மனுஷ்யபுத்திரன்: கருணாநிதியின் பிள்ளைகளாக/உறவினர்களாக இருப்பதாலேயே அதிகாரம் தங்கள் பிறப்புரிமை என்றும் கருதினார்கள்! வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள்!!

February 21, 2019

…கவிஞ்ஜர் மப்புவார் தொடர்கிறார்…  கருணாநிதிக் குடும்பநிதிச் சேகரிப்புகள், குடுமிப்பிடிச் சண்டைகள், குழிபறிப்புச் சதிகள்  போன்றவற்றைப் பற்றித் தலையங்கம் எழுதுகிறார்…

எல்லாவற்றையும்விட தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் ஆழமான சில தார்மீக உணர்வுகள் அவமதிக்கப்பட்டன.
 
ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனுக்குச் செய்த ஆடம்பரத் திருமணத்தின் மூலம் ஏழ்மை மிகுந்த ஒரு சமூகத்தின் தார்மீக உணர்ச்சிகளை அவமதித்தார் என்றால் அதைவிடப் பல மடங்கு அவமதிப்பினை தி.மு.க. இந்த ஐந்தாண்டுகளில் செய்தது.
 
தன்னுடைய பல்வேறு குடும்பங்கள், கிளைக் குடும்பங்களின் அதிகாரப் போராட்டத்திற்கான மையமாக ஒரு அரசை, ஒரு கட்சியை மாற்றுவதன் அபாயம் குறித்து கருணாநிதி புரிந்து கொள்ளவே இல்லை.
 
இரண்டாவதாக, அரசியல் அதிகாரம் ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டதே தவிர, தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்டதல்ல என்பதை கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே ஏற்கவில்லை. அவர்கள் கருணாநிதியின் பிள்ளைகளாகவோ உறவினர்களாகவோ இருப்பதாலேயே அதிகாரம் செலுத்துவது தங்கள் பிறப்புரிமை என்று கருதினார்கள்.
 
அந்த உரிமையை நிலை நாட்டுவதற்காக ஒருவரை ஒருவர் ரகசியமாக வேட்டையாடினார்கள், சதிகளில் ஈடுபட்டார்கள், தீவைத்து எரித்தார்கள், வரலாறுகாணாத ஊழலில் ஈடுபட்டார்கள்.
 
ஒரு ஜனநாயக அமைப்பின் மக்களது உணர்ச்சிகளை நாம் அவமதிக்கிறோம் என்று யோசிக்கக்கூடிய ஒருவர்கூட அங்கு இல்லை.

(அதே ஜூன்2011 தலையங்கனக் காலத்து எருவென்ற சேற்றுவீரரின் அறிவுரைகளில் இருந்து எடுக்கப்பட்டது தான் இது!

இதன் முந்தைய பகுதிகள்:
 
-0-0-0-0-
 
அதாகப் பட்டது – அதாவது கவிஞ்ஜர் மப்புவார் என்ன சொல்கிறார் என்றால் – இசுடாலிர், கனிமொழி, மாறவேமாறாத மாறன் சகோக்கியர்கள் உட்பட ஒரு தீராவிட மசுராண்டியுமோ மசுர்ஆன்ட்டியுமோ – ஒன்று கூட உருப்படியில்லை. ஒருவருக்கொருவர் குழி பறிப்பதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள்! சதிகளிலும் கொள்ளைகளிலும் மட்டுமே குவியம் கொண்டிருக்கிறார்கள்.
 
உயர்மட்டப் படுமட்டத் திராவிடத் தறுதலைகள் இப்படி அயோக்கியத் தனங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, கீழே “தி.மு.க.வின் உள்ளூர் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளை உற்சாகமாக அரங்கேற்றிக்” கொண்டிருந்தார்கள், தொடர்கிறார்கள்!
 
நன்றி கவிஞ்ஜரே!
 
இதற்கு மேற்பட்டு நீங்கள் முதன்மைக் கயமைக்  ‘குடும்ப விஷயங்களைப்’ புட்டுப் புட்டு வைக்கவே முடியாது!
 
-0-0-0-0-
 
சரி.
 

வரும் தேர்தல்களில் துப்புரவாக ஒழிக்கப்படவேண்டியது து?

எவர்கள் வெறுத்தொதுக்கி இடக்கையால் புறம்தள்ளப்படவேண்டிய பதர்கள்?
 

 

8 Responses to “மனுஷ்யபுத்திரன்: கருணாநிதியின் பிள்ளைகளாக/உறவினர்களாக இருப்பதாலேயே அதிகாரம் தங்கள் பிறப்புரிமை என்றும் கருதினார்கள்! வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள்!!”

  1. nparamasivam1951 Says:

    2019 தேர்தலில் துப்புறவாக ஒழிக்க பட வேண்டியது அது தான்.
    கவிஞர் ம்ப்புவார் கூறினாரே ஜூன் 2011லேயே.
    இன்னும் என்ன சார் சந்தேகம்.

  2. பொன்.முத்துக்குமார் Says:

    ஆக இப்படியான கட்டுரைகள் யாவும் உயிர்மை இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கும் (எப்போதோ) என்று நினைக்கிறேன்.


    • ஐயா, ஆமாம். நீக்கப்பட்டுவிட்டது.

      ஆனால் – இணையத்தில் கமுக்கமாக நீக்கப்பட்ட விஷயங்களும் அதே இனையத்தில் நீக்கமற நிறைந்திருப்பதும் ஒரு பிரச்சினை. அது இல்லாவிட்டால் திரியாவர அன்பர்கள் இருக்கவே இருக்கிறார்கள்.

      புளகாங்கிதம்தான்!

  3. Swami Says:

    வருகின்ற தேர்தலில் அடித்து துவைக்கப்படவேண்டியது சுடலை என்று அன்புடன் அழைக்கப்படும் இசுடாலினார், அவரது குடும்ப பரிவாரங்கள் (முக்கியமாக தயாநிதி ) மற்றும் சுடலையின் அன்பின் அரை(குறை) சகோதரியார். இந்த கும்பல் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்படும் வரை தமிழ் நாட்டிற்கு விடிவு காலம் இல்லை
    தமிழே அரைகுறை இதுல பெங்காலி மொழியில் பிதற்றல் வேற!


    • இன்னா ஸொல்றீங்கோ?

      இசுடாலிர் வங்காள மொழியில் பேசினாரா?

      கடவ்ளே!

      • nparamasivam1951 Says:

        ஆமாம் சார். பெங்காலியில் பேசியது மட்டுமல்ல ஜப்பானின் துணை முதல்வராக ஜப்பானிய மொழியை நமக்கும் சொல்லித் தர உள்ளார்.

  4. A.Seshagiri Says:

    விரைவில் சப்பானிய மொழியிலும் பேசுவார்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s