தமிழகத்தில் உயர்கல்வி – ‘பிஹெச்டி’க்களும் பரிதாபங்களும் :-(
April 3, 2019
தமிழகத்தில் உள்ள பேரறிவாள பிஹெச்டி அகழ்வாராய்ச்சிக்காரர்களை நினைத்தால் நடுக்கமாகவே இருக்கிறது. ஏனெனில் பாரதத்திலேயே கடந்த பலவருடங்களாக, நம் செல்லத் தமிழகத்தில்தான் இந்த நபர்களின் எண்ணிக்கை (சேர்க்கைப் பதிவு பொறுத்தவரையும்) உச்சாணிக்கொம்பில் இருக்கிறது…
எனக்குச் சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை.
சிலமாதங்கள் முன், மோதி/பாஜக அரசின் கல்வித்துறைச் செயல்பாடுகளைக் குறித்து அறிய சிலபல விவரங்களை எடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் என் சந்தேகங்கள் சில நிவர்த்தியாயின. அதுவரை – தடுக்கி விழுந்தால் தமிழகத்தில் ஏதாவது ஒரு எம்ஃபில்லானுடனோ அல்லது பிஹெச்டி நாரீமணியுடனோதாம் முட்டிக்கொள்ளவேண்டும் போல என நினைத்துக்கொண்டிருந்தேன். எல்லாம் என் சொந்தத் தலைவிதி என என்னையே திட்டிக்கொண்டிருந்தேன். ஆனால்… நிஜம்மாகவே… இப்படி…
ஏன் இந்த பிஹெச்டி விவரம்? ஏனெனில் பெரும்பாலான (ஏறக்குறைய சுமார் 100%) பிஹெச்டி ‘செய்யும்’ ஆராய்ச்சியாளர்களுக்கு மத்திய அரசின்கீழ் இயங்கும் யுஜிஸி (பல்கலைக்கழகங்களுக்கான மானிய ஆணையம்) பெரிய அளவில் மானியம் – மாதாந்திர ஸ்காலர்ஷிப், புத்தகம் வாங்க, ஆராய்ச்சி செய்ய என வருடக் கணக்கில் பணம் கொடுக்கிறது.
இப்படி நிறையப் பணம் வந்தால், தமிழகத்துக்குத்தானே நல்லது, பணப் புழக்கம் அதிகமாகிறது என்றும் பார்க்கலாம். மகிழ்ச்சி. இறும்பூது. வேறென்ன சொல்ல.
கீழே 2017-18 வருடத்தில் பிஹெச்டி/எம்ஃபில் போன்றவற்றுக்குப் பதிவு செய்துகொண்டவர்களின் விவரங்கள்; சொல்ல வார்த்தைகளே இல்லை.
1. பாரத அளவில் நம் தமிழகம், எங்கேயோஓஓஓஓஓ இருக்கிறது. தில்லியின் கதை தனிக்கதை – ஆனால் நம்ம கிட்ட யாரும் வால ஆட்டமுடியாதுடோய்!
2. அகில பாரத எண்ணிக்கையான 161, 412 பேர்களில் 29, 778 பேர் – அதாவது 18.45% பிஹெச்டி ஆர்வலர்கள் நம்மிடம். டமிளேண்டா!
3. அகில பாரத எண்ணிக்கையான 34, 109 பேர்களில் 17, 179 பேர் – அதாவது 50.37% எம்ஃபில் ஆர்வலர்கள் நம்மிடம்! டங்கட் டமிளேண்டா!
4. அதாவது. நாம் எங்கேயோஓஓஓ போய்க்கொண்டிருக்கிறோம். இந்தப் பெரும்படிப்பாளிகளெல்லாம் சேர்ந்து ரவுண்டு கட்டிக்கொண்டு நம்மை ஆராய்ச்சியடி அடித்து, நம்மை உய்வித்தே தீர்வார்கள், நம்மால் தப்பவே முடியாது! சும்மா முன்னால் போனாலே, முன்னோக்கி முயங்கினாலே ‘முனைவர்’ ஆகிவிடலாம்போல!
5. மேற்கண்டதில் 95% தலைப்புகளுக்கும் மேலாக – அறிவியலுக்கோ தொழில் நுட்பங்களுக்கோ கறாரான இலக்கிய/சமூகவியல் ஆராய்ச்சிகளுக்கோ துளிக்கூடத் தொடர்பில்லாத அற்பக் குப்பைகள்; இவையெல்லாம் –
- ‘புறங்கையும் நக்குவதும் – கருணாநிதியின் கவிதைவளம்’ போன்ற அலக்கிய ஆராய்ச்சி,
- ‘பிராமணர்களும், மார்க்கச்சைகளும் – கொங்கை நாட்டின் நறுமணப் பார்வை’ போன்ற பின் நவீனத்துவ சமூக அறிவியல்(!) ஆராய்ச்சி,
- ‘மேலாண்மையும் கீழ்ப்பெண்மையும் – கீழ்மேலை மேற்கீழ் புரட்டுவதின் நவகாலனிய அடிப்படைகள்’ போன்ற பெண்ணீய பித்தளை ஆராய்ச்சிகள்
— இன்னபிற இன்னபிற என்றிருக்கவே சாத்தியக்கூறுகள் அதிகம்.
6. தமிழகத்தின் சாபக்கேடான திராவிடத்தின் காரணமாக ‘அறிவியல் பூர்வமாக’ ஊழல் செய்வது என்பது எல்லாத் துறைகளிலும் புற்று நோயாகப் பரவியிருக்கிறது.
- ஆராய்ச்சி செய்வது,
- அறிவுரையாளர்களை (இவர்களும் கேவலர்கள்தாம்!) அட்ஜஸ்ட் செய்வது,
- குப்பைச் சஞ்சிகைகளில் பணம் கொடுத்து தங்கள் மேலான கட்டுரைகளைப் பிரசுரிப்பது (நம் செல்லமான ஜேஎன்யு/தில்லி கன்னையாகுமார் இப்படி ஒரு குப்பையைப் பதிப்பித்திருக்கிறார் – ஏதோ ஆஃப்ரிகாவின் நிதி நிலை குறித்து),
- ஒருவருக்கொருவர் சொறிந்துகொடுத்து அனைவரும் முன்னேறு(!)வது,
- பிறரின் அயோக்கியத்தனங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் நம் அயோக்கியத்தனங்களைப் பிறர் கண்டுகொள்ளாமல் இருப்பது,
- மாஃபியா குழுக்கள் அமைத்து கல்விசாலைகளைப் பாழாக்குவது,
- துறை வல்லமையை விட அரசியல் வல்லமை பலம் மிக்கது பணம் கொழிப்பது… … என்பவையெல்லாம் திராவிடத்தின் பிரத்யேகக் கொடைகள்!
7. தமிழகத்தைக் கற்காலத்துக்குக் குரியரில் அனுப்பத்தான் இந்தப் படுமோசமான மோசடி நடக்கிறது. இந்த அயோக்கியர்கள் தாம் நம் அறிவுஜீவிகள். போராளிகள். மெல்லத் தமிழகம் இனிச் சாகும். சர்வ நிச்சயமாக.
8. மாறாக, திராவிடர்களை – குறிப்பாக, நம் நாட்டை , நம் கலாசாலைகளை இந்தப் பரிதாப நிலைக்குக் கொண்டு வந்திருக்கும் திமுகபொறுக்கிகளை, இந்த 2019தேர்தலில் ஒழித்துக்கட்டினால் – நமக்கு விமோசனம் உண்டு.
-0-0-0-0-
தமிழகத்தில் – பல தனியார்/அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் ‘பழம் பெருமை’ வாய்ந்த கல்லூரிகளுக்கும் ஆட்டொனொமஸ் கல்விக்கடைகளுக்கும் சிலபல காரணங்களுக்காக (பொதுவாகவே, வேலைவாய்ப்புகளுக்கான நேர்காணல் குறித்தும்) சென்றிருக்கிறேன். நம் பெரியபடிப்புக்காரர்கள் – பெரும்பாலும் அடிப்படையில் குப்பைகள். அறிவிலிகள். அதுமட்டுமல்ல ஊக்கபோனஸாக போங்காட்டக்கார அயோக்கியர்கள். பேடிகள்.
…இந்தக் கழிசடைகளெல்லாம் அகண்ட ஆராய்ச்சியாளர்களாகி எப்படியெல்லாம் நம்மையும் நம் நாட்டையும், மேலதிகமாகச் சந்திசிரிக்கவைக்கப் போகிறார்களோ, எனக்குக் கவலையாகவே இருக்கிறது.
விட்டு வைக்கப் பட்டிருக்கும் ஒன்றிரண்டு போற்றத்தக்க சான்றோர்களும், இப்படிப்பட்ட உதவாக்கரை உதிரிகளால் தீராவிடச் சராசரிச் சூழலால், மனம் வெதும்பி விட்டோடிப் போய்விடுவார்களோ எனவும்.
-0-0-0-0-
என் நெஞ்சு பிஹெச்டியில்லையே! இந்த நிலைகெட்ட பொறுக்கிகளை நினைந்துவிட்டால்… எது எப்படியோ, நானும் இந்த வருடம் ஒரு பிஹெச்டி எழவுக்கு ரெஜிஸ்டர் செய்யலாமா என நினைக்கிறேன். நீங்கள்?
ஒரு கோரிக்கை: பிஹெச்டி ஆராய்ச்சிக்கான ஒரு ஸெக்ஸி தலைப்பை எனக்குப் பரிந்துரை செய்ய முடியுமா? பிற விஷயங்களை நான் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறேன்.
நன்றி! ஏனெனில் நான் ஒரு திராவிடன்.
—
April 3, 2019 at 19:32
It’s a sad story, more so in engineering. Once registered, there’s no stopping them form getting the degree. If the guide is by the side, only death can part the degree and the candidate. There are 3 reviews and a final Viva, but in none of them can reject the candidate. If the candidate makes it to the final, she’s sure to get the degree even if she had the intelligence of an eight year old. The guide takes care of everything by collecting a huge sum from the candidate and disburses judiciously.
April 3, 2019 at 21:23
இதை பற்றி என் நண்பர்கள் வட்டத்தில் நிறையவே புலம்பியிருக்கிறேன்.
இன்னொரு பக்கத்தில் கல்லூரி ஆசிரியர்கள் செய்யும் ஆராய்ச்சி ஊழல்கள். மேற்படிப்பு முடித்தவுடன் துறைத்தலைவர் என்னை கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிய அழைத்தார். சிறிது காலம் ஆசிரியராக இருந்தேன் (இன்றும் அந்த மாணவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது). அப்போது என் சில நண்பர்கள், மற்றும் சீனியர்களும் அங்கே வேலை செய்தார்கள். அதனால் அவர்களின் நிறை குறைகளை (இதுதான் அதிகம்) அறிவேன்.
இப்போதும் சிலர் அங்கே வேலையில் இருக்கிறார்கள். அவர்களின் தகுதிகளை அந்தக் கல்லூரி பெருமையாக அவர்கள் தளத்தில் பதிவு செய்திருக்கிறது. பார்த்து பயந்து போனேன். ஒவ்வொருவரும் AI, NLP, Machine Learning இவற்றில் எல்லாம் 15-20 பேப்பர் எழுதியிருக்கிறார்கள். ML -ல் கொஞ்சம் வேலை செய்வதால் அதில் உள்ள உழைப்பு எனக்குத் தெரியும். இவர்கள் 15, 20 பேப்பர்கள் எழுதும் (அல்லது அடித்துவிடும்) அளவிற்கு அது சுலபம் அல்ல. நண்பர்கள்தான்…இருந்தாலும் அவர்களை திறமையைப் பற்றி தெரியுமே! :(.
இவர்கள்தான் வருங்காலத் தூண்களை உருவாக்குகிறார்கள்.
April 3, 2019 at 21:33
:-( – எனக்கும் இப்படி, தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இப்படி பிஹெச்டி தொழிற்சாலைகளாக மாறி கிட்டத்தட்ட ஒரு மாமாங்கமே ஆகிவிட்டது! என்ன செய்ய.
…அந்தத் தூண்களிலிருந்து உக்ரநரசிம்மர்கள் வெளிக்கிளம்பி இவர்களைத் தம் கோரமாக கோரைப் பற்களாலும் கூரிய நகங்களினாலும் கிழித்தெறிய முடிந்தால் நான் மகிழ்வேன்.
April 4, 2019 at 19:10
Your PhD topic:
திராவிட குஞ்சும் அத’னடி சார்ந்த ‘வீர’மணியும்: ஒரு வரலாற்று பார்வையும் அதன் பின்புலம் குறித்த நுண் ஆராய்ச்சியும்
You asked for a topic and here you have it!
Can it get any sexier?!
April 4, 2019 at 20:41
Thanks so much! Ding Dong!! ;-)
…NEXT?
October 17, 2020 at 15:17
[…] […]