“ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!”

August 22, 2014

அங்க என்னம்மா சத்தம்?‘   — இளைஞர் வா. மணிகண்டன் அவர்களின் அண்மைய கட்டுரையைப் படித்தேன். சோகம்.

என்னுடைய எதிர்வினைதான் – என்னுடைய சலிப்பிய கட்டுரையின் தலைப்பு! :-(

!நிசப்தம் (=சத்தம்!) + அறச்சீற்றம் (=பிலிம்) = *டமால்-டுமீர்-பணால்* (=யானைவெடி)

சலிப்பாக இருக்கிறது. ஏன் இப்படிப் பொத்தாம் பொதுவாக எழுதிக் கொண்டே போகிறார் இவர்?  ஒவ்வொரு கட்டுரையிலும் ஒப்புக்கொள்ளமுடியாத ஏகப்பட்ட தர்க்கமற்ற குதித்தல்கள்,  அடிப்படைகளை அறியா கருத்துச் சமைத்தல்கள், இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகளை சுலபமான சிடுக்கவிழ்த்தல்கள், கண்டமேனிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் காய்ச்சியெடுத்தல்கள், கையலாகாத்தனங்கள்  இன்னபிற இன்னபிற… இப்படியே போனால் இணையத்தின் இரண்டாம் மகாமகோ ஸ்ரீஸ்ரீ  இளைஞக்கருப்பனார் ஆகி விடுவாரோ எனப் பயமாகவே, அடி வயிற்றுக் கலக்கமாகவே இருக்கிறது. ஒருவேளை, இப்படியே தமிழ்ப்பணி புரிந்து நேராக MIDS கண்டடைந்து ‘சலபதி’ அவர்களின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து விடுவாரோ என மனம் திக்திக் என்று அடித்துக்கொள்கிறதும் கூட… :-(

ஆக – எனக்குப் போட்டியாக யாரையும் நெருங்க விடக்கூடாது – இந்த அடிப்பொடி இரண்டாந்தரத் தகுதிக்கு / பெருமைக்கு என்பதும்,  என் சுயபாதுகாப்பு உணர்ச்சியும் என்னுடைய இந்தக் கட்டுரைக்குக் காரணமாக இருக்கலாம்; முக்கியமாக, மகாமகோ டாக்டர் பூவண்ணன் அவர்களின்  உரலாயுதப் பின்னூட்ட, மறைந்திருந்தே தாக்கும் மரும கெர்ரிலாப்  போரிலிருந்து — எப்படித்தான் இவ்வளவு நாட்களாக இவர் தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற பொறாமையும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்தான்.

… ஆனால் — எனக்குத் தெரிந்தவரை ஓரளவுக்கு நன்றாகவே, எளிமையாக, புரியக்கூடிய தமிழில் (அதாவது, என்னைப்  போல விட்டேற்றியாக, வாசகனை மதிக்காமல், மேட்டிமைத்தனத்துடன்  எழுதாமல்),  வாழ்வைப் பற்றி – மினுக் மினுக் என சில சிந்தனைக் கீற்றுகள் தெரிய அழகாகவே  எழுதிக் கொண்டு இருந்தவர் தான் இந்த !நிசப்தம்காரர். ஏனோ சில பல  சமயம் —  ஆர்வக் கோளாறினாலோ,  அனுதினமும் எழுதவேண்டிய சுயநிர்ப்பந்தம் காரணமாகவோ, தினமும் எதையாவது எழுதாவிட்டால் வாசகர்கள் வரமாட்டார்கள் எனும் கருத்து காரணமாகவோ, சிறுபான்மைக்கு பெரும்பான்மைக்கு என ஏதாவது க்வோட்டா மனிதவுரிமை படையலோ — அல்லது வேறு ஏதாவது  எழவினாலேயோ என்பது தெரியவில்லை – இக்காலங்களில்  கண்டமேனிக்கும் துறையறியாமல் கால் வைக்கிறார். தேவையா? கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கிறது.

-0-0-0-0-0-0-

சில வருடங்கள் முன் ரோபாட் பற்றி, இவர் ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதினார். அப்போதே பதில் எழுதவேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் சமயம் வாய்த்தது. மன்னிக்கவும்.

மேலும் கடந்த சுமார் 40 வருடங்களாக இந்த மத்தியதரைக்கடல்-அரேபியக் கூத்துகளைக் கவனித்து வருகிறேன். எனக்கு இஸ்ரேலிய-யூத இஸ்ரேலிய-முஸ்லீம் நண்பர்களும் (1983ஆம் ஆண்டில் நான் ஒரு வெறிபிடித்த அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர் ஆனதிலிருந்து – தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து இஸ்ரேலிய நண்பர்களுடன் அளவளாவுதலிருந்து, ஆ.. அந்தக் காலம்…), வெஸ்ட்பேன்க் சார் கிறிஸ்தவ  நண்பர்களும் இருக்கிறார்கள்.

சரி. இளைஞரும் ஆர்வமாகத் தொடர்ந்து தமிழில் எழுதிவருபவருமான வா. மணிகண்டன் பற்றி இப்படித் தாளித்து எழுதவேண்டுமா என கடந்த சில நாட்களாக யோசித்து – யாரும் இப்போக்கைப் பற்றி எழுதாததால், அவர் எழுதுவதைப் படிக்க அனுதினம் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதால், ஆக பின்னவர்களைப் பொய்க்கருத்துகளில் மூழ்கடிப்பது சரியில்லை எனத் தோன்றியதால், ஆதாரமில்லாமல் இவர் அபாண்டங்களை எழுதி வருவதாலும் தான்…  …மேலும் யோசித்துப் பின்னர் தான் எழுதியிருக்கிறேன். சூட்டைத் தணிக்க முயன்றிருக்கிறேன்.

முடிந்தவரை என் கருத்துகளை சரி பார்த்துவிட்டுத்தான் எழுதியிருக்கிறேன். இந்த மேற்கண்ட நண்பர்கள் — இஸ்ரேலிய-யூத இஸ்ரேலிய-முஸ்லீம் நண்பர்கள் — தொடர்பான ஒரு (சோகமான) உபகதையை இன்னொரு நாள் எழுதுகிறேன்.

ஏனெனில் – வா. மணிகண்டன் அவர்கள் தொடர்ந்து தரமாக மட்டுமே எழுதவேண்டும் என்பது என் கோரிக்கை. மேலும், என்னைப் போல் சீரழிய மாட்டார் என்பது என் நம்பிக்கை.

-0-0-0-0-0-0-

ஹமஸ் இயக்கத்தின் அண்மைய முதல் அநியாய வன்முறை – பின் இஸ்ரேலின் பதிலடி – பிறகு ஒரு சிறு போரளவு விரிந்திருக்கும் சோகத்தைப் பற்றிய !நிசப்தம்காரரின் இந்தக் கட்டுரையானது  – ஒரு வெள்ளை மனதுக் கட்டுரையாக – தேவையற்ற இறப்புகளின் சோகத்தை மையக் கருத்தாகக் கொண்டு  விரியும் என நினைத்தேன்.

ஆனால்… அடிப்படையில் தவறான புரிதல்களுடன், ஒரு பக்க அவரலாறுகளின் மீதும் கயமைப் பரப்புரைகளின் பாற்பட்டும்  மட்டுமே  விரிந்துள்ள இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புக் கட்டுரை – அவர் வாசகர்களை திருப்தி செய்யவும் (வாசகத்தனையது செறிவு நீட்டம்?),  ‘நானும்தேன் இஸ்ரேலின் எதிர்ப்பாளன்‘ என்று காட்டிக் கொள்ளவும் மட்டுமே பயன் பட்டிருக்கிறது. :-(

இப்படி ஆரம்பிக்கிறார்:

“யாசர் அராபத்தை தூர்தர்ஷனில் காட்டிய காலத்திலிருந்தே இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் என்னவோ நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியும்.”

… அப்போது யாஸர் அராஃபத் அவர்களுக்கு முன் அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பது தெரியாது. சரி. தொலைக்காட்சி இல்லாவிட்டால் அதுவும் தெரிந்திருக்காது. வாழ்க.

“ஆனால் என்ன நடக்கிறது என்று துல்லியமாகத் தெரிந்து கொண்டதில்லை.”

ஏன் இப்படியானது  எனக் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும்  இப்போதாவதுகூட இவர் எந்த சுக்கையாவது தெரிந்து கொள்ள முனைகிறாரா எனவும் தெரியவில்லை.  தெரியாமல் ஏன்  இந்தக் கட்டுரை எழுதப் படவேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது.

ஆனால், பொத்தாம்பொதுவாக ஒரு பரப்பிய திரைப்படம் (=propaganda flick) பார்த்துவிட்டு (அதன் தலைப்பு என்ன, யார் இயக்குனர் என்றெல்லாம்கூடத்  தெரிவிக்கவில்லை இந்த இளைஞர்!) கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார். ஒரு வேளை மேலதிகமாக — தொலைக்காட்சி மூலமாக, மகாமகோ இணையத்தில் எலிக்குட்டியின் கொட்டையை உருட்டிச் சொடுக்கிச் சவாரி செய்து பெற்ற பொதுஅறிவையும் கலந்தடித்திருக்கிறாரோ? இது தேவையா?

எது எப்படியோ – இந்த ‘சாப்ளின் டாக்கீஸ்’ காரர்கள், திருட்டி டிவிடி அல்லது திருட்டு டவுன்லோட் செய்து இந்தப் படத்தைக் காண்பித்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். எனக்கு என் சக சினிமா ஆர்வலர்களின் ‘புரட்சிகர நேர்மை’ பற்றி நன்றாகவே தெரிந்திருந்தாலும் கூட…. :-(

“சிலர் இஸ்ரேல்தான் பிரச்சினை செய்கிறது என்கிறார்கள். சிலர் பாலஸ்தீனம்தான் பிரச்சினை செய்கிறது என்கிறார்கள். என்ன கருமமோ தெரியாது- ஆனால் கொத்துக் கொத்தாக குழந்தைகளும் பொதுமக்களும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.”

‘என்ன கருமமோ தெரியாது’  – சரிதான். பொதுமக்களின் (இஸ்ரேல்+பாலஸ்தீன்) பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவார் எனப் பார்த்தால் அப்படிஒன்றும் செய்யாமல் – இந்தக் கருமத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதைப் பற்றிய கவலையே இல்லாமல் – இஸ்ரேலைக் கரித்துக் கொட்டுகிறார்.

“… … இஸ்ரேல் இதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல பாலஸ்தீனப் பகுதியிலிருந்து ஏவுகணை வந்தவுடனேயே அது பள்ளியா, மசூதியா, குடியிருப்புப் பகுதியா என்றெல்லாம் பார்ப்பதில்லை. எந்த இடத்திலிருந்து ஏவுகணை வருகிறதோ அதே இடத்தைக் குறி வைத்து திருப்பி குண்டு வீசுகிறார்கள்.”

திருப்பித் தாக்கினாலும் தவறுதானோ? இன்னொரு கன்னத்தையும் காட்டவேண்டுமோ? எழுத்தாளர் காட்டுவாரோ?

இல்லையேல், எந்த இடத்திலிருந்து ஏவுகணை வந்தாலும் – அந்த இடத்தைத் தாக்காமல் பொதுவாகக் கடலில் யாரும் இல்லாத இடத்தைத் தான் இஸ்ரேல் தாக்கவேண்டுமோ?

தேவரீர் !நிசப்தம்காரர்அனுமதித்தால், ஹமஸ் அமைப்பினர் பற்றிச் சில கேள்விகள்:

 • ஏன் ஹமஸ் அமைப்பினர் பள்ளிகளிலிருந்தும் மருத்துவமனைகளிலிருந்தும் ஏவுகணைகள் அனுப்புகின்றனர்? இது ஒரு விடுதலைப்புலி அற்பர்களின் வகையறா வழிதானே? அவர்கள் ஏவுகணை இஸ்ரேலில் விழுந்தால் பாக்கியம். திரும்பி இஸ்ரேல் தாக்கினால், ஊடகங்களுக்கும் தட்டச்சுப் போராளிகளுக்கும் லேகியம். சரிதானே?
 • இஸ்ரேலில் சில கொலைகள் செய்வதற்காக, குண்டுவெடித்தல்களுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு சுரங்கம் தோண்டும் ஹமஸ் சுரண்டல் திலகங்கள், ஏன் அந்த நேரத்தில் பதுங்கு குழிகள் அமைக்கக் கூடாது?
 • ஆயுதம் கடத்தும் பணத்தில், நேரத்தில் – ஏன் பள்ளிக்கூடங்களை நடத்தக் கூடாது? குழந்தைகளுக்கு வெறுப்பை மட்டுமே  ஊட்டுவதற்குப் பதில், ஏன் நம்பிக்கையை விதைக்கக் கூடாது?
 • இஸ்ரேல் தாக்காத போதும் ஏன் – தற்கொலைப் படைகளை அனுப்புகிறார்கள்? ஏன் வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார்கள்? (இது விடுதலைப்புலி வழிதானே? படுகொலைகள் செய்துவிட்டு, எதிர்வினையாக எதிர்த்தரப்பு பதில் வன்முறையில் ஈடுபடும் போது – ஊடகங்களிடம், மனிதவுரிமைக் காரர்களிடம் ஓடிப்போய் முறையிடுவது? நம் செல்ல மாவோவாதிகளும் இதனைத்தானே செய்கிறார்கள்??)
 • அல்-ஃபாதாஹ் அமைப்பை (இது யாஸர் அராஃபத் அவர்களது, பெரும்பாலும் மரியாதைக்குரிய இயக்கம்  பிஎல்ஓ(PLO)வின் அங்கம்) காஸாவில் ஏன் ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்? (இது கோரக்கொலைவெறி விடுதலைப் புலிகள் – மற்ற தமிழ் அமைப்பாளர்களை ஒழித்துக் கட்டியது போல்தானே? போட்டியாளர்களைத் தீர்த்துக்கட்டுவது போல்தானே?)
 • நீர் சுத்திகரிப்பு, ஆரோக்கியம் போன்றவற்றிற்காக யுனிஸெஃப், ஹூ(WHO) போன்ற அமைப்புகள் இலவசமாகப் பணி செய்வதற்குக் கூட ஏன், முட்டுக்கட்டைகள் போடுகிறார்கள்?
 • ஏன் ஏழ்மையை, சிக்கல்களைக் களைவதற்குப் பதிலாக – அவற்றைத் தூக்கிப் பிடித்து ஊடக லாபம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்? ஏன் தங்கள் கந்தறகோளங்களை விற்பதில் மட்டுமே முனைகிறார்கள்?
 • ஏன் கடல்வழி ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கின்றனர்?
 • ஏன் பாலஸ்தீனியக் க்றிஸ்தவர்களை ஒதுக்குகிறார்கள்?
 • ஏன் ட்ரூஸ் முஸ்லீம்களை, ஷியாக்களை வெறுக்கிறார்கள்?
 • பாலஸ்தீனியர்களை நிபந்தனையற்று ஆதரித்த எகிப்து அரசு, இப்போது ஏன் ஹமஸ் அதிகார மையங்களை நம்புவதில்லை?
 • ஒரு பக்கம் இஸ்ரேலிடம் உதவி பெற்றுக்கொண்டே – இன்னொரு பக்கத்தில் தம் பாலஸ்தீனிய மக்களையும், இஸ்ரேலையும் ஏன் வஞ்சிக்கிறார்கள்?

இஸ்ரேல்-பாலஸ்தீன திடீரெக்ஸ் நிபுணரான தேவரீர் அவர்களிடம் இவற்றுக்கெல்லாம் பதில் இருக்கும் என நினைக்கிறேன்.

… இஸ்ரேல் எது செய்தாலும் வில்லத்தனம் தாம். ஏனெனில் எனக்கு அப்படித்தானே போதிக்கிறார்கள்! எனக்கும், சுய சிந்தனை செய்யும் பழக்கத்தையும் இந்த கூறு கேட்ட தமிழக ஆசிரியர்கள் போதிக்கவேயில்லை… என்ன செய்வது சொல்லுங்கள்.

சரி. பல பிரச்சினைகள் இருக்கின்றனதான். இஸ்ரேல் எனும் சிறு நாட்டின் உயிர்தரித்தலுக்காக – அது உபயோகிக்கும் சாம தான பேத தண்ட முறைகளில் – தண்டமுறைகள் மட்டும்தான் பப்பரப்பா செய்யப் படுகின்றன.

ஆனாலும், இஸ்ரேல் மிகப்பல விஷயங்களில் நல்லிணக்கத்துக்கு முயன்று கொண்டுதான் இருக்கிறது. இதற்கு ஒரேயொரு எடுத்துக் காட்டு…

சரி. ஹமஸ் ஆண்டு கொண்டிருந்த பாலஸ்தீனத்தில் – வெஸ்ட் பேங்க் + காஸா பகுதிகளின் ஏறத்தாழ 30 சதவிகிதம் மக்களுக்கு, போர் ஆரம்பிப்பிற்கு முன்பு வரை இஸ்ரேல் தான் (ஒரு தனியார் நிறுவனம் மூலம்) நீர் கொடுத்து வந்தது என்பது தெரியுமா?  சும்மா கொடுக்கவில்லை – ஆனால் சலுகை  விலைக்குத்தான் என்றாலும் – ஜோர்டானோ, ஸிரியாவோ, எகிப்தோ, மகாமகோ சவூதி அரபியாவோ அல்லது அவர்களையே விடுங்கள் – ஹமஸ் என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு இழவும் தெரியாமல் ‘லைக்’ போடும் போராட்டக் குளுவான்களோ, சும்மனாச்சிக்கும் இஸ்லாமுக்குப்  போராடுவதாகச்(!) சொல்லிக் கொள்ளும், ஆனால் ஸுன்னிகள் பாவப்பட்ட சக முஸ்லீம்களான ஷியாக்களைக் (அதுவும் நிராயுதபாணிகளை, பச்சிளம் குழந்தைகளை) கொத்துக் கொத்தாகக் கொல்வதைப் பற்றிக் கவலையே படாமல் கள்ளமௌனம் காக்கும் பெரும்பாலான இந்திய ‘இஸ்லாமிய’ கோஷம்போடும் இயக்கங்களோ, இந்திய மனிதவுரிமைக் காரர்களோ, இணைய அற்பர்களோ (=விசிலடிச்சான் குஞ்சப்பர்கள்) — — ஒரு சொட்டு சிறுநீரைக் கூட பாலஸ்தீனியர்களுக்குக் கொடுப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஏன் அந்த திக்கில் திரும்பிச்  சிறுநீர் கூடப் போவதில்லை இவர்கள். அந்த அளவுக்குத் தயாள குணம், பரோபகாரிகள். சரியான உடுக்கை இழந்தவன் கைகள்தான் இந்தப் பெருந்தகைகள், ஆஹா!

…ஒரு இழவையும் உபயோககரமாகச் செய்யாமல் – – ஆனால் ஹமஸ் சார்பாக – வெடிகுண்டு வைக்க, கோஷ்டம் போடவேண்டுமென்றால், பேரணி நடத்தவேண்டுமென்றால், போலி அறச்சீற்றப் பதிவு எழுதவேண்டுமென்றால் வெல்லம்.

மகாமகோ நீர்ப் பற்றாகுறையால் வாடும் காஸாவில் சுமார் 70,000 சாதாரண மக்களுக்கு  இலவசமாக உதவியிருக்கக் கூடிய நீர் சுத்திகரிப்புத் திட்டம் கைவிடப்படும்  கதை

யுனிஸெஃப் – UNICEF – ஐரோப்பிய இணையம் – EU (முன்பு குறிப்பிடப்பட்ட நாடுகளோ, இந்திய முஸ்லீம்களோ,  நம் இணையப் போராளிகளோ – காஸா பகுதி மக்களுக்கு ஒரு குப்பையையும் கொடுக்கவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள் – ட்விட்டர் ஃபேஸ்புக் என்று அலைவதற்கே நேரம் போதமாட்டேன் என்கிறதே!) சேர்ந்து – பத்து மில்லியன் யூரோ உதவிகொடுத்து டெஇர் அல்-பாலா பகுதியில் ஒரு திட்டத்தைக் கொண்டுவர இருந்தது. 2015-லிருந்து இது உபயோகத்துக்கு வந்திருக்கும்.

ஆனால் இந்தச் சுத்திகரிப்பு விஷயத்தில் இஸ்ரேலை மிஞ்ச ஆள் இல்லை. இந்தத் துறையிலும்  அவர்களுடைய தொழில்நுட்பம்  என்பது அதிஅழகுதான்!  அவர்களுக்குப் பல ஆண்டுகளாக இந்தத் துறையில் அனுபவமும் இருக்கிறது.

ஆனால் – இஸ்ரேல் உதவத் தயாராக இருந்தாலும் – காஸாவில் ஆறு சதவிகித மக்களுக்கு மட்டுமே அடிப்படைத்தேவையான நல்நீர் வசதியை ஹமஸ் அல்ல,  முந்தைய கூட்டணி அரசு இஸ்ரேலின் உதவியுடன் ஏற்படுத்தி இருந்தாலும் – காஸாவின் ‘தன்னார்வ நிறுவன’ கஞ்சிக்கலய மகானுபாவர்களுக்கு, இது ஒத்து வரவில்லை.

மேலும் பாலஸ்தீனிய தொழிற் சங்கங்களும் இதற்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றன. இஸ்ரேலிய நிறுவனங்களை டெண்டர் எடுக்க விடக் கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆக – அவர்கள் பார்வையில் – 1) இஸ்ரேலை, அதன் யூதத் தொழில் நுட்பத்தை இந்தத் திட்டத்தில் அனுமதிக்கக் கூடாது 2) ஆனால் – இஸ்ரேல் தன் தண்ணீரை காஸா மக்களுக்குத் தொடர்ந்து சலுகை விலையில் கொடுக்கவேண்டியது இஸ்ரேலின் கடமை.

யுனிஸெஃப் நிறுவனத்துக்கு இந்த முட்டுக்கட்டைகள் ஒத்துவரவில்லை. அவர்கள் பார்வையில் ஒப்பந்தப் புள்ளிகளை – தகுதிவாய்ந்த நிறுவனத்துக்குக் கொடுத்து, முடிந்தவரை குறைந்த மதிப்பீட்டில் திட்டத்தை நிறைவேற்ற விருப்பம்.

திட்டம் தொங்கலில் இருக்கிறது. கூடிய விரைவில் முடக்கப் படும்.

தன் மக்களுக்கு எது நல்லது எனத் தெரியாமல் கயமைக் கபடி ஆடும் ஹமஸ் அதிகார மையங்களுக்கும். தன்னார்வ அரைகுறைகளுக்கும் — நம்மூர் தொழில்முறை இணையக் குளுவான்களின் ஏகோபித்த ஆதரவு வேறு! அதேசமயம் இஸ்ரேல் மீதான அசட்டுத்தனமான ‘உட்கார்ந்த இடத்திலிருந்தே’ வெறுப்பும் இலவச இணைப்பு. சுபம்.

ஆனால் – தமிழக முஸ்லீம்கள் முன்னணிகளிடம் இந்த உப்பு நீர் சுத்திகரிப்புத் தொழில் நுட்பம் இருக்கிறதாமே? அதுவும் இலவசமாகக் கொடுக்கப் படுமாமே? ஆக காஸாவில் உள்ள 70,000 பேருக்கு, தமிழகத்தின் பறங்கிப்பேட்டையில் இருந்து முக்கால் இன்ச் பிளாஸ்டிக் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கப் போகிறது. ஹையா! :-(

எப்படிப்பட்ட பைத்தியக்காரர்கள், அயோக்கியர்கள் — நம் ஆசாமிகள்! எப்படிப்பட்ட நடிப்புச் சுதேசிகள் நம்மாட்கள்!

-0-0-0-0-0-0-

எச்சரிக்கை:  அடுத்த பதிவில் – மீதமிருக்கும் ‘அங்க என்னம்மா சத்தம்?’ கட்டுரையின் ஏறத்தாழ ஒவ்வொரு வரிக்கும் திடுக்கிடவைக்கும் பொழிப்புரை தொடரும். :-((  ++ இஸ்ரேலில் இருக்கும் நம்பமுடியாத நடைமுறை ஜனநாயகம் பற்றியும்! :-))

-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள் / தொகுப்புகள்…

14 Responses to ““ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!””

 1. muthu Says:

  ரொம்ப முன்னாலேயே அவருகிட்ட கேட்டேன் “இலக்கியவாதிங்கிறீங்க, யாருக்கு எழுதுறீங்கன்னு “:)

  இலக்கிய வாசகன் மூஞ்ச சுழிச்சிட்டு போயிருவான்..வெத்து வேட்டுங்க டைம் பாஸ் பண்ண இதெல்லாம் சும்மா அப்டியே மேய்ஞ்சுட்டு “சூப்பர்ணே …தெளிவுணே …ஆழம்ணே ..அசத்திபுட்டீங்கண்ணே “..அப்டின்னு ஒளரிட்டு போயிட்டே இருக்கும்…அதுக்கு ஆசைப்பட்டு என்னமோ காலைக்கடன் மாதிரி தினம் ஒன்னு போட்டுர்றாரு …

  நம்மளும் படிச்சிட்டு சிரிச்சுட்டு போயிர்றது..கேட்டா இருக்கவே இருக்கு “ஒன்னைய இங்க நா வர சொன்னனா?”…

 2. Sridhar Says:

  http://puthu.thinnai.com/?p=26307 சற்றே விவரமான கட்டுரை. வா மணிகண்டன் அவசியம் படிக்க வேண்டியது.

 3. reader Says:

  வண்ட்டாருய்யா வாத்யாரு…

  அப்பப்ப டோண்டு ராகவன் போல யாராவது இணையத்துக்கு வந்து குந்தினு க்கீராங்களே…

  • பொன்.முத்துக்குமார் Says:

   ஏம்மா செல்லம் ? அச்சு ஊடகம் மாதிரி இல்லாம இணையம் தரும் இந்த சுதந்தரம் நம்ம சூ..ல சுள்ளுன்னு சுண்ணாம்ப தடவுற மாதிரி இருக்கா ராஜா ? என்ன பண்ண, உண்மை சில சமயம் கசக்கும், சில சமயம் சுடும் … சகிச்சிக்கோ தங்கம். படிக்கிறவரு-ன்னு பேரு வச்சிக்கிட்டு வந்துட்டு இதுக்கெல்லாம் பயப்படலாமா ராஜாத்தி ?

 4. Raja M Says:

  Your scathing comments about Mr. Manikandan’s vague support of Palestinians (criticism of Isrealis) based on nebulous claims were justified. Interestingly, I find you have, in good measure, the traits that you accuse Mr. Manikandan of, e.g., writing about things without an in-depth understanding of an issue, not providing a balanced perspective, being simplistic in solutions etc.

  I do not claim to be an expert in Isreali-Palestinian conflict. But, I do know enough to know that, nothing in Isreali-Palestinian conflict is as simple as it appears in the first glance. I am surprised that someone who proclaims to follow the Isreali-Palestinian conflict for the past forty years, has succumbed a simplistic orchestered propaganda. Both Palestinians, and Israelis are masters of propaganda.

  To make my point, I will take one particular issue that you have raised in your rebuttal – water crisis in Gaza. You stated :

  “யுனிஸெஃப் – UNICEF – ஐரோப்பிய இணையம் – EU (…) சேர்ந்து – பத்து மில்லியன் யூரோ உதவிகொடுத்து டெஇர் அல்-பாலா பகுதியில் ஒரு திட்டத்தைக் கொண்டுவர இருந்தது. 2015-லிருந்து இது உபயோகத்துக்கு வந்திருக்கும்.
  ஆனால் இந்தச் சுத்திகரிப்பு விஷயத்தில் இஸ்ரேலை மிஞ்ச ஆள் இல்லை. இந்தத் துறையிலும் அவர்களுடைய தொழில்நுட்பம் என்பது அதிஅழகுதான்! அவர்களுக்குப் பல ஆண்டுகளாக இந்தத் துறையில் அனுபவமும் இருக்கிறது.
  ஆனால் – இஸ்ரேல் உதவத் தயாராக இருந்தாலும் – காஸாவில் ஆறு சதவிகித மக்களுக்கு மட்டுமே அடிப்படைத்தேவையான நல்நீர் வசதியை ஹமஸ் அல்ல, முந்தைய கூட்டணி அரசு இஸ்ரேலின் உதவியுடன் ஏற்படுத்தி இருந்தாலும் – காஸாவின் ‘தன்னார்வ நிறுவன’ கஞ்சிக்கலய மகானுபாவர்களுக்கு, இது ஒத்து வரவில்லை.
  மேலும் பாலஸ்தீனிய தொழிற் சங்கங்களும் இதற்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றன. இஸ்ரேலிய நிறுவனங்களை டெண்டர் எடுக்க விடக் கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.”

  Is this the real story about the Palestinian (and in particular Gazan) Water Crisis?

  The sub-text of these statements is intended to give a casual reader the impression that Israel, out of good intentions, is willing to help those in Gaza who are too stupid/hateful to accept such help. The real story is more complicated.

  The water resources of Palestine are controlled by Israel [Ref1 – see below for link].

  First, let us look at the West bank:

  West bank gets its water from the Mountain aquifer; although 80% of the water recharge for the largest aquifer (Western Aquifer) lies within the West Bank, 80% of the water storage area lies within Isreal. Much of this water is simply not accessible by Palestinians due to Israeli control (from Ref1):

  “Israel has denied Palestinians access to the entire Lower Jordan River since 1967. After the start of Israel’s military occupation in 1967, Israel declared the West Bank land adjacent to the Jordan River a closed military zone, to which only Israeli settler farmers have been permitted access.[26]
  In 1982, the West Bank water infrastructure controlled by the Israeli army was handed over to the Israeli national water company Mekorot. As of 2009, Mekorot operates some 42 wells in the West Bank, mainly in the Jordan Valley region, which mostly supply the Israeli settlements. The amount of water Mekorot can sell to the Palestinians is subject to approval of the Israeli authorities.[21]”

  How about the Gaza strip?

  “Coastal Aquafer” is the only source of underground water in Gaza. Isreal has deep wells into this aquifer and extracts water before it gets to Gaza strip. Israel also has additional restrictions for water transport for Gaza: “While Israel transports water from the north of its territory to the south, the Palestinians are not allowed to move water from the West Bank to Gaza. This is a reason why this aquifer is heavily over-exploited, resulting in seawater intrusion. The aquifer is polluted by salt as well as nitrate from wastewater infiltration and fertilizers. Only 5-10% of the aquifer yields drinking water quality.[30]”.

  Do Palestinians ‘waste’ water?

  The average consumption of water by a Palestinian is around 70 liters per capita per day (pcpd), and an average Israel consumes at least three-four times as much.

  Is Israel being generous about ‘supplying’ water to Palestinians [Ref2]?

  No. As per Oslo II accord, Israel and Palestine are required to share their water resources. The agreement was substantially lopsided with substantial water resources allocated to Israel (80%). Israel continues to extract more water than the agreement.

  About desalination:

  Mr. Ramasamy alludes that there is something ‘special’ about Israeli desalination methods. (“ஆனால் இந்தச் சுத்திகரிப்பு விஷயத்தில் இஸ்ரேலை மிஞ்ச ஆள் இல்லை. இந்தத் துறையிலும் அவர்களுடைய தொழில்நுட்பம் என்பது அதிஅழகுதான்! “). Perhaps, he could educate the rest of us as to why he considers Isreali desalination technology to possess ‘exquisite beauty’? Is the Israeli desalination process more efficient, cost-effective, consume less energy, generate less waste, etc. Please educate us. Desalination plants have been used in Gaza (for that matter, around the world), for decades.

  The water resource fight in Israel-Palestinian conflict is complicated [Ref2]. Many Palestinians suspect (with right reasons) that Israel, by pushing desalination as the solution to their water crisis, is killing two birds with one stone; First, it makes the Palestinians more dependent on Israel to provide vast electricity resources (at prices fixed by Israeli utility companies) necessary to run the desalination plants; Second, by pushing for desalination plants, Israel may start to permanently take over the natural water resources (aquifers) as its own. Palestinians insist that the water resources be appropriately decided as a part of a overall accord, and they see desalination as a side issue.

  The lack of any of this context makes your article a simple propaganda piece – the same accusation that you level against the likes of Mr. Manikandan – although you are on opposite sides.

  So, please tread gently.

  Ref1: http://en.wikipedia.org/wiki/Water_supply_and_sanitation_in_the_Palestinian_territories

  Ref2: From Haaretz:
  http://www.haaretz.com/news/middle-east/1.574554


  • Dear young Raja M,

   I wish you had waited a bit longer – for all my posts about !nisaptham to complete, that is – before giving your illustrious points of view and advice. Thanks anyway, though.

   I do not claim to know a way to solve the problems – but am merely saying that I am familiar with them. I NEVER claim to be a stupid neutral or a neutered guy, got it? Oh how I hate that meaningless word – நடுநிலைமை. I have ranted about this many a time. I do not mind being called a propagandist, it is fine. If telling a reasonably whetted reality (as opposed to popular myths) is considered random, so be it.

   But, unlike many folks, I do my homework. I check the facts as they appear to me. I do not listen to armed chair intellectuals. I am and I deal with fellow fieldworkers and responsible people.

   Yes, I know about Oslo2 and all that ruckus. I have learnt about all the perceptions, to the extent that I considered meaningful. I have talked to people who are in the real know and are in Israel. I have to talked to visitors from there. There was even one Israeli-Arab, muslim youngman from BenGurion univ, who was very pragmatic – and scathing of the tactics of the Hamas and their overseas armed chair supporters.

   I have used RO technolgies (for brackish/saline water) of Israel. In fact, we (=my community) have set up 5 such 8000 lpd plants (+3 more to be setup soon) using Israeli technologies (given gratis) and our funds – to work with our fellow villagers in our geographical area. We provide very good drinking water FREE to some 8700 households in our bio-region – the feedstock is high aquifer brackish water, mindyou. I standby my statement that Israeli tech, in this realm also is very good. I have compared their tech with Indian, Ruski and Chinese approaches. Believe me when I say that the damn jews have a damn good, working, maintainable tech. Of course jew baiters may not like it, sorry.

   Thanks a lot for all the aquifer related scatterdata – we have been doing this for donkey’s years with the associated waterconflicts and the so-called blue wars – not perhaps in your place, not in Israel – but in our area.

   And, for God’s sake, please do NOT quote wikipedia. There are enough jokers around slurping irresponsible data off it and feeding into it. Wikipedia is good research or even good data? OMG!

   I hope you understand the folks behind haaretz. I am not completely discounting them, but am aware of their background.

   Am sorry, I am not given to treading gently. I like it that way. Sorry again. I apologise for your extenuating circumstances. You can go back to wherever you came from.

   Your drawing parallels between yours truly and Srimaan Manikandan is noted with a chuckle – and has been treated with the contempt it deserves.

   However, I respect your right to give your opinion and gratuitous advice to me. It is all par for the course.

   Thanks for taking the time to respond in detail.

   Best:

   __r.

   • Anonymous Says:

    Dear Mr. Ramasamy,

    I am 46 years old, and I guess, could be considered as young :-). Thank you.

    In my earlier note, I do NOT ask you to be neutral or neutered, I ask that you provide a more complete perspective so that readers can appreciate the complexity of the issue. It is a complex matter.

    Like you, I have several Israeli friends, and work with Israeli technology on a regular basis. As someone interested in how things work, I wondered, what aspect of their RO technology made you call it as ‘exquisite-beauty’. I, wonder how this translates to Jew-baiting. You did not answer my question in this regard. I will take your word for it when you assert that their RO system is “better” than others – given your hands-on experience.

    I know it is fashionable to bash Wikipedia,and express collective disgust; I, for one, have found that it is a useful tool as a starting point of one’s research, as it provides diverse (granted sometimes inaccurate) points of view . Do you have any evidence contradicting the three paragraphs that I have quoted directly from Wiki about aquifers and underground water resources (which are based on references 21, 23, 26, and 30 (ref: to the wiki source)? The source of these references are:

    a report by Amnesty International (21), UN Environment Programme (reg. Aquifers – published in 2002) (23), Central European Journal of International and Security Studies (CEJISS) (26), and a World Bank report (ref: 30).

    Otherwise, I will chalk up your disgust about NOT quoting Wikipedia as your personal preference. I use Wikipedia, being fully aware of its limitations as well as its potential.

    I sincerely commend your services for the poor, and I admire it with all my heart.

    I know that the substance of your articles is better than Mr. Manikandan’s, but the standards to which you are held are much higher – given your vast experience.

    Regards,
    Raja


   • ——->>>>>>
    அன்புள்ள ராஜா, உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. நான் சமன நிலை தவறி உங்களுக்குக் கோபமாக பதில் எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும்.

    இந்தப் பதிவின் காரணமாக – எனக்கு ஒரு முஸ்லீம் பெயரில் பலமுறை வந்த மின்னஞ்சல்களில் / பின்னூட்டங்களில் இருந்த வெறுப்பு (யூத வெறியர்களுக்கு பார்ப்பனஜாதி ஹிந்துத்துவா வெறியனின் ஆதரவு கொடுக்கிறான் வகை, ஆனால் மேலும் மோசமான வசவுகள்) என்னை சமனம் இல்லாவிட்டால் ஆக்கியிருந்தன. வெட்கக் கேடுதான். எந்தக் கழுதையோ (அல்லது கழுதைகளோ) செய்யும் அற்பத்தனத்துக்கு உங்கள் மேல் கோபப்பட்டு விட்டேற்றியாக பதிலளிப்பதில் அர்த்தமில்லை. மன்னிக்கவும். சிலசமயம் – இந்த பின்னூட்ட எழவினையே மூடிவிடலாமா என்றும் தோன்றுகிறது. அல்லது என் பதிவுகளையும் நிறுத்தலாம்தான் – என் எழுத்திற்கான(!) எதிர்வினைகளாகத்தானே வெறுப்பிய எதிர்வுகள் உருவாகின்றன? யோசிக்கிறேன்.

    இந்த பாலஸ்தீன-இஸ்ரேலிய பிரச்சினை ஒரு கடினமான, பிடிபடாத பிரச்சினைதான். நான் இதில் ஒரு விற்பன்னன் அல்லன் – வெறும் பார்வையாளன் தான்.

    ஆர்ஓ தொழில் நுட்பம் – ஐடிஇ டெக்னாலஜீஸ் எனும் நான் மிகவும் மதிக்கும் இஸ்ரேலிய நிறுவனத்தினுடையது. இதன் ஒரு சில பகுதிகளை நாங்கள் உபயோகித்திருக்கிறோம். இந்தியமயமாக்கி யிருக்கிறோம் (ரிவர்ஸ் என்ஜினீயரிங்); எங்கள் பள்ளியில் ஒரு சிறு 800 எல்பிடி உபகரணமும் இதன்வழிமுறைதான். நடைமுறைப் பிரச்சினைகள் என்பவை பெரும்பாலும் இல்லை. பல பகுதிகளை நாமே ரிப்பேர் செய்துகொள்ளலாம். நடத்தும் செலவும் (ஆபரேட்டிங் காஸ்ட்ஸ்) மற்ற நாட்டு/ நிறுவனங்களை விட குறைவு.

    2006 வாக்கில் ஒரு வெற்றிகரமான திட்டம் எனப் போற்றப்பட்ட அஷ்கெலன் திட்டம் வழியாகத்தான் நான் இந்த நிறுவனத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். (http://www.water-technology.net/projects/israel/) இதன் மேலதிக விவரங்கள் – http://www.waterworld.com/articles/wwi/print/volume-28/issue-3/regulars/water-leader-focus/leading-israel-s-global-desalination-company.html சுட்டியில் உள்ள நேர்காணலில் இருக்கின்றன; இதில் இத் தொழில் நுட்பத்தின் சில முக்கியக் கூறுகள் குறிப்பிடப் பட்டுள்ளன. இப்போதைக்கு இவ்வளவு போதும். மேலதிக விவரம் கொடுப்பதில் சில ஐபிஆர் பிரச்சினைகள் இருக்கின்றன.

    நம் சென்னை (நெம்மேலி) உப்பு நீரைக் குடி நீராக மாற்றும் ஆர்ஓ திட்டம்கூட இந்த ஐடிஇ வழிமுறைதான். இதில் இப்போது பல ‘டீத்திங் ட்ரபிள்’ வகையறா ஆரம்ப காலச் சிக்கல்கள்.

    இதற்கு ஒரு விக்கிபீடியா சுட்டியைக் கொடுக்கிறேன்: http://en.wikipedia.org/wiki/Nemmeli_Seawater_Desalination_Plant (அப்பாடா! ராசியாகி விடலாமா?)

    உங்களுடைய நான்கு குறிப்புகளுக்கு – என்னிடம் ஒருவிதமான தொழில் நுட்ப ரீதியான மாற்றுக் கருத்துமில்லை; அவை சரியானவையே – அம்னெஸ்டி அகிலத்தின் காழ்ப்பு ஆவணம்தவிர; ஆனால் அரசியல், மேலாண்மை, வரலாறு ரீதியாக பல எதிர்ப்புகள் இருக்கின்றன; இவை இன்னொரு சமயம். (மாமியார் உடைத்தால், மருமகள் உடைத்தால் கதையும் + இஸ்ரேல்+யூதர்கள் மீதான அடிப்படைவெறுப்பு மட்டுமே எதிர்வினைகளின் ஊற்றுக்கண்ணாக இருப்பதும் இவற்றில் அடங்கும்)

    சேவை கீவை எல்லாம் எனக்கு ஒத்துவராத விஷயங்கள்; நான் ஒரு மேட்டிமைவாதி. எனக்குப் பிடித்ததை, ஒப்புமை இருப்பதைச் செய்கிறேன் – அவ்வளவுதான். ஒத்துவரவில்லையென்றால் ஏரக்கட்டிவிட்டு (நடுவில் அம்போ என விட்டுவிட்டு அல்ல!) வேறு பிடித்தவேலை பார்க்கப் போய்விடுவேன். ஆக நான் செய்வதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை – நீங்கள் என்னை இதற்கெல்லாம் மதிக்கவேண்டிய அவசியமேயில்லை.

    எனக்கு விக்கிபீடியா ஒத்துவராது. ஆனால், ராசியாவதற்காக – அடுத்த சில பதிவுகளில் ஒன்றிலாவது நிறைய விக்கிபீடித்து பலியிடுகிறேன்.

    நான், வா. மணிகண்டன் அவர்களின் எதிரி அல்லன். கொஞ்சம் அலுப்பு. அவ்வளவுதான். :-(

    ஒரு கோரிக்கை: நீங்கள் ஏன் முடியும்போது தமிழில் பின்னூட்டமிடக்கூடாது? தமிழுக்குத் தமிழில், ஆங்கிலத்துக்கு ஆங்கிலத்தில் என… யோசியுங்கள்.

    பின்குறிப்பு1: பியர்லேன்ட் (டெக்ஸாஸ்) எப்படி இருக்கிறது? :-)

    பின்குறிப்பு2: நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்பதை முடிந்தால் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முடியுமா? நீங்கள் ஆர்ஒ தொழில் நுட்பக்காரராக இருந்தால், சில விஷயங்களைச் சரியாகப் தெரிந்துகொள்ளவேண்டும்.

    வயதானாலும் விவேகமில்லாத:

    __ரா.

 5. Sa.Thirumalai Says:

  :)))))) நல்லா வச்சீங்க. இதையெல்லாம் இந்த இணைய தினம் ஒரு போஸ்ட் கட்டுரையாளர்களுக்கு அனுப்பும் முன்னால் தலையணை சைசில் ரத்தம் ஒரே நிறம் எலும்பு வெள்ளை நிறம் மயிறு கருப்பு நிறம் என்று எழுதும் இஸ்ரேலிய எக்ஸ்ப்ர்ட் எழுத்தாளர்களுக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும். மருந்துக்குக் கூட ஒரு யூதரைக் கூட விசாரிக்காமல் முழுப் புத்தக்த்தையும் எழுதித் தள்ளி விடுகிறார்கள். இன்றைக்கு இணைய ஃபேஷன் இஸ்ரேல் எதிர்ப்புக் கட்டுரை போடுவதுதான். ஐ எஸ் எஸ் ஆ அது வீசை என்ன விலை என்று கேட்ப்பார்கள் இந்த பாலஸ்தீனீய பாசமலர்கள்.


 6. //ஏனோ சில பல சமயம் — ஆர்வக் கோளாறினாலோ, அனுதினமும் எழுதவேண்டிய சுயநிர்ப்பந்தம் காரணமாகவோ, தினமும் எதையாவது எழுதாவிட்டால் வாசகர்கள் வரமாட்டார்கள் எனும் கருத்து காரணமாகவோ, சிறுபான்மைக்கு பெரும்பான்மைக்கு என ஏதாவது க்வோட்டா மனிதவுரிமை படையலோ — அல்லது வேறு ஏதாவது எழவினாலேயோ என்பது தெரியவில்லை – //
  மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். நான் சில மாதங்களுக்கு முன்னரே குறிப்பிட்டேன், என்ன நிசப்தம் என்ற பெயரை வைத்துவிட்டு ஒரே சத்தம் என்று! சப்ஜெக்ட்கள் ஏகப்பட்ட திசைகளில்! யாராவது பூனைக்கு மணி கட்டவேண்டும் அல்லவா! ஒத்திசைவு கட்டியிருக்கிறார்…

 7. Benhur Erode Says:

  It is his right to write what ever he wants in his blog. If you don’t like it forget it. Why you guys are jealous abt him and advise him not to write daily etc….


  • Yes I agree that he has a right and is therefore best left alone.

   However, mindless mudslinging just because one has a right for freedom of expression, begets some response – what do you think?

   And oh! Am I jealous?

   BTW, do you remember those N bad goofs in BenHur and their solemnity – especially the red little car amidst the roman chariot race, the finale? Hilarious, no? Just like our Benhur.

 8. Hema Says:

  ‘அங்க என்னம்மா சத்தம்?‘ — ‘ அட’ ,என்று ‘ நிசப்தத்தை ‘படித்த எங்களுக்கு ,அடடா , இதற்க்கு பின் இவ்வளவு உள்ளதா ..? நன்று .


 9. இந்த இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் எனக்கு சரியாக புரியவில்லை. விக்கிபீடியா, உங்களைப் போல் எனக்கும் சரிவரவில்லை. நான் நன்கு அறிந்த எங்கள் திருச்சி பக்க வரலாறுகள், விக்கியில் ஏறு மாறாக இருந்த காரணத்தால், கடந்த ஓராண்டாகவே எந்த சந்தேகத்துக்கும் செல்வதில்லை. நிற்க, இந்த இஸ்ரேல் பாலஸ்தீனம் குறித்து, யாசர் அர்ராபாத் குறித்து, சரியாக விளங்கவே இல்லை. திருமதி கோல்டா மேயர் பற்றியும் எனது எண்ணமும் நமது பத்திரிக்கைகளின் பார்வையும் வேறுபடுகின்றன. ஆகவே, இந்த இஸ்ரேல் பாலஸ்தீனம் குறித்து ஒரு, அல்லது, தொடர் எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன். பல பேருக்கு உண்மைகள் தெரிய வரும். நானும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அல்லது, ஏதேனும் புத்தகம், உண்மை விவரங்களுடன், ஆம் உண்மை விவரங்களுடன் இருந்தால், தெரியப் படுத்தினால், நான் வாங்கி தெளிவடைய உதவியாக இருக்கும். கடைசியில், நான் தங்கள் வாசகன். திடீரென பதிவுகளை ஏறக் கட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s