நான் மடையன்தான்! நன்றி!! (ஒரு தொபயியல் பிரகடனம்)
April 25, 2016
பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களைப் பற்றிய நேற்றைய காட்டுரை தொடர்பாக – ஒரு அனாமதேயம், கோபத்துடனும் வருத்தத்துடனும் இப்படியொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்;
he has evidence, how can u assume he has no evidence
yaar madayan? neeya? thope aa
… …இதற்குக் கொஞ்சம் விரிவாகவே பதில் எழுதவேண்டும் என…
2. ஆனால் தொப அவர்களை ‘மடையன்’ என்று கீழ்த்தரமாகக் குறிப்பிட்டு நான் எங்குமே எழுதவில்லை. பொறுக்கமுடியாமல் பொதுவாகக் கிண்டல் செய்தேன் என்றாலும், அவருடைய அடிமடியில் கைவைக்கவில்லை, அடிக்கவில்லை. ஆகவே நீங்கள் ‘யார் மடையன்’ என ஆவேசத்துடன் கேள்விகேட்கவேண்டிய அவசியமேயில்லை.
ஈ: ம் + அடை + யன் – அடை (+அவியல்)களை ம்ம்ம் என்று சொல்லி சப்புக்கொட்டிக்கொண்டு விரும்பிச் சாப்பிடுபவன்
…
…
அனாமதேய அய்யா!
தொப அவர்களே மடையர்களைப் பற்றி இப்படித்தானே எழுதியிருக்கிறார்:
வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை.
இந்த மடையர்களைப் பற்றி தொப அவர்களிடம் ஒரு சான்றுமில்லை என்றுதானே அவர் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்? அங்கலாய்த்திருக்கிறார்?? காற்றுப்போக்கில் கேட்ட கதைகளையும், கற்பனை வளத்தையும் கலந்தடித்துக் கதம்பமாகப் பரிமாறியதுதானே அவர் செய்தது? சுவாரசியப் படுத்தலையும் கதை கட்டலையும் கறாரான ஆராய்ச்சியின் கூறுகள் எனக் கூறத்தானே விழைகிறார்?
வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா?
-0-0-0-0-0-0-
- சர்வ நிச்சயமாக ஏன், சிந்துசமவெளி நாகரிகம் என்பது திராவிடத்தனமானது அல்லவேயல்ல: ஆதாரம் 03/04/2016
- இர்ஃபன் ஹபீப், ரொமிலா தாபர் போன்ற ‘வரலாற்றாய்வாளர்கள்’ + தஹிந்துத்துவா அரைகுறைகள்: இவர்களைப் புரிந்துகொள்வது எப்படி 01/04/2016
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)
April 25, 2016 at 17:45
ஆயிரம் பொன் இல்லையென்றாலும் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ கொடுக்க வேண்டியது தானே.
சொக்கா!!!!!!!!! பாட்டெழுதிப்பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.
இதில் நீங்கள் எந்த வகை என்று ………… என்று …………..
போதாத்துக்கு தீராவிடம், ஈனமானம், பெரியார் ஈயம் பித்தாள…………. என்ன தெகிரியம்………….
ம்……………. மேஜராய ஸ்வாஹா………… பூவண்ணனாய ஹும்பட்…………..
April 26, 2016 at 06:58
எனக்கு எல்லா வரலாற்று, சமூகவியல் ஆய்வுகள் மீதும் சிறிய சந்தேகப் பார்வை இருந்துகொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் அறிவியல் ஆய்வுகள் மீது கூட.
கிராவிடெஷனல் கான்ஸ்டன்ட் இன்று, இங்கு ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இதே அளவாக இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? இங்கே இருக்கும் அதே அளவில் தான் பின்வீல் காலக்ஸியில் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்? ஒளியின் வேகம் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக மாறாமல் தான் இருக்கிறதா?
பரிணாம வளர்ச்சி கோட்பாடு எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. உண்மையாக இருக்க வெகு அதிக சாத்தியம் உண்டு. ஆனால், சந்தேகம் எழத்தான் செய்கிறது. எல்லா இனமும் வேறொரு இனத்தில் இருந்து வந்தது என்ற blanket statement இருக்கட்டும். முதலில் A, B என இரண்டு இனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு A வில் இருந்து B வந்தது என நிரூபிக்க வேண்டும் அல்லவா. Homo sapiens எந்த இனத்தில் இருந்து வந்தது? Homo erectus தொடங்கி பல பதில்கள் சொல்கிறார்கள். கில்லி அடிச்சு ஒரு நிலையாக நிற்பதில்லை. Orycteropus afer என்ற aardvark எந்த இனத்தில் இருந்து வந்தது? எதற்கும் commit செய்வதில்லை. செய்தால்தானே அதை சரி பார்க்க முடியும். இவர்களின் கோட்பாட்டுப்படி A வில் இருந்து B வந்தது என்பதை நிரூபிக்க நிறைய வேலை செய்ய வேண்டும். முதலில் A, B இரண்டின் genome தேவை. அடுத்து இரண்டும் எங்கெங்கு மாறுபடுகின்றன என்பது தெரிய வேண்டும். இந்த mutations எப்போது, எந்த வரிசையில் நடந்தன எனச் சொல்ல வேண்டும். அடுத்து இந்த மாறுபாடுகள் physical உருவில் எவ்வாறு வெளிப்படுகின்றன என தெரிய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக speciation எவ்வாறு நடந்தது என சான்றோடு விளக்க வேண்டும். எதையும் செய்யாமல் A வில் இருந்து B வந்தது என எப்படி ஏற்பது. ஒன்று நடந்திருக்க சாத்தியம் உள்ளதாலேயே அவ்வாறுதான் நடந்தது என ஆகிவிடுமா?
இந்த கூத்துக்களை எல்லாம் பார்க்கும் போது கணிதம் மட்டுமே ஏற்கும்படி உள்ளது. சத்யம் என்ற நெருப்பிற்கு முன் செய்யும் தவம் அது. கடைசி சொட்டு சந்தேகமும் இன்றி நிரூபணம் ஆகும்வரை அதை உண்மை என்று உரைப்பது இல்லை. Riemann hypothesis சரி என்றுதான் ஆகப் பெரும்பான்மையோர் நம்புகிறார்கள். இதற்கு ஆதரவாக பல ஆதாரங்கள் உள்ளன. இருந்தாலும், இதை நிரூபிக்கப் பட்ட உண்மை என யாரும் சொல்வதில்லை. இப்போதும் இது உண்மை என வைத்துக்கொண்டு ஏதாவது புதிதாக ஒன்றை நிரூபித்தால், மறக்காமல் “Assuming that Reimann hypothesis is true …” என முதலில் சொல்லாமல் பேச மாட்டார்கள்.
அறிவியல், சமூக அறிவியல், வரலாற்று துறையில் அரைகுறை ஆதாரங்கள் அடிப்பைடயில் உண்மையை நிலை நாட்டி விட்டதாக் சிறிதும் அடக்கம் இன்றி அவுத்துபோட்டு ஆடுகிறார்கள். Disgusting.
April 26, 2016 at 07:58
என்னமோ போங்க சார், உபரி நீரை அடிவழியாக வெளியேற்றும் கலை திராவிடத்தமிழனின் கண்டுபிடிப்பு.
புள்காங்கிதம் அடைந்தேன்.
April 26, 2016 at 21:20
ஐயோஓஓஓ, சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது…………:-)
April 27, 2016 at 15:54
ஹா! சைடுல நீங்க போட்டிருக்குற கணிதம் பற்றிய பழம் பாடலை இப்பத்தான் பார்த்தேன். சூப்பர். மொழிபெயர்ப்பு தேவைப்படாமயே புரிஞ்சுது. ‘கணிதம்’ ன்ற வார்த்தைக்கு அடுத்து வர வார்த்தை மட்டும் புரியல – “மூர்தின்”?
ஆனா, கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா உதைக்குது. பாடல்ல “வேதாங்கஷாஸ்த்ரானாம்” அப்படின்னு வருது. எனக்கு புரிஞ்சது, “ஆறு வேதாங்க சாஸ்திரங்களுக்குள் கணிதம் சிறந்தது” அப்படின்னு. ஆனா, மொழிபெயர்ப்புல “of all knowledge” அப்படின்னும் “ஞானம்” அப்படின்னும் பொதுப்படுத்தி இருக்கு. அதுவும் தவிர, இந்த ஆறு சாஸ்திரங்கள்ள ஒன்னு ஜோதிஷம். அதைத்தான் ‘கணிதம்’ னு பாடல் சொல்லுதுன்னு நெனைக்கிறேன். அதுக்கு ஏத்தா மாதிரி இந்த பாடல் இருக்குற புத்தகத்தின் பேரும் “வேதாங்க ஜோதிஷா” அப்படின்னு இருக்கு. அதனால, இந்த பாடல் நாம நெனைக்கிற கணிதம் பத்தி இல்லன்னு நெனைக்கிறேன்.
எனக்கு புடிச்ச கணிதம் மகா மகா மகானுபாவன் யூக்ளிட் தேவனின் “Elements” இல் இருந்து ஆரம்பிக்குது. “Mathematics is the queen of the sciences” – Carl Friedrich Gauss. காஸ் சொன்னப்புறம் மறுப்பேது. QED.
:-)
January 11, 2021 at 10:06
[…] நான் மடையன்தான்! நன்றி!! (ஒரு தொபயியல்&n… 25/04/2016 […]