ஆடிட்டர்கள், திராவிட ஊழல், வந்துகொண்டிருக்கும் கர்நாடகத் தேர்தல், டீமானடைஸேஷன் – சில குறிப்புகள்

March 31, 2018

பொதுவாகவே (இரண்டு விதிவிலக்குகள் தவிர) இந்த சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவே மாட்டேன்.

ஏனெனில் – தங்களுக்குள் இருக்கும் வர்த்தகப் போட்டிகளில் – பொதுவாகவே ‘சாமர்த்தியசாலி’களான இவர்கள், அசிங்கமான ஊழல்களுக்கும், வருமானவரி அமுக்கல்களுக்கும் உதவியாக இருந்தால்தான் அவர்கள் வீட்டில் சோறு பொங்கும் என்பது நடைமுறை உண்மை.

இந்த ஜென்மங்களைக் குறித்து நகைச்சுவையாகச் சொல்லலாமென்றால் – அவர்களுக்கு ஒரு வரைமுறைச் சட்டகம் (சார்ட்டர் – charter) கொடுங்கள், அதன் அமைப்புக்குள் அவர்கள் யானைகளைப் பூனைகளாகவும், எறும்புகளை எலிகளாகவும் மாற்றி, பின்புலங்களைச் சமைத்துத் தாளித்து, பளப்பளா பேப்பரில், மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பிசிறும் இல்லாதபடிக்கு ‘ஆடிட்’ செய்து பரிமாறிவிடுவார்கள். ஆகவே ‘சார்ட்டர்ட்’ அக்கௌன்டன்ட்கள்!

கொசுறு பின்புலச் செய்தியாக – சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு (பெரும்பாலும்) அயோக்கிய ஆடிட்டர்களுடன் (இவர்களிலும் பலர் வெறும் சராசரிகள் – பொய்யைச் சரியாகக் கூட ஜோடிக்கத் தெரியாதவர்கள் – கமிஷன் மண்டி நடத்தியவர்கள்) மல்லுக்கட்டிச் சண்டைபோட்டுச் சோர்ந்துபோயிருக்கிறேன்.

ஆக – ஒரு பெரிய ஜோடிப்பைக் கூடச் செய்யவில்லை, வருமான வரி (பிற வரிகளையும் தீர்வைகளையுமே விடுங்கள்) இருட்டடிப்பில் உதவிகரமாக இல்லை என யாராவது ஒரு ஆடிட்டர் சொல்ல முடிந்தால் அவர்கள் காலில் ஆனந்தமாக விழ, நான் தயார். (எஸ் குருமூர்த்தி அவர்களை இப்பகுப்பில் சேர்ப்பேன்; இவரைப் பற்றி நேரடியாகத் தெரியாவிட்டாலும் அறிமுகமில்லை என்றாலும் – நான் மதிக்கும், விஷயம் தெரிந்த சிலபலருடைய அபிப்ராயமும் இதுதான்; இவரைப் போல இன்னமும் சிலபலர் இருக்க வேண்டும், ஏனெனில் இன்னமும் காலாகாலத்தில் மழை பெய்துகொண்டுதானிருக்கிறது; ஆனால் இவர்களைப் பற்றி நான் அறியேன்.)

சரி.

…இந்த ‘தாளத்திற்கேற்ப ஆடும்’ ஆடிட்டக் கும்பலையும் விடப் படுகேவலமான அசிங்கவாதிகள் உண்டென்றால் – அப்பதர்களானவைகள், பாரத ஊடகங்களின் செல்லங்களான சமூகவியலாள வகையறாக்களும் (sociologists, anthropologists, public intellectuals, ஜேஎன்யு வகைப் பொறுக்கிகள்…), ஊடகப் பேடிகளும் – மிகமுக்கியமாக, வெளி நாடுகளில் பிச்சை எடுத்துத் தேசத்தை அழிக்கும் தன்னார்வ நிறுவனங்களை நடத்தும் தொழில்முறைப் பேடிகளும்தான். ஆனால் அவையெல்லாம் வேறு கதைகள். இன்னொரு சமய(மு)ம் பார்க்கலாம்.

ஆகவே.

-0-0-0-0-0-0-

நான் இப்படிப்பட்ட வெறுப்பாளனாகவும் காமாலைக் கண்ணையனாக இருந்தாலும் – ஒரு ஆடிட்டருடன் அண்மையில் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு(!) கிடைத்தது.

இவர் மனவாடு. தமிழகத்தில் ‘தொழில்.’ ஒரு நெட்வர்க்கர் – ஆகவே கர்நாடகம் (10% ஆட்சி), தெலெங்காணா (8% ஆட்சி), கம்யூனிஸ்ட் கேரளம் (9.5% ஆட்சி) தமிழகம் (10.5% ஆட்சி – முக்கியமான விஷயம்: இது கருணாநிதி ஆரம்பித்து வைத்த 7.5% ஆட்சியின் பரிணாம வளர்ச்சி மட்டுமே!) பற்றியெல்லாம் வயிற்றெரிச்சல் கொடுக்கும் சுவாரசியமான தகவல்கள். ஆனால் எனக்குப் புளகாங்கிதம் – எங்கும் எதிலும் தமிழகம் தான் முதலிடத்தை வகிக்கிறது…

அவருடைய க்ளையன்ட் கோமகன்களில் பலப்பலர் திராவிடர்கள். பசையுள்ள இடத்தில்தானே வியாவாரம் நடக்கமுடியும், சொல்லுங்கள்?

அண்மையில் (டிஸெம்பர் 2017 – ஜனவரி 2018) நடந்த ஒரு ‘அறிவியல் பூர்வமான’ திராவிட மோசடியைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு அஇஅதிமுக ஆசாமி (அஆ) பாவம், தன் ஏக்கரா கணக்கு விஸ்தீரண விளைநிலத்தை ஒரு திமுக பினாமிக்கு விற்றிருக்கிறார். மொத்த வரவு 300 லட்சம். ஆனால் பதிவுப் பத்திரத்தில் 20 லட்சம்தான் குறிப்பிடப்பட்டது. அந்த திமுக ஆசாமி, 280 லட்சத்தை ரொக்கமாக – பொட்டலம் பொட்டலமாகக் கொடுத்துவிட்டார், அவ்வளவுதான்.

அஆ-வுக்குப் பாவம், இதை எப்படிக் கணக்கில் கொண்டுவருவது என்பது தெரியவில்லை – முட்டிமோதி, இன்னொரு ஆடிட்டர் வழியாக ஒரு தொழில்முறை திராவிடரை அணுகியிருக்கிறார். ஏனெனில் – ஆடிட்டர்களுக்கே ஆடிட் வேலையையும், கொள்ளைக்காரர்களுக்கே துப்புரவாகக் கொள்ளை செய்வதைப் பற்றியும் முழநீள, அனுபவரீதியான அறிவுரைகளையும் கொள்ளைக்கோட்பாடுகளையும் நல்கக் கூடியவர்கள் இந்த திமுகவினர்.

இந்த திமுக ஆசாமி (ஒரு மாவட்டச் செயலாளரின் இடது கை), ரியல் எஸ்டேட் ‘வியாவார’த்தில் இருக்கிறார், தண்டல்காரர். ஊழலில் திளைப்பு. ஆஹா, உதவுகிறேன் என்று சொல்லியது மட்டுமில்லாமல் உதவியும் விட்டார் – இந்தப் பரோபகார திருட்டுத் திராவிடர் (பதிதி).

அது இப்படி நடந்தது:

பதிதி செய்கூலியாகக் கேட்டது 8%; அதாவது 280 லட்சத்தில்; ஆகவே, கமிஷனாக அவர் பெற்றது ரூ 22.4 லட்சம்.

இன்னபிற ‘ஆவணங்கள்’ ஜோடிப்பு தொடர்பான செலவுகளையும் சேர்த்து, முன்பணமாகப் பதிதி பெற்றது ரூ 25 லட்சம்.

அஆ, தன்னிடம் இருந்த மிச்சம் 255 லட்சத்தை பதிதியிடம், ரொக்கமாகக் கொடுக்கிறார்.

அஆ – தன் உறவினர், நண்பர்கள் என 85 பெயர்களும் அவர்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் கொண்ட ஒரு ஜாபிதாவை, பதிதியிடம் கொடுக்கிறார்.

பதிதி அந்த 85 ஆசாமிகளுக்கும் தலா ரூ 3 லட்சம் கணக்கில் (ஆவண பூர்வமாக) செலுத்துகிறார். (ஜோடிப்பு: பதிதி பெற்ற கடன்களை (hand loans) திருப்புகிறார்)

அந்த ஆசாமிகளிடமிருந்து அஆ தம் பணத்தை வசூலித்துக்கொள்கிறார் (ஜோடிப்பு: அஆ கடன்களை (hand loans) வங்கிக்கணக்கு மூலமாகவோ, ரொக்கமாகவோ பெறுகிறார்)

ரூ 255 லட்சம் வெள்ளைப் பணமாகி விட்டது.

பதிதியிடம் உள்ள குண்டர்படை (அக்மார்க் உடன்பிறப்புகள், enforcers) இந்த முழு சுழற்சியும் துப்புரவாக, குறிப்பிட்ட நாட்களுக்குள் நடக்க உத்தரவாதம்.

சுபம். உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு இரண்டே நாட்களில் ரூ 22.4 லட்சம் சம்பாதித்துவிட்டார், பதிதி. எப்படியும், செலவுபோக ரூ 15 லட்சம் மிஞ்சும்.

ஆடிட்டர் சொன்னார்: திமுக காரன் திருடன் தான், ஆனால் சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிடுவான். ‘வேலை’ நடந்துவிடும். ஆஹா!

என்னைப் பொறுத்தவரை – இது ஒரு பொதுப்புத்தியின்மை சார்ந்த கருத்து; பலப்பல திமுகவினர் பணமும் வாங்கிகொண்டு ஏப்பம் விட்டுவிட்டு, ‘வேலை’யையும் முடித்துக்கொடுக்காமல் ஏமாற்றிய நிகழ்ச்சிகள் பலப்பலவற்றை நான் தீர்க்கமாக அறிவேன், நன்றி.)

குறிப்பு: பதிதி ஒவ்வொரு நாளும், இம்மாதிரி பல ‘டீல்’களை முடித்துக் கொடுக்கிறார். பதிதி போல பலர், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறார்கள். இவர்களில் பலர் திமுகவினர். சிலர் அஇஅதிமுகவினர். விடுதலைச் சிறுத்தைகள் + காங்கிரஸ்+ மதிமுககாரர்களும் இருக்கிறார்கள்.

இம்மாதிரியான அனைத்துப் பதிதிகளுக்கும் தலைமைதாங்க, இனமான அடலேறு, திராவிடகுலதிலகம், 64வயது இளைஞரணித்தலீவர் தளபதிதி இருக்கிறார். நமக்கு வேறென்ன வேண்டும், சொல்லுங்கள்?

திராவிட இயக்கம் என்பது – மாஃபியாக்களின் மாஃபியா. நன்றி.

இக்கட்சிகள் தமிழகத்திலிருந்து துப்புரவாக ஒழிக்கப்பட்டால்தான், தமிழகம் வளர்ச்சியைக் காணமுடியும்.

-0-0-0-0-0-0-

இந்திய ரிஸர்வ் பேங்க் அதிகாரி ஒருவருடனும் மாஜி ஸ்டேட்பேங்க் உச்சாணிக்கிளையார் ஒருவருடனும் பேசிக்கொண்டிருந்தேன். குறிப்புகள்:

டிமானடைஸேஷனால் ஏற்பட்ட நல்விளைவுகளில், என்னைப் பொறுத்தவரை 1) பெருமளவு ஊழல் கறுப்புப்பணம் வெளிவரமுடியாமல் போனதும் 2) நக்ஸல்பாரி குண்டர்களுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதும் முக்கியம். (இதையும் மீறி நம் திராவிடர்கள் இன்னமும் பணமலைகளே வைத்திருக்கிறார்கள் என்றால், அதற்கு பதிதிகளும் தளபதிதிகளும் மட்டுமே காரணங்கள்)

தமிழகத்திற்கு எவ்வளவு 2000 நோட்டுகளைச் சுற்றுக்குக் கொடுத்தாலும் அது மாயமாகிவிடுகிறது. பதுக்கப் படுகிறது. அதாவது, திராவிடப்படுத்தப் படுகிறது. (நிர்மூல காரணங்கள்: பதிதி தளபதிதி இன்னபிற உதிரிகள், தொடரும் தீராவிட ஆட்சிகள்)

தெலங்காணா, கர்நாடகாவில் ரூ2000 நோட்டுக்கு ஏகப்பட்ட தட்டுப்பாடு. ஏடிஎம்களில் பெரும்பாலும் இந்த நோட்டுகளே இல்லை. தேர்தல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன அல்லவா? கள்ளப்பணம் பதுக்கல்பணமெல்லாம் பட்டுவாடா செய்யப்படவேண்டுமே!

ஆக மஹாராஷ்டிரத்திலிருந்தும் கேரளாவிலிருந்தும் ரூ2000 நோட்டுகள் பெறப்பட்டு அந்த மாநிலங்களில் சுற்றுக்கு விடப் படுகின்றன. இது செய்யப் படாவிட்டால் லிபரல்களும் இடதுசாரிகளும் பிலாக்கணமிடுவார்கள். (ஆனால் அவர்களுடைய கேரளாவிலேயே கமிஷன் ஆட்சி என்றால் கப்சிப், பொய்யர்கள்!)

என்னைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல்கள் முடிந்த அடுத்த க்ஷணம், இந்த 2000 ரூபாய் நோட்டுகளும் டிமானடைஸ் செய்யப்பட்டால், மிக, மிக மகிழ்வேன்.

அரசும் தெய்வமும் சர்வ நிச்சயமாக நின்றுகொல்லும் வகைதான்.

… பார்க்கலாம், பாரதத்தின் எதிர்காலம் எப்படி விரிகிறதென்று.

நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது ஏது?

 

4 Responses to “ஆடிட்டர்கள், திராவிட ஊழல், வந்துகொண்டிருக்கும் கர்நாடகத் தேர்தல், டீமானடைஸேஷன் – சில குறிப்புகள்”

 1. Anonymous Says:

  Mr Ramaswamy

  Behave yourself.

  It is a slander and maligns the community of Auditiors who are rendering yeoman’s service to India. We are arranging to send our lawyer’s notice to you.


  • Sir, much obliged. Am terrified.

   Please go ahead and send it across. My contact mail id is there at https://othisaivu.wordpress.com/page-1/

   BTW, please learn to spell Auditors correctly and continue to render your yeoman service – while I try to behave myself.

   Also, it is amusing to note that you chose to be anonyMOUSE, when you threaten bravely to send your lawyer’s notice.

   Thanks and please do get lost.

   __r.

 2. nparamasivam1951 Says:

  திரும்பவும் ஒரு டிமானடைசேஷனா. அய்யோ! ஏடிஎம், கியூ, ஆதார் ஜெராக்ஸ், வங்கி விசிட்…..ஏன் இந்த சாபம் சார்?


  • Sir, things that have to be done, must be done cheerfully.

   Having said that, I don’t have a clue whether there is going to be a Round#2.

   However, I hope it happens – only for the high denomination 2k note.

   Thanks!

   __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s