பேடிப்போராளித் தமிழனுக்கு அனுதினமும் பொங்கல்! வாழ்த்துகள்!

April 14, 2018

ஆனால் – ஒரு விஷயத்தில்கூடக் களத்தில் இறங்கிக் காரியம் செய்யமாட்டான்; கைகளை அழுக்காக்கிக் கொள்ளமாட்டான், உழைத்துண்ணவும் மாட்டான் எம் மானமிகு மரத் தமிழன். #தமிழேண்டா!

… ஒரு படிப்பில்லை, வாசிப்பில்லை, சுயமாகச் சிந்திக்கும் அறிவில்லை. எங்கோ எந்தப் பேடியோ சொன்னதைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கோமாளி பேத்துவதை கர்மசிரத்தையாக தன் மண்ணாந்தை மண்டையில் மேலோட்டமாகப் போட்டுக்கொண்டு குப்பைத்தனமாக இணையத்திலும் தெருமுக்கிலும் கொடி பிடிப்பான். ஆவேசப் படுவான். மசுர்க் கூச்செறிக்கப் பேசுவான். அடிப்படை நேர்மையையே விடுங்கள் – காத்திரமாகவும் செய்நேர்த்தியுடனும் ஒரு சாதாரண மசுத்தைக் கூடப் பிடுங்கமாட்டான்.

மசுரு பிடுங்கவும் அறிகிலான், அதன் காரணம் ஈதென்ற அறிவுமிலான்.

…அப்படியே தப்பித்தவறி எக்குத்தப்பாக மசுத்தைப் பிடுங்கினாலும் அதையும் ஒரிரு மசுத்துகளுக்குமேல் அந்த அரைகுறையோனுக்குப் பிடுங்கமுடியாது, ஏனெனில் அவன் ஈடுஇணையற்ற சோம்பேறி. எந்தவொரு விஷயத்தையும் அதில் ஆழ்ந்து அமிழ்ந்து தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்ய, செய்துமுடிக்க – அவன் பெற்றுள்ள அதியற்புத திராவிடக் கல்வியும் அவனை விடாது; அவன் அடிபணிந்து இயங்கும் நடிகக் கோமாளிகளும் இன்னபிற திராவிட உதிரிகளும் அவனுக்கு சுயமூளையோடு இயங்க வாய்ப்புக் கொடுப்பதேயில்ல. ஆக,  அவனைச் சொல்லியும் குற்றமில்லை…

ஆனாலும் – பாரதம் முழுவதும் சுற்றியலைந்து பல பிராந்தியங்களின் இளைஞர்களுடனும் பணிபுரிய வாய்ப்புகள் பல கிடைத்து அவற்றை உபயோகமும் செய்து கொண்டுள்ள/கொண்டிருக்கும் நான், மனம்வெம்பச் சொல்ல விரும்புவது என்னவென்றால்…

…சுற்றிச் சுற்றிப் போராளிக் குசு விட்டு ஒருவருடையதை மற்றொருவர் பரஸ்பரம் முகர்ந்து ஆனந்தக் கூத்தாடுவதில், பின்னர் அதன் இன்பலாகிரியில் உன்மத்தம் பிடித்தலைவதில் – பின் அடுத்த போராளித்தனங்களுக்குத் தாவுவதில் (வேகமய்யா வேகம்!) — தமிழ்ப் போராளி இளைஞனுக்கு இணை அவனே! (இக்காலங்களில், ஊக்கபோனஸாக – அவளுக்கு இணையும் அவளேதான். நன்றி!)

-0-0-0-0-0-

நேற்றிரவு ஒரு இளைஞ அரைகுறையோடு உரையாட முயன்று அசிங்கமாகத் தோற்றேன் என்ற கசக்கும் உண்மையை ஒப்புக்கொள்கிறேன். :-(  (இத்தனைக்கும் இந்தப் பையன், என்னுடைய நண்பர் ஒருவரால் எனக்குப் பரிந்துரைக்கப் பட்டவன் – நண்பர் என்னுடைய அண்மைய பதிவுகளைப் படித்துவிட்டு…

…அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்)

எஸ்ரா-சாரு நிவேதிதா-ஜெயமோகன் அறிவுஜீவியத் தளங்களும் (சில ஃபேஸ் புக் ஆசாமிகள் – இவர்கள் பெயர் எனக்கு நினைவில்லை + மனுஷ்யபுத்திரன் (இவருடைய சொந்தப் பெயரில்தான் இப்போது ஃபேஸ்புக் வியாவாரத்தை நடத்துகிறாராமே, பாவம்! + வினவு) ), பூவுலகின் நண்பர்கள் போன்றவர்களும்தான் இவனுடைய ஆதர்சங்கள். (ஹ்ம்ம்… குற்றம் பார்க்கில்… மேலும் – மாமா சொன்னாரென்று இதையெல்லாம் என்னிடம் ஒப்பித்தானோ என்ன எழவோ!)

ஆகவே – இவன் ந்யூட்ரினோ, கூடங்குளம், ஸ்டெர்லைட், காற்றாலை, பட்டாசுத்தொழில், திருப்பூர் ஜவுளித்தொழில், ‘யந்திரமயமாக்கல்*‘ இன்னபிறவற்றின் எதிர்ப்பாளன். ஒரு சுக்கும் இவற்றைப் பற்றித் தெரிந்திருக்கவில்லையானாலுமேகூட.  (*வண்டி வைத்திருக்கிறாயா எனக் கேட்டேன்; அவன் சொன்னான்: என்னிடம் இருப்பது கேடிஎம் பைக், என் தந்தை எனக்குச் சென்றவருடம் வாங்கிக்கொடுத்தார்! நன்றி! உழைப்பின் பெருமையைச் சிறுவயதிலேயே உணர்ந்துவிட்ட பாட்டாளி, வேறென்ன சொல்ல…)

ஆக ஒரு சராசரித் தமிழன். இப்போதே எதிர்க்க ஆரம்பித்தால்தானே பின்வரும் தமிழத் தலைமுறைகளைத் துப்புரவாகக் காயடிக்க முடியும், சொல்லுங்கள்?

அவன் என்னிடம் கேட்டது – ‘நான் ‘சமூகசேவை’ செய்ய விரும்புகிறேன், உழைக்கவிரும்புகிறேன் – ஆக நான் எந்தத் திசையில் பயணம் செய்யவேண்டும்? என் மனப்பான்மைக்கு, பார்வைக்கு ஏற்ற வேலை ஒன்றை எனக்கு ஏற்பாடு செய்து தரமுடியுமா?‘ – என் நண்பர் போயும் போயும் என்னைப் போன்ற பதரிடம் அவனை இதைக் குறித்துப் பேசச் சொல்லியிருக்கிறார். தேவையா?

ஆனால், எனக்கும் பிறத்தியாருக்கு ஏகத்துக்கும் அறிவுரை கொடுப்பது வெல்லக்கட்டி. அதுவும் தானாக மனமுவந்து மாட்டிக்கொண்ட விட்டில் பூச்சிகளை எரிக்காமல் விட்டால் அது தீயின் அடிப்படை தர்மத்தை மீறிய செயலாகத்தானே ஆகும்?

-0-0-0-0-0-0-

சரி.

…பாவம் இப்போது படித்துமுடித்திருக்கும் இளைஞனே, அவன் இனிமேல்தானே சம்பாதிக்க ஆரம்பிக்கவேண்டும் என்று நான்தான் அவனை அழைத்துப் பேசினேன். சுமார் 95 நிமிட வாழ்க்கை, என்னுடையது – இதில் விரயமானது.

முதலில் அவனிடம் கீழ்கண்ட விஷயங்களைப் பற்றிப் பேசினேன்.

நான் கீழே கொடுத்திருக்கும் விஷயங்கள் (உண்மையில் தமிழ் இளைஞனுக்கு, அவன் வாழ்வு வளமையும் செறிவும் பெற என் கோரிக்கைகள் / பரிந்துரைகள்) – சுமார் இருபது வருடமுன்பு, ஒரு இந்திய இளைஞன், எப்படி இந்தியாவையும் தன்னையும் அறிந்துகொள்வது என சுமார் 40 பக்க விஸ்தீரணத்தில் நான் எழுதியிருந்த டெலெக்ஸ்நடை ஆங்கிலமூல ஆவணத்திலிருந்து கடன் பெறப்பட்டது. (ஆங்கில மூலம் தொலைந்துபோய்விட்டது; என் நினைவிலிருந்துதான் அதில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களை எழுதுகிறேன்.)

சரி, தமிழ் நாட்டு மாணவர்கள் என்னதான்  செய்யவேண்டும்?   20/02/2014

பின்னர், அவனுக்குச் சொன்னேன் – நான்கு வருடங்கள் எஞ்ஜினீயரிங் முடித்திருக்கிறாய். வேலைக்காகவும் எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதையும் அறிய என்னிடம் வந்திருக்கிறாய். ஆனால் இது ஒரு நேர்காணல் வகையறா அல்ல – ஏனெனில், அடிப்படை மின்னணுவியல் குறித்த விஷயங்கள் உனக்குப் பிடிபடவில்லை, சரி போகட்டும். இருந்தாலும் நான் சில கேள்விகளைக் கேட்கலாம் என நினைக்கிறேன். பரவாயில்லையா?

ஆம்.

பையா, நீ கூடங்குளம் பற்றிக் குமுறுகிறாய். அதில் என்ன பிரச்சினை?

ஒன்றும் தெரியவில்லை. உலகில் அணுகுண்டுகள் அதிகம். நாகஸாகி ஹிரோஷிமா என… பொதுவான குசு.

ந்யூட்ரினோ திட்டத்தினால் என்ன பிரச்சினை.

அணை உடையும். தூசி. சுற்றுச் சூழல் மாசுபடுதல். உலகில் அணுகுண்டுகள் அதிகம். நாகஸாகி ஹிரோஷிமா என… மறுபடியும் பொதுவான குசு.

தொழிற்சாலைகளால் என்ன பிரச்சினை?

வட நாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் கொள்ளை. சுற்றுச்சூழல் மாசுபடும். நீராதாரங்கள் பாழாகும்.

திராவிடர்கள் தொழில் நடத்துவது இல்லையா? உங்கள் உறவினர் டிஆர் பாலு சாராயத் தொழிற்சாலைகளை நடத்துவதில்லையா?

சார், அதெல்லாம் பெரிய விஷயமில்லை.

பைக் வைத்திருக்கிறாயே, அது தொழிற்சாலையில்லாமல் எப்படிவந்திருக்கும்?

இந்த பைக் இந்தியாவில் செய்யப்படவில்லை.

புகை?

தொழிற்சாலைகளின் புகைக்கு என் வண்டியின் புகை குறைவுதானே? மேலும் நெடுஞ்சாலைகளில் காற்று நிறைய வீசி(!) புகை அடித்துக்கொண்டுபோய் மாயமாகி விடும்.

சுற்றுச்சூழல் பற்றி இவ்வளவு கரிசனப்படும் நீ, சைக்கிளில் அல்லது நடந்துபோகலாமே!

ஸார், நான் ஒருவன் சைக்கிளில் போவதாலே இது சரியாகிவிடுமா?


ஒரு நாளைக்கு ஒரு திராவிடர் விடும் குசுவின் அளவென்ன? எவ்வளவு தடவை ஏப்பம் விடுகிறார்?

ஸார், இந்தக் கேள்வி எதற்கு?

சபாஷ் தம்பி, சிந்திக்கிறாய் – ஆகவே தேறிவிடுவாய்! இவைகளால் சுற்றுச் சூழல் நேரடியாகப் பாதிக்கப் படுவதற்கு வாய்ப்புகளே இல்லையா? மீத்தேன் ஒரு க்ரீன்ஹௌஸ் வாயுதானே?

நான் சொன்னது புரிந்ததோ இல்லையோ, அவன் சிரித்துவிட்டான். நான் சொன்னேன் – நீ ஸீரியஸ்ஸாக இதனைக் கணக்கெடுத்தால், தமிழகம் நாசமாவதற்கு இன்னொரு திராவிடக் காரணமும் கிடைக்கும். சரியா?

ஜல்லிக்கட்டு போராளித்தனத்தில் ஈடுபட்டாயா?

ஆமாம் ஸார். இலங்கையரசுக்கெதிரான மாணவர் போராட்டத்துலகூட ஸார். அப்போ நான் சின்னப் பையன். (ஆர்வத்துடன் இன்னமும் பலப்பல போராளித்தனங்களைப் பற்றிச் சொன்னான், எனக்குத் தலையே சுற்றியது)

சரி, இப்ப அந்த ஜல்லிக்கட்டு விஷயம் எங்கே இருக்கிறது?

அவனுக்கு – முதலில் அந்தப் போராட்டம் எதற்கு நடந்தது என்றே தெரியவில்லை. ஆக இந்தக் கேள்வி அவனுக்கு அபத்தமாகப் பட்டது. மேலும் – இப்போது பிற ‘பற்றியெரியும்’ பிரச்சினைகளைக் கையில் எடுத்திருப்பதால் பாவம்,  அவன் ரொம்ப பிஸி. தற்போது காவேரி அல்லோலகல்லோலம் வேறு. புரிந்துகொள்கிறேன். நன்றி.

சிரிப்புகளுக்கு அப்பாற்பட்டு அந்தப் பையன் தேறவில்லை. அவன் லட்சியம் திரைப்படத் துறையில் சேர்ந்து ‘சமூக சேவை(!)’ செய்வதுதான் எனப் புரிந்தது. இல்லையென்றால் ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ அதற்குத்தான் ஒருவிதமான தகுதியுமே அவசியமில்லையே!

சமூகப் பார்வையுள்ள புரட்சிப் படங்களை எடுக்கப் போகிறேன் என்றான் – இணையத்தில் ரிலீஸ் என்றான்; முதலில் அணுசக்தி எதிர்ப்புப் படம். நான் சொன்னேன் – பையா, உண்மையைச் சொல்கிறேன், உனக்குப் பார்வையே இல்லை, பின் எப்படி சமூகப் பார்வை வரும்? புரட்சி பற்றிப் பேசுவது லேசு – ஆனால் அதற்கு உழைக்கவேண்டுமே!

ஸார், உங்க காலத்துல புரட்சி என்பது வேறு. எங்க காலத்தில் ஊடகப் புரட்சிதான். சமூக வலைத்தளங்களின் வழியாகவே புரட்சி சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக அரபிய வசந்தம்!

!!!!!

ஆனமட்டும் சொல்லிப் பார்த்தேன் – இணையத் திரைப்பட மாடல்களில் பிஸினெஸ் சுளுவில்லை – ஆனாலும் கொஞ்சம் பணம் கிடைக்கலாம், ஆனால் பலவிஷயங்களில் இந்தத் திரைப்பட எழவுகளுக்கு  ஜேப்படித் தொழிலே மேல், அதிலும் உழைப்பும் ரிஸ்க்கும் இருக்கிறது என்றெல்லாம். குருடன் கண்ணில் காட்டிய இயற்கையழகு.

…நம்முடைய உரையாடல் நம் இருவருக்குமே பிடிக்கவில்லை. பின் ஏன் வந்தாய் என்னிடம்,  சமூகசேவை சமூக  இடியாப்பம் என்று? என் நேரமும் விரயமானதே என்றேன்.

அவன் சொன்னான் – மாமா கோவிச்சுக்குவாரு. அதனாலதான்.

மாமாவிடம் உடனடியாகப் பேசி, திட்டித் தீர்த்தேன். இப்போது இன்னொரு புத்தம்புது எதிரி!

…சும்மனாச்சிக்கும் சொன்னேன், அவர் பாவம், ஒரு நல்லெண்ணத்தில் இதனைச் செய்திருக்கிறார்; பிரச்சினை என்னவென்றால் எனக்கு அறிவோ விவேகமோ பொறுமையோ இல்லை. வெறும் காமாலைக் கண் பார்வை மட்டுமே. என்ன செய்வது சொல்லுங்கள்! :-(

-0-0-0-0-0-

ஆக, பொங்கள் வாழ்த்துகல். னண்ரி.

அலுப்பாக இருக்கிறது. :-(

பின்குறிப்பு: ஜெயமோகன் அவர்கள் பரிந்துரைத்தாரே என்றுகூட, சிலபல வருடங்களுக்கு முன் ஒரு பையனுடன் இப்படி ஒரு உரையாடல் நடத்தியதாக நினைவு… ஆனால் இனிமேல் இம்மாதிரி விஷப் பரீட்சைகளில் இறங்கப் போவதில்லை. நல்லெண்ண மாமாக்கள் தயவுசெய்து மன்னிக்கவும். வயிறெறிகிறது. என்னால் முடியவில்லை.

என்னை நம்பி எனக்கும் ஒரு குடும்பமாவது இருக்கிறது. பிள்ளைகள் பள்ளிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மாளா விரக்தியில் என்னை மூழ்கடித்து விடாதீர்கள். தற்கொலை முயற்சிகளில் ஈடுபட வைத்துவிடாதீர்கள்! உங்கள் தயை எனக்குத் தேவை.

மேலும் – இன்னமும்கூட, திராவிடர்களையும் மீறி – சில ஜொலிக்கும் தமிழிளைஞர்கள் இருக்கிறார்கள் என நம்பி நாசமாப் போகவே எனக்கு ஆசை.

நன்றி. :-(

15 Responses to “பேடிப்போராளித் தமிழனுக்கு அனுதினமும் பொங்கல்! வாழ்த்துகள்!”

  1. Anonymous Says:

    இன்றய இளைஞர் பெரும்பாலும் வாட்ஸஅப் வரும் செய்திகளையே உண்மை என்று நம்புகின்றனர் இதில் புதிய தலைவலி சேனல் வேறு தன் கடமையை ஆற்றுகிறது சார்

  2. பிரபு தேவா Says:

    சுத்தமாக புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமில்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது. திராவிட சோசியலிச புத்தகங்களைப் படித்துவிட்டு புரட்சி பேசிக்கொண்டு திரிவது. இவை இரண்டில் எது சகிக்கக்கூடியது.


    • அய்யா, சர்வ நிச்சயமாக முதலாவதுதான்.

      ஏனெனில், புத்தக அறிவுள்ள-படித்துள்ள பலப்பல அயோக்கியர்களை நான் நேரடியாக அறிவேன்-தவிர்த்தும் வருபவன்.

      வாசிப்பில்லாத (அதற்குக் கொடுப்பினை இல்லாத) பல மகோன்னத மனிதர்களையும் அறிவேன்.

      நேர்மைக்கும், நாணயத்துக்கும், செயலூக்கத்துக்கும் — படிப்பறிவின்மை (அல்லது வாசிப்பின்மை) விஷயத்துக்கும் ஒரு விதமான தொடர்புமேயில்லை.

      வாசிப்பறிவு உள்ளவர்களும் ‘இலக்கியக் காரர்களும்’ தங்களை பெரிய்ய மயிராண்டிகளாக நினைத்துக்கொள்வது, உலகத்தை உய்விப்பவர்களாகவும், சமூகத்தின் மனச்சாட்சிகளாகவும் மினுக்கிக்கொண்டலைவது – அதிகபட்சம் நகைப்புக்குரியது மட்டுமே.

      நன்றி.

      • Anonymous Says:

        எனில் ஐயா தற்போதைய தமிழ்நாட்டு சூழலில் அறிவு ஜீவி என்போர் யார் எதை தான் படிப்பது யாரை தான் ஆதர்சமாக கொள்வது ஐயா விளக்குங்கள்

  3. nparamasivam1951 Says:

    ஐயா, பாவம் அந்தப் பையன். அவன் மாமாவும் பாவம். மறந்து விட்டேனே, நீங்களும் பாவமோ பாவம்.
    அவர்களுக்கும் உங்களுக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


    • அய்யா, நன்றியோ நன்றி. உங்களுக்கும் பாவம், வாழ்த்துகள்.

      ஊக்கபோனஸாக புத்தாண்டுக்கும் –
      அதுவும் பாவம், என்ன பாவம் செய்தது, சொல்லுங்கள்?

      பாவமுலோன பாவமு வந்தது என எம்எஸ் அம்மணி வந்து உதைக்காமல் இருந்தால் சரி!

      சரியா?

      சாரி.

      நன்றி! நன்றி!! நன்றி!!!

  4. ஆனந்தம் Says:

    #யாரும்_சிரிச்சிறாதீங்க .. முழுசா படிக்காம விட்டுறாதீங்க.. ஒரு டம்ளர் தம்பி நாம் தமிழர் க்ரூப்ல எழுதிய சீரியஸ் பதிவு..
    ..
    வெறி >>>சீமான் விளைவு – (உலகிலேயே மிக முட்டாள் தனமானதும் குரூரமானதும் இனவெறி யே என்பதை எடுத்து காட்டும் சீமான் தம்பியின் பதிவு இது __ பகிர்வதற்கு வருந்துகிறேன்) . >>>>>>>>>>>>>வந்தேறிகள் வெளியேற்றம்

    தமிழர்நாட்டில் பிற இனத்தார் குடியேற்றத்தை சமாளிப்பது எப்படி?

    தமிழர்நாடு அமைந்ததும்
    (அதாவது தமிழர்நாடு முழுவதும் தமிழரின் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்த தமிழினத்தலைவர் ‘விடுதலைப் பிரகடனம்’ செய்ததும்)

    தமிழரல்லாதாரை முடிந்த அளவு வெளியேற்ற வேண்டும்.
    அவர்கள் எத்தனை நூறாண்டுகள் இங்கு வாழ்ந்திருந்தாலும் சரி.

    அவர்களுக்கு அடிப்படை சாமான்களும் சிறிதளவு பண உதவியும் கொடுத்து அனுப்பிவைக்கவேண்டும்.

    அவர்களின் சொத்துகள் அனைத்தும் தமிழர்நாட்டுக்கே சொந்தம்.

    பிறகு உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் வம்சாவழிகளை மீண்டும் அழைத்து வந்து குடியேற்றவேண்டும்.
    அவர்கள் தமிழரா என ஆராய்ந்து அவர்களில் தமிழர்களை மீண்டும் தமிழ் மயமாக்கவேண்டும்.

    நாட்டில் இருக்கும் அனைவரையும் ஆராய்ந்து இவர் இன்ன இனம் என்று சான்றிதழ் கொடுக்கவேண்டும்.
    சாதி, மதம் போன்றவை அந்த சான்றிதழில் குறிப்பிட வேண்டாம்.
    இந்த ஒரு இனச்சான்றே முதன்மை ஆவணம்.
    குடியுரிமையும் அனைவருக்கும் கொடுக்கவேண்டும்.
    (இதற்கு பத்தாண்டுகள் வரை எடுத்துக்கொள்ளலாம்)

    சிறிய அளவில் வேற்றினத்தாரும் இருக்க வாய்ப்புண்டு.
    அதாவது தமிழர்நாடு அமைய தமிழரோடு போராடிய வேற்றினத்தார் இருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டாம்.
    அதாவது நம் போராட்டம் தொடங்கிய காலத்தில் நமக்காகப் போராடியோர்.
    (நாம் வெல்லும் நிலைக்கு வந்ததும் கடைசிநேரத்தில் வந்து ஒட்டிக்கொண்டவர்களாக இருக்ககூடாது.)
    அவர்களைத் தமிழராக ஏற்கமுடியாவிட்டாலும் குடியுரிமை கொடுத்து தமிழர்நாட்டுக் குடிமக்களாக ஏற்கலாம்.
    (ஆனால் அவர்கள் தமிழில் பேசக்கூடாது.
    வேறு நாட்டுக்குக் குடிபெயர்ந்தால் வாரிசுகளுக்கு தமிழர்நாட்டு குடியுரிமை கிடைக்காது).

    இனச்சான்று வழங்கப்பட்டதும் தமிழரல்லாதார் தமிழ் பேச தடைவிதிக்க வேண்டும்.

    தமிழர்கள் தமக்குள் முடிந்த அளவு தூய தமிழிலும் பிறருடன் ஆங்கிலத்திலும் பேசவேண்டும்.

    தமிழர்நாடு அமைந்து 50 ஆண்டுகளுக்குள் உலகத்தமிழர் தமிழரனைவரும் தாய்நிலம் திரும்பவேண்டும்.

    தமிழர்நாட்டுக்கு குடிவர இயலாத தமிழர்கள் அனைவரும் (50 ஆண்டுகளுக்குள்) ஒருமுறை தமிழர்நாட்டுக்கு வந்து தாம் தமிழர் என்பதை நிறுவி சான்று பெற்றுக்கொண்டு செல்லவேண்டும்.

    தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை முடிந்த அளவு தமிழர்நாட்டில் குடியமர்த்த முயற்சிக்க வேண்டும்
    அல்லது தமிழர்நாட்டுக்கு அழைத்துவந்து குழந்தைக்கு இனச்சான்று பெற்றுச் செல்லவேண்டும்.
    அப்பிள்ளையை முடிந்த அளவு தமிழரையே (அதுவும் முடிந்தவரை தாய்நிலத்தில்) திருமணம் செய்ய ஊக்குவிக்கவேண்டும்.
    50 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கென இனச்சான்று இல்லாத எவருக்கும் குடியுரிமை கிடைக்காது.
    தமது பெற்றோருக்கான சான்றைக்காட்டி குடியுரிமை பெற இயலாது.

    தாய்நிலத் தமிழர் பிறநாடுகளில் இனசான்று பெற்ற ஒரு தமிழரை திருமணம் செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.

    50 ஆண்டுகளுக்குப் பிறகு முறையாக கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு (பாஸ்போட், விசா) வாங்கி யார் வேண்டுமானாலும் வரலாம், தங்கியிருக்கலாம், வேலை செய்யலாம்,
    படிக்கலாம், சுற்றிப்பார்க்கலாம்.

    ஆனால் யாருக்கும் நிரந்தரக் குடியுரிமை கிடையாது.
    வெளிநாட்டார் வரலாம். தங்கியிருக்கலாம்.
    ஆனால் திரும்ப சென்றுவிடவேண்டும்.
    தமிழர்நாட்டிலேயே இருந்தாலும் அவர்களுக்கு இங்கேயே பிள்ளைகள் பிறந்தாலும் குடியுரிமை கிடைக்காது.

    இப்படியான வெளிநாட்டார் 20% மேல் அதிகமானால் விசா வழங்குவதை சிறிது காலம் நிறுத்திவைக்க வேண்டும்.
    தேவையில்லாமல் இங்கிருக்கும் வெளிநாட்டாரை வெளியேற்றவேண்டும்.
    தமிழர்கள் தமது தாய்நிலத்தில் 80%க்கு எப்போதும் குறையக்கூடாது.

    வெளியாட்கள் தமிழர்நாட்டில் ஒரு தமிழரைத் திருமணம் செய்தால் அவர்களின் பிள்ளைக்கு பாதித்தமிழர் என்ற இனசான்றிதழும் குடியுரிமையும் கிடைக்கும்.

    அந்த பிள்ளை ஒரு தமிழரையே திருமணம் செய்தால் அதன் பிள்ளைக்கு (முழுத்)தமிழர் என்ற சான்று கிடைக்கும்.
    இல்லாவிட்டால் தமிழரல்லாதார் என்றே கருதப்படுவர். இனச்சான்று கிடைக்காது.
    ஆனால் குடியுரிமை கிடைக்கும்.

    தமிழர்களின் மக்கட்தொகை தற்போதைய எண்ணிக்கையை விடக் கூடாதவாறும் குறையாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    (அதாவது தாய்நிலத் தமிழர்கள் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும்.
    மக்கட்தொகை குறைவான நாடுகளில் வாழும் தமிழர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்)

    தமிழர்நாட்டு குடிமக்கள் வேறுநாட்டுக்கு குடிபெயரும்போது அவர்களிடம் தமிழினச்சான்று இருந்தால் வேற்றுநாட்டில் பிறக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இனச்சான்று (தமிழர்நாட்டுக்கு அழைத்துவந்து) வாங்கிக்கொள்ளலாம்.
    அதைவைத்து பிற்காலத்தில் குடியுரிமையும் கிடைக்கும்.

    தமிழினச்சான்று இல்லாத (அதாவது தமிழரல்லாத) தமிழர்நாட்டு குடிமக்கள் வேற்றுநாட்டுக்கு குடிபெயர்ந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு குடியுரிமையோ இனச்சான்றோ கிடைக்காது.

    தமிழர்களின் தாய்நிலம் சிறியது.
    தமிழர் மக்கட்தொகை சற்று அதிகம்.

    எனவே தமிழர்களுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
    மற்ற மக்களை வெளியேற்ற வேண்டியதும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிப்பதும் இதனாலேயே செய்யவேண்டி உள்ளது.

    இது இனவெறி இல்லை.

    இதற்கு முன்பு போட்ட ‘வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல்’ பதிவு தாய்நிலத்தில் தமிழர்களின் மக்கட் செறிவை கருத்தில் கொள்ளாமல் போடப்பட்டது.

    தமிழருக்கே அவர்களின் தாய்நிலம் போதாதபோது வேற்றினத்தாரைக் குடிவைக்க வழியில்லை.எனவே இப்பதிவு.
    ..
    நாம் தமிழர்.. நாமே தமிழர்

  5. ஆனந்தம் Says:

    வெயில் அதிகமாகும்போது தமிழனுக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவை பொங்கல் வைத்தால் போதாது, அவன் காளைபோல் சீறிப்பாயும்போது ஜல்லிக்கட்டும் தினம் நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன். (இந்தப் பதிவு போடப்பட்ட போன வருடமும் வெயில் அதிகம், இன்றும் அதிகம்)

  6. ஆனந்தம் Says:

    கூடுதல் எச்சரிக்கை: தமிழர் நாடு அமையும்போது அறிவு என்ற சொல்லுடன் எந்த விதத்திலாவது தொடர்புள்ளவர்களுக்கு குடியுரிமை, பாஸ்போர்ட், விசா எதுவும் வழங்கப்பட மாட்டாது ஆகவே, அத்தகைய தொடர்பு உள்ளவர்கள் அல்லது இருப்பதாக நினைத்துக்கொள்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

  7. Sivaa Says:

    ஆனாலும் யாரும் வட நாட்டு இந்துத்துவா குருவி மண்டைகளை மிஞ்ச முடியாது. ருக் வேகத்திலேயே அல்ஜீப்ரா இருந்தது. மொக்கபாரத காலத்திலேயே இணையம் இருந்தது… கணேஷ் ஜி கீ கதா ப்லாஸ்டிக் ஸர்ஜரி பின்னே ஏரோப்லேன் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பே பற் பல பல பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்த புய்பக விமானம். யப்பா உண்மையாகவே ஒரு வடநாட்டு இளைஞனிடம் பேசினால் மண்டை காயும்… அதுவும் அவர் துந்துத்துவராக இருந்து விட்டால்…… Run run run……


    • தொடர்ந்து ஓடவும். நன்றி.

      எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் பொய்ப்பொருள் காண்பது அறிவீனம்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s