பாஜக அரசின் சிறுபான்மையினருக்கான திட்டம்: ‘கற்றுக்கொள், சம்பாதி!’ – சில குறிப்புகள்
April 2, 2019
இந்த ‘ஸீகோ ஔர் கமாவ்‘ திட்டத்தைப் போலவே பலப்பல திட்டங்கள், புதிதாகவும் (அற்புதமான உஸ்தாத் திட்டம் போல – ஆனால் உஸ்தாத் மிகப்பெரிய கனவுகொண்ட திட்டம் – நன்றாகவும் களமிரக்கப்பட்டிருக்கிறது) இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் குறித்து எழுத சக்தியில்லை, மன்னிக்கவும். மேலும் – இது தமிழில் எழுதப்படுவதால் – இதில் தமிழகத்தைப் பற்றிய குறிப்புகளை மட்டுமே கொடுக்கிறேன்.
ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோற்றுப்பருக்கை பதம்.
2012-13 வாக்கில் முந்தைய அரசாங்கத்தால் இந்தத் திட்டத்தின் முதல் வடிவம் வரையப்பட்டாலும், அது கிடப்பில் இருந்தது, அரைமனதுடன் களத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது – ஏனெனில் மத்திய அரசின் குவியம் வேறெங்கோ இருந்தது. (=கொள்ளை)
மேலும் – காங்கிரஸ் அரசு செய்ததையெல்லாம் பாஜக அரசு உதாசீனப் படுத்தியது என்பதுதான் பரப்புரை. ஆனால் காங்கிரஸ்-திமுக அரசு உதாசீனம் செய்த விஷயங்களையும் தூசிதட்டிச் சிரமேற்கொண்டு செழுமைப்படுத்தி – செயல்பாட்டிலும் இறங்கியிருக்கிறது பாஜக அரசு என்பதுதான் உண்மை.
இந்தத் திட்டத்தின் மூல ஆவணம் இங்கே: http://www.minorityaffairs.gov.in/sites/default/files/SEEKHO%20aur%20Kamao-eng.pdf
இத்திட்டத்தில், முன்னேற்றத்திற்கான பங்குதாரர்களாக, பங்களிப்பவர்களாக – பல தகுதிவாய்ந்த பயிற்சி நிறுவனங்கள் – Project Implementing Agencies (PIAs) – இருக்கின்றன – அவற்றின் மூலமாக ஆர்வமும் செயலூக்கமும் உள்ள சிறுபான்மை விண்ணப்பதார இளைஞர்களுக்கு பயிற்சி மூன்று-நான்கு மாதம் (அனைத்து செலவும் மத்திய அரசினுடையது) அளிக்கப்பட்டு – ஏறத்தாழ 80% வேலைவாய்ப்பும் கிடைக்கிறது; விண்ணப்பம் செய்ய, இவர்கள் கல்விசாலைகளில் படித்துக்கொண்டிருக்கவேண்டும்; பயிற்சி அளிக்கப்படும் தொழில்கள்: அலங்காரம் செய்வது, காஸ்மெடிக்ஸ், ரிபேர் தொழில்கள், மராமத்துவேலைகள் போல உடனடியாக தாங்களே ஆரம்பிக்கக்கூடிய தொழில்கள். இது தவிர ஆஃபீஸ் அஸிஸ்டெண்ட் வேலை, கணிநியை உபயோகித்து அக்கவுண்ட்ஸ்/கணக்குவழக்குகள் பராமரிப்பது போன்றவை.
நம் தமிழக ‘சிறுபான்மையினர்’ இதனாலும் பயன் பெற்றிருக்கின்றனர்.
2017-18ல் VLCC Health Care Ltd. தமிழகத்தில் 120 பேருக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள்.
2016-17ல் தில்லி சந்த்ருஷ்டி எஜுகேஷனல் ஸொஸைய்டி மூலமாக 600 பேருக்குப் பயிற்சி
2015-16ல் ஹைதராபாத் கேப் ஃபௌண்டேஷன் மூலமாக – 1775 நபர்களுக்குப் பயிற்சி;
தில்லி சந்த்ருஷ்டி எஜுகேஷனல் ஸொஸைய்டி மூலமாக 200 பேர்.
தில்லி மஹீஷ் திக்கா ஃபௌண்டேஷன் மூலமாக 450 பேர்.
இப்போதைக்கு இவ்வளவு போதும்.
காங்கிரஸ்-திமுக அரசு இந்தத் திட்டத்திற்காக ஒரு பெரியசுக்கும் செய்யவில்லை. ஆனால் 2014ல் மோதி அரசு வந்தவுடன் – இது நேர்ப்படுத்தப்பட்டது. ஊழலில்லாமல் செயல்பட்டது.
இது முக்கியம்.
-0-0-0-0-
ஆனால் – இந்த எண்ணிக்கைகள் மிகக் குறைவாகத் தோன்றலாம் – ஆனால் இவையெல்லாம் வேலைவாய்ப்புகளை நேரடியாக உருவாக்கித் தருபவை. இது முக்கியம்.
மேலும் இது பலப்பல திட்டங்களில் ஒன்று. சிறுதுளி பெருவெள்ளம்.
இளைஞர்களைப் பிச்சைக்காரர்களாக்கி, இலவசங்களுக்கு அலையும் சோம்பேறிகளாக்கி ஊரார் வரிப்பணத்தில் அவர்களுடைய வாயை அடைக்கும் துரோகங்களல்ல இம்மாதிரி நடவடிக்கைகள். இளைஞர்களை, வெட்டிப் போராளிக் குளுவான்களாக்குவது அல்ல.
மாறாக – பாரதத்தில் அனைவருக்கும் ஒருங்கிணைந்த வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வளர்ச்சியை காத்திரமாக ஆக்குவதே இம்மாதிரி திட்டங்களின் குறிக்கோள்.
நன்றி.
ஆகவேயும், மறுபடியும் மோதி வரவேண்டும்…