திமுகவின் தமிழகமும் ஒரு ஓன்றியம்தான்! இல்லை, அது ரெண்டியம்… இல்லையில்லை, அது கூறுகெட்ட ரெண்டுங் கெட்டானியமோ… ஐயோ! கடைசியில் அது பல்லியம்! :-(
June 8, 2021
1
India is an Union of States, of course – but, our dear TN is an Onion of a State!
Actually, it should be called an ‘OnionTerritory!’ (பதிவு தமிழ்லதாம்மே! பயப்டாம படீ! கொஞ்சம் நீளம் தாஸ்தீ, 2600+ வார்த்தேங்கோ… அத்தொட்டு கொஞ்சம் ஸாவ்காஸ்மா படி, ஸர்யா? வர்ட்டா கண்ணூ??)
ஆகவே அந்த வெங்காயத்தை, உருட்டியுருட்டி உரித்துக்கொண்டே இருக்கலாம்…
(…கடைசியில் ஒன்றும் மிச்சம் இருக்காது, வெறும் திராவிடம் எனும் வெற்றிடம்தான் இருக்கும்)
தமிழகத்தின் இக்கால முதலையமைச்சர், முக இசுடாலிர், அக்காலத்திலேயே அமர்க்களமாக, இந்தத் திராவிட வெற்றிடத்தைக் குறித்துச் சொல்லியது போல: “A vacuum is filed as it is cried.”
அதாவது:
ஹொஸூர், க்ருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் பிரிந்து உடனடியாகக் கர்நாடகாவுடன் ஐக்கியமாகின்றன. வேலூர் திருவள்ளுர் சென்னை மாவட்டங்கள் ஆந்திராவுடன் இணைகின்றன – இதனைத் தொடர்ந்து, பெரும்பாலான திமுக கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் ஆந்திராவுக்குக் குடிபெயர்கின்றனர்.
குமரிமாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பகுதியுடனும் கரூர் (இது சேரர்கள் தலை நகராக இருந்தது!) வட்டாரத்துடனும் – கேரளத்தில் ஏகமனதாக இணைகிறது. கொங்குப் பிரதேசப் பகுதிகள் தனிமாநிலமாகின்றன. நான்கு-ஐந்து தலைமுறைகளாக மதுரையைச் சேர்ந்த பகுதிகள் அனைத்தும் தனியாகப் பாண்டிய நாடாகின்றன. பாண்டிச்சேரியும் பாண்டிய நாட்டோடி இணைகிறது.
கீழக்கரை நாகூர் பகுதிகள், சென்னை திருவல்லிக்கேணி ஆயிரம் விளக்கு ஏரியாக்களின் பகுதிகள், கோவையில் கோட்டைமேடு பகுதி, ஆம்பூர் பிராந்தியம், திண்டுக்கல் போன்றவை பாகிஸ்தானுடன் இணைகின்றன. திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகள் ஸ்ரீலங்காவுடன். திருச்சி வட்டாரம் பாளையங்கோட்டை சாந்தோம் தூத்துக்குடி வேளாங்கண்ணி பகுதிகள் வத்திகான்/வாடிகள் கடுகுடன் க்றிஸ்தவ தாளிப்பு செய்யப் படுகின்றன.
நீலகிரி மலைப்பகுதிகள் ஸ்விட்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலைச்சாரல்களுடன் ஒருங்கிணைக்கப் படும். காவிரிக்குக் குறுக்கே பேரணைகள் கட்டப்பட்டு, அதன் அனைத்து நீரும் கர்நாடகமே அதன் தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளும்.
மிச்சம் இருக்கும் சொற்ப பகுதிகள் அந்தந்த வட்டாரப் பெரும்பான்மை ஜாதிகளுக்குள் கூறுபோட்டுக்கொள்ளப்படுகின்றன.
கடைசியில், அதிகபட்சம், அந்த பிலிம்காட்டும் டீவிஸீரியல் எழவாளப் பிச்சைக்காரப் பொறுக்கிகளின் கோடம்பாக்கம் பிராந்தியம் மட்டுமே (அதிலும் வடபழநி இருக்காது – அது மட்டும் கொங்கு நாட்டோடு ஐக்கியம்) தமிழகமாக எஞ்சியிருக்கும். நன்றி.
இவற்றில் ஒரு நல்லவிஷயம் என்னவென்றால்… எப்படியும் பாரதத்தைப் பீடித்த சனியான திராவிடத் தமிழகம் அகன்றது என நாம் அனைவரும் மகிழ்வடையலாம்.
…பிரச்சினை என்னவென்றால்: நம் செல்ல, கூறுகெட்ட மூன்றாம்தர திராவிட நான்காம் பரம்பரை தண்டக் கருமாந்திர லெஹ்மன் லெபக்குதாஸ் அலப்பரைகளுக்கு நன்றியுடன், தமிழ் இனவாதத் திரியாவர ஐஏஎஸ் குண்டர்படைகளுக்கு வெச்சிக்கறேன் ஒரு ஸலாமுடன் – இப்படியேபோனால் – நம் தீராவிடத் தமிழகம் சுக்கு நூறாக ஜாதிஜாதியாக பகுதிபகுதியாக ஒவ்வொரு இடத்திலும் உடைந்து – பல்வாறு பல்வகைகளில் மேலதிகமாகச் சிதைந்து, ஒரு மாதிரி ‘பல்லியம்’ எனவாகி, ஈயென்று இளிக்கும் நாள் தொலைவில் இல்லை.
(தமிழக ஒன்றியம் –>> தமிழகப் பல்லியம் ஆக ஆரூடம் (தகத்தகாய தமிழனின் ஒரே அறிவியல்பூர்வமான சங்ககாலக் கையேடான கௌளி சாஸ்திரம் வழியாக) கூறும் தமிழ்ப்பல்லி செம்பல்லி…)
2
ஸ்ரீமான் பக்ஷிராஜன் ‘பிஏ க்ருஷ்ணன்’ அனந்தக்ருஷ்ணன் அவர்கள், தமிழகம்-ஒன்றியம் என்ற தற்கால திராவிட ஜன்னிவேகப் பைத்தியக்காரத்தனமான உளறல்களை (ஆதார திராவிடதிராபை உளறல்: “இந்தியா ஒரு ஃபெடரேஷன் – அது ஒரு யூனியன்; ஆகவே மாநிலங்கள் அவற்றின் விருப்பத்துக்குத் தாராளமாக அகன்று கொள்ளலாம், பிரிந்து போகலாம்!”) அலசி, கூர்மையுடன் ஆனால் எளிமையாக – நம் அனைவராலும் (அதாவது என் ஏழரை ரெவலில்) படித்துப் புரிந்துகொள்ளைக் கூடிய வகையில் (அதாவது மோதி-ஹிந்துத்வர்களை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கரித்துக்கொட்டாமல், பிராம்மணர்களைப் பொறுக்கி என விளிக்காமல், பௌத்தம்சரணம் கிச்சாமி என ஆன்மிகரீதியில் அறிவுரைக்காமல், நாஜி பஜ்ஜி ஸொஜ்ஜி என்று பொங்கல்படையல் வைக்காமல்) – அதாவது நான் மிகத் தெளிவாகச் சிடுக்கலில்லாமல் எழுதுவது போலவே, எழுதியிருக்கிறார், பாவம்; இவற்றுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்க நினைப்பதற்கு அப்பாற்பட்டு, அவர் எழுதியிருப்பது மிக முக்கியமான கட்டுரை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
தமிழின் மீது உண்மையான பற்றும், பாரதம் குறித்த கரிசனமும், திராவிட திமுக பேடித்தனம் குறித்த மாளாஅவமானமும் படும் தமிழர்கள் அனைவரும் அவசியம், பெரியவரின் கட்டுரையைப் படிக்கவும்.
படித்துவிட்டீர்களா?
இதில் அவர் சொல்லாமல் லூஸ்ல வுட்ட விஷயங்களையும் குறிப்பிடவேண்டும்.
ஏனெனில் – யூனியன் கீனியன் பிரிவினை செய்வினை எனப் பேசுவதற்கு முன் – நம் திமுக திராவிடத் தமிழர்களுக்கு, அதனைப் பற்றிப் பேசுவதற்குக் கூட அருகதை இருக்கிறதா, வீரதீரச் சவடால்களை அவிழ்த்துவிடுவதற்கு அரும்பு மீசையாவது முளைத்திருக்கிறதா எனப் பார்க்கவேண்டும், அதற்கு ஏதாவது முகாந்திரம் இருக்கிறதா என ஆராயவேண்டும்…
முதலில், நம்முடைய ‘உலக வரலாற்றிலேயே மிகமிக மிகப்பெரிய’ மேலும் அங்கிருந்தும் இங்கிருந்தும் மானாவாரியாக வெட்டியொட்டப் பட்ட ‘அரசியல் அமைப்புச் சட்டம்’ வெண்முரசு பதிப்பில் ஏகப்பட்ட, அரசியலமைப்புக்குத் தேவையற்ற விஷயங்கள் அதிகமாக இருந்தாலும் – மிக முக்கியமான விஷயங்கள் அதில் இல்லை; எடுத்துக்காட்டாக – அதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள பல கலைச்சொற்களுக்குப் பொருளோ, வரையறையோ அல்லது வியாக்கியானமோ இல்லை. இது ஒரு அதிர்ச்சியளிக்கும் விஷயம், ஆனால் உண்மை. சொதப்பல்ஸ்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின் சேர்க்கப்பட்ட ஸெக்யுலரிஸ்ம்/மதச்சார்பின்மை, ஸோஷலிஸ்ம் போன்ற முன்னுரை/ப்ரியாம்பிள் தொடர்பான எழவுக் கலைச்சொற்களையே விடுங்கள். நம் காப்பி-பேஸ்ட் அரசியலமைப்புச் சட்ட கிலோமீட்டர் நீள ஆவணத்தில் minority/சிறுபான்மை, union/மத்தியம், untouchability/தீண்டாமை, religion/பந்த்/மதம் போன்ற பல முக்கியமான விஷயங்கள் விளக்கப் படவேயில்லை; இதனாலேயே ஒர்ரே குழப்படி. ஒரு முக்கிய மசுரையும் விளக்காமல் மேன்மேலே கதைத்துக்கொண்டே போயிருக்கிறார்கள், பாவிகள் – கான்ஸ்டிட்யூஷன் எழுதியவர்கள்…
எடுத்துக்காட்டாக என்னைப் பொறுத்தவரை, ஏன் நம் சமூக அமைப்புக் கட்டமைப்புகளின் படி – பாரதத்தின் ஒவ்வொரு ஜாதியும் ஒரு மைனாரிட்டிதான். கோவில்களின் கிட்டவே அரசு வரக்கூடாது. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் – பீமராவ் ராம்ஜியார் இந்த யூனியன் ஆனியன் விஷயம் குறித்து முழ நீளத்துக்குப் பேசியிருக்கிறார் – ஆனால் இதில் எந்த ஒரு சிறுமுடியும் சட்டத்திலோ அதன் விளக்கத்திலோ இல்லை – ஆனால் தேவையற்ற பல விஷயங்கள் இருக்கின்றன. யார்யாருக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம், தேவையா?
பீமராவ் ராம்ஜி ஆம்பேட்கரார் அவர்கள் சொன்னதன் ஒருமாதிரி சாராம்சம் என்னவென்றால்:
இந்தியாவிலிருந்து எந்த ஒரு மாநிலமோ அல்லது நிலப் பரப்போ பிரிந்தே போக முடியாது. மாநிலங்கள் என்பவை மேலாண்மை செய்வதற்காகப் பிரிக்கப்பட்டவை. அவ்வளவுதான்.
இத்துடன் இப்பதிவை ஏரக்கட்டியிருக்கலாம். ஆனால், தமிழக திராவிடப் போலிகளை, முதுகெலும்போ கொட்டையோயற்ற பேடிகளை – நாம் இனம் கண்டுகொள்ளவேண்டும். ஆகவே.
அதற்கு முன்னால், பெரியவர் வியாசத்தில் ஒரு சிறு திருத்தம்.
பிஏகிருஷ்ணன் அவருக்கே உரித்த பண்புடன், ‘திராவிடக் குஞ்சுகள்’ என மிகுந்த மரியாதையுடன் எழுதியிருக்கிறார். மாறாக, ‘கொட்டை நசுக்கப்பட்ட திராவிட விசிலடிச்சான் குஞ்சாமணிகள்’ என அதிகபட்ச மரியாதையுடனும் கரிசனத்துடனும் சாலச்சிறந்து எழுதப் படுவதே சரியானது.
மேலும் திராவிடர்களை, வெறும் ‘கோமாளிகள்’ என்றெல்லாம் வேறு வேண்டாவெறுப்பாகப் புகழ்ந்திருக்கிறார், பொறுக்கிக் கூவான்கள் எனப் பரிவுடன் சொன்னால் குறைந்தா போய்விடுவார்? எனக்குக் கோபம்கோபமாக வருகிறது; எது எப்படியோ… இனிமேலாவது பெரியவர் தன் தவறுகளைத் திருத்திக் கொள்கிறாரா பார்க்கலாம்.
3
சரி.
பாரதத்திலிருந்து தமிழகம் தனியாகப் பிரிந்து, சிற்றின்பச் சுயமைதுனம் செய்து கொள்வது நடக்காத காரியம் என்பதற்குப் பலப்பல வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
ஏனெனில், தமிழர்களாகிய நாம் பலவகைகளில், பிறரால் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறோம், பிறர் உதவிகளைப் பலமுறை அணுகியிருக்கிறோம், பிற மக்கள்திரளினர் நமக்காக மிகுந்த சிரத்தையுடன் முனைந்திருக்கிறார்கள் – ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.
நாம் இயற்கையான பாதுகாப்பு அரண்களால், தமிழகத்தின் வடக்குப்பகுதி அரசுகளால் பாதுகாக்கப்பட்டதை , பிற ஹிந்துக்களால் காக்கப்பட்டதை அறிந்தோமில்லை. மாறாக – மேலும், நாம் பலவிதங்களில் பேடித்தனமாகவும் சொதப்பியிருக்கிறோம், கோழைத்தனமாக ஒடியிருக்கிறோம்; முதுகெலும்பில்லாமல், கொட்டை நசுக்கப் பட்டவர்களாக ஆனந்தமாக இருந்திருக்கிறோம் – தொடர்ந்து இப்படியே இருக்கிறோம்வேறு.
நமக்கு நாம் இப்படியெல்லாம் பேசப்படுவது ஒத்துவரமாட்டாது என்றால் பிரச்சினையில்லை, ஏனெனில் நமக்கு தடித்தனம் அதிகம் – ஆனால், அவை உண்மைகள் என உணர்ந்தால், குறைந்த பட்சம் பாரதத்துக்குக் கடுகளவேனும் நன்றியுடன் இருந்தால் போதும்…
எது எப்படியோ… அக்காரணங்களில் சிலவற்றைக் கீழே பார்க்கலாம். (குனிந்து பார்த்துக்கொள்ள முயலவேண்டாம். உங்கள் தொப்பை தடுக்கும்; மேலும் நான் இந்த பதிவின் இப்பகுதியின் ‘கீழே’வைக் குறிப்பிட்டேன்; ஏடாகூடமாகப் புரிந்து கொள்ளாதீர்கள்!)
1. நம் தமிழர்களுக்கு, அவர்களுடைய படுபீதியளிக்கும் வீரம்தீரம் போர்ப் பாரம்பரியம், மறவம், பெண்டிர் பண்டாரம், மழபுலவஞ்சி, உழபுலவஞ்சி, ஆநிரை கவர்தல் + அல்குல் தேடுதல், கொங்கை கொண்ட மங்கைக்கு என் சங்கே முழங்கு போன்ற சாண்டில்யத்தனமான நல்விஷயங்கள் எல்லாம் நிறைய சங்க இலக்கியங்களில் இருக்கின்றன. அதற்குப் பின்னரும்தாம்.
இவையெல்லாம் நல்ல புனைவுகள் தாம், ஒப்புக் கொள்கிறேன். எனக்கும் அவற்றைப் படித்தால் புல்லரிப்பு ஏற்பட்டு, உடனடியாகப் போர்க்காலரீதியில் யாராவது போக்கத்த நோஞ்சானை ரெண்டு மொத்து மொத்தி, வெற்றிவாகை சூடிக்கொள்ளலாம் என முனைந்தால், எந்த மயிராண்டி என்னிடம் தோற்க ரெடியாக இருக்கிறான், சொல்லுங்கள்?
ஆக, நம்மைப் பற்றிய பலப்பல வரலாற்றுகால வீரப் பிரதாபங்கள், அவை பிரதாபங்கள் மட்டுமேதாம்.
2. ஆதிகாலத்தில் – 700-800 ஆண்டுகளுக்கு முன்புவரை – நம் சேரர்கள் சேர்ந்தும் பாண்டியர்கள் பாண்டியாட்டமாடியும் சோழர்கள் சோழி வைத்தும் களம் கண்டு விளையாடியிருக்கலாம்; முறை வைத்துக்கொண்டு – ஒருத்தனுக்கு எதிராகப் பிறர் அணி சேர்ந்து களம் கண்டு வளம் குலைத்து தங்களுக்குத் தாங்களே கீர்த்திகீர்த்தியாகப் புகழ்பாடி கல்வெட்டிக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால்…
(சரி. கிண்டலுக்கு அப்பாற்பட்டு, கடந்த காலங்களில் நம் தமிழகத்தில் நடந்துள்ள பலவிஷயங்கள் நாம் பெருமிதம் கொள்ளத் தக்கவை தாம் – குறுந்தொகை+, கம்பராமாயணம், பக்தி இலக்கியங்கள், கோவில்கள் உட்பட மகத்தான உட்கட்டுமானங்கள், விவசாய அபிவிருத்திகள், வணிகம், பாரதப் பண்பாட்டுக் கூறுகளைப் பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்லல்… … இன்னபிற.
ஆகவே, என்னிடம் வந்து சோழபல்லவபாண்டிய சேரகளப்பிரநாயக்கச் சேதுபதிப்பாளையத்தார் கடையேழு வள்ள மன்னர்கள், மாலெட்டு மம்பட்டியான்கள் எனப் பேசிக்கொண்டு வரவேண்டாம்; நானும் அதிகமில்லை – ஆனால் வேண்டிய அளவு தமிழவரலாறு படித்திருக்கிறேன்! நன்றி!!)
ஆனால்.
3. என்னவோ மௌரிய/அசோக காலக் கல்வெட்டு சாஸனம் இரண்டில் (பொதுயுகம் முன் மூன்றாம் நூற்றாண்டு காலம், எண் 2 + 13) சோழர்கள் பாண்டியர்கள் கேரளபுத்திரர்கள் பற்றிய செய்தி இருக்கிறது, வெற்றிவேல் வீரவேல் என்கிறார்கள். ஆனால், மௌரியர்கள் தமிழகத்தை வெல்லமுடியவில்லை என்கிறார்கள். நல்ல முஷ்டிமைதுனம்.
கொஞ்சம் மேலோட்டமாகப் படித்தாலே, இதற்குக் காரணமாகப் பலவிஷயங்கள் இருந்திருக்கின்றன – கல்வெட்டுகளில், இந்த தமிழ் பிராந்தியங்கள், பிறபல சிறு நிலப்பரப்புகள் போலவே ‘தர்மத்தால்’ வெல்லப்பட்டன’ என்றுதான் வருகிறது – மௌரியர்கள் போரிடவில்லை, உண்மைதான்; இருந்தாலும்… அ) அசோகக் கல்வெட்டுக் காலகட்டங்களில் பெருமளவில் மௌரியப் படையெடுப்புகள் நின்றுவிட்டன ஆ) பெரும் படைகளையே வென்ற மகத/பாடலிபுத்திரச் சக்ரவர்த்திக்கு நம் தமிழகக் குறுநிலப் பரப்பைச் சார்ந்த சிறுகுறு நில மன்னர்கள் எல்லாம் எம்மாத்திரம் இ) படையெடுப்பு நிகழவேண்டுமென்றால் அதற்கான வரிவசூலிப்புரீதியான காரணங்கள், இயற்கைவளம், வணிகத்துக்கு வழி என்றெல்லாம் இருக்கலாம்; ஆனால் நம் பண்டைய தமிழகத்தில் இருந்த சிற்றரசர்கள் எப்போது பார்த்தாலும் ஒருவரோடு ஒருவர் பொருதிக்கொண்டே இருந்த வகையினர் – எவன் வேலியில் போகும் ஓணானை மடியில் விட்டுக்கொள்வான், சொல்லுங்கள் ஈ) அசோகனின் 2+13ஆம் கல்வெட்டுகளில் – பாண்டிய சோழ கேரளபுத்திரர்களின் நாடுகளில், மௌரிய அரசானது – மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மருத்துவமனைகளைக் கட்டியதாகத்தான், மூலிகைவனங்களை அமைத்ததாகவும் + சாலையோரத்தில் மரங்களை நடுதல், தாகசாந்திக்காகக் கிணறு அகழ்தல் என்றெல்லாம் செய்ததாகவும் வருகிறது. இதனால் என்ன தெரிகிறதென்றால் – பிற பாரதப் பரப்புகளில் இருந்து உதவி பெற்றுக்கொள்ளும் நிலையில்தான் அல்லது பிறர் தம் நிலப்பரப்பில் என்ன செய்தாலும் கேட்கமுடியாத சங்கடத்தில்தான் (&/ நிதிக்காரணம் /& பேரரசினை எதிர்க்க பயம் /& மருத்துவத் தொழில்நுட்ப வசதியின்மை /& ஹிந்து தர்மத்தின் மாண்பு) நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள்; ஆனால் இது பெரிய விஷயமில்லை – பாரதம் முழுக்க அச்சமயத்தில் ஏறத்தாழ இதே நிலைதான் இருந்திருக்கிறது.
4.பாரதத்தின் வடமேற்கில், சிலசமயங்களில் தற்போதைய மஹாராஷ்டிர மேற்கிலுமேகூட- ஏறத்தாழ பொ.யு 8ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து, விட்டுவிட்டுப் பலவாறும் இஸ்லாமியப் படையெடுப்புகள் நடந்தேறிய வண்ணம் இருந்தன; அப்போதைய, அங்கிருந்த ஹிந்து அரசுகள் அந்தக் கொலைவெறி ஜிஹாதிகளின் படையெடுப்புகளுக்கெதிராகப் போராடி வந்தன. அந்தப் போர்களால் நாம் பாதிக்கப் படவேயில்லை. அதற்கெல்லாம் நாம் ரத்தம் சிந்தவேயில்லை. பாதுகாப்பாக இருந்தோம்.
மாறாக – சாளுக்கியர்கள் வடக்கே ஜிஹாதி குண்ட அரேபியர்களுடன், காலிஃபேட்டுடன் போரிட்டுக்கொண்டிருந்தபோது, தெற்கேயிருந்து நம் பல்லவர்கள் அதே சாளுக்கியர்களைப் போட்டுத் தாக்கிக்கொண்டிருந்தனர். மகிழ்ச்சி.
5. பொதுயுகம் பதினொன்றாம்-பனிரெண்டாம் நூற்றாண்டுகளில், பாரதத்தின் பல வடக்கு, வடமேற்கு, மேற்குப் பிராந்தியங்களில் ஏகப்பட்ட ஸுல்தானிய அட்டூழியங்கள் மதமாற்றங்கள் ஹிந்துபடுகொலைகள் நிகழ்த்தப் பட்டவண்ணம் இருந்தன. கஸ்னாவின் ‘கஜினி’ மொஹெம்மத் படையெடுப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன.
அச்சமயங்களில் நம் ராஜேந்திரசோழன், ஓடிஷா ஆந்திரப் பகுதிகளின் நண்பர்களுக்கு உதவி செய்வதிலும், பிற தமிழகப் பகுதிகளை அடக்கியாள்வது போன்ற விஷயங்களிலும் வங்கப் பிரதேச எல்லைக்குச் செல்வதிலும் கடல்வழி வணிகவழிகளை ஸ்திரப்படுத்துவதிலும் மூழ்கி இருந்தார். அரசின் உபரி அதிகரிக்க, அதிகரிக்க – அதனை வைத்து அக்காலச் சோழர்கள் பல பெரிய கட்டுமானங்களையும் அழகுகளையும் வடிவமைத்து ஸ்தாபித்தனர். நல்லது.
ஆனால் (இதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை) ப்ரதிஹாரர் இன்னபிறர்களின் பிரச்சினைகள், வட பாரதத்தில் நடந்துகொண்டிருந்த விஷயங்கள், அடாவடி இஸ்லாமை நிறுத்துவது குறித்தெல்லாம், இஸ்லாம் வெற்றிபெற்றால் நாமும் அழிவோம் என்றெல்லாம் நம் சோழர்களுக்குத் தெரிந்திருந்ததா எனப் புரியவில்லை. (ஆனால் – அதெல்லாம் நடுவில் இருப்பவர்களுக்கும் எல்லை அரசர்களுக்கும் தான் பிரச்சினை, நமக்கெதுக்கு வம்பு என நம்மவர்கள் லூஸ்ல வுட்டிருக்கலாம் கூட!)
எது எப்படியோ – அடாவடி இஸ்லாமுக்கு எதிராக அப்போதைய தமிழகம் ஒரு சுக்கையும் செய்யவில்லை. மேலும் வடமேற்கு-மத்திய-வட பாரதத்துக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த அழிவுகளால் பாதிக்கப் படவும் இல்லை; முக்கியமாக தமிழகம்சார் அரசுகள் – பிற, நடுவில் இருந்த பாரத அரசுகளால் காப்பாற்றப் பட்டன எனவே சொல்லலாம். ஆகவே நமக்கு பிஸினெஸ் அஸ் யூஷுவல்.
ஜாலிலோ ஜிம்கானா.
6. பாண்டியர்களுக்குள்ளே வாரிசுப் பிரச்சினைகள் வந்தபோது தமக்குள் அவற்றைத் தீர்த்துக்கொள்ளாமல், இலங்கை அரசிடமும், கன்னட ஹொய்ஸாளர்களிடமும் உதவிக்கு ஓடிய காலகட்டங்கள் அரங்கேறின.
அதற்கு முன்னரே, சோழ வம்ஸாவளி நேரடி ஆண்வாரிசில்லாமல் இருந்தபோது, ஒடிப்போய் வேங்கி சாளுக்கியர்களிடம் இருந்து கடன் வாங்கியதும் — இதற்கு முன்னர் பல்லவர்கள் வம்ஸமற்றுப்போனபோது கீழை நாடுகளில் இருந்து பல்லவ வம்சத்தினராகக் கருதப்பட்ட ஒரு இளைஞனைக் கடன்வாங்கியதும் நடந்தன. (சொல்லப் போனால் – பல்லவர்கள், சோழர்கள் அனைவரும், தெலுங்குபேசும் போர்க் குழுக்களில் அல்லது மக்கள் திரட்களிடமிருந்து உதித்தவர்கள்தாம் என்பது ஒருமாதிரி பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்)
மேற்கண்டவற்றுக்கும் முன்னர், சுமார் 300 ஆண்டுகள், தமிழகத்தில் என்ன நடந்தது என மிகப் பெரிய அளவில் சான்றுகள் இல்லை. ஆனால் ‘களப்பிரர்’ திகில் இருந்தது என நம் போக்கற்ற உளறாற்றாளர்கள், பெரிதாக ஆதாரமே இல்லாமல், தொடர்ந்து உளறிவருகிறார்கள் – இந்தக் களப்பிரர்களால் தமிழ் வளர்ச்சி பாதிக்கப்பட்டது(!) எனவேறு ஒரு கூக்குரல்; தமிழ்க் குலம் கிமிழ்க்குலம் என பெத்த பேச்சு பேசுவார்கள் – ஆனால் சில நூற்றாண்டுத் தேக்கத்துக்குத் தங்களைக் காரணமாக்கிக்கொள்ளாமல், அடிப்படைக் காரணகாரியங்களை ஆராயாமல், கற்பனையாக இன்னொரு வில்லனைக் காரணம் சொல்வார்கள்! கபோதிகள்; இன்றளவும் இந்த ‘வில்லன்’ சித்திரிப்பு என்பது தொடர்ந்து வருகிறது.
(மேற்கண்டவற்றுக்கு ஆதாரங்கள் (நேரடி/மறைமுக) இருக்கின்றன, ஆனால் அவற்றைக் கொடுக்கவில்லை; என்ன சொல்லவருகிறேன் என்றால் – எப்போதுமே, தமிழர்களாகிய நாம் பிறருக்குக் கடமைப்பட்டிருந்திருக்கிறோம் என்பதும் – மாறாக, அதற்கு நாம் ஒரு அடிப்படை நன்றியை கூடச் செலுத்துவதில்லை என்பதும்தான்!)
7. மேலும் – பதினாலாம் நூற்றாண்டில் ஆரம்பித்து ஸுல்தானிய மங்கோலிய முகலாயப் படையெடுப்பாளர்கள் படையெடுத்து வந்தபோதெல்லாம் நம் மூவேந்தர்கள், முன்னேற்றக் கழகம் வைக்கவில்லை, அவர்கள் வழித்தோன்றல்களும், கல்தோன்றி மண்தோன்றாக் காலங்களிலிருந்தே தான்தோன்றித்தனமாக உள்ளுக்குள்ளேயே ஒருவரை எதிர்த்துப் பிறர் உள்ளடி உள்குத்து வேலைகளைச் சிரமேற்கொண்டு செய்தவண்ணமிருந்தனர். ஆகவே, படு பிஸி.
ஆகவே மாலிக்கஃபுர் உலூக்கான் போன்ற இஸ்லாமிய ஜிஹாதிகள் தமிழகம் வரை படையெடுத்து வந்தபோதும் அவர்களுக்கெதிராகப் பெரிய அளவில் பொருத முடியவில்லை. இதற்கும் அவர்களுக்கு, ஓரளவு ஹொய்ஸாளர்கள் போன்றவர்களின் உதவி தேவைப்பட்டது.+ தங்கள் உள்ளடிக் கலகங்களில் கட்சியும் ஆதரவும் சேர்த்துக்கொள்வதற்கும்.
8. பின்னர் பலகாலம் விஜய நகர் அரசுக்கு நன்றியுடன் (ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய குண்டர்களுடன், பாஹ்மனி வகை ஸுல்தான்களுடன் பொருதிக் கொண்டிருந்ததால், அக்குண்டர்கள் தமிழகம் வரை வரமுடியவில்லை) நம் தமிழரசர்கள், குறு நில மன்னர்கள் மகிழ்ச்சியோடு உள்ளடிவேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.
மதுரை ஸுல்தானிய காலகட்டங்களில் நடந்த அராஜகங்களை எதிர்கொள்ள, நம் செல்லத் தமிழக மன்னர்களுக்கு விஜய நகரப் பேரரசின் இளவரசர்களில் ஒருவரான கம்பண்ண ராயரின் உதவி தேவைப்பட்டது. சொல்லப்போனால் – அன்று கம்பண்ணர் மதுரை ஸுல்தானை ஒழித்திருக்கவில்லை என்றால், இன்று நாமெல்லாம் ஜிஹாத் செய்துகொண்டிருப்போம்.
சரி. பின்னர் விஜய நகரப் பேரரசுக்கும் ஒருமாதிரி அடிபணியும் நிர்வாகிகளாக இருந்தனர். பாளையக்காரர்கள் தோன்றினர். காவல்காரர் முறையும் பெரிதாக வளர்ந்தது.
9. பின்னர் மொகலாய அரசு வலிமை தாழ்ந்துகொண்டிருந்த காலங்களில் மராத்தியர்கள் தமிழகத்தைக் காத்தனர். அவர்கள் வழி வந்த நாயக்கர்களும் தஞ்சாவூர், மதுரை பகுதிகளில் அரசாண்டு, தமிழர்களைக் காத்தனர். மொகலாயர்கள் க்ஷீணித்த நிலைக்கு (ஔரங்க்ஸெப்பின் கடைசி வருடங்களில்) தள்ளப் பட்டபோது பல சிறு ஸுல்தானியங்களும் நவாப் பகுதிகளும் கிளம்பின – ஹைதராபாத் நைஸாம்களில் இருந்து ஆர்காட்டு நவாபுகள் உட்பட.
ஆனால், ஆர்காட்டு நவாப், ஹைதரலி, திப்பு ஸுல்தான் போன்ற வரிவசூலிப்பு வெறியர்கள், ஜிஹாதிகளுக்கு எதிராக, நம் தமிழகத்து நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்து துன்புறுத்தியவர்களுக்கு எதிராக – நம் அக்மார்க் தமிழர்கள் ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. ஆனால் ஒரளவுக்கு நாயக்கர்கள் எதிர்த்தனர்.
‘வேங்கடம் முதல் குமரி வரை’ எனப் பெத்தபெச்சு தமிழகப் பேச்சு பேசுபவர்களால், ஆர்க்காட்டு நவாப்புகள் அநியாயத்துக்கு திருப்பதி கோவிலைச் சூறையாடியதைக் கேள்வி கேட்கத் துப்பில்லை.
ஆனால் இதற்கும் மராத்தியர்கள் தாம் உதவினர். அவர்கள் திருப்பதியை — இஸ்லாமிய நவாப் படையினருடனும் ஆங்கிலேயர்களுடனும் போரிட்டுக் கைப்பற்றிக் கோவில் நிர்வாகத்தைச் சரிசெய்தனர் (இதைப் பற்றிய ஒத்திசைவு குறிப்புகள்: Did the Marathas ‘attack’ the Tirupati Temple in 1759? 07/11/2019 – பின்னர் இவையெல்லாம் ஆங்கிலக் கும்பெனி பக்கம் சென்றது ஒரு சோகக்கதை)
ஆகவே இஸ்லாமிய ஜிஹாதி வெறியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பலப்பலவாறு தமிழகத்துக்கு (தமிழக் குறுநில அரசர்கள், தலைவர்கள் அக்காலங்களில் பெரும்பாலும் தண்டக் கருமாந்திரங்கள்) உதவியவர்கள் பிற, தமிழர்களல்லாத பாரத மக்கள்திரட்களே.
10. இந்தக் காலகட்டத்தில் – தமிழகத்துத் தமிழர்களுக்கு – பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், அதேபோன்ற டேனிஷ், ஃப்ரெஞ்ச் நிறுவனங்களுக்கும் மதமாற்றிப் பாதிரிகளுக்கும் குற்றேவல் செய்யவேண்டிய சொகுசு நிலைமை வந்தது. நன்றி.
தஞ்சாவூர் நாயக்கர்களும் மதுரையினரும்கூட அப்படியும் இப்படியும் அல்லாடினார்கள்.
பின்னர் ஆங்கிலக் கும்பெனி வெறியுடன் வளர ஆரம்பித்தபோது அதனை எதிர்த்துப் போராடிய பலரில் ஒருவர் வீரபாண்டியக் கட்டபொம்மன், தெலுங்கு வம்சாவளியினர். மருது சகோதரர்கள் இருந்தார்கள் – ஆனால் அவர்களுக்கும் பெரிய அளவில் மலையாளப் பகுதிகளும் (கேரளத்தின் சிற்றரசர்கள்), கன்னட- மராத்தியர்களும் (கோபால்ராவ் போன்றவர்கள்) ஏகத்துக்கும் முட்டுக் கொடுத்தனர். அதே சமயம் பிற தமிழ்ச் சிற்றரசர்கள் (சேதுபதி போன்றவர்கள்) ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்தனர். சந்தோஷம்.
11. க்றிஸ்தவ மதமாற்ற மிஷநரிகளுக்கு பட்டுக்கம்பளம் விரித்த பாரதப் பகுதிகளில் தமிழகமும் வங்காளமும் தலையாயவை; இவர்களுடைய ஆகாத்தியங்களுக்குப் பெரிய அளவில் (ஏன் சிறிய அளவில் கூட) எதிர்க்க முடியாத க்ஷீணித்த நிலையில்தான் தமிழர்கள் இருந்தார்கள். புறநானூற்று வீரம்.
எதிர்ப்புகள் எனச் சில சான்றோர்களிடம் இருந்து எழும்பின, இலங்கையிலும் இப்படியாப்பட்டவர்கள் இருந்தார்கள் – ஆனால் நிறுவன ரீதியான காத்திரமான எதிர்கொள்ளல் இருந்திருக்கவில்லை.
பணக்காரத் தமிழர்கள் வெள்ளையனுக்கு எடுபிடி மிராஸி வேலைகளில் பொலிந்தார்கள், தலைமையோ ஆதரவோ அற்ற போர்ஜாதியினர் மழுங்கடிக்கப் பட்டனர், குற்றப் பரம்பரையினராக்கப்பட்டனர்; வணிகத்திலும் நிதிவிஷயங்களிலும் பேர்பெற்ற ஜாதியினர் தொழிலில் முன்னேற வெளி நாடுகளுக்குச் சென்றனர், கல்வி புகட்டுபவர்கள் சடங்குகளில் ஆழ்ந்தார்கள், நலிந்தார்கள். உள்நாட்டுக் தொழில்கள் (சேலம் நகரில் இருந்து பொலிந்த புகழ்பெற்ற இரும்பு/கத்தி உருவாக்கும் தொழில் உட்பட) நலிந்தன… விவசாயம் பெரிதாக விரிவாக்கம் செய்யப் படவில்லை, பல விவசாயிகள் கிர்மித்யாக்களாக, கொத்தடிமைகளாக – ஃபிஜிக்கும் மொரீஷியஸ்ஸுக்கும், தென்னாப்பிரிக்கா-கீன்யா-உகாண்டாவுக்கும், ஸுரினேமுக்கும், ஸ்ரீலங்காவுக்கும், மலேஷியாவுக்கும் சென்றனர்; அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளைக்கார கலெக்டர் / ஐஸிஎஸ் சிப்பந்திகள் ஏதோ அணை கால்வாய் என வெட்டினர், நாம் அவர்களுக்கு உடனடியாகக் கோவில் கட்டினோம்; மிச்சம்மீதி இருந்த சமூகக் உட்கட்டுமானங்களை எல்லாம் வெள்ளையர்கள் நசிக்க வைத்தனர்…
தமிழர்களின் இயல்பான வீரம், மற்றும் போர்க்குணம், அவர்களை இது எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க வைத்தது… இதே போர்க்குணம் அவர்களைத் தற்கால ரசிகர் மன்ற வீரர்களாகவும் விசிலடிச்சான்குஞ்சுகளாகவும் திராவிடத் தெருப் பொறுக்கிகளாகவும் மாற்றியிருக்கிறது.
(முன்னமே எழுத மறந்துவிட்டேன்; சமூகநீதி கூதி என பெத்த பேச்சு பேசும் தமிழர்களுக்கு, தங்கள் நிலப்பரப்பில் இருந்து டேனிஷ் கும்பெனி கும்பல் அடிமைகளை ஏற்றுமதி செய்வதை எதிர்க்கக்கூடத் திராணியில்லை. சொல்லப்போனால் கடலூர் பகுதியில் இம்மாதிரி விஷயங்களை நடத்தவிடாமல் நிறுத்தியவர் மராத்தியரான ஷிவாஜி மஹராஜ் அவர்கள்தாம்; அவருடைய ஹிந்தவி சாம்ராஜ்ய மராத்தியர்கள்தாம்!)
12. பின்னர் தமிழகத்துப் புளிச்சேப்ப ஆசாமிகளும் பெருந்தொப்பைகளும் (இவர்களில் மலையாளிகள் தெலுங்கர்கள் தமிழர்கள் கன்னடியர் எனப் பல தென்னிந்தியர்கள் இருந்தனர்) திடுதிப்பென்று தாங்கள் ‘திராவிடர்கள்’ என இனம் கண்டுகொண்டு பின்னர் ஜஸ்டிஸ் பார்ட்டி என அறியப்பட்ட ஒன்றை ஆரம்பித்து பார்ட்டி விஷயங்களில் குதூகலித்தனர். அது வெள்ளையர்களின் ஊதுகுழலாகவே இருந்தது.
அது பெற்றெடுத்ததுதான் திராவிட இயக்கம். திக. திமுக…
13. திராவிடர்களுக்கு, ஆங்கிலேயர்களின் குஞ்சாமணிகள் சப்புவதற்கு இனிமையானதாக இருந்தன – ஆகவே அவர்களுக்கு விடுதலை வாங்கிக்கொள்ள மனமே இல்லை. அப்படி பாரதத்துக்கு விடுதலை என்றால், தாங்கள் பிரிந்துபோவோம் தனி நாடாவோம் என்றனர்.
நமக்குத் தெரிகிறது நம் வரலாற்றுப் பவிஷு; எந்த காலத்தில் நாம் தனியாகச் செங்கோல் கன்னக்கோல் ஓச்சியிருக்கிறோம், சொல்லுங்கள்? அகண்ட பாரதம் இல்லையேல், பிறருடைய ரத்தம் சிந்தல் இல்லையேல் நாம் இல்லை. நாம் சுழிகள். அவ்வளவுதான். (ஆனால், பொதுவாகவே , நாம் செய்நன்றி மறக்கும் பண்பு மிக்கவர்கள்)
14. திமுக ஆட்சியில் பலவாறும் வீரமாக நடந்துகொண்டோம். மாநில சுயாட்சி கோரிக்கையைப் புதைத்தோம்; அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்தினோம் என்று சொல்லி வெறும்காகிதத்தைத் தான் தீயிலிட்டோம் என்று புறமுதுகு வாங்கினோம்; நம் கருணாநிதி, ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என பயந்து பம்மினார்; பிறகு ஒடோடிப்போய் பிஹாரின் பட்னா நகரத்துக்குச் சென்று, தம் பதவியைக் காத்துக்கொள்வதற்காக ஜெயப்ரகாஷ் நாராயண் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.
இப்படி பலமுறை ஜகா வாங்கியிருக்கிறோம். தமிழகத்திலே உதார் வுட்டுவிட்டு தில்லி சென்று பம்மியிருக்கிறோம்.
திருடுகளும் கொள்ளைகளும் செய்துவிட்டுப் பிறரிடம் சரணாகதி அடைந்திருக்கிறோம்…
ஏனெனில்: திராவிடத் தமிழன் என்பவன் அடிப்படையில் ஒரு பேடி. ஏதோ வீரம் தீரம் இனமானம் என வாயும் குண்டியும் கிழியப் பேசுவானே ஓழிய, களத்தில் இறங்குடா என்றால், ங்கொம்மாள, கதிகலங்கிப் புறமுதுகு வாங்கிவிடுவான்.
‘பேரறிஞர்’ அண்ணாவிலிருந்து ‘கலைஞர்’ கருணாநிதி வரை இதுதான் நடந்திருக்கிறது. ஏன், முக ஸ்டாலின் செய்திருப்பதும் அதுதான்! (வீரமாக, ‘என் முதல் கையெழுத்து நீட் தேர்வை மறுதலிக்க இருக்கும்’ என உணர்ச்சிகர வஜனம் பேசிவிட்டு இன்று ஆராய ஒரு கமிஷன், எழுதுகிறேன் ஒரு கடிதம் என்று பம்முகிறார்! வெட்கக் கேடு!!)
“ஏ கர்னாடகா! தமிழ் நாடு தமிழருக்கே, ஆனாக்க காவிரி முழுசும் வொனக்கே! வொனக்கு வோணூங்க்ற அணே கட்டிக்கொ! நான் சோகக் கண்ணீர்வீட்டே காவிரி டெல்டா பாசனத்துக்கு வழி செய்திட்டிடுவேன்!”
15. பக்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா – அதிலிருந்து உலக அளவில் போதைமருந்தும் வெடிகுண்டும் கடத்திய, தமிழர்களைக் கூண்டுகூண்டாகப் படுகொலை செய்த எல்டிடிஇ கும்பலிடம் ஏகத்துக்கும் பயம். அதற்காக, தங்கள் உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, அவர்களுக்கு ஏகப்பட்ட உதவிகள்.
அதே சமயம் இலங்கை அரசை நோக்கி உதார்; அதன் தலைவர் கூப்பிட்டுப் பிச்சைச் சோறு போட்டு அன்பளிப்பு கொடுத்து ‘விசாரித்தவுடன்’ சரணாகதி.
16. கனிமொழி மேல் ரெய்ட் என்றவுடன் திராவிடக் கோமணத்தில் படு தெகிர்ய மூத்திரம்.
“காங்கிரஸ் ஆண்டைகளே! நீங்கள் வேண்டும் தொகுதிகளைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்!”
யின்னாங்கடா, பொற்க்கீங்க்ளா! கோழப் பஸ்ங்க்ளா!!
தெராவிட பன்னாடைங்க்ளான நீங்க்ளாடா ஒன்றியம் ரெண்டியம்னிட்டு ஸவுண்ட் வுட்றீங்க? நாம்ப என்னிக்கிடா தனியா தெகிர்யமா இர்ந்துகீறோம்? நாம்ப பொட்டப் பஸ்ங்கதானடா??
நம்ப்ளால ஆவுற வெஷயம்: “மோடி! திருப்பிப்போ!!” அப்பால பாப்பானுங்க மார்வாடீங்க்ள எதுத்து ஸவுண்ட் வுட்றது… பிலிம் ரீலிஸ் பண்றது, ரம்ஜான்க்றிஸ்மஸ் வால்த்து ஸொல்றது… அவ்ளொதானடே…
நமக்காவது மானமாவது ரோஷமாவது… ஏதோ நம்ப குலவழிய குலக்கடமைய வயிறார ‘சாப்டுக்கிட்டே’ ஆத்தினா போறுண்டா பொறம்போக்குங்க்ளா…
4
தமிழர் தந்தை ஈவெரா உபயத்தில் தமிழகத்தில், வெங்காயம் என்பது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு உருவகம், குறியீடு, படிமம், அடுக்கு என்பதை நாம் எல்லாம் கண்ணீர் பொங்க அரிவோம்.
மேலும், பாரதம் எனும் நாடு வெறும் யூனியன் மட்டுமே, எப்போதுவேண்டுமானாலும் கழன்றுகொள்ளலாம் என்றால், நம் செல்லத்தமிழகம் ஒருமாதிரி அழுகிக்கொண்டு நாற்றமடிக்கும் ஆனியன் / வெங்காயம் என்பதையும்.
ஆனால், நாம் சிலவிஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
வெங்காயம் எனும் மூலமந்திரத்தை பெரியாரார் ஈவெராவார், தமிழையும் தமிழர்களையும் படுமோசமாகக் கிண்டல் செய்ய உபயோகித்தார்.
அதாவது, – கவைக்குதவாதது, பொய்மை நிரம்பியது, அயோக்கியமானது, அருவருக்கத் தக்கது, குப்பை என்று எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் விமர்சனம் செய்து நிறுவ ‘வெங்காயம்’ எனும் மந்திரத்தைக் குறிப்பிட்டுச் சுட்டி, அவர் உச்சாடனம் செய்தார். எடுத்துக் காட்டுகளாக:
“திமுக ஒரு வெங்காயம்.”
“தமிழ் ஒரு வெங்காயம், அது காட்டுமிராண்டி பாஷை.”
“திராவிடம் இல்லை
திராவிடம் இல்லை,
திராவிடம் இல்லவே இல்லை,
திராவிடத்தைக் கற்பித்தவன் முட்டாள்,
திராவிடத்தைப் பரப்புபவன் அயோக்கியன்,
திராவிடத்தை வணங்குபவன் காட்டுமிராண்டி”“திராவிடம் ஒரு வெங்காயம்!”
பெரியாரைக் கடவுளாகப் பகுத்தறிவு பாணியில் சுயமரியாதை கலந்த இனமானத்துடன் பாவிக்கும் வெங்காய திமுகவினருக்கு – ‘வெங்காயம்’ என்ற பொருளாக்கம் புனிதத் தன்மை மிக்கது.
அதனால்தான் அவர்கள் தமிழகத்தையும் வெங்காயமாக ஆக்கி, அதனை உரித்துவுரித்து சாம்பார்செய்து அதையும் விஞ்ஞான ரீதியில் கபளீகரம் செய்துவிடுவார்கள் என்பதை உணர்வோம்.
(திராவிட வெங்காய உரிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு: மேலிருப்பது திமுக உடன்பிறப்பு ஒருவரின் கருத்துப் படம்)
…இணையத்தில் கிடைத்த திமுக பெரியார் வெங்காயம் பிரச்சாரப் புகைப்படங்களில் இதுவும் ஒன்று;. இதில் தொண்டகுண்டரின் தலை வெங்காயம் போலவிருக்கிறது, ஏன் சாட்சாத் அது வெங்காயம் எனத்தான் நினைக்கிறேன்! நீங்கள்??
(மேற்கண்ட கருத்துப்படம், துரிதகதியில் ஆகவே கச்சடாவாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது போலத் தெரிகிறது; செய்நேர்த்தியில்லை. ஆனால் அதிலிருக்கும் ஆசாமி, இந்தச் செய்தியில் இருப்பவராக இருக்கலாமோ எனவும் தோன்றுகிறது – ஆனால் அவர் யாரென்று புலப்படவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் எனக்கு உதவலாம்)
மேலும், அந்த உடன்பிறப்புத் தொண்டரின் – செத்துப்போன தலைவர்களின் சிலை-படத் தலைகளுக்கு மேல் ஒரு வெங்காய-ஓளிவட்டம் சுற்றிக் கொண்டிருப்பதையும் கவனிக்கவும். இது முக்கியம் நன்றி!
சரி. பொதுவாகவே, அந்த உடன்பிறப்புத் தொண்டரின் வெங்காயமண்டையை உரித்தால் ரெண்டுமூன்று தோலி/அடுக்குகளுக்குப் பிறகு மூளை தட்டுப்படும் எனத்தானே நினைப்போம்?
ஹஹ்ஹா! ஆனால் அது பெரியாரின் ஆசிபெற்ற திராவிட வெங்காயம் அன்றோ?
ஆகவே, நாம் ஒரு நாள் முழுவதும் செலவுசெய்து, வெறும் தோலடுக்குக்கு அடியில் தோலடுக்காக உரித்துக் கொண்டே இருக்கவேண்டியதுதான். கடைசியில் நமக்கு எஞ்சுவது வெற்றிடம். மூளை எங்கே போனது என்றால், அதுதான் திராவிட மாயை!
இந்த மாயையில் மாட்டிக் கொண்டவர்களுக்கு மூளையே தேவையில்லை, அவ்ளொதான்.
மற்றபடி, நாம் – கண்ணீர் விட்டோ உரித்தோம் சர்வேசா இம்மயிரை… எனப் பாடிக்கொண்டே சாக வேண்டியதுதான்!
நன்றி.
வாழ்க திராவிடம்! குறுகுக வெங்காயம்!!
வளர்க உதயநிதி! ஓங்குக ஐந்தாம்படைத் தலைமுறைகள்!!
பொலிக இலக்கிய மாமணிகள்!!
பிரிக பல்லியம்! மிளிர்க பில்லிசூனியம்!!
June 8, 2021 at 11:38
முதல் பகுதி படித்துவிட்டு அதற்குள் இக்கமெண்டையிடுகிறேன்.
தங்கள் மேலான கவனத்திற்கு:
ஒன்றியம் என்ற சொல்லைப் பற்றி அம்பேட்கர் அரசியலமைப்பு சபையில் ஆற்றிய உரையின் relevant பகுதியை, தமிழில் மொழிபெயர்த்து சென்ற வாரம் இங்கு இட்டேன்: http://dagalti.blogspot.com/2021/06/blog-post.html?m=1
Now I shall read the rest of the post.
June 8, 2021 at 12:34
Good. Thanks.👍🏿
June 8, 2021 at 12:45
பூட்டிய வில் தாவு கயல்
காட்டு புலி என்றிவை யால்
ஊட்டிய யதோர் சீர் பெருமை
ஏட்டு சுரை சுவையில் திளை
கூட்ட த்தினோம் வந்தொ ருநாள்
காட்டி டுக மெய்யை என
கேட்டிட வும் செய்த னமோ?
பேட்டை உட்டு பேட்டை வந்து
மாட்டை தூக்கி போன துக்கு
பாட்டு நல்லா எழுதி னோம்ங்க
கேட்டைப் போட்டு பத்திர மாய்
சேட்டைச் சும்மா சீண்டிப் பேசி
வீட்டுக் குள்ள கம்பு சுத்த
வாட்ட மாக இருக்கு துங்க
கூட்ட ரசு என்று சும்மா
நீட்டி பேசி பார்ப்போ முங்க
சேட்டை செய்ய மாட்டோ முங்க
நீட் எழுத நாட்ட மில்லை
நாட்டை தந்தா நாறி டுமே
June 8, 2021 at 15:17
யப்பா டகால்டீ!
நன்றி.
ஒன்றுக்கு ரெண்டுதடவை உருண்டு படித்து அடிதொடையெல்லாம் அடி. :-( ஆனால் நீங்கள் திட்டவில்லை.
(நன்றாகவே வந்திருக்கிறது, எலக்கியமாமணி விருதாவுக்கு விண்ணப்பிக்கவும். ரெண்டு தேங்காய்களை உடனடியாகப் பார்ஸேல் செய்கிறேன்)
June 8, 2021 at 15:46
‘திராவிட தந்துநிரை, பாரதப் பாதீடு’
என்று தலைப்பு பதிந்துவிட உத்தேசம்
A small matter of writing it alone remains.
நாடுகூறு லட்சியம், வீடுபேறு நிச்சயம்.
June 8, 2021 at 12:47
இவ்வளவு தானா நம்ம திராவிட குடாக் (ஸ்டாக்)குகளின் பிராபல்யம்! வெங்காயம்!
மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும்…..
“பின்னர் ஆங்கிலக் கும்பெனி வெறியுடன் வளர ஆரம்பித்தபோது அதனை எதிர்த்துப் போராடிய பலரில் ஒருவர் வீரபாண்டியக் கட்டபொம்மன், தெலுங்கு வம்சாவளியினர். மருது சகோதரர்கள் இருந்தார்கள்”
இதில் வீரபாண்டிய கட்டபொம்மு ஒரு பக்கா தெலுங்கு கொள்ளைக்காரன் தான் என்று இளம் வயதில் மபொசி எழுதிய கட்டுரை படித்த ஞாபகம். இது பொய்யா?
June 8, 2021 at 15:13
//பக்கா தெலுங்கு கொள்ளைக்காரன்
ஐயா அப்படியில்லை; சுருக்கமாக விளக்குகிறேன். (நீங்களும் ஹோம்வர்க் செய்யவேண்டும்; அதற்காக நம் பொதுப்பேராசானிடம் பிராது வைக்கவேண்டாம், சொல்லிப்புட்டேன்)
நம் சங்க பங்க காலத்திலிருந்தே நமக்கு வீரவிளையாட்டுகள் பிடித்தமானதாக இருந்தவை; ஆநிரை கவர்தல், பெண்டிர் பண்டாரம் போன்றவை அவற்றில் சில.
அடிப்படையில் இவை 1) நம் கருணாநிதியாரங்களை அதிகரிக்க கொள்ள, அதாவது கொள்ளைக்காக 2) எதிர்த் திரளின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த, சொந்தத் திரளின் விந்துப் பராக்கிரமத்தை ஏற்ற வகை.
ஆனால் கட்டபொம்மு சமயம் – இந்த வரிவிதிப்பு, படைகளின் பராமரிப்புக்கான நிதி தேடல்… போன்றவற்றை – ஆர்காடு நவாப் போன்றவர்களின் மூக்கை நுழைத்தல், ராமனாதபுரம் சேதுபதி போன்றவர்களின் வெள்ளைய அன்னியோன்னியம், பிற பாளையக்காரர் – காவல்காரர்கள் கொடுத்த அழுத்தம், கும்பெனியாரின் வரிப்பேராசை +++ எனப் பல விஷயங்களின் பினபுலத்தில் பார்க்கவேண்டும்.
கட்டபொம்மு எரியூட்டிய கிராமங்கள் / செய்த ‘கொள்ளைகள்’ – அவனுடைய திரளுக்குப் பகைவர்களாக இருந்தவர்களை, அவர்கள் ஆதரித்ததற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனை. அல்லது தன்னைத் துரத்திவரும் எதிரிகளுக்கு ஆதாரம் கிடைக்காதிருக்க செய்யப்பட்ட விஷயங்கள். அவ்வளவுதான்.
இம்மாதிரி விஷயங்களை அனைவரும் செய்தனர் – கும்பெனியினர் உட்பட. ஆங்கிலேயர்கள் அதிகமாகவே செய்தனர்.
மேலும், சில சமயங்களில், அக்கால திமுக போன்ற ‘கட்டுக் கோப்பு’ இல்லாமையால் தறிகெட்டோடும் இக்கால பிடிஆர் போன்ற குறு நில மன்னர்களும் – படைத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் செய்ததை கட்டபொம்முமீது கவிழ்த்தலாகாது. பிடிஆர் உளறல்களுக்கு ஸ்டாலின் பொறுப்பா என்ன?
மபொசி: பலவகைகளில் இவர் பலவிஷயங்களைக் குறித்து நன்றாக எழுதியிருக்கிறார். சிலவிஷயங்களில் சொதப்பியிருக்கிறார். பின்னவற்றை லூஸ்ல வுடவும்.
ஜெயமோகன் வெண்முரசு எழுதவில்லையா? அதற்காக நாம் அவரைச் சபிக்கிறோமா என்ன? நிறைய, தரமான நகைச்சுவைக் கட்டுரைகளையும் கதைகளையும் எழுதுகிறார் – அவை போதுமே!
June 8, 2021 at 19:14
Highly informative. Thanks. Please consolidate your articles category-wise and publish them as separate books in Kindle if feasible, so that they will serve as authentic referencers.
June 13, 2021 at 07:47
எங்கு தலீவரு வொர்த் இன்னானு இப்பயாவ்து பிர்ஞ்சிதா ஸார்? எள்திகுட்த்தத பாத்து பட்ச்சாலே பலான எட்த்துல ஜெர்க்காவாரு பாவம், என்னாத்த எள்திர்க்கானுவோ எளவுனு ஸ்பாட்லயே அத லூஸ்ல உட்ருவாரு. எள்திவெச்சதே இப்டினா போறபோக்குல அட்ச்சிவுட்ட டகீலுக்கெல்லாம் கண்க்கே கட்யாது, அத்தப்போய் ஸீரிஸா எட்த்துனு இவ்ளோ டைம் வேஸ்ட் பண்றீங்கோ.
நாளைக்கே 2ஜி கேஸ் வர்துனு வெய்ங்கோ, ராசாத்தி புத்ரி பேமிலியோட கத முட்யும்னாக்க லைட்டா கண்டிச்சுனு கைகழுவினு போய்ருவாரு, அத்த தாண்டி தன்னோட சொத்துக்கோ பேமிலிக்கோ பங்கம் வரும்னாக்க படார்னு கால்ழ வுழ்ந்து கதற ஸ்டாட் பன்னிர்வாரு.
என்னமோ ஒன்றியம் கின்றியம்னு பேஸ்னியாமேனு யாராவ்து கேட்டா, அய்யா சாமி அத்தெல்லாம் அல்லக்கைங்க வேல, பேக்ல வுட்ட கேஸ புட்ச்சி பயர் உட்டுனிர்கானுவோ. தெராவெடம்னா இன்னான்னே எவ்னுக்கும் தெர்யாது, ஆனாக்க அத்தவெச்சுதான எங்கு பொழ்ப்பு இப்பவும் ஓடுது, அதுமேரியே அப்பப்ப எத்தையாச்சும் கொள்த்தி போட்டுகினே இர்க்கனும்னு டாடி சொல்லிர்க்காப்ல, அத்த அப்டியே பாலோ பன்னினிர்க்கோம், அத்தவெச்சு எங்கள செஞ்சிராதீங்கய்யானு எங்கு தலீவரு கண்ண கசக்கிருவாப்ல.
என்னத்த சொல்றம்னு தெராவெடக் கூவானுங்க எவ்னுக்குமே தெர்யாது, அவ்னுங்கள்க்கு பின்வாசலும் முன்வாசலும் ஒன்னேதான். ஊருக்குள்ள பிரச்னய கெளப்பறத்தான் அவ்னுங்க வேலயே, தன்க்கு பிரச்னைனா அப்டியே சரண்டர் ஆய்டுவானுவோ. ஆனாக்க பப்ளிக்தான் பாவம் அதுக்கெல்லாம் அர்த்தம் தேடி அல்லாடினிர்க்கு, ஒரே காமெடிதான்.
June 13, 2021 at 08:40
:-)
ஐயன்மீர், தாங்கள் ‘மெட்றாஸ்பாஷை’ எனவொரு தளம் திறந்து, அங்கு நீங்கள் செங்கோல்பாஷைக்கோல் ஓச்சினால், பொழுதன்னிக்கும் அங்கே தவமிருக்க, தெண்டனிட்டு வணங்க அடியேன் தயார்!
பொலிக, பொலிக.
June 29, 2021 at 13:39
[…] […]