இந்திய அறிவியல் காங்க்ரெஸ் 2016 – சில குறிப்புகள் (1/2)
January 19, 2016
என்னுடைய வேலைவெட்டியற்ற, விஷயங்களை முடிந்தவரை சரியாகத் தெரிந்துகொள்ள விழையும் அலாதி ஆர்வம் (இப்போது, உங்களுக்கு ஆப்பசைக்கும் குரங்கு கதை நினைவுக்கு வந்தால், அது மிகச் சரிதான்!) காரணமாக, ஒரு அவசரகதிப் பயணமாக மைசூர் பல்கலைக்கழகத்தின் மாபெரும் வளாகத்தில் நடைபெற்ற இந்த 103வது காங்க்ரெஸ் நிகழ்வுக்கு ஜனவரி 6, 2016 அன்று போயிருந்தேன். [இதற்கான அதிகாரபூர்வமான செய்திகள்/சுட்டிகள்: 1, 2]

அந்த விழாவில், ஒரு பகுதியாக இருந்த ‘இந்தியாவின் பெருமை’ (‘Pride of India‘) காட்சியகம், ஊடகங்கள் உளறிக்கொட்டியதைப் போலல்லாமல் – ஒன்றும் சோடைபோகவேயில்லை, மிகமிக செய் நேர்த்தியுடனும், அழகாகவுமே இருந்தது – இதற்குத்தான் ஒருநாள் சென்றுவந்தேன்; அமர்வுகளும் மிகப்பல, முக்கியமானவைகளைப் பற்றி உரையாடப் பயன்படுத்தப் பட்டன என்றுதான் அதில் பங்குபெற்ற சில விஞ்ஞானிகள் (=முன்னறிமுகமாயுள்ளவர்கள்) சொன்னார்கள்.
-0-0-0-0-0-0-0-
ஆனால், முதலில் இரண்டு வெட்கக்கேடுகளைப் பற்றிச் சொல்லவேண்டும்:
வெட்கக்கேடு #1: சுற்றுவட்டார அரசுப் பள்ளிகள் சிலவற்றிலிருந்து 20-25 ஆர்வமுள்ள குழந்தைகளை இவ்விழாவிற்குக் கூட்டிப் போகவேண்டும் என ஸெப்டெம்பர் மாதத்திலிருந்து நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரளவு திட்டமிடுதலும் நடந்தது. பின்னர், பிறவேலைகளைப் பார்க்கலாம் என்ற அழுத்தம் மேலெழும்பியது. ஆனால் நான் ஒருவாறு, என்றைக்குப் போகலாம் என ஒரு திடத்திற்கு வருவதற்குள், விழாத்தேதி வந்தேவிட்டது.
…இப்போது ஆறஅமர யோசித்துப்பார்த்தால் அக்குழந்தைகளில் பலருக்கு அவ்விழா பல திறப்புகளை அளித்திருக்கலாம். Yes. there are somethings that I would take to my grave; ஆதூரமான(!) ஒரே விஷயம் என்னவென்றால், என் சொந்தக் குழந்தைகளையும் நான் அவ்விழாவுக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனாலும்…:-(
-0-0-0-0-0-0-
இவர்களில் ஒரு ஜந்துவுக்கும், அறிவியல்-தொழில் நுட்ப விஷயங்களையே விடுங்கள் — இந்த காங்க்ரெஸின் பின்புலம் பற்றி, இம்மாதிரி அறிவியல்விழா கூட்டங்களின் அவசியம் பற்றி, பலதுறை தொடர்பான விஞ்ஞானிகள் ஒருசேரக் கூட முடிந்தால், அதனால் ஏற்படும் சாத்தியக் கூறுகள் பற்றி, காட்சியகங்களினால் பொதுமக்களுக்கு (முக்கியமாக நம் குழந்தைகளுக்கு) ஏற்படக்கூடிய திறப்புகள் பற்றி — ஒரு எழவும் தெரியவில்லை. அவர்களால் செய்யமுடிந்தது அசட்டுத்தனமான நமட்டுச்சிரித்தலும், கிண்டலும்தான்.
இவர்கள் மாய்ந்துமாய்ந்து எழுதிய எதிர்மறை விஷயங்களில் மூன்று செய்திகளே முக்கியமாக இருந்தன.
அ: ‘எவ்ளோ பெரிய்ய சாப்பாடு ஏற்பாடு!’ – இது ஒரு செய்தி!
நாடு முழுவதிலிருந்தும், சிலபல வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த சுமார் 17,000 விஞ்ஞானிகள் + அமைப்பாளர்கள் + வாலன்டியர்கள் + உதவியாளர்களுக்கு நாளைக்கு மூன்று வேளை, ஆறு நாட்களுக்குச் சமைத்துப் போடவேண்டியது ஒரு சிறிய விஷயமேயில்லை. அது விதம் விதமாகவும், சுகாதாரத்துடனும், நேரம் பேணியும் பரிமாறப்படவேண்டும்; கழிவுகளை அகற்ற வேண்டும். இது பெரிய விஷயம்தான். ஆனால் இதுதான் ‘இந்திய அறிவியல் காங்க்ரெஸின்’ மைய விஷயம் அல்ல. ஆனால்… இதைப் பற்றி அட்டவணை போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதினார்கள் – என்னவோ, சோற்றுக்கலைந்துகொண்டுதான் நம் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்பது போல!
இதில் ஒரு பத்திரிகை எழுதியது: ‘நாட்டில் மக்கள் பசியால் வாடும்போது, இந்த விழா-சாப்பாடு தேவையா?‘
இந்த ஊடகப் பேடிகளின் கண்களுக்கு இதுதான் தெரியும் – ஏனென்றால் பத்திரிகை நிருபர்கள் என அலையும் கூட்டத்திற்கு, இவர்களில் இருக்கும் 99% அற்பர்களுக்கு, ஓசியில் சோற்றைப் போட்டால் போதும், எதை வேண்டுமானாலும் வாந்தி எடுத்துவிடுவார்கள் – பத்திரிகைச் செய்தி எழுதுகிறோம் என்கிற போர்வையில்!
அதுவும் ஒரு கவரில் சிறிது பிச்சைப் பணமும், என்ன எழுத வேண்டும் என்ற குறிப்புகளும் (= வெ. ராமசாமி சொன்னார், “என்னை விட மேதாவி யாராவது இருக்கிறானா?” இவர் சொல்வது உண்மைதான் — நான் இப்படி எழுதிக்) கொடுத்தால் அதைக் கட்-பேஸ்ட் செய்து, என்னைப் பற்றிய ஒரு செய்திக் குறிப்பை, அவர்கள் பெயரில் ‘தயார்’ செய்து விடுவார்கள்.
பாவம், இவர்களைப் போய் அறிவியல் விழாவைப் பற்றி எழுதச் சொன்னால்! பேடிப் பிச்சைக்காரர்கள்!
ஆ: ‘காவி மயமாகிறது, அறிவியல் காங்கிரெஸ்’
சில நூறு மைசூர் பல்கலைக்கழக மாணவர்களை – உதவியாளர்களாக நியமித்து – வழி காட்டவும், உதவவும் அவர்களை உபயோகிக்க ஒரு திட்டம் இருந்திருக்கிறது. அவர்கள், தனியாக அடையாளம் காணப்படவேண்டுமல்லவா? அதற்காக அம்மாணவர் குழாம் + விழா அமைப்புக்குழு சேர்ந்து ஒரு டீ ஷர்ட் வடிவமைத்திருந்திருக்கிறார்கள். அது ஒருமாதிரி ஆரஞ்சு+பழுப்பு நிற உடை – உண்மையில் காவி கூட இல்லை. அதன் முன்பக்கம் பின்பக்கம் கறுப்பெழுத்துகள் – சுளுவாக, அவர்கள் அடையாளம் காணத்தக்க வகையில்… இதற்கும் பாஜக-வுக்கும் மோதிக்கும் ஒரு எழவு தொடர்புமில்லை.
ஆனால், பிரச்சினை என்னவென்றால் – விழாவின் முதல் நாளன்று பப்பரப்பா மதச்சார்பின்மைவாதிகளும், ஊடகப்பேடிகளும் இதனைப் பெரிய அளவில் முன்னெடுத்து ஆர்பாட்டங்களை நடத்தி அசிங்கப் படுத்திவிட்டனர். உடனே டீவி பப்பரப்பாளர்கள் வேறு. = ‘காங்க்ரெஸ் காவி மயம்!’
… இதன் ஒரு பக்கச்செய்தியாக – நான் மைசூரில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, பல்கலைக் கழக வளாகத்திற்குச் செல்லவும், அதனுள் விழா நடக்கும் இடங்களைக் கண்டுபிடிக்கவும் மிகவும் திணறிவிட்டேன்! இத்தனைக்கும் வாலன்டியர்கள் இருந்திருக்கிறார்கள் – ஆனால் என்னால் ஒரு வாலன்டியரையும் அடையாளம் காணவேமுடியவில்லை. ஏனெனில் அவர்களுடைய ‘காவி’ டீஷர்ட்கள், தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தியதால் கடைசி நிமிடத்தில் அவை அகற்றப்பட்டு, அமைப்பாளர்களால் வேறு ஏற்பாடுகளும் செய்யமுடியவில்லை. அவர்களுக்கு, கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகளைக் (identity tags) கொடுத்திருக்கிறார்கள் – ஆனால் விழாவில் இருந்த 90 % பேர் இம்மாதிரி அட்டைகளை மாட்டிக் கொண்டிருந்ததால்…
இ: ‘காங்கிரெஸில் வேதகால அறிவியல் பிரச்சாரம், ஹிந்துத்துவா முகம்’
சுமார் 2000 ஆராய்ச்சிக் கட்டுரைகள், சில பொழுதுபோக்கு அறிவியல் செய்திகள் போன்றவை இவ்விழாவில் சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. அதில் ஒன்றின் மீதான, மிகவும் எதிர்மறையான விமர்சனம், ஒட்டுமொத்த விழாவின் மதிப்பையே குலைத்துவிட்டது.
அக்கட்டுரையில் ‘அந்தக் காலத்திலேயே விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன’ போன்ற கதையாடல்கூட இல்லை; அது, சாதாரணமாக, ‘சிவன்’ பற்றியும் சுற்றுப் புறச் சூழலைப் பற்றியும் ‘மறு சுழற்சி’ என்கிற பார்வையில், ‘காத்தல்/அழித்தல்’ என்ற நோக்கில் பேசுகிறது, நிச்சயம் மோசமான கட்டுரையல்ல – ஆனால் காத்திரமானதும் அல்ல. ஒரு ‘பூவுலகின் நண்பர்கள்’ தர ‘அறிவியல்’ கட்டுரை போலத்தான் இருந்தது. இக்கட்டுரையை நான் முழுவதுமாகப் படித்தேன். மேலும், இதனை எழுதியவர் விழாவுக்குக் கூட வரவில்லை. ஆகவே, அமர்வில், அவருடைய கட்டுரையின் சாராம்சத்தைத் தான் படித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் இதனை விழா அமைப்பாளர்கள் ஒதுக்கி இருந்திருக்கலாம் எனத்தான் நினைக்கிறேன். அதுவும் தேவையேயில்லாமல் வலிந்து கட்டிக்கொண்டு – உரையாடல்களை அவற்றின் பாடுபொருட்களின் மையங்களுக்கு இட்டுச்செல்லாமல், விளிம்புகளில் மட்டுமே நடனமாட விடுவது என்பது, தம்மையும் பாரம்பரியங்களையும் நகைக்கத்தக்க அளவில் தாழ்த்திக்கொள்வது – இது சரியான விஷயமேயல்ல.
அக்காலப் பதிவுகளை – வார்த்தைக்கு வார்த்தை, இக்கால நிதர்சன உண்மைகளுடன் பொறுத்தவேண்டிய அவசியமில்லை. நமக்கு – உருவகங்களுக்கும், கற்பனை வளங்களுக்கும், கவித்துவங்களுக்கும், தொன்மங்களுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்/தொடர்புகள் தெரியவேண்டும். அவற்றின் ஊடுபாவுகள் உணரப்படவேண்டும்.
மேலும் – நம் கலாச்சாரங்களின், அறிதல்களின் கூறுகளை பறைசாற்றிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை. பழமையை வெறுமனே புகழவோ/வெறுக்கவோ வேண்டாம், அப்படியே புதுமையையும். நமக்குத் தேவை, சமனம்.
…ஆனால், ஊடகப் பேடிகளும், அவர்களுடன் குதித்துக் கும்மாளம் அடித்த சமூக வலைத்தளப் போராளிகளும் இது குறித்து மிகவும் மகிழ்ந்து, ஹிந்துத்துவா பொந்துத்துவா எனப்பேசி பொதுச் சபையில் தங்களைச் சொறிந்துகொண்டனர், நம் விஞ்ஞானிகளையும் அசிங்கப்படுத்தினர்.
இக்கட்டுரை பற்றிய, கறாரான விமர்சனம் மட்டுமே ஊடகங்களில் இருந்திருந்தால், அது சரியாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள், தங்களால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு கட்டுரையை மட்டும் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த அமைப்பையும் சிறுமைப் படுத்தினர். But, our lovable media rogues, would love to generalize based on one data point or even less!
ஓசிச் சாப்பாட்டுக்கும் பிச்சைக்காசுக்கும் நாய்கள் போல அலையும் இந்த ஊடகப் பேடிகள் நினைத்திருந்தால், கொஞ்சமாவது முனைந்திருந்தால் – இவ்விழா பற்றி, பலப்பல சுவையான செய்திகளை எழுதியிருக்கலாம். முக்கியமான கட்டுரைகளைக் கோடி காட்டியிருக்கலாம். விஞ்ஞானிகளுடனான சிறு நேர்காணல்களைப் பதிவு செய்திருக்கலாம். பொதுமக்களுக்கு உத்வேகம் அளித்திருக்கலாம். இளைஞர்களுக்கு இருக்கும், தொடர்ந்து மேலெழும்பி வரும் துறைகள் சார்ந்த வாய்ப்புகளைப் பற்றி விலாவாரியாக எழுதியிருக்கலாம். தொழில் நுட்பங்களைப் பற்றி, விவசாயத்தைப் பற்றியென காத்திரமாக கட்டுரைகளை எழுதியிருக்கலாம். ஆர்வமாக தங்கள் ‘கண்டு பிடிப்புகளை’க் காண்பித்துப் பேசிய குழந்தைகளைப் பற்றியும், அவர்களுடைய அர்ப்பணிப்பு மிகுந்த ஆசிரியர்கள் பற்றியும் எழுதியிருக்கலாம்.
ஆகவே, இவர்களுடைய காமாலைக் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் பெருந்தீனியும், அவர்கள் எங்கெங்கும் காணும் ஹிந்துத்துவா சதித்திட்டமும்தான். வாழ்க!
-0-0-0-0-0-0-
அடுத்த பதிவில், இவ்விழா தொடர்பான சில புகைப்படங்கள் + என் குறிப்புகள் + எண்ணங்கள் + நகைச்சுவைகள்…
January 19, 2016 at 11:37
ஊடகங்களில் வந்த சாப்பாடுக்கச்சேரி, காவி ட்ரெஸ்………… இத்யாதி இத்யாதியெல்லாம் ஊடக வாந்திகள் ………… சரி தான்.
ஆனால் வெங்கட்ராமன் ராமக்ருஷ்ணன் என்ற விக்ஞானி ஒருவர் இந்த அறிவியல் காங்க்ரஸ் என்பதே ஒரு சர்க்கஸ் மாதிரி. இங்கு சயின்ஸ் சம்பந்தமாக வெறும் தம்மாத்தூண்டு தான் பேச்சு என்று சொல்லிய விஷயம் டைம்ஸ் ஆஃப் இண்டியா………. ஃபர்ஸ்ட் போஸ்ட் ……….. இத்யாதி இத்யாதி என………… MSM, Social Media …………. என எல்லாத்திலும் வலம் வந்தது.
http://timesofindia.indiatimes.com/india/Science-Congress-a-circus-Scientists-split/articleshow/50476408.cms
http://www.firstpost.com/india/indian-science-congress-is-a-circus-wont-attend-it-nobel-laureate-v-ramakrishnan-2572268.html
தங்களுடைய வ்யாசத்தில் இது பற்றிய குறிப்பு இல்லை.
அவர் சொல்லியது போல இந்த சயின்ஸ் காங்க்ரஸில் சயின்ஸ் பற்றிப் பேசப்படவில்லையா?
January 19, 2016 at 11:50
அய்யா க்ருஷ்ணகுமார்,
நான் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களின் கருத்துரிமையை மதிக்கிறேன்; ஆனால் அவர் கருத்தை மதிக்கமுடியாது. அவருடைய இந்த குறிப்பிட்ட கருத்து, ஊடகப்பேடிகள் சொல்லக்கூடுவதுபோலுள்ளது. அவர் அப்படிச் சொன்னது உண்மையானால், இம்மாதிரி விழாக்களின் பின்புலங்களை, குறிக்கோள்களை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் சரி. மேலும், அவர் இவ்விழாவில் முழுவதும் பங்கேற்கவேயில்லை. விசனம்தரும் விதமாக – ஒருவர் ஒரு துறையில் விற்பன்னர் என்றால், அடாவடியாக எல்லாவற்றைப் பற்றியும் கருத்துகூற முடிகிறது.
தயவுசெய்து மீண்டும் நான் எழுதியதைப் படியுங்கள்!
“இவர்களில் ஒரு ஜந்துவுக்கும், அறிவியல்-தொழில் நுட்ப விஷயங்களையே விடுங்கள் — இந்த காங்க்ரெஸின் பின்புலம் பற்றி, இம்மாதிரி அறிவியல்விழா கூட்டங்களின் அவசியம் பற்றி, பலதுறை தொடர்பான விஞ்ஞானிகள் ஒருசேரக் கூட முடிந்தால், அதனால் ஏற்படும் சாத்தியக் கூறுகள் பற்றி, காட்சியகங்களினால் பொதுமக்களுக்கு (முக்கியமாக நம் குழந்தைகளுக்கு) ஏற்படக்கூடிய திறப்புகள் பற்றி — ஒரு எழவும் தெரியவில்லை. அவர்களால் செய்யமுடிந்தது அசட்டுத்தனமான நமட்டுச்சிரித்தலும், கிண்டலும்தான்.”
நீங்கள் கொடுத்த சுட்டியில் – நான் மிகவும் மதிக்கும் மஞ்சுள் பார்கவா அவர்களின் குறிப்பும் அதில் இருக்கிறதே:
“But Princeton mathematician Manjul Bhargava, who is the first person of Indian origin to win Fields Medal, Nobel equivalent for math, said a lot of positives come out of the congress. “What is the purpose of a science congress? Not necessarily to advance individual research. For that you go to specialized conferences on your subject. The purpose of the science congress is to meet scientists from across the country, build connections, find common areas of interest,” he said when asked to comment on the ‘circus’ remark.”
படித்தீர்களா? :-(
January 19, 2016 at 11:58
இன்னொன்று: அங்கு அறிவியல், தொழில் நுட்பம் பற்றி நிறையவே பேசப்பட்டன. (ஆனால் நான் ஒன்றுக்கும் போகவில்லை; போன நண்பர்களான விஞ்ஞானிகள் சொன்னதுதான் இது)
இந்த காங்க்ரெஸ் என்பதன் பின்புலம் என்பது, இந்தியாவில் பல இடங்களில் நடக்கும் முயற்சிகளையும், அபிலாஷைகளையும், திட்டங்களையும் பின்புலத்தில் வைத்து ஆராய்ச்சிகளைக் கோடி காட்டுவதுதான்! ஒரு குழுவுக்கு இன்னொரு குழுவைத் தொடர்பு கொள்வதற்கான முகாந்திரம்தான்!
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் என் தான் இப்படிச் சொன்னார் என்று எனக்குப் புரியவில்லை.
எதையெடுத்தாலும் உடனுக்குடன் கருத்து சொல்லவேண்டிய காலத்தின் கோலம்தான் இது.
January 19, 2016 at 14:35
திரு மஞ்சுள் பார்கவா கருத்து சரியானது என எண்ணுகிறேன். இது ஒரு வாசல். இதன் மூலம் அறிவியலாளர்கள் ஒருவருடன் ஒருவர் அறிமுகம் ஆகி பின்னர் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு ஏற்பாடு தான். தி ஹிந்து பற்றி கூறி இருந்தீர்கள். 40 வருடங்கள் முன்பு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்த பத்திரிகை படிக்க சொல்வார்கள். காரணம்–நல்ல ஆங்கில புலமை கிடைக்கும், புதிய வார்த்தைகளை அறியலாம், ஆங்கில இலக்கணம் தெரியலாம் …என்பதற்கு. ஆனால் இப்போது, குதிரை தேய்ந்து கழுதை ஆகி பின்னரும் தேய்ந்து கட்டெறும்பு ஆகி இப்போது இடது-சாரி கருத்துகளை எழுதும் சுள்ளி எறும்பு ஆகி விட்டது.
January 20, 2016 at 11:33
‘தி ஹிந்து ‘ பற்றிய தங்களின் கணிப்புக்கு மிகவும் உடன்படுகிறேன்.ஆனால் சனியனை வாங்காமல் இருக்க முடியவில்லை!!
January 20, 2016 at 10:32
for your info..
http://ikashmir.net/atrocities/11.html
these are the handiwork of brahminical forces …
January 20, 2016 at 10:37
your friend is back ??
http://www.thehindu.com/todays-paper/tp-opinion/ancient-prejudice-modern-inequality/article8126641.ece
January 20, 2016 at 13:21
ஊடகங்களுடைய செய்தி பகிரும் உத்தியும்…………… மேம்போக்காக நுனிப்புல் மேயும்…………. என்னைப்போன்றோருக்கு ………. இவை சுட்ட விழையும் சித்திரமும் அசர வைக்கிறது.
scientists split…………என்று சொல்லியதில் மாற்றுக்கருத்துக்களும் இருந்திருக்க வேண்டும் என்பது உறைக்கவில்லை. நிச்சயமாக நான் மேற்கொண்டு ஸ்ரீ மஞ்சுள் பார்கவா மற்றும் மாற்றுக்கருத்துள்ள விக்ஞானிகள் சொல்லியதை கவனம் செலுத்தி வாசிக்கவில்லை.
பொளேர்னு மண்டையில் அடிக்கும் படிக்கு………… இந்த சர்க்கஸ் கருத்து உறைத்ததால்…….. அதைப் படித்து விட்டு அப்படியே நகர்ந்து விட்டேன்.
ஊடகங்களைச் சொல்லிக் குறையில்லை. அதில் பகிரப்படும் செய்திகளை கவனமாக கருத்தூன்றி வாசிக்காத என்(போன்றோர்) மீதும் குறை உள்ளது.
சயின்ஸ் காங்க்ரஸில் பொதுமக்களுக்கு, சயின்ஸ் பற்றி ஆர்வமுள்ளவர்களுக்கு…………. அது சர்க்கஸ் என்ற படி இல்லாமல் ………… எந்த விதத்தில் பயனுள்ள நிகழ்ச்சிகளை பகிர்ந்தது………….. என்று உங்களுடைய அடுத்த பகுதியில் ………….. இந்த விஷயங்களைப் பற்றி எழுதவும்.
January 20, 2016 at 22:05
The Hindu gave a decent coverage to The Science Congress and highlighted speeches of scientists. The standard of papers presented in Science Congress may not be great and some may assess it on that basis while some may think that as it provides avenues for meetings and to know what others are doing it is good to have one. The Science Congress of 2015 earned notoriety for the sessions that had nothing to do with science while in this year few papers/presentations did enough damage as they had nothing to do with science. The Hindu and Frontline’s coverage of science and technology is better than that of most newspapers and magazines and certainly they don’t promote pseudo science. The English media in my view by and large highlighted the positive and negative aspects of the Science Congress. Venk Ramakrishnan is president elect of the Royal Society which is also engaged in science communication and science policy. So his views cant be dismissed easily. Science Congress is funded almost 100% by DST and the PM’s address is a routine item in the agenda. The Science congress also includes Womens Science Congress and Childrens Science Congress. Still many don’t have a good opinion of that because it is seen more as a mela than as a serious conference on S&T. I have seen the list of sessions and titles of papers of many years science congress and they did not kindle any interest in me to attend one. I know that I will learn more about S&T by reading Science and Nature for a month, than by attending this Congress as most of the research presented there is mediocre and no body uses this to announce breakthroughs or important discoveries. Those are reserved for prestigious journals and international conferences.