ஐயய்யோ! நம் கடலூர் சீனு விடமாட்டார்போல!
July 17, 2019
என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் பலமுறை இதையே சொல்லியாகிவிட்டது. :-(
ஆகவே, என்னை ஏகத்துக்குக் குடையும் ஐந்து கேள்விகள்:
1. வெள்ளைக்காரர்களின், அதுவும் அரைகுறை வெள்ளைக்காரர்களின் புத்தகங்களை மேலோட்டமாக (அவற்றின் அரசியல், மொண்ணைத்தனம், முன்னேபின்னேயில்லாமை, டிகன்ஸ்ட்ரக்ஷன் மண்ணாங்கட்டித் தனங்களைத் துளிக்கூடப் புரிந்துகொள்ளாமல்!) பார்த்துவிட்டு உள்வாங்கி புறம்வாந்தியெடுத்து (அல்லது ஒரிஜினலாகவே!) சிறுதெய்வம் நேனோதெய்வம் மெகாதெய்வம் எதிர்தெய்வம் மேல்தெய்வம் ஃபீமேல் தெய்வம் தந்திரம் மந்திரம் தாந்த்ரீகம் மாந்த்ரீகம் கேம்லின்கம் ஆகமம் ஆகாதடாட்டி என்றெல்லாம் சகலதிக்குகளிலும் அட்டைக் கத்தியைச் சுழற்றிச் சுழற்றி எழுதுவதைக் கொஞ்சமாகவாவது இவர் கட்டுப்படுத்திக்கொள்வாரா?
2. அவருடைய தளத்தில் அவர் தனக்குத்தானே எழுதிக்கொண்டால் பரவாயில்லை. ஆனால் ஜெயமோகன் தளத்தில் இவை தொடர்ந்து வருகின்றன. ஆக, இவற்றை முழுஒப்புதலுடன்தான் ஜெயமோகன் வெளியிடுகிறாரா? (கொஞ்சம் யோசித்தால் ஜெயமோகன் பார்வைகளைத்தான் கடலூரார் ஆம்ப்ளிஃபை செய்வதாகப் படுகிறது, சலிப்பாக இருக்கிறது)
3. (சரி, என்னைப் போன்ற ஒரு போக்கற்றவன் சொல்வதைக் கேட்டுக்கொள்ளவேண்டாம்) ஆனல், கடலூர் சீனுவின் நண்பர்கள், அவருடைய நலம்விரும்பிகள் அவருக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லக்கூடாதா? இப்படியெல்லாம் அட்ச்சிவுடுவதால் என்ன சாதனை செய்ய நினைக்கிறார் என்பதையாவது துப்பறிந்து, பேட்டிகீட்டி வெளியிட்டு என்னைப்போன்ற கையறு நிலையில் உள்ள கூமுட்டை வாசகர்களுக்கு ஞானத்தைப் புகட்டி மோட்சம் அளிக்கக்கூடாதா?
4. அதேபோல, ஜெயமோகனின் நண்பர்கள் நலம்விரும்பிகள் (வெறும் புளகாங்கித வாசகர்கள் அல்ல!) இன்னபிறர் இன்னமும் இருக்கிறார்கள் என நம்புகிறேன். அவர்களாவது ஜெயமோகனுக்கு இதுகுறித்தெல்லாம் எடுத்துச் சொல்லமாட்டார்களா? அப்படியெல்லாம் செய்யாதவர்கள் என்ன மசுத்துக்கு நண்பர்கள், சொல்லுங்கள்?
5. சும்மாசும்மா எனக்கு ‘கடலூர் சீனு இப்படி எழுதியிருக்கிறார், உன் எதிர்வினை என்ன?’ தர மின்னஞ்சல்/செய்தி அனுப்பித் தொந்திரவளிக்கும் அன்பர்கள், தங்களுக்குத் தாங்களே விலாவாரியாக அல்லது விலாநோக, அவருடைய தந்திரமந்திரப் பதிவுகளை டீகன்ஸ்ட்ரக்ஷன் மண்ணாங்கட்டி, வரிவரியாக பிய்த்தெடுத்து விமர்சனத் தெருப்புழுதி வகையறாக்களைச் செய்யமாட்டேனென்கிறார்கள்?
நான் என்ன பெரீய்ய மசுர் நீதிபதியா? அல்லது எனக்கு மட்டும் ஒரு நாளில் 48 மணிநேரங்களா இருக்கின்றன?? என்னை இப்படிப் புலம்ப வைக்கிறீர்களே! ஒரு தேர்ந்த வாசகனாக இருக்க முயற்சிப்பதற்கு அப்பாற்பட்டு, நான் என்ன அப்படிக் கொடும்பாவம் செய்துவிட்டேன், சொல்லுங்கள்?
??
—
July 17, 2019 at 22:45
நண்பர் ஒருவர் அருளிய பிஸிஏகே47 நாயர் அவர்களின் கட்டுரைச் சுட்டி. அவசியம் படிக்கவும். ;-)
ஆனால், இப்படிப் படுமோசமாகவும் பகிரங்கமாகவும் என்னைக் கிண்டல் செய்தெல்லாம் எழுதியிருக்க வேண்டாம். ;-)
“மற்றபடி இப்போதைக்கு கடலூர் சீனு கோவில்கள் பக்கம் சுற்றுவதாக செய்தி கிடைத்தாலே வயிற்றை கலக்கும் .கைவசம் உள்ள ஆகம தந்திர குறிப்புகளை எல்லாம் திரட்டி வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டி இருக்கும் .எங்கு செல்கிறார் என்று சொல்லிவிட்டு சென்றார் என்றால் நாம் தயாராக இருக்க வாகாக இருக்குமே என்று தோன்றும் .சரியாக எதிர்வினையாற்றவில்லை என்றால் ஒத்திசைவு வேறு பரணி பாடுவார்”
நான் பரணிலேறிப் பரணி பாடினால், மக்கள் சரணடைந்து மரணிப்பார்கள் என இவருக்குத் தெரியாதா?
https://vaasipu.wordpress.com/2019/07/16/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf/
இவர் தனக்கிருக்கும் டைரக்ட்/ஹாட் லைன் எழவை வைத்து – நேரடியாகவே தம் நண்பர்களுக்கு, இந்த மாயாமச்சீந்த்ரா தந்திராகமவாதம் குறித்துக் கொஞ்சம் அறிவுரைகளை அளித்தால் என்னவாம்?
July 18, 2019 at 21:09
நண்பர்கள் செய்யலாம்..ஏன் ஒருமுறை அவரை சந்தித்த நானே செய்யலாம். ஆனால் சுற்றியிருக்கும் பூசாரி கூட்டம் செய்ப்பவர்களை harass செய்யும். விவரமறிந்தவர்கள் ஜெமோவோடு உரையாடினால் இப்போதைய ஜாலராக்க்கள் (a.k.a சீனுக்கள்) சாயம் காலி. ஆனால் ஜெமோ-வே ஒரு கட்டத்தில் கடுப்பாகி ‘நீங்கள் என்னை அழிக்க நினைக்கிறீர்கள்’ என்று புளித்த மாவை நம் மீதே அடிப்பார்.
எதுக்கு வம்பு. (இதுக்கே பாருங்க…எத்தனை அனாமதேயங்கள் உங்கள் வலைப்பக்கத்தில் அலறப்போகின்றன என்று).
July 18, 2019 at 21:40
ஐயா, புரிகிறது. சோகமான விஷயம்தான். (ஆனால், இதுவரை எந்த அனாமதேயமும் வரவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்)