ஒரு உடன்பிறப்பின் எள்ளல்: “உங்களுடைய ஐஐடி-சென்னை இந்த க்யூஎஸ் ரேங்கிங்கில் இல்லையே! ஹே!” (+ கல்வி, தரம் – சில குறிப்புகள்)

June 11, 2021

உண்மை.

…ஆனால் இதை, மிகக் கஷ்டப்பட்டு பிஏ (ஆங்கில இலக்கியம்) அதிகபட்ச பெத்தபடிப்பு, அதுவும் அந்த (இப்போது பெரும்பாலும்)  குப்பை மதுரை பல்கொலைக்கழகத்தில் படித்திருக்கும் நீங்கள், எனக்குத் தெரிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களை, நான் ‘ஷேக்ஸ்பியர்’ எழுத்தாக்கம்/ஸ்பெல்லிங் சொல்லச் சொல்லிக் கேட்கவும் போவதில்லை. பின்நவீனத்துவம் பற்றியோ ஸில்வியாப்ளாத் கவிதைகளைக் குறித்தோ ஒரு கேள்வியும் கேட்கப் போவதில்லை, நம் தருமுசிவராமுவையோ பசுவய்யாவையோ அல்லது இக்கால சங்கர்ராமனையோ விடுங்கள். நீங்கள் எங்கு படித்தீர்கள் என்பதும் எனக்கு அவசியமில்லை. ஏனெனில், எனக்குத் தெரிந்து ஐஐடி-க்களில் இதுவரை பிஏ (ஆங்கில இலக்கியம்) படிப்பு(!!!!!) இல்லை எனத்தான் நினைக்கிறேன். ஹா.

ஆனால் நிமிண்டிவிட்டுவிட்டீர்கள்.

முதலில் உங்களைப் போன்ற நகைக்கத்தக்க ஆசாமிகளுடன் பொருதுவதற்குப் பதிலாக, பிற செயலூக்கம் கொண்டவர்களுடன் உரையாடலாமே எனத் தோன்றியது.

இருந்தாலும், கொஞ்சம் பலத்த யோசனைக்குப் பிறகு, உங்களுக்கு என் ஒரளவுக்கு விரிவான பதிலைக் கொடுக்கவேண்டும் எனப் படுகிறது. + உங்களைப் போலப் பலர் இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுவதாலும் தான்.

எனக்கு என் படிப்பு(!)/தொழில்(!!)  ஆண்டபரம்பரை(!!!) ரீதியான தகுதிகளைக் காட்டி மினுக்கிக் கொள்வதில், அப்பன் ஜஸ்டிஸ்பார்ட்டி திராவிடத்தனமாகத் திருடிய மிராஸ்தார் பணத்தில் படித்த (அதாவது ஒப்பேற்றிய) உங்கள் அரைகுறை ‘மூன்றாம்தர நான்காம்தலைமுறை லெஹ்மன்’ பேட்டை ரௌடிகளைப் போல – அவ்வளவு ஆர்வமில்லை. இருந்தாலும், சில விஷயங்களை உங்களுக்கும் உங்களைப் போன்ற உடன்பருப்பு அல்லக்கைகளுக்கும் தெரிவிக்கவேண்டும்.

(உங்களுடைய விடலைத்தனமான. தொடர் மின்னஞ்சல்கள் என்னை இப்படிச் செய்யவைத்துவிட்டன, என்ன செய்ய; இளைஞராயிற்றே, கொஞ்சம் முனைப்பு காண்பிக்கிறீர்களே எனப் பொறுமையாக, உங்களுடைய முதிர்ச்சியற்ற சீண்டல்களுக்குமேகூட பதில் கொடுத்தால் மிகவும் துள்ளுகிறீர்கள் – பொதுவாகவே தடிமன் தோலுடைத்த எனக்குமே பொறுமை ஓரளவுக்குத்தான் இருக்கிறது என்பது சோகம்தான்! ஆனாலும் உங்களைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு, நீங்கள் ஆரம்பநிலை ஹெச்ஆர் தட்டச்சுகுமாஸ்தா அஸிஸ்டெண்டனாக இருக்கும் ஓஎம்ஆர் பகுதி தண்ட நிறுவனத்துக்குச் சங்கடம் கொடுக்கப் போவதில்லை; கவலை வேண்டேல்!)

-0-0-0-0-

0. பாரதத்திலுள்ள வெகுசில கலாசாலைகள் இந்த (2021)க்யூஎஸ் தரவரிசையில் இருக்கின்றன. அவை:

எனக்குத் தெரிந்தே,  இந்த வரிசையில் பங்குபெற வாய்ப்பில்லாத, பாரத அரசால் அனுமதிக்கப் படாத அல்லது பங்குபெற முனைப்பில்லாத – ஆனால்  படுதரமான உயர்கல்விசார் அமைப்புகள் சில இருக்கின்றன – ஆனால், அவற்றைப் பற்றி இப்பதிவில் பேசப்போவதில்லை.

சரி. இந்த ஜாபிதாவில் ஐஐடி-சென்னை இல்லை.

நன்றாகத் தேடிப் பார்த்ததில் உங்கள் சக உடன்பருப்பான எஸ்கேபிகருணாவின் திருவண்ணாமலைக் கல்விக்கடை வ்யாவாரமும் இல்லை, துக்கத்தில் நொறுங்கிவிட்டேன்,

1. ஐஐடி-சென்னை என்னுடைய சொந்த நிறுவனம் அல்ல. எப்போதோ முப்பத்தைந்து வருடங்கள் முன் அங்கு ஏதோ படித்துமுடித்து விட்டேன், அவ்வளவுதான். மற்றபடி, ஐஐடி என்று ஒரு விஷயம் இருக்கிறது என்பது உங்களுக்கு ஒருமாதிரி குண்ஸாகப் புரிந்திருக்கலாம் எனும் சாத்தியக்கூறு, எனக்கு மாரடைப்பைக் கொடுக்கிறது. ஒருவேளை – நீங்கள் ஜெனடிக்கலி மாடிஃபைட் திராவிடரோ??

2. க்யூஎஸ் எனப்படும் க்வாக்யுரேல்லி-ஸிம்மன்ட்ஸ் கல்வி நிறுவனத் தரவரிசையை,  முந்தா நாள் மழையில் நேற்று முளைத்த காளானாகிய  நீங்கள், நேற்று புதிதாகத் தெரிந்துகொண்டிருக்கலாம்; ஆனால் எனக்கு அதனுடன் நான்கைந்து ஆண்டுகளாக அறிமுகம் இருக்கிறது. பத்துபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே அந்த நிறுவனத்தை அறிந்திருக்கிறேன்.

3. க்யூஎஸ் தரவரிசையில் ‘முதன்மை’யில் இருக்கும் மஸ்ஸாசூஸெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தின் சில முக்கியமான துறைகளுடன் சுமார் இரண்டு ஆண்டுகள் போல, நான் ஒருமாதிரி கல்வி குறித்த ஆராய்ச்சிக்கான மென்பொருள் ப்லேட்ஃபார்ம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்திருக்கிறேன்.

பாரதமளாவிய ஆயிரக்கணக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உபயோகிக்கப்பட்ட – ஒரு மாபெரும் குழுமத்தின் அறக்கட்டளை + ஒரு இந்தியப் பல்கலைகழகம் + இந்திய அரசின் மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் + சிலபல மாநில அரசுகள் (தமிழகம் இதில் இருந்திருக்கவில்லை)  + எம்ஐடி உள்ளடக்கிய கூட்டு முயற்சியின் தொழில் நுட்ப முனைவுகளுக்குத் தலைமை தாங்கி ஸிடிஓ-வாக இருந்திருக்கிறேன். ஆக, நான்  எம்ஐடியுடன் (அதன் சில மகத்தான + சில டப்பா பேராசிரியர்களுடனும், பல ஆராய்ச்சி மாணவர்களுடனும்) ஓரளவு நெருங்கியே பணிசெய்த அனுபவமிருக்கிறது.

நான் இந்த எழவைப் பெருமைக்காகச் சொல்லவில்லை, ஏதோ பெரிய மசுரைச் சாதித்துவிட்டதாகவும் பிரமையில்லை. மாறாக – நான் என்ன சொல்ல விழைகிறேனோ, அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவைக் கொஞ்சமேனும் பெற்றிருக்கிறேன் எனும் பிரத்தியட்ச உண்மையானது, உங்கள் திராவிட மரமண்டையில் புகவேண்டும் என்பதற்காகத்தான்.

4. க்யூஎஸ் தரவரிசை என்பது சுவாரசியமான ஒன்று – பொதுவாகப் பலரால் கவனிக்கப்படுவது; ஆனால் அதிலும் சிலபல குறைகள் இருக்கின்றன. இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை ஒதுக்கித் தள்ள மாட்டேன். அதன் தரவரிசையை  இஷ்டத்துக்குக் கேள்வி கேட்கமாட்டேன் – ஏனெனில், இம்மாதிரித் தரவரிசைகளில் எப்போதுமே அகவயத்தனம் / ஸப்ஜெக்டிவிட்டி இருக்கும். அதே சமயம் அவற்றிலிருந்து, பொதுவாக சிலவிஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் முடியும்.

ஆனால் – இம்மாதிரி தரவரிசைகளில் நாமும் கவனிக்கப்படவேண்டுமென்றால் இவற்றின் முக்கியத்துவத்தைச் சரியான பார்வையில் புரிந்துகொண்டு, புறவய நிலையில் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் எனப் பார்த்து ஆய்ந்தறிந்து – களையவேண்டுபவைகளைக் களைந்து, செய்யவேண்டியவைகளைச் செய்வது முக்கியம் என நினைக்கிறேன். (it is also the question/aspect of packaging oneself to meet the evaluation criteria)

மேலும், ‘எங்கும் தரம், எதிலும் தரம், அனைத்திலும் நேர்மை’ எனப் பார்த்துப் பார்த்து மாளா உழைப்பைக் கொடுத்தாலே /  செய்தாலே – இம்மாதிரி விஷயங்கள் கையெட்டும் தூரத்தில்தான் என்பதையும் நான் உணர்ந்தவன், நம்புபவன்.

மற்றபடி, நாம் இந்த இடத்தில், இன்னின்ன தரத்தில், இவ்விஷயங்களில் இருக்கிறோம் என்பது குறித்த அளவைகள், சிந்தனைகள் பற்றிய மீயுணர்ச்சி/மெட்டாகாக்னிஷன் நமக்கு இருக்கவேண்டும் – இது இருந்தால், மேலும் செயலூக்கமும் விடாமுயற்சியும் இருந்தால் விண்மீனும் கைப்படும். (நமக்கு இந்த மீயுணர்ச்சி இல்லாவிட்டால், நம் சகமானுடர்களுக்கும் திராவிட-இடதுசாரி வகையறாக்களுக்கும் வேறுபாடே இல்லை)

மேலும் – இன்னொருத்தன் சொல்லித்தான் நாம் நம்முடைய மேன்மை/போதாமைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை; வெள்ளைக்காரன் சொல்லித்தான் நாம் நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. (ஆனால், வெளி நாடுகளிலிருந்து, பிறசமூக சான்றோற்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை என நேரிடையாக நிறையவே இருக்கின்றன என்பதையும் நாம் உணரவேண்டும்)

5. அதே சமயம் நம் கல்வியின் நிலைமை பிரமாதம் என்று சொல்லவரவில்லை; இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் கொண்டுள்ள நாம், அதைவிட, மகத்தான கல்விப் பாரம்பரியம் கொண்டிருந்த நாம்,  மஹாமஹோ ஞானிகளை நம் மூதாதையர்களாகப் பெற்ற நாம்,  இக்காலங்களில் இப்படிப் பட்ட கேவலமான நிலையில் இருப்பது படு சோகம்தான்.இதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.

மேலும் இதற்காக பலப்பல வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன; இஸ்லாமும் க்றிஸ்தவமும் நம்மை ரவுண்ட் கட்டிக் கொண்டுத் தொடர்ந்து அடித்துள்ளமையும் ஒரு முக்கியமான, தலையாய காரணம்; காந்தியும் நேருவும் காங்க்ரஸும் தொடர்ந்த காரணங்கள்தாம். மார்க்ஸிய இடதுசாரிப் பேடிகள் பாடப்புத்தகங்களையும் கல்வித்திட்டங்களையும் குதறியெடுத்துள்ளதும் உண்மைதாம். நம் சமூகங்களில் உள்ள பிரச்சினைகளும் களையப்பட வேண்டும்தான்… ஆனாலும், நாம் இம்மாதிரிக் காரணங்களைத் தரவுகளுடன் சொல்லிச் சொல்லி நிறுவவேண்டிய அரசியல் அவசியம் இருந்தாலும் – அப் படுமோசமான காரணங்களைத் தொடர்ந்து உபயோகித்து, குற்றம் சொல்லி, நாம், நம் சராசரித்தனத்துக்காக முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் – இதோ ஒரு காரணம்: பாதசாரிக் கதையின் போதனை.

மேலும்: ‘நாம் கஞ்சியும் குடிக்கவேண்டும், ஏன் பாயாசத்தை உண்ணவே எத்தனங்கள் செய்யவேண்டும்; அதே சமயம்,  கடந்த காலங்களில் நாம் கஞ்சி குடிக்கமுடியாமையின் காரண காரியங்களையும் அறியவேண்டும். மறுபடியும் அந்த நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.’

6. முதலில், பலப்பல காரணங்களால் (பிறப்பு தொடர்பான ஜெனடிக்ஸ், பெற்றோர், வளர்ப்பு, குடும்பச் சூழல்,  புறச் சூழல், வாய்ப்புகள், நம் குணங்கள், கற்பனாசக்தி, உழைப்பு தொடர்பான வித்தியாசங்கள், சரியான சமயங்களில் நமக்கான சரியான திறப்புகளை நாம் கண்டடையும் திறன் ++) அவற்றின் விதம்விதமான கலவைகளால், நாம் ‘ஒருவருக்கு ஒருவர் சமானமில்லை’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்; இது ஒன்றும் கேவலமான விஷயமில்லை இதில் மேட்டிமைத்தனமும் இல்லை. நாமெல்லாம் விதம்விதமான பிரக்ருதிகள்.  இந்த விதம்விதமான விஷயங்களில் தாம் சுவாரசியம் இருக்கிறது.

ஆகவே, நாம் எல்லோரும் ஒரேபோலப் படித்து ஒரு மசுத்துக்கும் ஒரேபோல இஞ்சினீயன், பொட்டிதட்றவன், டாக்டன், உழவன், வண்டியோட்றவன், ஆசிரியன், நடிகன்/கோமாளி, எழுத்தாளன்/ஜால்ரா/கருத்துத்திருடன் என ஆகவேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரவேண்டும். பெட்டைப் புலம்பல் தேவையேயில்லை என்பதையும்.

நமக்கேற்ற கல்வியைக் கற்று, நமக்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு, பயிற்சிகளைப் பெற்று, மேன்மேலே உயர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இப்படிச் செய்யமுடிந்தாலே அது ஏதேஷ்டம்.

ஒருவனுக்கு ஒருவிதமான திறனும் வளர்த்துக்கொள்ள ஆவலில்லை அடிப்படைத் தொழில்தர்மம் இல்லை, மாறாக – அவனுக்குப் விடலைப் பொழுதுபோக்கின் மீது மட்டுமே திராவிடத்தனமான ஈடுபாடு எனும்போது — நாமெல்லாரும் இந்த அற்பசராசரி நிலையைக் கடிந்து அவனும் மேலெழும்ப உதவாமல், அதற்கு மாறாக –  ‘ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரும் மன்னர்கள், ‘மல்டிபிள் இன்டெல்லிஜென்ஸ்,’ மாற்றுத் திறனாளித்தனம், விளிம்பு நிலை, படைப்பூக்கம் விரைவீக்கம் என்றெல்லாம் புருடா விட்டுக்கொண்டு அவர்களுடைய கேவலமான சால்ஜாப்புகளுக்கு முட்டுக் கொடுப்பது அயோக்கியத்தனம்.

7. நமக்கு, எந்தவொரு தொழிலிலும், புலத்திலும் உன்னதம் என்றால் என்ன எனத் தெரியவேண்டும். அதை ஸ்பரிசிக்கவேண்டும். அதற்காகத் தொடர்ந்து உழைக்கவேண்டும். உன்னதமானவர்களைக் கண்டுகொண்டு அவர்கள் காலடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளும் பண்பு வேண்டும். சான்றோர்களை மதிக்கவேண்டும். (சரி. உங்கள் செல்ல திராவிடமும் ஒருமாதிரியான ஒரு தொழில்தாம் – ஆகவே, திராவிட உன்னதத்தின் ஒரு அம்சம் = மாட்டிக்கொள்ளாமல் பெருங்கொள்ளையடிப்பது; அதாவது வள்ளுவன் சொன்னதைப் போல, “களவு மட்டும் கற்று ஒழுகு.” ஆகவேதான் நீங்கள் கருணாநிதி ஸ்டாலின் ஈவெரா போன்ற உங்கள்தர அயோக்கிய ஆசிரியர்கள் காலடியில் நக்கிக்கொண்டு, அவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக உங்கள் முன்பக்கவால்களை ஆட்டிக்கொண்டிருக்கிறீர்கள்)

நமக்குச் செய்நேர்த்தியும் அதுகுறித்த நியாயமான பெருமிதமும் வேண்டும். தொடர்ந்து முனைந்து கதவுகளை உதைத்துத் திறந்து முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும்.

8. ஸோஷலிஸ்ம் என்பது ஒரு மாயை என்பதற்கு அப்பாற்பட்டு – அறிவியல் ரீதியாக அதற்கு, இப்பிரபஞ்சத்தில் இடமில்லை என்பதை உணரவேண்டும். அது பேடித்தனம் + சோம்பேறித்தனத்தையும்  பொருளற்ற வன்முறையையும் நோக்கி இட்டுச் செல்கிறது என்பதை உணரவேண்டும்.

+திராவிடம் என்பது அடிப்படையற்றது, பேடித்தனமானது என்பதையும்.

+ நம்மிடையே  பரிணாம ரீதியான அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

9. கிராமத்துக்குக் கிராமம் – தெருவுக்குத் தெரு அறிவியல்-கணித-தொழில் நுட்ப க்ளப்கள் வளரவேண்டும்; சிறு வயதிலிருந்தே, நம் பிள்ளைகளுக்கு ‘கையால் செய்துபார்க்கும்’ மேக்கிங்/டிஐவை திறன்களை ஊக்குவிக்க வேண்டும்.

அதே சமயம், தயவுதாட்சணியம் பார்க்காமல் களையெடுத்தல் நிகழவேண்டும் – எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் இருக்கும் விதம்விதமாக பேடிகல்விமாமாக்கள் நடத்தும் கல்விசாலை எழவுகளில் குறைந்தபட்சம் 90% இழுத்து மூடப்பட வேண்டும்.

தொழில் முனைவுகளுக்கு எந்தவகையிலும் உதவாத (ஏன் இடையூறு மட்டுமே தரும்) கல்வி(!)களை களையெடுக்கவேண்டும். கவைக்குதவாத பிஏ, பிகாம், எம்ஸிஏ, எம்பிஏ, சமூகவியல்++ போன்றவற்றைத் தலையைச் சுற்றி விட்டெறியவேண்டும். பின்னர் பிற பலவற்றையும்.

நேர்மையாக உழைத்துச் சம்பாதித்து உண்ணவைக்கும், தொழில்முனைவுகளை முன்னெடுக்கும் தொழிற்கல்விகளை ஊக்குவிக்க வேண்டும்.

பாரத அளவிலேயே – நம் தமிழகத்தில்தாம் தண்டக் கருமாந்திர எம்ஃபில், குப்பை பிஹெச்டிக்கள் விகிதாச்சார ரீதியில் அதிகம். கறாரான தர அளவுகோல்களை வைத்து, இம்மாதிரி தண்டங்களை ஒழிக்கவேண்டும். இம்மாதிரிப் புளுகல் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபட்டு நம் வரிப்பணத்தைக் கரியாக்கி உளறி மீதமிருக்கும் நம் பெருமைகளையும் அற்பத்தனத்துடன் சிதைக்கும் புல்லுருவி முட்டாட்களைச் சிறையில் தள்ளவேண்டும். காயடிக்கவேண்டும்.

குமாஸ்தாத் தொழில்களும் சிலபல இயந்திரரீதியாகச் செய்யப்படும் வேலைகளும் பல, மேன்மேலும் கணிநிமயமாக்கப்படும். நெட்வர்க் வலைப்பின்னல்களுக்குட்படுத்தப்படும். இயந்திரமயமாக்கப்படும் ஆகவே, சாதாரண குமாஸ்தா தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பசுந்தாள் உரமாக்கப் படவேண்டும். (அதே சமயம் புதிய குமாஸ்தா தொழில்களும் உருவாகும் – இணைய எழுத்தாளர் வேலைபோல)

10. பாடப் புத்தகங்களை எலக்ட்ரானிக் மயமாக்கவேண்டும்; ப்ளாக்செய்ன், இன்டர்நெட்  போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் திறமைக்கும் அபிலாஷைகளுக்கும், சாதிப்புக்கும் ஏற்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கல்விப்பாதையை அமைத்துக் கொடுத்து, சரியான ஆச்சாரியர்களுடன் கோர்த்துவிடப்பட்டு – அதன் சாதனைகளைச் சரியாக மதிப்பிடமுடியவும் வேண்டும். தொழில்முனைவோர் இப்படியாப்பட்ட, தரமான குடிமக்களை அள்ளிக்கொண்டு போக வரிசையில் நிற்கவேண்டும்.

இடஒதுக்கீடுகளுக்கு அவசியமேயில்லாமல் – அவரவருக்கு உரிய ஆத்மார்த்தமான வாழ்க்கை வாய்ப்புகள் கிடைக்கவேண்டும்.

புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும். இன்றுவரை இல்லாத வேலைகளும் திறமைகளும் எதிர்காலங்களில் உருவாகும், தேவைப்படும் என்பதை நோக்கி நம் திட்டங்களும் செயல்பாடுகளும் இருக்க வேண்டும்.

11. அதற்கு – தொழில்முனைவுகளையும் வேலைவாய்ப்புகளையும் சாத்தியமாக்கும், செயலூக்கம் கொண்ட ஒரு பெரும் இளைஞர் திரளை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு வேண்டுமென்கிற பயிற்சியும் வாய்ப்புகளும் (நிதி, அறிவுரை++)  கிடைக்கப் பெறவேண்டும்.

12. சரி. இப்போது நல்ல விதைகளைத் தெரிவுசெய்து, உழுது நட்டு களையெடுத்து உரமிட்டு  என்றெல்லாம் பலதிசைகளிலும் செயல்பட ஆரம்பித்தால் – என் வாழ் நாளுக்குள்ளேயே விஷயங்கள் சாத்தியப்படும், நம் பாரத சமூகக் கனவுகள் மெய்ப்படும் – இதற்கு அதிக பட்சம் 20-30 ஆண்டுகள் எடுக்கலாம்.

களையெடுப்பு மிகவும் முக்கியம்.

13… (எழுதிக் கொண்டே போகலாம், ஆனால்…)

14. நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம். அதுவும் சிடுக்கல் நிரம்பிய பாதைகளில் பயணம் செய்யவேண்டும். ஆனால் தூரத்தில் தெரிகிறது… மலையுச்சி விளக்கு ஓளிர்கிறது. (அதை அடைந்தபிறகு இன்னொரு மலையுச்சி விளக்கு தெரியும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை)

15. பாண்டிச்சேரி அரவிந்த ஆஸ்ரமத்தின் அன்னை மிர்ரா அல்ஃபாஸா ஒருசமயம் சொன்னதுபோல, நமக்குத் தேவை… (“Progress, endless Progress”)

“முன்னேற்றம்… முடிவிலா முன்னேற்றம்…”

-0-0-0-0-

எனக்குத் தெரிந்தே – தேவையற்ற இடையூறுகளும் கொடிபிடித்துக் கூவுதல்களும் இல்லாமல் இருந்தால், உலகத் தரத்தை அடுத்த பத்தாண்டுகளில் சிலபல துறைகளில் எட்டும் நிலையில், குறைந்த பட்சம் 20-25 கல்விசாலைகளாவது, நம் பாரதத்தில் உள்ளன. ஏன், இந்த க்யூஎஸ் ரேங்கிங் எழவுக்குள்ளும் அவை வரமுடியும். (தமிழகத்தில் அப்படிப்பட்ட சில நிறுவனங்கள் இருக்கின்றன)

ஆனால் நம் தேச அளவில்… நமக்கு, அப்படியாப்பட்ட பல்லாயிரம்+ நிறுவனங்கள் வேண்டும். அவை இதுவரை நாம் வளர்ந்தரீதியில் தழைக்கவேண்டுமென்றால், அதற்கு 100-200 ஆண்டுகளாவது பிடிக்கும்.

மாறாக – வளரும் தொழில் நுட்பங்களை வைத்துக்கொண்டு, ஹைப்ரிட் வகையில் 1) இருக்கும் ஓரளவு தரமான நிறுவனங்களை மேம்படுத்துவது 2) அடிக்கட்டுமானங்களைப் புத்துருவாக்கம் செய்வது என ஆரம்பித்தால்… கறாரான அளவுகோல்களுடன், குப்பைகளை (எடுத்துக்காட்டாக, சமூக அறிவியல் போன்ற சூப்பர் தண்ட ‘துறைகள்’) இரக்கமில்லாமல் அகற்றி… தயவு தாட்சணியம் இல்லாமல் உன்னதங்களை மட்டுமே ஆராதித்துத் தொடர்ந்து போஷகம் செய்ய ஆரம்பித்தால், சுமார் 25-50 ஆண்டுகளுக்குள்ளாகவே நாம், நம் வளர்ச்சியில் பெருமையடைய முடியும் எனத்தான் நினைக்கிறேன்.

வேகமய்யா, வேகம்

–0-0-0-0–

கடைசியாக. இளம் திராவிடப் பருப்புக்கு சில வாக்கியங்கள்.

. ஐஐடி-சென்னை இந்த க்யூஎஸ் ரேட்டிங் வரிசையில் இல்லை. அதற்கான காரணங்கள் பல. ஆனால் அந்தக் கல்விசாலை அற்பமானது அல்ல; எனக்குத் தெரிந்தே, அங்கே பல தரமான, ஜொலிக்கும் ஆசாமிகள் இருக்கிறார்கள். (அவர்களில் ஒருவர், எனக்குத் தெரிந்தே, தமிழிலும் எழுதும் பாவத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இன்னொருவர், அங்கு ஒருகாலத்தில் படித்தவர்தாம், வேலை வெட்டியிலாமல் தமிழகத்தின் மேன்மைக்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்)

அங்கு பல ஜொலிக்கும் முனைவுகளும் இருக்கின்றன, ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. ஆனால்… எனக்குத் தெரிந்தவை பற்றி எழுதக் கூட எனக்குச் சக்தியோ நேரமோயில்லை. (எழுதினாலும் படிப்பவர்கள் அதிகமில்லை என்பது வேறுவிஷயம்)

என்னைப் பொறுத்தவரை, வெறும் க்யூஎஸ் தொடர்பாக என்று மட்டுமில்லாமல், ஏன், வெளியாட்கள் கொடுக்கும் சான்றிதழ்களைப் பற்றிக் கவலையே படாமல் தொடர்ந்து, இம்மாதிரி நிறுவனங்கள் மேலேமேலே கதவுகளை உதைத்துத் திறந்துகொண்டு முன்னேற வேண்டும்.

இன்னமும் பல நிறுவனங்கள் இம்மாதிரிப் புற்றீசல் போலக் கிளம்பவேண்டும். பெரிய அளவில் தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபடவேண்டும்.

. இன்னமும் காலம் கடந்துவிடவில்லை; உங்களுக்கு முப்பதுவயது போலத்தான் – இந்த திராவிட ஜால்ராவை விட்டுவிட்டு, பாப்பான்-பனியா-மார்வாடி என ஒன்றும் புரியாமல் உளறுவதை ஒழித்து – உங்களுடைய புண்ணாக்குத் தகுதியான பிஏ தண்டத்தை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு – உருப்படியாக ஏதாவது தொழிலைக் கற்றுக்கொண்டு தொழில்முனைவு செய்து ஜொலிக்கவும்.

உங்களைப் போன்ற இளைஞர்கள், வெறும் வெட்டி குமாஸ்தாக்களாக இருக்கவேண்டிய அவசியமோ, அல்லது உங்கள் ஆற்றாமைகளைத் தொடர்பேயில்லாமல் ஒரு சிறு சிறுபான்மை மக்கள்திரளின்மீது குவிக்கப்பட்ட வெறுப்பாக மடைமாற்றிக் காட்டவேண்டிய கீழ்மையோ அவசியமேயில்லை, சரியா? (எனக்கு உங்களிடம் கோபமில்லை – கொஞ்சம் வருத்தம்தான், ஆனால் பரவாயில்லை; நீங்கள் பொலிந்தால் மகிழ்வேன்; சுணங்கிப் போராளியானால், அதற்காக என்னால் மண்டையில் தட்டமுடியவில்லையென்றால் லூஸ்லவுடுவேன்)

நீங்கள் சிலபல கவிதைகளை ‘பார்வைக்காக’ அனுப்பி, என் உடல் நிலையைப் பாதித்திருக்கிறீர்கள் என்பதால் சொல்கிறேன்: களங்களில் ஒரு முடியையும் செய்யாமல் ஒன்றையும் ஆக்கபூர்வமாக அணுகாமல், உட்கார்ந்த இடத்தில் இருந்து குசுவிடுவது போன்ற குமாஸ்தா எலக்கியம்  கவிதை அட்டவணைதயாரித்தல் கதைகளைவரிசையிடுதல் போன்ற விஷயங்களைச் செய்வது படுசுலபம். உங்களைச் சுற்றிப் பாருங்கள் – தடுக்கி விழுந்தால் கவிஞர்கள்தாம். ஆகவே, இந்த சராசரித்தன டைம்பாஸ்களை விட்டுவிடுதலையாகி உண்மையாகவே சாதிக்க வாழ்த்துகள். பின்னர் உங்கள் விருப்பம்.

. உடன்பருப்புக்கு இன்னொரு ஆலோசனை: உங்களுக்கு இன்னமும் கோப-நக்கல் மனப்பான்மை இருந்தால்……முதலில் – எஸ்கேபி கருணா எனும் உங்கள் சகஉடன்பர்ப்பு நடத்தும் உதவாக்கரை தண்டக்கருமாந்திர எஸ்கேபி கஞ்சினீயரிங் கல்லூரியை இந்த க்யூஎஸ் தரவரிசையில் முதல் பத்துகோடி எண்ணிக்கைகளுக்குள் கொண்டுவர முயற்சிக்கவும்.

கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் முயற்சி செய்வினை ஆக்கும்.

பின்னர் பார்க்கலாம்.

(இந்தக் கல்லூரி(!)யைப் பற்றி முன்னமே சிலபலமுறை எழுதியிருக்கிறேன்; என் பிள்ளைகள் சிலர் அங்கே படித்துச்(!!) சீரழிந்தது எனக்கு இன்னமும் பொறுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்!)

நன்றி.

பிறபின்.


17 Responses to “ஒரு உடன்பிறப்பின் எள்ளல்: “உங்களுடைய ஐஐடி-சென்னை இந்த க்யூஎஸ் ரேங்கிங்கில் இல்லையே! ஹே!” (+ கல்வி, தரம் – சில குறிப்புகள்)”

  1. Mouli Says:

    IIT Madras-இன் Shakti போன்ற விஷயங்கள் எவ்வளவு பெரியவை என்றே பலருக்குப் புரிவதில்லை. சென்ற வருடம் Varahamihira Science Forum-இன் யூட்யூப் நேரலை நிகழ்ச்சியில்தான் தெரிந்துகொண்டேன். இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்திக்கான தன்னிறைவை அடைவதில், இது எவ்வளவு பெரிய முன்னெடுப்பு! மிகச் சிறிய தொடக்கம்தான் இருந்தாலும், இதன் பலன் ஒருநாள் தெரியவரும்போது எவ்வளவு ஆனந்தம் அளிக்கக்கூடியது.


    • நன்றி; இந்த விடியோவை நான் பின்னொரு சமயம் பார்க்கிறேன்.

    • Muthukumar Says:

      கண்டிப்பாக. இந்தியா மென்பொருள் துறையில் வளர்ந்ததுபோல – சாதித்தது என்ற வார்த்தையை தவிர்க்கிறேன் – செமிகண்டக்டர் / வன்பொருள் துறையில் ஏன் அதிகம் வளரவில்லை அல்லது அது குறித்த செய்திகள் அதிகம் வருவதில்லை என்பது பெரிய மனக்குறை.

      இந்த சக்தி மைக்ரோ ப்ராஸஸர் அதை தீர்த்தது. அதுவும் அதை சாதித்தது நம்மூர் IIT என்பது இன்னொரு மகிழ்ச்சி.

  2. dagalti Says:

    And just as importantly

    படிப்பிடம் ஒரு வாழ்நாள் டிக்கெட்டும் அல்ல.

    உத்தமமான பாளையக்காரர் படித்த செம்பள்ளியில், அவர் சமூகம் முன்செல்ல, பின்னே வந்து, சிறுகுளப் பெருஞ்சேலாகத் திகழ்ந்து பொலிந்து, அவையத்து முன்நின்றோமும் கூட, பிறகு குவியமின்றி காலிடறி, வாரநாள் மதியத்திலும் இங்குழலும் ஏழரையோமாக மட்டுமே நின்றுவிடமும் வாய்ப்புள்ளது.

    இதை ‘இன்னும் பஸ்சைத் தவறவிடாத’ இளையோருக்குக் கரிசனத்துடன் சொல்லவேண்டும்.


    • “வாரநாள் மதியத்திலும் இங்குழலும் ஏழரை”

      ‘இங்குழலும்’ என்பதை எனக்கு வசதியாக இங்கு குழலும் எனப் பதம்!(!)பிரித்து அதனை ‘ஈங்கு வந்து குழலிசைக்கும்’ என விரித்துக் கொள்கிறேன்.

  3. RC Says:

    பதிவுக்கு நன்றி.🙏
    /தமிழகத்தில் அப்படிப்பட்ட சில நிறுவனங்கள் இருக்கின்றன/ அந்த பட்டியல் பகிர்ந்தால் உபயோகப்படும் ஐயா.


    • Thanks for asking:

      https://www.cmi.ac.in/

      https://www.imsc.res.in/

      https://www.iitm.ac.in/

      https://www.imu.edu.in//

      Apart from the above, there are a few departments from a few institutes/univs which definitely have promise. But, there is NO single university – deemed or doomed – that can actually be called an University in TN. This is the state of our State.

      All these are my personal opinions – so ymmv.

      Not that other establishments cannot catch up – but, it is just that I know of only many negative examples as of now.

      (we talk so much about our ‘history’ and ‘glory’ and what not – but though we have very fine historians, bloody good ones (like A Ramachandran, Y Subbarayalu, R Nagaswamy et al) there is NO great school/inst of History in TN. But look at the fantastic Deccan College and its history related departments. It is one of the finest Institutes of history in the world even: https://www.dcpune.ac.in/)

      Anyway; hope you find this desultory list useful.

      • Muthukumar Says:

        வெறும் நாலு மட்டுமா ? அதுவும் மத்திய ( ஒன்றிய அல்ல )
        தமிழன் என்று சொல்லடா , தலை குனிந்து நில்லடா


      • ஐயா, என்ன செய்வது – இதுதான் உண்மை நிலவரம் அல்லது கலவரம், எனத் தோன்றுகிறது அல்லவா?

        ஆனால் மூன்று விஷயங்கள்:

        1. நான் கொடுத்துள்ள ஜாபிதாவில் உள்ளவைகளில், அவற்றின் ஆசிரியர்கள்+மாணாக்கர்கள் சிலபலருடன் உரையாடியிருக்கிறேன்,  நிறுவனங்களுக்குச் சென்றுமிருக்கிறேன். அதனால்தான் அவற்றை தெகிர்யமாகக் குறிப்பிட்டேன்.

        ஜாபிதாவில் இல்லாத பலப்பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன், சிலபல ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் பேசியிருக்கிறேன். அங்கங்கு அத்திபூத்தாற்போல சில மணிகள் இருக்கிறார்கள்; ஏன், ஏழரைகளிலேயே மீயறிவும் கரிசனமும் ஞானமும் உடைய ஒரு இளைஞர் (பேராசிரியர் ஆசாமி – அறிவியல் துறை) இருக்கிறார்.  ஆனால் இவர்கள் தனிமனிதர்கள், ஜொலிப்பு அவர்களுடைய குணாதிசியம் –  அவர்கள் நிறுவனங்களால் போஷகம் செய்யப்படவில்லை.

        ஆக, நான் கொடுத்திருக்கும் ஜாபிதா ஒருமாதிரி ஸப்ஜெக்டிவ்/அகவயமானது எனச் சொல்லலாம்.

        2. என் சிற்றறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டாமல் – சிலபல நல்ல கல்வி நிறுவனங்கள் சர்வ நிச்சயமாக இருக்கலாம்கூட.

        யாராவது  (தாங்கள் உட்பட) அவைகுறித்துத் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன்; ஸாஸ்த்ரா நிறுவனம், ஆர்ஈஸி-திருச்சி, விஐடி போன்றவைகளில் உள்ள சில ஆசிரியர்களை (+மாஜிகளை) அறிவேன் – அவர்களும் முனைப்புடன் இருப்பதாகத்தான் படுகிறது. ஒரு சில மாணவர்களும் அப்படி இருக்கிறார்கள் – ஆனால் அவர்கள் அனைவரும் விதிவிலக்குகளே. எங்கு இருந்தாலும் அவர்கள் பொலிவார்கள்.

        அவர்களையும் நிறுவனங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளமாட்டேன்.

        3. எல்லா நிறுவனங்களிலும் சராசரிகள், கழித்துக் கட்டப்படவேண்டியவர்கள் என இருக்கிறார்கள்; அந்த ஆனானப் பட்ட எம்ஐடி (பாஸ்டன்) எழவில் கூட அவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என நேராகவே கண்டு களித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர். தொடர்ந்து களையெடுக்கப் படுதல் அங்கு ஒருமாதிரி சாத்தியம்.

        ஒரு நிறுவனத்தில் படித்ததினாலேயே, பணி செய்வதினாலேயே ஒருவர் டப்பா/ஜொலிப்பவர் எனச் சொல்லிவிடமுடியாது – ஆனால் பொதுமைவெளியில் அப்படிக் கருதிக் கொள்ளலாம்.

        ஆனால் டப்பா உதவாக்கரை துறைகள்(!) இயல்கள் (எகா: சமூக அறிவியல் வகை) எனச் சில சர்வ நிச்சயமாக இருக்கின்றன; அவை எங்கிருந்தாலும் ஆயிரம்புண் வகைதாம்.

        -0-0-0-

        சரி. பிரச்சினைகள் இருக்கின்றன.  அவை குறித்து நம்மால் என்ன செய்யக்கூடும், சொல்லுங்கள்..

  4. RC Says:

    Thanks🙏

  5. dagalti Says:

    சமூக அறிவியல் துரைகள் ஏற்படுத்தும் எரிச்சலால், துறைகளையே கழித்துக்கட்டினால் இதையெல்லாம் (தோராயமாக அல்லாமல், கறார்த்தன்மையோடு) ஆய்ந்தறிவது எங்கனம்?

    தண்டு (STEM) , இலக்கியம், வரலாறு தவிர மீதத்தை எல்லாம் கலந்துகட்டி, ஒழிபியல் துறையாகவேனும் ஒன்று இருக்கவேண்டாமா?


    • ஐயா, நன்றாகக் கேட்டீர்கள்.

      1. சமூகவியல் என்பது அறிவியல் அல்ல. ஆகவே சமூக அறிவியல் என்பது ‘மாட்டிறைச்சி சாப்பிடும் வெஜிட்டேரியன்’ எனும் அற்புதத்துக்கு ஒப்பானது.

      2. //கறார்த்தன்மை

      இது சமூகவியல் போன்ற நானாவித விஷயங்களில் துளிக்கூட இல்லவேயில்லை.

      3. தண்டுவியல்களை எடுத்துத் தண்டால் செய்வது போதும். பிற விஷயங்களிலும் கறார் தன்மை இருந்தால், குறைந்த பட்சம்  ‘எனக்கு இது தெரியாது, இப்போதைக்கு அட்ச்சிவுடுகிறேன்’ என ஒப்புக் கொள்ளமுடிந்தால், ‘என் தவறுகளைத் திருத்திக் கொள்கிறேன்’ என்றிருந்தால் – அவையும் பரவாயில்லை.

      பிற தண்டற்ற, தண்டக்கருமாந்திரங்களும் கூடவே, ‘புல்லுக்கும் ஆங்கே பொழியுமாம்’ என இருக்கட்டும், வளரட்டும். பிரச்சினையில்லை.

      “யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவந்தால் எல்லாம் சௌக்கியமே!”

      • dagalti Says:

        தண்டுமுதன்மைவாதம் போற்றத்தக்கதே.
        ஆனால் தண்டொன்றே போதும் எனும் போக்குதான் பிறதுறைகளில் அறிவுநோஞ்சான்கள் நிறைந்தோங்கி, துறைகளையே தேய்ந்துபோகச் செய்யக் காரணம் என்பேன்.

        பிறதுறைகளில் கறார்த்தன்மை வேண்டின், அதிலும் மெய்யார்வம் , ‘சிறுகுள பெருமீனாகிவிடலாம்’ என்ற மூளைச்சோம்பல் குயுக்தியின்மை, நல்லூக்கம் கொண்ட மாணவர்கள் புகவேண்டும் அல்லவா?

        இரண்டாம் தர minds புகுந்து, துறையாக்கிரமித்து பெரும்பம்மாத்து செய்து அடுத்த தலைமுறையை அறுவடை செய்யும் இழிவும் ஆபத்தும் இங்கு தானே அதிகம். தண்டுதுறைகளின் இயல்பான நிரூபணவத்தாதால் (அனேகமாக) எளிதில் பம்மாத்து ஆசாமிகள் கண்டுபிடிக்கப்பட்டு, வெளியே பத்திவிடப்படுவர்.

        மாறாக இங்கே காலிடப்பாவாகவே வாழ்வோட்டி, எமரிடஸ் புரபசராகவும் வழிவகையுண்டு.

        Somewhat leaning on your flowchart/map you posted sometime back, I’d add தண்டிலாத் துறைகளில், மெய்யார்வம் இருப்பவர்கள் புகவேண்டும்.

        For instance Sheldon Pollock – I do know some folks have reservations with him – often rues about the serious dearth in good classical scholarship in a country that has a wealth of texts which have yet to be explored and maybe lost for good without strong native scholarship.

        Beyond a point can we even blame the skewed, bad-faith-driven scholars from Le Occident who descend on us, when we hardly pull our weight?

        The proverbial engineer with a mid-life crisis suddenly re-reading classics from the misspent days of his traditional youth and grasping at straws now to fill for his quasi-spiritual lacunae and holding forth on podcasts is all very well. But that is not scholarship.

        Just picking an example of a field here.
        Not even saying this is an exclusive Indian phenomenon.

        Enrigouring the fields isn’t going to happen if we encourage almost all capable minds away from them.


      • Sir, I understand where you are coming from.

        However, ‘rigor’ can NEVER be a part of Social Studies because, these kinds of ‘knowledge’ are not assumed to be as per the basics of science (or even any realm of knowledge) such as reproducibility/repeatability, predictability & enumeration of falsification criteria.

        The point that I am trying to make, I think, is – a given field, attracts its level of requisite scholarship. Snakeoiloloy will only invite such vendors.

        As for Sheldon Pollock, he is correct to some extent, but OTOH, he does not consider a shastrain sanskrit scholar, his equivalent. And then, he goes on to lament or shed crocodile tears depending on one’s PoV.

        All said and done, sire – surely there should be some other mechanism (than this comment pingpong) to discuss threadbare, a bunch of thingies, to sort of them out etc.

        (I perfectly understand the need for anonymity, bordering on paranoia – as it takes one to know one)


  6. […] – and is annoyed and disappointed with me, because of certain points-of-view expressed on the blog – please check out the comments section […]

  7. தீராவிடன் Says:

    உடன்பருப்பே, தமிழகத்தை தீராவிட நிலமாக்கி நபும்சகப் பயிர்வளர்க்கும் நமது கலகச் செயல்திட்டத்தை நீ மறந்திட்டாயா? எங்கும் எதிலும் மேன்மையைத் தேடித்தேடி வேரறுக்க உறுதி பூண்டிட்டோமே, அதற்கெதிராய் நீ நடப்பதேன் சோமபானச் சோமாறியே? கணிசமாகக் கவனிக்கப்பட்டாயா அல்லது கன்னிகையைக் கவர்வதற்காய் கபடநாடகமிட்டிட்டாயா?

    காரணம் எதுவாயினும் இந்தியத் தொழில்நுட்ப கழகத்தின் பெயரை நீ உச்சரிக்கலாமா? கயமைகளின் பிறப்பிடமாம் நம் கலகக் கிணற்றினிலே வீழ்ந்தழியும் தவளைகளாய்த் தமிழர்களைச் செய்திட்டோமே, அதைத் தாண்டியும் உலகம் உண்டென்று உரைத்தல் உனக்கழகா உடனிறப்பே? பெரும்படிப்பு படித்த பேராசிரியர்கள் பலருக்கே இப்பெயர்கள் தெரியாமல் வைத்திருந்தோமே, இப்போது பிறரை மட்டம் தட்டுவதாய் நினைத்து கலகத்தின் மர்மப்பிரதேசத்தைத் தாக்கிவிட்டாயே, இனி வாழ்வே மாயம்தானோ?

    ‘ஏனடா பேடிகளே, இப்படி இடங்களும் இங்குள்ளதை மறைத்து தீராவிடச் சகதியிலே ஊறித் திரியும் விலங்குகளாய் எங்களை மாற்றும் தொழிலையா இத்தனை காலம் கல்வி என்ற பெயரில் செய்து வந்தீர்கள்?’ என எவரேனும் இனி கேட்டால் என்ன பதில் சொல்வது? ‘நீங்கள் கொள்ளையடித்துக் கொழுத்து பிறரைக் காயடிப்பதற்காய் நடத்தும் தீராவிடக் கலவிக்கூடங்கள் இந்தியத் தரப்பட்டியலின் தலைகீழ் முதலிடத்தையாவது இன்னும் ஓராயிரம் ஆண்டுகளில் தொடக்கூடுமா கலவிமாமாக்களே?’ எனக்கேட்டு மிதியடிகளால் நம் முகங்களைச் சீரமைக்கத் துடிப்போரை எதிர்கொள்வதெப்படி?

    தீராவிட மாயாவாதத்தில் நேர்மைக்கும் உழைப்புக்கும் மேன்மைக்கும் கிஞ்சித்தும் இடமில்லையென அறிந்த நீ அதன் எதிர்துருவத்தில் நின்று கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவு ஆகிய தளங்களில் காத்திரமான பங்களிப்பை வழங்கிவரும் கல்வி நிறுவனங்களின் பெயரை இனி ஒருபோதும் உச்சரிக்காதே. சித்தம் தெளிந்த தமிழன் எவனாவது இவ்விடங்கள் குறித்து கேட்டால் ‘அங்கெல்லாம் நம்மைச் சேர்க்கமாட்டார்கள், அத்தனையும் பார்ப்பனச்சதி’ என்ற ஒற்றை மந்திரத்தை ஓதிப் பிழைக்கும் வழியைப் பார் மு க பணியாளனே, உண்மைக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தமென்பதை நீயறிய மாட்டாயா?


    • ஐயா, நன்றி.

      சிலபல சமயங்களில் எனக்கு நிதான(மு)ம் தவறி விடுகிறது. என்ன செய்ய. வயதானாலும் விவேகம் இல்லை, வெறும் வடிவேலுவம்தான். (ஐயோ! வடிவேலுவமும் ஒரு இயல்தாம், அவருடைய நகைச்சுவையிலிருந்தும் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய, என்ன செய்ய)

      மற்றபடி உங்கள் அராஜகத்தைப் படித்துச் சிரித்தேன், அழுதேன். (அப்படியே இருந்தாலும் உங்களைப் போன்றவர்களும் தமிழ் நாட்டில், அதுவும் தரமான கல்வியை நோக்கித்தானே பயணம் செய்துகொண்டிருக்கிறீர்கள்? இது ஆசுவாசம் தருவதுதான்.)

      எதுஎப்படியோ. நம் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்வோம். மன நலத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s