-
வாய்கூசாமல் பொய்பேசுவதை, இரட்டை வேடங்களுக்கு மேற்பட்டு திராவிட முட்டை வேடம் போடுவதை விட்டுவிட, இந்த 90த்திச் சொச்சம் வயதில் கூட அவருக்கு விவேகமோ அவசியமோ வரவில்லை என்பதை நினைத்தால், திராவிடத்தின் உச்சகட்ட அதலபாதாளங்களைப் பற்றிய பல திறப்புகள் ஏற்படுகின்றன…
…பாவப்பட்ட ( கனிமொழி மெகாஊழல்கள் தொடர்பாக, கொஞ்சம்போல மாட்டிக்கொண்டவரும், ‘ஆலடி அருணா’வின் மகளுமான) ‘டாக்டர்’ பூங்கோதை அவர்களின் மகளுடைய திருமணத்தில்தான் – தன் அறியாமையையும், மொழிவெறியையும் பறைசாற்றியிருக்கிறார் நம் கருணாநிதி அவர்கள்! வெறியை உமிழ்ந்தபின், மற்றவர்களை மொழிவெறிக்காகக் காரணம் காண்பிக்கிறார். அவர் உண்மையிலேயே நடிகர்திலகம்தான்!
இந்த உளறல்களின் சாராம்சம் / சில பகுதிகள்:
பெருந்தகையார் புலம்புகிறார்: இதை முழுமையான சீர்திருத்தத் திருமணமாக, முழுமையான பகுத்தறிவு திருமணமாக நடத்த வேண்டும் என்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியாவிலே எங்கோ ஒரு மூலையில் நம்முடைய மொழியை, நம்முடைய மொழிக் கொள்கையை வாட்டி வதைக்கின்ற அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
(பகுத்தறிவுச் சீர்திருத்தத்திருமணத்தில் சீர்திருத்தத் தலைப்பாகையை அணிந்துகொண்டிருப்பவர் மணமகன்: கிரண்; சீர்திருத்தப் பட்டுப்புடவையையும், அமங்கலமான குங்குமத்தையும், ஒட்டியாணம் உட்பட சீர்திருத்தத் தங்க நகைகளையும் அணிந்திருக்கும் மணமகள்: சமந்தா (இரண்டுபேருக்கும் அழகான தமிழ்ப் பெயர்கள், மெச்சுகிறேன்!))
மாட்டுக்காரவேலனார் விரட்டுகிறார்: சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்.
அய்யா, சரி. உங்கள் குடும்பத்திலேயே அழகான சுத்தத் தமிழ்ப்பெயர்கள் இருப்பதை மெச்சுகிறேன். கருணாநிதி, தயாளு, இசுடாலிர், அழகிரி, தயாநிதி, உதயநிதி, கலாநிதி, ஆதித்யா அரவிந்தன் (பெண்ணியக் கனிமொழி ஏன் இப்படி விட்டுக்கொடுத்துவிட்டார்?) எனத் தொடரும் வரிசை இருக்கிறதே, ஏ அப்பா! ஆனால் ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை: நீங்களே உங்கள் பெயர்களைத் திணித்துக்கொண்டு, உங்களையே எப்படி ஓடஓட விரட்டிக்கொள்ளப் போகிறீர்கள்? கற்பனை செய்தாலே கொடூரமாக இருக்குமே அது?
இழிய பெயர்கொண்ட கருணாநிதி பகர்கிறார்: சோம சுந்தர பாரதியார் சொல்வார் – ‘சமஸ்கிருதம்’ என்று கூடச் சொல்ல மாட்டார் – ‘சஞ்சிகிரதம்’ என்று தான் சொல்வார். அப்படி இழித்துரைக்கப்பட்ட ஒரு மொழி, சமஸ்கிருத மொழி – வட மொழி.
…ஏனய்யா இப்படியெல்லாம் குழப்புகிறீர்! சோமம் சுந்தரம் பாரதியென தன்பெயரில் அனைத்து வார்த்தைகளும் ஸம்ஸ்க்ருதமாக இருக்கும்போது அப்படி ஒருவர் உளறியிருக்கிறார், நீங்களும் அதனைப் பின்மொழிகிறீர்கள்! உங்கள் பெயரிலும் அதே ஸம்ஸ்க்ருதம் இழிபட்டு இளித்துக்கொண்டிருக்கிறது. வெட்கமேயில்லையா?
சமச்சீரழிவுக்கல்வியைப் புகுத்திய கருணாநிதிச் சோழன் சவால் விடுகிறார்: மீண்டும் தமிழ்நாட்டில், இந்தியாவில் சமஸ்கிருதம் தலைதூக்குமா? வடமொழி நம்மீது படையெடுக்குமா என்ற அந்தக் கேள்விக் குறி நமக்கு ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. வட மொழிக்கு ஆதிக்கம், சமஸ்கிருதத்திற்கு ஆதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய தமிழ் மொழிக்குத் தான் செல்வாக்கு, தூயத் தமிழ் மொழி தான் நம்முடைய வாழ்க்கையிலே இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் சமஸ்கிருதத்தை பாட மொழியிலே சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.
சமச்சீர்கல்வி எனும் அரைகுறை மோசடி பம்மாத்தினை தமிழகத்தின் பள்ளிச்சாலைகளில் உட்புகுத்திய கருணாநிதி, அந்தத் திட்டத்தின் பெயரில்கூட ஸம்ஸ்க்ருதத்தை உபயோகித்திருக்கும் நிலையில், எப்படித்தான் இப்படிப் பேசமுடிகிறதோ! பைத்தியக்காரர் யார்?
திராவிடப்பாணியில் திட்டிவாழ்த்தும் கருணாநிதி அரைகூவலிடுகிறார்: மணவிழாவில் நாம் எடுத்துக் கொள்ளும் வீர சபதமாக வட மொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம், சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என்ற அந்த உறுதியை இந்த மண விழாவிலே நாம் ஏற்றுக் கொண்டால் தான், ஆலடி அருணா வீட்டுத் திருமணத்திலே கலந்து கொண்டதற்கு அடையாளம் – அந்த அடையாளத்தை நீங்கள் பெற வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, மணமக்களை வாழ்க வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்
:-)
சொல்லப்போனால், கீழ்மட்ட திராவிட உதிரிகளின் வாழ்த்துரைவசைகளுக்கும், மேற்கண்டபடியான படுமட்ட வசைகளுக்கும் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. கொஞ்சம் யோசித்தால், கீழ்மட்டப் பேச்சாளர்கள், தங்கள் உள்ளார்ந்த ஆபாச விழைவுகளைத்தான் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார்கள். ஆனால் கருணாநிதிகளிடம் இந்த அடிப்படை நேர்மைகூட இல்லவேயில்லை. என்ன ஜென்மங்களோ!
…அகாலமாக இறந்துபோன ஆலடி அருணா என்கிற பெயரிலேயே ஸம்ஸ்க்ருதமிருக்கிறது. ஆகவே, அவருடைய பிசாசையும், ஆலடியின் பேத்தியின் கணவனாகிய கிரணையும் ஒருசேர ஓடஓடவிரட்டப்போகிறார் எனத்தான் நினைக்கிறேன்!
பாவம் மணமகன். அவர் இளைஞராகத் தான் தெரிகிறார். ஆகவே, அவர் நன்றாகவே தப்பி ஓடக்கூடும்.
எது எப்படியோ, இந்த திராவிடக் கொள்ளைக்குடும்பங்களின் வெறிக் கிடுக்கிப் பிடிகளிலிருந்து தப்பி, மேற்படி மணமக்கள் ஆரோக்கியமாகவும் மன அமைதியுடனும் வாழ என் வாழ்த்துகள்!
நன்றி.
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்…
- போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்
- தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
June 19, 2016 at 14:20
(எழவை) படித்து விட்டு ஓடுவதா அல்லது உருண்டு விழுந்து சிரிப்பதா, ஒன்றுமே புரியவில்லையே! ஐயகோ!!
June 20, 2016 at 10:42
ஒரு பாட்டில் பினாயில் பார்சல்.. சுத்தமாக துடைத்து எடுப்பதற்கு