(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (14/n)

சாளரம் #7: தமிழர்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் வளர்ந்துகொண்டிருப்பது, அவர்கள் சிந்தனையின் / செயல்பாட்டின் ஆழமோ வீச்சோ அல்ல; உரையாடல்களின் செறிவோ அல்லது நுட்பமான வாசிப்பை அனுபவங்களோடு பொருத்திச் சிந்தனைகளை வளர்த்தெடுத்துச் செல்லும் மனப்பாங்கோ அல்ல – ஆச்சரியமே தராதவிதத்தில், ஏகோபித்து வளர்ந்துகொண்டிருக்கும் அதுவானது, அவர்களின் தோலின் கீழுள்ள வளமையான கொழுப்புசார் அடிமான அடுக்கு (subcutaneous fat) மட்டுமே!

அதாவது, நம்முடைய தோலின் தடிமன், அதனால் நாம் புளகாங்கிதம்  அடைந்து பெறும் – வெட்கம், மானம், சூடு, சொரணை சாராத  ‘தடித்தனம்’ என்பது தாங்கவொண்ணாச் சக்தியுடையது; உலகத்தில் மகோன்னதமாக எது நடந்தாலும் ‘என்னத்த பண்ணி, என்னத்த செஞ்சு’ எனப் புலம்பி, ‘நமக்கெல்லாம் இது ஒத்துவர்ராத் சார்’ என வெகு சாவகாசமாகக் குண்டி மண்ணைத் தட்டிக்கொண்டு போகவைக்கும் மனப்பான்மையை, எதனையும் கற்றுக்கொள்ளாமல் கிடந்துழலும் எண்ணப்போக்கை வளர்ப்பது இது.

இதனைப் புரிந்துகொள்வதற்கு சரியான படிமம்: ’எருமையின் மேல் மழை பெய்வதைப்போல…

-0-0-0-0-0-0-0-0-0-

நாம் தெரிந்து செய்யும் தவறுகளை, யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்கிற அசட்டுத் தைரியத்தில் செய்யும் பிழைகளை, ஒருவர் சுட்டிக்காட்டினால் அதனைக் கண்டுகொள்ளாமல், மேலும் மேலும் அதே தவறுகளைச் செய்யும் தடித்தனம். மேலதிகமாக, நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்மீது கோபம் – இதில் கோபம் என்பதை விடக் கொலைவெறிதான் அதிகம் என்பது உண்மை.

Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (11/n)

சாளரம் #5: தமிழகத்தில் பொதுவாக – மானுடப் பரிணாமம், இனம், மொழி, இயக்கம், வர்க்கம், ஜாதி, போராட்டம், கட்சி, அரசியல், அரசு போன்ற அடிப்படைகளின் மீது சரியான புரிதல்கள் இல்லை; போராட்டங்களும், இயக்கங்களும் – அரசியல் கட்சிகள் போலல்லாமல் இன்னொரு வித ஜந்துக்கள்  என்றுகூட நாம் புரிந்துகொள்ள மாட்டோம் – ஆக, கந்தறகோளங்களை நம் புரிதல்களாக அவதானித்து, மகாமகோ கர்வத்துடன், பொறுக்கமுடியாத இறுமாப்புடன் பவனி வருபவர் நாம்.

இதற்கு – தமிழ், திராவிடம், இனம் என ஆரம்பித்த தமிழ்த்தேசிய அரசியல் – பிரித்தானியக் காலனிய வேலை வாய்ப்புகளில் ஒரு சாராரே உட்புகுகிறார்கள் எனக் கருதி, இன்னொரு சாராருக்கும் பங்கு வேண்டும் என ஆரம்பித்து – பின்னர் வேறு எதற்கோ  ஆரம்பித்தோம் எனக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அதற்குப் பின்னர் திராவிட இயக்கமாய் உருமாறி – அதற்குப் பின் தேய்ந்துபோய் கட்டெறும்பு ஆகிவிட்டதும் ஒரு காரணம். (Tamil nationalistic (actually notionalistic) politics – from where it started off – hankering after colonial jobs – is now mainly indulging in the continual institutionalization of sheer lumpen stupidity.)

Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n)

அதாவது, வரலாறு என்பது முதற்சங்கத்துக்கும் முன்னால், பஃறுளியாறு லெமூரியாவில் குமரிக்கண்டத்தில் ஓட ஆரம்பித்தற்கும் முன்னால், ஏன் கல் தோன்றுவதற்கே கூட முன்னால்,  தமிழகமெங்கும் ஓடோதி ஓட்டமாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த ஒரு பண்டமிழ் ஆறு என்பதை அறிக. மேலும், அச்சமயத்திலேயே, நம் முன்னோதிமுந்தைய மூதாதைகளின் பேரரசன் அதிமுற்காலச் சோழன் – ஒன்றரையாம் கபாடபுரம் கண்டாராதித்தன் இமையம் சென்று கோவேறுகழுதைகளைப் பிடித்துக் கொண்டு வந்ததையும் மேலதிகமாக அறிக! (எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இமையம் அவர்களை இப்படி உபயோகிப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாரா?)

சாளரம் #2: பொதுவாக, நமக்கு வரலாற்றறிவு என்பது குறைவு. மிக முக்கியமாக, சமகால வரலாற்றை அவதானிப்பது என்பது இன்னமும் குறைவு.

இவ்வரிசையில், முந்தைய பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

-0-0-0-0-0-0-0-0-0-0-

ஏன்  நமக்கு வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லையென்றால், நமக்குப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ, தெரிந்து தெளிவதற்கோ சிரத்தையில்லை. நாம் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்கள் என்பதை தனிப்பட்ட முறையில், நேரடியாக அறிவேன். எப்படியெனில்,  நானும் இந்த நுனிப்புல் மேயும் ஜாதியின் பிரதம அங்கத்தினன் தான் என்பதை மட்டில்லா மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் –  என்ன இருந்தாலும் நானும்  ஒரு தமிழன் தானே! Read the rest of this entry »

முந்தைய இரு பதிவுகள்:

ஆக, மேலே (அல்லது) கீழே படிக்குமுன் நீங்கள் கீழ்க்கண்ட சுட்டிகளைப் படித்தால் நலம். (இந்த விவரணைகளுக்குப் பின்புலம்: ஸ்ரீலங்காவில் காலங்காலமான தமிழர்கள் பிரச்னை குறித்து, திடுதிப்பென்று முழித்துக்கொண்டு 2013-ல் – இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆடிய ‘போர் ஆட்டம்’ – மாணவர்கள் படித்துக் கரை  கண்டுவிட்டதால், அவர்களும் கூடச் சேர்ந்து கலந்தடித்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்!’ மேற்படி, இந்த களப்பிணியாளர்கள், போராளி, வீரசோழச்சேரப்பாண்டிய தமிழிளைஞ இத்யாதிகள், வினோத  ஜந்துக்கள் பற்றிய என் குறிப்புகள்)

-0-0-0-0-0-0-0-

சரி. வேண்டுமளவு தன்னிலை விளக்கம், முன்னெச்சறிக்கை போன்றவைகளைக் கொடுத்தாகி விட்டது.

ஆக, நம் உலகத்தை அதன் உட்கூறுகளை, அதன் ஊக்கிகளைப் புரிந்துகொள்ள – இவை ஏன் இப்படி  நடக்கின்றன, ஏன் அப்படி நடக்கக்கூடாதா, மற்ற இடங்களில் இம்மாதிரி  இல்லையே, ஏன் நாம் இப்படி  இருக்கிறோம் – போன்ற அடிப்படைக் கேள்விகளைப் பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். Read the rest of this entry »

ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்   படித்தீர்களா? (அதில் ஒரு விஷயம் எழுத மறந்துவிட்டேன் – அந்தப் பேச்சுகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன – அதாவது குறுந்தொகை + புறநானூறு குறிப்புகளைத் தவிர)

எனக்குத் தெரிந்து, மேற்கண்ட குறிப்புகளைப்  பார்த்த படித்த  இரண்டே பேர்களில் ஒருவர் எனக்கு உதவியாக இருந்த புத்தகங்களின் ஜாபிதாவைக் கேட்டிருக்கிறார். ஆக, அதனைக் கீழே கொடுக்கிறேன்; எனக்கு எப்போதுமே, ‘யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்’ தான். ;-) Read the rest of this entry »

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மது கிஷ்வர் அவர்களைப் பற்றி – சில மாதங்கள் முன்பு   என் கருத்துக்களை எழுதியிருக்கிறேன்.

அவர், சென்ற பல மாதங்களாக ( நவம்பர் 2012-லிருந்து என நினைவு) பலமுறை குஜராத் சென்று – மக்களுடன் கலந்து பேசி, அங்கேயே தங்கி ஆராய்ந்து – குஜராத் பற்றி, மோதி ஆட்சி பற்றி, சிறுபான்மையினர் பற்றியெல்லாம் அவர் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். (அதற்கு முன்னும் கூட பலமுறை சென்றிருக்கிறார்; மேலும், மிக முக்கியமாக — அவர் சிரமங்களுக்கும், செலவுகளுக்கும் வேறு எவரையும் நம்பிக் கொண்டிருக்கவில்லை; அதாவது மோதி அவர்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ – மது, ஒரு சுக்குப் பலனும் பெறவில்லை – இது பொதுவாக, நம் ‘துட்டு கொடுத்தால் தூக்கி எழுதும்’ அல்லது சிரத்தையேயில்லாமல் வெறும் அட்டைக்காப்பி அடித்து எழுதி மினுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும்!) Read the rest of this entry »

a lesson in history…

April 4, 2013

… … or in sex education (oh no!), if you will…

I have the shared the following story many times over in the past, with groups of school-going children, fellow ‘teachers’ and sometimes in the random corporate ‘training’ sessions that I have conducted – all lost in the swirling mists of the past.

Ah, the memories, sweet dreams are of course made of these!

Anyway, over to the story.

=-=-=-=-=

Many years ago – two children, siblings actually – one a 8 year old, the other 6 years of age were living in a distant suburb of Chennai – this suburb was quite close to the Meenambakkam Airport – and was more like a sparsely populated village in those days.

These children went to a happy municipality school close-by and were enjoying open spaces, clean air, safe environments… Oh those begone halcyon days of the past… Read the rest of this entry »

ஆம்.

நான் எப்பொழுதுமே ஒரு பாக்கியசாலியாகத்தான் இருந்திருக்கிறேன், தொடர்ந்தும் அப்படியேதான் இருப்பேன். எனக்குக் கிடைத்த (தொடர்ந்து கிடைக்கும்) அருமையான அனுபவங்கள்,  நிகழ்வுகள், நட்புக்கள் – எனக்கு அவைகளைப் பெறுவதற்கும் அடைவதற்கும் அருகதை இருந்ததோ இல்லையோ, இருக்கிறதோ இல்லையோ – அவை அழகானவை, வாழ்வுக்குச் செறிவூட்டுபவை; நுட்பமும், ஆழமும், வீச்சும் மிக்கவை. அசை போட அசை போட, போதையும்,  சில சமயம் மாளா துக்கமும் தருபவை…

-0-0-0-0-

ஷங்கர்தா ((1943 – 91) என எங்களில் சிலரால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஒரு மகத்தான மனிதநேயவாதி கொலை செய்யப்பட்டு 22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்று உயிருடன் அவர் இருந்திருந்தால் அவருக்கு 70 வயதாகியிருக்கும். ஃபெப்ரவரி 14 பிறந்தவர் அவர்.

ஹ்ம்ம்?  அவர் உயிருடன் இருந்திருந்தாலாவா??
Read the rest of this entry »

ஏதோ ஒன்றிரண்டு கொர்ரான் செய்யுட்களை மட்டும் படித்து விட்டு அதனையும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அரைகுறைகள் தான் இஸ்லாமின் பெயரால் அட்டூழியம் செய்வார்கள்.
— இப்ன் ரஷித் (அவெர்ரீஸ் – Averroës) (1126-1198)

என் இளமைக்கால அதிமனிதர்களில் (’ஹீரோ’க்களின் தமிழ்ப்’படுத்தல்’ தான், பயப்படாதீர்கள்) ஒருவர் இந்த இப்ன் ரஷித் – அவருடைய சமகால ஐரோப்பியர்களால் லத்தீன்மயமாக்கப் பட்டு அவெர்ரீஸ் என அழைக்கப் பட்டவர்.
Read the rest of this entry »