4.0
December 2, 2018
(அல்லது) மறுபடியும் மறுபடியும், கழிசடைகள் ஏன் மேலான 3.0 கருத்துதிர்ப்புகள் ஆகின்றன?
-0-0-0-0-0-
(அல்லது) ஏன் – அறிவியல்(லும்!) அறிந்த அருண் நரசிம்மன்கள் அல்லது மரபணு/சுற்றுச்சூழல் விற்பன்னரும் மீன்களின் பாற்பண்பு பற்றி அழகாக எழுதியும் ஆய்ந்துமுள்ள மதுரைப் பல்கலைக் கழகத்து முனைவர் மகாமகோ தவமணி ஜெகஜ்ஜோதிவேல் பாண்டியன்கள் அல்லது பத்ரி சேஷாத்ரிகள் சினிமாக்கதை/வசனம் எழுதாமல் — காப்பிக்கடை தமிழ்ச்சினிமா தொடர்புள்ள அறிவிலிக்கழுதைகள் மட்டுமே , அறிவியலை அமர்க்களமாக எழுதுகின்றனர்? (ஆனால், மேற்படி ஜாபிதாக்காரர்களை விட்டுத்தான் திரைக்கழுதைகளை எழுதவைக்கவேண்டும் எனக்கூடச் சொல்லவில்லை – இவர்களின் அறிவுரைகளை, பரிந்துரைகளைக் கேட்டு வாங்கிக்கொள்ளக்கூட முடியாதா – அதற்குப் பின்னர் ஆனந்தமாக அபத்தக் களஞ்சியங்களை அவிழ்த்துவிடக்கூடாதா?)
(அல்லது) தமிழர்களை ஏனிப்படிக் கீழ்த்தரமான முட்டாட்களாக்கி காசுபார்க்கிறார்கள் இந்தத் திரைப்படப் பேடிகள்? (ஏற்கனவே நம் அறிவியல் ஞானத்தின் அளவு, வைகோபால்சாமி திருமாவளவன் எஸ்ரா பூவுலகின்அற்பர்கள் போன்ற அறிவியலுதிரிகளின் ரௌடிப்பார்வைகளினால் அதல பாதாளத்தில் இருப்பது வேறு விஷயம்!)
(அல்லது) தமிழ்த் திரைப்படச் சொர்க்கத்துக்கும்(!) அடிப்படை அறவுணர்ச்சிகளுக்கும், தொழில்சுத்தத்துக்கும் ஏதேனும் தொடர்புகள் என ஏதாவது ஒன்றாவது இருக்கிறதா?
எனக்கு ஆறவேயில்லை.
-0-0-0-0-0-
மனம் கலங்கிய காலங்களில் எனக்கு எப்போதுமே துணை புத்தகங்கள்தாம். அவை என்னை அமைதிப்படுத்தாத தருணங்கள் என இருந்ததேயில்லை என்பது என் நினைவு. வசதியாக, அப்படி நடக்காதவற்றை மறந்து விடுகிறேனோ என்ன எழவோ!
ஹ்ம்ம்…
ஆனால், கடந்த சில வருடங்களில் அப்படியுமிப்படியும் படித்த, ஆத்துமசுகமும் ஆசுவாசமும் அளித்து, ஊக்கபோனஸாக பரலோக ராஜ்ஜியத்துக்கு அருகிலும் அழைத்துச் சென்ற மகாமகோ ரேண்டி ஆல்ஸன் அவர்களின் அழகான புத்தகங்களையும் அவர் பார்வைகளையும் குறித்து ஒன்றிரண்டு வரிகள்கூட எழுதவில்லையானால், நான் பேதியில்தான் போவேன்.
ரேண்டி ஆல்ஸன் புத்தகங்கள்: https://www.amazon.in/Randy-Olson/e/B001V28I7S/
ரேண்டி ஆல்ஸன் ஒரு அறிவியல் காரர் – ஆனால் மதம் மாறி, ஹாலிவுட் சென்று குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் செய்திருக்கிறார். பொதுவாகவே ஹாலிவுட் எழவுகளில் உள்ள அறிவியல் அறிவிலித்தனத்தைக் குறித்து அங்கலாய்த்துக் கொண்டிராமல் – காத்திரமாக – 1) திரைப்பட எழவாளர்கள் தங்கள் நுகர்வோரை அணுகும் விதம் 2) அறிவியலாளச் சான்றோர்கள் மக்களை(!) அணுகும்(!!) முறை 3) அறிவியல் பொக்கிஷங்களை, அவற்றின் வளர்ச்சிக்காக வரி கொடுக்கும் பொதுமக்களிடம் கொண்டுசேர்ப்பது எப்படி 4) கதைகளைச் சொல்வதன் முறைமைகள்… … எனவெல்லாம் வேண்டுமளவு நகைச்சுவையுடன் ஏகப்பட்ட சுயகுறிப்புகளுடன்/பகடிகளுடன் எழுதியிருக்கிறார்.
ஒரு அறிவியல் காரரிடம் சினிமா பற்றிக் கேட்டால், அவர் அதனை எப்படி இளக்காரமாகவே அணுகுவார் (ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரைக் குற்றம் சொல்லவும் முடியாது); ஆனால் ஒரு திரைப்படக் காரரிடம் அறிவியல் பற்றி (அவருக்குத் தோதாக) பேசினால், அவர் அதன் வழியாகப் பணத்தையே பார்ப்பார். இது கிண்டலாக, ஒரு ‘முத்திரை குத்தல்’தன்மை கொண்டதாக இருந்தாலும், இதில் அடிப்படை உண்மைகள் இருக்கின்றன.
ஆல்ஸன் அவர்கள் – இம்மாதிரிக் கேள்விகளில் இருந்து ஆரம்பித்து – ஒரு அறிவியலாளர் கதைசொல்லும் வகையையும் ஒரு திரைப்படக்காரரின் நேரடித்தன்மையையும் பரிசீலிக்கிறார். ஒரு திரைப்படக்காரரின் பார்வையில் – அறிவியலின் கதைசொல்லித்தன்மையையும், அதிசாகசங்களையும் அதன் திரைப்படத்துட்டுச் சாத்தியக்கூறுகளையும் பார்க்கிறார்.
‘மேலும், ஆனால், ஆகவே’ (and, but, therefore – கவனியுங்கள், மற்றும் என்பதை நான் உபயோகிக்கவில்லை!)- எனும் அனாதிகாலம்தொட்டு தொடரும் ஒரு அடிப்படைக் கதைசொல்லி முறைமையை, இக்காலத் திரைப்பட எழவுகளுக்கு ஏற்றது போல் வடிவமைத்து, இது தொடர்பாக பணிமனைகளையும் பரப்புரையையும் செய்துவருகிறார்.
அதாவது ஒரு அறிவியல்காரர் அறிவியலுக்குரிய கறார் தன்மையுடன் மேலும் மேன்மேலும் தகவல்களையும் நிரூபணங்களையும் சிடுக்கல்களாக அடுக்கிக் கொண்டே போனால், ஒரு பாமரனுக்கு போர் அடித்துவிடுகிறது. ஆகவே அறிவியல் என்பது, பாமரனை அணுகவேண்டுமென்றால் – அவனுக்கேற்றது போல கதையை நேரடித்தன்மையுடன் அதீதச் சிக்கல்களில்லாமல் பௌராணிக மரபில் (நம் விஷ்ணுபுரம் போல) சொல்வது எப்படி என்பது பற்றியெல்லாமும்..
தமிழ்க் கூவான்கள், கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, வஞ்சனையே இல்லாமல் அட்டைக்காப்பி அடித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தொழில்முறையில் அபத்தக் களஞ்சியங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக, ஆல்ஸன் போன்றவர்களை வைத்து – அறிவியலாளர்கள்-திரைப்படஎழவாளர்கள் குழுமம் ஒன்றை உருவாக்கி, பணி மனைகளைக் காத்திரமாக நடத்தி – நம் பாவப்பட்ட தமிழர்களையும் தமிழகத்தையும் கடைந்தேற்றலாம்… பாரதச் சூழலுக்கேற்ற அறிவியல் புனைவுகளை திரைப்பட மயமாக்கலாம்…
ஆனால், எனக்குமே கூட ற்றொம்ப அவசரம்.
ஏனெனில், உடனடியாக, போர்க்கால ரீதியில் – 5.0 எழுதவேண்டும்.
நன்றி.
- 3.0 01/12/2018
December 2, 2018 at 13:20
Humm… You may be a great guide for me to know what to read. Why not bring out a list of books to be read by me?
December 4, 2018 at 15:09
[…] – 2.0 குறித்த என் 3.0, 4.0, 5.0 பதிவுகள் குறித்து […]