மகாமகோ ஆஸ்டின் க்ரன்வில், பிஏ கிருஷ்ணன், ஈவெரா ‘பெரியார்,’ பூகொ சரவணன், அரவிந்தன் கண்ணையன் – சில குறிப்புகள்

October 17, 2017

தன்னிலை விளக்கம்: இந்த பிஏ கிருஷ்ணனின் திராவிட அறிவு(!)ஜீவிகள்(!!) ஈவெராவை அணுகுவதைக் குறித்த கட்டுரை->பூகொ சரவணனின் திராவிடர்தர பீலா எதிர்வினை -> அரவிந்தன் கண்ணையனின் பொறுமையான எதிர்வினை -> தொடர்ந்த வாக்குவாதம் இன்னபிற குறித்து நான் அவை நடந்துகொண்டிருக்கும்போதே அறியும் பாக்கியம் பெறவில்லை.

சிலநாட்கள் முன், நண்பர் ஒருவர் அனுப்பிய சிலபல தகவல்கள் வந்த பின்னர்தாம், படுலேட்டாக இவ்விஷயங்களைப் படித்துப் புளகாங்கிதமடைந்தேன். (குறிப்பாக, பூகொ சரவணன் அவர்களின் நகைக்கத்தக்க ஃபேஸ்புக் எதிர்வினையைப் படித்துத் துணுக்குற்றுச் சிரித்தேன்!)

இந்த பூகொ சரவணன் அவர்களைப் பற்றி நான் முன்னமே பெரிதாக அறிந்திருக்கவில்லை. மண்டையைக் கசக்கிப் பிழிந்து நினைவுகளை வடிகட்டி எடுத்தபோது – இதேமாதிரிப் பெயருள்ள ஒருவர் 2013 (அல்லது 2014) வாக்கில் ‘தமிழ் இந்து’ தினசரியில், மகாமகோ காமராஜரைப் பற்றியொரு கட்டுரை எழுதுகிறேன் என்கிற சந்தடிசாக்கில் – அபத்தக் களஞ்சியமாக அட்ச்சுவுட்டிருந்தார் – அல்லது மனதாறப் பொய் சொல்லியிருந்தார் அல்லது ஆதாரமேயில்லாமல் உளறிக்கொட்டியிருந்தார்; அவற்றில் மூன்றைப் பற்றி மட்டும் நினைவிலிருந்து எழுதுகிறேன்: 1)  நிதியில்லை எனக் காரணம் காண்பித்து ஆறாயிரம் பள்ளிகளை ராஜாஜி மூடினாராம், அவற்றை காமராஜ் மறுபடியும் திறந்தாராம். 2) ‘குலக்கல்வி’ பற்றிய வழக்கமான உளறல்கள் 3) பட்டினத்தார்ஆதிசங்கரர் என ஆன்மிகப் பார்வை, அதுவும் காமராஜர் பற்றிய கட்டுரையில் இன்னபிற; அப்படியாம் இப்படியாம் என நிதானமற்ற, தரவுகளற்ற அரைகுறை ஹேஜியொக்ரஃபி. குப்பை.

நான் இந்த உளறல்களுக்கு எதிராக – சான்றுகளுடன் முழ நீள, ஆனால் பணிவான மின்னஞ்சலை ‘தமிழ் ஹிந்து’ அற்பர்களுக்கு அனுப்பினேன். ஆனால் அந்த ஊடகப்பேடிகள், ஊடகப்பேடிகளாகவே தொடர விரும்புபவர்களாதலால் – அதனை வெளியிடவேயில்லை. அவ்வளவுதான் அப்பத்திரிகையாளர்களின் நேர்மை.

இந்த எழவு நிகழ்வுக்குப் பின் – ஈவெரா ‘பெரியார்’ சொல்லக் கூடுவதுபோல – ‘தமிழ் இந்து’ தினசொறியையும் பாம்பையும் பார்த்தால்… :-)

‘தமிழ் இந்து’ தினசரியின் தரத்திற்கேற்ப அதன் எழுத்தாளர்கள். எழுத்தாளர்களின் கிடுகிடு பள்ள அறிவார்த்தமான செயல்பாடுகளுக்கேற்றவாறு அத்தினசரியின் தரம். பொருத்தமான ஜோடி, வேறென்ன சொல்ல. என் திராவிடப் பகுத்தறிவுக் கண்ணே பட்டுவிடும்போல இருக்கிறது.

ஹ்ம்ம்ம்… இந்த பூகொ சரவணன் அவர்கள், ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரி என்பது ஒரு சோகம். ஆனால் – எனக்கு இதுவரைஅறிமுகமாகியுள்ள பல (‘நெருப்பு’ போன்ற) அதிகாரிகள், இளைஞர்களுமேகூட – பொதுவாகவே சமனம் மிக்கவர்களாகவும், உளறாதவர்களாகவும், பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாகவும், பரந்த படிப்பு பெற்றவர்களாகவும், வதந்தி பரப்பாதவர்களாகவுமாகத்தான் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால் – இது மிகைச்சராசரிகளின் காலம், வேறென்ன சொல்ல. ஆகவே, இந்த பூகொ சரவணன்கள் காலத்தின் கோலம்தானோ என்ன எழவோ!  அல்லது, இந்த இளைஞருக்கு ஒருவேளை கணநேர மூளைப்பிறழ்ச்சியேற்பட்டதாலும் (momentary lapse of reason) அவர் இப்படிப் பினாத்தியிருக்கலாம், பாவம்.

ஆனால் இவர் ஒரு இளைஞர். + அரவிந்தன் கண்ணையன் அவர்கள் அனுபவம்/கருத்துகள் படி பூகொசரவணன் நிறையப் படிப்பவர் போலும். ஆகவே – இப்போது அரைகுறைத்தன உணர்ச்சிகரமான சொல்லாடல்களில் ஈடுபட்டுப் புளகாங்கிதமுற்றாலும், பீலா விடுவதில் பிரியமுள்ளவராக இருந்தாலும், நேர்மையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவராக இருந்தாலும் –  சுமார் 20-30 வருடங்களில் ஓரளவுக்காவது முதிர்ச்சியடைந்து, பக்குவமுற்று புதிதாகவும் மேலதிகமாகவும் உளறாமல் இருப்பார் என நம்புவோமாக.
ஆக அய்யன்மீர், நான் ஒரு நம்பிக்கைவாதிதான். ;-)

(இந்த மேற்கண்ட பூகொசரவண காமராஜக் கட்டுரையை ‘தமிழ் ஹிந்து’ தளத்தில் தேடித்தேடிச் சலித்துவிட்டது; ஒருவேளை இம்மாதிரி அரைகுறைக் கட்டுரைகளை கமுக்கமாக அகற்றிவிட்டார்களோ இந்த ‘தமிழ் இந்து’ பேடிகள் எனவும் தோன்றுகிறது.

ஆனால், ஒரு விஷயம்: இந்த அரைகுறைக் காமராஜர் கட்டுரை இதே பூகொ சரவணன் அவர்களால் எழுதப்படாமல், ஒருவேளை வேறு பிற சரவணன் எழுதியிருந்தால் – என்னை மன்னித்துவிடவும்; சான்றுடன், அதனை ‘பூகொ சரவணன்’ அதனை எழுதவில்லையென யாராவது என்னைத் திருத்தினால், நான் என்னைத் திருத்திக் கொள்ள – பகிரங்கமாக அவரிடம் மன்னிப்பு கோரத் தயார்! ஏனெனில், எனக்கு அவதூறு பரப்பல்களில், சும்மனாச்சிக்கும் அட்ச்சுவுடல்களில் நம்பிக்கையில்லை; ஏனெனில் நான் பூகொ சரவணன் அல்லன். நன்றி!)*#*(பார்க்க: அடிக்குறிப்பு)

-0-0-0-0-0-0-

தமிழில் (+ஆங்கிலத்தில்) தொடர்ந்து எழுதுபவர்களில் + புத்தகங்களைப் படிப்பது அவற்றின்மேல் தரவுபூர்வமாக எழுதுவது எனும் படுகோரமான பாவத்தைச் செய்துவரும் வெகுசிலரில் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் ஒருவர் என்றாலும், அவருடைய கருத்துகளில் பலவற்றுடன் எனக்கு ஒத்துவரும் என்றாலும்,  அவரைப் பற்றி (அவருடைய கருத்துகள் எனக்குச் சரியானவையாகவோ, தர்க்கபூர்வமாகவோ இல்லையெனப் பட்டபோது – அவை என் மூளையை அதன் வழக்கத்தைவிட அதிகமாகப் பிறழச் செய்தபோதெல்லாம்) மிகக் கடுமையாகவும் ரசக்குறைவாகவும் எழுதியிருக்கிறேன். அவரும் என்னை ஒரு ஹிந்துத்துவாகாரன் என்றெல்லாம் (அவர் பார்வையில்) திட்டி எழுதியிருக்கிறார். ஆனால் நான் ஹிந்துத்துவம் என்பதைக் கேவலமான ஒன்றாகவும் அருவருக்கவேண்டியதாகவும் நினைக்கவில்லை.

எது எப்படியோ, வஸிஷ்டர் வாயால் ப்ரம்மஹத்தி. அவரவர் பார்வை அவரவருக்கு, என் ஒண்ணரைக்கண் பார்வை எனக்கு – அவ்வளவுதான்; சிரித்துக்கொண்டே விட்டுவிட்டேன்.

ஆனால், முடிந்தபோதெல்லாம் அவர் எழுதுவதைப் படிக்கும் நான் (அவர் நடை, என்னுடையது போன்ற சுளுக்குத் தமிழ் அல்ல என்றாலும், மனிதர், ஏகத்துக்கும் மெய்யெழுத்துகளை அள்ளித் தெளித்து விடுகிறார்; ஒர்ரேயடியாக ஒற்றெழுத்துகள்! யாராவது அவரிடம் சொல்லவேண்டும் – ‘மெய்யெழுத்துகள் குறைவாக இருப்பதாலேயே ஒரு கட்டுரை மெய்யன்றிப் பொய்யாகக் கருதப்பட மாட்டாது, பயப்படவேண்டேல்! கொஞ்சம் குறைவாகவே ஒற்றெழுத்துகளை உபயோகியுங்கள்!’ என அந்தக் காலத்திலேயே மெய்கண்டார் (=proof reader) சொல்லியிருக்கிறார் என்பதை) – அவர் எழுதுவதெல்லாம் அவசியம் கவனமாகப் படிக்கப்படவேண்டியவை என்றுதான் கருதுகிறேன். மேலும், அவரும் அவ்வப்போது கிண்டல் செய்யப்படவேண்டியவரே என்பதையும், சுயகிண்டலிலும் தீவிரமாக இருக்கும் நான் நம்புகிறேன்.

…எப்படியும் ஓற்றுப் பார்த்தால் சுற்றம் இல்லை. ஆகவே. :-)

பிஏ கிருஷ்ணன் அவர்களின்  ‘புலிநகக் கொன்றை’யை நான் படித்திருந்தாலும், அது பிடித்திருந்தாலும் – அவருடைய பிற எழுத்துகளுடன் நான் அவ்வளவு அறிமுகமில்லாதவன். இதற்குக் காரணம் நான் ஃபேஸ்புக் எழவில் இல்லை என்பதாகவும், என் வட்டம் (=0) மிகமிகக் குறுகியது என்பதாலும் இருக்கலாம். சில மாதங்களுக்கு முன் அவரிடம் இருந்து திடுதிப்பென்று ஒரு ஃபோன் வந்தது – ஆனால் வேறு ஏதோ வேலையில் மும்முரமாக இருந்த என்னால் அவருடன் சரியாக அளவளாவ முடியவில்லை; அவர் எண்ணையும் தொலைத்துவிட்டேன்; ஆக, சில நாட்களுக்கு முன்பு அவர் நண்பர் ஒருவரிடம் இருந்து அவர் தொலைபேசி எண்ணை (=distant talker oil) வாங்கி ஒருவழியாக அவருக்கு ஒரு குறுஞ்செய்தியெழவு ஒன்றை அனுப்பியிருக்கிறேன். பாவம், அவர்.

இவர், தன்னை நேருவியர் என அழைத்துக்கொண்டிருக்கிறார். இது எனக்குக் கொஞ்சம் புரியாத, பிடிபடாத விஷயம். ஏனெனில், என்னுடைய குருவிமூளையின் பராக்கிரமத்தால் – இந்த இயம்களையும் இஸம்களையும் புரிந்துகொள்ள முனைவது என்பது எனக்கு மிகவும் கொடுமையான அனுபவமாகவே தொடர்கிறது. ஏனெனில் ஏதாவது ஒரு இஸத்தை ஓரளவுக்காவது புரிந்துகொண்டு ஒரு திடத்துக்கு வந்துவிட்டேனென்று ஆசுவாசமடைந்தால் திடுதிப்பென்று அது பக்கத்து முருங்கமரத்தில் ஏறி, முகத்தைக்கோணிக்கொண்டு எனக்கு அழகு காட்டிவிடும். எல்லாம், என்னுடைய செல்லமான கருணாநிதி சொல்வதுபோல என் ஜாதகம்தான். :-( ஆக, மறுபடியும் அடிப்படைகளிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்… :-(( ‘காந்தியம்’ என்கிற இயத்தைப் ஓரளவுக்காவது புரிந்துகொண்டு நான் ஒரு நிலைக்கு வருவதற்குள் சுமார் 30 வருடங்களாகி விட்டன. மனைவியுடன் இதுகுறித்த விசனத்துடன் பிலாக்கணமிட்டுக்கொண்டிருந்தபோது – இந்தக் குழப்பத்தின் பெயர் தான் ராமசாமியம் என்கிறாள். ஆகவே.

…மற்றபடி, கிருஷ்ணன் அவர்களின்  த-வயர் கட்டுரையைப் படித்தேன். மிகுந்த கவனத்துடனும் நேர்மையுடனும் எழுதப் பட்ட கட்டுரை அது – ஆக, அவருடைய பிற கட்டுரைகளைப் படிக்கவேண்டும். :-) பாவப்பட்ட  தமிழகத்தின் திராவிடக்கேனைய அரசியலைப் பற்றி ஆழமாக அறிந்துள்ள எவருக்கும்,  அதன் மையச் செய்திகளில் ஒன்றும் புதிதேயல்ல என்றாலும் – அவர் மிகுந்த பிரயத்தனம் எடுத்துக்கொண்டு, குறிப்புகளின் (=நம்பகத்தன்மை மிக்க உயர்தரத் தரவுகள்) மீது தன் வாதங்களைக் கட்டமைத்திருக்கிறார். இக்கால ‘இணையமே கதி’ இளைஞர்களுக்கு மிக அழகாக சுளுக்கில்லாத நேரடி ஆங்கிலத்தில் திராவிட அடிப்படைகளில் சிலவற்றைக் கரிசனத்துடன் விளக்கியுள்ளார்.

…நம் இளைஞர்கள் – இதிலிருந்து புதிய திறப்புகளைப் பெற்று, பிகேகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்லி முன்னகர்ந்திருக்கலாம்; ஆனால் திராவிடர்களால் பெரும்பாலும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் முட்டியடிச்சான் எதிர்வினையாளர்களாகவும் ரசவாதமாற்றம் செய்யப்பட்ட இளைஞர்கள் என்ன செய்வார்கள்?

ஆக, இதற்குப் பதிலாக – இளைஞர் பூகொ சரவணன் அவர்கள், ஒரு ஃபேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் – அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் (அல்லது புரிந்துகொண்டாலும் கண்டுகொள்ளாமல்) முழுவதும் தப்பும் தவறுமாக உளறிக்கொட்டலும் உணர்ச்சிவசப் படலுமான ஒரு வசைபாடிக் கட்டுரையது.

இதற்கு – செய் நேர்த்தியுடனும், ஒருவிதமான ஆதங்கத்துடனும் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது கண்ணியமும் ஆணித்தரமான வாதங்களும் நிரம்பியதாகவும், மறுபடியும் மறுபடியும் அடிப்படைக் கேள்விகளை எழுப்புவதாகவும் உள்ளது. ஒரு நட்பை இப்படி இழக்கவேண்டியிருக்கிறதேயென்கிற தொனியும் இருக்கிறது. பாவம். ஆனால், deep seated dravidian cancer can never be cured by the cosmetic skills of dermatology; we require the scalpel of the surgeons. வேறென்ன சொல்ல…

ஹ்ம்ம்… இதற்கு எப்படி ஏதாவது இந்த பூகொ சரவணன்கள் பதில் தந்திருக்கிறார்களா, அல்லது கமுக்கமாகக் கண்டுகொள்ளாமல் யுவகிருஷ்ணாத்தனமாகக் கழன்று கொண்டுவிட்டார்களா எனத் தெரியவில்லை. (உண்மையில், எனக்கு அரைகுறைகளின் விதண்டா விவாதங்களில் அவ்வளவு ஆர்வமும் இல்லை; ஏனெனில் தரமான விஷயங்கள் பக்கம் செல்லவே அவகாசம் கிடைக்காதபோது, தேவை மெனெக்கெட்டு கண்டவற்றைப் படித்து காச நோய் வரவழைத்துக்கொள்ளவேண்டால் எனும் சுயபாதுகாப்பு உணர்ச்சிதான்!)

Anyway, all power to folks like PA Krishnan & Aravindan Kannaiyan and their valiant efforts! May their tribe increase! (தொடரும்… (பூகொ சரவணன் அவர்களின் இன்னொரு ‘தரவுப் பீலா’ பற்றி எழுதவேண்டுமே! பாவம் நீங்கள்!))

-0-0-0-0-0-

*#* இப்பகுதியை நான் எழுதி முடித்தபோது என் (அதே) நண்பர், இதே காமராஜக் கட்டுரையைப் பற்றி இன்னொருவர் எழுதியிருந்த ஃபேஸ்புக் பின்னூட்டத்தை வெட்டியொட்டி அனுப்பியிருந்தார்: (அய்யா, நன்றி!)

It is sad, but this kid Pu Ko probably lacks integrity as quoted by various people. அறியாமையில் எழுதி இருந்தால், சுட்டிக்காட்டியபின் திருத்திக்கொள்ள அடிப்படை நாணயம் வேண்டும்.  அது இந்தப் பையனிடம் இல்லை என்றே தோன்றுகிறது.

“Narayanan Natarajan: பூ.கொ-விடம் intellectual honesty குறைவாகவே இருப்பதாக எண்ணுகிறேன். 2013ஆம் ஆண்டு அவர் காமராஜரை பற்றி தி இந்து தமிழில் எழுதியிருந்த கட்டுரையில் ‘ராஜாஜி 6000 பள்ளிகளை மூடினார்’ என்று எழுதியிருந்தார். அதற்கு ஆதாரம் கேட்டு ஹிந்து பத்திரிக்கைக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்கள் ஆதாரம் இல்லை என்று அந்த கட்டுரையையே அவர்கள் தளத்தில் இருந்து எடுத்து விட்டனர்.
 
பின்னொரு முறை facebook விவாதத்தில் நான் அவரிடம் இதைப்பற்றி கூறினேன். அவர் அதற்கு, தான் இதுவரை காமராஜரை பற்றி ஹிந்துவில் எழுதியதே இல்லை எனவும், நான் பொய் கூறுவதாகவும் சொன்னார். நான் web archive-களை ஆதாரமாக காண்பித்தேன். அவரிடமிருந்து பதில் இல்லை. பின்னர் பலமுறை நினைவு படுத்தியும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை, தவறை திருத்திக்கொள்ளவும் இல்லை. சரிதான் என விட்டுவிட்டேன்.
 
Archive of the deleted article: http://bit.ly/2huc4fr

11 Responses to “மகாமகோ ஆஸ்டின் க்ரன்வில், பிஏ கிருஷ்ணன், ஈவெரா ‘பெரியார்,’ பூகொ சரவணன், அரவிந்தன் கண்ணையன் – சில குறிப்புகள்”

 1. ஆனந்தம் Says:

  பூ கொ நிச்சயம் யுவகிருஷ்ணா ரகமல்ல. அவரது சில கட்டுரைகளைப் படித்ததிலிருந்து நிறையப் படித்தவர் என்று தோன்றுகிறது. ஆனாலும் திராவிடர் :-(((. அதற்கே உரிய மனப்பிறழ்ச்சியும் நேர்மைக்குறைவும் இருப்பது அவரது குற்றமா, சொல்லுங்கள்?

  • Prabhu Deva Says:

   //ஆனாலும் திராவிடர் :-(((//
   எதோ கை கால் ஊனமுற்றவர் போல சொல்லுரிங்க. :)

 2. ஆனந்தம் Says:

  நதியின் பிழையன்று நறும்புனலின்மை. (கம்பர் மன்னிப்பாராக!
  )

 3. ஆனந்தம் Says:

  PAK பற்றி நீங்கள் எழுதியிருப்பது எதுவுமே மிகையல்ல. அட்ச்சு விடுவதற்காகவே ஏற்பட்ட முகநூலில் அட்ச்சு விடுபவர்களுக்கு எதிராக ஒற்றை ஆளாக கர்ஜனை செய்கிறவர். அவரது பார்வைகள், கண்ணோட்டங்கள் பற்றி மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்குக்கூட அவர் தரும் தகவல்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி கேட்கத் துணிவு வராது. விக்கிபீடியா படித்துவிட்டு வரும் அரைகுறைகளுக்கு அவர் தரும் மரியாதையே தனி :-) அவரது ஆங்கிலம் உண்மையில் மிகவும் ரசிக்கத்தகுந்தது. தமிழ் இணைய உலகில் நான் வியக்கிற ஆங்கிலப்புலமை உள்ள மூவரில் முதலாமவர் இவர். மற்ற இருவரில் ஒருவர் அரவிந்தன் கன்னையன். மூன்றாவது நபர்….. உங்களுக்கு முகஸ்துதி பிடிக்காது என்று நீங்கள் எப்போதோ சொன்னதாக நினைவு.


 4. Once independent , erudite and proud newspapers and magazines like The Hindu, Ananda Vikatan, etc have fallen wayside to the money blitz of the filthy rich of godfathers of Dravidian movement. DMK has made smart business cum ideological moves to buy up controlling interests in Madras journalism . As night follows day, the DMK has packed these journals with their ideological fellow travellers like Pu.Ko.Saravanan and the result is that Madras journalism has gone down to the level of Malai Murasu or even Kudi Arasu .

 5. Thirumulanathan Says:

  But then, sir, why did you mention Austin Granville in the heading?

 6. Prabhu Deva Says:

  என் தந்தை எந்த தினசொறியையும் படிக்கமாட்டார். ஐம்பதுகளில் வந்த சினிமாக்கள் தான் அவர் பொழுதுபோக்கு. காமராஜ் மட்டும் தான் அவருக்கு தலைவர். மனிதர் ஏன் இன்னும் சந்தோஷமாக இருக்கிறார் என்று இப்போது தான் தெரிகிறது.


 7. […] அடித்துக்கொண்டு படிக்கவேண்டிய முதல் பகுதி.  *இது* அக்கப்போரின் இரண்டாம் விகுதி. […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s