மொழிவெறி, திராவிடம், கருணாநிதிகள் – சில குறிப்புகள்

June 17, 2016

என்னைப் பொறுத்தவரை (மட்டுமல்ல; நான் மதிக்கும், தொடர்பிலிருக்கும் பல அறிஞர்/சான்றோர்கள் கருத்தும்கூட):

-1. தமிழகத்து மொழிவெறியின் ஊற்றுக்கண்கள் திராவிட முயக்கத்தில்தான் இருக்கின்றன. சொல்லப்போனால் – கருணாநிதிகளின் தலைகயமையின் கீழ், இந்த வெறி உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. நம் கலாசாலைகளிலிருந்து ஸம்ஸ்க்ருதத்தையும், தமிழையும் ஒரேசமயத்தில் ஒழித்து, நம்மால் போற்றப்படவேண்டிய பேராசிரியர்களின் ஆளுமைகளை விரட்டி அழித்து,  பன்மொழி வளமைகளைப் பேணாமல்,  நம் செவ்வியல் பாரம்பரியங்களைப் போற்றாமல்,  ‘கனிமொழியின் கவிதைகளும் காக்கைபாடினியாரும்’ வகை ஜால்ரா அரைகுறைத்தனங்களில் நம் கல்வியாளர்களை ஈடுபடவைத்ததுதான் திராவிடத்தின் அதிகபட்ச பங்களிப்பு. (இதே ஜந்துக்கள் – மொழிவெறி என்று பேசும்போது, அதனை ஊடகப்பேடிகள் மறுவாந்தி எடுப்பதைப் பார்க்கும்போது, ‘ஸம்ஸ்க்ருத / ஹிந்திவெறி’ பயபீதியை ஊட்டிக்கொடுக்கும்போது எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கிறது!)

0. தமிழைப் பற்றிய கறாரான, நேர்மையான ஆராய்ச்சிகளில் – ஒன்றுகூட இந்த திராவிட ஆட்சி சமயங்களில் நடக்கவில்லை. நாம் இவ்விஷயங்களில் போற்றமுடிவதெல்லாம் அதற்கு முன் நடந்தவை மட்டுமே! இக்காலங்களில் – இவையெல்லாம் வெள்ளைக்காரப் பல்கலைகளில்தான் நடக்கின்றன. என்னைப் பொறுத்தவரை, தமிழகத்திலிருந்து எழுதப்பட்ட/எழுப்பப்பட்ட கறார் ஆய்வுகள் / அறிதல் முறைமைகள் – காங்கிரெஸ் ஆட்சி வரை ஓரளவுக்கு நன்றாகவே இருந்திருக்கின்றன. அதற்குப் பின் அரசமைத்த திராவிடக் கொள்ளை முயக்கங்களின் அறிவுப்புல எதிர்ப்புச் செயல்பாடுகள் (anti-intellectual, anti-knowledge, anti-historical, anti-cognitive, anti-national, anti-rational… … all resulting in one single category: anti-social, THE canonical dravidian lumpen category) நம் அறிவார்ந்த செயல்பாடுகளை அதலபாதாளத்தில் அமிழ்த்தி வைத்திருக்கின்றன!  (ஓரளவுக்கு சமகால தமிழ ஆராய்ச்சிச் சூழலை அறிந்துள்ளவன் என்கிற வகையில், முடிந்தவரை ஆராய்ச்சிப்பதிவுகளைத் தொடர்ந்து படித்துவருபவன் எனும் பின்புலத்தில், என்னால், நம் தமிழகப் பல்கலைகள் சார்ந்த சமகால தமிழ்/செவ்வியல்/வரலாறு ஆராய்ச்சியாளர்களை ஒரு கைவிரல்களால் கூட எண்ண முடியவில்லை, சோகம்!)

1. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் பாரதத்தின் இரு கண்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இப்படித்தான். ஒருகண் மற்றதுடன் உறவாடி, ஒத்திசைந்து, பார்வைகளை ஒருங்கிணைத்து – பாரதப் பண்பாட்டு வெளியில் பல உச்சங்களைச் சாதிக்க முடிந்திருக்கிறது.

2. பாரதக் கலாச்சாரவெளியே அப்படித்தான் – பல எண்ணப்போக்குகள், பழக்கவழக்கங்கள், தத்துவ ஞானங்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து உரையாடி, தொடர்ந்து தங்களை மேன்மைப் படுத்திக்கொண்டிருக்கின்றன. வெளிப் பிரதேசங்களிலிருந்து படையெடுப்புகளும், சூறையாடல்களும், பண்பாடுஒழிப்புகளும், மதமாற்றங்களும் தொடர்ந்து நடந்துவந்த நிலையிலும் – அவற்றுடனும் உரையாடல்கள் நடந்தவண்ணம் இருந்தன, நடந்துகொண்டிருக்கின்றனகூட. (சில சமயங்களில், எனக்கு இந்த உள்ளார்ந்த போக்கு – பாரதத்தின் சக்தியா குறைபாடா என்ற சந்தேகமும் வருகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்)

3. பிரிவினைவாதம் பேசியோ (திராவிட அற்பர்கள் போல) அல்லது – தமிழ்+ஸம்ஸ்க்ருதம் பற்றிப் பேசும்போது, இதுதான் அதைவிடப் பழைமையானது/முற்போக்கானது எனவெல்லாம் அர்த்தமற்று – ஒருவிதமான ஆராய்ச்சிப் பின்புலமுமில்லாமல் – விவாதிப்பதிலோ, ஒரு சுக்குக்கும் பிரயோஜனம் இல்லை.

4. தமிழர்களாகிய நாம், தராதரங்களை அளவிடவும் மதிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். உள்ளீடற்ற திராவிட உச்சாடனங்களை உருட்டிக்கொண்டிருப்பதை, சொத்தைப் பற்கள்போலப் பிடுங்கி (திராவிடர்களோடு சேர்த்து) விட்டெறியவேண்டும். முதலில் கொஞ்சம் வலிக்கும், ஆனால் தமிழ ஆரோக்கியத்துக்கு இது முக்கியம்.

5. என்னைப் பொறுத்தவரை, செவ்வியல்பேணல் நோக்கில், அறிதற்புலங்களை விரிவாக்கும் முகமாக தமிழும் முக்கியம், ஸம்ஸ்க்ருதமும் முக்கியம்.

6. நம் சூழல்களில் லௌகீக உரையாடல்/உபயோகங்களுக்காக தமிழும், ஆங்கிலமும், ஹிந்தியும் முக்கியம். (எடுத்துக்காட்டாக: சென்னையிலிருந்து (அல்லது நாமக்கல் வட்டாரங்களிலிருந்து) வெளி மாநிலங்களுக்குப் போகும் லாரி குழுக்களுடன் பேசிப் பாருங்கள்,  அவர்கள் ஹிந்தி அறிவை எவ்வளவு மதிக்கிறார்கள் எனத் தெரியவரும். அவ்வளவு ஏன், கருணாநிதியே ஒருசமயம் ‘ தயாநிதி மாறனுக்கு ஹிந்தி தெரியும், ஆகவே அவர்தான் திமுகவின் தில்லிதொடர்பான பங்கேற்புகளை ஒருங்கிணைக்க முடியும்’ என்கிற ரீதியில் கயமையுடனும் சாதுரியத்துடனும் பேசவில்லையா? அதே சமயத்தில் ஹிந்திவெறி பற்றியும் உளறிக்கொட்டவில்லையா? பிரச்சினை என்னவென்றால், நம் ஞாபகசக்தியென்பது நேற்றைய பப்பரப்பாவரை மட்டுமே!)

7. ஊக்கபோனஸாக ஓரிரு பாரதப் பெருவெளி மொழிகளையும், தொட்டுக்கொள்ள  ஃப்ரெஞ்சும், ஸ்பானிஷும், அரபிக்கும் தெரிந்துகொள்ள முடிந்தால், அது அட்டகாசமாக இருக்கும். (இது என் கனவுகளில் ஒன்று. ஒத்திசைவைத் தலையைச் சுற்றி விட்டெறிந்து அதன்மேல் செலவழிக்கும் நேரத்தை இவற்றின் மேல் முதலீடு செய்ய வேண்டுமோ?)

அவ்வளவுதான்.

ம்ம்ம், ஆனால், இன்னமும் சொல்லவேண்டும்:

1. திராவிடர்கள் எனப்படுபவர்கள் சர்வநிச்சயமாக ஒரு இனம் அல்லர். ஒரு ஜாதியினர் மட்டுமே அல்லர். இவர்கள் வெறும் கொள்ளைக்காரர்கள். இவர்களுக்கு மொழியும் முக்கியமில்லை, பண்பாட்டு வெளியும் முக்கியமில்லை. வெறும் திருட்டுத்தொழில் தான் முக்கியம்.

2. வெள்ளையர்களின் மகாமகோ பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு அங்கமாக – இந்தத் திராவிடர்கள் 1800களில் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான ‘வரலாறு பூர்வமான’ சாட்சியங்களை(!) உருவாக்கிப் பேணப் பட்டவர்கள். புல்லுருவிகள்.  இவர்களுக்கு வரலாறு என ஒன்றும் இல்லை. வெறும் உளறாறுதான். இவர்களது கொள்கை = கொள்ளை. இது பணரீதியாக மட்டுமில்லாமல், பண்பாட்டுரீதியாகவும்கூட ஏகோபித்த சுரண்டலாகப் பரிணமிக்கிறது. பின்னதுதான் மேலதிகச் சோகம்.

3. உலகெங்கும் இருப்பதைப்போலவே, தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜாதியிலும் மதத்திலும் மொழிக்குழுக்களிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். ஆனால், மற்றெந்த பகுதியிலும் இல்லாத அளவில் – இந்த அயோக்கியர்களெல்லாம் கொள்ளைரீதியாக ஒருங்கிணைந்து செயல்படும் பிரதேசம்தான் நம் பாவப்பட்ட தமிழகம். இந்தக் கும்பலினர் கொள்ளைத் தொழிலைச் சுளுவாக நடத்திச் செல்ல உள்ள கருவிதான் திராவிடம் எனும் திராபைக் கருத்தாக்கம். தேனொழுகும் புறங்கைகளை நக்கமுடிவது மட்டும்தான் அவர்களது அரசியல் எதிர்பார்ப்பு.

4. நம் சக முட்டாள்தமிழனை  – அறிவிலியாகவும் உணர்ச்சிபூர்வமாக மட்டுமே இயங்கமுடிபவனாகவும் ஆக்கி – உலகளாவிய அளவில் ஊழல் சொத்துகளைச் சேர்ப்பது (திமுக போல; அஇஅதிமுக-வும் அப்படித்தான்; ஆனால், திமுக அளவுக்குப் படுமோசமாக இல்லை, நிச்சயமாக!), சேர்த்த சொத்துகளை பத்திரமாக, வேறு யாரும் மறுதிருடல் செய்யாமல் பாதுகாத்துக்கொள்வது (திக, விடுதலை கும்பலினர் போல) – என்கிறவகையில் மட்டுமேதான் இவர்கள் இயங்கமுடியும்.

5. கடைந்தெடுத்த அயோக்கியர்கள், வேறென்ன சொல்ல!

6. திராவிடலைகளுக்குத் தமிழகம் முடிவு கட்டுவது எப்போது?

நன்றி. :-(

 
(இப்பதிவுக்கு முகாந்திரம்: அண்மையில் நடந்த ஒரு திராவிடத் திருமணத்தில், கருணாநிதி அவர்கள், மொழிவெறி என்று கொஞ்சம் பினாத்தியிருக்கிறார். ஈயத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளைத்தனம்!

அடுத்த பதிவுக்கும் இதுதான் முகாந்திரம்: நானும் இம்மாதிரி வசைபாடல் திருமண வாழ்த்துரை வைபவங்களுக்குச் சென்றிருக்கிறேன்; அவை தொடர்பான (=ஆபாசமான) குறிப்புகளை அடுத்த பதிவில் உங்களுக்கு அளிக்கப் போவதில் எருமையடைகிறேன். மறுபடியும் நன்றி.)

 

10 Responses to “மொழிவெறி, திராவிடம், கருணாநிதிகள் – சில குறிப்புகள்”

  1. A.Seshagiri. Says:

    குமுறிக் குமுறி கொட்டித் தீர்த்து விட்டீர்கள்! சில ‘மர’மண்டைகளுக்காவது புரிந்தால் சரி.


  2. தமிழ் மொழி வெறி மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரத்திலேயே ஆரம்பித்து விட்டது. “தமிழ்த்தாய் வாழ்த்தில்” பாடப்படாத பகுதி மற்ற திராவிட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவை, ஸமஸ்கிருதம் “வழக்கொழிந்த” மொழி போன்றவை. பின்பு, சுவாமி வேதாசலம், ஞானமுத்து தேவநேயன், சுப்புரத்தினம் ஆகியவர்கள் தமிழ் மொழி வெறிக்கு தூபமிட்டவர்கள். இந்த “கலாசார” பின்னணியில்தான் திராவிட இயக்கம் தமிழ்மொழி வெறியை தனதாக்கிக் கொண்டது. திராவிட இயக்கம் 80% oppurtunism 20% ideology . இந்த ஐடியாலஜியில் சம்ஸ்கிருத வெறுப்பு, பிராமண வெறுப்பு, ஆரியர் மேல் வெறுப்பு, மற்ற திராவிட மொழிகள் மேல் வெறுப்பு ஆகியவை பிரதானம்.

    இதற்கு மேல் பகுத்தறிவு, விஞ்ஞானம் ஆகியவற்றின் மீது உதாசீனம், நவீன உலகத்திலிருந்து சுய ஓரம்கட்டல் , எல்லாவற்றிற்க்கும் மேலாக ஹிபாக்ரசி ஆகியவை தற்கால தமிழை படுகுழியில் தள்ளிவிட்டன.

    வ.கொ.விஜயராகவன்

  3. பொன்.முத்துக்குமார் Says:

    // 7. ஊக்கபோனஸாக ஓரிரு பாரதப் பெருவெளி மொழிகளையும், தொட்டுக்கொள்ள ஃப்ரெஞ்சும், ஸ்பானிஷும், அரபிக்கும் தெரிந்துகொள்ள முடிந்தால், அது அட்டகாசமாக இருக்கும். (இது என் கனவுகளில் ஒன்று. //

    ராம், எனது கனவுகளுள் ஒன்றும் இதுவே. முதலில் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ள இந்த ஆண்டு முயற்சி செய்யவேண்டும். அப்புறம் ஃப்ரென்ச்சும். முடிந்தால் பிறகு அரபி (அந்த உச்சரிப்பின் அழகே அழகு. கத்தார் ஏர்வேஸில் பயணிக்கும்போதெல்லாம் கேட்கையில் இனிமையாக இருக்கும். அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன், அராபிய தேசங்களில் மட்டும் இந்த இனிமை ஏன் மிஸ்ஸிங் என்று)

  4. க்ருஷ்ணகுமார் Says:

    கலிஞ்சர் கருணாநிதியின் சவுக்கு வசனங்களைக் கேக்கும் போது

    பழைய பாடல் நினைவுக்கு வருகிறது

    பேகானி ஷாதி மே அப்துல்லா தீவானா

  5. ravi Says:

    எனக்கு தமிழ் பல்கலைகழகத்தில் இவர்கள் அடித்த கூத்துகள் தான் நியாபகம் வருகிறது

  6. ஆனந்தம் Says:

    இது போதாதென்று ஃபேஸ்புக் வேறு. இதைப் பார்த்ததுமே உங்களிடம் லிங்க் தர முடிவு செய்துவிட்டேன். தயவு செய்து கோபப்படாமல் நல்ல நகைச்சுவை என்று ரசிக்கவும்.

    கண்ணை மூடிக்கொண்டு பகிர தமிழினம் இருக்கும் வரை ஆராய்ச்சியாவது புடலங்காயாவது….. :-)))

  7. kavi Says:

    அன்புள்ள ராம்,

    தங்கள் பதிவிலுள்ள கருணாநிதி எதிர்ப்பை புரிந்து கொள்கிறேன்.

    ஆனால், எனக்கு உள்ள சில சந்தேகத்தை தீர்க்க உதவுங்கள்.

    உண்மையில் குழந்தைகள் சமஸ்க்ரித மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
    அதன் பயன் என்ன ?

    நம்முடைய கலாச்சாரத்தை தமிழ் மூலமும், ஆங்கிலம் மூலமும் மட்டுமே கற்றுக்கொள்ள முடியாதா ?

    சமஸ்க்ரிதம் போன்ற மொழியை கற்க அதிக நேரம் தேவை படுகிறது, அந்த நேரத்தை மற்றவற்றை கற்க பயன்படுத்தலாமே ? இது கேள்வியல்ல .. என் எண்ணம் ;-)

    தமிழ் மற்றும் ஆங்கில வழியில் எனது படிப்பை முடித்தேன். ஹிந்தியை ஹிந்தி பிரச்சார சபாவில் மூன்று வகுப்புகள் சென்றேன்.
    ஹிந்தி கண்டிப்பாக அரைகுறைதான்..இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
    ஓரளவு கன்னட பேசுவேன்..சில வருடங்களாக பெங்களூவில் இருக்கிறேன்.

    Learning a language should be based on need. not based on someone doing imposition.

    அன்புள்ள,
    கவி


    • அன்புள்ள கவி…

      நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். நன்றி. இவைபோன்ற கேள்விகளை நானும் கேட்டு, பதில்களைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறேன் – தனிப்பட்ட உரையாடல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. சிலபல கருத்துகளும் இதுதொடர்பாக இருக்கின்றன.

      அவகாசமும் உந்துதலும் இருக்கும்போது அவசியம், பதிவாக இல்லாவிட்டாலும் பதிலெழுதுகிறேன்.

      வண்பாக்கம் விஜயராஜவனுக்கு நன்றி.:-)


  8. கவி அவர்களுக்கு

    நீங்கள் ஒத்திசைவினிடன் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் சொல்வார் என நினைக்கிறேன், சொல்லாமலும் போகலாம்.

    நீங்கள் கேட்டது பொதுக் கேள்வியாக இருப்பதால், என் பதில்
    “உண்மையில் குழந்தைகள் சமஸ்க்ரித மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
    அதன் பயன் என்ன ?”

    கற்க வேண்டும் என்பேன், இந்தியாவின் மாபெரும் கலாசார போக்குகள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது ; அந்த கலாசார விழுமியங்கள் இன்றும் எல்லோருடை இந்தியர் வாழ்வையும் பாதிக்கிறது, அதனால் அதை அதன் ஒரிஜினல் மொழியில் படித்தால், புரிவது சரியாக இருக்கும் அதை ஆமோதிப்பதிம், நிராகரிப்பதும் தனி உரிமை. கலாசார விழுமியங்கள்
    என்றால் – ஹிந்து (பிராமண‌) என்று எண்ணி விட வேண்டாம், பிராமணியத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்த புத்த, ஜைன புஸ்தகங்களும், தந்திரமார்கமும், உலகாயுத மார்கமும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. அதைத்தவிற பல வேறு துறைகளில் சமஸ்கிருதம்தான் மீடியம் – விஞ்ஞானம், தர்க்கம், ஆன்மீகம், இலக்கணம், நடனம், சகல துறைகளும் ஸம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. மேலும் தமிழ் மொழி, இலக்கியப் போக்கினை சமஸ்கிருத இலக்கியப் போக்குடன் ஒப்புவைத்து புரிந்து கொள்ளலாம்.

    சமீபத்தில், டாமினிக் குடல் என்ற ஒரு இந்தாலஜிஸ்ட், பாண்டிசேரி பிரெஞ்ச் ஆய்வகத்தில் பணி புரிபவர், ஒரு அவ்வளவாக‌ அறியப்படாத சமஸ்கிருத புதினத்தைப்பற்றி எழுதிய கட்டுரையில், இதைப் படித்தேன், நான் சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லி விட்டார்:

    We hope too that it will remind readers of the diversity of the Sanskrit literary tradition. Sanskrit for many people in India today is associated with conservative social agendas held by those who often think that a return would be desirable to some imaginary golden past of religious righteousness in accordance with precepts that sages of the past expressed in brahminical treatises in Sanskrit. But the Sanskrit literary tradition is in fact astonishingly plural. For while Sanskrit is of course the language of many Hindu religious works, it is also the language of rejoinders and refutations by Buddhists and materialists and many others, indeed of all manner of philosophical debate, and it is at the same time so very much more than that as well. For it is also the language chosen for treatises on every kind of knowledge, both religious and secular, as well as a language of imagination, of poetry in verse and prose, resorted to by countless generations of readers and writers of many backgrounds who wished to receive or to communicate ideas. It is, in short, the language in which the bewilderingly diverse cultural memory of millions is stored. Certainly, it is the language of the relativising moral vision of the Bhagavad-­‐Gîtâ and of the caste-­‐bound strictures of the Manu-­‐smriti; but it is also that of neutral or sometimes decidedly amoral writings on medicine, on gemmology, on archery, on political acumen (the Arthashâstra), on the care of elephants (the Pâlakâpya), on music and stagecraft and on almost anything else you might care to think of besides.

    From On_The_Bawds_Counsel_2014 – Dominic Goodall (downloadable from Academia.edu).
    ( http://www.efeo.fr/chercheurs.php?code=737&ch=54&l=EN )

    ஒரு குழைந்தைக்கு சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அறிவைப்பற்றிய ஆர்வம் ஊட்டினால் போதும். ரொம்ப வேண்டாம்.
    நீங்கள் இந்திய ஞான மரபைப் பற்றிய அறிவு எதற்க்கு வேண்டும் என கேட்கலாம், பிழைப்பிற்க்கு வேண்டிய அறிவு ஊட்டினால் போதாதா என கேட்கலாம். அதில் 98% சம்மதம் உண்டு. அப்படிப்பார்த்தல் , நாம் பள்ளியில் படிக்கும் தமிழும் – அதாவது தமிழ் மரபும்- பிற்கால‌த்தில் வேலைக்கொ , தொழிலுக்கோ , சமூக உதவாதவை. திருக்குறள், சிலப்பதிக்காரம், நன்னூல், நாலடியார் இவையெல்லாம்கூட பிழைப்பதற்க்கு உதவும் ஸ்கில்களை கொடுக்கப்போவதில்லை. தமிழ் இலக்கியம் “தமிழ் மிகப்பழைமையன மொழி, செம்மொழி” என பரஸ்பர முதுகுசொறிதலுக்குதான் உதவப்போகிறது. அல்லது நீங்கள் தமிழ் ஆசிரியராக இருந்தால் உதவும். தற்கால எழுத்து, அறிவைப் புரிந்து கொள்ள இவை ஒன்றும் உதவாது. உதாரணமாக , தமிழக அரசின் ஆரோக்ய திட்டம் பற்றிய கட்டுரை தமிழில் எழுத வேண்டும் என்றால் திருக்குறள், சிலப்பதிகாரம் தெரியவே வேண்டாம், தற்கால தமிழ் நடை, தற்கால தமிழ் சொல்வளங்கள்தான் தெரிய வேண்டும். நமக்கு பள்ளீயில் கற்று கொடுக்கப்படும் 80% தமிழ் இப்படி “மரபு” அறிவை சார்ந்ததுதான்.

    ஆதனால்தான் ஓரளவு சமஸ்கிருத மொழியின் ஈடுபாடு குழந்தைகளுக்கு இருந்தால் , இந்திய, தமிழ் மரபைப் பற்றி ஒரிஜினல் மொழியில் புரிந்து கொள்ள ஆர்வம் வரலாம். பல தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதம், மற்ற மொழிகளில் இருந்து வருபவை , அதை சரியாக உச்ச‌ரிப்பதற்க்கும் சமஸ்கிருதம் உதவும்.

    விஜயராகவன்

  9. srini rama Says:

    தயாநிதி மாறனுக்கு இந்தி தெரிந்ததால் தான் மந்திரி பதவி தரப்பட்டது என்று கலைஞர் எப்போது சொன்னார்?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s