பேராசிரியர் தொ. ‘தொ.ப’ பரமசிவம், மடையர் – சில குறிப்புகள்
April 24, 2016
இவருடைய பல கட்டுரைகளை கவனத்துடன் படித்திருக்கும் எனக்கு, முன்னெப்போதோ இவருடைய கட்டுரைக்களஞ்சியமான ‘அறியப்படாத தமிழகம்’ படித்துத் துணுக்குற்றவனுக்கு – இவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறைத் தலைவராக இருந்தவர் என்ற தகவல் ஆச்சரியத்தைத் தருவது என்பதை ஒப்புக்கொள்கிறேன்…
ஆனால், இதைவிட மேலதிகமான ஆச்சரியம் தருவது – இவரைப் போன்ற புத்திசாலி ஆசாமிகளின் மகத்தான உழைப்பெல்லாம் – அவர்களுடைய அகறார் ஆராய்ச்சிச் சட்டகங்களாலும், முன்முடிவுகளாலும், காமாலைக்கண் பார்வைகளாலும் – இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட மகாமகோ அட்ச்சுவுட்தல்களாலும் – படுமோசமாக, விழலுக்கு இறைத்த நீராக வியர்த்தமாகப் போவதுதான்! அதே சமயம், திராவிடம்சார் பிறஆராய்ச்சிகளின் பாவப்பட்ட நிலையைப் பார்க்கும்போது இவர் எவ்வளவோ பெட்டர், என்பதையும் வருத்தத்துடன் புரிந்துகொள்கிறேன்.
எது எப்படியோ, ஏதோ சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும் ஒரே திராவிடகுலதிலகப் பேராசிரியராகிய இவரும் இப்படியொரு பிரமை நிலையில் இருந்தால் – பொருதத் தகுதியானவர் என ஒருவர்கூடத் தேறமாட்டார்களா இந்தத் திராவிடர்களில் எனத்தான் தோன்றுகிறது.
மகிழ்வரசு (அல்லது) ThePatriot (அல்லது) @anandraaj01 எனப் பலவாறாகத் தம்மை அழைத்துக்கொள்ளும் நபர் (தேராவாதம், மஹாயானம், ஸம்ஸ்க்ரிதம், பாலி என்றெல்லாம் கலந்துகட்டி அட்ச்சுவுடுவதற்கு அப்பாற்பட்டு), அண்மையில் ஒரு அதிஅற்புதமாக விஷயத்தை ட்வீட் செய்திருக்கிறார். அதாகப்பட்டது:
மடையர்கள்
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் “மடை”
மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. . வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.
வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.
மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் “மடையர்கள்” என அழைக்கப்பட்டார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா? எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா?
இனி எந்த ஒரு மாணவனையாவது “மடையா” என்று அழைப்பது எனக்குச் சற்று மனநாணம் தான்..
உங்களுக்கு ??,
-பேராசிரியர் தொ.ப பரமசிவம்.
மேற்கண்ட மகிழ்வரசு ட்வீட் – தொப அவர்களின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் – எனக்கு நினைவில் இல்லை; முன்னமே எங்கேயோ இதனைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்! :-(
ஆனால் வீரத் தமிழ் மடையர்களின் சோகமான காவியங்களைப் பற்றிக் கிண்டல் செய்யக்கூடாது எனச் சொல்லிக் கொள்கிறேன். :-)
-0-0-0-0-0-0-
‘அதன் உள்தண்டை நீக்கிவிட்டால்‘ என்றெல்லாம் தொபெ எழுதுகிறார். அப்படி சர்வசாதாரணமாக புடலங்காயிலிருந்து அதன் குடலை நீக்குவதுபோலச் செய்துவிடமுடியாது என்றாலும், ஒரு பேச்சுக்கு இதனைச் சரியென்று கிண்டலாக ஒப்புக்கொண்டாலுமே – இப்படி குழாய் போல ஆக்கப்பட்ட தண்டிற்கு சக்தியோ தாங்குதிறனோ இருக்கவேயிருக்காது!
‘அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து‘ என்று எழுதுகிறார். மடைகளோ மதகுகளோ, அப்படி ‘அடியாழத்தில்’ உருவாக்கப்படுபவையே அல்ல! இம்மாதிரி நீராவாரிக் கட்டமைப்புகள் மேல்மட்டத்திலிருந்து கீழ்வரை (அடிமட்டம் வரையல்ல) அமைக்கப்பட்டிருக்கின்றன. நான் பார்த்திருக்கும் வரையில் அவை, மிகக் கவனமாக, நீர் நிலைகளில் குறைந்த பட்சம் சில அடிகளாவது நீர் ‘நிரந்தரமாகத்’ தேங்கும்படிதான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
‘மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.‘
-0-0-0-0-0-0-0-
4. இந்த மேற்கண்ட ‘மலே,’ ‘லெமூ’ போன்ற பண்டமிழ் உறவுமுறை வேர்ச்சொற்களுக்கு மாமன் முறை உறவுதான் இந்த ‘முலே’ என்ற கிளைச்சொல். ஆனால் இச்சொல் புழக்கத்துக்கு வந்தது ப்ரிட்டிஷ் ஆட்சிக்குப் பின்னர்தான் என நாட்டாற் தொல்லியலும், கார்பன்-12 கணிப்புமுறைகளும் சொல்கின்றன. அதனால்தான் சொல்கிறேன், தமிழ்ப் பெண்கள் மேலாடை (இந்த மேலா வேர்ச்சொல், முலெ என்பதுடன் தொடர்புடையது) அணிய ஆரம்பித்தது. தமிழரின் தன்னிரகற்ற தானைத்தலைவரான பெரியார், சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பின்னரே!
6. பழந்தமிழர்கள் விரும்பி உண்ட உணவு, உருளைக்கிழங்கு போண்டா. சட் என இனி அதனைச் சாப்பிடுவோம் என்பதுதான் மருவி சட்டினி ஆகிவிட்டது என ஐராவதம் மகாதேவன் எனக்குத் தனிப்பட்ட முறையில் தொட்டுக்கொண்டே தெரிவித்தார்; இதைத்தான் சட்டினி மருவிய காலம் எனப் பாளையங்கோட்டை தூய சவுரியார் கல்லூரியின் அள்ளிமுடிந்தகொண்டைநாயனார் எனும் அசைவக் குரவர், வைணவப்பாசுரமொன்றில் குறிப்பிட்டுள்ளார். உழுந்தை என்பது ஆரியப் பண்டாரங்களால் போண்டாவாக்கப் பட்டதையும், மாவேச்சிகளும் தோய்ச்சிகளும் மதவாத சக்திகளால் பஜ்ஜிகளாக்கப்பட்ட கதைகளும் – ஆரிய நச்சரவம் திராவிடப் பெருச்சாளியை கபளீகரம் செய்ததால் ஏற்பட்ட வினை.
9. சமணர்கள் சைவர்களைக் கழுவி ஊற்றினார்கள்; ஆனால் சைவர்கள் சமணர்களைக் கழுவில் ஏற்றினார்கள். இதற்கான ஆதாரங்களை அடுத்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதவேண்டும். அதற்காக, முதலில் நான் இப்போதே தூங்கப் போகவேண்டும். என் கொடுங்கனவில் என்ன வருகிறதோ அதுதான் ஆதாரம்.
சிலபல தேவையற்ற காட்சிக்கோர்ப்புகள் இருந்தாலும், தொப அவர்களின் பல கருத்தாக்கங்கள் எனக்கு மயக்கத்தை உண்டுபண்ணுபவை என்றாலும், மகத்தான உழைப்பாளரான தொப அவர்களைப் பற்றியும் நாம் அறிய வேண்டியது முக்கியம்.
* ஜெயமோகன் அவர்களின் தொப பற்றிய கட்டுரை; என்னைப் பொறுத்தவரை, இரத்தினச் சுருக்கமாகவும் மையக்கூறுகளைத் தொகுத்துக்கொண்டும் – தொப அவர்களின் ஆய்வுகளையும் நிலைபாட்டையும் மிகுந்த மரியாதையுடனும் (+கொஞ்சம் விசனத்துடனும்) விமர்சனத்துக்குட்படுத்தும் அழகான கட்டுரை; நம் மரபுகளை அறிந்துகொள்ளத் தடையாக இருக்கும் போக்குகளைப் பற்றி, தவறான முன்மாதிரிகளைப் பற்றி, அவர் எழுதியிருப்பது இது. மிக முக்கியமான கட்டுரை. (ஆனால் அவர் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய கட்டுரையை நான் இன்னமும் படிக்கவில்லை; படிக்கவேண்டும்)
-0-0-0-0-0-0-
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)
April 25, 2016 at 08:21
he has evidence, how can u assume he has no evidence
yaar madayan? neeya? thope aa
April 25, 2016 at 09:51
ஐயா,
இந்த மடையர் விஷயம் ஒரு கதை போல் உலவுகிறதோ என்று தோன்றுகிறது.தாங்கள் முன்னமே எங்கேயோ இதனைப் படித்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.ஒரு வேளை அது கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளதாக இருக்குமோ?http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article7883303.ece
April 25, 2016 at 12:22
அய்யா, நன்றி.
ஆனால் நான் இதனைக் குறிப்பிடவில்லை – தொப அவர்களின் ஒரிஜினல் முன்கோணல் முற்றும்கோணல் ‘மடையர்’ கருத்தாக்கத்தைத்தான் சொல்கிறேன்; ஒருவேளை அது அவருடைய ‘அறியப்படாத தமிழகம்’ தொகுதியில் இருந்ததோ என்னமோ, நினைவில் இல்லை; வருந்தத் தக்க விதத்தில், என் நூலகத்தில் இப்புத்தகம் இருந்தாலும், நூலகம் என்னவோ வேறெங்கோ இருக்கிறது. :-)
தமிழ் ஹிந்து எழவில் இது பற்றி டி.எல்.சஞ்சீவிகுமார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை நீங்கள் சுட்டியவுடன் தான் படித்தேன், நன்றி.
ஆனால் சஞ்சீவிகுமார், தொப ஒரிஜினலில் இருந்து லவட்டியிருக்கிறார் என நினைக்கிறேன்.
April 25, 2016 at 10:11
திரு.தொ.ப.வின் ஆய்வு பற்றி திரு.ஜெமோ அவர்களின் வலைத்தளத்தில் வந்துள்ள மற்றொரு முக்கியமான கட்டுரையின் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.
தொ.ப,ஒரு விவாதம்
நீங்கள் குறிப்பிட்ட திரு.நாஞ்சில் நாடனின் “பதச்சோறு” கட்டுரை வலைத்தளத்தில் கிடைக்கவில்லை.
April 25, 2016 at 12:33
தொ.ப,ஒரு விவாதம் – சுட்டி கீழே
(http://www.jeyamohan.in/8260#.Vx3OZWewvM)
April 25, 2016 at 12:38
மொஹஞ்சதாரோ / ஹரப்பா குளத்தில் தமிழ் மடைகள் இருந்தனவா, அவற்றில் திராவிட மடையர்கள் இறங்கி மடைதிறந்துவிட்டார்களா என்பதும் தீவிர ஆராய்ச்சிக்குரியதே. (மொஹஞ்சதாரோ என்பதும் தமிழ்ச்சொல்லே. மொஹஞ்ச- முகத்திலிருந்து;
தாரா- தாரைதாரையாகக் கொட்டுவது. பனைமர மடைக்குள் பாய்ந்து எழுந்தவர்களின் முகத்திலிருந்து தாரையாகத் தண்ணீர் கொட்டியதனால் அந்தப் பெயர் என்பதை நினைவில் கொள்க.)
April 25, 2016 at 13:10
இதேபோல நீங்கள் உங்கள் அகழ்வாராய்ச்சிகளைத் தொடர முடியுமானால், சிந்து-ஸரஸ்வதி எழுத்துப் புதிரையும் தாங்கள் கூடியவிரைவில் முடிச்சவிழ்ப்பீர்களென நினைக்கிறேன்.
April 26, 2016 at 02:33
திருவாளர் ஆனந்தம் அவர்கள் உங்களுக்கு போட்டியாளராக வர வாய்ப்பிருக்கிறது. எச்சரிக்கை :)
April 26, 2016 at 02:33
ஐயோ, தாங்கல சாமி.
April 25, 2016 at 23:03
[…] […]
April 26, 2016 at 06:20
http://yemkaykumar.blogspot.sg/
எனது சிறு சாட்சியம்..
April 26, 2016 at 08:49
‘நெஞ்சின் அலைகள்’ M .K . குமார் அவர்களே தங்கள் தந்தையின் அனுபவத்தின் மூலம் ‘மடையை’ திறப்பதுபற்றி எடுத்து இயம்பிய நீங்கள் ‘வைரம் பாய்வது’,‘அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து‘, அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.‘ போற்றவற்றிற்கு வெறுமெனே ‘ரெட்சிக்னல்’ போட்டால் மட்டும் போதுமா? அது பற்றிய விளக்கத்தை தெரிவித்தால் இந்த ‘அடி மடையர்களும்’ கடைத்தேறமுடியும்! செய்வீர்களா?
April 26, 2016 at 09:22
//வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா// இன்னும் இது போல் எத்துணை ஆயிரம் கல்வெட்டுகளிலும், பாட்டுகளிலும், எந்த வரலாற்று பதிவுகளிலும், வரலாற்றுஆதாரங்களிலும் இல்லாத வரலாற்று தகவல்கள் வருமோ? பீதியாக இருந்தாலும், வடிவேலுவும் (ஒரு நல்ல சிரிப்பு நடிகர் :)) இல்லாத நிலையில், ரிலாக்ஸ் செய்து கொள்ள வேறு என்னதான் வழி.
April 26, 2016 at 10:17
சார், இப்ப சென்னைல வந்த வெள்ளம் கூட செம்பரம்பாக்கம் மற்றும் இன்னபிற ஏரிகளில் திராவிட முறைப்படி செய்யப்படாத மடைகளினால் வந்திருக்குமோன்னு ஒரு சந்தேகம். விசாரணை கமிஷன் வச்சு அடுத்த ஆட்சில கண்டுபிடுசிற வேண்டியதுதான்
April 27, 2016 at 16:05
அடித்து விடுவதில் அவதூறு செய்வதில் ஆசானையும் உங்களையும் மிஞ்ச முடியுமா.உங்கள் முன் தொ ப என்ன எஸ் ரா கூட கிட்டே நிற்க முடியாது.
மடையர்கள் பற்றிய இன்னொரு பதிவு
http://senthilmsp.blogspot.com/2015/12/5.html
ஏரிகள் முழுக்க செயற்கையாக உருவாக்கபடுவது கிடையாது.ஓரிடத்தில் 20 அடி ஆழம் இருக்கும் ஏரி இன்னொரு இடத்தில 10 அடி இருக்கும்.பாறைகளும் மேடுகளும் இயற்கை தடுப்பாக இருக்கும் இடங்களில் நடுவில் உள்ள உயரம் குறைவான இடங்களை நிரப்பி தான் பல ஏரிகளை உருவாக்கின்றார்கள்.
என் தாயின் ஊரான தூசி மாமண்டூர் ஏரி தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய ஏரிகளில் ஒன்று .மாமண்டூரில் தான் பல்லவர்கள் முதலில் குகைகோவில்களை வடிக்க முயற்சித்து பின்பு கைவிட்டு விட்டு மாமல்லபுரம் சென்றதாக ஆய்வுகளும் மாமண்டூரில் வைக்கபட்டுள்ள அரசு அகழ்வாராய்ச்சி பலகைகளும் தெரிவிக்கின்றன.
10 அடி இயற்கையான தடுப்பு இருக்க மேலே செயற்கை தடுப்பு உருவாக்கப்பட்ட இடங்களில் மடை அமைக்கப்படும்.இது திறந்து விடப்படும் போது சில ஊர்களும்,பகுதிகளும் தான் பாதிக்கப்படும்.பெரும்பாலான ஊர்கள் தப்பித்து விடும்.பனை மரத்தை பயன்படுத்தி தான் பல ஊர்களில் குடிசைகள் கட்டப்படும். எங்கள் பாட்டியின் குடிசையும் பனை மர தூண்களை கொண்டு எழுப்பப்பட்ட குடிசையாக தான் இருந்தது.நான் ஐந்தாவது படிக்கும் போது தான் அது கான்க்ரீட் கட்டிடம் ஆனது.
பல பனைமரங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து குழாய் போல மடைகளை உருவாக்கி இருக்கலாம்.இப்போதும் குழாய்கள் மூலம் இருக்கும் மடியின் வழியே நீச்சல் அடித்து கொண்டு வருவது பெரிய சாதனை. என்னை போன்ற அரைகுறை நீச்சல் தெரிந்தவர்களை கிட்டே கூட சேர்க்க மாட்டார்கள்.ஆனால் என் பெரியம்மா மகன்கள்/உறவினர்கள் அதில் கில்லாடிகள்.மூச்சை பிடித்து கொண்டு 2 அடிக்கு குறைவான சுற்றளவு கொண்ட மடை குழாயின் வழியே ஐம்பது அடிகள் வந்து வெளியில் உள்ள தொட்டியில் விழ வேண்டும்.குடித்து விட்டு தனியாக சென்று அதில் மாட்டி கொண்டு உயிர் விட்ட (தற்கொலையா அல்லது விபத்தா எனபது அவருக்கு தான் தெரியும்) உறவினரின் கதை தனி கதை
ஒட்டுமொத்தமாக அனைவரையும் இழிவாக காட்டுவது/எழுதுவதில் உங்களுக்கும் ஆசானுக்கும் இருக்கும் அலாதி பிரியம் வியக்க வைக்கிறது
April 27, 2016 at 19:46
அய்யா பூவண்ணன்!
வருக. மீண்டும் வருக!
1. நான் கிண்டலாக எழுதியவற்றில் எந்தவொரு விஷயத்தையும் நீங்கள் குறிப்பிட்டுள்ள குறிப்புகள் மறுதலிக்கவில்லை. நான் எழுதிய ஒவ்வொன்றையும் சரிபார்த்துவிட்டுத்தான் எழுதியிருக்கிறேன். ஒரு காலத்தில் (மதுராந்தகம், வீராணம், செஞ்சி பகுதிகளில்) ஒரு புள்ளியியல் கணக்கெடுப்பிற்காக, நீராவாரி முறைமைகளை அறிந்துகொள்வதற்காக ஏரிஏரியாகச் சுற்றியிருக்கிறேன்கூட. நீங்கள் தேவையில்லாமல் ஜாங்கிரி சுற்றுகிறீர்கள்; மன்னிக்கவும்.
2. என்னுடைய பேராசான்: அரவிந்தன் கண்ணையன் அவர்கள்.
3. என்னுடைய வெறும் ஆசான்: எஸ்.ராமகிருஷ்ணன்.
4. ஜெயமோகன் அவர்களைப் பாவம், இதில் இஸ்க்கவேண்டாம். நன்றி.
5. வேதாளம் மறுபடியும் முருங்கைமரத்தில் ஏறிக்கொள்ள வாழ்த்துகள்!
நன்றி.
ரா.
April 27, 2016 at 20:33
It is known fact that pannai maram used for roofing and pillars. They use “sevvu yeriya” maram, which will be reddish and somewhat equivalent to “vairam paancha”, but not in exact sense. The problem here is professor says they drill through the center portion to make a pipe, which I think will render the pipe weaker. Also I doubt whether the hollow panai mara pipe can withstand being under water for long time.
April 27, 2016 at 20:45
Dear Athma,
I agree.
The phrase that I am familiar with in the context of ‘vairam paaythal’ is ‘Segu Eruthal’ – which is nothing but ‘sap climbing up’ – we can refer to it as ‘heart wood’ which is hard for various reasons that we need not go into here!
We have used for my home (which was a thatched hut circa 1978-80), pillars made of the Palmyra tree. No issues there. The longitudinal compressive strength of the trunk is/was excellent.
But the lateral/radial strength is very bad which is why it cannot be used for furniture making etc. And, if you do, by some extraordinary magic, scoop out the innards, the strength of the ‘pipe’ would be pathetic.
I have travelled extensively to collect data about the remnants of the water distro system (niraawari) and my points are based on personal experience and data.
I am of the opinion that Prof ThoPa has completely goofed up and messed with facts in the matter.
As for Poovannan, his logic always manages to defeat me. So, I accept my defeat. Thanks.
April 27, 2016 at 22:51
Panai maram used in vaaikaals to build madai, kind of ad hoc dam, but not as pipe, whole maram piled horizontally across the vaikaal and will be a temporary structure.
Ramaswamy sir..you are undefeatable for sure..:)
April 28, 2016 at 08:41
சார் ஒரே பனைமரத்தில் இருந்து நடுவில் குடைந்து உருவாக்கப்பட்ட மடை என்று தொ ப எடுத்து கொண்டது பிழை தான். பல பனைமரகட்டைகளில் அல்லது பனைமர தண்டுகளை இணைத்து உருவாக்கப்பட்ட குழாய் போன்ற அமைப்பு எனபது பொருந்தி வரலாம்.
வெளியில் இருந்தும் அடைப்பு இருக்கும் ஆனால் வெளியில் இருந்து யாரும் முழுவதுமாக அடைப்பை நீக்கி விட முடியாதபடி உருவாக்கி இருந்தால் தான் பாதுகாப்பு.முதலில் வெளி பகுதியில் வழியாக பெரும்பாலான அடைப்புகளை நீக்கி விட்டு இறுதியாக உள்ளே இறங்கி அடைப்பை நீக்க வேண்டும். அப்போது தண்ணீர் போகும் வேகத்தில் அதில் சிக்கி கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம். பெரிய ஓட்டையாக இருந்தால் அதன் வழியே வெளியில் வந்து விழும் போது நினைவு இருந்தால் நீந்தி தப்பித்து விடலாம்.ஆனாலும் இழுக்கும் தண்ணீரின் வேகத்தில் கட்டைகளில் தலையும் உடலும் அடிபடும் வாய்ப்பு தான் அதிகம்.
சில மாதம் முன்பு மும்பையில் விமானம் கிளம்பும் போது ,விமானத்தின் இஞ்சின் வேகத்தில் உள் இழுக்கப்பட்டு மாட்டி கொண்ட விமான பொறியியலாளர் கதை தான் இங்கும் நடக்கும்.
April 28, 2016 at 13:44
தொ.ப கட்டுரைகளை கொஞ்சம் கவனமாக தான் படிக்க வேண்டும்.. வார்த்தை விளையாட்டுகளில் கொஞ்சம் வல்லவர்..
ஒரு பேராசிரியர் அரசியல் நிலைப்பாடு எடுத்தால் , தொ.ப கதி தான்.
அறியபடாத தமிழகம் .. இன்னுமா இந்த புத்தகத்தை நம்புகிறீர்கள் !! ..
தென்னை மரம் பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்பு இல்லை என்று ஒரே போடு போட்டார்..
அன்றே அவரின் கருத்துக்கள் மீது நம்பிக்கை போய் விட்டது ..
நாஞ்சில் நாடனின் திகம்பரம் கட்டுரை தொகுப்பில் (கோவை விஜயா பதிப்பகம்) ஒரு பத சோறு என்ற கட்டுரையில் , இந்த புத்தகத்தின் தவறுகளை பற்றி கூறி உள்ளார் ..
மடை விஷயம் .. எங்கள் ஊரில் பார்த்து உள்ளேன். ஏரிக்குள் இறங்கி மடை திறந்து விடுவார்கள். கொஞ்சம் அசந்தால் , தண்ணீரின் வேகத்தில் கால் மாட்டி கொள்ளும் .. பனை மரத்தை தூணாக உபயோகித்து உள்ளோம்..ஆனால் , பனை மரத்தை குடைந்து , குழாயாக !! எனக்கு தெரியாது ,,
April 28, 2016 at 13:53
அய்யா ரவி, நானும் அந்த அறியப்படாத தமிழகத்தை நம்பவில்லை; ஆனால் நாஞ்சில் நாடன் அவர்களின் கவிதைத் தொகுப்பையும் படிக்கவில்லை.
தொப அவர்கள் மட்டும் அட்ச்சுவுடாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
If wishes were arses…
__r.
May 4, 2016 at 09:12
‘ஜெமோ’ அவர்களின் ‘மடை’மை யைப் படித்தீர்களா?
http://www.jeyamohan.in/87520#.Vyl9rmewvMk
January 11, 2021 at 10:06
[…] பேராசிரியர் தொ. ‘தொ.ப’ பரமசிவம், மடையர… 24/04/2016 […]