மகாமகோ மாட்டுக்கறிச் சோழ மகாத்மியம்
April 12, 2015
(அல்லது) பேராசிரியர் மதிமாறனார், பிஹெச்டி (மாட்டுக்கறி) அவர்களின் ஆய்வறிக்கை: கற்காலச் சோழர்களின் மாட்டுக்கறி
… நம்முடைய சகமுட்டாள் தமிழர்களின் மாட்டுக்கறி உணர்வை, அவர்களுடைய சோம்பேறித் தனத்தையும், தங்களுடைய சொந்த மாட்டுக்கறியைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ளாமையையும் நினைத்தால் கோபம்கோபமாக வருகிறது எனக்கு.
உங்களுக்கு?
வரலாறு என்றாலே மாட்டுக்கறி [1] என்பதை அறியாத அறிவிலிகளல்லவா நாம்?
அதனால்தானே ஜெயமோகன் போன்ற மலையாளித் தமிழர்கள், போயிறங்கிகள்[2], மலையாள மாட்டுக்கறியை உயர்வாகவும், திராவிடத் தமிழகத்தின் மாட்டுக்கறியைத் தாழ்வாகவும் மதிக்கிறார்கள்? (பார்க்க: “ஆகவே இதில் பொங்கி எழ ஒன்றுமில்லை. மேலும் தமிழகத்தில் மாட்டிறைச்சி தடைசெய்யப்படுவதை நான் ஆதரிக்கிறேன். இங்கே இன்றுவரை நல்ல மாட்டிறைச்சிப்பொரியல் சாப்பிட்டதில்லை. கேரளத்தில் கைவைத்தால் நடப்பதே வேறு!”)
ஆனால், பொரித்தது போதும் பொங்கியெழு மவனே என்று மனோகரத்தனமாக உணர்ச்சிவசப் பட்டால் வேலைக்காகுமோ சொல்லுங்கள்?
… நிற்க, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தினரின் மாட்டுக்கறிப் புத்தகங்களைப் பார்த்தாலே, எனக்குக் குமட்டிக் கொண்டுவருகிறது. அவ்வளவு ஆபாசமாக இருக்கின்றன அவை.
திராவிட மாட்டுக்கறியைத் தூக்கிப் பிடிக்காமல், ஆரிய மாட்டுக்கறியைத்தானே தொடர்ந்து தூக்கிப் பிடிக்கின்றன அவை? அதுவும் மிகவும் ஆறியதை? பார்ப்பனர்களால் தானே இந்த மாட்டுக்கறித் திரிப்புகள்?
தமிழன் என்றுதான் தன் உண்மை மாட்டுக் கறியை உணர்வான், சொல்லுங்கள்? உண்ணுவதைக் கூடப் பிறகு பார்க்கலாம்…
இந்தச் சலிக்கவைக்கும் சூழலில்தான், ஆகவேதான், நம்முடைய செல்லத் தோழனாரின் ஆய்வறிக்கை மிக முக்கியமானதொன்றாக, தமிழச் சிந்தனை மாட்டுக்கறியின் ஏடுகளில் பொன்னெழுத்துகளில் பொரிக்கப் படப் போகிறது என்பதில் எனக்கு ஐயமேயில்லை.
தமிழகத்து மாட்டுக்கறியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறவர்கள், நம்முடைய பேராசிரியர் போன்றவர்கள்தான்.
-0-0-0-0-0-0-
காலையில் வாக்குவது சாலையில் நன்று என, அன்றே சுஜாதா சொன்னார் அல்லவா?
கற்காலத்தில் சோழர்கள் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையென்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்போது இல்லவேயில்லை என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அவர்கள் இல்லவேயில்லை என்று ஆதாரத்தைச் சுட்டும் வரை, உண்மையென்னவென்றால், கற்காலத்திலும் சோழர்கள் இருந்தார்கள்தான். அப்படியே அவர்கள் இல்லையென்று ஆராய்ச்சிபூர்வமாக நிரூபித்தாலும், கற்காலத்துக்கும் முந்தைய காலத்தில் – பாறாங்கற்காலத்தில்அவர்கள் இருந்திருப்பார்கள்தானே? ஆகவே, கற்காலத்தில் – சோழர்கள் இருந்தார்கள் என்பது ஆணித் தரமாக முன்னெடுக்கப்படவேண்டிய வாதம்.
அண்மையில் அண்ணல் அயிராவதம் மகாதேவனார், மாமல்லபுரத்து அடையார் ஆனந்த பவன் உணவகத்துக்குச் சாப்பிடச் சென்றபோது சில மாட்டுக்கறி உண்மைகளைக் கண்டுபிடித்தார். ஏ2பி ஒரு சைவ உணவுக் கடை என்று பொதுவாக நினைக்கும் பூணூல்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், தமிழக மாட்டுக்கறியின் மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் ‘அவாளு’க்கெதிராக வெளிக்கொணரவேண்டுமன்றோ?
அயிராவதமார் கண்டது என்னவென்றால் – ஏ2பி-யில், அங்கே ஒரு பலகையில் (பல்லவ அரசனும், சாண்டில்யனின் அருளால், இரண்டு ‘குமுதம்’ அத்தியாயங்களுக்கு ஒருமுறை, கதாநாயகின் மார்க்கச்சையை விலக்கிக் கொண்டிருந்தவனுமான ராஜசிம்ம பல்லவனால், ஓய்வுநேரத்தில் இது வரையப் பட்டிருக்கலாம் என மிகச் சரியாகவே ஊகிக்கிறார், அயிராவதம்) சோளா பட்டூரா (Chola Battura) என்று பொரிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கிறார். அய்யோ, கொலஸ்ட்ரால் என, உள்ளே மனுநீதிச்சோழ ஆராய்ச்சிமணியை ஒரு மாடு அடித்தாலும், எப்போதோ பொரித்த இந்த ஆறிய பூரியைச் சாப்பிட்டிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மை திடீரென்று, நம் பெரியவர், அறிஞர் பெரியார் அவர்கள் அருளால் உதித்திருக்கிறது.
அதாவது ராஜசிம்மனின் முன்னோர்களில் ஒருவன் தான் இந்தச் சோளா பட்டூரா – அதாவது சோழன் பட்டூரன் என அந்தக் காலத்திலேயே (கிமு 25000) பொன்எண்ணையில் பொரிக்கப்பட்டவன்தான் இவன்!
இதில் பட்டூர் என்பது பட்டுத் துணிகளை நெய்யும் காஞ்சிபுரத்தைக் குறிக்கிறது. ஆகவே, இந்தச் சோழன் காஞ்சீபுரத்தைச் சார்ந்தவன் என்பது திண்ணம்.
இந்த ரீபஸ்முறை அய்ராவதனார்[3] ஆராய்ச்சியைப் பின்பற்றி, மதிமாறனார், தன் திராவிடத் தமிழ் மறுபேருந்து ஒன்றை எட்த்துவுட்ருக்கிறார்.
அஃதாகப்பட்டது:
ஆக சோழர்களுக்கும் ஜப்பானுக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்த மாட்டுக்கறிகளை யார் மறைத்தார்கள்? எல்லாம் அவாள் தான்! காஞ்சீபுரத்துச் சங்கர மடத்துப் பார்ப்பனர்கள்தாம்!!
எப்படிப்பட்ட, மறைக்கப்பட்ட மாட்டுக்கறி உண்மை இது?
ஆக சிந்துவெளியில் சிந்து பாடிய சிந்துபாத் – ஒரு பக்கா, அசல் திராவிடன்!
ஆனால் – இந்த உண்மை ஏன் பரவலாக அறியப் படவில்லை? அங்குதான் காந்தியாரின் பச்சைத் துரோகம் [4] இருக்கிறது. பெரியார் இதைப் புட்டுப்புட்டு வைதிருக்கிறார் – ‘காந்தி ஒழியணும்!’ என்று!
… இப்படி நாடெங்கும் புதைக்கப்படும் மாட்டுக்கறிகள் இருக்கின்றன.
ஆரிய மாற்றுக்கறிகளை ஒழித்து திராவிட மாட்டுக்கறிகளை நிலை நாட்டுவது எப்போது?
மாட்டுக்கருத்துகளை முன்னெடுப்பது எப்போது?
மாட்டுப்புராண அழகியல்களை உருவாக்குவது எப்போது?
திராவிடர்களே! சபதமேற்போம்!! சூளுரைப்போம்!!!
அடுத்தமுறை தேர்தலில் வென்றால் – ‘ரூபாய்க்கு மூன்று பிடி மாட்டுக்கறி‘யை வழங்குவோம்!
இவ்வமைப்பின் மூலம், வருடாவருடம் ஒரு தமிழருக்கு, ‘மானமிகு மாட்டுக்கறியார்‘ என பட்டம் ஒன்றைக் கொடுப்பதாக ஒரு திட்டம் இருக்கிறது என என் கனவில், மானமிகு வீரமணி அவர்கள் நேற்றுச் சொன்னார். மிக்க நன்றி அய்யா!
தொடர்புள்ள பதிவுகள்:
- தோழர் மதிமாறனாரின் எழுத்துகளைச் சிலாகித்தும் சில பதிவுகள் இங்கே இருக்கின்றன; தேடிப் பிடித்து இன்புறவும் – அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/04/2015 வரை!)
- காந்தியாயணம்…
April 12, 2015 at 22:23
Interesting
April 13, 2015 at 08:39
அய்யா, நீங்கள் உங்களுடைய இன்னொரு பின்னூட்டத்தில் (https://othisaivu.wordpress.com/page-1/#comment-3737), நான் ஏன் ஆங்கில மேற்கோளைக் காட்டியிருக்கிறேன் என்று கேட்டிருக்கிறீர்கள், சரி.
ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுகிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது.
எனக்கு மொழி என்பது ஒரு கருவி மட்டுமேதான்.
எப்படியும், உங்கள் அறிவுரைகளுக்கும் சிந்தனைகளுக்கும் நன்றி.
April 17, 2015 at 22:01
அடடே – இங்கு பால சுந்தரம் விநாயகமா ? சபாஷ் !! ரெவெரண்ட் ஜோ அமலன் , பால சுந்தரம் கிருஷ்ணா, சுருக்கமாக BS – அய்யா சாமி எத்தனை ரூபங்கள் !!.
April 17, 2015 at 22:02
??
April 18, 2015 at 14:30
அது ஒன்றுமில்லை அய்யா – மேலே பால சுந்தரம் விநாயகம் என்பவர் பல்வேறு தளங்களில் பல்வேறு பெயர்களில் பதிவு இடுவார். எப்போதும் அவர் ஒரே பாட்டுதான் பாடுவார் – ” பார்ப்பனர் இல்லாத இந்து மதம் தான் தேவை” அவர் பெயரைப் பார்த்ததும் இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். .