ஜெயமோகன், ஒரு அன்பரின் கோபம் – சில குறிப்புகள்

April 13, 2018

என்னுடைய நேற்றைய பதிவை, வழக்கமான ஐந்து பேரைவிட சுமார் 1.5 பேர் அதிகமாகப் படித்து இறும்பூதடைந்தார்கள். ஆக – ஒரே நாளில், ஒரே பப்பரப்பா பதிவைப் படிக்க அலைகடலென வாசகர்கள் முட்டிமோதியதால் – ஒத்திசைவுதள வந்தேறிகளின் எண்ணிக்கையானது, வரலாறு காணாத வகையில் – 30% அதிகமாயிற்று. ஒரு சமயத்தில் வேர்ட்ப்ரெஸ் தளக்காரர்களே தாங்கமுடியாத அளவு போக்குவரத்து!

திராவிடர்கள்,  நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கினால், என் பங்குக்கு நானும் வேர்ட்ப்ரெஸ் தளங்களை முடக்கியிருக்கிறேன். ஆகவே, ஹைய்யா — நானும்தேன் காவேரிப் போராளி!

நன்றி! நன்றி!! நன்றி!!!

-0-0-0-0-0-

ஒரு தமிழ் ஆசாமி (அமெரிக்காவில் தகவல்தொழில்(!) நுட்ப(!!) தண்டச் சம்பளக்காரர்) ஆகவே, எனக்கு ஆங்கிலத்தில், என் தமிழைப்(!) பற்றியும் என்னுடைய கருத்துக்கலைப்பு பற்றியும் கொஞ்சம் மோசமாகவே எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் எதிரிகள், அவருடைய வெறிபிடித்த மதபோதக வாசகர்கள்தாம்!

அதிலுள்ள கிண்டல்களை + ‘drug crazed fucker’களை (ரசித்து) புறம் தள்ளி – சாராம்சத்துக்கு வருகிறேன். :-)

  1. நீ ஜெயமோகன் மேல் பொறாமைப் பட்டு இப்பதிவை எழுதியிருக்கிறாய்.
  2. உனக்கு எதைக் கண்டாலும் வெறுப்புதான். ஜெயமோகனே இதை எழுதியிருக்கிறார்.
  3. அவர் பழகுவதற்கு இனிமையானவர் – உன்னைப் போலல்லர்.
  4. ஜெயமோகன் திரைப்படத் தொழிலில் இருப்பது உனக்குப் பிடிக்கவில்லை. உனக்குப் பிடிக்காத விஷயத்தை மற்றவர் செய்தால் கரித்துக் கொட்டுகிறாய்.
  5. அவருடைய நேர்மையை நீ சந்தேகிக்கிறாய். ஆகவே வயித்தால போவாய்.
  6. நீ ஒரு சுயமோகி.
  7. தேவையேயில்லாமல் அவரை ஏன் கரித்துக்கொட்டுகிறாய்? சாருநிவேதிதா எஸ் ராமகிருஷ்ணன்களைத் தூக்கிப் பிடிக்கவா?

-0-0-0-0-0-

சரி. இவை அனைத்துக்கும் – என் (ஒரு மாதிரி, மய்யமான) எதிர்வினைகள்.

அய்யா!  எனக்கு, கறுப்பு-வெளுப்பு தர கறார் பகுப்புகள் ஒத்துவரா. இவ்வுலகில் எல்லாமே விதம்விதமான கலவைகள்தாம்.

1. நான் பலமுறை எழுதியிருப்பது போல – எனக்கு ஜெயமோகனிடம் பொறாமையோ குளத்தாமையோ கிடையாது. என் செயல்பாடுகளின் அளவு எனக்குத் தெரியும், நன்றி. அவர் தளம் வேறு, என்னுடையது வேறு. ஆண்குறித்தனமாக இதனைச் சொல்லவில்லை.

என்னுடைய பழைய காட்டுரை ஒன்றில் இதைக் குறித்து எழுதியிருக்கிறேன். முடிந்தால் படிக்கவும். இதனை நான் ஆத்மார்த்தமாக எழுதியிருக்கிறேன். இதில் ஜெயமோகன் பற்றியும் வருகிறது.

ராமசாமி – யாரில்லை?

2. அவர் அப்படி எழுதிருப்பதைப் படித்தேன். அது அவர் பார்வை. எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கைகள் எனச் சில இருக்கின்றன. பலப்பல மனவெழுச்சிகள் இருக்கின்றன. சிலபல ஜொலிக்கும் இளைஞர்கள் + சான்றோர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்.

ஆனால் – பொதுவாகவே அரைகுறைத்தனங்கள், சால்ஜாப்புகள், அற்பத்தனங்கள் எந்தவொரு செய்நேர்த்தியுமில்லாமை பற்றிய வெறுப்பு (என்னில் உள்ளவை உட்பட) தொடர்கிறது. இஸ்லாமியக் கொடூரப் படையெடுப்புகள்/ஆட்சிகள், காலனியாதிக்கங்கள், மதமாற்றப் பாதிரிகள், நம் உள்ளுர் தேங்காய்கள்-லிபரல்கள் கடந்த பல நூறு ஆண்டுகளாக பாரதத்தின் ஆன்மாவை அமுக்கி வைத்திருப்பதை (நான் சதித்திட்டவாதி இல்லுமினேட்டி கம்மினாட்டி அல்லன்!) எவ்வளவு சீக்கிரமான நிவர்த்தி செய்யவேண்டுமோ அது செய்யப்படவேண்டும் என்பதில் ஆவலாக இருக்கிறேன்.  வாழ்க்கையோ உருண்டோடிக் கொண்டிருக்கிறது. மறுசுழற்சி அணுகிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பார்வையினால், நல்லவிஷயங்களில் தாமதமேற்படுவதினால் – வெறுப்புகள் ஏற்படுகின்றன. நம் அயோக்கிய அறிவுஜீவிகளின் கயமைகள் பற்றி நேரடியாக அறிந்திருக்கிறேன்வேறு!

ஆனால் – நான் ஆத்மார்த்தமாக முன்னேற்றத்தை விரும்புபவன். என்னுடைய நகைச்சுவை உணர்ச்சியில் நம்பிக்கை உள்ளவன். என்னைப் பார்த்துக்கொண்டும் கெக்கலி கொட்டிச் சிரிக்கமுடியும். விலா நோகச் சிரித்துக்கொண்டேதான் சாவேன்.

இருந்தாலும், நான் போகவேண்டிய தூரம் அதிகம். ஒப்புக்கொள்கிறேன்.

3. அய்யா – நானும் அவருடன் ஒரிரு வாக்கியங்கள் பேசியிருக்கிறேன், அவருடைய பேச்சுக் கச்சேரிகளுக்குச் சென்றிருக்கிறேன்; இறும்பூதடைந்து பதிவுகளும் எழுதியிருக்கிறேன். நீங்கள் சொல்வதை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன். அவர் இனிய ஜெயம்தான் – பழகுவதற்கு இனிமையானவர், படு புத்திசாலி, தீரா நகைச்சுவையுணர்ச்சியும், கடும் உழைப்பைக் கொடுக்கும் திறனும் உள்ளவர். இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் குவியம் உள்ளவர்.

நான் கசப்பு ராமம்தான்.

4. நீங்கள் சொல்வது சரியில்லை. எனக்கு அவருடைய திரைப்படப் பங்களிப்பு பற்றி அறிமுகம் இல்லை – ஆனால், அதைத் தெரிந்துகொள்ள விருப்பமும் இல்லை. திரைப்படங்களையே பொதுவாகப் பார்ப்பதில்லை என்ற காரணத்தாலும் (20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று – தியேட்டர் போய்ப் படம் பார்த்து!) – பலப்பல மகோன்னதப் படங்களை நான் பார்த்திருப்பதாலும் இந்த அனுபூதி நிலை. As the psalmist said – my cup brimmeth over!

அவர் திரைப்படத் தொழிலில் வெற்றிகரமாக இயங்கினால் எனக்கென்ன பொச்சரிப்பு? என்னிடம் என் குடும்பத்துக்கும் என் வெட்டிப் புத்தகச் செலவுகள் இன்னபிறவற்றுக்கும் வேண்டிய பணம் இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் தீர்ந்துவிடும் என்றாலும் – மீண்டெழ/சம்பாதிக்க வேண்டிய மூளையும் உழைப்புத் திறனும் இருக்கிறது. ஆரோக்கியமும் ஏகோபித்து இருக்கிறது. கையில் பாரதி இருக்கிறார். கேட்க பாக்ஹ் இருக்கிறார். பார்க்க பிரபஞ்சமே இருக்கிறது. ஆக – எனக்கு இந்த விஷயங்களிலும் பொறாமையில்லை. அவரும் ஏகோபித்து வாழட்டும்.

ஆனால் திரைப்படத்தொழில் என்பது குப்பைகூளங்களைச் சுத்தம் செய்வதை விட மேலான தொழிலல்ல, அறிவியல்/கணித ஆராய்ச்சிகளை விட உன்னதம் வாய்ந்ததல்ல என்பதிலும் – ஆனாலும் அது ஒரு கேளிக்கை தொடர்பான தொழில் என்பதிலும் அதற்குரிய அடிப்படை மரியாதையை அதற்குக் கொடுக்கவேண்டும் என்பதிலும் நம்பிக்கை உண்டு.

ஆனால் அது பளப்பளா ஜிகுஜிகா வசீகரம் கொண்டிருப்பதால் மட்டுமே – அதற்கு சர்வ நிச்சயமாக மரியாதை தரமாட்டேன். அளவுக்குமீறி ஜிங்குசிக்கா செய்யமாட்டேன்.

மேலும் – நம் செல்லத் திரைப்பட ஆசாமிகளில், தம் ‘பிம்ப உருவாக்கம்’ என்பதில் உள்ள கூரிய குவியம் எனக்குப் பிரச்சினை தருவது. ஒரளவுக்கு மேல், இந்த ஆசாமிகள் தம்மில் ஆழ்ந்து ‘பிம்பமே நான்!’ எனும் அத்வைத அறிதலுக்கு வரும்போதுதான் கமல்ஹாஸ்யம் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன என்பது என் புரிதல்.

கேளிக்கையளவில் எல்லாஞ் ஜரிதேன்.

5. ஆம். நான் என்னுடைய நேர்மையையும் அவ்வப்போது சந்தேகித்து வருகிறேன். ஏனெனில், நானும் கறுப்பும் வெளுப்பும் புணர்ந்த மகத்தான கலவை. ஆனால் இந்த நேர்மை கீர்மை என்பவற்றை நான் ‘தர்மம்’ எனும் வார்த்தையினூடே நிறப்பிரிகை செய்து பார்க்கிறேன், அவ்வளவுதான்.

ஒரேயொரு எடுத்துக்காட்டு: ஒரு சமயம்  (2011 அல்லது 2012 என நினைவு + இது குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்கூட) அவருடைய ஊட்டி நித்யாகுருகுல வருடாந்திர வாசகர் வட்ட அமர்வுகளுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் தி. ஜானகிராமன் அவர்களின் குடும்பத்தைப் பற்றிப் சிலபல விஷயங்களைச் சொன்னது எனக்கு ஆச்சரியம் கொடுத்தது.  ஏனெனில் திஜா குடும்பத்தில் நடந்ததாக ஜெயமோகன் குறிப்பிட்டு சில எதிர்மறை விஷயங்களைச் சொன்னார். அதுவும் திஜா அவர்களே ஜெயமோகனிடம் இவ்விஷயங்களைப் பற்றி வருத்தப்பட்டுச் சொன்னதாகச் சொன்னார். ஆனால் – நான் நேரடியாக விஷயங்களை அறிவேன். அவற்றில் ஒரு துளிக்கூட உண்மையில்லை.  (இதைப் பற்றி, பணிவாகவே அந்தக் கூட்டத்தில் ‘அய்யா, அப்படியல்ல’ எனப் பேசினேன் என்றும் நினைவு – ஆனால் இதற்குச் சாட்சியம் தரவு எனக் கேட்காதீர்கள், நான் சொல்வதை முடிந்தால் நம்புங்கள், நான் மனதாறப் பொய்சொல்வதில்லை, சரியா? இந்த அளவுக்காவது நீங்கள் என்மேல் நம்பிக்கை வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்!)

இம்மாதிரி விஷயங்களுக்கு என் வியாக்கியானம் என்னவென்றால் – திருப்பித் திருப்பி நம் மண்டையில் சில விஷயங்களை அதீதமாகக் கற்பனை செய்துகொள்ளும்போது, ஒரு சமயத்தில் அவை உண்மையாகவே நடந்ததாக நம்பிவிடுகிறோம். நம் வீங்கிய சுயபிம்பத்தை நாமே உருவாக்கிக் கொள்ளும் முறை இது! (இது பலப்பல இலக்கியக்காரர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினைதான்!)

இன்னொரு வியாக்கியானம் என்னவென்றால், எவன் சரிபார்க்கப் போகிறான் என – சகட்டுமேனிக்கும் அட்ச்சுவுடல். பீலா தொழிற்சாலை நடத்துதல்.

ஆனால்…

விசனத்துக்குரிய விஷயமென்னவென்றால் – அவர் தொடர்ந்து இப்படிப் பேசியும் எழுதியும் வருகிறார்.  எனக்குத் தெரிந்தே, குறைந்த பட்சம் சுமார் 14 நிகழ்வுகள்/கதையாடல்கள் இப்படி இருக்கின்றன. இவற்றின் மறு(உண்மை)பக்கம் பற்றி நான் நேரடியாக அறிவேன். ஏனெனில் எனக்கும் ஜெயமோகன் வயதாகிறது.

அவர் அளவுக்கும் ஆகிருதிக்கும் இந்த எழவெல்லாம் ‘reflected glory’ குப்பையெல்லாம் தேவையா எனப் படுகிறது.

மேலும் சிலபல அந்தக்கால எதிர்மறை நினைவுகள் அலைமோதுகின்றன. அவற்றைப் பற்றி நான் எழுதவேண்டாம் என நினைக்கிறேன். நேற்று என் (குறுகிய வட்ட) நண்பர்களுக்கு எழுதிய மின்னஞ்சலில் சொன்னேன் – ‘அந்த நிலைமை எனக்கு வரக்கூடாது.’ வரவும் விடமாட்டேன்.

நான் சாம்பல் நிறத்தின் உபாசகன். என் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்பவன். மற்றவர்களும் அப்படியே ஆகட்டும்.

ஜெயமோகன் அவர்கள் தொடர்ந்து, தரமாகவும் விதம்விதமாகவும் எழுதவேண்டுமென்பதுதான் என் அவா. சர்வ நிச்சயமாக, அவருடைய பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் ஒரு எளிய ஆனால் தேர்ந்த வாசகனாகத் தொடர்வேன்.

6. ஆம்.

7. முடிந்தபோதெல்லாம் ஜெயமோகன் எழுத்துகளைப் படித்திருக்கிறேன்; தொடர்ந்து படிப்பேன். அவர் எழுத்துகளில்/ஈடுபாடுகளில் என்னைக் கவர்ந்தவை குறித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். நீங்கள் சொல்வது சரியல்ல; நீங்கள் விமர்சனம் வைத்த முந்தைய கட்டுரையிலேயே அவரைப் பற்றிய என் சந்தோஷங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

எனக்கு – ஒருவரைத் தூக்கிப்பிடிக்கப் பிறத்தியாரைத் தாழ்த்துவதோ, அல்லது தாழ்த்துவதற்காகப் பிறரைத் தூக்கிப் பிடிப்பதோ ஒத்துவராது. நன்றி. எஸ்ரா சாருநிவேதிதா போன்றவர்களின் எழுத்துகள் – தமிழுக்கு ஏற்பட்ட துரதிருஷ்டங்கள் என்பதுதான் என் கருத்து.

மேலும் – இந்த மூன்று பேர்களால் – முப்பெரும் தலைவர்களால்தான் நவீனத் தமிழிலக்கியம்(!) உசுருடன் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. பிறரும் இருக்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டாக: சமகால, சமவயதுக்காரரான விமலாதித்த மாமல்லன் இருக்கிறார்.

பலப்பல அரைகுறை இளைஞர்கள் படுமோசமாகவும் தெகிர்யமாகவும் மாளா-தன்னம்பிக்கையிடனும் அபரிமிதமாகவும் – குப்பைத்தனமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலும், விடிவெள்ளிகளும் இருக்கிறார்கள். நன்றி.

இப்போதைக்கு இது போதும். நன்றி!

“கிழவனுடைய   அறிவு முதிர்ச்சியும், நடு வயதினனுக்குள்ள மனத் திடனும், இளைஞனுடைய உத்ஸாகமும்,  குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”
– – சுப்ரமண்ய பாரதி

19 Responses to “ஜெயமோகன், ஒரு அன்பரின் கோபம் – சில குறிப்புகள்”

  1. Prabhu Says:

    “எஸ் ராமகிருஷ்ணன்களைத் தூக்கிப் பிடிக்கவா?” This should have given you a heart attack. :) :) Real LOL moment for any regular reader of your blog :)


    • Sir, Prabhu – you really hit the nail on its head – thereby closing my coffin tight! :-(

      …some times, the kind of (luckily occasional) feedback I get from some of the desultory readers of the blog, makes me really wonder whether I deserve them!

      If they are such dumbasses, why even bother to read me just to get annoyed?

      Luckily, Poovannan Ganapathy does not haunt me these days. I should be very, very thankful to life for that. (Hope is healthy, alive and kicking someone else!)

      __r.

  2. Ramesh Narayanan, Nanganallur Says:

    ஜெயமோகனை அணுகியவர்கள் இந்த”தமிழ் ஆசாமி” மாதிரி உளற மாட்டார்கள், மாறாக, சினிமா வெறியர்கள் போல கண்மூடித்தனமான அவர் மேல் மோகம் உள்ளவர்கள் தாம் இவ்வாறு எதிர்மறை புரிவார்கள். அவர்களை அவரே ஒதுக்கக்கூடிய maturity அவருக்கு உண்டு


    • அய்யா, நீங்கள் சொல்கிறீர்கள், நான் கேட்டுக்கொள்கிறேன். அப்படியிருந்தால் நல்லதுதான்!

      கள்ளத்தனையது கருத்து நீட்டம் என்று அன்றே சொன்னானல்லவா கம்ப நாட்டான் வள்ளுவமீகி?

  3. Kannan Says:

    விசனத்துக்குரிய விஷயமென்னவென்றால் – அவர் தொடர்ந்து இப்படிப் பேசியும் எழுதியும் வருகிறார். எனக்குத் தெரிந்தே, குறைந்த பட்சம் சுமார் 14 நிகழ்வுகள்/கதையாடல்கள் இப்படி இருக்கின்றன.

    I’ve observed this too, events happened to others resurface later as if it happened to him.

    Sad, Venmurasu already feels like Kannitheevu, screenplay attempt with the help of Puranic Encyclopedia.


    • அய்யா, தாங்களுமா இப்படி? ;-)

    • Prabhu Says:

      “Venmurasu already feels like Kannitheevu”… Though you are entitled to your opinion, I don’t agree to this even one bit. I am reading Venmugil nagaram and it’s brilliance personified.


      • Sir, Prabhu – of course both Kannan’s and your opinions are equally valid.

        When drummatized, whenmurasu is subject to subjectivism.

        However, when one peels a typical venmurasu saga post like an onion, one sees certain kinds of repetitive patterns, which more often than not become tiresome & cliched – and also, soon kilolitres – a sea of tears well-up in the eyes and one can hardly read it any more.

        Eye am at fault, I agree. And tearing it down does not help the situation. So a tearful farewell…

        So.

        __r.

      • Kannan Says:

        Don’t get me wrong, I am not underestimating Jeyamohan’s capabilities.

        In the case of Venmurasu, I agree with late Ganni who said Jeyamohan’s efforts are wasted. as if cashewnuts were put in coffee.

      • Kannan Says:

        oh, that was a reply to Prahbu.

  4. RC Says:

    அன்பு அய்யா,நல்லவேளை நானோ என் ஊர்க்காரர் சேஷகிரியோ நேற்று பதிவு படிக்கவில்லை, இல்லையென்றால் ஏழரை ய கூட்டிட்டாரு ன்ற அவப்பெயர் என் ஆசானுக்கு கிடைத்திருக்கும். நாங்க எப்பவும் ஆசானை விட்டுக்கொடுக்கமாட்டோம் சார்.

  5. Anonymous Says:

    ஜெ. சமீபகாலங்களில் தடுமாறுகிறார். இது போன்ற விஷயங்களில் கருத்து சொல்லும்போது ஜெ கும்பல் மனப்பான்மைக்கு இடம் அளிக்கிறார் என்றே தோன்றுகிறது. சார் உங்கள் பதிவை தொடர்ந்து வாசித்து வருபவன். ஜெ அவர்களின் பதிவையும் சேர்த்துதான். எனவே நான் தங்களின் திடீர் வாசகன் அல்ல.

  6. Anonymous Says:

    //ஒரேயொரு எடுத்துக்காட்டு: ஒரு சமயம் (2011 அல்லது 2012 என நினைவு + இது குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்கூட) அவருடைய ஊட்டி நித்யாகுருகுல வருடாந்திர வாசகர் வட்ட அமர்வுகளுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் தி. ஜானகிராமன் அவர்களின் குடும்பத்தைப் பற்றிப் சிலபல விஷயங்களைச் சொன்னது எனக்கு ஆச்சரியம் கொடுத்தது. ஏனெனில் திஜா குடும்பத்தில் நடந்ததாக ஜெயமோகன் குறிப்பிட்டு சில எதிர்மறை விஷயங்களைச் சொன்னார். அதுவும் திஜா அவர்களே ஜெயமோகனிடம் இவ்விஷயங்களைப் பற்றி வருத்தப்பட்டுச் சொன்னதாகச் சொன்னார்.

    You are a liar pappan full of jealousy. Nothing like this happened. I was personally there on both years. You want cheap publicity more readers. But dont cookup lies. JeMO sir oru palam thangum maram. He has so much knowledge. Donth throw stones.

  7. M V Seetaraman Says:

    //You are a liar pappan full of jealousy// very bad in all aspects .

  8. S bmniac Says:

    Anonymous Says: 15/04/2018 at 07:17
    The comment beginning ” You are a liar” etc is typical of the modern Tamil method of argumentation. In other words no reasoning just abuse. (what is missing is the applause) Incidentally one can perceive the difficulty with English, again all too common.


    • Sir, thanks.

      But in exasperated moments with guys of the likes of Shekhar Gupta & Pritish Nandy and a couple of others, I have also used this ‘liar’ epithet. But then, concretely proving that they indeed lied.

      Mea culpa. :-(


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s