கமலகாசனாரின் மய்யமான நகைச்சுவை

March 28, 2018

“மாணவர்களிடையே பேசி, இன்றைய நிலை குறித்து நான் புரியவைத்துவிடுவேனோ என்ற பதற்றம் பலருக்கு இருக்கிறது. “

தமிழகத்தில் பிரபலமான ஊடகப் பேடிகளில் முதன்மையானதான விகடன் இணையதளத்தில் வந்த ஒரு அற்பத்தனப் பப்பரப்பாவிலிருந்து மேலுள்ள பொன்னெழுத்துக்களில் பொறிக்கப் படவேண்டிய, வரலாற்று-உளறாற்று முக்கியத்துவம் உள்ள, கலகக்கார வரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்போது ‘வொலக திராவிட இனமான நாயக’ அடலேறு கமலகாசனார் அய்யாவுக்குச் சில திருத்தங்கள்/விஷயங்கள் வகையறாக்களைச் சமர்ப்பிப்பதில் உள்ளபடியே எருமையடைகிறேன்:

1. உங்களால் பேச முடியாது, பேத்த மட்டுமே முடியும். (திரைப்படங்களில் யாராவது எங்கேயிருந்தாவது திருடி/உல்ட்டா பண்ணி உங்களுக்கு வசனம் எழுதித்தந்தால், அதை நீங்கள் நெட்டுரு போட்டு நடிகத்தனமாக அவற்றை மெலொட்ராமா வாந்தி எடுக்கமுடியும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்; சர்வ நிச்சயமாக உங்களுக்கு நடிப்புத் திறமை ஒரளவு இருக்கிறது – ஆனாலும் நீங்களே  உங்களை, பெருந்தன்மையுடன் வொலகனாயகன் எனக் கருதிக்கொல்வது, ஸாரி, கொஞ்சம் ஒவர்!)

2. உங்களால் எந்த மசுத்தையும் யாருக்கும் புரியவைக்கவேமுடியாது. (உங்கள் பராக்கிரமும், உங்கள் நாக்கில் நடனமாடும் சிலுக்குஸ்மிதா போன்றவர்களும் உங்கள் பேத்தலை மற்றவர்கள் புரிந்துகொள்ள விடவே மாட்டா/ர்கள். ஏன், உங்களுக்கேகூட நீங்கள் சொல்வது புரியாது. நன்றி.)

3. ஆக, யாருக்கும் – அவர்கள் சகஅரைகுறைகளாக (எடுத்துக்காட்டாக, 64 வயதேயான இளைஞரணித்தலைவத்தாத்தா இசுடாலிர்) இருந்தாலொழிய, ஆகவே உங்களுடைய போட்டியாளர்களாக இருந்தாலொழிய – உங்கள் உளறல்கள் குறித்த பதற்றம் இருக்க சாத்தியக்கூறே இல்லை. மன்னிக்கவும்.

இப்போது சில விண்ணப்பங்கள்:

தொடர்ந்து இரட்டையிலிருந்து ஆரம்பித்து முட்டை ஈராக – பலப்பல வேடங்களைத் தொடர்ந்து அணியவும். அதிகபட்சம் தசாவதாரம் என உங்களை நீங்களே குறுக்கிக்கொள்ளவேண்டா. தமிழகத்துக்குக் கோமாளிக் கோமகன்களை மிகவும் பிடிக்கும் – அதுவும் அவர்கள் பல்வேறு வேடதாரிகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.

“நான் கற்பதை நீங்கள் தடை செய்ய முடியாது.”

உங்கள் படிப்பு ‘கற்க கசடு‘ என்கிற வகை அபடிப்பு. அகல்வி.  ஆக – சரியாக, பரந்தும் விரிந்தும் நிறைய படியுங்கள், கவனியுங்கள். இப்போது நீங்கள் இருக்கும் பரிதாபமும் நகைக்கக்குரியதுமான நிலையிலிருந்து மீண்டுவர சுமார் 20 ஆண்டுகளாகலாம், பரவாயில்லை. பின்னர் நான்கு வரிகளைக் கோர்வையாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். அதற்கும் முன் கோர்வையாகச் சிந்திக்கப் பழகுங்கள் – பொய்யோ மெய்யோ அவற்றை ஓரளவாவது தர்க்க அல்லது குதர்க்க ரீதியாக அடுக்கித் தெளிவாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்… (இவற்றை, நீங்கள் ஜெயலலிதா+கருணாநிதி பேச்சுகளைக் கேட்டுப் பழகிப் புரிந்துகொள்ளலாம்)

மேற்கண்டதைத் தவிர கீழ் கண்டமாதிரியெல்லாம் பேத்தியிருக்கிறீர்கள்.

“நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு, மத்தியில் இருப்பவர்களுக்கு இல்லை. சோறு எங்கு இருந்து வருகிறது என்பதைப் பார்த்து, விவசாயிகளை மதிக்க வேண்டும். திராவிடத்தை ஒழிக்க முடியாது. அது ஒரு இனத்தைக் குறிக்கும். திராவிடம் நாடு தழுவியது”

ஒவ்வொரு வரியும் மகாமகோ உளறல். எனக்கு எங்கே போய் முட்டிக்கொள்வது எனப் புரியவேயில்லை போங்கள்!

ஆனாலும், நீங்கள் ஒரு அற்பப்பதராக இருந்தாலும் – வொளறநாயகரான உங்களுக்குக் குறும்பு தாஸ்திதான்! வேறென்ன சொல்ல!

வாழ்க உளறுடன்.

நன்றி.

 

 

10 Responses to “கமலகாசனாரின் மய்யமான நகைச்சுவை”

 1. Seshagiri Says:

  ஐயகோ! தமிழ்நாட்டு மக்களுக்கு இவரைப்போன்றவர்களிடமிருந்து விமோசனமே கிடைக்காதா? என்ன ஒரு அபத்த உளறல்! தாங்க முடியவில்லை!

 2. Kannan Says:

  I want to see your reaction when Sri Priya becomes Education Minister.

  hahahahah!

 3. Kannan Says:

  Don’t worry, Kamal himself may retain that portfolio, after all he passed 8th grade.:)

 4. mekaviraj Says:

  Sir,

  off-topic

  1. 28 lakh cbse students are going to take re-exams due to paper leakage. who should be held responsible ?

  2. So, in spite of the supreme court order, Central govt. did n’t do much except asking SC about difference about scheme and board.

  maybe this is not the govt. which you dreamt of :)

 5. nparamasivam1951 Says:

  கமலுக்கு “ஒலக மகா உளருவாயர் ” என திரு வெ.ராமசாமி அவர்கள் புதுவை மகாநாட்டில் பட்டம் அளிப்ப தாக எனக்கு ஒரு கனவு. நடக்குமா என தெரியவில்லை. நன்றி.

 6. Karthik Says:

  பெரியார் சிலை உடைப்பு குறித்து, வைகோ &co அறிவுரை கொடுத்த அறிவு ஜீவி,அரசியலில் என்ன
  செய்வாரோ


 7. […] கமலஹாஸ்யத்துக்கு உருகார், ஒருஹாஸ்யத்துக்கும் உருகார். […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s