திமுக பிரச்சார பீரங்கி மனுஷ்யபுத்திரன்: திமுகவின் தொலைநோக்கற்ற திட்டங்களாலும் வெற்றுச் செலவீனங்களாலும் தமிழகம் பல்வேறு துறைகளில் வெகுவாகப் பின்தங்கிவிட்டது!
February 22, 2019
:-)
…அது மட்டுமல்ல; “திமுகவின் ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடும் விலைவாசியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகக் கீழிறக்கிவிட்டது!”
“அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் [2011] அடைந்திருக்கும் வெற்றி மிகப் பெரியது. அது சுத்தமான தெட்டத் தெளிவான தேர்வு. …
…ஆனால் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வினால் பெருவாரியான மக்கள் தாங்கள் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வினையே அடைந்தார்கள் என்பதை கருணாநிதி புரிந்துகொள்ளவே இல்லை.
மின்சாரத் தட்டுப்பாடும் விலைவாசியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகக் கீழிறக்கிவிட்டது. தி.மு.க. அரசினால் இதைத் தடுத்து நிறுத்த எதுவுமே செய்யமுடியவில்லை.
தொலைநோக்கற்ற திட்டங்களாலும் வெற்றுச் செலவீனங்களாலும் தமிழகம் பல்வேறு துறைகளில் வெகுவாகப் பின்தங்கிவிட்டது. ஒரு பெரிய காயத்திற்குத் தான் அளிக்கும் ஒத்தடம் பற்றி கருணாநிதி அதீத தன்னம்பிக்கையுடன் இருந்துவிட்டார்.
மேலும் தி.மு.க.வின் உள்ளூர் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளை உற்சாகமாக அரங்கேற்றிக்கொண்டிருந்த காலத்தில் அ.தி.மு.க. உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து தமிழகமெங்கும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. மக்களின் பெருகிவரும் அதிருப்திக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியை அடிமட்டத்திலிருந்து ஜெயலலிதா படிப்படியாக உருவாக்கினார்.“
-0-0-0-
மேற்படி – 2011 ஜூன் மாதத்திலேயே சூட்சும தரிசனம் வழியாக, வரவிருக்கும் 2019 பொதுத்தேர்தல் பற்றியும் சொன்னார் அண்ணன் மப்புவார்!
இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இசுடாலிரும் அவருடைய சொந்த/வாடகை/உறவின இன்னபிற திராவிட தீவட்டிக் கொள்ளைக்காரக் குடும்பங்களும், தமிழகத்தை மட்டுமில்லாமல் பாரதத்தையே ஒட்டு மொத்தமாகச் சூறையாடிவிடுவார்கள்.
ஆகவே, மக்கழே! என்னெருமைத் தமிழ் மக்கழே!!
மப்புவார் சொல்வார்த்தை அமிர்தம் எனவறிந்து திமுகவை, வரவிருக்கும் லோக்சபா தேர்தல்களிலும் விரட்டியடிப்பீர்!
துப்புரவாக ஒழித்துக் கட்டுவீர்!
நமக்கு சர்வ நிச்சயமாகத் தேவை, மத்தியில் திமுக கொடும்பாவிகளின் (அதாவது, புறங்கையை நக்குபவர்களின்) ஆகாத்தியம் அற்ற ஒரு ஆட்சி.
அயோக்கியக் கனிமொழிகளையும் ஆஇராசாக்களையும் பசிதம்பரங்களையும் ஸோனியாராஹுல்வத்ராக்களையும் மிராசொலி மொறான்களையும் இசுடாலிர்களையும் டிஆர்பாலுக்களையும் இன்னபிற *நிதிக் குளுவான்களையும் மாமியார் வூட்டுக்குள்ளே தயவுதாட்சணியமற்றுச் சட்டரீதியாகத் தள்ளும் ஆட்சி.
தமிழகத் திராவிடப் பிரிவுவாதிகளையும், நக்கல்பாரிகளையும், விசிலடிச்சான் போராட்டக் குஞ்சாமணிகளையும், ஜாதிவெறியர்களையும், மனிதவுரிமைமுதலாளிகளையும், வாயோரநுரை தள்ளும் வெறியர்களையும், ஜிஹாதி/இவாஞ்ஜெலிக்கல் அற்பர்களையும், இன்னபிற முன்னேற்றஎதிரிகளையும் செயலிழக்க அல்லது துப்புரவாக இல்லாமல் செய்துவிடும் ஆட்சி.
அமையப்போகும் அந்த ஆட்சியானது, பிற திராவிட முயக்கங்களேயற்றதாக இருந்தால் மிகவும் நன்று. வேறு வழியே இல்லை என்றால் பரவாயில்லை; ஏனெனில், அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் – பின்னவற்றைப் பொறுத்தவரை!
திமுகவும் அதன் ஊழலாளக் கொலைகாரத் தலைமையும் (ஒரேயொரு எடுத்துக்காட்டாக, நினைவில் இருக்கிறதா, அண்ணாநகர் ரமேஷ் குடும்பத்தின் ‘மரணம்?’) வேரறுக்கப் படவேண்டும்.
நமக்கு ஒரு அத்தியாவசியமான தேவை இருக்கிறது; ஹமே சாஹியே ஏக் ‘திராவிட் முக்த் தமிழ்நாடு.’
…பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகிறது என்று. தமிழகத்துக்கு இந்தத் தீவட்டிக்கொள்ளைத் தீராவிடர்களிடமிருந்து நிரந்தர விமோசனம் கிடைக்குமா என்று.
நம்பிக்கைகளில்லாவிட்டால் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் போய்விடுகிறது அல்லவா?
- மனுஷ்யபுத்திரன்: கருணாநிதியின் பிள்ளைகளாக/உறவினர்களாக இருப்பதாலேயே அதிகாரம் தங்கள் பிறப்புரிமை என்றும் கருதினார்கள்! வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள்!! 21/02/2019
- மனுஷ்யபுத்திரன்: கருணாநிதி, தாம் சுருட்டிய பணத்தை, ஓட்டு வாங்கத் திருப்பிக் கொடுத்த இரட்டிப்பு ஊழல்களுக்காகத் தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்! 20/02/2019
- மனுஷ்யபுத்திரன்: திமுக கனிமொழி தார்மீக உணர்வற்ற ஊழல்வாதி 19/02/2019
February 22, 2019 at 14:36
நீங்கள் என்ன தான் சொன்னாலும் மப்புவார் அவர்கள சூட்சும தரிசனம் மூலம் இப்போதைய தேர்தலுக்கு அன்றே சொன்னதை பாராட்டியே தீர வேண்டும்.