ஜெயமோகன்: ‘நானும் போராளிதேன்!’

April 12, 2018

எச்சரிக்கை: ~1500 வார்த்தைகள்!

இந்தக் காவிரி குறித்த சோம்பேறிப் போராளிக்கூவான்களின் நாடக அற்பத்தன அழிச்சாட்டியங்களில் – ‘வேறெதையும் எண்ண இயலாது‘ ஜெயமோகன் அவர்களும் ‘பொது ஒழுங்கு சட்டம் என்றெல்லாம் பேசுவதில் எப்பொருளும் இல்லை‘ என, பாவம் – ஏகோபித்து இணைந்து கொண்டிருப்பது, நான் ஓரளவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் விசனம் கொடுப்பது. (ஆனால், நான் என்ன பெரிய்ய மசுரா? ஆகவே அளவுக்கதிகமாகத் துள்ளக்கூடாது என்பதையும் உணர்ந்திருக்கிறேன், நன்றி!)

உணர்ச்சிகர மறத்தமிழனின் மரமண்டைகளை அவ்வப்போது உருட்டும் மகாமகோ பிரச்சினைகள் குறித்துக் கருத்தே சொல்லாமலிருந்தால் யாராவது ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ என அவர் இதனைச் சடங்குரீதியாகச் செய்திருக்கலாம்.

(அல்லது) தொழில்தர்மமாக, ‘பணி’ குறித்த நிர்ப்பந்தங்களால் இந்த ‘தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது’ நிந்தனைப்போக்கு எழவை அணுகியிருக்கலாம் என இதனைப் புரிந்துகொள்கிறேன்; அதுவும் அவரால் மிகச் சரியாகவே புரிந்துகொள்ளப்பட்ட என் செல்லமான தவளைநடையில் தத்தித்தத்தித்தான் என் புரிதலை அடைந்து, அறிந்து தெளிந்துள்ளேன் – என்பதையும் சமூகத்துக்குத் (=தற்போது, ஒத்திசைவைத் தொடர்ந்து படிக்கும் சுமார் 7.5 பேர், அடியேன் உட்பட!) தெளிவுபடுத்திவிடுகிறேன். ;-)

விளம்பர இடைவேளை

கமலஹாஸ்யத்துக்கு உருகார், ஒருஹாஸ்யத்துக்கும் உருகார்.

கமல்ஹாஸனே ஆதரிச்சுட்டார். நீங்களும் ஆதரிக்கலையா?

அறச்சீற்றம் என்பது யாதெனின் யாதொன்றும் உள்ளீடில்லாதது சொலல்.

நன்றி.

-0-0-0-0-0-

சரி. எனக்கு, ஜெயமோகன் அவர்கள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் (ஒரு அடிமட்ட, சாதாரண வாசகனாகிய என் கருத்துகளை அவர் பொருட்படுத்த வேண்டிய அவசியமேயில்லை என்றாலும்) – என்னைப் பொறுத்தவரை அவரை மதிக்கிறேன்; ஏன்?

அ. நான் (மறுபடியும் மறுபடியும்) படிக்கும் சிலபல குறிப்பிடத்தக்க சிறுகதைகளை + ஒரு நாவலையாவது அவர் எழுதியிருக்கிறார்.

ஆ. அவருடைய சிலபல கட்டுரைகளின் (காந்தி தொடர்பானவை, நகைச்சுவை வகையறா) ஆழத்தையும் வீச்சையும், உரையாடல்களைக் கோர்க்கும் விதத்தையும் நான் மகிழ்ச்சியோடு கவனித்திருக்கிறேன். படித்திருக்கிறேன், படிப்பேன்.

இ. பாரதத்தின் பன்முகத்தன்மை – அதனைப் படிப்பது, ஹிந்து மதங்கள் குறித்த அவருடைய சிலபல பார்வைகள், பாரதத்தை – அதன் மேன்மையைப் பற்றிய அவரது கரிசனங்கள், கல்வி பற்றிய கருத்துகள் – எனக்கு மிகவும் உவப்பானவை.

ஈ. தமிழில் எழுதிக் குவிப்பவர்கள் பலர். ஆனால் தொடர்ந்து எழுதி, அதிலும் பலப்பல புலங்களைத் தொட்டு எழுதுபவர்களில் (அவற்றில் பலவற்றின்மேல் எனக்கு ஆச்சரிய, ஆசானிய விமர்சனம் இருந்தாலுமேகூட) இவர் முதன்மையானவர்.

உ. ஜெயமோகன் – தன் வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடலில் இருக்கிறார். கற்றுக்குட்டிகளிலிருந்து தேர்ந்த வாசகர்கள் வரை – இது தொடர்கிறது. இது எளிதான விஷயமேயல்ல. தமிழ்ச்சூழல் காயடிக்கப்பட்ட இக்காலங்களில் – அற்ப கேள்விகளுக்கும், சிலாகிப்புகளுக்கும்கூட அவர் விலாவாரியாக பதிலளிப்பது, எனக்கு ஆச்சரியம் தருவது. அவரது செயலூக்கம் அப்படி.

ஊ. குறுங்குழு வெறிகளை, வெறுப்பியக்கங்களை அவருக்கு முடிந்தபோதெல்லாம் எதிர்த்தே வந்திருக்கிறார். எந்த ஒரு குறிப்பிட்ட குழுவின்/சாராரின் எண்ணப்போக்கையும் தான் ஆதரிப்பவனாகக் கருதப்படக்கூடாது என்று, கவனத்துடன் தொடர்ந்து இயங்குகிறார். இதற்குத் திறமை/சாமர்த்தியம் வேண்டும். அவரிடம் இது வேண்டியது இருக்கிறது.

எ: எனக்குத் தெரிந்தே பலமுறை கஷ்டஜீவனத்தில் இருக்கும், ஆகவே (அவர் பார்வையில்) உதவி பெறவேண்டிய மனிதர்களுக்கு நேரடியாகவும் அவர் வாசகர்களைக்கொண்டும் உதவி செய்திருக்கிறார்.

இன்னமும் இருக்கலாம். ஆனால் அயர்வாக இருக்கிறது + என்னுடைய எதிர்மறை விமர்சனங்களுக்கு இது இடமில்லை. எப்படியும் நான் ஒரு பெரிய்ய விமர்சகன் அல்லன், அதிகபட்சம் ஓரளவு படித்துள்ள ஒரு வாசகத் துய்ப்பாளன் மட்டுமே!

எது எப்படியோ!

-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… என்னருமை #எஸ்ரா அவர்களின் (இல்லாத) குடுமியைப் பிடித்துப் பாவம், உலுக்கிவிட்ட முந்தைய காட்டுரை (#எஸ்ரா: ‘என் அதிஅற்புத காவேரிப் போராளித்தன உளறல்கள்’ ) – பொதுவாகவே நம் தமிழ இலக்கியவாதிகளைச் சித்திரிப்பதாகவும் கொள்ளலாம். நன்றி.

ஜெயமோகனின் போராளிச் சிறுகட்டுரை – அது பொதுவாக, தமிழகத்தின் காவேரி /நீர்மேலாண்மைத் திராவிட நாடகங்களைப் பற்றிய மேலெழுந்தவாரி விமர்சனங்களை (with safe harbor clauses வகையறா) சம்பிரதாயமாக வைத்தாலும் – அறச்சீற்றத்தின் காரணமாக, போராளித்தனத்தை ஆதரிப்பதாக விரிகிறது.

 

முதலில் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்: போராட்டம் என்பது வேறு. போராளித்தனம் என்பது வேறு பூதம்.

போராட்டம் என்பது – சிலபல வரையறைகளுக்குட்பட்டு, சமூக வளர்ச்சியின் அங்கம். எதிர்ப்புகளின் ப்ரத்யட்ச வடிவம். முக்கியமானது. (என்னைப் பொறுத்தவரை இம்மாதிரி ஜொலிக்கும் போராடியவர்களுக்கு / போராடுபவர்களுக்கு எடுத்துக்காட்டுகள்: ஷங்கர்குஹா நியோகி, மதுகிஷ்வர், பாபுஜி போன்றவர்கள்)

போராளித்தனம் என்பது விதிவிலக்கில்லாத பொறுக்கித்தனம் மட்டுமே. ஏனெனில் இந்த போராளித்தனங்களானவை — போராளிகளுக்கு, போராளிகளால் போராளிகளுடைய சுயலாபத்துக்காகவும் முஷ்டியை உயர்த்தும் சுயமைதுன இன்பங்களுக்காகவும் – இக்காலங்களில் ஊடகப் பேடிகளுக்குத் தீனிபோட்டு ஆதாயங்களைப் பரஸ்பர அறுவடை செய்வதற்காகவும் உபயோகப் படுபவை.

ஆம், நம் வளர்ச்சிக்கான-உரிமைமீட்பு(!)க்கான கதையாடல்களில், இந்த எழவெடுத்த இருண்ட போராளிப்பக்கங்களும் முக்கியமானவை. இந்த இருண்ட பக்கங்களில் குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பவை – இந்தத் தன்னார்வ நிறுவனங்கள்.

இந்த போராளிகளில் நான்கு பிரிவினர்/ஜாதியினர் இருக்கின்றனர்:

போராளிகள்#1: சுய ஆதாயம் கருதி (அதாவது துட்டு வாங்கிக்கொண்டு, கட்டப்பஞ்சாயத்து செய்து) கீழ்மை அரசியல் செய்து தாம் இருக்கும்/உண்டுகொண்டிருக்கும் சமூகங்களுக்கு மனதாற இரண்டகம் செய்பவர்கள், தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் அயோக்கியர்கள். இவர்களுக்கு நன்றாகவே தெரியும், தாம் என்ன, எதற்காக, ஏன் செய்கிறோம் என்று. அற்ப மானுடப் பதர்கள். லும்பன் உதிரிகள். (எடுத்துக்காட்டுகள்: கருணாநிதி, இசுடாலிர், கந்தரகோளம் உதயகுமார், பூவுலகின் அற்பர் சுந்தரராஜன், நொபெல் சத்தியார்த்தி, தீஸ்தா சீதளவாத், திருமாவளவன், தொழில்முறை இடதுசாரிகள் போன்றவைகள்)

போராளிகள்#2: இவர்கள் உண்மையாகவே, தாம் செய்வதைச் சரி என்று நம்புபவர்கள். சாட்சிகளும் நிகழ்வுகளும் தம் பார்வைக்கு எதிராக இருந்தாலும், தாங்கள் அடிப்படையில் ஓரளவு ஓழுங்கானவர்களாக இருந்தாலும் – படிப்பறிவின்மை + அனுபவ அவதானிப்புகளை வைத்து தங்களைச் செம்மைப்படுத்திக்கொள்ளும் திறமையின்மையின் காரணமாக, அவர்களால் விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. வெகு சுளுவாக அறச்சீற்றத்துக்குட்பட்டு ஆவேசப் படுபவர்கள். (வைகோபால்சாமி, மேதாபட்கர், முற்போக்கு-இடதுசாரிகளில் சிலர்)

போராளிகள்#3: இந்தப் போராளிகளுக்கு பின்புலம் எதுவும் தெரியாவிட்டாலும், பொத்தாம் பொதுவாகப் போராளுவார்கள். ஏனெனில் போராளாவிட்டால் தாம் ஒதுக்கிவைக்கப்படுவோமோ, தாம் அறச்சீற்றம் இல்லாதவராகக் கருதப்படுவோமோ என்கிற மனக்கிலேச பயத்தின் காரணமாகவோ, ‘பணி’குறித்த ‘நிர்ப்பந்தங்கள்’ காரணமாகவோ – பொத்தாம் பொதுவாகக் கொடி பிடிப்பார்கள். கருத்துலகக் கோழைகள் இவர்கள். தங்கள் அறச்சீற்றத்தை ‘எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்!’ என முன்வைத்து, தங்கள் இருப்பை நிலை நாட்டிக்கொள்பவர்கள். (எடுத்துக்காட்டுகள்: #எஸ்ரா, பெரும்பாலான சமூகவளைத்தல எலியறிவுஜீவிகள், Tick-mark activists)

போராளிகள்#4: இவர்கள் முட்டாக்கூவான்கள். மந்தைகள். சிந்திக்கும் திறமையற்ற மட்டிக் கூட்டங்கள். மிலேச்சர்கள். மேற்கண்ட போராளிவகைகளால் உந்தப் பட்டு, வெறிபிடித்து அலைந்து வன்முறையால் சுயமைதுனம் செய்துகொள்பவர்கள். பொதுச் சொத்தை நாசம் செய்பவர்கள். பிரச்சினைக்குப் பிரச்சினைதாவி, டெம்பரவரியாக தங்கள் சமூக சேவையை ஆற்றுபவர்கள். (எடுத்துக்காட்டுகள்: திராவிடத் தொண்டர்கள், மாணவர்கள் – இன்னபிற பேடிகள்)

நல்லவேளை – இந்தப் போராளிகளுடன் இணையாத ஆனால் தாமஸ குணமுடைய ஒரு பெரிய மக்கள் திரள், இந்த மேற்கண்ட கும்பல்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. அது இந்த அழிச்சாட்டியங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

மேற்கண்ட பகுப்புகளில் ஜெயமோகன் எங்கு வீழ்கிறார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

-0-0-0-0-

சரி. இப்போது ஜெயமோகன் கட்டுரை யின் சில பகுதிகளைப் பற்றிச் சில கருத்துகளைப் பதிவு செய்யவேண்டும்.

“ஆனால் அவற்றைப் பேசுவதற்கான தருணம் அல்ல இது. இந்தியச்சூழலில் ஒருங்கிணைந்த வலுவான குரலே உரிமைகளை பெற்றுத்தரும் என்பதே மெய்யான நிலைமை. அது அமைதியான வழியாக இருந்தால் புறக்கணிக்கப்படும் என்பதும் உண்மை.”

ஆக அமைதியான வழி ஒத்துவராது என்கிறார். பொறுத்தது போதும் பொங்கியெழு மவனே என்கிறார்.

எவற்றைச் செய்திருக்கவேண்டுமோ அவற்றைச் செய்யாமல் சோம்பேறிகளாகவும் அயோக்கியர்களாகவும் விசிலடிச்சான் குஞ்சப்பர்களாகவும் இருந்துவிட்டு, தாமஸ குணத்தில் திளைத்து – பின்னர் திடுதிப்பென்று ‘ஒருங்கிணைந்த வலுவான குரல்’ என்றால் அது என்ன?

மேற்கண்ட நான்கு வர்ணங்களின் ஒருங்கிணைப்புதானே? அய்யா, தமிழகம் நல்லா வெளெங்கிடும். நன்றி.

“மத்திய அரசும் நீதிமன்றமும் நெறிகளின் அடிப்படையில் செயல்படுவதில்லை. பூசல்களில் மத்தியஸ்தம் வகிப்பவர்களின் மனநிலையே அவர்களிடம் உள்ளது. “

அப்படியா? எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருக்கின்றன என்பதை அவர் அறிந்திருப்பார் என நினைத்திருந்தேன்.  இப்படிப் பொத்தாம்பொதுவாக, விதிவிலக்குகளைப் பொதுமைப்படுத்தி அட்ச்சுவுடல் சரியில்லை என்பது என் கருத்து.

தர்மம்/நெறி என்பது வேறு சட்டம் (+அதன் சட்டகம்) என்பது வேறு என்பதையும் அவர் அறிந்திருப்பார் எனச் சந்தேகப்படுகிறேன். ஒருவேளை, அவர் இதனைத் தெரிந்திருந்து ஆனால் கண்டுகொள்ளாமலும் இருக்கலாம். அவர் கருத்து. அவர் விருப்பம், வேறென்ன சொல்ல.

இந்தக் காவிரி விவகாரத்தில் தமிழகம் (குறிப்பாகத் திராவிடர்கள்) மனதறிந்து செய்துள்ள தகிடுதத்தங்கள், சோம்பேறித்தனங்கள், கேவலமான சொதப்பல்கள் குறித்தும் + இந்த வழக்கின் வரலாறு குறித்தும், நீதிமன்றமும் மத்திய அரசுகளும் தொடர்ந்து (திராவிடர்களையும் மீறி) – ஒரு பொதுவான, நன்னம்பிக்கை சார்ந்த தீர்வையே நாடி வந்திருப்பதைப் பற்றியும் – பின்புல விஷயங்களை அறிய முயற்சிசெய்தால் அவர் தம் கருத்துகளைச் செப்பனிட்டுக்கொள்வார் என நினைக்கிறேன்.

மேலும் அவர், தற்போதைய மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை அறிய – அவற்றைப் பற்றித் தம் கருத்துகளை வந்தடைய – சமூகவளைத்தலப் பிரதட்சிணப் பெருச்சாளிகளையும், ஊடகப்பேடிகளையும் மட்டுமே நம்பியிருக்கிறாரோ என்னவோ!

கொஞ்சமேனும் ஹோம்வர்க் செய்திருக்கலாம் – அவருடைய வாசகர்களில் பலர் ஐஏஎஸ் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் இருக்கும்போது, அடிப்படைகளேயற்ற கருத்துகளை உருவாக்கிக்கொள்ளவேண்டிய அவசியமேயில்லை அல்லவா?

மேலும், “பூசல்களில் மத்தியஸ்தம் வகிப்பவர்களின் மனநிலை” என எதைக் குறிப்பிடுகிறார் என எனக்குச் சரியாகப் புரியவில்லை.

ஒருவேளை – பொத்தாம்பொதுவாக ‘வாய்க்கா தகறாறு’ அல்லது ‘தெருமுனை கட்டப் பஞ்சாயத்துத் திராவிடத்தனம்’ அல்லது ‘உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்’ அல்லது ‘கொஞ்சம் கொடுக்கற வெலயச் சொல்லுப்பா’ வகை லௌகீக விஷயங்களுடன் இந்தச் சிடுக்கல் காவேரிப் பிரச்சினையைக் குழப்பி –  இந்த அற்பப் ‘பூசல்’களுக்கு அப்பாற்பட்ட ஒருவனாக, தாம் இருப்பதாகப் தகுதியேற்படுத்திக் கொள்கிறாரோ? Amoral high stand?

“காவேரி நீர் விஷயத்தில் மட்டுமல்ல பக்ராநங்கல் நீர் விவகாரம் முதல் அனைத்திலுமே இந்த சுரணையற்றதன்மையே வெளிப்படுகிறது”

காவேரி பிரச்சினையையும் பக்ரா-நங்கல் பிரச்சினையையும் பொத்தாம் பொதுவாக முடிச்சு போடுவது – செந்தில்-கவுண்டமணி நகைச்சுவையையும் ரஷ்ய போல்ஷிவிக்கிஸத்தையும் ஒரு தொடர்புமில்லாமல்ஒன்றாகக் கருதும் பாமர அணுகுமுறைதான்.

காவேரி பற்றிப் பொதுவாகவே அபரிமிதமாகவே நம் தமிழ்ப் போராளிகள் + அறிவுஜீவிகளானவர்கள் அறிந்திருப்பார்கள்(!)  என்பதால் பக்ரா நங்கல் அணைக்கட்டுகளைப் பற்றிய சில அவசரக் குறிப்புகள்:

  • இந்தத் திட்டம் – சர்வதேச (பாகிஸ்தான்) விவகாரங்களையும், பிலாஸ்பூர் (இது ஒரு மன்னராட்சிக்குட்பட்ட பிரதேசம், இதன் பகுதிகள்தாம் பெரும்பாலும் மூழ்கின; இப்போதைய ஹிமாச்சலப் பிரதேசத்தின் பகுதி) இந்திய ஒருங்கிணைப்பின் கீழ் வந்த சமாச்சாரங்களும் உள்ளடக்கப்பட்டதொன்று.
  • 1940களின் நடுவிலிருந்து ஆரம்பித்த – எடுத்துக்காட்டாக, பக்ரா நங்கல் அணைக்கட்டுகள் விஷயங்களில் நேருவின் மத்திய அரசு எடுத்த ஏதேச்சாதிகாரப் போக்கு/அணுகுமுறை (ஆனால் இதற்கு நேரு ஒரு லெனின்-ஸ்டாலினிய மத்தியமயமாக்கல் பார்வை கொண்டவர் என்பது காரணமாக இருக்கலாம்) போன்ற நிலை + கெடுபிடி பிற்பாடு குறைந்திருக்கிறது.
  • மேலும் பக்ரா-நங்கல் பிரச்சினை என்பதில் நீர்பகிர்வு தொடர்பான விஷயத்திற்கு அப்பாற்பட்டு – மின்சக்தி தொடர்பான பிரச்சினைதான் அதற்கான இழப்பீடு வகையறாதான் பிரதானம்.
  • பக்ரா நங்கல் விஷயத்தில் ஒரு ஆணையம் 1960ல் ஆரம்பித்து இன்றுவரை, பெரிதான குற்றச்சாட்டுகளுக்கும் மெத்தனங்களுக்கும் ஆட்படாமல் இன்றுவரை காத்திரமாகச் செயல்பட்டு வருகிறது. (http://www.bbmb.gov.in/)
  • இந்தப் பகிர்வுகள் தொடர்பாக – சம்பந்தப்பட்ட எந்த ஒரு மாநிலமும் (பஞ்சாப், ஹிமாச்சல் ப்ரதேஷ், ராஜஸ்தான், ஹரியாணா) மெத்தனமாகவோ, சோம்பேறித்தனமாகவோ, திராவிடக் கமுக்கமாகவோ – தங்கள் உரிமைகளை உதாசீனம் செய்து பொய்மைகளில் ஈடுபடவோ இல்லை;  ‘நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்‘ நாங்கள் எங்கள் பாக்கெட்டை ரொப்பிக்கொள்வதில் படுபிஸியாக இருக்கிறோம் – எனக் கருணாநிதித்தனமான கயமையுடன் விவகாரங்களில் ஈடுபடவில்லை.
  • தங்கள் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த/கொடுக்கும் சமயம் – தொடர்புள்ள எந்த ஒரு மாநிலமும் பந்த் போராட்டம் என தமாஷா ஸர்க்கஸ்களை நிகழ்த்தி – தங்களையும் நீரையும் சிறுமைப் படுத்தவில்லை. நீட்டி முழக்கி நடனமாடவில்லை. மக்கள் வரிப்பணத்தைக் கரியாக்கவில்லை.
  • அப்பகுதிகளைச் சார்ந்த ஒரு அறிவுஜீவி கூட இதில் மூக்கை நுழைத்து ஆதாயம் தேடவில்லை. அறச்சீற்றப் பேயாட்டம் செய்து பாமர மக்களை உசுப்பி விடவில்லை.

எப்படித்தான், படுதெகிர்யத்துடனும் பகிரங்கமாகவும் சொட்டைத்தலைக்கும் சிரங்குக்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்களோ, எனக்கு அலுப்பாக இருக்கிறது…

-0-0-0-0-0-

“ஆகவே முடிந்தவரை, அனைத்து வகைகளிலும் உரக்கக்கோருவதே இன்று இருக்கும் வழி. நீருக்கான இந்தியப்போராட்டங்கள் அனைத்தும் இவ்வகையிலேயே நிகழ்ந்துள்ளன.”

வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த நீர்ப்பகிர்வுப் போராட்டங்களையும், அமைப்புகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் – நம் தமிழகத்தின் திராவிடப் பொறுக்கி-மெத்தனங்களோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.

அப்படியே குழப்பிக் கொண்டாலும், பொறுப்பற்று உசுப்பி விடக்கூடாது.

என்னைப் போன்ற 7.5 பேர் மட்டுமே படிக்கும் கூறுகெட்ட தற்குறி அப்படிச் செய்யலாமோ என்ன எழவோ – ஆனால், பல்லாயிரம் நபர்களால் அனுதினமும் படிக்கப்படும் ஒரு கருத்துலகப் பங்களிப்பாளர், இன்னும் கொஞ்சம் ஆய்ந்து, பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளலாமோ?

உரக்கக் கோரினால் மட்டும் போதுமா? இதனால் வெட்டிக் காக்காய்க்கூட்டச் சப்தம் தான் மிஞ்சும். மாறாக, காத்திரமாக களத்தில் இறங்கி, நைச்சியமாகக் காரியங்களைச் சாதித்துக்கொள்ளவேண்டாமா?

அந்தந்த மாநிலங்களுக்குப் போய்ப் பேசி, நம் தரப்பினை அவர்களுக்குச் சொல்லி அவர்கள் தரப்பையும் கேட்டுக்கொண்டு பின்னர் அனைவருக்கும் ஒத்துவரும் திட்டங்களைச் செயல்படுத்தலாமே!

போராளித்தனத்தில் தொபுக்கடீரெனக் குதிப்பதற்கு முன், நம் அறிவுஜீவிகள் முதலில் காவிரி தொடர்பான தீர்ப்புகளையும் வரலாறுகளையும் படித்துத் தெரிந்துகொள்ளலாமே!

நாவறளப் பிச்சை எடுப்பதில் அல்லது கோஷ்டம் போடுவதினால் என்ன பயன்?

ஆனாலும் — உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, பிரிவினைவாதம் பேசி அரசியல் அதிகார அறுவடை செய்யலாம் என மெனக்கெட்டு முயன்றுகொண்டிருக்கும் திராவிட-மய்யக் கும்பல்களையும் நடிகக் கோமாளிகளையும் காப்பியடிக்கும் டைரடக்கர்களையும் ஆதரித்து இயங்கினால் ‘புல்லுக்கும் ஆங்கே பொசிந்து’ ஆதாயம் கிடைக்கலாம் என்பதை நான் அறிந்துகொள்கிறேன்.

உரிமைகளைச் சுயநலம் கருதித் தாரைவார்த்துக்கொடுத்துவிட்டு, பின்னர் பெட்டைப் புலம்பல்களில் – சுயமைதுனப் போராட்டங்களில் ஈடுபடுவதில் இருக்கும் இன்பம்ஸ் அபரிமிதம் அல்லவா?

ஊக்கபோனஸாக – சாதா தமிழனுக்கு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனாலும் – எப்படியாவது தமிழகத்தின் தொழில் உற்பத்தி குறைவாகிறது, மாணவர்கள் படிக்காமல் கொடிபிடித்துக் கல்லடிக்கிறார்கள் என ஆசுவாசம் அடையும் பெருந்தன்மையும் உன்னதங்கள் தாமே?

மானமும் எட்டி விடும் தூரம்தான். அதுவரை மானத்தை எட்டிஉதைத்துக்கொண்டே இருப்போம்.

ஆமென்.

“ஆகவே இன்று நிகழும் இந்த உரத்த குரலுடன் நானும் இணையவே விழைகிறேன். இதில் பொது ஒழுங்கு சட்டம் என்றெல்லாம் பேசுவதில் எப்பொருளும் இல்லை. போராட்டம் வெல்க..

ஆக – ஜெயமோகன் இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது அவர் கருத்துரிமை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார் என்றால் – அது பொருட்படுத்தத்தக்கதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பின்னது – அகவயமானதல்ல, நம்பகத் தன்மை, ஆய்ந்து அறியும் பாங்கு, தொடர்ந்து தம்மைச் செழுமைப்படுத்தி, முடிந்தால் பிறரையும் அப்படியேயாக ஊக்குவிப்பது போன்ற விஷயங்கள் தொடர்பானது.

So.

Everyone has a right to his/her opinion, may be they even have a right to be heard – but NOBODY has a right to be taken seriously. Including Jeyamohan. And, of course, including yours truly. Thanks!

ஆனாலும் ஜெயமோகன் அவர்களை நான் படுஸீரியஸாக எடுத்துக்கொள்கிறேன்.

ஏனெனில் அவர், பொதுவாகவே வறண்ட-பொறுக்கித்தனமான சமகால தமிழக-அரசியல்-பண்பாட்டுச் சூழலில், ஓரளவு நம்பிக்கை கொடுப்பவர், அவர் வீழக்கூடாது. கசடுகளிலும் உணர்ச்சிவசப் பட்டு உச்சாடனங்களில் ஈடுபடுவதிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது. இது எனது அபிலாஷை. கோரிக்கை.

மேலும் – இப்படியே போனால், ந்யூட்ரினோ எதிர்ப்புப் போராட்ட ஜோதியிலும் அவர் ஐக்கியமாகிவிடுவாரோ எனவும் பயமாக இருக்கிறது. :-(

ஆகவே இந்த நீஈஈஈஈளமான வியாக்கியானம்.

நன்றி!

17 Responses to “ஜெயமோகன்: ‘நானும் போராளிதேன்!’”

  1. Anonymous Says:

    அவர் தன் திரையுலக பணிசார்ந்து (ஓய்ந்து )விட்டார் என்றே தோன்றுகிறது. அவரது நண்பரான PAகிருஷ்ணன் எழுதியதை கவனித்து இருக்கலாம்

  2. Anonymous Says:

    நொபெல் சத்தியார்த்தி ஏன் #1ல்? any links please.


    • 1. He is a worldvision stooge, received funding from them to damn India.
      2. His figures for ‘saving children’ and the numbers are cooked.
      3. He misappropriated funds – http://kailashsatyarthifraud.blogspot.in/2014/12/to-members-of-norwegian-nobel-committee.html
      4. For all his testimonies against India, his daughter was awarded with prestigious internships under certain india-phobic american senators.

      ’nuff for now.

      BTW, why don’t you identify yourself? who are you?

      __r.

      __r.

      • Ganesh V Salem Says:

        Thanks for the info. I briefly exchanged a few words with him in VA some 18 years ago. He was a good friend of a Pakistani family I also happened to be friends with. They were working for something called ‘Rugmark India’. I was young and naive then. Now just the later(Is naive a synonym for stupidity). Let me do MY homework now. Thanks.

  3. Anonymous Says:

    காவிரி நீர் – கூச்சல்களுக்கு நடுவே
    Posted on April 5, 2018 by P A Krishnan

  4. Anonymous Says:

    தமிழர் கலை( சினிமா) இலக்கிய(வைரமுத்து)பண்பாடு(ஜல்லிக்கட்டு) பேரவை -தமிழ் சினிமா இயக்குனர்கள் கூட்டம்வாழ்க தமிழ். இதை கேள்விப்பட்டால் ஜெயமோகன் அவர்களே அரண்டுவிடுவார்

  5. Anonymous Says:

    தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தான் இப்போதைய போராட்டங்களை முன்னெடுக்கிறது. ஜெ. அவர்கள் இவர்களை தான் போராட்டங்கள் என்கிறாரா என்று சொல்ல வந்தேன் ஐயா. அதுவும் வைரமுத்துவை இலக்கியம் என்றால் இன்னும் அரண்டுவிடுவார் என்று சொல்லவந்தேன் ஐயா


  6. I expected a better write up from you. How it is shared elsewhere in India? Let me just pose question. What is the real issue? What is the problem in sharing? What is that unacceptable to Karnataka? If on June 10th the capcity in the dam is X then the first priority of drinking water for Bangalore can be taken and rest is shared proportionately. This can be done every 10 days? What is the problem in enforcing this? If your article throw light on these then it will be informative.


  7. […] நேற்றைய பதிவை, வழக்கமான ஐந்து பேரைவிட சுமார் 1.5 பேர் […]


  8. […] ஜெயமோகன்: ‘நானும் போராளிதேன்!’ 12/04/2018 […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s