ரிமா மாரி மாமா ரிரி: பத்ரிசேஷாத்ரியும் பாலியல் கீர்த்தனையும்

May 26, 2021

ஒரு முதிய (என்னை விடவும்!) ஏழரை நேற்று என்னை நோக்கி ஒரு கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்துவிட்டது.

“ஒங்க ஃப்ரெண்டு பத்ரி சேஷாத்ரி நடத்தற ஸ்கூல்ல பாலியல் அத்துமீறல் விவகாரம் வெடிச்சிட்ருக்கு, ஊரே பத்தி எரியுது! நீங்க என்னடான்னா மேற்குவங்காளம் தமிழ் நாட்டில உங்க கட்சிகள் தோல்வினு முனகிக்கிட்ருக்கீங்க…”

இது நேற்றைய மதிய வாட்ஸ்அப் உபயம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது – ஏனெனில் பத்ரி அவர்களுடன் இக்காலங்களில் பெரிய தொடர்பு இல்லையென்றாலும், அவர் பள்ளி நடத்துவதாகத் தெரியாது. இருந்தாலும் அவர் ஒரு படுபிஸி மனிதர் – அவரை டிஸ்டர்ப் செய்யவேண்டாம், எப்படியும் இது வதந்தியாகத் தான் இருக்கும் என்று இன்னொரு நண்பரிடம்  பள்ளிகுறித்து (மட்டும்) கேட்டேன். அவருக்கும் பத்ரி பள்ளி நடத்துவதாகத் தெரியாது எனத்தான் சொன்னார்.

நல்லவேளை. எனக்கு வந்த பப்பரப்பா செய்தி ஊர்ஜிதம் செய்யப் படாததால் அந்தப் பாலியல் பலாத்கார எழவைக் குறித்து அவரிடம் கேட்கவில்லை.

(எப்படியும், என்னுடைய பலப்பல வருட அனுபவத்தில் – பல தமிழகப் பள்ளிகளில் இம்மாதிரி விஷயங்கள் நடப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன், பல இஸ்லாமிய க்றிஸ்தவ ‘இண்டர் நேஷனல்’ பள்ளிகளில் உட்பட. இப்படியாப்பட்ட பல கேஸ்கள் ‘மைனாரிட்டி பராக்கிரம’த்துக்கு எதிராக இருப்பதால் அமுக்கப் படும் என்பதையும்  மற்றபடி ஜாதிசங்கங்களின் பராக்கிரமத்தைக் குறித்து பயந்தும் (அவை நடத்தும் பள்ளிகளாக இருந்தால்) கண்டுகொள்ளாமல் விடப்படும் என்பதையும் தரவுகளுடன் அறிந்திருக்கிறேன் – அவை போலீஸ் கேஸ் வரைகூடப் போகமாட்டா.   போனாலும் திமுக புதுக்கோட்டை எம்எம் அப்துல்லா இல்லாவிட்டால் கஜினிமொஹம்மதுக்களால் காவல்துறைக்குப் பேடித்தனமாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வழக்குகள் ஊற்றி மூடப்படும் என்பதையும்.

இது வெறும் பள்ளிகளில் மட்டுமல்ல. கல்லூரிகளிலும் நடக்கிறது; எனக்குத் தெரிந்தே கடந்த மூன்று வருடங்களில் எஸ்ஆர்ஏம் பச்சமுத்து கல்லூரியில் ஏகப்பட்ட தற்கொலைகள் நடந்தன. க்றிஸ்டியன் மெடிக்கல் காலேஜில் (வேலூர்) குறைந்த பட்சம் இரண்டு கோர பாலியல் விவகாரங்கள் நடந்திருக்கின்றன. முதலாவது தொடர்பான செய்திகளாவது பத்திரிகைகளில் வந்தன – ஆனால் இரண்டாவது முழுவதுமாக அமுக்கப் பட்டது – அந்தக் கல்லூரியில் இருப்பவர்களுக்கே பல விஷயங்கள் தெரியா, அப்படிப்பட்ட அமுக்கல்கள். (இம்மாதிரி விஷயங்கள் ஸாஸ்த்ரா பல்கலைக் கழகத்திலோ அல்லது விவேகானந்தா கல்லூரியிலோ  ஏன்,  ஐஐடி-சென்னையிலோ நடந்திருந்தால்…. ஊடகங்களில் அதை எப்படிக் கொண்டாடியிருப்பார்கள், புலன்விசாரணை  செய்திருப்பார்கள், ஊதிப் பெருக்கி பூதாகாரமாக ஆக்கியிருப்பார்கள் போன்றவற்றையெல்லாம் நான் சொல்லத் தேவையேயில்லை)

+பொதுவாக நிலைமை இப்படி இருந்தாலும், இவற்றிலும் ஒரு. சில கேஸ்கள் பொய்/புனை சுருட்டு என்றும் விரியும், அநியாயத்துக்கு அப்பாவிகள் தண்டிக்கப் படுவார்கள் என்பதையும் அறிந்திருக்கிறேன்; அதேசமயம், நானொரு புலனாய்வுப் பேடியல்லன் என்பதையும்…)

சரி,  எது எப்படியோ. சககெழத்துக்கும் என்னைப் போலவே மூளை கழன்றுவிட்டது என லூஸ்ல வுட்டுவிட்டேன்.

-0-0-0-0-

பின்னர் மறுபடியும் அதே கெழம், அதே விஷயம்; எனக்கு வெறுப்பாகிவிட்டது. “யோவ், என்ன உளறல்? ஏனிப்படி என்னைத் தொந்திரவு செய்கிறீர்கள், அதுவும் போலிச் செய்தியை வைத்துக்கொண்டு??” எனக் கோபமாக ஒரு ஆடியொ ரெகார்ட் செய்து அனுப்பினேன். (வரவர, முழ நீளத்துக்குத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக என் குழப்பங்களை, குழப்படிகளை ஆடியொவில் பதிவு செய்து அனுப்புவது சுளுவாக இருக்கிறது)

அவர் பதில்: சம்பவம் நடந்த இடம் தெரியுமா?

எனக்குத் தெரியாது. பப்பரப்பாவில் ஈடுபாடும் இல்லை. ஆளை விடவும்.

இதே முக ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் செய்த லீலைகள் என்றால் சப்புக்கொட்டிக்கொண்டு கேட்டுக் கொள்வீர்களே!

மாட்டேன், நான் அந்த அலங்கோலங்கள் குறித்து வேணது கேள்விப்பட்டாகிவிட்டது, ஆளை விடும்.

அந்தப் பள்ளியின் பேர் என்ன தெரியுமா? “பத்மா சேஷாத்ரி ஸ்கூல்!”

அடப்பாவி! இதற்கும் பத்ரி சேஷாத்ரிக்கும் என்ன கெழமே தொடர்பு?

ரெண்டும் ஐயங்கார் பெயர்தானே?

இதுதான் ஒங்க தரவா? என்ன மசுர்??

ரெண்டும் ஐயங்கார் தான்!

ஆ!

சரி. அது பத்மா இவர் பத்ரி. ரெண்டும் சேஷாத்ரி. ரெண்டும் ஐயங்கார். பத்ரியின் அப்பா ஸ்கூல் டீச்சர் என ஒரு காணொளியில் சொல்லியிருக்கிறாரே! சம்பவம் நடந்தது ஒரு பள்ளியில். இந்தத் தொடர்புகள் போதாதா?

ஐயோ! எப்படியெல்லாம் கன்னெக்ட் செய்கிறீர்கள்! எனக்குத் தெரிந்து பத்ரி ஒரு பள்ளியையும் நேரடியாக நடத்தவில்லை, நானே இன்னொருவரிடம் கேட்டுவிட்டேன். மேலும் ரி-மா என்ற வித்தியாசம் இருக்கிறதே ஐயன்மீர்! இப்படியெல்லாம் அநியாயத்துக்கு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்களே! ரிமா மாரி மாமா ரிரி என என்னை ஆலாபனை செய்ய வைக்கிறீர்களே!

அப்டின்னாக்க பத்ரிக்கும் பத்மாவுக்கும் ஒரு தொடர்பும் இருக்காதுங்க்றீங்க்ளா? ஐயங்கார்-ஐயங்கார் தொடர்புகள்??

ஐயா! அப்படியே ஓட்டிக்கொண்டு போனால் அந்த எழவெடுத்த தஹிந்து தினசொறி ஊடகி மாலினி சேஷாத்ரி, நடிகை மீனாட்சி சேஷாத்ரி எல்லாரையும் கோர்த்துக் கொள்ளலாம், நன்றி.

சரி, அப்ப ஒரு தொடர்பும் இருக்க வாய்ப்பே இல்லை அப்டீங்க்றீங்க்ளா?

ஐயா – எனக்குத் தெரிந்து ஒரு தொடர்பும் இல்லை பத்ரி, சேஷாத்ரி எனும் பெயர்களில் எனக்கு ஐயர் பையன்களையும் தெரியும். சேஷாத்ரி என்ற பெயரில், எனக்கே இரண்டு குமாஸ்தா உறவினர்கள் இருக்கிறார்கள். பத்ரி என்ற பெயரில் ஒரு முதலியார் பையனையும் தெரியும். ஐயங்காரிணிகளாக இல்லாத பலப்பல பத்மாக்களையும் அறிவேன். சும்மா ஓட்டாதீங்க!

அப்ப பத்ரிக்கும் பாலியல் விவகாரத்துக்கும் தொடர்பே இல்லைன்றீங்க்ளா?

ஐயா! எனக்கு இந்த விஷயத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது. விட்டுவிடுங்கள்!  மேலும் முதலில் ‘அவர் நடத்திய ஸ்கூலில்’ என்று ஆரம்பித்து இப்போது அவரையே குறி வைக்கிறீர்களே! பொதுவாகவே எனக்கு மனிதர்களை எடைபோடத் தெரியும். ஓரிரு சந்திப்புகளில் ஒரு முடிவுக்கு வந்துவிடுவேன். ஆகவே, அவரைச் சிலபல முறை சந்தித்திருக்கிறேன் என்கிற ரீதியில் சொல்கிறேன், அவர் இம்மாதிரிச் சம்பவங்களில் மாட்டிக் கொள்ளக் கூடிய டைப் இல்லை. மேலும் முக்கியமாக – எனக்குத் தெரிந்த அளவில், அவர் திராவிடரும் அல்லர்.

என்ன சார் கழுவற நீர்ல நழுவற மீனா இருக்கீங்க?

யோவ்! பத்ரிக்கும் பாலியலுக்கும் தொடர்பு இருக்கிறது. போதுமா? பாலியல்  தயிரியல் இல்லாமல் அவர் பிறந்திருக்க முடியாது. அவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது என அறிவேன். ஆகவே அவருக்குப் பாலியலிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது. அவரைத் தூக்கில் போட்டுவிடலாம் சரியா?

என்ன சார் கோச்சிக்கிறீங்க?

ஐயா, நீங்கள் என்னைவிடப் பத்துவயதாவது பெரியவர் – கொஞ்சமாவது விவேகம் வேண்டாமா? உங்கள் பாலியல் ஈடுபாட்டினால் உங்களுக்குக் குழந்தைகள் மூன்றுபேர். மூவரும் அம்ரீகாவில் குப்பை கொட்டிக்கொண்டு நன்றாக வசிக்கிறார்கள். அவர்களும் பாலியலில் ஈடுபட்டதால்  பேரன்பேத்திகள் பார்த்தும் விட்டீர்கள்.  இங்கே குப்பை கொட்டிக்கொண்டு வம்பளந்தும் கொண்டிருக்கிறீர்கள். நானும் பாலியல் ஈடுபாடு கொண்டவன், இரண்டு குழந்தைகள்! ஐயகோ! ஒன்று செய்யலாம், நாம் எல்லோரும் நமக்கு நாமே தற்கொலை தண்டனை கொடுத்துக்கொள்ளலாம். அல்லது, இதை விடக் கோரமான தண்டனையாக, சேர்ந்து ஒரு ஸூம் ஸெஷ்ஷன் வைத்து எஸ்ராமகிருஷ்ணன் கட்டுரை/கதை ஒன்றைப் படிக்கலாம். நம்ப எல்லாருக்கும் சேப்டர் க்ளோஸ்.

என்னையே விடுங்க. இந்த அவல, துன்பியல் சம்பவத்தைப் பத்தி ஒண்ணுமே தெரிஞ்சிக்க ஆவல் இல்லையா? நாட்டுல பல அட்டூழியங்கள் நடக்குதே!  என்ன சமூகப் பிரக்ஞையோட வலைத்தளம் நடத்தறீங்க?

இல்லை. இல்லை. தெரிந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவது இல்லை. எனக்கு ஒரு பிரக்ஞையும் இல்லை. என்னை லூஸ்ல வுடவும்.

பத்ரி சேஷாத்ரியோட மனைவியா ஏன் பத்மா சேஷாத்ரி இருக்கக் கூடாதுங்றீங்க? அப்ப அவ்ங்க பேர்ல நடத்தற பள்ளியா அது இருக்கலாம் இல்லையா?

ஐயா, நான் ஒன்றிரண்டு முறை பத்ரி அவர்களின் மனைவியைப் பார்த்திருந்தாலும் எனக்கு அவர் பெயர் நினைவில் இல்லை. அப்படியே அவரும் ஒரு பத்மா என்று இருந்தாலும் அவர் பள்ளி நடத்தவில்லை எனத்தான் அறிகிறேன்.

மேலும் பத்மா சேஷாத்ரி பள்ளி என்பது அந்தத் திரைப்படக் கோமாளி  ஒய் ஜி மஹேந்திரா குடும்பத்தினர் சார்ந்தது என்பதை அறிவேன். அந்தப் பத்மாவும் வேறு என்பதையும்.

ஓ சரி, ஆனால் இதை உங்க பிராம்மணர்களுக்கு எதிரான சதியா பாக்கலயா?

ஐயா, எனக்கு ஒன்றும் தெரியாது. என்ன நடந்தது, நடக்கிறது, சதி என ஒன்றும் தெரியாது. பொதுவாக பப்பரப்பாக்களில் அவை நடக்க நடக்க அறிந்துகொள்வதில் நம்பிக்கையும் இல்லை. பெரும்பாலான ‘சதி வலை’ சுவாரசியங்களில் ஈடுபாடும் இல்லை.

மேலும். தமிழகத்தைப் பொறுத்தவரை பிராம்மணர்களுக்கு எதிராகச் சதியெல்லாம் இல்லை – நேரடியான தாக்குதல்களும் வெறுப்பியங்களும் பொய்ப் பிரச்சாரங்களும்தான் இங்கு ஸாஸ்வதம்; பொதுவாகவே, நம் திராவிடத் தமிழகத்தில், பிராம்மணர்களுக்கு எதிரான வெறுப்பு மூடிமறைக்கப் படுவதில்லை என்பதுதான் என் நேரடி/கள அனுபவம். அது ஒரு சர்வ வியாபி. வெகுசாதாரணமாகக் கேவலப் படுத்திக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் அதற்கான நான் சுணங்கிப் போவதும் இல்லை. எனக்கு பேரபிள் ஆஃப் த பெடெஸ்ட்ரியனில் குவியம் உண்டு. இதெல்லாம் ஃபேக்ட் ஆஃப் லைஃப். இவற்றைக் கடந்து நம்மால் முடிந்ததை ஆத்மார்த்தமாகச் செய்துகொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும்.

ஏனெனில், தமிழகம் போன்ற எந்த ஒரு அரைவேக்காட்டுச் சோம்பேறிச்  சமூகத்துக்கும் தன்னுடைய ஆற்றாமை-போதாமைகளுக்கு வடிகால் காண, அதன் வெறுப்பியத்தைக் குவிக்க ஒரு பாதுகாப்பான, திமிறிக்கொண்டு திருப்பி அடிக்காத – எதிர்க்காத வடிகால் தேவைப்படுகிறது. சுயபரிசோதனையே இல்லாமல் தரவுகளும் இல்லாமல் தன் பிரச்சினைகளுக்கு இன்னொருவன் மேல் சுளுவாகப் பழிபோடுவது என்பது ஆதியிலிருந்து தமிழர் வழி. களப்பிறர் டகீல் உட்பட ஆரியப் படையெடுப்பு உளறல் உள்ளிட்டு இதுதான் உண்மை.

ஆனால் கடந்த சுமார் நூறு வருடங்களாக ஒருமாதிரி, இந்த வடிகால் நிரந்தரமாக நிறுவப் பட்டுவிட்டது,

அந்த வடிகால் பிராம்மணவர்ணம், அது தொடர்பான ஜாதிகள். படிப்பு வரவில்லையா, பிராம்மணன் காரணம், சினிமா வெற்றிபெறவில்லையா, பிராம்மணன் காரணம், கட்சி தோற்றதா பிராம்மணன் காரணம், கட்சியின் பேர் ரிப்பேரா அதற்கும் பார்ப்பனக் குசும்பு காரணம், வேக்ஸின் தட்டுப்பாடா, பெண்களுக்கு வேலை கிடைக்கவில்லையா, கோவில்களில் கூட்டமா, ஆன்மிகம்/பக்தி அதிகமாகி விட்டதா, காஃபி விலை உயர்வா, தொழில் சுணக்கமா, வழக்கு தோல்வியா, அலக்கியம் கண்டுகொள்ளப் படவில்லையா, பாடகன் மேலெழும்ப முடியவில்லையா, நூல் விலையேற்றமா, தமிழை பொதுயுகம் முன் 1500 வருடத்துக்கு ஓட்டிச் செல்லமுடியவில்லையா, தமிழ்தான் உலகின் ஆதிமொழி என உலகம் ஒத்துக்கொள்ளவில்லையா,  சிந்துசமவெளி நாகரிகம் என்பது திராவிடம் அல்ல எனத் தெரிவதா, கீழடியின் காலம் பொதுயுகம்முன் 10000ஆம் ஆண்டு என நிறுவ முடியவில்லையா… … இவை எல்லாவற்றுக்கும் பார்ப்பன சதி மட்டுமே காரணம். (சிரிப்பதை நிறுத்துங்கள்)

சரிதான். ஒரு ரெண்டு சதவீதம் மட்டுமே இருக்கும் மக்கள் இவ்வளவு பராக்கிரமம் மிக்கவர்கள், மிச்சம் 98% ஆசாமிகளின்மீது அடக்குமுறையைத் தொடர்ந்து விதம்விதமாக அவிழ்த்துவிடுகிறார்கள் என்றெல்லாம் உரக்கச் சொல்ல, ஒருவன் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டும்; ஆனால் அவர்கள் திராவிடர்கள், எப்படி வேண்டுமானாலும் உளறிக் கொட்டுவார்கள்..

அதே சமயம், இந்த நகைச்சுவை அழிச்சாட்டியம் தாங்கமுடியாத அளவுக்குப் போனால், நம் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இன்னமும் அருகிப்போகும் இந்த மக்கள் திரள். ஏற்கனவே முடிந்தவர்கள் எல்லாம் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவேன்.

ஆனால் ஒப்பு நோக்க இது, ஒரு சிறு மக்கள்திரளில் நடக்கும் விஷயம். என்னைப் பொறுத்தவரை, இம்மாதிரி அழிச்சாட்டிய விஷயங்களைக் குறைந்த பட்சம்,  பாரதத்திலிருந்து பிரிவினை பேசுபவர்களுடைய தலைதூக்கலின் ஒருமாதிரி மெடா-குறியீடு எனக் கொள்வேன்.

கிண்டல் வேண்டாம் எனச் சொல்லவில்லை. தாராளமாகச் செய்யலாம் – ஆனால் அதே அளவுக்கு முஸ்லீம் முல்லாக்களையும் இமாம்களையும் உலமாக்களையும் படுகிண்டல்  செய்து – எடுத்துக் காட்டாக, ‘தொப்பி ஆட்டுத்தாடி புரியாத மொழியில் விக்கலெடுத்து இருமுவது போல அரைவேக்காட்டு அரபு உச்சாடனம் செய்வது, நாளுக்கு ஐந்துமுறை உச்ச ஸ்தாயியில் ஓலமிடுவது’ என்றெல்லாம் ஆக்கபூர்வமாகவும் நகைச்சுவையுடனும் விமர்சனம் செய்தால் இன்னமும் பன்முகத்தன்மையுடன் நன்றாக இருக்குமே என நினைக்கிறேன். மேலும் மதச்சார்பின்மையுடன் பாதிரிகளையும் முழுரிகளையும் பாவாடைகள், ஆவிக்குரிய எழுப்புதல் அடக்குதல் அடங்குதல் எனவெல்லாம் ஆக்கபூர்வமான ஆதூரத்துடன் அணுகினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள் என நினைக்கிறேன். அவ்வளவுதான்.

எங்கியோ போறீங்க – பொது அறிவு வேண்டும் அப்டீன்னு நீங்க சொல்வீங்களே! இப்ப நீங்களே இந்த விஷயங்களை வேண்டாம்றீங்க்ளே!

ஆமாம், ஆனால் இது அப்படியில்லை – பப்பரப்பா என்பது பொதுஅறிவு அல்ல – ஒரு முகாந்திரமும் இல்லாமல் நீங்களே ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டுவிட்டு இப்படி அந்த வதந்தியைப் போய் பொதுஅறிவு எனப் பேசுவது நன்றாக இல்லை. நீங்கள் படித்தவர், இப்படியா வெறும்வாயில் அவலைப் போட்டு மெல்வீர்கள்??

நான் வதந்திய கிளப்பல, எனக்கு வந்த ஃபேஸ்புக் செய்திதான் அப்டி சொல்லுது?

அப்படியா, சந்தோஷம். பெரிய ஃபேக்டரி ரெவல்ல ஃபேக்ந்யூஸ் தொழிலை நடத்தறீங்க! ஜமாய்ங்க!!

சரி, அப்ப பத்ரி அப்டி செஞ்சிருக்க மாட்டாருங்க்றீங்க இல்லியா?

யோவ்! உங்களுக்கு அப்படியென்ன அவர் மேல கொலைவெறி? தைரியம் இருந்தா அவர் கிட்டயே கேளுங்களேன்? அவரை ஃபேஸ்புக்ல ஃபால்லோ பண்றீங்கன்னு எனக்கு நீங்க சொன்னீங்க இல்ல? எப்படியும் எனக்கு ஆயிரம் பிறவேலைகள் இருக்கின்றன, முதியவர் என்று மரியாதை கொடுத்தால் பொறுமையாக இருந்தால், மிகவும் உளறுகிறீர்கள், நிறுத்துங்கள், எனக்குச் சமைக்கவேண்டும்.

சொந்த ஜாதிய குறை சொல்றத்துக்கு கூச்சம், புரிஞ்சிக்கறேன்.உங்க இடத்துல இருந்தா நானும் அதையேதான் செஞ்சிருப்பேன்.

யோவ். முதலில் அவரும் நானும் ஒரே ஜாதியில் பிறந்தவர்கள் இல்லை – உங்களுக்கு ஜாதி என்றாலே என்னவென்று தெரியவில்லை. இருந்தாலும், அதற்காக எனக்கு ஜாதிவெறி என இல்லை எனத்தான் நினைக்கிறேன்;  இதை நீங்கள் தான் சரிபார்த்துக் கொள்ளவேண்டும், என்னை உங்களுக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அப்படி இருந்தாலும் எனக்கு ஜாதிவெறி என நீங்களோ வேறெந்தக் கழுதையோ நினைத்தால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

மேலும். எனக்கு யாரையும் குறை சொல்வதில், தரவுகளின் பேரில் விமர்சனம் வைப்பதில் – ஒரு தார்மீகப் பிரச்சினையோ ஜாதி நோக்கோ, ஏன் தயக்கமோ இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், எவ்வளவோ ஐயங்கார்களைக் கிண்டலும், நக்கலும் செய்திருக்கிறேன். (ஆனால் அவற்றை, அவர்கள் ஐயங்கார்கள் என்பதால் மட்டுமே செய்யவில்லை)

எடுத்துக்காட்டாக, நீங்கள் வெகுவாகச் சிலாகிக்கும் ‘ரிட்டையர்ட் எக்ஸ்பர்ட் ஆன் எவ்ரிதிங்’ பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் ஒரு ஐயங்கார்.  இன்னொருவர், அந்த யுவகிருஷ்ணா அரைகுறையின் பரமார்த்த ஞானகுரு, உங்கள் அபிமான பா.ராகவன். இந்தச் சுரைக்காயும் ஒரு ஐயங்கார் தான். [இப்படி அவரிடம் சொன்னேன், ஆனால் இப்போது சந்தேகம்; ஏனெனில் என் உறவினர்களில் சேஷாத்ரிகளும் இருக்கின்றனர் – மேலும், தொழிலைத் தொழில்முறையில் செய்வதற்காக அவர், மோஸ்ட் மாடர்ன் லிபரல் ஜாதியினராக மாறியிருக்கலாம்!] இன்னொன்று அந்த மகத்தான அரைகுறை – இந்திரா பார்த்தசாரதி – இதற்கு, சாகிற வயது வந்தாலும் விவேகம் இல்லை. இந்த தண்ட ஜென்மமும் ஐயங்கார்தான்.

அப்ப நீங்கதான் தமிழகத்தின் புதுப் பெரியார்!

எப்டீ?? யோவ்! பெருசூ! இது ஜோக்கா?? இப்ப நிறுத்து, இந்த உளறல.  நான் என்ன என் பேத்தி வயசுல இருக்கற குழந்தையையா கல்யாணம் செஞ்சேன்? ஆளை விடு. நீ ஒத்திசைவ படிக்கவும் வேண்டாம், எனக்குத் தொந்திரவு தரவும் வேண்டாம். இப்ப ஓடிடு. திரும்பி இங்க வராத. என் நம்பர உன் ஃபோன்லேர்ந்து எடுத்துடு…

-0-0-0-0-0-

பின்குறிப்புகள்:

 1. இன்றுகாலை (இந்த விஷயத்தை நான் தெரிந்துகொள்ளத் தேவையேயில்லை, இருந்தாலும்!) இந்த பத்மாபத்ரிசேஷாத்ரி விஷயம் என்ன என ஒரு நண்பரிடம் கொஞ்சம் கேட்டு, வெகு மேலோட்டமாகத் தெரிந்துகொண்டேன். ஆகவே, இந்தப் பெரியவருக்கு வயதான காலத்தில்  நட் லூஸ் ஆகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். பாவம்.
 2. பத்ரி சேஷாத்ரி இந்த விஷயத்தில் (அது என்ன எழவாக, எதைப் பற்றி இருந்தாலும்) ஒரு தன்னிலை வாக்குமூலம் (அதாவது பத்ரி வேறு பத்மா வேறு, ரி என்பது மா அல்ல என்கிற ரீதியில்) வெளியிட்டு எனக்கு நிம்மதியைக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…
 3. ஒத்திசைவு என்பது, மூளையும் இருந்து அதையும் உபயோகிப்பவர்களுக்கானது என இதுவரை நினைத்து இறுமாப்பில் இருந்தேன்.
 4. அதிகபட்சம் ரெண்டு பேர் மட்டும் படிக்கும் ஒத்திசைவுக்கே இம்மாதிரி வாசகமுட்டாக்கூ பிரச்சினைகள் என்றால் – பத்ரி சேஷாத்ரி போன்றவர்களை எப்படி வாட்டி எடுத்துக் கொண்டிருப்பார்கள், அரைகுறைப் பாவி அறிவிலிகள்? எப்படி இந்த முட்டாப்புண்டைணாக்குகளை பத்ரி போன்றவர்கள் மேனேஜ் செய்கிறார்கள் – ஆச்சரியமாக இருக்கிறது.

10 Responses to “ரிமா மாரி மாமா ரிரி: பத்ரிசேஷாத்ரியும் பாலியல் கீர்த்தனையும்”


  • ஐயா நன்றி. விமலாதித்த மாமல்லன்! :-)

   அவர் மாலினி சேஷாத்ரியை விட்டுவிட்டார்;

   நானும் எனக்குக் கரோஷன் (அரிமானம்/துருப்பிடித்தல்) பற்றி அற்புதமாகப் பாடமெடுத்த பேராசிரியர் சேஷாத்ரியையும், என் ஆதர்சங்களின் ஒருவரான (காந்தியரும் ஆன) மஹாமஹோ ஸிவி சேஷாத்ரியையும் குறிப்பிட மறந்துவிட்டேன்.

   (இன்னமும் யோசித்தால் இப்படிப் பல சேஷாத்ரிகள் கிளம்பி வருவார்கள் போல… எந்தப் புற்றில்…)

 1. தமிழன் Says:

  பள்ளியை நடத்துவது யார் என்பது கூடத் தெரியாமல் பத்ரி சேஷாத்ரி குற்றவாளி என்ற முன்முடிவுடன்தான் இந்த முற்றுமுணர்ந்த முண்டகலப்பை பேசவே ஆரம்பிக்கிறார், அக்மார்க் திராவிட வகைமை ஜொலிக்கிறது, இவர்களிடம் பேசுவதில் என்ன பயன்?

  சேஷாத்ரி என்ற ஒற்றைச் சொல்லைப் பிடித்துக்கொண்டு சம்மந்தமே இல்லாத தனிநபர் ஒருவரைக் குற்றவாளியாக்குவதோடு நில்லாமல் ஒரு சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார் மனிதர். அவர் கற்பனைத் திறனை மெச்சத்தான் வேண்டும். ஆனால், அவர் பேசும் விஷயம் குறித்த தரவோ, ஆதாரமோ அல்லது உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வமோகூட அவரிடம் இல்லை. திராவிடத் திராபைகளால் எளிய இலக்குகளாக்கப்பட்டிருப்போரைத் தாக்கிக் குதூகலமடையும் குரூரபுத்தி மட்டுமே விஞ்சி நிற்கிறது.

  அத்துமீறல் விவகாரம் வெடித்துக்கொண்டிருக்கிறதாம், ஊடகப்பேடிகளும் சமூகவெளியில் சலம்பித் திரியும் திராவிடக் குண்டர்களும் இப்பள்ளியின் பெயரை நொடிக்கொருமுறை உச்சாடனம் செய்வது தற்போதைய தற்குறி ஆட்சியின் அவலங்களை/அட்டூழியங்களை மறைத்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் தங்கள் ஆழ்மனக் காழ்ப்புகளை தீர்த்துக்கொள்ளவுமே.

  மாநிலமே மயானமாகி வருவதை மக்கள் மகிழ்வோடு வரவேற்கிறார்கள், திமுக குண்டர்களின் குற்றங்களைப் பாராட்டுகிறார்கள், ஆனால் இந்த குறிப்பிட்ட பள்ளி விவகாரம் மட்டும் வெடித்துக் கிளம்பிவிட்டது, அப்படித்தானே?

  தவறு செய்தவர் யாராரயினும் தண்டிக்கப்பட வேண்டும், அதிலும் இதுபோன்ற தவறுகள் நம்பகத்தன்மையைக் குலைப்பவை, வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. குற்றம்சாட்டப்பட்டவர் கைதாகியுள்ளார், தவறு நிருபணமானால் தண்டனை பெறுவார். ஆனால், குற்றமிழைப்பதையே அன்றாடத் தொழிலாகச் செய்துவரும் அயோக்கியர்கள் நகர்வலம் வருவதும், இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கும் கயவர்கள் அவர்களைப் பற்றித் தவறியும் வாய்திறவாமல் கள்ளமௌனம் காப்பதும், இதுபோல குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் ஊதிப்பெருக்கி பூதாகரமாக்கி அறச்சீற்றத் தாண்டவமாடடுவதும் இங்கே கட்டமைக்கப்பட்டுவரும் நச்சுச் சூழலை சுட்டுகிறது.

  சென்னையில் உள்ள ‘பெயர்பெற்ற’ கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு அயோக்கியன் பல்லாண்டுகளாகத் தொடந்து பாலியல் அத்துமீறல்களைச் செய்துவந்தது குறித்து ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்தபின்னரும் கூட இன்று நிர்வாண நர்த்தனமிடும் அறச்சீற்றக் கூவான்களில் ஒருவனும் வாய்திறக்கவில்லை, காரணம் அவன் சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்தவன் என்பது மட்டுமே. பணிமூப்பெய்திய பின்னர், இன்றளவும் ‘கல்வி ஆலோசனை’ வழங்கி அதிகாரத்துடன் வளைய வருகிறது இந்த உயிரினம்.

  இதைப்போல எண்ணற்ற அற்பப் பிறவிகள் தங்களுக்கிருக்கும் ‘விஷேச அடையாளங்களின்’ பின்னால் ஒளிந்துகொண்டு குண்டுத் தைரியத்துடன் தங்கள் குற்றங்களைத் தொடர்ந்து வருகின்றன, கேட்பார் எவருமில்லை, அதிலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிச்சயமாக இல்லை.

  அதேசமயம், நடந்தது என்னவென்று தெரியும் முன்பே வானிற்கும் பூமிக்குமாகக் குதித்துத் தன்னிச்சையாகத் தீர்ப்பையும் எழுதிவிட்டு, பின்னர் ஆற அமர விவரங்களைக் கேட்கும் இதுபோன்ற அறிவிலிகளுக்கும் பஞ்சமில்லை.

  இன்று பாலியல் அத்துமீறல் விவகாரத்தை ‘வெடிக்கவைத்துக் கொண்டிருக்கும்’ பேடிகள் இதே குற்றங்களைச் செய்துவரும் பிற அயோக்கியர்களைக் குறித்து பாரபட்சமின்றி பேசியிருக்கிறார்களா? இனியேனும் பேச முன்வருவார்களா? மாட்டார்கள், இதேநிலை இங்கே தொடருமாயின், அடுத்த மேற்குவங்கமாகத் தமிழகம் மாறுமென்பதில் ஐயமில்லை. அதற்குமுன், அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்ச்துக் கொண்டிருப்போர் வாய்திறப்பது அவசியம்.


  • ஐயா, உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் உண்மையாலுமே தமிழரா?

   மற்றபடி.

   /* சென்னையில் உள்ள ‘பெயர்பெற்ற’ கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு அயோக்கியன் பல்லாண்டுகளாகத் தொடந்து பாலியல் அத்துமீறல்களைச் செய்துவந்தது குறித்து ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்தபின்னரும் கூட இன்று நிர்வாண நர்த்தனமிடும் அறச்சீற்றக் கூவான்களில் ஒருவனும் வாய்திறக்கவில்லை, காரணம் அவன் சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்தவன் என்பது மட்டுமே. பணிமூப்பெய்திய பின்னர், இன்றளவும் ‘கல்வி ஆலோசனை’ வழங்கி அதிகாரத்துடன் வளைய வருகிறது இந்த உயிரினம். */

   தாங்கள் அன்புடன் குறிப்பிடுவது, சென்னை தண்டக்கருமாந்திரமான லயொலா கல்லூரியில் ‘பணி’ செய்த என்னருமை யேஸ்ஸுசபை ஜெஸூய்ட் உதிரியார், ஸேவியர் அல்ஃபோன்ஸ் அவர்களா?

   ஏற்கனவே அந்தப் பொறுக்கி குறித்து முழ நீளத்துக்கு எழுதியாகிவிட்டது.

   ஸேவியர் அல்ஃபோன்ஸ் எனும் மாஜி-லயொலாகல்லூரி யேசுசபைப் பெருந்தீனிப் பழம்பெருச்சாளிப் பாதிரி உதிரி – சில குறிப்புகள் 28/10/2020

   ஸேவியர் அல்ஃபோன்ஸ் எனும் மாஜி-லயொலாகல்லூரி யேசுசபைப் பெருந்தீனிப் பழம்பெருச்சாளிப் பாதிரி உதிரி – சில குறிப்புகள்

   இன்னமுமா இந்த உதிரி வெட்கமில்லாமல் கல்வி-கலவி பஜனை செய்துகொண்டிருக்கிறது?

   • தமிழன் Says:

    //நீங்கள் உண்மையாலுமே தமிழரா?//

    ஐயா, உங்கள் கேள்வி நியாயமானதே, ஏனெனில், தீராவிடத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலை அத்தகையது. தீராவிடத்தின் கோரப்பிடியில் சிக்கிச் சிதைவுற்ற தமிழகப் பிரஜைகளில் நானும் ஒருவன் என்றாலும், அதன் கேடுகளையும்/கீழ்மைகளையும், அதனால் தமிழகம் அடைந்த வீழ்ச்சியையும் தாமதமாகவேனும் உணர்ந்திருப்பவன், மீட்சியை விழைபவன், சர்வநிச்சயமாகத் திராவிடனல்லன், ஆகவே தமிழன்.

    //தாங்கள் அன்புடன் குறிப்பிடுவது, சென்னை தண்டக்கருமாந்திரமான லயொலா கல்லூரியில் ‘பணி’ செய்த என்னருமை யேஸ்ஸுசபை ஜெஸூய்ட் உதிரியார், ஸேவியர் அல்ஃபோன்ஸ் அவர்களா?//

    இந்த நபர் நான் குறிப்பிடும் பெரும்பானைச் சிறுபான்மைச் சோற்றின் ஒரு பருக்கைதான் ஐயா, இதுபோன்ற எண்ணற்ற அயோக்கியர்கள் இங்கே பவனி வருகிறார்கள், அவர்களின் குற்றங்கள் அனைத்தும் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கின்றன.

    இன்னும் சொல்லப்போனால் இவர்களில் யார் குற்றச்சரித்திரத்தின் உச்சியில் இருக்கிறார்களோ அவர்களே ‘முக்கியப் பிரமுகர்களாகவும்’, தீராவிடக் கயவர்களின் இயல்பான இணையர்களாகவும் இருப்பார்கள்.

    உதாரணமாக, சமூக அமைதியைக் குலைத்து பயங்கரவாதத்தை வளர்ப்பவர்கள்தான் இப்போது ஓலமிடுவோரின் எஜமானர்களோடு கூட்டணி அமைத்து மக்கள் பிரதிநிதியாகியிருக்கிறார்கள். இதைவிடச் சிறப்பாக சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்ட முடியுமா சொல்லுங்கள்? இது எங்கே சென்று முடியுமென்பதை வரலாறு நமக்குப் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறது, அதை நம் மக்கள் உணர்வது எந்நாளோ?

 2. KMuthuramakrishnan Says:

  எனக்கும் சேஷாத்ரி (தமிழ‌ர்கள் ஸெசாஸ்த்ரி என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள்)என்று ஒரு சீனியர் இருக்கிறார்.வயது 92 மட்டுமே. அவரும் ஐயங்கார்தான். ஒருவேளை அவராக இருக்குமோ?


  • ட்டேய்! எவ்ளோ பேர்டா இப்டீ சேச்சாத்ரீன்னிட்டு பேர் வெச்சிக்கினு கீறாங்கோ? அந்தாள் டீச்சனா?

   தாங்க மிடீய்லயேடா!  மொதல்ல அந்த ஆள் வடெகலயா தெங்கலயா, இன்னா கொலம் கோத்தரம்… சொல்லூ, அவ்னுங்கோ அத்தினி பேரயும் வள்ச்ச்சிப்போட்டி வொதச்சி அம்ரீகா அன்ப்பிட்டா, மிச்சம்பேராவது நிம்மெதியா இர்க்கலாம்…

   (மன்னிக்கவும்)

   (என் பெரியம்மா மகன் சேஷாத்ரி (இப்போது இவருக்குச் சுமார் 200 வயது இருக்கலாம் என நினைக்கிறேன், சுமார் 90 ஆண்டுகள் முன் பார்த்த நினைவு. அன்புடன் ‘சேச்சன்’ எனக் கூப்பிடுவோம்) அந்தக் காலத்திலேயே கொஞ்சம் ரவுடி. ஒருவேளை அவன் செய்திருக்கலாமோ? ஐயங்கார் பெயர்களில் ஊடாடும் ஐயரையும் பாம்பையும் பாத்தா… மொதல்ல…)

   • Alagappaiyengar Seshagiri Says:

    சார், இதில் ‘சேஷகிரி’க்கு விலக்கு உண்டுதானே?


   • இல்லை, ஆனால் ஆமாம்.

    நீங்கள் வயதில் இளைஞர். குறைந்த பட்சம் 90 வயது ஆனால்தான் நீங்கள் குற்றவாளிக் கூண்டில் (=Criminal bucket cage not, © S Ramakrishnan, 2021) ஏற்றப்படமுடியும்.

    தப்பித்தீர்கள்.

 3. வாசு Says:

  அருமை.

  இதைப் படித்தவுடன் என் தந்தை வயதுடைய முதியவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேஷாத்திரி என்பவரை தெரியும். அவருக்கும் இந்த பாலியலுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் நினைவுக்கு வந்தது அவர் ஐந்து பிள்ளை பெற்றவர் நிச்சயம் பலியல் சம்பந்தம் இருக்கும் என்று.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s