அஆஇ எப்படி – ஒரு அரிச்சுவடி

February 28, 2019

ஒரு அன்பருக்குக் கோபம். ஏன் அரவிந்தன் கண்ணையன் அவர்களைப் பிடித்து உலுக்குகிறேன் என்று. தொடர்ந்து காத்திரமாக எழுதும் (அதாவது, அவர் பார்வையில்!) ஒரு சிலரையும் இப்படி வாரலாமா என்று. ஏனிந்தக் கொலைவெறி ஸர்ஜிகல்ஸ்ட்ரைக் என்று. அவர் அடிப்படையில் நல்லவர் என்று.

காத்திரமாக? &^$ @ !(+%  என்னய்யா சொல்கிறீர்?? :-(

-0-0-0-0-

ஐயா அன்பரே! அக-வார் உலுக்கப்படுவதாக அல்லது வாரப்படுவதாக உணர்கிறாரா என்பது வேறுவிஷயம். பொதுவாகவே, வாய்ச்சொல் அறிவுஜீவிய வீரர்களுக்கு (அடியேன் உட்பட) தோலின் தடிமம் அதிகம். ஒன்றைப் பற்றி உளறிவிட்டுக் குண்டிமண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு இன்னொன்றுக்குச் சென்றுகொண்டே இருப்பார்கள்.

மேலும், நான் அரவிந்தன்கண்ணையனாரை மட்டும் உலுக்கவில்லை. உங்கள் நண்பரான ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்ராமகிருஷ்ணன் எனப் பலரையும்தான். என்னையுமே கூட சுயகிண்டலால் உலுக்கிக்கொள்கிறேன், உமக்குத் தெரியாததல்ல.

ஆனால்,  காத்திரம் மூத்திரம் என்றெல்லாம் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லையானாலும் உங்களை நான் மதிக்கிறேன். ஏனெனில், உமக்கு நான் சிலபலவிதங்களில் கடமைப் பட்டிருக்கிறேன்;  எடுத்துக்காட்டாக என் மண்வெட்டிதாச  வரலாறுஉளறாறு ‘ஆராய்ச்சி’களுக்கெல்லாம் நீங்கள் உம் சொந்தக்கணக்கில் ஜேஸ்டோர் தளத்திலிருந்து நான் பெறவிழையும் கட்டுரைகளை எனக்கேஎனக்காகவென்று ஏகத்துக்கும் தரவிரக்கம் செய்து அனுப்புகிறீர்கள். ;-)

ஆகவே கீழ்கண்ட சொற்றொடர்களைப் படிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

1. நான் எழுதியது, சர்வநிச்சயமாக ஸர்ஜிகல்ஸ்ட்ரைக் விவகாரம் அல்ல. எனக்கு வேண்டுமென்கிற அவகாசம்/நேரமும் பொறுமையும் இருந்தால், அது எப்படியிருக்கும் என்றால் – அரவிந்தன்கண்ணையன் அவர்களின் ஒவ்வொரு அபத்தப் பதிவுக்கும் (அதாவது, எல்லாப் பதிவுகளுக்கும்) எதிர்ப்பதிவினைத்  தொடர்ந்து (தரவுகளோடு) அளிப்பேன்; ஆனால் 1) எனக்கு அலுப்பு, நான் பொருதுவதற்கும் ஆசாமிகளுக்கு ஒரு அடிப்படைத்தரம் வேண்டும் இல்லையென்றால் என் பக்கத்திலிருந்து வெறும்கிண்டல் தாம் வரும் 2) என் நண்பர் ஒருவர் அவரைப் பற்றிக் குறிப்பிட்டது போல அவருடைய மனப்பான்மையை, ‘ஊனமுற்ற சைதன்யம்‘ என விவரிக்கலாம், ஆகவே.

2. அரவிந்தன்கண்ணையன் தொடர்ந்து எழுதுகிறாரா எனத் தெரியாது. ஆனால் – யாராவது அவர் எழுதிய கட்டுரையின் சுட்டியை அனுப்பினால், எதற்காகவாவது பரிந்துரைத்தால் படிப்பதுண்டு. அவ்வளவுதான். மேலும்  – நானோ / அவரோ தொடர்ந்து எழுதினாலும் எழுதாவிட்டாலும் தமிழுக்குச் செழுமையோ தாழ்ச்சியோ வளர்ச்சிக்குப் பங்கமோ இல்லை. எல்லாம் காலட்சேபம்தான்! கேளிக்கைதான். ஏன், இதையே நான் – சாரு, எஸ்ரா, ஜெயமோகன் என அனைவருக்கும் சரியாகத்தான் பொருந்திவரும் எனச் சொல்வேன்.

3. காத்திரம்? அரவிந்தன்கண்ணையன்?? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடாதீர்கள், ப்ளீஸ்! அவரை ராமச்சந்திரகுஹா ஸமஸ் என்ராம் ரேஞ்சுக்கு இறக்கிவிடாதீர்!

4. அன்பரே, அவர் நல்லவராக இருக்கலாம்; உங்களுக்கு அறிமுகமானவராக இருக்கலாம். மறுபடியும் சொல்கிறேன் – தயவுசெய்து,  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடாதீர்!

நான் அவருடைய காமாலைக் கண்ணைய கருத்துப்புரட்டுக்குத்தான் எதிர்ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறேன், கவனிக்கவும். மேலும் உங்கள் நண்பர் – ஒரு ட்ரென்ட்டில் ஒரு அலை, அவ்ளோதான். இந்த ட்ரென்ட்டில் கத்திக்கப்பல் விடும்பலர் இம்மாதிரி ‘நேற்று நடந்த விஷயத்தைப் பற்றி இன்று ஏனோதானோ என பரீட்சைக்குப் படிப்பதுபோல தூங்கிக்கொண்டே படித்து ‘overnight expert’ ஆகி, நாளை அதுகுறித்து விலாவாரியாக மேலான கருத்துகளை‘ அட்ச்சிவுடுபவர்களாக இருக்கிறார்கள்.

அவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது, சொல்லப்போனால் தெரிந்துகொள்ளவும் ஆசையில்லை. எனக்கு, அவர் அட்ச்சிவுடுவதைத் தான் பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே தவிர அவருடன் எனக்கு வேறெந்த பிணக்கும் இல்லை. அவர் நல்லவராகவே தொடரட்டும். ததாஸ்து.

5. ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் ஐயோவென்று போவான்!’ – இப்படிச் சொல்வது அறிவியல் பூர்வமானதல்ல எனச் சொல்லலாம்; ஆனால் பலவிதங்களில் எனக்கு, பாரதிக்கு அப்பாற்பட்டு, ‘கர்மா’ எனும் – ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது பிடித்திருக்கிறது, அது என் வாழ்க்கையில் ஒரு பிடிப்பைத் தருகிறது; பல சமயங்களில் இதனைப் ப்ரதியட்சமாகப் பார்க்கிறேன்கூட. ஆக – என் எதிர் வினைகளை, அவருடைய ‘கர்மா’வின் பலன் என எடுத்துக்கொள்ளலாம்.

6. நம் அனைவருக்கும் படிப்பறிவு வாய்ப்பதில்லை; சிலருக்கு வாய்க்கிறது ஆனால் உபயோகப் படுத்திக்கொள்வதில்லை. ஆக, படிப்பறிவு பெற்றவர்களுக்கு அல்லது அது லபிக்கக்குடிய சாத்தியக் கூறுகள் இருப்பவர்களுக்கு – சிலபல அடிப்படைக் கடமைகள் இருக்கின்றன. அதில் தலையாயது: பீலா விடக்கூடாது.

ஓரளவு படிப்பறிவும் யோசிக்கும் திறனும் உள்ள மானுடர்கள் (அல்லது மானுஷிகள்) நம்மிடம் குறைவு. தமிழகத்தில் இது, திராவிடத்துக்கு நன்றியுடன், இன்னமும் மோசம்.

7. ‘பாலா’ எனும் ஜெயமோக வாசக அன்பர் ஒருவர், ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

” நான் சந்திக்கும்,உணரும் விஷயங்களை, உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தரவுகளைச் சரிபார்க்காமல் எழுதுவதில்லை. தொழில்துறைகளில், தரவுகளின்றிப் பேசுதல் பாவம். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, இதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் – ‘In God we trust. For the rest, we demand Data!’

அட்சரத்துக்கு லட்சம்பொன். பாலாவைக் கட்டி முத்தம் கொடுக்கவேண்டும்போல இருக்கிறது. என்னமாச் சொல்லிவிட்டார்! இனிமை!

இவர் தொழில்துறை என்று குறிப்பாகச் சொல்கிறார். ஆனால், நான் இதனை எல்லா துறைகளுக்கும் விரிப்பேன், அலக்கியம் உட்பட. அதாவது – எந்தத் துறையிலுமே, தரவுகள் இல்லாமல் பேசுவது பாவம். மானுடத்துக்குச் செய்யும் கயமைத் துரோகம். அலக்கியத்தைப் பொறுத்தவரை – வாசகர்களுக்குச் செய்யும் அவமரியாதை.

அதேசமயம் கற்பனை/புனைவு என்பது வேறுஜாதி என்பதையும் உணர்கிறேன். பலசமயங்களில் கட்டுரைகள் என எழுதப்படுபவைகளும் பக்கா புனைவுகளே; ஜெயமோகன் அவர்களின் கட்டுரைகள் முக்காலேமூன்று வீசம் வெறும் புனைவுகளே. தரவில்லாமல் கற்பனைக்குதிரையை அட்ச்சிவுடுபவையே.

8. அதே அன்பர் பாலா, தொடர்கிறார்:

” வேளாண்மை, பொருளாதாரத் தளங்களில், என் அனுபவங்களை, அதையொட்டி நான் படித்த விஷயங்களை மட்டுமே எழுதுகிறேன். மண்டபத்தில் யாரோ எழுதிக்கொடுத்ததைச் சொல்வதில்லை. கீழிருந்து, உழைத்துத்தான் மேலே சென்றிருக்கிறேன். ஓரிரவில் உயர்நிலையில் பணிபுரியத் தொடங்கிவிடவில்லை. தன் துறை இயங்கும்செயல்தளங்களுடன் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ளாதவர்கள் நீடித்து இயங்குதல் கடினம்.”

எனக்கும் 50+ வயதாகிறது.  பொன்னூஞ்சலாடும் இளமை. வயோதிகத்தை எட்டிவுதைக்கும் மடமை. அடிப்படையில் ஒரு பொறியியலாளன். 35 வருடங்களுக்கு மேலாக பல துறைகளில் (வியாபாரம், எலக்டிரிகல்/டெக்ஸ்டைல்ஸ்/வங்கி/பதிப்பகம், எலக்ட்ரானிக்ஸ் ஹார்ட்வேர், தச்சுவேலை, ப்ளம்பிங் உள்ளிட்ட கைவேலைகள், பொறியியல்/தொழில்நுட்ப வடிவமைப்பு, தோட்டவேலை, ஊர்சுற்றல் போன்று பல தொழில்களில்/துறைகளில் ஈடுபாடு.

அடிமட்டத்திலிருந்துதான் ஒவ்வொரு விஷயத்திலும் தொடங்கினேன். இப்போதும் அதே அடிமட்டத்துக்குச் சென்று வேலை செய்யமுடியும். நான் ஒரு விட்டேற்றி உயரதிகாரியாக இருந்ததேயில்லை. சிலபல தொழில் முனைவுகள், ஒரு மென்பொருள்கடை உட்பட. சில ஊத்திமூடிக்கொண்டன. சில அப்படியில்லை. தற்போது ஒன்றரை மாமாங்கத்துக்கும் மேலாக குழந்தைகளுடன் கல்வி.  இதற்கிடையில் அண்மையில் இரண்டு வருடங்கள் போல ஒரு அரசுப்பள்ளிக்கல்வி தொடர்பான ஒரு பெரிய முனைவில் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தேன். (ஸ்ஸ்ஸ்… அப்பாடா!)

1991 வரை கொஞ்சம் தீவிரமாகவே அலக்கியத்தில் ஈடுபாடு. மோகம். அந்தவருடம் ஏற்பட்ட சில அபூர்வ அனுபவங்களால், நம் தமிழ் இலக்கியவாதிகள் ஏறத்தாழ அனைவரும் (முற்போக்கு, வானம்பாடி, மார்க்ஸிய, திராவிட, சிறு/பெறு/குறு பத்திரிகையாள… எனப் புரிந்துகொள்ளவும்) எப்படிப்பட்ட அயோக்கியர்கள், பச்சோந்திகள் என நேரடியாக அறிந்துகொண்டேன்.

வெறுத்துப்போய், பின்னர் 2011 வரை வெறும் நுகர்வாளன். இருபது வருடங்களுக்கு ஒன்றும் வெளியில் எழுதவில்லை, பேசவுமில்லை. நிறைய, நிறைய்ய, ஏறக்குறைய திகட்டும் அளவுக்குப் படித்தேன், இப்போதும் படிக்கிறேன். என்னை ஒரு தேர்ந்த, வரலாற்றுமாணவனாக நினைத்துக்கொள்பவன் நான். இது தொடர்பாக, நம் பாரதத்தை அறிந்துகொள்வதற்காகவென, பல்லாயிரம் புத்தகங்கள் படித்திருப்பேன். நூற்றுக்கணக்கான சான்றோர்களோடு பேசியிருப்பேன். இன்னமும் போகவேண்டிய தூரம் அதிகம்.

9. 2011ல் தேர்தல் சமயம் – பொறுத்துக்கொள்ளவே முடியாமல், திமுக எனும் பொறுக்கிக்கட்சியை ஒழிக்கவேண்டும் என (தனியாளாக அல்ல, சிலபல அன்பர்களுடன்தான்) இந்த ஒத்திசைவு ப்ளாக் எழவை ஆரம்பித்தேன். அதாவது, சரியாக இருபது வருடங்களுக்குப் பின். நான் ‘நேற்றைய விக்கிபீடிய மழையில் இன்று முளைத்த கருத்துக்காளான்’ அல்லன். மன்னிக்கவும்.

மேலும், இந்த அரை நூற்றாண்டில் பலவிதமான நேரடி அனுபவங்கள். எனக்கு – கடன் வாங்கவேண்டிய அல்லது எட்டுக்கட்டி கற்பனை செய்துகொள்ள வேண்டிய அனுபவ வறட்சியே இல்லை. விக்கிபீடியா படித்து உய்யவேண்டிய அவசியமும் இல்லை. ஆக என்னிடம் தி.ஜானகிராமன் அப்படிச் சொன்னார், சுந்தரராமசாமி இப்படிச் சொன்னார், கும்ப்மேளா நாகர்களை முன்னெடுத்துச் செய்ததுதான் – விவகாரமே இல்லை. நன்றி.

நான் எல்லாவற்றைப் பற்றியும் மேலான கருத்துகளை அட்ச்சுவுடுபவன் அல்லன். என்னுடைய அறியாமைகள் பற்றிய என் அறிவு இன்னமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. என் அளவு எனக்குத் தெரியும். கை துருதுருவென்று இருப்பதனால் விக்கீபீடியா தஹிந்து படித்து மேதாவி போல உளறிக்கொட்டிக் கருத்துவாந்தி எடுக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

மாறாக – எனக்கு ஓரளவாவது அனுபவமுள்ள/குவியமுள்ள துறைகளில், தரவுகள் மீது மட்டுமே என் கருத்துகளை வடித்து எழுதுவேன். அவற்றிலும் – நான் தவறுகள் செய்தால், அவற்றை ஆதாரங்களுடன் யாராவது சுட்டிக்காட்டினால், என்னைத் திருத்திக்கொள்ள நான் எப்போதுமே தயார். அப்படித் திருத்திக்கொண்டுமிருக்கிறேன். எனக்கு இதில் ஒரு மானப்பிரச்சினையும் இல்லை. இதுவரை மனதாற, எனக்குத் தெரியாதவற்றைத் தெரிந்ததுபோலக் காட்டிக்கொண்டு பொய் சொன்னதில்லை.

ஏனெனில் – பாலா அவர்கள் சொன்னது போல ‘தரவுகள் இல்லாமல் எழுதுவது ஒரு பாவம்.’

10. இன்னொன்று: ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றிய தீர்க்கமான கருத்தை அளிக்கவேண்டுமானால்  அவருக்கு கீழ்கண்டவற்றில் சிலவழிகளிலாவது கடைந்தேற முடியவேண்டும்: 1) அந்தத் துறையில் அறிவு இருக்கவேண்டும் 2) கொஞ்சமேனும் காத்திரமான கள அனுபவங்கள் இருக்கவேண்டும் 3) பரந்த படிப்பறிவும் பின்புலமும் இருக்கவேண்டும் 4) ஏதாவது ஒரு (ஒரேயொரு!) பிற துறையிலாவது கொஞ்சமேனும் ஆழத்தை அடைந்திருக்கவேண்டும் 5) தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதை, தமக்கு சால்ஜாப்பு சொல்லிக்கொள்வதைக் குறைக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக – கல்வித்துறை ஆசிரியர்கள் எனப் பேசவேண்டுமானால் (பேத்துவதைக் குறிப்பிடவில்லை!) – அவர் சும்மனாச்சிக்கும் ஒரு நாள் ஒருவாரம் எனப் பள்ளிகளுக்குச் சென்றாலோ, அல்லது ‘ஆய்வு’ செய்கிறேன் என்கிற பாணி சுற்றுலா போனாலோ அது பெரிய விஷயமேயில்லை.  ஏன், ஒரு வருடத்தை தன்னார்வத்துடன் கழித்தால்கூட அது காத்திரமானது இல்லை; என்னைப் பொறுத்தவரை தொடர்ந்து சில ஆண்டுகளாவது அனுதினமும் பள்ளிக்குச் சென்று பிள்ளைகளோடு இருந்து அது தொடர்பாக அனுதினமும் குறைந்த பட்சம் 15 மணி நேரமாவது யோசித்துச் செயல்பட்டால்தான் கொஞ்சமாவது தெளிவுவரும். பின்னர் மேலான கருத்துகளை, வேண்டுமென்றால் அள்ளிவீசலாம். எதையும் ஆழ்ந்து அறிந்துகொள்வது சுளுவான விஷயமில்லை.

தோட்டவேலை என்றால் மேம்போக்காக மாடியில் தோட்டம்போடுவதோ அல்லது வாரயிறுதியில் பண்ணைக்குச் செல்வதோ இல்லை; இவற்றை நான் மோசமாகக் கருதவில்லை என்றாலும், இவற்றின் மூலமாக ஆழ்ந்த, செயல்முறை அறிவைப் பெறமுடியாது. அல்லது பிறருக்கு அறிவுரை கொடுக்கமுடியாது. ஏனெனில் ஏக் தின், ப்ரதி தின் என நாளுக்கு நாள் விரியும் சிடுக்குகளையும் ஊடுபாவுகளையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் – வருடக்கணக்கில் உழைக்கவேண்டும். எந்தவொரு விஷயமுமே அப்படித்தான்.

11. மாறாக சும்மனாச்சிக்கும் அட்ச்சிவுடமேண்டுமென்றால் – தமிழ் அலக்கியத்தின் முப்பெரும்சாபக்கேடுகளைப் பின் தொடர்ந்து அவர்கள் செயல்பாடுகளின்படி ஒழுகினால் போதுமானது.

எழுதுவது எளிது. அதுவும் அலக்கியத்தரமாக எழுதுவது இன்னமும் எளிது. ஏனெனில் சுயமைதுன இன்பலாகிரிதானே முக்கியம்?

12. அரவிந்தன்கண்ணையனார் கும்ப்மேளா பற்றி அவசரம் அவசரமாகப் படித்துவிட்டு, விவரங்களைச் சரிபார்க்காமல் (கருத்தாக்கங்களையே விடுங்கள்!) எழுதுகிறார். இதில் தவறில்லை. ஏனெனில் இது உடனடி இன்பலாகிரி தருவது.

ஆனால் நான் முதலில், இந்த மேளா பற்றி எழுதவில்லை, அவர் எழுதியதை முதலில் படிக்கவுமில்லை; அவர் எழுதியதை(!) வைத்து அன்பரொருவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாகவே கொஞ்சம் எழுதினேன். அதுவும்  விலாவாரியாக இல்லை; வெறும் இரண்டு அகவிய உளறல்களைக் குறித்துமட்டும்தான். ஏனெனில் – எனக்கு ஓரளவுக்காவது அதுகுறித்து எழுத பின்புலம் இருக்கிறது. (ஆனால் – தொலைக்காட்சி, இணையப் பப்பரப்பா தினசரிகளை தரிசிக்க எனக்குக் கொடுப்பினை இல்லை, நான் பாவம்தான்!)

13. ஆக – நீங்கள் என்னிடம் குற்றம் காண்பதற்கு முன் அக-விடம் முறையிடல் ஒன்றைச் செய்யலாம். முன்னமே ஒருமுறை அவர் நேரு-ஸோஷலிஸ்ம் (ஒரு புத்தகம்/boris pasternak தொடர்பாக என நினைவு) என அட்ச்சிவுட்டதற்கு நான் எதிர்வினை புரிந்தேன் என நினைவு இருக்கலாம்.

என்னமோடாப்பா.

ஆனால், அரவிந்தன்கண்ணையன் அவர்கள், பேராசான் ஜெயமோகன் போலத்தான் எழுதுகிறார். பேராசான்/விருந்தினன் எவ்வழி சிற்றாசான்/விருந்தோம்பன் அவ்வழி, வேறென்ன சொல்ல.

எடுத்துக்காட்டாக – அதே பாலா, பால், ஜெயமோக அட்ச்சிவுடலைப் பாருங்கள்.

ஒருவிதமான அனுபவம் அல்லது துறை நிபுணத்துவமும் இல்லாமல் – நான்கு மணி நேரம் ஒரு பால் கலப்படத் தொழிற்சாலையில் இருந்தேன், எனக்குத் தெரியாதா என்கிறார்! அப்படியே அவர் அங்கு சென்றிருந்தது உண்மை என்றாலும், அந்தக் கலப்படம் நடந்தது என்றாலும் – அந்த மோசடி குறித்து ஏதாவது காத்திரமாகச் செய்தாரா, புகார் கொடுத்தாரா எனத் தெரியவில்லை. எல்லாம் அறமப்பா!

…பிரச்சினை என்னவென்றால் – நான் பெரும் தொழிற்சாலைகளில் வேலை செய்திருக்கிறேன்; ஏதோ கொஞ்சம் நடைமுறை அறிவும் பயிற்சியும் இருக்கிறது; இருந்தாலும் சொல்வேன் – நான் அந்த தொழிற்சாலை போனாலும் அங்கு பத்து மணி நேரம் கழித்தாலும் எனக்கு இந்த அசாத்தியமான தன்னம்பிக்கை வராது!

இதே ஜெயமோகன், ஒரு சமயம் – ‘ஷெங்க் ஹே (காயடிக்கப்பட்ட சீன அடிமை – கடற்படைத் தளபதி) 25, 000 (இருபத்தஞ்சாயிரம்!) பெரீய்ய்ய போர்க்கப்பல்களை வைத்திருந்தான்’ என, போகும்போக்கில் ஒரு உரையாடலில் அட்ச்சிவுட்டது நினைவுக்கு வந்து தொலைக்கிறது – அக்கால பாரதக் கப்பற்கட்டும் தொழில், கடற்படை, சோழர்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது பாரதத்தில் செய்தது என்பது பெரிய விஷயமில்லை என மட்டம்தட்டும் படியாகப் பேசினார்.

பிரச்சினை என்னவென்றால் ஜெயமோகன், பதினான்காம் நூற்றாண்டில், சீனக் கடற்படை அணிவகுப்பையும் ஒரு நாலுமணி நேரம் பார்வையிட்டிருக்கலாம் எனப் படுகிறது. திரைப்படக் கதை எழுதும் அனுபவம் இப்படித்தான் செறிவு பெற்றிருக்கவேண்டும்.

அட்ச்சிவுடலேஸ்வரர்களே! உங்கள் காலில் விழுந்து கும்பிடுகிறேன். நன்றி.

என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஜெயமோகன்/விருந்தினன் எவ்வழி அரவிந்தன்கண்ணையன்/விருந்தோம்பன் அவ்வழி, வேறென்ன சொல்ல.

-0-0-0-0-0-

இப்போது, இந்தப் பதிவின் தலைப்புக்கு ஒரு விளக்கம்: (அது ஒன்றுதான் கேடு!)

விளக்கம் (அஆஇ எப்படி – ஒரு அரிச்சுவடி):

அஆஇ எப்படி = ரவிந்தன்கண்ணையனின் ராய்ச்சி ளிப்பது எப்படி

அரிச்சுவடி = அரிசியை அறிந்து அரிந்து களைந்து வேகவைத்துப் பின் கஞ்சியை வடிப்பது என்பது ஒரு நல்ல  சமையல்முறைச் சட்டகம்; ஊக்கபோனஸாக நல்ல சோறும் கிடைக்கும். ஆனால் வெறுமனே அரிசியை அரித்து வடித்தால் அது ஒரு அரவிந்தன்கண்ணையக் கட்டுரையாகும். அது அரைவேக்காடாகக்கூட இருக்காது.

நன்றி.

9 Responses to “அஆஇ எப்படி – ஒரு அரிச்சுவடி”

 1. nparamasivam1951 Says:

  எனது எண்ணப்படி, திருவாளர்அவர்கள் – தீரமணி, கபவீ, அர்பன் நக்சல், ஆகிய அனைவரும் கலந்து கட்டிய கலவை.
  மேல்நாடாம் அமெரிக்கா சென்று, அங்குள்ள தமிழ் சங்கத்துடன் சண்டைபோட்ட தமிழ்அன்பர். சரி, அந்த தமிழ் பாரதி சங்கம் செய்த இமாலயத் தவறுதான் என்ன? – கோவையிலிருந்து ஒரு தமிழ் பேச்சாளரை பேச அழைத்து, பேச அனுமதித்தது தான் அவர்கள் செய்த தவறு. கடல் கடந்த தமிழ்ப் பாசம்.


  • ஐயா – எனக்கு நீங்கள் குறிப்பிடும் தமிழ்ச்சங்க விஷயம் பற்றி ஒன்றும் தெரியாது.

   ஆனால் ஒன்று படுகிறது: இந்த ஆசாமி நீங்கள் சித்திரிப்பது போன்ற சுபவீ வீரமணி போன்றவர்களின் கலவை அல்லர்; மாறாக ஒருவிதமான அசட்டுத்தனத்துடன் தாம் ஒரு ‘லிபரல்’ எனக் காண்பித்துக்கொள்ள மேதாவித்தனமாக அட்ச்சிவுடும் ஆர்வக்கோளாறுடையவர் எனப் படுகிறது.

   சுமார் 70 வயதில் சரியாகி, விடலைப் பருவத்திலிருந்து வளரஆரம்பித்துவிடுவார் எனவும்.

   பார்க்கலாம்.

 2. SB Says:

  Sir,

  Good day!
  Your expectation seems the will-o’ the wisp .
  ‘Forty is the old age of youth; fifty the youth of old age’ -Victor Hugo.
  AK will have at it more as he ripens with age.

  ‘Talk of the (Vishnupuram) Town’.
  Mind joining the melee ?

  https://www.jeyamohan.in/118689#.XHth58AzbIU

  Creating story (அட்ச்சிவுடலேஸ்வரர்களே) and then finding ways and means to authenticate that by ‘sourcing’ information is all the trend of the World!!!

  Regards
  SB

 3. A.Seshagiri Says:

  சார்,இனிமேல் பால் குடிக்கலாமா? கூடாதா?.உங்களின் இந்தப்பதிவில் உள்ள சுட்டிகளின் மூலம் ஜெமோ.அவர்களின் பாற்கடலில் (மன்னிக்கவும்) பால்கடிதங்களில் விழுந்து மண்டை காய்ந்து தவிக்கிறேன்! காப்பாற்றவும்


  • ஐயா சேஷகிரி, சில விஷயங்களை நீங்கள் தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும்.

   1. ஆண்பாலருக்கும் பால்மணம் மாறாத சிறார்களுக்கும் பெண்பால் உகந்தது.

   2. பாலைப் பாலாகக் குடிக்காமல், பாலைத்திணை வழக்கப்படி பாலைத்திண்ணையில் உட்கார்ந்து, காப்பியாக அருந்துவது நன்று.

   3. பார்க்கடலின் சாராயத்தில் விழுவதைவிட பாற்க்கடலின் பாற்பட்டுவீழ்வதுமேல்.

   4. மண்டையைக் காயவைப்பதற்குப் பதிலாக பாலைக் காய வைப்பது மிக்க நன்று.

   5. பால் என்பதுடன் லவ்டே கே பாலுடன் போட்டுக் குழப்பினால் அது கலப்படமாகும்.

   6. ஜெயமோகன் பால் போகாமலிருப்பது நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

   நன்றி!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s