ஐயாமார்களே! என்னை விட்டுவிடுங்கள்!! இந்த அரவிந்தன்கண்ணையன் செய்யும் உதாசீன அட்ச்சிவுடல்களுக்கெல்லாம் என்னால் இடஞ்சுட்டிப் பொருள்விளக்கமுடியாது, மன்னிக்கவும்!!!
February 25, 2019
இந்த மனிதர் எனக்குப் பிடிபடவில்லை. என் அனுமானம் என்னவென்றால், அடிப்படையில் இவர், ஒப்புக்கொள்ளக் கூடியவராகவே, ஏன், தலைமேல் வைத்துக்கொண்டு கொண்டாடப்படவேண்டியவராகவே இருக்கலாம் – ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் தஸ்புஸ் என்று அவ்வப்போது எழுதுகிறார், மேலும் ஆனானப்பட்ட அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிவிட்டார் – ஊக்கபோனஸாக, இவர் கையில் நிறைய நேரம் இருக்கிறதுபோல, ஊசிட்டப்பாஸ் வெடிக்க!
ஹ்ம்ம்.. ஆனாலும், அதற்காக ரெண்டு புத்தகங்களைப் புரட்டி நாலு தினசரிகளை வாசித்து நாற்பது டீவி சேனல்களைத் தரிசித்து ‘உள்வாங்கி’ – விக்கிக்கொண்டே விக்கீபீடியா பார்த்து, பொய்ச்செய்திகளைத் தவறாது அளிக்கும் தஹிந்து ஹஃபிங்க்டன்போஸ்ட் எழவையெல்லாம் தொடர்ந்து படித்து முக்குளித்து – அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டிருக்கும் காரணத்தால், லைப்ரரிஆஃப்காங்க்ரெஸ் போய், தட்டாமாலை சுற்றி – பாவப்பட்ட பாரததேசத்தில் கிடந்து உழலும் முட்டாக்கூ இந்தியர்களின் முன்னேற்றத்துக்கான தம் மேலான அறிவுரைகளையும் அறவுரைகளையும் ஆலோசனைகளையும் ‘குறிப்பு’களுடன் நல்லமனதுடனும் மாளாகரிசனத்துடனும் சரமாரியாக அட்ச்சிவுடுவதில், இவருக்கு இருக்கும் ஆர்வம் அதிகம்தான்!
எப்படியும் இவரை என் வயதுடன் பொருத்திப் பார்த்தால், இவர் ரொம்பச் சின்னப் பையராகத்தான் இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது; ஆகவேயும், கொஞ்சம் அதிகமாகவே ‘வெள்ளைக்காரன் சுமக்கும் பாரத்தை’ (whiteman’s burden) அவர்கள் சார்பாகச் சுமக்கும் சுமந்திரராகவும், கொஞ்சம் அசந்தால், மகாமகோபேராசான் ஜெயமோகனுக்குக் கூடத் தெரிவிக்காமல், வெண்முரசுக்குள்ளேயே ரகசியமாகச் சுரங்கம் நோண்டிக்கொண்டு போய் தனக்குத் தானே என, ஒரு செல்லமான அத்தியாயத்தை யாருக்கும் தெரியாமல் டமாலென்று இடைச்செருகி விடும் பராக்கிரமம் மிக்கவராகவும் படுவதால் – ‘ஜெய் விஜயீ பவா, ஸுப்பர்மேன் ஆயுஷ்மான் பவ, செல்லமே, ஆளைவிடும்,’ என்பதைத் தவிர பிறிதொன்று சொல்வதற்கு ஆகச்சிறந்ததாக வேறென்ன செய்ய.
ஒருவழியில் பார்த்தால் ஜெயமோகனும் இவரும் நல்லஜோடி; இவர்கள், அடிப்படையில் நல்லஎண்ணமுடையவர்களாக இருக்கலாம். ஆனால் – சுக்குக்கும் பரிச்சயமற்ற துறைகளில் மேதாவித்தனமான அலாதியான அட்ச்சிவுடல். உட்கார்ந்த இடத்திலிருந்து கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசுவது… கொஞ்சம் பரிதாபமாகவே இருக்கிறது, இந்த நிலைமை! (ஜெயமோகனுக்காவது எழுதும் கலை அழகாகவே வருகிறது, ஆனால் அநீதியம் அகவுக்கு?)
சரி. எதற்கு இவரைப் பற்றிப் போய் மறுபடியும் எழுதுகிறேன்? இது தேவையா?
ஏற்கனவே ஆயிரம் போர்முனைகள், அதுவும் என் மழுங்கிய மூளையை வைத்துக்கொண்டு; வேலைப் பளுவும் (எல்லாம் நானே இழுத்துப் போட்டுக்கொண்டதுதான்) சொற்பமல்ல.
நிலைமை இப்படி இருக்கையிலே – டேய்ங்க்ளா டீங்க்ளா – எனக்கு இச்சமயம் இதெல்லாம் தேவையா, சொல்லுங்கள்?
-0-0-0-0-0-
சரி. உயிர்தரிப்பதற்கு வேறுவழியேயில்லாமல் நிபந்தனையற்று, தகவல்(!)தொழில்(!!)நுட்ப(!!!) சராசரிதேவியைச் சரணடைந்து, தகவலோதகவல் அகவல் அவல்பொரிகடலைக்கு அலைந்து, தற்போது அமெரிக்க அகதியாக (எழவெடுத்த க்ரீன்கார்ட் இல்லையாம்! ஸிட்டிஸன் ஆகி விட்டாராம்!! அதுவும் ட்ரம்ப் ஆட்சியில் ரம்மி ஆடியே!!!) அமோகமாக வாழும் அன்பருக்கு ஒரு சந்தேகம், என்னிடம் போய் கேட்கிறார் – ஏதோ நான் ஒரு இரண்டாம் தமிழ்வாணன் என நினைத்துக்கொண்டிருக்கிறார் பாவம்! ‘மாஸ்டர் ஆஃப் ஆல் ஸப்ஜாட் ஸப்ஜெக்ட்ஸ்’ என எண்ணம்…
அரவிந்தன் கண்ணையன் கட்டுரை (லேட்டஸ்ட் அன்ட் க்ரேட்டஸ்ட்) ஒன்றின் சுட்டியை அனுப்பி அதன் மீதாக ஏழெட்டு கேள்விகள்! ‘இதெல்லாம் சரியா?‘
ஏண்டா டேய்! நீயே வோத்தா இந்த எழவையெல்லாம் சரிபார்க்கமுடியாதா, வொனக்கும் மூளே கீதேடா மூதீ – என்று எனக்கே உரித்தான பண்புடனும் சமனத்துடன் கேட்டால் – இவருக்கு அரவிந்தன் கண்ணையன்போல நுணுக்கமான நுண்ணுணர்ச்சியோடு நுண்மானை விரட்டி நுழைபுலத்தில் அடிக்குறிப்புகளுடன் நுழைத்து சந்தடிசாக்கில் அறிவுரைக்கும் முனைப்புமில்லை, தெம்புமில்லையாம்; ஏனெனில் அவர் பணி(!) புரியும் இடத்தில் வேலைநேரத்தில் வேலைசெய்யவேண்டுமாம், என்ன அநியாயம், சொல்லுங்கள்? செய்வது ஐடி பஜனை வேலை, ஆனால் பேசுவது பெத்த பேச்சு.
ஆனால், அதற்காக நானா கிடைத்தேன்?
டேய், நீயே அவருக்கு எழுதிக் கேளேன் – அவர் போல ரூம்பு போட்டு ரோசிச்சி கைக்கு வந்ததுபோல ‘மனதுக்கு பட்டது’ போல, முன்முடிவுகளுடன் சிலவற்றை மறைத்து பிறவற்றை ஊதிப் பெருக்கியெல்லாம் தட்டச்சு என்னால் செய்யமுடியாது. அவர் எத்தையோ அமேரிக்காவில் உட்கார்ந்துகொண்டு எழுதினால், அதற்கு நான் பாரதத்தில் அல்லாடிக்கொண்டு என்ன செய்யக்கூடும் – என்றெல்லாம் பிரலாபித்தால், ‘நீதாண்டா ஃபன்னியா எழுதுவே!’ சரி, பன்னீ.
அரவிந்தன்கண்ணையனிலிருந்து அடியேன் உட்பட அனைவருக்கும், விஷயஞானம் அற்றவனாக இருப்பதற்கு அடிப்படை மனிதவுரிமையில்லையா? ஆகவே, கண்டமேனிக்கும் கடனெழவே என மேற்கொண்டு கருத்துதிர்க்க அடிப்படை உரிமை இல்லையா, சொல்லுங்கள்? :-(
-0-0-0-0-
ஏற்கனவே எனக்கு, வாழ்க்கையில் கொடும் பிரச்சினை.
[ ஆதாரம்: https://imgs.xkcd.com/comics/duty_calls.png ;-) ]
யாருக்கும் இப்படிப்பட்ட துர்பாக்கிய நிலைமை வாய்க்கவேகூடாது! :-(
இந்த அழகில் கண்டகண்ட விஷயங்களை முழுமையாகப் படித்துவேறு என் மேலான கருத்தை அளிக்கவேண்டியிருக்கிறது; நன்கொடை கொடுக்கிறார்களே என்பதற்காக, இம்மாதிரி ரோதனைகளில் மாட்டிவிடும் ஆசாமிகளிடம், நான் கை நீட்டி, என் சொந்த செலவுக்கு இல்லாமல் ஒரு பள்ளிக்காகவே என்றாலும், துட்டு வாங்கியிருக்கக்கூடாதோ?
கண்ணையன் கெட்டவுடன் சூரியவுதயம், என்ன செய்வது சொல்லுங்கள்!
சரி. அக அநீதியம் அவர்களுடைய கட்டுரை அவருடைய வழக்கமேபோல எம்மாதிரி படுகுப்பையாக இருந்தாலும் – என் மண்டையில் அடித்துக்கொண்டு, வேறுவழியே இல்லாமல், இரண்டு விஷயங்களைக் குறித்து மட்டும் வேண்டாவெறுப்பாக எழுதுகிறேன். (குறிப்பு: ஜெயமோகனின் கும்பமேளா குறிப்புகளை எனக்கு இன்னமும் படிக்க லபிக்கவில்லை)
போதுமாடா?
1. அக இப்படி எழுதியிருக்கிறார்:
“தன்னைக் காண வரும் தலித்துகளைச் சோப்புப் போட்டுக் குளித்து விட்டு வரச் சொன்ன யோகி ஆதித்தியாநாத் புனித நீராடியிருக்கிறார். சோப்புப் போட்டுக் கொண்டாரா என எனக்குத் தெரியாது. “
கிண்டல் செய்யலாம். சரி. நானும் சிரித்துக்கொண்டே நிறைய செய்கிறேன். ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் – யோகி ஆதித்யநாத் அவர்கள் அப்படிச் சொன்னார் எனும் கேவலமான அவதூறுக்கு, ஒரு – ஒரேயொரு, திடகாத்திரமான, சரிபார்க்கக்கூடிய தரவாவது இருக்கிறதா? அக அவர்களால் அதனைக் கொடுக்கமுடியுமா? (சர்வ நிச்சயமாக முடியாது – ஏனெனில் இந்தப் பப்பரப்பா வதந்திச் செய்தி உலாவுக்கு வந்தவுடன், அதனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவது தொடர்பாக, என் உத்தரப் ப்ரதேச ஐஏஸ் நண்பி ஒருத்தியுடன் இதனைக் குறித்துப் பேசினேன், விஷயங்களைச் சரிபார்த்துக்கொண்டேன்; அவள் சொன்னாள் – யோகி பற்றிய இல்லாதும் பொல்லாததுமான பீலாக்களை உலாவவிடுவது, காங்க்ரெஸ்- இடதுசாரி வட்டாரங்களில், ஒரு குடிசைத்தொழில் என்று! ஒரு எடுத்துக்காட்டாக யோகி முஸ்லீம்களுக்கெதிராகப் பேசியதாக ஜோடனை செய்து தயாரிக்கப்பட்ட ஒரு சிறு விடியோவையும் அனுப்பினார்; இப்படியா செய்வார்கள், அற்பர்கள்? சரி காங்க்ரெஸ்காரர்களின் கேவலத்தையே விடுங்கள் – ஏனெனில் அவர்கள் நேருவழியினர்; ஆனால் – ஏன் ‘படித்தவர்களும்’ இம்மாதிரிப் பீலாக்களைச் சரிபார்க்காமல் ஏகோபித்து ‘ஒத்து’ ஊதுகிறார்கள்? என்ன அசிங்கமான விஷமத்தனம் இது!)
ஆனால் – யோகி அப்படிச் சொன்னார் என்பதற்கு அக அவர்கள் அசைக்கமுடியாத தரவு ஒன்றைஅளித்தால், அவரிடம் நான் மன்னிப்பு கேட்கத் தயார். ஏனெனில், என் தவறுகளைத் திருத்திக்கொண்டு என்னைச் செழுமைப் படுத்திக்கொள்வதில் நான் ஏப்போதுமே ஆசையுள்ளவன்.
மாறாக, அக-விடம் காத்திரமான ருசு இல்லையென்றால் அவர், தான் இப்படிப் படுகேவலமாக போகிறபோக்கில் அட்ச்சிவுடுவதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
அக-வுக்கு என்ன, தாம் ஒரு ‘பிரபல தமிழ் அலக்கிய எழுத்தாளன்’ என்கிற விபரீத நினைப்பா?
மேலும் ‘புனித நீராடல்?’ அப்படியொரு பதம் பாரதப் பண்பாட்டில் இருக்கிறதா என்ன? அப்ரஹாமிய அழிச்சாட்டியங்களை பாரதத்தின்மீது கவிழ்த்தவேண்டிய அவசியம்தான் என்ன? இங்கு எல்லா நீராடலும் ‘புனிதம்’தானே! எல்லாமே கங்காமய்யாதானே!
என்ன எழவோடா! நமக்கு, ஒரு யுவகிருஷ்ணா போதாதா? ஏன், வரவர எல்லா மாமியார்களும் யுவகிருஷ்ணா போலாகிறார்கள்? வருத்தம்தான்.
2. இரண்டாவது கேவலமான அட்ச்சிவுடல்:
“1954 மகா கும்ப மேளாவில் நடந்த ஜனநெரிசலில் மாண்டவர்கள் 800. அதற்கு முக்கியக் காரணம் நாகர்களின் முரட்டுத் தனம் தான் என்று அரசாங்க அறிக்கையே சொன்னது. ஒரு அனுமார் கோயில் அருகே அகாராக்களின் ஊர்வலத்தைப் பார்க்க பாதையின் இரு மருங்கிலும் பல்லோர் கூடியிருக்க ஏற்பட்ட நெரி சலில் கூட்டம் ஊர்வலப் பாதைக்குள் சிதற நாகர்கள் அவர்களை இரும்பு சிம்டாக்கள் கொண்டு தாக்க கடைசில் 800 பேர் மரணம். கமலகாண்ட வர்மா சமர்பித்த அறிக்கையில் காட்டமாக எழுதினார்…”
கமலகாந்த் வர்மா என்பவரின் பெயரைக் கமலகாண்ட வர்மா என்று எழுதுகிறார், எம் தலீவர் அக! மூட்ஸ் காண்டம் எனக் கிளர்ச்சிகரமாக எழுதவில்லையே என என் மனம் ஏங்குகிறது. குறைந்தபட்சம் ‘குமரிக்காண்ட தொடுவர்மாக்கலைஞ்ஜர் காண்டமாக எழுதினார்’ என்றாவது, ஒரு திராவிடராக, திருப்தியாக, காண்டு பிடித்த காண்டாமிருகமாக எழுதியிருக்கலாமே! :-(
‘சமர்பித்த‘ என்றால் போருக்குப் பித்தனாக அலைபவனைக் குறிக்குமோ?? ஏனிவர் இப்படியெல்லாம் பூடகமாக எழுதுகிறார், சொல்லுங்கள்? :-(
சரி. இந்த எமகாண்டத்தைத் தாண்டி அக-வின் ஆடுமயிலனைத்த அகவலைப் பார்ப்போம். பிரச்சினை என்னவென்றால், அக இந்த அறிக்கையைப் படிக்காமல் சும்மனாச்சிக்கும் யாரோ சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்! சலிப்புத்தான் வருகுதய்யா.
1. நான், இந்தக் கமிஷன் அறிக்கையை முழுவதும் படித்திருக்கிறேன்; ஏனெனில், 1992 கும்பகோணம் மகாமகம் விபத்தின்போது அதுகுறித்து ஒரு அறிக்கையை (இந்த எழவைத் தேடி, அது கிடைத்தால் பிரசூரிக்கிறேன் – அது ஏதோ உண்மையை வெங்காயம்போல அரியும் குழுவின் அரிக்கை எனும்பெயரில் வந்ததாக மங்கல் நினைவு!) நானும் என் சில மூளையற்ற புரட்சிப்புரட்டு சகநண்பர்களும் எழுதினோம். அது தொடர்பாக, நான் பல மூலஆவணங்களையும் தொடர்புள்ள அறிக்கைகளையும், அவற்றின் பின்புலங்களைப் பற்றியும் படித்தேன். அப்போதுதான் அந்த அறிக்கை பரிச்சயமானது.
2. இந்தக் கமலகாந்த் கமிஷன் என்பதே வெகுதீவிரமாக எதிர்க்கப்பட்டது. ஏனெனில் கமலகாந்த்வர்மா அவர்களின் கமிஷனின் ‘டேர்ம்ஸ் ஆஃப் ரெஃப்ரென்ஸ்’களே களேபரம்; பல அடிப்படைப் பிரச்சினைகள். எவ்வளவு பேர் இறந்தார்கள் எனக்கூட அதிகாரபூர்வமாக விசாரணை செய்யவேண்டாத ஒரு அரைகுறைச் சட்டகம். விஐபி யாத்ரீகர்கள் (நேரு உட்பட) செய்த ஆகாத்தியங்கள்/டாம்பீகங்கள் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கமுடியுமா என்ற கேள்விகூடக் கேட்கப் படவில்லை!
அந்தக் கமிஷனில் மூவர் – கமலகாந்த், முதலமைச்சரின் முன்னாள் அறிவுரையாளர் (பன்னாலால்), நீர்வளத்துறை பொறியியலாளர் (ஏஸி மித்ரா) மட்டுமே! ஹெச் என் குன்ஸ்ரு, அம்பேட்கர் போன்ற சமனமுள்ள தலைவர்களும் விசாரணைக் கமிட்டியில் இருக்கவேண்டும் என ஒரு நியாயமான கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் திரளும் சான்றோர்களும் வைத்தபோது – அதை உத்தரப்ப்ரதேச முதலமைச்சரும், நேருவும் ஒப்புக்கொள்ளாமல் கமுக்கமாக விட்டுவிட்டனர்.
அன்பர் அரைவிந்தன் கண்ணையனுக்கு, கமலகாந்த் கமிஷன் – நூற்றுக்கணக்கானவர்களிடம் பெற்ற வாக்குமூலங்களை விட்டுவிட்டு இரண்டே இரண்டுபேரின் வாக்குமூலங்களை மட்டும் முழுமையாக எடுத்துக்கொண்டது தெரியுமா?
3. ஆகவே சான்றோர்கள் சார்பாக மக்கள் தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது (கமலகாந்த் போலல்லாமல்) திடகாத்திரமாகவும் நுணுக்கத்துடனும் விசாரணை நடத்தியது. பல காந்தியர்களும் இதில் இருந்தார்கள். இதன் அறிக்கை பலவிதங்களில் கமல்காந்த் அறிக்கையைவிடச் செறிவுமிக்கதாயிருந்ததாக நினைவு. (இதனை நான் முழுவதும் படிக்கவில்லை)
4. நேருவும் அந்த கும்ப்மேளாவுக்குச் சென்றார். பலப்பல விஐபிக்களும் புடைசூழ. ஆனால் நெரிசல் சாவுகளுக்குப் பின் (பிற) விஐபிக்கள் எக்கச்சக்கமாகச் சென்றதால் கூட்டம் அலைமோதியது என அறிக்கை கொடுத்து – பின்வரும் மேளாக்களில் விஐபிக்கள் பங்குபெறுவதைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் பேசினார். (ஆனால், தான் போயிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசவில்லை!)
5. விபத்தன்று, அது நடப்பதற்கு முன்பு என்ன நிகழ்வுகள் நடந்தன என்பதைக் கமிஷன் அறிக்கையின் திரட்டு விவரிக்கிறது.
6. நாகர்கள் தற்காப்புக்காக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததற்கு முன்னமேயே (வெகு முன்னரே!) தள்ளுமுள்ளு நெருக்கடிகளால் பலர் இறந்துவிட்டனர். நாகர்களால் தான் பலர் இறந்தனர் என்பது அசிங்கமான பொய். விசாரணைக் கமிஷன் என்ன சொல்லியிருக்கிறது என்பது கீழே!
7. அன்பர் அரவிந்தன் கண்ணையன், இந்த நாகா ஸாதுக்கள் யாத்ரீகர்களை “இரும்பு சிம்டாக்கள் கொண்டு தாக்க கடைசில் 800 பேர் மரணம்” என்று எழுதுவதற்கு ஏதாவது ஒரு ருசுவாவது உண்டா? ‘தாக்கினார்கள்??’
இப்படியா அப்பட்டமாக நிகழ்வுகளைத் திரிப்பார்கள்? ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோ என்று போவான்’ அல்லவா? :-(
8. விபத்துக்கான காரணம் என அந்த கமலகாந்த் கமிஷன் 22 பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது; இம்மாதிரி 22 நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்றும் பரிந்துரைத்தது. அதில் இரண்டே இரண்டுதான் நாகர்கள் பற்றியவை! இத்தனைக்கும் நாகர்களைக் கரித்துக்கொட்டியிருந்தது அந்த அறிக்கை!
9. ஊடகங்கள் இந்த விபத்துக்கு அளித்த பங்கு பற்றி கமலகாந்த் பலமுழநீளம் எழுதியிருக்கிறார். ஆனால் அரவிந்தன் அநீதியம் காமாலைக் கண்ணையனுக்கு வெறும் நாகர்கள் மட்டுமே கண்ணுக்குப் பட்டிருக்கிறார்கள்!
10. நாகர்கள் பற்றிய எதிர்மறைக் கருத்துருவாக்கங்களை ஏற்கனவே மிஷனரிகள் உருவாக்கியிருந்தனர். இவற்றின்படியே வெள்ளைக்காரர்களும் ஒழுகினார்கள். +அசிங்கவுணர்ச்சியை உருவாக்கினார்கள். ‘ஹிந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள்; உடையணியாத கண்ணியமற்ற காட்டுமிராண்டிக் கும்பல்களை மதிப்பவர்கள், பின் எப்படி இருப்பார்கள்’ எனவொரு சித்திரத்தை விரித்தார்கள். நாகர்களின் ஆயுதபாணித் தோற்றத்தை வைத்து குற்றவுணர்ச்சியைத் தூண்டினார்கள். இதன் விளைவாக – ஆங்கிலமோகி அரசியல்வாதிகளும் நீதிபதிகளும் அரசதிகாரிகளும் ஒட்டுமொத்தமாக ஒரு கேவலமான தாழ்மையுணர்ச்சியுடனும் குற்றமனப்பான்மையுடனும் நாகர்களை அணுகினார்கள். கமல்காந்த் அவர்கள் இதற்கு ஒரு விதிவிலக்காக இருந்திருக்கவில்லை. அவ்வளவுதான்.
ஆனாலும் கமலகாந்த் அவர்களால் அளவுக்கு மீறிப் பீலா விடமுடியவில்லை என்பது அவருக்கு ஒரு தகுதிதான்.
ஆனால் பாவம், அரவிந்தன் கண்ணையனுக்கு அம்மாதிரி தளைகள் இல்லை; ஜமாய்க்கிறார்!
-0-0-0-0-0-
பிரச்சினை என்னவென்றால் நண்பர் குறிப்பிட்ட ஏழெட்டு அபத்தங்களுக்கு அப்பாற்பட்டு (இதில் இரண்டுக்கு மட்டுமே என் எதிரிவினை) அக கட்டுரை முழுவதும் ஏகத்துக்கும் அட்ச்சிவுடல். அற்பத் தனமாக – ஹாஜ் செலவுடன் பலபத்தாயிரம் கோடிகோடியாக அரசுக்கு வருமானம் கொடுக்கும் கும்பமேளாச் செலவுகளைப் பொருத்திப் பார்த்தல்! தேவையா??
கான்ட்ரரியன் = கான்ட் அறியன் எனப் பதம் பிரித்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டுமோ? அதாவது ‘என்னால் எந்த எழவையும் புரிந்துகொள்ளவேமுடியாது’ என ஒரு தன்னிலை வாக்குமூலத்தையும் ப்ளாக் பெயரின் வழியாகவே பகீரங்கமாக இந்த அரவிந்தன் கண்ணையன் அட்ச்சிவுடுவதாக?
பின்குறிப்பு: வஸிஷ்டர் போன்ற, அமெரிக்கப் ப்ரும்மரிஷி அரவிந்தன்கண்ணையன் அவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட ‘சீரிய ஏற்பாடுகள்’ எனச் சிலாகிக்கப்பட்ட ‘கும்பமேளா2019 மேலாண்மை’ என்ன பேறுதான் பெற்றதோ என்பதை நினைத்தால் கண்ணீர் மல்கி, ஊக்கபோனஸாகப் பசலை நோய் வந்து என் வளையல்கள் எல்லாம் க்ளிங்ப்ளிங் எனக் கழன்று விழுகின்றன. நான் என்ன பாவம் செய்தேன்? ஏனிப்படி என் தலைவன் என் உள்ளம்கவர் காதலன், என்னிடம் பிணக்கம்கொண்டு, தூரதேசம் போய் அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிவிட்டான்? இருந்தாலும், விடாமல் எமக்கு அறிவுரை தருகிறான்?? :-(
பின்பின்குறிப்பு: தொழில்முறை அறிவுரையாளர் அக அவர்களுக்கு ஒரு கோரிக்கை. நீங்கள் தயவுசெய்து, குறைந்தபட்சம் கீழ்கண்டவற்றைப் படித்துவிட்டுப் பின்னர் உங்கள் கருத்துப்பட்டங்களைப் பறக்கவிடவும்.
1. கமலகாந்த் வர்மா அவர்களின் 1954 அறிக்கை (முழுவதும்) + பொதுமக்களின் விசாரணைக் கமிஷன் அறிக்கை (புருஷோத்தம்தாஸ் டண்டன் இதற்குத் தலைமை வகித்தார் என நினைவு)
2. காமா மக்லீன் அவர்களின் கும்ப்மேளா நிகழ்வுகள் குறித்த 2008 வருட புத்தகம்: https://www.amazon.in/Pilgrimage-Power-Kumbh-Allahabad-1765-1954/dp/0195338944
3. பாரதீயவித்யா பவனின் கும்ப்மேளா குறித்த 1955 வருட புத்தகம்: https://www.amazon.in/Kumbha-Festival-Dilip-Kumar-Roy/dp/817276426X
4. 1990 வாக்கில் வெளிவந்த கும்ப்மேளா குறித்த தடிமன் அமெரிக்க காஃபிடேபிள் புத்தகம் (la jolla பக்க கணேஷ் பதிப்பகம் என நினைவு – எழுத்தாளர்கள் பெயர் மறந்துவிட்டது :-( அழகான படங்கள் இதில் இருந்தன)
-0-0-0-0-
ஆனால் ஐயா அரவிந்தனாரே! அதற்கெல்லாம் உழைக்க வேண்டுமல்லவா? ஆகவே, தொடர்ந்து விக்கிபீடியா படித்து தொடர்அறிவுரைகள் தரவும். இந்தியாவில் இருக்கும் இந்தியர்கள் பாக்கியவான்கள். இகலோக ராஜ்ஜியம் அவர்களுடையது.
நன்றி!
…ஐயய்யோ, மறந்தேபோய்விட்டேனே! யுவகிருஷ்ணாவின் மானசீக குருவாக மாறியதற்கு வாழ்த்துகள்!
:-))
அக புகழ்பாடும் சில காட்டுரைகள்:
February 25, 2019 at 21:29
அவருடைய சந்திரசேகரரும் காடுவெட்டி குருவும் வாசித்திருக்கிறீர்களா? இருவரையும் ஒப்பிட்டு மிகச் சிறப்பாக எழுதியிருப்பார்
February 26, 2019 at 07:36
ஐயா, நீங்கள் நல்லவரா கெட்டவரா?
ஏனிப்படி?
இன்னொரு கேள்வி: நீங்கள் என் நலவிரும்பியா?
:-)
நான் அதனைப் படிக்கவில்லை; படிப்பதாகவும் இல்லை. ஏனெனில், ஒரே அலுப்பாக இருக்கிறது.
அதனைப் பற்றிய ஒரு சாராம்சத்தையும் உங்கள் எதிர்வினைகளையும் நீங்கள் ஏன் எழுதக் கூடாது? உங்களுக்கு விருப்பம் இருந்து அதனை எழுத்தில் வடிகட்டி அதனை எனக்கு அனுப்பினால், தாராளமாக அதனைத் தரவேற்றுகிறேன். நீங்களே அதனை உங்கள் பக்கம் ஏதாவதொன்றில் பதித்து அதற்கான சுட்டி கொடுத்தால் அதனையும் அவசியம் படிக்கிறேன்.
நன்றி.
:-(
February 26, 2019 at 08:19
அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். கிடைத்தால் அவசியம் பகிர்கிறேன். சாராம்சம் இது தான் இருவருமே அப்பட்டமான கேஸ்டிஸ்ட். பாவம் சந்திரசேகரருக்கு உள்ள புனித பிம்பம் குருவுக்கு கிடையாது. பார்ப்பனர்களை அது கடுமையாக சீண்டியது உண்மைதான்
February 26, 2019 at 08:21
நல விரும்பிகள் மட்டும் தான் பின்னூட்டமிட வேண்டுமா நல வெறுப்பிகள் இடக்கூடாதா :)
February 26, 2019 at 08:26
சரிதான்!
தாங்கள் வெறுப்பியா வெறுப்பரா? ;-)
ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் நான் ஃபேஸ்புக்குடன் மாரடிப்பதில்லை.
February 26, 2019 at 11:30
ஸோ கால்ட் முற்போக்கு பார்ப்பனர்களே அதனால் சீண்டப்பட்ட போது குறைந்தபட்சம் அத்தகைய ஒரு பதிவு இருக்கிறது என்பதை அ.க குறித்து எழுதும் நீங்கள் அறிய வேண்டாமா. ஃபேஸ்புக்கில் இல்லாவிட்டாலும்
February 25, 2019 at 21:39
கான்ட்ரரியன் = கான்ட் அறியன் எனப் பதம் பிரித்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டுமோ? அதாவது ‘என்னால் எந்த எழவையும் புரிந்துகொள்ளவேமுடியாது’
உண்மையிலேயே ஜொலிக்கிறீர்கள் சார்!
February 26, 2019 at 07:32
ஐயா, ஜொலிப்பெல்லாம் இல்லை. வெறும் வெறுப்பும் கழிவிரக்கமும்தான்.
நம் தமிழக ‘அறிவியக்க’த்தின் செழுமையைக் குறித்து ஒரு ஆற்றாமை, அவ்வளவுதான்!
:-(
February 26, 2019 at 10:44
விக்கிபீடியா அ.க. அண்ணனுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும்.
இனமேல் நானும் விக்கி படித்து, சுயபுகழ்பாடி, அண்ணன் அக போல்
பெரீ…….ய ஆளாகப் போகிறேன். 😊
February 26, 2019 at 11:34
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஓர் அருமையான எதிர்வினை.திரு.அரவிந்தன் கன்னையன் நான் வாழ்ந்த தஞ்சாவூர்காரர்.அதுவும் எங்கள் பேட்டையைச் சார்ந்தவர். அவரை நீங்கள் இப்படி வாருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
அவருடைய ‘கான்ட்ரரியன் = கான்ட் அறியன்’ பலமுறை என்னை எதிர்வினை ஆற்றத் தூண்டும்.ஆனாலும் வயதுகாரணமாகவும்,சோம்பேறித்தனத்தாலும் போகட்டும் விடு என்று விலகிவிடுவேன்.உங்கள் எதிர்வினை நானே சொன்னதுபோல அமைந்து விட்டதால் எனக்கு அற்ப சந்தோஷம்.
இந்த ‘விக்கல் கொடுக்கும் பீடியா’ பலரையும் தங்களைப் பேரறிஞர்களாக கற்பனைக் கோட்டை கட்டிக் கொள்ளும் மனநிலைக்குத் தள்ளி விட்டது.நான் விக்கிபீடியாவை முற்றிலுமாகத் தவிர்க்கிறேன்,வெறுக்கிறேன்
February 26, 2019 at 13:58
நன்றி, பிரச்சினை என்னவென்றால் நம் பிதாமகர்களின் ஆழத்துக்கு (அதாவது கிடுகிடு பள்ளத்துக்கு) அளவேயில்லாமல் போய்விட்டது.
விக்கிபீடியாவுக்கும் ஒரு தேவை இருக்கிறது; ஒருவிதமான பின்புலமோ நம்பகத்தன்மையோ இல்லாமல் மேலோட்டமாக விஷயங்களைத் ‘தெரிந்து’கொள்ள அது ஒரு நல்ல கருவி. சொல்லப்போனால் என்னைத் தீவிரமாக சுயபரிசோதனை செய்து அறிந்துகொள்ள நானும் அவ்வப்போது அங்குபோவது வழக்கம்: https://en.wikipedia.org/wiki/Othisaivu_Ramasami
ஆகவே, தாங்கள் விக்கிபீடியாவைக் கரித்துக்கொட்டுவதை ஆட்சேபிக்கிறேன்.
நன்றியை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.
😡
February 26, 2019 at 12:44
Sir,
quote;
‘அன்பர் அரைவிந்தன் கண்ணையனுக்கு’
Unquote;
An unintentional mea culpa ?
Sir, He’s all praise for Mr.Ranjith, the director who made two movies with Mr.Rajni sub-par and those moves got thrashed by general audience(flops).
You must be knowing the fact that AK was the host of JeyMo when he visited USA few years ago ..AK himself acknowledged that he is only getting used to writing in Tamil (well-versed in English as you pointed out rightly).
He did exhibit bibliography of all that he’s wanting to convey.
Thanks for your efforts in highlighting the gaps…he will read it and rebut.
Regards
SB
February 26, 2019 at 13:47
Sir, that was no faux pas; it was intentional. It alludes to a semi-formed life, with no scope for significant intellectual capacities.
That aside, 1) I do not read whatever he writes, so dunno what he has written about fillums and I don’t care 2) like host, like hostage 3) if he is learning to write, he had better do it really well, based on evidence – and not merely based on his cushion seat – and 4) he can take what I have said to improve himself.
He can do a rebuttal – but he has to bring in HARD facts/evidence, poor thing.
Or, everyone can be like Ramachandra Guha developing a thick skin.
However I doubt whether anything will change. People are happy in their mediocre cocoons, yours truly included.
Thanks for your comments.
February 28, 2019 at 11:37
[…] கண்ணையன் அவர்களைப் பிடித்து உலுக்குகிறேன் என்று. தொடர்ந்து காத்திரமாக எழுதும் […]
March 7, 2019 at 13:04
[…] […]
August 16, 2019 at 06:27
[…] அன்று காலையில் பதித்தேன் – அதனைச் சொடுக்கினால் வரும் சுட்டியில் சிலகாலம் முன்பு(ம்) உங்கள் […]
April 9, 2020 at 17:54
[…] […]
February 11, 2021 at 10:07
[…] […]
April 8, 2021 at 14:30
[…] பலப்பல எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக, கும்பமேளா குறித்து, வெட்கங்கெட்டு ஏக… அவர் இதுவரை சரிசெய்யவில்லை. (பழைய […]