கவிஞர்(!) கனிமொழி: தமிழகத்தையும் கன்னடத்தையும் ஒரே சமயத்தில் திராவிடத்தனமாக அசிங்கப்படுத்துவது எப்படி?
March 5, 2018
படு கேவலம்.
ஊழலையும் பொய்மையையும் வெட்கங்கெட்டத்தனத்தையும் ஒருங்கிணைத்து மினுக்கிக்கொண்டலைவதில் கனிமொழி அவர்களுக்கு நிகர் – அவர் அண்ணனார் இசுடாலினார்தாம்! வேறென்ன சொல்ல…
…ஆனாலும் எனக்குத் தெரிந்து, இசுடாலினார் ஒருதடவை கூட, தன்னை, பொய்பொய்யாக ஒரு கவிஞர் என அழைத்துக்கொள்ளவில்லை – இதற்கு இசுடாலினாரை மெச்சத்தான் வேண்டும், வேறு வழியேயில்லை. (ஆனால் இவரும் ஒருமாதிரி கோணிக்கொண்டவாய்ச் சிரிப்புடன் சிலபலமுறை திரைப்பட/ஸீரியல்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார், பாவம்!)
-0-0-0-0-0-0-
சரி.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கன்னட இலக்கியக் காரரைச் சந்தித்தேன். (எனக்குக் கன்னடம் சுட்டுப்போட்டாலும் பரல்லா, ஆகவே அதன் உச்சகட்ட பராக்கிரமம் ‘ஶ்வல்பா அட்ஜஸ்ட் மாடி’ என்றாலும், எனக்கும் அவனுக்கும் எஸ்எல் பைரப்பா, டிஆர் நாகராஜ் போன்ற பிதாமகர்கள் ஒருவிதமான ஆதர்சங்கள். ஆகவே கொஞ்சம் பரஸ்பரக் கொஞ்சல்கள், அவ்வளவுதான்.
ஒரே அழுகை.
என்ன இருந்தாலும் இப்படியா எங்களை அவமானப் படுத்துவது என்றான். ஒர்ரே அங்கலாய்ப்பு. தமிழினையும் கன்னடத்தையும் இணைக்க, தேவையற்ற மனஸ்தாபங்கள் விலக, ஒரு இலக்கியபூர்வமான ஆரம்பம் நிகழ்ந்திருக்குமே என்றெல்லாம் பெட்டைப் புலம்பல்.
என்னடா என்ன சொல்கிறாய், ஒன்றும் புரியவில்லையே என்றால், கோபத்துடனும் வருத்தத்துடன் அவன் சொன்னதன் சாராம்சம்:
3. அவரும் ஆஹா நிச்சயமாக வருகிறேன் எனச் சொல்லி, நிகழ்வுக்கு ஒருமாதம் முன் மறுஒப்புதலும் கொடுத்திருக்கிறார். நிகழ்வுக்கு மூன்று நாள் முன் அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. (எப்படியும் துண்டுப் பிரசுரங்களில் இருந்து ஃப்லெக்ஸ் விளம்பரத்தட்டிகளிலிருந்து எல்லாம் ஏற்கனவே அச்சேற்றப்பட்டுவிட்டன)
4. நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஒருவார்த்தை வரமுடியாது எனவும் சொல்லவில்லை. நிகழ்வுக்குப் பின்னும் ‘தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியவில்லை’ எனச் சம்பிரதாயத்துக்கூடச் சொல்லவில்லை. தடித்தனம்.
5. நண்பனுக்கு ஒரே கோபம். இன்னொரு கவிஞரையாவது கூப்பிட்டிருக்கலாமே! இப்படியா மட்டுமரியாதையில்லாமல் காலை வாரி விடுவது? காவிரி திருவள்ளுவர் சிலை என ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்போது இம்மாதிரி எங்களை அவமரியாதை செய்தால் சரியா?
பார்த்தால் பாவமாக இருந்தது. அவனிடம் சொன்னேன்…
ஏண்டா, அந்த அம்மணி வராதது ஒரு அற்ப விஷயம் – இதற்குப் போய் இவ்வளவு வருத்தப் படுகிறாயே! இரண்டு மாதத்திற்குப் பிறகும் கூட இதனை மறக்காமல் நினைவு வைத்துக்கொண்டு புலம்ப அந்த அம்மணிக்கு ஒரு தகுதியும் இல்லை. நான் ஒரு தமிழனென்று கண்டகண்ட விஷயத்துக்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. அந்தக் கும்பல் ஒரு திராவிடக் கும்பல், தமிழர்களோ, ஏன் சாதாரண மனிதர்களோ கூட அல்லர். வெறும் கொள்ளைக் காட்டேறிகள், சும்மா வெட்டிப்புலம்பல் வேண்டா…
-0-0-0-0-
என்னாலும் (வழக்கம்போலவே) சும்மாயிருக்கமுடியாமல் கீழ்கண்டவற்றை ஆங்கிலத்தில் சொன்னேன்:
1. கனிமொழி எப்படியும் ஒரு கவிஞர் அல்லர். ஆனால் அவருக்குத் தன்னைத்தானே அப்படியொரு பிரமையுடன் பார்த்துக்கொள்ள உரிமை, தாராளமாக இருக்கிறது. ஒரு போண்டா தன்னை மைசூர்போண்டா என அழைத்துக்கொள்வதை ஒப்புக்கொள்ளமுடியுமானால், அது தன்னை மைசூர் எனவேகூடக் கருதிக்கொள்ளலாமே!
2. எவ்வளவோ பலப்பல பிற கழுதைகள் கழுதைஞர்கள் ஆனந்தமாக உலாவிக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் யாரையாவது பிடித்துக்கொள்ளாமல், இல்லை உண்மையாகவே யாராவது கவிஞரைப் பிடித்து இஸ்துக்கொள்ளாமல் இப்போது பிலாக்கணம் வைப்பதில் ஒரு உபயோகமும் இல்லை.
3. திராவிடர் என்று ஒருவர் தன்னைப் படுதெகிர்யத்துடன் அழைத்துக்கொண்டால் – அது உண்மை என்பதன் பக்கமே போகாத ஒரு திராபைக் கட்டுமானமாதலால், அந்தப் பெண்ணிடம் போனதே தவறு. கன்னடர்கள் நிச்சயம் திராவிடர்கள் அல்லர் எனப் பெருமை கொண்ஂடவர்கள்தாமே நீங்கள்? நீங்களே ஓடிப்போய் சாக்கடையில் விழுந்தால்?
4. என்னைக் கேட்டிருந்தால் நானே இரண்டொரு கவிஞ்ஜர்கள் கவிதாயினிகள் பெயரைப் பரிந்துரை செய்திருக்கமுடியும். சர்வ நிச்சயமாக, சிலபல நல்ல கவிஞர்கள் இன்னமும்கூடத் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள், திராவிடத்தையும் மீறி!
5. சரி, அப்படியே கனிமொழி போன்றவொரு தமிழ்க் ‘கவிஞர்’ தரத்திலுள்ள ஒருவரைத்தான் கூப்பிடவேண்டும் என ஒரு நேர்த்திக்கடன் உங்களுக்கு இருந்தால் என்னையே கூப்பிட்டிருக்கலாம் – எனக்கும் அவருக்கும் உள்ள பொதுவாக ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் – எங்கள் இருவருக்கும் கவிதை என்பது சுட்டுப்பொசுக்கிப்போட்டாலும் வராது. நன்றி.
சரி. கனமான பதவியொன்றுமில்லையாதலால், கொள்ளையையும் கொஞ்சம் நிப்பாட்டி வைக்க வேண்டியிருக்கிறது. ஏதோ இருக்கும் சொற்ப சொத்தை (=ToothDecay © எஸ்ரா, 2018) வைத்துக்கொண்டு எவ்வளவோ கஷ்டங்களுக்கிடையில் சகோதரர்களுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் – இந்தக் கவிதாயினி இளைப்பாறவாவது பெங்களூர் வந்திருக்கலாமே எனத் தோன்றியது.
ஆனால் கர்நாடகக் காரர்களிடமும் வாய்கூசாமல் பொய்சொல்லிவிட்டு அந்த நிகழ்ச்சிசமயம் தமிழகத்தில் என்னதான் ரோமத்தைக் களைந்துகொண்டிருந்திருக்கிறார் எனப் பார்த்தால்… பாவம், அவர் ‘மதச் சார்பின்மை’ நடிப்பில் மும்முரமாக இருந்திருக்கிறார்.
எது எப்படியோ – திருப்பதி வேங்கடேசனைப் பிடித்து உலுக்கும் வீரத்தில் தீரத்தில் பராக்கிரமத்தில் ஒரு 1% அளவாவது அல்லாவைப் பற்றியோ அல்லது யேஸுவைப் பற்றியோ கிண்டலாகவும் பகிரங்கமாகவும் ஒரு சிறு பேச்சைப் பேசினால் அதன் காரணமாகவே கூட கனிமொழியை ஒரு கவிஞர் என ஒப்புக்கொள்ளத் தயக்கமேயில்லாமல் தயாராகவே இருக்கிறேன்…
திராவிடம் என்றால் கொள்ளையம், கொலையம், பேடியம், கவர்ச்சிக்கேளிக்கையம், உதிரியம் என்றெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும் என்றாலும் – தடித்தனமும் இதில் ஐக்கியமாகியிருப்பதை அறிந்தவுடன் நானடையும் இறும்பூதுக்கு அளவேயில்லை!
March 5, 2018 at 20:07
காலம்போன காலத்தில் கருணாநிதியை தன் படத்திற்கு வஜனம் எழுத அழைப்பவர்கள், அவரின் தமிழ்மீது கொண்ட பற்று, காதல், அன்பு, பாசம் போன்ற காரணங்களால் என்று நாம் நினைத்தால் அது எவ்வளவு பெரிய அறியாமையாக இருக்கும். இதன் மூலமாக, அவர் நட்பு. அதன் மூலம் ஒரு அட்லீஸ்ட் ரோட் காண்ட்ராக்டாவது கிடைக்கும் என்கிற கணக்கு தான். அதுபோலவே கனிமொழியை கவிதாயினி என அழைப்பவர்கள் எல்லாம் எதோ கணக்குப் போட்டு தான் தன் வேலைகளைச் செய்கிறார்கள். உங்கள் நண்பர் கொஞ்சம் விவரமானவர். :)
March 6, 2018 at 04:55
நன்றி.
அய்யா பிரபுதேவா – நண்பன் ஒரு மத்தூர்வடை+ பிஸிபேளேஹூளி கேஸ், நம்மூர் ‘தயிர்வடை’ போல. பாவம். அந்த அமைப்பில் உள்ள சிலர், கனிமொழி ஒரு எம்பி என்பதால் (+அவர் ஒரு கவிஞர் எனும் வதந்திகளை நம்பியும்) கூப்பிட்டிருக்கிறார்கள். தேவையா? அவர்கள் ஆதாயத்துக்காகக் கூப்பிடவில்லை என நம்புகிறேன் – அப்படி இருந்திருந்தால் அம்மணியார் அங்கு போயிருப்பாரோ என்ன எழவோ!
குறிப்பிட மறந்துபோய்விட்டேன்; பதிவில் உள்ள படங்களை நான் கீழிருக்கும் ட்வீட்களிலிருந்து எடுத்தேன். இந்தப் பையனுக்கு நன்றி.
March 6, 2018 at 19:54
ஐயா, தங்கள் நண்பர் திராவிட தலப்பாகட்டு பிரியாணியாக இல்லாமல், தயிர்வடையாக இருந்தால் மிக்க நன்று. :)
March 8, 2018 at 10:16
கழுதை கவிஞர்(!) கனிமொழி ஒரு பக்கம் கிடக்கட்டும்!. சூரியனுக்கு தங்கள் பெயரை அனுப்பிவிட்டீர்களா?!இல்லையெனில் இந்த சுட்டியை பார்க்கவும். – (:-)
https://www.minnambalam.com/k/2018/03/08/7
March 8, 2018 at 10:47
அய்யா சேஷகிரி, தப்பும் தவறுமாக இருக்கும் இந்த உளறல் மின்னம்பல சுட்டியை எனக்கு அனுப்பி பழி தீர்த்துக்கொண்டதற்கு நன்றி!
June 30, 2018 at 20:36
[…] கவிஞர்(!) கனிமொழி: தமிழகத்தையும் கன்னட… […]